Jump to content

உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும்


Recommended Posts

உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும்

 

தமிழ் அர­சியல் வெளியில் அனைத்துத் தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­ணைத்து வழி­ந­டத்திச் செல்­லத்­தக்க, ஆளு­மை­யுள்ள தலை­மைக்கு ஒரு வெறுமை நிலை நில­வு­கின்­றது என்­பது மீண்டும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் ஏற்­பட்ட இந்த இடை­வெளி பெரி­தாகிச் செல்­கின்­றதே தவிர குறு­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அந்த வெறு­மையை நீக்­கு­வ­தற்கு நம்­பிக்கை அளிக்­கத்­தக்க முன்­னெ­டுப்­புக்­களை யார் மேற்­கொள்ளப் போகின்­றார்கள் என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இந்த நிலை­மை­களை மகா­வலி திட்­டத்­திற்கு எதி­ரான முல்­லைத்­தீவின் மக்கள் எழுச்சி பளிச்­சிடச் செய்­தி­ருக்­கின்­றது.

முல்­லைத்­தீவு எழுச்­சி­யா­னது, வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்­கது. யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் வடக்கு,கிழக்குப் பிர­தே­சங்­களில் தமிழ் மக்கள் மீதான அர­சாங்­கத்தின் அடக்­கு­மு­றையை எதிர்த்து பீறிட்டு கிளம்­பிய மக்கள் சக்­தியை இங்கு நேர­டி­யாகக் காண முடிந்­தது.

தமிழர் தாயகப் பிர­தே­ச­மா­கிய இணைந்த வடக்­கையும் கிழக்­கையும் துண்­டா­டு­வ­தற்கு பேரி­ன­வாத சக்­திகள், திரை­ம­றை­விலும் வெளிப்­ப­டை­யா­கவும் தொடர்ச்­சி­யா­கவே முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­தி­ருக்­கின்­றன. நில­வழித் தொடர்­பு­டைய தமி­ழரின் தாயகக் கோட்­பாட்டைத் தகர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் மகா­வலி எல் வல­யத்­திட்டம் மிகவும் முக்­கி­ய­மா­னது. இது முல்­லைத்­தீவை மட்­டு­மல்­லாமல் வவு­னியா மாவட்­டத்­தையும் ஆழ ஊடு­ருவி சிங்­கள மய­மாக்கி வன்­னிப்­பி­ர­தே­சத்தின் தனித்­து­வ­மான இனப்­ப­ரம்­பலை, இது தலை­கீ­ழாக்கவல்­லது என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை.

இந்த எல் வலயக் குடி­யேற்றப் பர­வ­லாக்கல் திட்­டத்­திற்கு வன­ப­ரி­பா­லனத் திணைக்­களம், தொல்­லியல் திணைக்­களம் என்­பன உறு­துணை புரி­கின்­றன என்­பது கவ­னத்திற் கொள்ள வேண்­டி­ய­தாகும். இவற்­றோடு கடற்றொழில் திணைக்­க­ளமும் கைகோர்த்­தி­ருக்­கின்­றது என்­று­கூட குறிப்­பி­டலாம்.

மகா­வலி திட்­டத்தின் கீழ் ஏற்­க­னவே வெலி­ஓயா என்ற மண­லாற்று குடி­யேற்றத் திட்டம் வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை மேலும் விஸ்­த­ரிப்­ப­தற்­கான நகர்வே முல்­லைத்­தீவில், பெரிய அள­வி­லான மக்கள் எதிர்ப்­புக்கு முகம் கொடுக்க நேர்ந்­தி­ருக்­கின்­றது.

மகா­வலி ஆற்று நீரை வட­மா­கா­ணத்­திற்குக் கொண்டு வரு­கின்றோம் என்ற கருத்­து­ரு­வாக்கம் வட­ப­கு­தியின் தமிழர் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. உலர் வலயப் பிர­தே­ச­மா­கிய வட­ப­கு­தியின் தண்­ணீர்த்­தே­வையைப் பூர்த்தி செய்­வ­தென்­பது இந்தத் திட்­டத்தின் ஒரு கண்­து­டைப்பு நட­வ­டிக்­கையே தவிர, அங்­குள்ள மக்­களின் உண்­மை­யான தேவை, அந்தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் துடிப்­ப­வர்­க­ளினால் உளப்­பூர்­வ­மாக கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதனை, முல்­லைத்­தீவு மற்றும் வவு­னியா மாவட்­டங்­களின் எல்­லைப்­பு­றங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நில ஆக்­கி­ர­மிப்பு, அத்­து­மீ­றிய சிங்­களக் குடி­யேற்றம், முல்­லைத்­தீவின் எல்­லைப்­புறக் கட­லோரப் பிர­தே­சங்­களில் சிங்­கள மீன­வர்­களை நிரந்­த­ர­மாகத் தொழில் செய்ய அனு­ம­திப்­பது உள்­ளிட்ட இங்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கை­களின் மூலம் தெளி­வாகப் புரிந்துகொள்ள முடியும்.

மகா­வலி ஆற்று நீர் வட­ப­கு­திக்குத் திசை திருப்­பப்­ப­டு­வது வர­வேற்­கப்­பட வேண்­டிய ஒரு நட­வ­டிக்­கை­யாகும். ஆனால், திசை­தி­ருப்­பப்­ப­டு­கின்ற அந்த நீரோடு ஆற்று வெள்­ள­மாக, தமிழர் பிர­தே­சங்­களில் வலிந்து திணிக்­கப்படுகின்ற திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்தை அனு­ம­திப்­பது அர­சியல் ரீதி­யாக அறி­வு­டை­மை­யா­காது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே மகா­வலி எல் வலயத் திட்­டத்­திற்கு எதி­ராக முல்­லைத்­தீவில் மக்கள் அணி­தி­ரண்டு தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.

எதற்­கெ­டுத்­தாலும் ஆர்ப்­பாட்டம், ஆர்ப்­பாட்டப் பேரணி என்­பது வழ­மை­யா­கி­யுள்ள நிலையில் முல்­லைத்­தீவு எழுச்சி எதனைச் சாதிக்கப் போகின்­றது? அர­சுக்கு எந்த வகையில் அழுத்­தத்தைக் கொடுக்கப் போகின்­றது என்­பது முக்­கிய கேள்­வி­க­ளாக எழு­கின்­றன. அதே­நேரம் முல்­லைத்­தீவு எழுச்­சி­யா­னது தமிழ் அர­சி­யலின் இருப்பு, அதன் செல்­நெறி என்­ப­வற்றை ஆழ­மாகச் சிந்­திக்­கவும் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

மகா­வலி எதிர்ப்பு தமிழர்

மர­பு­ரிமைப் பேரவை

முல்­லைத்­தீவில் மக்­களை எழுச்சி பெறச் செய்­வ­தற்கு மகா­வலி எதிர்ப்பு தமிழர் மர­பு­ரிமைப் பேரவை முழு வீச்­சுடன் செயற்­பட்­டி­ருந்­தது. தமிழ் அர­சியல் வெளியில், இது, மற்­று­மொரு பேரவை என்று இடம் பிடிக்­கின்­றது. இந்த மர­பு­ரிமைப் பேர­வை­யி­ன­ரு­டைய நோக்கம் முற்று முழு­தாக மற்­று­மொரு பேர­வை­யாக எழுச்சி பெறு­வ­தல்ல என்­பது தெளிவு. இணைந்த வடக்கு,கிழக்கு தாயகப் பிர­தே­சத்தின் இதயப் பகு­தி­யா­கிய முல்­லைத்­தீவு மண் பறி­போ­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்ற மண் உரிமை சார்ந்த உயர்ந்த இலட்­சி­யமே இந்தப் பேர­வையின் உத­யத்­திற்கு மூல காரணம் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை. இந்த வகையில் கட்சி அர­சியல் போக்­கிற்­காக ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பரி­ண­மிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஆனால் நிச்­ச­ய­மாக தமிழர் அர­சியல் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்போ ஏனைய அர­சியல் கட்­சி­களோ அல்­லது தமிழர் அர­சி­யலை வேகமுள்­ள­தா­கவும், அர்த்­த­முள்­ள­தா­கவும் ஒருங்­கி­ணைந்த ஒரு போக்கில் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்ற நோக்­கத்தில் எழுச்சி பெற்ற தமிழ் மக்கள் பேர­வையோ, முல்­லைத்­தீவில் மண் உரி­மைக்­கான குரலை எழுச்­சி­யான முறையில் ஒலிக்கச் செய்ய முடி­ய­வில்லை.

மகா­வலி திட்­டத்தின் மூலம் தமிழர் நிலங்கள் கப­ளீ­கரம் செய்­யப்­ப­டு­வதை தமிழ் அர­சியல் கட்­சி­களோ அல்­லது தமிழ் மக்கள் பேர­வையோ அறிந்­தி­ருக்­க­வில்லை என்று கூற முடி­யாது. அந்த அள­வுக்கு அவைகள் அர­சியல் அறி­யாமை உடை­யவை என்று கரு­து­வ­தற்­கில்லை. அதனை அறிந்­தி­ருந்தும் அதற்கு எதி­ராகச் செயற்­பட முடி­யா­தி­ருந்­தன என்றே எண்­ணத்­தோன்­று­கின்­றது.

தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கொண்­டுள்ள இணக்கப்போக்கு கார­ண­மாக இந்த விட­யத்தை அமை­தி­யாகக் கையாள வேண்டும் என்று கரு­தி­யி­ருந்­ததோ தெரி­ய­வில்லை. தமிழ் மக்­களின் அர­சியல் காவ­ல­னாக ஒரு­சில தரப்­பி­னரால் உறு­தி­யாக நம்­பு­கின்ற வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ர­னும்­கூட, இந்த விட­யத்தில் அர்த்­த­முள்ள வகையில் செயற்­படத் தவ­றி­விட்டார் என்றே கருத வேண்டும். கூட்­ட­மைப்பு தவிர்ந்த ஏனைய அர­சியல் கட்­சி­களும் காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராக மக்­களை ஒன்று திரட்டி மக்கள் மய­மான ஓர் எதிர்ப்பை வெளி­யி­டு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை. புதி­தாக உரு­வா­கிய மகா­வலி எதிர்ப்பு தமிழர் மர­பு­ரிமைப் பேரவை அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆயுதப் போராட்­டத்தின் போது, மக்­களை எழுச்சி பெறச் செய்­வ­தற்­கான பல்­வேறு அர­சியல் வேலைத்­திட்­டங்­களை விடு­த­லைப்­பு­லிகள் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அதன் மூலம், பல­வ­கை­யான இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யிலும், மக்கள் எழுச்சி பெற்று விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மையை, ஏக­போகத் தலை­மையாக ஏற்­றி­ருந்­தார்கள். தமிழ் அர­சியல் கட்­சி­க­ளும்­கூட, விரும்­பியோ விரும்­பா­மலோ, வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அந்தத் தலை­மையை ஏற்­றி­ருந்­தார்கள் என்றே கூற வேண்டும். அவ்­வாறு ஏற்­ப­தற்கு அன்­றைய ஆயுதப் போராட்டச் சூழல் அர­சியல் கட்­சி­களை நிர்ப்­பந்­தித்­தி­ருந்­தது.

ஆனால் அர­சாங்­கத்தைத் திக்­கு­முக்­காடச் செய்­தி­ருந்த தமிழ் மக்­களின் அர­சியல் வலிமை, ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் நிலை­கு­லைந்து போயிற்று. அந்த அர­சியல் தலைமைப் பொறுப்பு தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தோள்­களில் வந்து இறங்­கி­யது. அதி­ருப்தி உணர்­வுகள் இருந்த போதிலும், தமிழ் மக்கள் மிகுந்த நம்­பிக்­கை­யோடும், விருப்­போடும் தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை வர­வேற்று ஏற்­றி­ருந்­தார்கள். ஆனால், அந்த மக்­களின் மிகுந்த நம்­பிக்கைக்கு உரிய வகையில் அந்தத் தலைமைப் பொறுப்பை கூட்­ட­மைப்­பினால் கட்­டிக்­காக்க முடி­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே, மாற்றுத் தலைமை குறித்த சிந்­தனை தமிழ் அர­சியல் வெளியில் தலை­தூக்­கி­யது. அதன் விளை­வா­கவே தமிழ் மக்கள் பேரவை உத­ய­மா­கி­யது. அதனைத் தொடர்ந்து இப்­போது தமிழர் மர­பு­ரிமைப் பேரவை பிறப்­பெ­டுத்­தி­ருக்­கின்­றது.

அர­சியல் தலை­மை­களும்

 மக்கள் எழுச்­சியும்

மகா­வலி திட்­டத்தின் காணி அப­க­ரிப்­புக்கு முல்­லைத்­தீவில் அணி­தி­ரண்ட மக்கள் வெளிப்­ப­டுத்­திய எதிர்ப்பு எந்த அள­வுக்கு அர­சுக்கு அழுத்­தத்தைக் கொடுத்­தி­ருக்­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை. மக்­க­ளு­டைய இந்த உரி­மைக் கு­ர­லுக்கு அர­சாங்கம் எந்த வகையில் பதி­ல­ளிக்கப் போகின்­றது என்­ப­தையும் சரி­யாக ஊகிக்க முடி­யா­துள்­ளது. ஆனால் ஒன்று மட்டும் நிச்­சயம். யுத்­தத்தின் பின்னர் அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள புனர்­வாழ்வு, புன­ர­மைப்பு மற்றும் நல்­லி­ணக்க முயற்­சிகள் வெறும் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்ற யதார்த்தம் இந்த மக்கள் எழுச்­சியின் மூலம் சர்­வ­தே­சத்­திற்கு உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் சிதைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, சிறு­பான்மை தேசிய இன மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தாகப் போக்­குக்­காட்டி, அவர்­களை அடக்கி ஒடுக்­கு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளையே மறை­முக நிகழ்ச்சி நிர­லாக அரசு முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்­பதை இந்த மக்கள் எழுச்சி நிதர்­ச­ன­மாக்­கி­யி­ருக்­கின்­றது.

எழுச்சி பெற்­றுள்ள தமிழ் மக்கள் பேரவை, மகா­வலி எதிர்ப்பு தமிழர் மர­பு­ரிமைப் பேரவை போன்ற அமைப்­புக்­க­ளுக்­கும் ­சரி அவற்றின் பின்­னால் அணி திரண்ட மக்­க­ளுக்­கும் ­சரி, ஆளுமை மிக்க அர­சியல் தலை­மையை வழங்கப் போவது யார்? - இது இன்­றைய அர­சியல் சூழலில் முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது.

அர­சியல் தலை­வர்கள் அர­சியல் பேசு­வதில் வல்­ல­வர்­க­ளாக இருக்­கின்­றார்­களே தவிர, அர­சியல் செய­ற்­பா­டு­களை சரி­யான முறையில் முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அர­சியல் பேசு­வது என்­பது வேறு அர­சியல் செயற்­பாடு என்­பது வேறு. இந்த இரண்­டுக்கும் உள்ள வித்­தி­யாசம் தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை. அல்­லது தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்று மேலெ­ழுந்­த­வா­ரி­யாகக் கூறி­விட முடி­யாது. ஏனெனில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் பல போராட்ட களங்­களைக் கடந்து வந்­த­வர்கள். பழுத்த அர­சியல் அனு­பவம் பெற்­ற­வர்கள். ஆனால் அந்த அர­சியல் அறிவும் அனு­ப­வமும் மக்­க­ளுக்கு உரிய முறையில் பயன்­ப­டு­கின்­ற­னவா என்­பதே இங்கு அக்­க­றைக்­கு­ரிய விட­ய­மாகி இருக்­கின்­றது.

வடக்­கையும் கிழக்­கையும் கட்டி எழுப்­பு­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்தச் செய­ல­ணியில் மக்கள் பிர­தி­நி­திகள் என்ற வகையில் மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு மட்­டுமே இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முற்­றாகப் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­ப­தி­யிடம் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்த செய­ல­ணியின் இரண்­டா­வது கூட்­டத்­திற்கு அவர்கள் அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அந்த கூட்­டத்தில், முல்­லைத்­தீவில் காணி அப­க­ரிக்­கப்­ப­டு­வது பற்­றியும் அங்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சிங்­களக் குடி­யேற்றம் பற்­றியும் பேசப்­பட்­டது.

ஆனால் முல்­லைத்­தீவில் எந்­த­வொரு சிங்­களக் குடும்­பமும் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை பொறுப்­போடு கூறு­வ­தாக ஜனா­தி­பதி தமிழ் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் தெரி­வித்தார். முல்­லைத்­தீ­விலும், வவு­னி­யா­விலும் ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் வெளி­மா­வட்­டங்­களில் இருந்து கொண்டு வரப்­பட்டு குடி­யேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. புதிய குடி­யேற்­றங்­க­ளுக்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை அந்த இடத்தில் ஆணித்­த­ர­மாக உரிய ஆதா­ரங்­க­ளுடன் எந்­த­வொரு பாராளு­மன்ற உறுப்­பி­னரும் முன்­வைக்­க­வில்லை.

அங்கு, வாய்­மொழிக் கதை­யாக வெறு­மனே அர­சியல் பேசு­வ­தற்கு மட்­டுமே தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முடிந்­தி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அந்தக் கூட்டம் எப்­போது நடை­பெறும் என்­பது முன்­கூட்­டியே விடுக்­கப்­பட்­டி­ருந்த அழைப்பின் மூலம் தமிழ் பாராளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தக் கூட்­டத்தில் அவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று பகி­ரங்­க­மாக அவர்­க­ளுக்குக் கூறப்­பட்டு, அது ஒரு சர்ச்­சை­யா­கவே மாறி­யி­ருந்­தது. பல்­வேறு விமர்­ச­னங்கள் சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில்தான் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அந்தக் கூட்­டத்தில் கலந்துகொண்­டார்கள்.

அங்கு சென்­ற­வர்கள் எவ­ருமே என்ன பேசப் போகின்றோம்? எப்­படிப் பேசப்­போ­கின்றோம்? அதற்­கான ஆதா­ரங்கள் என்ன என்­பது பற்றி சிந்­தித்துத் தங்­களைத் தயார்ப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­க­வில்லை. அவ்­வாறு அவர்கள் தயார்ப்­ப­டுத்­த­லுடன் சென்­றி­ருந்தால், எந்­த­வொரு சிங்­களக் குடும்­பமும் முல்­லைத்­தீவில் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை என்று ஜனா­தி­பதி அழுத்திக் கூறி­ய­போது, முல்­லைத்­தீவில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சிங்­களக் குடி­யேற்­றத்­திற்­கான ஆதா­ரங்­க­ளையும் ஏனைய விப­ரங்­க­ளையும் அவற்­றுக்­கு­ரிய ஆவ­ணங்­க­ளுடன் முன்­வைத்­தி­ருக்க வேண்டும். அதனை எவரும் செய்­த­தாகத் தெரி­ய­வில்லை. வெறு­மனே அர­சியல் கூட்­டங்­களில் பேசு­வது போன்று அந்தக் கூட்­டத்­திலும் அர­சியல் உரை­யாற்­றலே நடந்­தி­ருக்­கின்­றது.

அடுத்­தது என்ன?

அரச பொறி­மு­றை­களின் ஊடாக தமிழர் பிர­தே­சத்து காணிகள் இன­ரீ­தி­யான குடி­யேற்­றங்­க­ளுக்­காக அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தையும், அத்­து­மீ­றிய வகையில் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக சிங்­களக் குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தையும் மயப்­ப­டுத்­தப்­பட்ட போராட்­டத்தின் ஊடாக அர­சுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு ஓர் எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பதை ஜனா­தி­ப­தியின் செய­லணி கூட்­டத்தில் தெரி­வித்­த­போது, போராட்­டங்கள் நடத்­து­வ­தாக இருந்தால், பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக இங்கு வரத் தேவை­யில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­த­தாக ஒரு தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­யி­ருந்தால், பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்கு நீங்கள் போராட்டம் நடத்­து­வதில் பய­னில்லை. அந்தப் போராட்­டங்­களால் அர­சாங்க தீர்­மா­னங்­களை மாற்ற முடி­யாது என்று கரு­து­வ­தற்கு இட­முண்டு. நீங்கள் போராட்­டங்­களை நடத்­து­வ­தென்றால் நடத்­துங்கள் எங்­க­ளுக்கு அது­பற்றி கவ­லை­யில்லை. அக்­க­றை­யில்லை என்­பதை அந்தக் கூற்று வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் கொள்ள முடியும். இது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கும் யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டின் முன்­னேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பாத­க­மான உள­வியல் நிலை­மை­க­ளையே உரு­வாக்க வழி­வ­குக்கும்.

மூன்று தசாப்­தங்­க­ளாகத் தொடர்ந்த மோச­மான ஒரு யுத்­தத்தில் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தப் போராட்டம் மீண்டும் ஆரம்ப நிலைக்கு, அதுவும் சாத்­வீகப் போராட்ட நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் தமிழர் தரப்பு அர­சி­யலில் ஒவ்வோர் அடியும் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­போடும் எடுத்து வைக்­கப்­பட வேண்டும். பிற சக்­தி­களின் ஒத்­து­ழைப்­பிலும், குறிப்­பாக சர்­வ­தே­சத்தின் ஆத­ர­விலும் தங்­கி­யி­ருக்­கின்ற இந்தப் போராட்டம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட நிலையில் உறு­தி­யா­கவும், தொடர்ச்­சி­யா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற அர­சுகள் வெற்றிப் பெரு­மி­தத்­துடன் செய­லாற்றிக் கொண்­டி­ருக்­கின்­ற­னவே தவிர, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா.வினதும், சர்வதேசத்தினதும் அழுத்தங்களையும் அரசுகள் உதாசீனம் செய்கின்ற போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்றன.

எதேச்சாதிகாரப் போக்கைக் கொண்ட முன்னைய அரசாங்கத்திற்குப் பதிலாக அரியணையில் அமர்த்தப்பட்ட புதிய ஆட்சி பொறுப்போடு நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது. கடந்த மூன்று வருட காலத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக பிரச்சினைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதையே, இந்த அரசாங்கம் தனது சாதனையாக நிலைநிறுத்தியிருக்கின்றது.

புதிய அரசாங்கத்திற்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தை இக்கட்டான நிலைமைகளில் இருந்து பிணை எடுப்பதற்கே உதவியிருக்கின்றது. சாதாரணமாக கீழ் மட்டத்திலேயே தீரத்துக் கொள்ளக்கூடிய பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு அரசாங்கத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கு கூட்டமைப்பினால் முடியவில்லை.

இத்தகைய ஒரு பின்னணியில், உறுதியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் மக்கள் எழுச்சி பெற்று ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இந்த அரசாட்சியில் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்ற சிங்களத் திணிப்புப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து அதனை முறியடிப்பதற்கு, மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை போன்ற சிவில் அமைப்பின் போராட்ட நடவடிக்கைகள் நெடுந்தொலைவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று கூற முடியாது. அதற்குப் பின்புலத்தில் அல்லது அதனை வழிநடத்திச் செல்வதற்கு ஓர் உறுதியான அரசியல் தலைமைத்துவம் அவசியம்.

மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் அந்தத் தலைமைத்துவம் எங்கிருந்து வரப்போகின்றது? அதனை உருவாக்கப் போவது யார்?

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-09-01#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.