Jump to content

தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல்

images?q=tbn:ANd9GcSBepuydfsY5spDW2ljmeV

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை நோயிலிருந்து காப்பதாக இருக்கட்டும், நவீன போக்குவரத்து வாகனங்களை வடிவமைப்பதாக இருக்கட்டும், எதிரி நாட்டின் மீது சரியாக குறி பார்த்து எய்தும் ஏவுகணைகளை வடிவமைப்பதாக இருக்கட்டும் வானில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்துவதாக இருக்கட்டும் இப்படி எல்லாவற்றிலும் அறிவியல் அறிவின் தேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதையும் தாண்டி ஆகாயத்தில் நகர்ந்துகொண்டேயிருக்கும் ஏவுகணைகளை எப்படி சரியாக குறிபார்த்து அடித்து வீழ்த்துவது என்று இயக்கவியல் அறிவை கணிதச் சமன்பாடுகள் வாயிலாக நமக்கு அறிவியல் சொல்லித்தருகிறது. இந்த இயக்கவியல் அறிவை தமிழர்கள் விளையாட்டின் வாயிலாக நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதனை நாம் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஊர்த்திருவிழாக்களில் விளையாடப்படும் விளையாட்டான உறியடித்தல் விளையாட்டைப்பற்றி தெரிந்துகொள்வோம். உறியடித்தல் விளையாட்டை சில இடங்களில் பானை உடைத்தல் என்றும் அழைக்கிறார்கள். தமிழர்கள் சிலவற்றிற்கு முரண்பட்ட பெயர் வைப்பதே வியப்பாக இருக்கும், கருப்பாக இருக்கும் ஆட்டிற்கு வெள்ளாடு என்றும் நல்ல பணக்காரனுக்கு பிச்சாண்டி என்றும் மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காதவனுக்கு பள்ளிக்கூடத்தான் என்றும் பெயர் வைத்திருப்பதைக் காணலாம். அதேபோல பானை உடைத்தல் என்பது ஒன்றின் அழிவைக்குறிப்பதாக உள்ளது என்பதால் அதை விளையாட்டுப் பானை என்றும் அழைக்கிறார்கள். எந்த பெயரில் அழைத்தாலும் உறியடித்தல் என்ற விளையாட்டு தமிழகம் முழுக்க ஒரேமாதிரியே விளையாடுகின்றார்கள். அதை எப்படி விளையாடுவது அது நமக்குச் சொல்லிக்கொடுக்கும் படிப்பினை என்னவென்று பார்ப்போம்.

உறியடித்தல் அல்லது பானை உடைத்தல் விளையாட்டு பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல், மஞ்சுவிரட்டு என்று விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகவோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஊர் திருவிழாவை முன்னிட்டோ நடத்தப்படும் தமிழர் விளையாட்டாகும். இளைஞர்களால் விளையாடப்படும் இந்த விளையாட்டு என்பது கண்ணைக் கட்டிக்கொண்டு பானையை உடைக்க வேண்டும். நாம் நினைப்பது போன்று கண்ணைக்கட்டிக்கொண்டு பானையை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று கிராமத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும் என்றாலும் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது அடுத்த தலைமுறைக்கு இதை சொல்லிக்கொடுப்பது நமது கடமை எனவே அதை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம். விழாக்காலங்களில் நடைபெறும் இந்த விளையாட்டை விளையாட இரு மூங்கில் கம்புகள் நடப்பட்டு அவற்றிற்கு இடையே கயிற்றைக் கட்டி, கயிற்றின் நடுவே மண்பானையை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். சற்றுத் துரம் தள்ளி எல்லைக்கோடுகள் போடப்பட்டிருக்கும்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அனைவரும் அந்த எல்லைக் கோட்டில் வரிசையாக நிற்க வேண்டும். கலந்து கொள்பவர்களின் கண்ணையெல்லாம் ஒருவர் துணியால் கட்டி அவர்கள் கையில் ஒரு நீளமான கம்பை கொடுத்து, அவர்கள் திசையினைக் கண்டுபிடிக்க முடியாதவாறு நான்கைந்து சுற்றுகள் சுற்றி விடுவார்.இவ்வாறு சுற்றி விடுவதால் பானையிருக்கும் திசையை அவ்வளவு எளிதாக குறிப்பால் அறியமுடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பானை இருக்கும் திசை நோக்கிச் சென்று,கையிலுள்ளகம்பினால் யார் பானையினை உடைக்கிறார்களோ அவரே போட்டியில் வென்றவராவர். அவருக்கு பரிசுகள் வழங்கப்படும். பானையை உடைப்பது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் சுமார் 20 அடி உயரத்தில் பானையை உரி கயிற்றால் கட்டி தொங்க விட்டிருப்பர். மேலும் கண்ணைக்கட்டிக்கொண்டு இருப்பவர் கம்பில் பானையை அடிக்கும் போது தொங்கும் பானையை ஒருவர் கீழும் மேலுமாக ஏற்றி இறக்குவார், அதனால் அது அடிப்பவர்க்கு மேலும் சிக்கலைத் தரும். அதாவது கண்ணைக் கட்டிக்கொண்டே ஏறி இறங்கும் பானையை குறிபார்த்து அடித்து உடைக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பானையை உைடப்பதொடு மட்டுமல்லாமல் எல்லைக் கோட்டை தாண்டாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு பானையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடைப்பதற்கு மூன்று வாயப்புகள் கொடுக்கப்படும். அதற்குள் உடைக்காதவர்கள் தோற்றவராவார். அவரது கண்கள் அவிழ்த்து விட்டு அடுத்தவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும். கண்ணைக்கட்டிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பானையின் ஏற்ற இறக்கத்தை கவனித்து பானையை உடைப்பவர் வெற்றி பெற்றவராவர். அவருக்கு பரிசுகளும் பணமுடிப்புகளும் கொடுக்கப்படும். உறியடி விளையாட்டைப் போலவே உரிமர விளையாட்டு என்றொரு விளையாட்டும் உண்டு. உரிமர விளையாட்டில் தயிர்ப் பானையை வழுக்குமரத்தில் ஏறி எடுக்கவேண்டும். உறியடி விளையாட்டில் தொங்கும் பானையை அல்லது உரியை அடிக்கவேண்டும்.

தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுகள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவதோடு ஒரு சில மாற்றத்தோடு உலகமெங்கும் விளையாடப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டிலிலும் இளைஞர்களால் உறியடித்தல் விளையாட்டு விளையாடப்படுகிறது. அங்கு பானையில் பண முடிப்புகளும், பரிசுப்பொருட்களும், உணவுப்பொருட்களும் நிரப்பி தொங்கவிடப்படுகிறது.

யார் எந்த பானையை உடைக்கிறார்களோ அதில் உள்ள பொருளே அவர்களுக்கு பரிசாக வழங்கப்படும். இளைஞர்கள் கண்ணைக்கட்டிக்கொண்டு பானையை உடைப்பதைப் போலவே அங்குள்ள குழந்தைகளுக்கும் பெரிய தொப்பியை அணிவித்து கண்களை மறைத்து ஆசிரியர் சொல்லக்கூடிய திசைகளில் சென்று அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள பரிசுப் பொருட்களை கண்டுபிடிக்க பள்ளிகளிலேயே பயிற்சியளிக்கின்றனர். இந்த பயிற்சி குழந்தைகளுக்கு மொழியை நன்கு புரிந்துகொண்டு உள்வாங்குவதற்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. எழுத்துக்களை கற்றுக்கொள்ளவும், திசைகளைப் புரிந்து அதன் படி இயங்கவும் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளியின் வகுப்பறையில் இந்த விளையாட்டின் வாயிலாகப் பாடம் கற்பிக்கிறார்கள்.

ஜெர்மன் நாட்டில் குழந்தைகளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டதின்போது கண்ணைக் கட்டிக்கொண்டு ஆடும் உறியடி விளையாட்டைப்போன்றதொரு விளையாட்டு விளையாடப்படுகிறது. பிறந்தநாள் விழாவில் குழந்தைகளை வட்டமாகச் சுற்றி நிற்க வைத்து விட்டு நடுவில் ஒரு குழந்தையை நிற்க வைக்கிறார்கள். நடுவில் நிற்கவைக்கும் குழந்தையின் கண்களை கட்டி இரண்டு மூன்று முறை சுற்றி அந்த குழந்தையின் கையில் ஒரு கரண்டி தரப்படுகிறது.

அந்த நேரத்தில் பிறந்தாள் கொண்டாடும் குழந்தை அந்த குழந்தைக்கான பரிசை ஒரு பானையில் போட்டு அந்த அறையின் ஏதோவொரு இடத்தில் வைக்கும். சுற்றி விடப்பட்ட குழந்தை அந்த அறையில் குழந்தை போல தவழ்ந்து கொண்டே சென்று அங்குள்ள பொருட்க்களின் மீது கரண்டியால் தட்டித் தட்டி அவர்களுக்கான பரிசுப்பொருளை கண்டுபிடிக்கவேண்டும்.

அவ்வாறு கண்டுபிடிக்கும் போது மற்ற குழந்தைகளும் சத்தம்போட்டு கொண்டாடி மகிழ்வர். இதேபோன்று மற்ற குழந்தைகளும் தங்களுக்கான பரிசுப்பொருட்களைக் கண்டுபிடிக்கும்வரை கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடி மகிழ்வார்கள். ஜெர்மனைப் போல் சுசர்லாந்து மற்றும் கொரியா நாடுகளிலும் குழந்தைகளின் பிறந்தநாள்விழாவின் போது குழந்தைகளால் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

இலங்கையிலும் இதேபோன்றதொரு விளையாட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விளையாடப்படுகிறது. இங்கு ஒரு பானைக்கு பதில், வரிசையாக பல பானைகளை தலைக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும். அதில் ஒரு பானையில் மட்டும் அவர்களுக்கான பரிசுப்பொருள் இருக்கும் பெரும்பாலும் பணமுடிப்பு இருக்கும், மற்ற பானைகளில் எல்லாம் மணலோ, தண்ணீரோ, வண்ண நீரோ, வெறும்காகிதங்களோ இருக்கும். யார் கண்ணைகட்டிக் கொண்டு சுற்றி விட்ட பிறகு மூங்கில் கம்பைக் கொண்டு சரியான பானையை அடையாளம் கண்டு உடைக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவராவார், அவருக்கு பண முடிப்போ பரிசுப்பொருளோ வழங்கப்படும்.

இந்தியாவில் குறிப்பாக குஜராத்திலும் மகராஷ்டிராவிலும் கிருஷ்ண ஜெயந்தியின் போது இதுபோன்ற விளையாட்டு பள்ளியில் விளையாடப்படுகிறது. உயரத்தில் தொங்கும் வெண்ணெய் பானையை பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து பிரமிடு போல் ஒருவர்மீது ஒருவர் ஏறி நின்று உயரத்தில் இருக்கும் பானையை எடுப்பார்கள். இது மனிதப் பிரமிடு விளையாட்டு என்று அழைக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழர்களின் உறியடித்தல் விளையாட்டின் பல்வேறு வடிவிலான விளையாட்டுகளே.

இன்று ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஆங்கிலக்கல்வி மோகத்தாலும் பல மேல் நாட்டு விளையாட்டுகளின் மோகத்தாலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் உறியடித்தல் போன்ற விளையாட்டுகளை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் அந்த விளையாட்டை அழியாமல் காக்கலாம். அரசும் இதுபோன்ற விளையாட்டைப் பள்ளிகளில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

இந்த விளையாட்டு இயங்கிக்கொண்டிருக்கும் பொருளின் மீது குறிவைத்துத் தாக்கும் திறமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தி தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது.

 கண்மூடிக்கிடந்தாலும் இலக்கை அடையந்து வெற்றிப்பாதையில் பயணிக்கத் துணை நிற்கும் இதுபோன்ற விளையாட்டுகளை நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம். தோல்விகளையும் நம்பிக்கையால் வெல்லும் ஊக்கத்தை அள்ளிக்கொடுப்போம்.

கீற்றுக்காக கு. முருகேசன்

http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-sep18/35788-2018-09-10-06-20-44

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

UNESCO அமைப்பின், உலக பாரம்பரிய சின்னமாக... ஜல்லிக் கட்டு அறிவிப்பு.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழனின் அதி அற்புதமான கலை ..!   எத்தனை பேருக்கு இதை தெரியும் ..?

தமிழன் கண்டு பிடித்ததை எழுதி வைத்து இருந்தால்,  இன்று உலகம் அவன் காலடியில் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.