Sign in to follow this  
நவீனன்

ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும்....மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை

Recommended Posts

ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும்

SAMAKALAM010918-PG03-R1Page1Image0002-ff1965659ac85c2160351b9a77c4705adaf512cb.jpg

 

மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை 

 

ஒரு ஒடுக்­கப்­பட்ட இனக்­கு­ழுமம். அதன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள், அவை பற்­றிய அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்­லிம்கள். ரக்கைன் மாநி­லத்தில் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைகள். இவை பற்றி ஐக்­கிய நாடுகள் சபையின் குழு­வொன்று விசா­ரித்­தது.

இந்­தோ­னே­ஷி­யாவின் முன்னாள் சட்­டமா அதிபர் இலங்கை மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­னவர். மர்­சுக்கி தாருஸ்மான் தலை­மை­யி­லான குழு­வினர் வரைந்த அறிக்கை. சுருக்­க­மாக சொன்னால், இன்­னொரு தாருஸ்மான் அறிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரக்கைன் மாநி­லத்தில் தீவிர வன்­மு­றைகள் நிகழ்ந்­தன. கூட்டுப் படு­கொ­லைகள், பாலியல் வன்­பு­ணர்­வுகள், சூறை­யா­டல்கள். இவற்றில் இருந்து உயிர் தப்­பு­வ­தற்­காக இலட்­சக்­க­ணக்­கான மக்கள் புலம்­பெ­யர்ந்­தார்கள்.

ரோஹிங்கிய முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றையை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­கெ­னவே இனச்­சுத்­தி­க­ரிப்­பாக வர்­ணித்­தது. இன்று தாருஸ்மான் அறிக்கை இன அழி­வாக விப­ரித்­துள்­ளது. இந்தக் குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்­கி­றது.

தாருஸ்மான் குழு­வி­ன­ருக்கு மியன்மார் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவர்கள் செய்­மதிப் படங்கள், புகைப்­ப­டங்கள், வீடி­யோக்கள் போன்­ற­வற்றை பரி­சீ­லித்­தனர். சுமார் 875 பேருடன் ஆழ­மான நேர்­கா­ணல்­களை நடத்­தி­னார்கள்.

இவற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை, கடந்த திங்­கட் கி­ழமை வெளி­யா­னது. இந்த அறிக்கை ரக்கைன் மாநி­லத்தில் நிகழ்ந்­த­வற்றை தெளி­வாக படம் பிடித்துக் காட்­டு­கி­றது. வன்­மு­றை­களின் ஆணி­வேர்­களை ஆராய்­கி­றது.

இந்த வன்­மு­றையால் எத்­தனை பேர் இறந்­தார்கள் என்­பது யாருக்கும் தெரி­யாது. எனினும், குறைந்­த­பட்சம் 10,000 மர­ணங்­க­ளா­வது நிகழ்ந்­தி­ருக்­கக்­கூடும் என ஐ.நா.வின் தகவல் அறியும் குழு கூறு­கி­றது.

ரோஹிங்கிய மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­கொ­டு­மை­களின் தன்­மையை அறிக்கை விப­ரிக்­கி­றது. இவை சர்­வ­தேச சட்­டங்­களின் கீழ் மிகவும் தீவி­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளாக இருக்­கக்­கூடும் எனவும் குறிப்­பி­டு­கி­றது.

இவை புதி­யவை அல்ல. ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குத்­தரெஸ் அவர்­களும் விப­ரித்­தவை. இம்­முறை புதிய விடயம் உண்­டெனின், அது ஆறு இரா­ணுவ மேல­தி­கா­ரி­களைப் பெய­ரிட்­டமை தான்.

மியன்­மாரின் இரா­ணுவத் தள­பதி அடங்­க­லாக ஆறு பேர். இனப்­ப­டு­கொலை, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், போர்க் குற்­றங்கள் பற்றி விசா­ரிப்­ப­தாயின் இவர்­க­ளையே முதன்­மைப்­ப­டுத்த வேண்டும் என தாருஸ்மான் அறிக்கை கூறு­கி­றது.

மியன்­மாரின் நிகழ்­நிலைத் தலைவி ஆங் சான் சூகி அம்­மையார் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்கள் பற்­றியும் அறிக்கை பேசு­கி­றது. ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பு வாளா­தி­ருந்து வன்­மு­றை­க­ளுக்கு துணைபோன விதத்தை விப­ரிக்­கி­றது.

ஆன் சான் சூகி உள்­ளிட்ட தலை­வர்கள் இனப்­ப­டு­கொ­லையில் நேர­டி­யாக பங்­கேற்­க­வில்லை. ஆனால், வன்­மு­றை­களின் முன்­னி­லையில் மௌனம் சாதித்து, குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­தார்கள்.

அத்­துடன், ஆட்­சி­யா­ளர்­களை ஆதா­ரங்­களை அழித்து, சர்­வ­தேச சமூ­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு இட­ம­ளிக்க மறுத்­தார்கள் எனவும் தாருஸ்மான் அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்கை சொல்­வதை சாராம்­சப்­ப­டுத்­தலாம். ரக்கைன் மாநி­லத்தில் ரோஹிங்கியர்­களின் படு­கொலை இன-­அ­ழிப்­பிற்கு சம­மா­னது. மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரிகள் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

இந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் பார­தூ­ர­மா­னவை. இவை ஐ.நா. பாது­காப்பு சபையின் கவ­னத்தைப் பெறும். அறிக்­கையில் கூறப்­படும் விட­யங்கள் ஒட்­டு­மொத்த உல­கத்­திற்கும் உரத்துக் கூறப்­படும். அது மாத்­தி­ரமே.

ஏனெனில், தாருஸ்மான் குழு பரிந்துரைக்க மாத்­தி­ரமே முடியும். இவர் குற்­ற­வாளி என்று தீர்­மா­னிக்கும் அதி­காரம் குழு­விற்குக் கிடை­யாது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்கும் அதி­கா­ரமும் அதற்கு இல்லை.

இந்த நிலையில், ரோஹிங்கிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கொடுமை புரிந்­த­வர்கள் முறை­யாக விசா­ரிக்­கப்­ப­டு­வார்­களா, அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை கிடைக்­குமா என்­பது முக்­கி­ய­மான கேள்வி. அதுவே முதன்­மை­யா­னதும் கூட.

இன-­அ­ழிவு, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்றம் போன்­ற­வற்றை விசா­ரிப்­ப­தற்கு பொருத்­த­மான அமைப்­பென்றால், அது ஐ.நா. கட்­ட­மைப்­பிற்குள் வரும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றமே.

அது தவிர, ஐ.நா.வின் தீர்ப்­பா­யங்­களை ஸ்தாபிக்­கலாம். யுகொஸ்­லா­விய நெருக்­கடி, ருவாண்­டாவின் முரண்­பாடு போன்­ற­வற்றில் நிகழ்ந்த அட்­டூ­ழி­யங்­களை விசா­ரிப்­ப­தற்­காக அத்­த­கைய தீர்ப்­பா­யங்கள் ஸ்தாபிக்­கப்­பட்­டன.

ஆனால், ரோஹிங்கிய அக­திகள் விவ­கா­ரத்தை அவ்­விரு நீதி­மன்­றங்­க­ளிலும் பாரப்­ப­டுத்­து­வது அர­சியல் நடை­மு­றை­யாகும். இந்த அர­சியல் ஐ.நா. பாது­காப்பு சபையை சார்ந்­த­தாகக் காணப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு சபையில் வீற்றோ அதி­காரம் படைத்த நாடுகள் நினைக்கும் பட்­சத்தில், சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் விவ­காரம் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தடுக்­கலாம்.

சீனாவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் தண்­டிக்­கப்­ப­டு­வதை சீனா விரும்­ப­மாட்­டாது. ஏனெனில், மியன்­மா­ருடன் கூடு­த­லான வர்த்­தக, பொரு­ளா­தார உற­வு­களைப் பேணும் நாடாக சீனா திகழ்­கி­றது.

அது தவி­ரவும், தமக்கு அரு­கி­லுள்ள நாடுகள் மீது வெளித்­த­லை­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை சீனா அனு­ம­திப்­ப­தில்லை. குறிப்­பாக, மேற்­கு­லகத் தலை­யீ­டுகள் என்றால் சீனா­விற்கு அலர்ஜி.

பூகோள அர­சி­யலை ஆராய்ந்தால், மியன்மார் விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதை ரஷ்­யாவும் விரும்பப் போவ­தில்லை. அந்­நாடும் வீற்றோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தலாம்.

அமெ­ரிக்­காவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் இரா­ணுவ மேல­தி­கா­ரிகள் சிலர் மீது சமீ­பத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒரு­த­லைப்­பட்­ச­மான பொரு­ளா­தாரத் தடை­களை விதித்தார். இவர்­களில் தாருஸ்மான் அறிக்­கையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட­வரும் உள்ளார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்­த­வ­ரையில், சிரியா, ஆப்­கா­னிஸ்தான், யெமன் போன்ற நாடுகள் அள­விற்கு மியன்மார் முக்­கி­ய­மா­னது அல்ல. அங்கு 'ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்­து­வதில்' ட்ரம்­பிற்கு அவ்­வ­ள­வாக ஆர்வம் இல்லை.

அது தவிர, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சேரவும் இல்லை. இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபிக்க வழி­வ­குத்த ரோமன் சட்­டத்தில் அமெ­ரிக்­காவும், ரஷ்­யாவும் கைச்­சாத்­திட்­டன. ஆனால் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபித்த நாடு­களுள் ஒன்­றாக பிரிட்டன் திகழ்­கி­றது. முன்னர் பர்மா என்­ற­ழைக்­கப்­பட்ட மியன்­மாரின் கால­னித்­துவ ஆட்­சி­யா­ள­ராக இருந்த பிரிட்டன், பாது­காப்புச் சபையில் மியன்­மாரை வழி­ந­டத்­து­கி­றது.

இது­வரை காலமும் மியன்­மாரை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்­சி­களை பிரிட்டன் ஆட்­சே­பித்து வந்­தது. இந்தப் பிரச்­ச­ினையில் உலக நாடுகள் மத்­தியில் கருத்­தொற்­றுமை இல்­லை­யென பிரிட்டன் கூறி­யது.

இந்த வல்­ல­ரசு நாடு­களின் கபட நாடகம் புதி­யதல்ல. தமக்கு நன்மை தரு­மாயின் மனித உரி­மைகள், போர்க்­குற்­றங்கள் பற்றி பேசுவதும், மாறி நடந்தால் மௌனம் காப்பதும் வல்லரசுகள் காலங்காலமாக அனுசரித்த தந்திரம்.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதி நெருக்கடி பற்றிய தாருஸ்மான் அறிக்கையை ஒருபுறம் தள்ளி வைப்போம். அந்த முஸ்லிம்கள் மீது பாரதூரமான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது.

இன்று குற்றமிழைக்கப்பட்டிருப்பதை அறிந்தும், குற்றமிழைத்தவர்கள் இவர்களென உறுதியாகத் தெரிந்தும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாமல் இருக்கிறது.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதிகள் என்ற பிரச்சினை, மனிதகுல நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விடயம் மாத்திரமல்ல, சர்வதேச சட்டத்தின் ஆற்றலைப் பரிசோதிக்கும் பலப்பரீட்சையாகவும் இருக்கிறது என்பதே உண்மை

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-3

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this