Jump to content

முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்!


Recommended Posts

முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்!

 

 

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்கியதில் முன்னாள் போராளியும் அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

தமது காணியின் ஒரு பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் உணவகத்தினை நடாத்துபவர் காணியை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காத நிலையில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளியின் மனைவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்,

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது கணவர் உணவகத்தின் பின்புறமான காணியில் உள்ள கிணற்றிலிருந்து தென்னங்கன்றுகளுக்கு நீர் இறைத்தார். உணவகத்திற்கு நீர் தேவைப்படுவதால் இறைக்க வேண்டாம் என்று உணவகம் நடாத்துபவர் கூறினார்.

இதனால் அவர்களிற்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் உணவக உரிமையாளர் பொலிசாரை அழைத்து வந்து எனது கணவரை வெளியில் வருமாறு தெரிவித்தார். கணவர் வெளியில் சென்றதும் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி எனது கணவரை தாக்கினார்.

2009ம் ஆண்டு தனது கணவன் கைது செய்யபட்டு பூசாமுகாமில் இருந்து 2013 ம் ஆண்டு விடுதலையாகியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை காணியில் நின்ற எனது கணவரை அருகில் உள்ள உணவகத்தில் சிவில் உடையில் நின்ற கனகராயன்குளம்
பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கியுள்ளார்.

கணவருக்கு அடித்த போது எனது மகன் ஓடிச்சென்று பிடிக்கமுற்பட்டார். இதன்போது எனது கணவரை அடித்து இழுத்து பொலிஸ் வாகனத்திற்குள் தள்ளிவிழுத்தியதுடன் அதனை தடுக்கச்சென்ற எனது மகனின் கழுத்தை பிடித்து வேலியுடன் தள்ளிவிட்டதுடன் இன்னுமொரு பொலிசார் கழுத்தில் அடித்தார். குறித்த சம்பவங்களை தடுக்கபோன என்னையும் பிடித்து இழுத்து சட்டைகளை கிழித்து இழுத்து தள்ளிவிட்டனர்.

இதனைபார்த்த எனது 14 வயதான பெண் பிள்ளை அதனை தடுக்க முற்பட்டபோது பெண் பிள்ளையின் வயிற்றில் புறம்கையால் அடித்து துரத்தினர். இதனால் காயமடைந்த தனது கணவன், மகள் மற்றும் மகன் ஆகியோர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் கணவர் மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதுடன் உரியதரப்புகள் எமக்கு நீதியை பெற்றுதரவேண்டும்.

அத்துடன் எமது உறவினரான இளைஞர் ஒருவரும் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாங்குளம் பொலிசிற்கு முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக எமது நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது உதவி பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவித்தனர்.

பின்னர் வவுனியா பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தி அவர்கள் அறிவித்தன் ஊடாக மாங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_7550-2.jpg

http://athavannews.com/முன்னாள்-போராளி-மீது-பொல/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க ஒருத்தன் இல்லையென்றால் இன்னும் இதற்கு மேலும் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் குழுக்களுக்கிடையே  மோதல்கள்.... விளையாட்டுக்களில் தோல்வியைத் தங்க முடியாமல் அடிபாடுகள்..... எல்லாம் நடப்பது இயல்பு தானே.

அதையும் காவல்துறை ஒருமாதிரி கையாளும்.

அதே போல காவல்துறையும் யாரையும்  கைது செய்யும் வேளைகளில் அடிப்பதும் வழமை....

இதையெல்லாம் பெரிதாக எடுக்கப்படாது.

Link to comment
Share on other sites

கனகராயன் குளம், குடும்பத்தினரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ; செல்லம் அடைக்கலநாதன்

 

 
 

 

கனகராயன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உற்பட தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

selvam.jpg

கனகராயன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உற்பட பொலிஸ் அலுவலர்கள் கடந்த 09 ஆம் திகதி குறித்த பகுதியில் வசித்து வரும் தந்தையையும் பிள்ளைகளையும் தாக்கிய சம்பவமானது பொலிஸாரின் எதேச்சதிகார போக்கையும், பக்கச் சார்பான நிலைப்பாட்டையும் வெளிச்சமாக உணர்த்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த விடையம் தொடர்பில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸாரின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 9 ஆம்; திகதி இரவு கனகராயன் குளத்தில்  ஒரு ஹோட்டல் உரிமையாளருக்கும் ஹோட்டல் காணி சொந்தக்காரருக்கும் இடையிலான பிணக்கு ஒன்றினை விசாரிக்க சிவில் உடையில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மிகவும் மிலேச்சதனமாக பொலிஸ் ஒழுக்க நெறிகளை மீறி ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் சட்டம் ஒழுங்கு பேணும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் திசை மாறிச் செல்வதையே உணர்த்தி நிற்கின்றது. 

ஒட்டு மொத்த பொலிஸாருக்கும் இது களங்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது. மக்கள் பொலிஸார் மீது அவ நம்பிக்கையை கொண்டிருப்பதுடன் அச்சமும், பீதியும் நிறைந்த சூழலையும் உருவாக்கியிருக்கின்றது.

பொலிஸார் நடுநிலைமை தன்மையை மீறி, பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் நிமித்தம் இன்றைய தினம் பொலிஸ் நடவடிக்கைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றும் மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்களின் பங்குபற்றலுடன் வவுனியாவில் நடத்தப்பட்டிருக்கின்றது. 

இதை சாதாரண ஒரு விடயமாக விட்டுச் செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி,நியாயம் பெற்றுக் கொடுக்கப்படா விட்டால் எதிர் காலத்தில் முழுமையாக பொலிஸார் மீது எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள். 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே தவறிழைத்திருப்பது அறியக் கூடியதாயிருப்பதால் மாவட்ட மட்டத்திலான விசாரணைக்கு மாவட்ட பொலிஸ் தலைமை கூட தயக்கம் காட்டுவதை அறியக் கூடியதாக இருக்கின்றது.

எனவே விஷேட விசாரணை அணியினை அமைத்து தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவசரமானதும், உடனடியானதுமான நடவடிக்கையூடாக பொலிஸார் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இச்சம்பவத்தோடும், விசாரணை முடிவிலும் உறுதிப்படுத்துமாறும் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40223

Link to comment
Share on other sites

கைவி­லங்­கு­டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடும்பஸ்தர்

 

 
 

கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னார் என்று குற்­றஞ்­சாட்டப்­ப­டும் கிளி­நொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குடும்­பத் தலை­வர் கைவி­லங்­கு­டன் சிகிச்சை பெற்று வரு­கின்­றார். 

மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யி­லான இந்­தச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும், உறுப்­பி­ன­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

famil_man.jpg 

அவர் இது குறித்து  மேலும் தெரி­வித்­த­தா­வது:

பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் தாக்­கு­த­லில் காய­ம­டைந்­துள்ள குடும்­பத் தலை­வர் வைத்தியசாலை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அவரை நான் நேரில் சென்று பார்­வை­யிட்­டேன்.

பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி, குடும்­பத் தலை­வர் மீது அவ­ரது காணி­யில் வைத்­துத் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருக்­கி­றார். பின்­னர் வாக­னத்­தில் பொலிஸ் நிலை­யம் அழைத்­துச் சென்று அங்­கும் வைத்­தும் தாக்­கி­யுள்­ளார்.

காய­ம­டைந்தவர் குடி­போ­தை­யில் வீழ்ந்து கிடந்­தார் என்று தெரி­வித்து மாங்­கு­ளம் வைத்தியசாலையில் சேர்க்­கப் பொலி­ஸார் முயற்­சித்­துள்­ள­னர். 

தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வ­ரின் மனைவி அவர் குடிப்­ப­தில்லை என்று தெரி­வித்­துள்­ளார். இதன் பின்­னர் பொலி­ஸார் கிளி­நொச்சி வைத்தியாசலையில் சேர்த்­துள்­ள­னர்.

கிளி­நொச்சி வைத்தியசாலையில் அவ­ரது கை இரண்­டும் விலங்­கி­டப்­பட்­டுள்­ளது. தலைக்கு மேலாக கையை வைத்து வைத்தியசாலை கட்­டி­லு­டன் பிணைத்து சிகிச்சை வழங்கி வரு­கின்­ற­னர். 

இது மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பாடு. இந்­தச் செயற்­பாடு உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

http://www.virakesari.lk/article/40244

Link to comment
Share on other sites

தமிழர்களுககு எதிரான வன்முறைக்கு காரணம் பொலிஸாரே ; சிறீதரன்

 

 

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

41475915_224985031706482_451363754146686

அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும். 

41607019_224984645039854_895202473905697

ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிஸாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.

புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்றய சூழலில் பொலிஸார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல. 

41673914_224984718373180_873330765697174

இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின் காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிஸாரை இடைத்தரகர்களாக வைத்து நீதிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும். 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீசிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40272

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A9 வீதியில் உள்ள Dawood hotel அமைந்த காணிக்கே இந்த அடிபிடி. 

யுத்தம் முடிந்த கையோடு இந்த காணியை சோனகர் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக பெர்மிட் மூலம் ஆட்டையை போட்டு கடையை திறந்தார்( பெர்மிட் வழங்கியது அரச திணைக்கள அதிகாரிகள்).

காணி உரிமையாளரான முன்னாள் போராளி தடுப்புக்காவல் புனர்வாழ்வு என்று முடித்து வெளியில் வந்தால் அவரது காணியில் சோனகரின் கடை. பின்னர் கோட்டு கேசு என்று திரிந்து தனது உரிமையை நிரூபித்து விட்டார். சில காலம் கடை பூட்டப்பட்டிருந்தது.ஏற்கனவே கடை இருந்த காரணத்தால் மனிதாபிமானமாக குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து குத்தகைக்கு காணியை வழங்கினார்.

இப்போது அவர் கொடுத்த மனிதாபிமானம் அவருக்கு திரும்பக் கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.