Jump to content

தங்கக் கூரை.. நல்லூர் முருகனுக்கு, ஓர் கவிதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and indoor

பார்த்தீபன் அன்று 
பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! 
அவன் தேசப் பசி போக்க 
கண் திறந்து நீ அன்று
பார்த்திருந்தால்...,

தனை வருத்தும் எவருக்கும் 
நீயருள்வாய் என்றவர்கள் 
உணர்ந்திருப்பர்.

குண்டுமழை பொழிகையில்
குடியிருந்த வீடுவிட்டு 
எஞ்சிய உயிர் காக்க 
ஏதிலியாய் அவர் தன்னிலம் 
நீங்கி உன்னையும் தான் விட்டு
ஓடோடிப்போகையிலும் 
கந்தனே நீயுமோ எம்மை 
கைவிட்டாய் என்றுதான் 
கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர்
அன்று அசுரனை அழித்த உன் 
ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்...,

கூப்பிட்ட குரலுக்கும்
குவித்த கரங்களுக்கும்
செவிசாய்த்து நீ அவர் 
துயர் துடைப்பாய் என்றவர்கள்
நம்பியிருப்பர்.

ஈற்றில் 
முள்ளிவாய்க்கால் தன்னில் 
முடிவற்று செத்தொழிகையிலும்
முருகா! முருகா! என்றுதான் 
முணுமுணுத்தன அவர் வாய்கள்
அன்று செவ்வேல் கொண்டு நீ 
அற்புதங்கள் செய்திருந்தால்...,

திக்கற்றவனுக்கு தெய்வம் நீ
எக்கணமும் துணையிருப்பாய் 
என்றவர்கள் நினைத்திருப்பர்.

துயர் உற்ற வேளைகளில் 
துணையிருந்து நீ எதுவும் 
செய்யவேயில்லையே முருகா...

பின் அவர்கள் தங்கத்தில் 
பரிசளித்தால்தான்
நீ வரம் அருள்வாயென்று
தம்போக்கில் எண்ணாமல் 
வேறு என்ன செய்வார் சொல்?

- சுப்ரமணிய பிரபா -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.