Jump to content

மறுக்கப்படும் உரிமைகள்...!


Recommended Posts

மறுக்கப்படும் உரிமைகள்...!

 

பி.மாணிக்­க­வா­சகம்

மொழி­யு­ரி­மையும், காணி உரி­மையும் மறுக்­கப்­ப­டு­வது, இனப்­பி­ரச்­சி­னையின் அடி­நா­த­மாகத் திகழ்­கின்­றது. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, அவர்கள் ஆளும் தரப்­பி­னரால் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே இனப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யது. உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்­காத கார­ணத்­தி­னா­லேயே போராட்­டங்கள் தலை­யெ­டுத்­தன. 

உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான போராட்­டங்கள் பல்­வேறு வழி­களில் திசை­தி­ருப்­பப்­பட்டு, அடக்­கு­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. அதி­கார வலு­வுடன் கூடிய சட்ட ரீதி­யான அடக்­கு­மு­றைகள் ஒரு­பக்­க­மா­கவும், குழுக்­களின் ஊடாக வன்­மு­றை­களைப் பயன்­ப­டுத்தி மறை­மு­க­மான அச்­சு­றுத்­தல்­க­ளுடன் கூடிய அடக்­கு­மு­றைகள் மற்­று­மொரு பக்­க­மா­கவும் காலம் கால­மாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்கு முறைகள் கடந்த காலங்­களில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன. 

சிங்­களம் மட்டும் என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்ற சிங்­க­ளத்தை அர­ச­க­ரும மொழி­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து மொழியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன. இந்த அடா­வ­டித்­தனம்,1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா சிங்­களம் மட்டும் என்று குறிப்­பிட்டு சிங்­க­ளத்தை தனித்­து­வ­மான அரச கரும மொழி­யாகப் பிர­க­டனம் செய்­ததைத் தொடர்ந்து, தலை­வி­ரித்­தா­டி­யது. 

வாக­னங்­களின் இலக்­கத்­த­க­டு­களில் 'ஸ்ரீ' என்ற சிங்­கள எழுத்தை அன்­றைய அர­சாங்கம் வலிந்து திணித்து, தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மொழி ரீதி­யான வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டி­ருந்­தது. சிங்­களப் பகு­தி­களில் வர்த்­தக நிலை­யங்­களைக் கொண்­டி­ருந்த தமிழ் மக்­க­ளு­டைய நிறு­வ­னங்­களின் பெயர்ப்­ப­ல­கை­களிலிருந்த தமிழ் எழுத்­துக்கள் தார் பூசி அழிக்­கப்­பட்­டன. 

சிங்­களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்­பட்­டதன் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய மொழி­யு­ரிமை மறுக்­கப்­பட்டு, அவர்­க­ளு­டைய சுய­கௌ­ர­வத்­திற்குப் பாதகம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சம்­ப­வங்கள் நடந்­தே­றின. இந்தச் சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் குதித்த தமிழ் அர­சியல் தலை­வர்கள் மீது காடைத்­தனம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. பொலிஸார் அவர்­களைத் தாக்கி இழுத்­தெ­றிந்து அரா­ஜகம் புரிந்­தார்கள்.

கல்­லோயா பகு­தி­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த சிங்­களக் குடி­யேற்றப் பகு­தி­களைச் சேர்ந்த கும்­பல்கள் அங்கு பண்­ணை­களில் பணி­யாற்­றிய தமிழ்த் தொழி­லா­ளர்­களைத் தாக்­கி­யதில் 150 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர். இந்தச் சம்­பவம் கல்­லோயா படு­கொலை என வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. இத­னை­ய­டுத்து, நாடெங்­கிலும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், வீடெ­ரிப்­புக்கள், கொள்­ளைகள், ஆட்­கொ­லைகள் என்­பன இடம்­பெற்­றன. இந்த வன்­மு­றை­களில் 300 தொடக்கம் 1500 பேர்­வ­ரையில் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மக்­களின் மொழி உரி­மையை அர­சியல் ரீதி­யாக இல்­லாமற்செய்யும் வகையில் கொண்­டு­வ­ரப்­பட்ட சிங்ளம் மட்டும் என்ற மொழிச்­சட்டம் பல்­வேறு அனர்த்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து சுதந்­திரம் பெற்­றதன் பின்னர் முதற் தட­வை­யாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இன ரீதி­யான வன்­மு­றையை நாடெங்­கிலும் வெடிக்கச் செய்­தி­ருந்­தது.

மொழி­யு­ரிமை மறுக்­கப்­பட்­டதன் விளை­வாகப் பாரிய உயி­ரி­ழப்­புக்­களும், உடமை இழப்­புக்­களும் ஏற்­பட்­டி­ருந்­தன. இழப்­புக்கள் மாத்­தி­ர­மல்ல, இன ரீதி­யான வெறுப்­பு­ணர்வு தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் எழுந்­தது. ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­ப­தற்கு இந்த வெறுப்­பு­ணர்வு தூண்­டு­த­லாக அமைந்­தி­ருந்­தது. 

அதன் பின்னர் தமி­ழுக்கும் அரச கரும மொழி அந்­தஸ்து வழங்­கப்­பட்டு, சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளுக்கு மொழி உரிமை வழங்­கப்­பட்­ட­தாக வெளி உல­குக்குக் காட்­டப்­பட்­டது. ஆனால் உண்­மை­யான, நடை­முறைச் சாத்­தி­ய­மான மொழி உரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டான வழி­களில் அர­சி­ய­ல­மைப்பின் சரத்­துக்கள் அமைக்­கப்­பட்டு, தமிழ் மொழிக்கு வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய உரிமை நடை­மு­றையில் கடி­ன­மா­ன­தாக அல்­லது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட முடி­யாத நிலைமை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

சிக்­கல்­களை உரு­வாக்­கு­கின்ற

சிங்­களக் குடி­யேற்­றங்கள்

மொழி உரி­மைக்கு அடுத்­த­தாக காணி உரி­மைகள் தமிழ் மக்­க­ளுக்கு அப்­பட்­ட­மாக மறுக்­கப்­ப­டு­வது காலம் கால­மாகத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. மொழி உரி­மையை மறுப்­ப­தற்­கான சிங்களம் மட்டும் என்ற சிங்­கள மொழிச்­சட்டம் கொண்டு வரப்­பட்ட 50­க­ளி­லேயே தமி­ழர்­களின் தாயகப் பிர­தே­ச­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பிர­தே­சத்தில் குறிப்­பாக கிழக்கில் கல்­லோயா பகு­தியில் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. அன்று தொடங்­கிய தமிழர் பிர­தே­சங்­களில் காணி­களை அப­க­ரிக்கும் கைங்­க­ரியம் காலத்திற்கு ஏற்ற வகையில் வெவ்வேறு வடி­வங்­களில் மிகவும் சாது­ரி­ய­மா­கவும், நுணுக்­க­மான முறை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

கிழக்கு மாகாணம் அம்­பா­றையை மைய­மாகக்கொண்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன. வடக்கும், கிழக்கும் தமிழ் மக்­களின் பூர்­வீகத் தாயகப் பிர­தேசம் என்ற தாயகக் கோட்­பாட்டை உடைத்து நொறுக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­கின்ற சிங்­களக் குடி­யேற்­றங்கள் கையா­ளப்­பட்டு வந்­தன. இன்றுவரை­யிலும் அது தொடர்­கின்­றது.

சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளுக்கு மூலா­தா­ர­மாக மகா­வலித் திட்டம் தந்­தி­ரோ­பாய ரீதியில் உரு­வாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. நாட்டின் அதி நீள­மான ஆறா­கிய மகா­வலி கங்­கையை வரண்ட பிர­தே­சங்­களை நோக்கி திசை­தி­ருப்பி நீர்­வ­ளத்தைப் பகிர்ந்­த­ளிப்­பதை இலக்கு வைத்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் காட்­டப்­பட்­டது. உண்­மையில் அந்தத் திட்­டத்தின் நோக்கம் அது­வல்ல. தமிழர் பிர­தே­சங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வதை உள்­நோக்­காகக் கொண்டு அந்தத் திட்டம், நீண்­ட­கால அடிப்­ப­டையில்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. ஆளும் தரப்­பி­ன­ரா­கிய பேரி­ன­வா­தி­களின் இந்த நோக்கம் முல்­லைத்­தீவில் மகா­வலி திட்­டத்­திற்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்த மக்கள் எழுச்­சியின் மூலம் வெளிச்­சத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டது. 

இந்தப் போராட்­டத்­திற்கு முன்னர், மகா­வலி அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் தமிழர் பிர­தே­சங்கள் அடா­வ­டித்­த­ன­மாக சிங்­களக் குடி­யேற்­றங்­களின் மூலம் சூறை­யா­டப்­ப­டு­கின்­றன என பொது­வான முறை­யி­லேயே குற்றம் சாட்­டப்­பட்டு வந்­தது. ஆனால் மகா­வலி எல் வல­யத்தின் கீழ் முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய மாவட்­டங்­களின் காணி­களை அடா­வ­டித்­த­ன­மாக சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே, இந்தக் காணி அப­க­ரிப்பின் விப­ரீ­தமும், ஆபத்­தான நிலை­மையும் வெளிச்­சத்­திற்கு வந்­தது. 

இது ஒரு­பக்கம் இருக்க, யுத்த மோதல்­க­ளின்­போதும், அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் தமி­ழர்­க­ளுக்கு, காணி உரிமைச் சட்­டத்தின் கீழ் உரித்­து­டைய காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும், தொல்­லியல் திணைக்­க­ளமும், அலுங்­காமல் நசுங்­காமல் அப­க­ரித்து உரிமை கோரு­கின்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

யுத்­தத்தின் பின்­ன­ரான காலத்தில் பௌத்த விகா­ரை­களை அமைப்­பதன் ஊடா­கவும், மழைக்­கா­லத்தில் காளான்கள் முளைப்­பதைப் போன்று புத்தர் சிலை­களை நிறு­வு­வதன் ஊடா­கவும் காணி­களை ஆக்­கி­ர­மிக்­கின்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இந்த நிலை­மைகள் யுத்­தத்தில் வெற்­றி­கொண்ட முன்­னைய அர­சாங்­கத்­தை­விட அதன் பின்னர், சிறு­பான்மை இன மக்­களின் பேரா­த­ர­வுடன் ஆட்சிப்பீடம் ஏறிய புதிய அர­சாங்க காலத்தில் தீவி­ரம் ­பெற்­றி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

இடம்­பெ­யர்வும் காணி

அப­க­ரிப்பும்

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்குமிடையில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்த யுத்­த­மோ­தல்­க­ளின்­போது பொது­மக்கள் குறிப்­பாக தமிழ்­மக்­களின் பாது­காப்பு பெரும் அச்­சு­றுத்­த­லுக்காளா­கி­யி­ருந்­தது. உயிர் தப்­பு­வ­தற்­காக உடமை­களைக்கைவிட்டு, உறை­வி­டங்­க­ளையும் வர­லாற்று ரீதி­யாக உரித்­து­டைய காணி­களைக்கைவிட்டு பாது­காப்புத் தேடி மக்கள் அடி­யோடு இடம்­பெ­யர்ந்­தார்கள். 

இந்த இடம்­பெ­யர்வை, தமக்கு சாத­க­மான நிலை­மை­யாகக்கொண்டு பேரி­ன­வா­திகள் தமிழ் மக்­க­ளு­டைய காணி­க­ளையும் கிரா­மங்­க­ளையும் வன­ப­ரி­பா­லன திணைக்­களம் மற்றும் தொல்­லியல் திணைக்­களம் என்­ப­னவற்றின் ஊடாகக் கப­ளீ­கரம் செய்­துள்­ளனர். அந்தத் திணைக்­க­ளங்­களின் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அடா­வ­டித்­த­ன­மாக இந்த காரியம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

மக்கள் இடம்­பெ­யர்ந்­ததன் பின்னர், தேசி­ய பா­து­காப்பு என்ற போர்­வையில் அரச படைகள்  நிலை­கொண்­டி­ருக்க வேண்­டிய அவ­சி­யத்தை முதன்­மைப்­ப­டுத்தி, தமிழ் மக்­க­ளுக்குச் சட்ட ரீதி­யாகச் சொந்­த­மான பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்ட காணிகள் இரா­ணு­வத்தின் பிடிக்குள் கொண்டு வரப்­பட்­டன. 

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், ஆயுத மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களிலிருந்து படை­யினர் வெளி­யே­றி­யி­ருக்க வேண்டும். ஆனால் அது இங்கு நடை­பெ­ற­வில்லை. தமிழர்  கிரா­மங்­க­ளிலும் பொது­மக்­க­ளு­டைய காணி­க­ளிலும் படை­யினர் நிரந்­த­ர­மான முகாம்­களை அமைத்து அங்கு நிலை­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  படை­யினர் வச­முள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு, இடம்­பெ­யர்ந்­துள்ள அந்த மக்­களை மீள்­கு­டி­யேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளாலும், ஐ.நா. மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அந்தக் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலை­மையே இன்னும் தொடர்­கின்­றது. புண்­ணி­யத்­திற்­காகக் கிள்ளிக் கொடுப்­பதைப் போன்று படைகள் வச­முள்ள காணிகள் சிறிய சிறிய அள­வி­லேயே கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

யுத்தம் முடிந்து 10 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்ற போதிலும், காணி­களை மீளக் கைய­ளிக்கும் நட­வ­டிக்­கைகள் இன்னும் இழு­பறி நிலை­யி­லேயே இருக்­கின்­றன. காணி­களை மீட்­ப­தற்­காக மக்கள் வீதி­களில் இறங்கி ஆர்ப்­பாட்டம் செய்­தார்கள். கண்­டன ஊர்­வ­லங்­களை நடத்­தி­னார்கள். ஆனால் பலன் கிடைக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து, புதுக்­கு­டி­யி­ருப்பு, கேப்­பாப்­பு­லவு, கிளி­நொச்சி, பர­விப்­பாய்ஞ்சான் உள்­ளிட்ட பல இடங்­களில் தொடர் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மண் மீட்­புக்­கான இந்தப் போராட்டம் கேப்­பாப்­புலவில் முடி­வின்றி இன்னும் தொடர்­கின்­றது. 

அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­பதில் ஒரு வகையில் கண்­மூ­டித்­த­ன­மான செயற்­பாடே அரச தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. தேசிய பாது­காப்பு அர­சாங்­கத்தின் முன்­னு­ரிமை பெற்ற ஒரு செயற்­பா­டாக இருந்தபோதிலும் இறை­மை­யுள்ள மக்­களின் குடி­யி­ருப்பு காணி­களை இரா­ணு­வத்தின் பிடியில் வைத்துக்கொண்டு அவற்றை விடு­விப்­ப­தற்கு அர­ச ­ப­டை­களை மேவிச் செயற்­பட முடி­யாத ஒரு நிலை­யி­லேயே அர­சாங்கம் காணப்­ப­டு­கின்­றது. மேலோட்­ட­மான பார்­வையில் இது அபத்­த­மா­னது. ஆனால் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்­கு­மு­றையின் உச்­சக்­கட்ட நட­வ­டிக்­கை­யாக இது அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது என்­பதே உண்­மை­யான நிலைப்­பா­டாகும். 

பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான கிரா­மங்கள், காணி­களில் நிலை­கொண்­டுள்ள படை­யினர், அவற்றை மீளக்கைய­ளிக்கும் போது, அங்­குள்ள பொது­மக்­களின் வீடுகள், பொதுக்­கட்­டி­டங்கள் என்­ப­னவற்றைத் தரை­மட்­ட­மாக்கி வெற்­றுக்­கா­ணி­க­ளா­கவும், பெரு­ம­ளவில் இடி­பா­டுகள் நிறைந்த காட­டர்ந்த பிர­தே­ச­மா­க­வுமே கைய­ளித்­தி­ருக்­கின்­றார்கள். யாழ். மாவட்­டத்தில் கிட்­டத்­தட்ட 3 தசாப்­தங்­க­ளாகக் கைந­ழு­வி­யி­ருந்த வலி­காமம் வடக்குப் பிர­தேச காணிகள் இந்த நிலை­மை­யி­லேயே சிறிது சிறி­தாகக் கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

காஞ்­சி­ர­மோட்­டையின் கதி

அதே­வேளை, சட்டவிதி­களைப் பயன்­ப­டுத்தி இடம்­பெ­யர்ந்­துள்ள பொது­மக்­களின் காணி­களை அப­க­ரிக்­கின்ற கைங்­க­ரி­யத்தில் வன­ப­ரி­பா­லன திணைக்­களம் பகி­ரங்­க­மாக இறங்­கி­யுள்­ளது. குறிப்­பாக வவு­னியா வடக்குப் பிர­தே­ச­மா­கிய நெடுங்­கேணி பிர­தேச செய­லகப் பிரி­வுக்குட்­பட்ட காஞ்­சி­ர­மோட்டை கிராமம், இவ்­வாறு வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்தின் ஆக்­கி­ர­மிப்­புக்குள்­ளா­கி­யி­ருக்­கின்­றது. 

யுத்­த­மோ­தல்கள் தீவி­ர­ம­டை­வ­தற்கு முன்னால், கிரா­மங்கள் தேடு­த­லுக்­காகச் சுற்றிவளைக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் சிவி­லு­டை­யில்­ ஆ­யு­த­மேந்தி வந்து ஆட்­களைக் கைது செய்தும், அடை­யாளம் தெரி­யாத வகையில் ஆட்­களைக் கடத்திச் சென்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நெடுங்­கேணி பிர­தேசம் அச்­சத்தில் உறைந்து போயி­ருந்­தது. வெடி­வைத்­த­ கல்லு பகு­தியில் 3 பேர் இவ்­வாறு அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­க­ளினால் கடத்திச் செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தப் பிர­தே­சத்தில் மக்கள் பெரும் பீதி­ய­டைந்­தி­ருந்­தார்கள். இதனால் தமது சொந்தக் கிரா­மங்­களில் அவர்கள் குடி­யி­ருப்­ப­தற்கு அஞ்சி பாது­காப்புத்தேடி வேறி­டங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தார்கள். 

அவ்­வாறு இடம்­பெ­யர்ந்த கிரா­மங்­களில் காஞ்­சி­ர­மோட்­டையும் ஒன்று. இங்கு வசித்த குடும்­பங்­களில் சில கடல் கடந்து தமி­ழ­கத்தில் சென்று தஞ்­ச­ம­டைந்­தன. ஏனைய குடும்­பங்கள் உள்­ளூ­ரி­லேயே பல இடங்­களில் தஞ்­ச­ம­டைந்து யுத்தம் முடிந்த பின்னர் காலம் தாழ்த்­தியே மீள்­கு­டி­யே­று­வ­தற்­காகத் தமது சொந்தக் காணி­க­ளுக்குத் திரும்­பி­யி­ருக்­கின்­றார்கள். 

இவ்­வாறு திரும்­பிய குடும்­பங்கள் அரச அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யு­டனும், மீள்­கு­டி­யேற்ற உத­வித்­திட்­டங்­களின் அடிப்­ப­டை­யிலும்  காடாகக் கிடந்த தமது காணி­களைத் துப்­ப­ுரவு செய்து தற்­கா­லிக வீடு­களை அமைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த மக்கள் அந்தக் காணி­களில் நிரந்­த­ர­மாகக் குடி­யி­ருப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் எத­னையும் மேற்­கொள்ள முடி­யாது. அபி­வி­ருத்­திச்­செ­யற்­பா­டு­களை மேற்­கொள்ளக்கூடாது என்று அங்கு சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் அந்த மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

சொந்­தக்­கி­ரா­மத்­திற்குத் திரும்பி வந்த போதிலும், தமக்கு சட்­ட­ரீ­தி­யாகச் சொந்­த­மான காணி­களில் குடி­யி­ருப்­ப­தற்கு வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் தடை விதித்­த­தை­ய­டுத்து, அவர்கள் திகைப்­ப­டைந்­தார்கள். என்ன செய்­வது என்று தெரி­யாமல் சிவில் நிர்­வாக அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­டார்கள். அதே­போன்று இந்தக் கிரா­மத்­தையும் உள்­ள­டக்­கிய மரு­தோடை கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்­தினர் இந்த நிலைமை குறித்து வட­மா­காண சபை உறுப்­பினர் ஜி.ரி.லிங்­க­நா­தனின் கவ­னத்­திற்குக் கொண்டுவந்து உரிய நட­வ­டிக்கை எடுத்து இந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு வழி­செய்­யு­மாறு கோரி­யி­ருந்­தார்கள். 

மாகா­ண­சபை உறுப்­பினர் லிங்­க­நாதன் இந்த விட­யத்தை ஒரு தீர்­மா­னத்தின் ஊடான தீர்வைப் பெறு­வ­தற்­காக மாவட்ட ஒருங்­கி­ணைப்புக்குழு கூட்­டத்தின் கவ­னத்­திற்கு, அர­சாங்க அதி­ப­ருக்கு எழு­திய ஒரு கடி­தத்தின் ஊடாகக் கொண்­டு­வந்தார். 

மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்­டத்தில் வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரி­களின் இந்தச் செயற்­பாடு கடும் கண்­ட­னத்­திற்குள்­ளா­கி­யது. இத­னை­ய­டுத்து, கூட்­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்த வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் குழுவின் இணைத்­த­லை­வர்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­தி­களும் வாக்­கு­வா­தப்­பட்­டதன் பின்னர், அந்த மக்­க­ளுக்கு எந்த இடை­யூறும் ஏற்­ப­டுத்தக் கூடாது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இருப்­பினும் மறுநாள் அந்தப் பகு­திக்குச் சென்ற வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் அரச உயர் மட்­டத்­திற்கு இந்­த­வி­டயம் கடிதம் மூல­மாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அங்­கி­ருந்து பதில் வரும் வரையில் எந்தவித­மான அபி­வி­ருத்தி வேலை­களும் மேற்­கொள்ளக்கூடாது என அந்த மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளனர். 

இந்தக் கிரா­மத்தின் காணிகள் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மா­னது என 2005ஆம் ஆண்­ட­ளவில் வர்த்­த­மா­னியின் ஊடாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்ற ஒரு தக­வலும் உண்டு. எவ்­வா­றா­யினும், இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­று­வது என்­பது சர்­வ­தேச சட்­ட­மு­றை­மை­க­ளுக்கு அமைய இடம்­பெ­யர்ந்த மக்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். உள்ளூர்ச் சட்­டத்­திற்­க­மை­ய இடம்­பெ­யர்ந்­தி­ருந்த போதிலும், இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற வகையில் இறை­மை­யுள்ள அந்த மக்கள் தமது சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­ய­மர்­வது என்­பது அவர்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். அந்த உரி­மையைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் உள்­ளிட்ட எந்த ஒரு தரப்­பி­ன­ருக்கும் உரி­மையும் அதி­கா­ரமும் கிடை­யாது. 

இந்த நிலையில் வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் காஞ்­சி­ர­மோட்டை கிரா­மத்து மக்­களை அவர்களுடைய காணிகளில் நிரந்தர கட்டிடங்களோ வேறு அமைப்புக்களையோ கட்டக்கூடாது என்று எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துள்ளார்கள் என்பது கேள்விக்குரியது. வனங்களையும் அவற்றின் வளங்களையும் கண்காணிப்பதும், பாதுகாத்து நிர்வகிப்பதுமே வனபரிபாலன திணைக்களத்தின் வெளிப்படையான  பொறுப்பும் கடமையுமாகும். 

சட்ட ரீதியாகக்குடியேறி வசிப்பதற்கென அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் குடியிருக்க முடியாது என்றோ அல்லது நிரந்தரமான கட்டிடங்களை அமைக்கக்கூடாது என்றோ உத்தரவிடுவதற்கு வனபரிபாலன திணைக்களத்திற்கு எந்த வகையில் அதிகாரம் உள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வது என்பது இயல்பானது. இயற்கையானது. இயற்கைச் சட்ட நெறிமுறைக்கமைய அது தடுக்கப்பட முடியாத உரிமையுமாகும். இதனால்தான் வேறு பல இடங்களில் தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக மண்மீட்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கின்றார்கள். 

நிலைமை அவ்வாறிருக்க வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இடையூறு செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் எந்த வகையில் அதிகாரம் பெற்றிருக்கின்றார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவது என்பது அடிப்படை உரிமை சார்ந்த விடயம். அந்த அடிப்படை உரிமையை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்குப் பின்னரும் வனபரிபாலன அதிகாரிகள் மீறியிருப்பது சாதாரண விடயமல்ல. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். 

இதற்கு சிவில் நிர்வாகச்செயற்பாட்டு நெறிமுறைகளின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் நீதியும் நியாயமும் தேடப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்ற அரச தரப்பினருடைய கபடத்தனமான நடவடிக்கைகள் தடுப்பார் எவருமின்றி தொடர்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. அத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-08#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.