Jump to content

முதலமைச்சரின் மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன்


Recommended Posts

முதலமைச்சரின் மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன்

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் மன குழப்பம் அடைந்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு கூட்டமைப்பு ஒரு போதும் பொறுப்பேற்காது என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை கூறினார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில், “அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும்,
தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
ஆகவே நாட்கள் செல்லச் செல்ல தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.
 
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள். மாகாணசபைத் தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறினார். அவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்கமுடியாது” என்று குறிப்பிட்டார்.

http://athavannews.com/முதலமைச்சரின்-மனக்குழப்/

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர்! கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை விரைவில் வெளிப்படுத்தும்?

 

இனியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு விரைவில் வெளிப்படுத்தும்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை.

முதலமைச்சர் நேற்று உரையாற்றும் போது, தன்முன் 3 தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும், தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது என்றும் அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான்.

அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள்.

மாகாணசபை தேர்தல்கள் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டை விட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறியவர்.

இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/192296?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் மனக்குழப்பத்தில் இருப்பதாக சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால், தமிழர்களுக்கு சமஷ்ட்டி முறையிலான தீர்வு தேவையற்றது என்று இவர் கூறியதை, இவரது கட்சியுள்ள சம்பந்தன், மாவை தவிர்ந்த  எவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவரது தனிப்பட்ட கருத்து, அப்படிக் கூறுவதற்கு அவருக்கு அருகதையில்லை, என்ன பேசுவதென்றே தெரியாமல் பிதற்றுகிறார் என்று கூறுகிறார்கள்.

"

அதி­கார பர­வ­லாக்­கலை பிர­தா­னப்­ப­டுத்தி சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பே தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும். சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பே வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டில் எந்­த­வித மாற்­றமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் உறு­தி­பட தெரி­வித்­தன .   

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீற­மு­டி­யாது எனவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான டெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலை­வரும் எம்.பி. யுமான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் குறிப்­பிட்­டனர்.

நாட்­டுக்கு சமஷ்டி முறைமை தேவை­யில்லை என்ற கருத்­தினை அண்­மையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுமந்­திரன் எம்.பி தெரி­வித்­தி­ருந்த நிலையில் அவ­ரது கருத்தை வடக்கு முதல்வர் உள்­ளிட்ட தமிழர் தரப்­பினர் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றனர். இந்த நிலையில் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே இதனை குறிப்­பிட்­டனர்.

 தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான டெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் கூறு­கையில்,

எமது மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்­கான ஒரே தீர்வு அதி­கார பர­வ­லாக்கல் மூல­மாக ஒரு அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்­வ­தாகும். இது எமது கொள்கை என்­பதை விட எமது இலட்­சியம் என்ற கூற வேண்டும். எமது மக்கள் சுய­மாக தமது தீர்­மா­னங்­களை எடுக்­கவும், தடைகள் இல்­லாத கட்­டுப்­பா­டு­களோ வரம்­பு­களோ இல்­லாத அர­சியல் நகர்­வு­களை எமது பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்க எமக்கு சமஷ்டி அர­சியல் அமைப்பு அவ­சியம். அதனை இலக்­காக கொண்டே எமது தீர்­வுக்­கான பய­ணத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் தமிழ் மக்­களை திசை திருப்­பவோ அல்­லது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­தவோ எவ­ரேனும் முயற்­சித்தால் அதற்கு ஒரு­போதும் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக நாம் எமது நிலைப்­பாட்டை உறு­தி­யாக முன்­வைத்து வரு­கின்றோம். எமது மக்கள் மத்­தி­யிலும் நாம் எமது கொள்­கையை உறு­தி­யாக முன்­வைத்து வரு­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் சுமந்­திரன் எம்.பியின் கருத்­தினை கொண்டு நாம் எமது நிலைப்­பாட்டை மாற்­றி­கொள்­ளப்­போ­வ­தில்லை. சமஷ்டி அர­சியல் அமைப்­பினை பெற்­றுக்­கொள்­வதே எமது ஒரே இலக்­காகும், அந்த பாதையில் இருந்து நாம் ஒரு­போதும் விலகி நடக்­கப்­போ­வ­தில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­கக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வரையில் நாம் எமது போராட்­டத்தை முன்­னெ­டுப்போம் என்றார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் அமைப்பின் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் இது குறித்து கூறு­கையில்,

சமஷ்டி என்ற வார்த்தைப் பதம் புதிய அர­சியல் அமைப்பில் இருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுமந்­திரன் கூறி­ய­தாக செய்­தித்­தாள்­களில் படித்தேன். எனினும் அவர் உண்­மை­யாக எவ்­வா­றான கருத்­துக்­களை கூறினார் என நான் பார்க்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சமஷ்டி வேண்டாம் என்ற நிலை­பாட்டில் இருந்­த­தில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மிகத்­தெ­ளி­வாக சமஷ்டி அர­சியல் முறை­மையே தீர்வு என்­பதை கூறி­யுள்ளோம். கடந்த மாகா­ண­சபை தேர்­த­லிலும் சரி, பொதுத் தேர்­த­லிலும் நாம் எமது நிலைப்­பாடு என்ன என்­பதை தெளி­வாக கூறி­யுள்ளோம்.

அவ்­வாறு இருக்­கையில் இப்­போது சமஷ்டி வேண்டாம் என கூற சுமந்­தி­ர­னுக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை. அவ­ரது தனிப்­பட்ட கருத்துக்களை அல்லது தெளிவில்லாத கருத்துக்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூற முடியாது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தீர்வு சமஷ்டி அரசியல் அமைப்பில் தான் தங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நாம் உரையாற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் சமஷ்டி மட்டுமே தீர்வு என்ற கருத்தினை ஆழமாக முன்வைத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்"

Link to comment
Share on other sites

முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் விக்கி : அவரின் முடிவை அறிவித்த பின்னரே எமது நிலைப்பாடு - சுமந்திரன்

 

(ஆர்.யசி)

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எந்தப் பக்கம் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். அவர் முதலில் தீர்மானம் எடுத்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி  நிலைப்பாட்டை அறிவிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.  

சமஷ்டி என்ற பெயர்ப் பலகை   முக்கியமல்ல, அதிகார பரவலாக்கம் சரியாக இடம்பெற வேண்டும் என்பதே முக்கியமாகும். எனது கருத்தை விக்கினேஸ்வரன் திருபுபடுத்திவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அவரது அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளமை மற்றும் சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் எம்.பி கூறிய கருத்து தொடர்பில் வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பில் பதில் கூறுகையிலேயே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் இது குறித்து மேலும் கூறுகையில்

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எந்தப்பக்கம் காலடி எடுத்து வைப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ளார். அவரது தெரிவுகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றன. முதலில் மூன்று தெரிவுகள் என்று கூறினார், இப்போது நான்காம் தெரிவு குறித்து பேசுகின்றார். நாட்கள் கடக்கையில் மேலும் பல தெரிவுகள் வரலாம். ஆகவே வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட முன்னர் அவர் தனது சரியான தெரிவு என்ன என்பதை கூற வேண்டும். யாருடன் பயணிப்பது என்பது அவரது தீர்மானம். அதனை அவர் முன்னெடுக்க வேண்டும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த தலையீட்டையும் செய்யவில்லை.

அவர் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுத்து எமக்கு அறிவித்த பின்னர் நாம் எமது தீர்மானத்தை முன்வைப்போம். அதுவரை நாம் விக்கினேஸ்வரன் கூறும் கருத்துக்களை பெரிதுபடுத்தப்போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நிலைமைகளை சரியாக இனங்கண்டு அதற்கமைய செயற்பட்டு வருகின்றது. நாம் இன்று வடக்கின் சகஜமான நகர்வுகளை உறுதிபடுத்தும் பல வேலைத்திட்டங்களை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலமாக செய்து வருகின்றோம். எமது கடமையை நாம் சரியாக செய்கின்றோம். ஆனால் எம்மை விமர்சிக்கும் இவர்கள் இத்தனை காலத்தில் செய்தது என்ன என்பதை அவர்கள் வாயால் கூற முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.

 நான் சமஷ்டி வேண்டாம் என கூறியதாக விக்கினேஸ்வரன் விமர்சித்து வருகின்றார். அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து நாம் நடத்தும் எழாவது கூட்டமே அண்மையில் காலியில் இடம்பெற்றது. இதற்கு முன்னரும் சகல மக்களையும் சந்தித்து எமது நிலைபாட்டினை நாம் கூறி வருகின்றோம். அதேபோல் காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் எனது உரையை முழுமையாக விக்கினேஸ்வரன் கேட்டிருக்க வேண்டும். சமஷ்டியின் தேவை, அதிகார பரவலாக்கல், மத்திய அரசாங்க ஆதிக்கம் இருந்தாலும் மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு அவசியம் என்ற அனைத்தையும் நான் கூறினேன். நிகழ்வின் பின்னர் ஊடகவியாளர் சிலர் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினர்,

சமஷ்டி என்ற சொற்பிரயோகம் இருந்தால் மட்டுமா நீங்கள் அரசியல் அமைப்பை ஆதரிப்பீர்கள் என கேள்வி எழுப்பினார், சமஷ்டி என்ற பெயர் பலகை அவசியம் இல்லை, உள்ளடக்கமே அவசியம், சமஷ்டி தேவையில்லை. எமது மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் அரசியல் அமைப்பு தான் வேண்டும் என நான் கூறினேன். இந்த ஒரு விடயத்தை மட்டுமே வைத்துகொண்டு விக்கினேஸ்வரன் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

சமஷ்டி என்ற நிலைபாட்டில் இருந்து நாம் ஒருபோதும் மாறியதில்லை. வெறுமனே பெயர் பலகையை வைத்துகொண்டு தீர்வு நோக்கி பயணிக்க முடியாது. அரசியல் அமைப்பின் உண்மையான உள்ளடக்கம் சமஷ்டியாக, அதிகார பகிர்வை பலப்படுத்தும் நோக்கத்தில் அமைய வேண்டும். நாடு ஒன்றாக இருக்கலாம் ஆனால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் வகையில் அமைய வேண்டும். அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையிலும் அவ்வாறே உள்ளது. சமஷ்டி என்ற பெயர் பலகை உள்ளடக்கப்படாது. ஆனால் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்க நாம் முயற்சிகின்றோம் என்பது மக்களுக்கு சரியாக செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-03#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரித்திற்கு மனக்குழப்பம் இருக்கலாம். ஆனால்  பொய் சொல்லவில்லை.

ரணிலால் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைப்பதத்திற்கு அனுப்பப்பட்ட முன்னாள் சட்டத்தரணி , கிந்தியத்தின் தேவையை அடைவதற்கு, சிங்களத்துடன் ஈழத்தமிழரின் தலைவிதியை பேரம் பேசுவதத்திற்கு உமக்கு அருகதையே கிடையாது. 

http://www.wionews.com/south-asia/lanka-tamils-may-abandon-federalism-for-greater-power-to-provinces-lawmaker-162896

இயலுமானவரை விட்டுக்கொடுத்து சிங்களத்தின் நாடியைப் பிடித்து பார்த்தேன் என்று கூறியிருந்தால், ஓரளவு நீர் சொலவத்தை நம்பலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.