Sign in to follow this  
நவீனன்

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல்

Recommended Posts

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல்

06-ceba253b8d5fb0e9dc9a0d07355ec7a26e5d0917.jpg

 

-என்.கண்ணன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் 

காலியில் நடந்த, புதிய அர­சி­ய­ல­மைப்பு யோசனை குறித்து விளக்­க­ம­ளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்து பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்றும், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை விட சற்று கூடு­த­லான அதி­கா­ரங்­க­ளையே அவர்கள் கோரு­வ­தா­கவும் சுமந்­திரன் அந்தக் கூட்­டத்தில் கூறி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

எனினும், அவர் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், தாம், தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை என்றே குறிப்­பிட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

தாம் சார்ந்த தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னது கொள்கை சமஷ்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது என்றும் அதி­லி­ருந்து விலக முடி­யாது என்றும் சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விரிசல், உச்­சக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்கும் சூழலில், விக்­னேஸ்­வ­ரனின் முன்னாள் மாண­வ­னா­கவும், தற்­போ­தைய பிர­தான அர­சியல் எதி­ரி­யா­கவும் இருக்கும் சுமந்­திரன், சமஷ்டி பற்றிக் கூறிய கருத்து இன்னும் எரியும் நெருப்பில் எண்­ணெயை வார்த்­தி­ருக்­கி­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மற்றும் அவ­ரது பக்­கத்தில் இருக்­கின்ற சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள், சுமந்­தி­ரனின் கருத்தை வலு­வாகக் கண்­டித்தும், கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்றி விட்­டது, துரோகம் செய்து விட்­டது என்றும் அறிக்கை வெளி­யிட்டு வரு­கின்­றனர். செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்தி வரு­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார்.

 எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அடுத்து நடக்­கப்­போகும் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கவும், சுமந்­தி­ர­னுக்கு எதி­ரா­கவும், முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் இந்த துருப்­புச்­சீட்டை வைத்து, நன்­றா­கவே பிர­சாரம் செய்­வார்கள் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என சுமந்­திரன் மறுத்­தி­ருந்­தாலும், சமஷ்டி என்ற விட­யத்தில், அவர் வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள், அவ­ருக்கு எதி­ரான அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் இருந்தே, சமஷ்டி விட­யத்தில் சுமந்­திரன் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தி­ருக்­கிறார்.

ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற சொற்­க­ளுக்கு அவர் அளிக்க முயன்ற விளக்­கங்­களும், அதற்குக் காரணம்.

எவ்­வா­றா­யினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டி­ருந்த சமஷ்­டியை விட்டு விலகி, ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் சுமந்­திரன் கணி­ச­மா­கவே பங்­க­ளித்­தி­ருக்­கிறார்.

அத்­த­கைய குற்­றச்­சாட்டு வரும்­போ­தெல்லாம் அவர், தன்னைக் காத்துக் கொள்­வ­தற்கு, சமஷ்டி என்ற பெயர்ப் பலகை முக்­கி­ய­மல்ல, அதன் உள்­ள­டக்கம் தான் முக்­கியம் என்ற கவ­சத்தைப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

அதா­வது சமஷ்டி முறையில் உள்­ளது போன்ற அதி­கா­ரப்­ப­கிர்வு தான் முக்­கி­யமே தவிர, சமஷ்டி என்ற அடை­யாளம் தேவை­யில்லை என்று அவர் நியா­யப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவில் ஆட்சி முறை பற்­றிய பதங்கள் பெரும்­பாலும் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த விட­யத்தில் சுமந்­தி­ரனின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது.

ஆனால், அவ்­வாறு பெயர்ப்­ப­லகை இல்­லாத அதி­கா­ரப்­ப­கிர்வு சமஷ்­டிக்கு இணை­யா­ன­தாக இருக்­குமா என்றால், அது­வு­மில்லை.

சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்ல ை என்று, சுமந்­திரன் கூறி­னாலும், அத்­த­கைய ஒரு தீர்வை ஏற்க சிங்­களத் தலை­மைகள் தயா­ராக இல்லை என்­பதே உண்மை.

அதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பு 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­திலும் சற்று அதி­க­மான அதி­காரப் பகிர்வை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்தால் போதும் என்ற வகையில் சுமந்­திரன் கருத்து வெளி­யிட்­டது உண்­மை­யானால், நிச்­ச­ய­மாக அவ­ரது கட்­சியின் சமஷ்டி பற்­றிய கொள்கை கேள்­விக்­கு­ரி­யதே.

சமஷ்டி என்­பதை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை என்று சுமந்­திரன் ஏற்­க­னவே கூறி விட்டார். ஆனால் அதில் உள்ள அடிப்­படை அம்­சங்­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்றும் அவரே கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைவு, சமஷ்டி முறையில் உள்ள அதி­காரப் பகிர்வை ஒத்­த­தா­கவே இருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இருக்­கி­றதா என்றால் அதுவும் இல்லை.

காலியில் நடந்த கருத்­த­ரங்­கிலும் சரி, தெற்கில் நடக்கும் கருத்­த­ரங்­கு­க­ளிலும் சரி, சுமந்­திரன் மற்­றொரு விட­யத்தை கூறி வரு­கிறார். அதா­வது, புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முழு­மை­யாகத் தீர்க்­காது, அவர்­களின் அபி­லா­ஷை­களை முற்­றி­லு­மாக நிறை­வேற்­றாது என்­பதே அது.

அவ்­வா­றாயின், சமஷ்­டியும் இல்­லாத- தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் முற்­றி­லு­மாக தீர்க்­காத, அவர்­களின் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்­றாத புதிய அர­சி­ய­ல­மைப்பு எதற்­காக என்ற நியா­ய­மான கேள்வி இருக்­கி­றது.

இப்­போது, உள்­ளதை விட முன்­னேற்­ற­க­ர­மான ஒரு அர­சி­ய­ல­மைப்பு என்ற வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும், அது தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களைக் கைவிட்டு விட்­டார்கள் என்ற வாதத்­துக்குத் துணை போகு­மானால் பேரா­பத்­தாக அமையும்.

அதா­வது, சமஷ்டி என்ற பெயர்ப்­ப­ல­கையும் இல்­லாத- சமஷ்­டியின் பண்­பு­களை ஒத்த அதி­கா­ரங்­களும் இல்­லாத ஒரு வெற்றுக் கூட்­டுக்கு தமிழ் மக்கள் இணங்கி விட்­டார்கள், அதனை ஏற்­றுக்­கொண்டு விட்­டார்கள் என்ற கற்­பி­தத்­துக்கு கார­ண­மாகி விடும்.

சுமந்­தி­ரனைப் பொறுத்­த­வ­ரையில், யதார்த்த அர­சி­யலை அதிகம் பேசு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தற்­போ­துள்ள சூழலில் சமஷ்டி அர­சியல் யாப்பை உரு­வாக்க முடி­யாது. அதே­வேளை, சமஷ்டித் தீர்வு இல்­லாமல் தமிழ் மக்­களைத் திருப்­திப்­ப­டுத்­தவும் முடி­யாது.

எனவே இந்த இரண்­டுக்கும் நடுவே, அங்­கு­மிங்கும் நெகிழ்ந்து ஒரு அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதே சாலப்­பொ­ருத்தம் என்று அவர் நினைக்­கிறார்.

இத்­த­கைய ஒரு நழு­வ­லான நிலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­வார்­களா- அதனை அங்­கீ­க­ரிப்­பார்­களா? இதனை எந்த அர­சி­யல்­வா­தியும் முடிவு செய்ய முடி­யாது. மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றார்கள்.

எது எவ்­வா­றா­யினும், ஒரு காலத்தில் தனி­நாடு கோரிய தமிழ் மக்கள், தமது பிரச்­சி­னை­க­ளுக்கு சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

காலியில் போய் சுமந்­திரன், சமஷ்டி வேண்டாம் என்று கூறி­யி­ருந்­தாலும், கூறி­யி­ருக்கா விட்­டாலும், சமஷ்டி வேண்டாம் என்று முடிவு செய்யும் அதி­கா­ரத்தை தமிழ் மக்கள் அவ­ருக்கு அளித்­தி­ருக்­க­வில்லை.

அதே­வேளை, சமஷ்டி தான் தீர்வு, அதற்கு இம்­மி­ய­ளவும் விட்டுக் கொடுக்க முடி­யாது என்ற நிலையில் இருக்கும் தரப்­புகள் ஒன்றும், யோக்­கி­ய­மா­னவை என்றும் எடுத்துக் கொள்­ள­மு­டி­யாது.

விடு­தலைப் புலிகள் தனி­நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­னார்கள். அவர்­களைப் போலவே மேலும் பல தமிழ் இயக்­கங்கள் ஆயு­தங்­களை ஏந்­தின. ஆனால், புலி­களால் மட்டும் தான் அதனை தொடர்ந்து நடத்த முடிந்­தது.

தனி­நாட்­டுக்­கான கட்­டு­மா­னங்­களை உரு­வாக்கி, நடை­முறை அரசு ஒன்றைக் கொண்டு நடத்­தவும் முடிந்­தது.

அதா­வது தனி­நாடு தான் தீர்வு என்­பதை செய­லிலும் காட்­டு­வதில் அவர்கள் உறு­தி­யாக இருந்­தார்கள்.

ஆனால், சமஷ்டி தான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்­கின்ற தமிழ் தரப்­புகள் எவற்­றி­ட­முமே, அதனை அடை­வ­தற்­கான மூலோ­பா­யமோ, செயற்­திட்­டங்­களோ கிடை­யாது.

தேர்தல் மேடை­க­ளிலும், ஊடக மாநா­டு­க­ளிலும், அறிக்­கை­க­ளிலும் மட்டும் தான், சமஷ்­டியில் பிடித்துத் தொங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, சமஷ்டி தீர்வு ஒன்றை எட்­டு­வ­தற்­கான சாத்­தி­ய­மான வழி­மு­றையை கண்­ட­றி­யவும் அவர்கள் தயா­ராக இல்லை.

தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வைத் தான் வலியுறுத்துகிறார்கள். அதனையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், அதனையே அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் தான் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஏனைய தரப்புகளும் சரி இந்த விடயத்தில், பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

சமஷ்டி என்ற கோஷத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இந்த நிலை தொடரப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனால், வரும் காலத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்கும் என்பதால், சமஷ்டி அரசியல், உணர்ச்சி அரசியல் எல்லாமே கொளுந்து விட்டு எரியப் போகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அந்த நெருப்பில் தான் அவர்கள் எப்போதும் குளிர்காய்ந்து வருகிறார்கள். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this