Jump to content

மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் - தமிழர் மகா வலியும்


Recommended Posts

மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் - தமிழர் மகா வலியும்

- நேரு குணரத்தினம் -

மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும்?? வரலாறு எம்மை விடுவிக்கும்???

1961இல் சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கருக்கொண்டது தான இவ்மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டம். அதற்கு ஐ.நா அபிவிருத்தி நிதிபெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு அதனூடு திட்டங்கள் வரையப்பட்டு திட்ட அமுல் 1970இல் சிறிதாக தொடங்கப்பட்டது. ஆனால் 1977 இல் அமைந்த nஐயவர்த்தனா ஆட்சியின் கீழ் 30 வருடத் திட்டம் துரித அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்பட்டு 6 வருடத் திட்டமாக விரைவுபடுத்தப்பட்டது. இதன் பிரதான பிதாமகன் சாட்சா நம் ரணில் ஐயா தான். சமீபத்தில் அன்றைய தன் சாதனையை ஐயா கிலாகித்து வேறு பேசியுள்ளார். அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சராக்கப்பட்ட்வர் தான் எம் யாழ் நூலக எரிப்புப் புகழ் நாயகன் காமினி திசநாயக்கா ஐயா அவர்கள்.

அவரின் இனவாதம் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பில் ஏவ்வாறிருந்திருக்கும் என்பதை குறும்படம் போட்டுக் காட்டியா நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்??? என்ன அம்னீசியா காரர்களுக்கு வேண்டுமா? நித்திரையில் இருப்பது போல் நடிப்பவர்களுக்காக ஏன் அந்ந விரயம்?? இன்று போல் அன்றும் ரணில் ஐயா லாவகமாக சர்வதேச சமூகத்தை தன் சாணக்கியம் கொண்டு வளைத்துப் போட்டார். Nஐர்மனி கனடா அமெரிக்கா சுவீடன் இங்கிலாந்து சௌதி அரேபியா உலகவங்கி என அணிவகுக்கப்பட்டன. இன்று போல் அன்றும் எம் தமிழ்த்தலைமைகள் சர்வதேச அணுகுமுறையில் அவர்களுடனான தொடர்பாடலில் மோசமாக சொதப்பினர். இவ்விடயத்தில் கனடா எவ்வாறு தானாகவே விழித்துக் கொண்டு விலகியது என்பதை கனடாவில் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வினூடாக கீழே தந்துள்ளேன்.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரான தமிழர் தற்காப்பு ஆயுதப் போராட்டமும் மகாவலி முயற்சிளை அன்றைய பொழுதில் முடக்கியது மட்டுமன்றி சர்வதேச பங்காளிகளை வெளியேறவும் வழிகோலியது. பின்னர் அம்மையார் சந்திரிக்கா அற்றும் ஐயா ராஐபக்சவின் கீழ் மகாவலி விடயத்தை அதிகம் கையாண்டவர் வேறு யாரும் அல்ல சாட்சா நம் மைத்திரி ஐயா தான். பொலநறுவையின் மைந்தன் தன் இருப்பிற்காக வாய்ப்பை விடுவாரா?? ஐயா வெளுத்துக்கட்டுகிறார். தன் இருப்பை மேலும் வலுப்படுத்த ஐயா துணைப் பாதுகாப்பு அமைச்சராக தன் பகுதியில் உருவாக்கியது தான் ஊர்காவல் படைகள் கட்டுமானம். இதனால் எல்லையோர தமிழ் கிராமங்கள் பட்ட மகா வலி அவலங்கள்... எமக்குத் தான் அங்கிருந்தவர்கள் சொந்நதமில்லையே!!! எமக்கென்ன கவலை!!!

எங்களுக்கும் கவலையில்லை எம் இன்றைய அரசியல் தலைமைகளுக்கும் கவலையில்லை... ஏனென்றால் அவர்கள் வேற்றுலக வாசிகள் இல்லையா!!! எங்கள் இன்றைய நிலையை ஒருமுறை உங்கள் மனக்கண் முன்னால் காட்டுகிறேன்...

மகிந்தா ஒரு சர்வாதிகாரி - சரி மாற்றுக்கருத்தில்லை... அதனால் அவர் வரவு செலவுத் திட்டங்களை வெளிப்படையாகவே பாராளுமன்றத்தில் எதிர்த்து நம்மவர்களும் வாக்களித்தீர்கள். ஆனால் நாம் கொண்டு வந்த ஆட்சி என மைத்திரி - ரணில் 2016 2017 2018 வரவு செலவுத் திட்டங்களை எவ்வித கேள்வியும் இன்றி முழுமையாக ஆதரித்தீர்களே... உங்கள் வாக்குகளில்லை என்றாலும் இலகுவாக அவை நிறையேறியிருக்கும் என்பது வேறுவிடயம்.. இந்நிலையில் ஆதரித்த தமிழரசுக்கட்சி ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு பகிரங்க கேள்வி. யார் ஐயா உங்களிடம் சொன்னது ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்த மேய்ப்பன்கள் மைத்திரியும் ரணிலும் என்று??? சுமந்திரனுக்கு புரியும் மொழியில் கேட்டிருக்கிறேன்.

2015இல் மைத்திரி தமிழர் தயவில் சனாதிபதியானதும் மீண்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற அமைச்சை உருவாக்கி அதை தன்வசமாக்கியும் கொண்டார். அதற்காக கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை வருமாறு..

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு
2016 வரவு செலவுத்திட்டம் - 6949 கோடியே 58 இலட்சத்து 7 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் - 5762 கோடியே 34 இலட்சத்து 65 ஆயிரம்
2018 வரவு செலவுத்திட்டம் - 4561 கோடியே 11 இலட்சத்து 54 ஆயிரம்

அதாவது தாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரும் தொகை 2016இல் ஒதுக்கி மகாவலியின் கீழானான பொலநறுவையை அண்டிய முல்லைத்தீவு வவுனியா திருகோணமலை நோக்கிய திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவே இன்று அதிகம் பேசப்படும் எல் வலயத்திட்டத்தின் மூலம். 2016இல் அதிகரித்த தொகையின் மூலம் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டதாலேயே பின் இரு ஆண்டுகளிலும் ஒதுக்கப்பட்ட தொகையில் சற்று வீழ்ச்சி காணப்பட்டது. சமீப காலமாக பூர்த்தியாகியுள்ள இத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகின்றன. மகிந்தா தன்னை உறுதிப்படுத்த அம்பாந்தோட்டையை துரித அப்விருத்தி செய்தார். மைத்திரி தன்னை என்றும் நிலைப்படுத்த பொலநறுவையூடாக தமிழர் தாயகத்தை களீபரம் செய்கிறார். இப்போது சொல்லுங்கள் தமிழர்களை காக்க வந்த மேய்ப்பன் சரியா காக்கிறாரா? இல்லையா??

தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம். தமிழர் தாயக இருப்பை இல்லாதொழிக்கவே இம் முயற்சி. தேசிய இனஅடிப்படையில் மகாவலி திட்டத்தின் கீழ் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேரை குடியேற்றுவதே திட்டம். இதன் பிரகாரம் 74 சதவீத சிங்களவர் அதாவது 5 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவரும் 12 சதவீத இலங்கைத்தமிழர்கள் அதாவது 90 ஆயிரம் தமிழரும் 6 சதவீத மலையகத் தமிழர் 6 சதவீத முஸ்லீம்கள் என அதாவது தலா 45 ஆயிரம் பேரும் குடியேற்றப்படுவார்கள் என்றார்களாம். உங்களுக்குத் தெரியும் இதுவரை 100 சதவீதம் சிங்களவரே குடியேற்றப்பட்டனர். இது தவறு என்பதை பின்னர் புரிந்து கொண்டு அவ்மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலேயே மக்கள் குடியேற்றப்படவேண்டும் என தாம் அப்போது வலியுறுத்தியதாக கனடா தெரிவிக்கிறது. இது எம் அரசியல்வாதிகள் யாருக்கும் இன்று தெரியுமா? இதை வலுநிலையாகக் கொண்டு என்ன செயற்பாடு இவர்களிடம் இருக்கிறது?? என்ன புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் என்கிறீர்களா?? கனடாவில் இருப்பவர்களுக்கே இது தெரியாது! மற்றவர்கள்??

இத்துடன் வடக்குக்கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கூக்குரல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கீழே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள ஊர்காவல் படைகளுக்கு ராஐபக்க ஒதுக்கிய நிதியையும் மைத்திரி - ரணில் கூட்டு ஒதுகியுள்ள நிதியையும் கீழே தந்துள்ளேன். ஏதாவது புரிகிறதா? இதற்கும் நம்மவர்கள் ஆதரித்தே வாக்களித்தனர் மறந்துவிடாதீர்கள். மைத்திரி ஐயா 2015 இறுதியில் இவர்களுக்கான தலைமையகத்தை தன் பொலநறுவை மாவட்டத்தின் கபறத்துனையில் வேறு திறந்து வைத்தார். இதில் 41 ஆயிரம் பேர் மாதாந்த சம்பளத்தில் தமிழர் தாயகத்தில் முன்பள்ளி நடாத்துகிறார்கள் சிவில் பாதுகாப்பு வழங்குகிறார்கள் விவசாய மற்றும் கைதொழில் பண்ணைகளை நடாத்துகிறார்கள். கூடவே குடியேறவும் செய்கிறார்கள். ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு போகவில்லை. இந்த லட்சணத்தில் படைகள்!! சும்மா கொமடி செய்யாதைங்கோ ஐயா!!!

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில் உள்ள ஊர்காவல் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை

ராஐபக்ச அரசு
2014 வரவுசெலவுத்திட்டம் - 1044 கோடியே 44 இலட்சம்
2015 வரவு செலவுத்திட்டம் - 1206 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம்

மைத்திரி - ரணில் அரசு
2016 வரவு செலவுத்திட்டம் - 1774 கொடியே 72 இலட்சத்து 92 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் - 1694 கோடியே 74 .லட்சத்து 52 ஆயிரம்
2018 வரவு செலவுத் திட்டம் - 1758 கோடியே 31 இலட்சத்து 20 ஆயிரம்

ஊர்காவல் படைகளுக்கே ஆயிரம் கோடிகளில் நிதிஒதுக்கீடு.. 2018 வரவுசெலவுத் திட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள் என கூட்டமைப்பின் கனடிய பிரச்சார பீரங்கியிடம் ஒரு வானொலியில் கேட்டேன். ஐயா சொன்னார் தமிழர் பகுதிகளில் 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதல்முறையாக 80 கோடிகளை ஒதுக்கியுள்ளார்களாம் என்றார். இவ்வாண்டின் மொத்த செலவீனம் 3 இலட்சத்து 90 ஆயிரம் கோடிகள். இதில் 80 கோடிகள் எவ்வளவு பெரிய காசு எண்டு என்டை மரமண்டைக்கு இன்னும் புரியுதில்லைங்கோ!!! இன்னும் ஒன்று சொன்னார் 50 ஆயிரம் வீடுகளுக்காக அவ் 80 கோடிகளில் 70 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு வீட்டுக்கு 1400 ரூபா. முடிந்தால் இதற்கு ஒரு மீனை எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கோ... ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரை... இலகுவாக ஏமாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை... சேடம் இழுக்கும் தமிழினத்திற்கு மகா வலியாகத் தான் இருக்கும்...

The politics of aid projects:
Ethnicity, land and discrimination

A element of the UNP government's economic restructuring was a plan to dam, divert, and harness the waters of the Mahawali Ganga, Sri Lanka's major river system. The river had been exploited for irrigation and agriculture nearly two thousand years before by a sophisticated and hydraulic civilization. The new master plan to build fifteen reservoirs, four on the Mahawali, ten on its tributaries, and one, to be build by Canadians, on the Maduru Oya. These dams would then generate up to 550 megawatts of Hydroelectric energy and would feed a complex and extensive system of cannels and dikes to irrigate 360,000 hectares of scrubland.

Several sound development goals came together in the Mahawali Scheme. Building the dams and irrigation systems would create local employment and transfer technology. The harnessed energy and water would irrigate scrubland in the fertile dry zone of the north and east of the island. Irrigation would in turn make possible of the resettlement of up to 750,000 landless peasants to small scale farms on once-barren land. The UNP government saw the scheme as the safety value to relieve population pressures in the overcrowded , Sinhalese dominated south and southwest of the island. This megaproject had something for everyone: a capital incentive infrastructure offering rich pickings for Western engineering and construction firms, a poverty elevation component consistent with a Sri Lankan commitment to equity; and increased agricultural productivity. Inspired by the engineering feats of an ancient kingdom and hailed as the world's largest foreign aid project, the Mahawali scheme. was to be a symbol of progress and national identity. None of the hopes materialized. Instead, the scheme became another irritant, adding to the already explosive communal tensions. The Tamils complained that Mahawali continued the historical agenda of Sinhala-dominated governments to use settlement to alter the island's demographic mix and to undercut Tamil claims on the eastern province.

Whatever the motives, events conspired against the government. Armed conflict and a dispute over resettlement ratios killed the project. By the late 1980s, the Mahawali scheme had become a white elephant. Reservoirs lay dormant with the irrigation systems not built and the surrounding land still barren and unused. By March 1990, World bank had pulled out, sounding a death kneel for the scheme.

The Maduru oya Project: An a aid Planer's Nightmare
Interviews with CIDA and External affairs officials suggests that at the planing stage virtually no attention was given to the project's impact on the fragile ethnic balance of batticaloa district in which resettlement would occur. There is no evidence of sensitivity of human rights matters such as participation and nondiscrimination by, for example canvassing the opinions of local Tamil politicians or ensuring that an equitable ethnic balance was inscribed into the memorandum of understanding between the governments of Canada and Sri Lanka. CIDA seems to have uncritically accepted the government's proposed resettlement formula. Canada's unwillingness to examine the political implication of the aid project was to prove costly...

Ottawa concluded that the GOSL's resettlement ratios for the right bank of the oya river compromised Canada'a equidistant and relatively passive position on human rights and threatened to plunge Canada into a political controversy at home and abroad. At all costs, Ottawa wished to avoid any perception that it was taking sides in the conflict, or that it was associated with actions which discriminated against the Tamil community.

The heart of the matter was this: Should resettlement proceed on the basic of national or district ethnic ratios? The GOSL had devised a resettlement formula that mirrored the national ethnic balance --- that is, 74 percent Sinhalese, 12 percent Sri Lankan Tamils, 6 percent plantation Tamils, 6 percent Muslim and 2 percent others. By this formula, the Sri Lankan Tamils would make up just 12 percent of the 750,000 people settled in the Mahawali scheme.... The number of irrigation projects were in the Tamil majority districts, and the resettlement formula threatened to weaken that majority. For a Tamil prospective, the national formula masked a hidden United National Party (UNP) agenda. Following the national formula would have altered the districts demographic balances and undermined the precarious Tamil claim on the Eastern province as a whole. Their slim Majority in the province was the basic of the Tamil claim for the district development councils and substantial provincial autonomy. A formula favoured by the Tamils and eventually by Canada -- was that resettlement should proceed according to a district ethnic formula.

Mahaweli River: Maduru Oya Dam is Built with Help from Canada

Much has been written on the Mahaweli project and its outcomes in each of the five constructed reservoirs –Victoria (UK), Kotmale (Sweden), Randenigala and Rantembe (Germany) and Maduru Oya. Many Canadians have taken part in the debate and pondered big issues of human rights, ethnic conflict, attacks on contractors, and the role of aid that dogged downstream irrigation planning for system B of Madura Oya.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஊர்காவல் படைகளுக்கே ஆயிரம் கோடிகளில் நிதிஒதுக்கீடு.. 2018 வரவுசெலவுத் திட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள் என கூட்டமைப்பின் கனடிய பிரச்சார பீரங்கியிடம் ஒரு வானொலியில் கேட்டேன். ஐயா சொன்னார் தமிழர் பகுதிகளில் 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதல்முறையாக 80 கோடிகளை ஒதுக்கியுள்ளார்களாம் என்றார். இவ்வாண்டின் மொத்த செலவீனம் 3 இலட்சத்து 90 ஆயிரம் கோடிகள். இதில் 80 கோடிகள் எவ்வளவு பெரிய காசு எண்டு என்டை மரமண்டைக்கு இன்னும் புரியுதில்லைங்கோ!!! இன்னும் ஒன்று சொன்னார் 50 ஆயிரம் வீடுகளுக்காக அவ் 80 கோடிகளில் 70 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு வீட்டுக்கு 1400 ரூபா. முடிந்தால் இதற்கு ஒரு மீனை எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கோ... ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரை... இலகுவாக ஏமாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை... சேடம் இழுக்கும் தமிழினத்திற்கு மகா வலியாகத் தான் இருக்கும்...

மரமண்டைகள் அல்ல பிழைக்க தெரிந்தவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலிலை சும்மா கலக்கிற உந்த மகாவலியை வைச்சு சிங்கள குடியேற்றத்தை தமிழர் காணிகளிலை அண்டு தொடக்கமே பேரினவாதம் செய்து கொண்டுதான் வருகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.