Jump to content

வீட­மைப்­புப் பணி துரி­தம் பெறட்­டும்


Recommended Posts

வீட­மைப்­புப் பணி துரி­தம் பெறட்­டும்

 

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­களை அமைப்­ப­தில் நீடித்து வந்த இழு­பறி நிலை நேற்­று ­முன்­தி­னத்­து­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது. இதன்­படி 65ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

25ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் உள்­ளிட்ட விட­யங்­கள் ஏற்­க­னவே உறு­தி­செய்­யப்­பட்­டி­ருந்த போதி­லும், எந்த அமைச்­சின் கீழ் அந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தில் இழு­பறி தொடர்ந்து வந்­தது. அது­வும், அத்­து­டன் மேல­தி­க­மாக 40 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்­தி­யா­வி­டமா அல்­லது சீனா­வி­டமா வழங்­கப்­ப­டும் என்­பது தொடர்­பி­லும் நீடித்­து­வந்த இழு­ப­றி­யும் ஒரு­வாறு முடி­வுக்கு வந்­துள்­ளன. இதன்­படி இந்­தி­யா­வி­டம் அந்­தப் பணி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற உயர்­மட்­டக் கூட்­டத்­தில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான மனோ­க­ணே­சன், சுவா­மி­நா­தன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும் அவர்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளும் இந்­தக் உயர்­மட்­டக் கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்­ட­னர்.

உள்­நாட்­டுப்­போ­ரால் மிகப்­பெ­ரும் சேதத்­தைச் சந்­தித்த மாகா­ணங்­க­ளாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள்தான் அமைந்­துள்­ளன. விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்து சுமார் ஒரு தசாப்­தம் நெருங்­கு­கி­றது என்று பார்க்­கை­யில், இந்த அறி­விப்­பா­னது காலத்­தால் பிந்­தி­ய­து­தான். இற்­றைக்கு சுமார் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­ரேயே நடந்து முடிந்­தி­ருக்க வேண்­டிய விட­யங்­கள் இவை.

ஆனால், இந்­தி­யாவா? சீனாவா? என்ற பிடுங்­குப்­பாட்­டுக்­கு­ள்ளும், பொருத்து வீடா அல்­லது கல் வீடா என்ற வாக்­கு­வாதங்­க­ளுக்­குள்­ளும் இத்­தனை காலங்­க­ளும் கடத்­தப்­பட்­டன என்­பது நிச்­ச­யம் பெருந்­து­யரே. எனி­னும், ஆசிய வல்­லா­திக்­கச் சக்­தி­க­ளின் பிடுங்­குப்­பாட்­டுக்­குள் அமிழ்ந்து போகா­மல் வீட­மைப்­புத் தொடர்­பில் தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட்­டுள்­ள­மை­யா­னது பாராட்­டப்­பட வேண்­டி­யது.

இந்த விட­யத்தை வெறும் அறிக்­கை­யு­டன் கடந்­து­போ­கா­மல், அதற்கு இதய சுத்­தி­யு­டன் செயல்­வ­டி­வம் கொடுக்க அரசு முன்­வ­ர­வேண்­டும் என்­பதே தமிழ் மக்­க­ளின் பேரவா. உயர்­மட்­டக் கலந்­து­ரை­யா­ட­லில் குறிப்­பிட்­ட­தைப்­போன்று இந்­தத் திட்­டம் இந்த மாதத்­துக்­குள்­ளேயே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட ஆரம்­பிக்க வேண்­டும். அத்­து­டன் வீடு­கள் சென்­ற­டை­யும் தரப்­புக்­க­ளின் வாழ்­வா­தா­ரம், பொரு­ளா­தா­ரம் மற்­றும் அது சார்ந்த விட­யங்­கள் முழு­மை­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

போரால் நேர­டிப் பாதிப்புக்கு உட்­பட்டு தமது வீடு­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் பறி­கொ­டுத்து அடிப்­படை வச­தி­கூட அற்ற வீடு­க­ளி­லும், வெறும் கொட்­டில்­க­ளி­லும், தக­ரக் கூடா­ரங்­க­ளி­லும் தமது அன்­றா­டப் பொழு­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கும் குடும்­பங்­கள் பல­நூறு உள்ள நிலை­யில், அவர்­களை இந்த வீடு­கள் சென்­ற­டை­கின்­ற­னவா என்­பதை தனது தலை­மை­யின் கீழ் தலைமை அமைச்­சர் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

ஏனெ­னில் ஏலவே வழங்­கப்­பட்ட வீட்­டுத் திட்­டங்­கள் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­கள், முறை­யற்ற விதத்­தில் வீடு­கள் வழங்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் ஏரா­ளம் ஏரா­ளம் உள்­ளன. அது­போன்ற சம்­ப­வங்­கள் மீண்­டும் இடம்­பெ­றாது நேர்த்­தி­யான வகை­யில் இந்த 65 ஆயி­ரம் வீடு­க­ளும் பேறாக வேண்­டும். சுருங்­கச் சொல்­லின், தேவை எவ­ருக்கோ அவ­ருக்கே முன்­னு­ரிமை.

https://newuthayan.com/story/12/வீட­மைப்­புப்-பணி-துரி­தம்-பெறட்­டும்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.