Sign in to follow this  
நவீனன்

14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக்

Recommended Posts

14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக்

 

DmsJo3HVAAAd9Dc-720x450.jpg

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை சேர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிக் வென்றெடுத்தார்.

DmsP618UUAAmF39-428x285.jpg

ஆர்ஜன்டீன வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்ட்டோவிற்கு எதிராக அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 6ற்கு 3 ; 7ற்கு 6 ; 6ற்கு 3 என நேர் செட்களில் வெற்றியீட்டினார் நொவாக் ஜொகோவிக்.

இந்த வெற்றி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அவர் ஈட்டிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ள அதேவேளை ஒட்டுமொத்தமாக அவர் வென்றெடுத்துள்ள கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

DmsP8AyU8AEdQ-2-426x288.jpg

டென்னிஸ் விளையாட்டுலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அமெரிக்க வீரர் பீட் சாம்பிரஸின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜொகோவிக் . தற்போதைய நிலையில் விளையாடிவரும் சுவிட்ஸர்லாந்துவீரர் ரொஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ள அதேவேளை உலகின் முதல்நிலைவகிக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பீட் சாம்பிரஸ் மற்றும் நொவாக் ஜொகோவிக் ஆகியோர் தலா 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கடந்த வருடம் காயத்தால் மிகவும் சிரமப்பட்ட நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருந்த ஜொகோவிக்கின் டென்னிஸ் எதிர்காலம் முடிந்துவிட்டதா எனக் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் இவ்வாண்டில் விம்பிள்டன் சம்பியன், அமெரிக்க சம்பியன் என இரண்டாது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தான் இன்னமும் சிறப்பாக உள்ளதை பறைசாற்றியுள்ளார் ஜொகோவிக்.

http://athavannews.com/14வது-கிராண்ட்ஸ்லாம்-பட்ட/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this