Jump to content

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள்


Recommended Posts

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள்

 

 

இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். 

DSC_1601__1_.JPG

ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர். 

 

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

 

 

இலங்கை அணி

 

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

 

இந்நிலையில்,  ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39517

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்கும் கங்கணத்துடன் இலங்கை

 

 

(நெவில் அன்தனி)

 

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.

received_697939347208862.jpeg

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக அரங்கில் நாளைமுதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எம்.1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் (சம்பியன்ஷிப்) போட்டிகளில் 12 நாடுகள் பங்குபற்றுகின்றன.

 

அதிக தடவைகள் சம்பியனான இலங்கை (1989, 1997, 2001, 2009), மூன்று தடவைகள் சம்பியனான சிங்கப்பூர், இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்த நடப்பு சம்பியன் ஆகியவற்றுடன் மலேசியா, ஹொங்கொங், இந்தியா, ஜப்பான், மாலைதீவுகள், சைனீஸ் தாய்ப்பே, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புருணை ஆகிய நாடுகள் நான்கு குழுகளில் போட்டியிடுகின்றன.

 

இலங்கையைப் பொறுத்தமட்டில் முதல் சுற்றில் பாரிய சவால் இருக்காது என்றே கருதப்படுகின்றது. ஆனால் இரண்டாவது சுற்றில் இலங்கைக்கு பாரிய சவால் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

received_232075344153822.jpeg

முதல் சுற்றில் பி குழுவில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

 

‘‘முதல் சுற்றில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக 100 கோல்களுக்கு மேல் போடுவதே இலங்கை அணியின் இலக்கு. ஆனால் இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் எமக்கு பெரும் சவாலாக விளங்கும். இந்த இரண்டு நாடுகளும் எமக்கு காலம்காலமாக பலத்த சவாலாக இருந்துவந்துள்ளன. 

coach_thilaka_jinadasa.JPG

எனவே இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான போட்டிகள் குறித்தே நாம் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளோம். இந்த இரண்டு போட்டிகளிலும் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்’’ என இலங்கை வலைப்பந்தாட்ட அணி பயிற்றுநர் திலகா ஜினதாச இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.

 

‘‘எமது பயிற்சிகள் வெற்றி அளித்துவருகின்றன. வீராங்கனைகளினது ஒழுக்கமும் உயர்வாக இருப்பதுடன் அவர்கள் அர்ப்பணிப்புடனும் பெரு முயற்சியுடனும் விளையாடி வருகின்றனர். மலாவி வலைபந்தாட்ட சுற்றுப்பயணத்தின்போது வீராங்கனைகளின் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எமது அணியில் முதல் எழுவரும் சரி, மாற்று வீராங்கனைகளாக இடம்பெறும் விராங்கனைகளும் சரி திறமையாக விளையாடக் கூடியவர்கள். இப் போட்டி உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிகாண் சுற்றாகவும் அமைவதால் கடும் போட்டி நிலவும் என்பதை நான் அறிவேன். ஆனால் எமது அணியை ஆசிய சம்பியனாக்குவதே எனது குறிக்கோள்’’ என திலகா ஜினதாச மேலும் கூறினார்.

 

அணித் தலைவி தெரிவிக்கையில்,

 

‘‘கடந்த காலங்களைவிட இம்முறை எமது அணி சிறந்த நிலையில் இருக்கின்றது. பயிற்றுநர் திலகா ஜினதாசவிடம் ஏழு மாதங்களாக தொடர்ந்து பெற்ற பயிற்சிகள், மலாவியில் பங்குபற்றிய பயிற்சிப் போட்டிகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் என்பன எமக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளன. எமது அணியில் அனுபசாலிகளுடன் துடிப்புமிக்க இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர். எனவே ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்க கடுமையாக முயற்சிப்போம்’’ என சத்துராங்கனி தெரிவித்தார்.

 

 

பங்குபற்றும் அணிகளின் குழுக்கள்

 

ஏ குழு: மலேசியா, ஜப்பான், மாலைதீவுகள்.

 

பி குழு: இலங்கை, சைனீஸ் தாய்ப்பே, இந்தியா.

 

சி குழு: சிங்கப்பூர், புருணை, பாகிஸ்தான்.

 

டி குழு: ஹொங்கொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்.

 

DSC_1601__1_.JPG

இலங்கையின் போட்டிகள்

(முதல் சுற்று)

எதிர் சைனிஸ் தாய்ப்பே (செப்.1)

எதிர் இந்தியா (செப். 2)

 

இலங்கை அணி

 

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

http://www.virakesari.lk/article/39516

Link to comment
Share on other sites

இலங்கைக்கு ஆரம்பப் போட்டியில் அமோக வெற்றி

 

 
 

ஆசிய வலைபந்தாட்ட போட்டியில் இலங்கை அணி தனது முதாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.01.jpg

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓசிபிசி எரினா உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 11ஆவது எம் 1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் பி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன்  இலங்கை தனது முதலாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.

02.jpg

சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் கோல்மழை பொழிந்த இலங்கை 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமோக வெற்றிபெற்றது.

இன்றைய  தினம் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை மாத்திரமே 100 கோல்களைக் கடந்தது. முதல் இரண்டு போட்டிகளில் 100 கோல்களை இலங்கை கடக்கும் என பயிற்றுநர் திலகா ஜினதாச கூறியதற்கு அமைய முதலாவது போட்டியில் இலங்கை 100 கோல்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

03.jpg

போட்டியின் முதல் கால் மணி நேர ஆட்ட முடிவில் இலங்கை 37 க்கு 2 எனவும் இரண்டாவது கால் மணி நேர ஆட்ட முடிவில் 37 க்கு 0 எனவும் முன்னிலையில் இருந்தது. இதன் பிரகாரம் இடைவேளையின்போது 64 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை 32 க்கு 1 என முன்னிலை வகித்ததுடன் 100 கோல்களையும் கடந்திருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியிலும் சைனீஸ் தாய்ப்பேயை துவம்சம் செய்த இலங்கை 31 க்கு 2 என முன்னிலை வகித்து ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமொக வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இவ் வருடப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சம்பியானாவதற்கான வாய்ப்பு இருப்பதை எடுத்துக்காட்டியது.

04.jpg

11ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளின் ஆரம்பப் போட்டியில் (சி குழு) புருணையை எதிர்த்தாடிய சிங்கப்பூர் 68 க்கு 19 என்ற கோல்கள் (19 க்கு 4, 20 க்கு 4, 15 க்கு 6, 14 க்கு 5) அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஏ குழுவுக்கான போட்டியில் ஜப்பானை 88 க்கு 13 என்ற கோல்கள் (22 க்கு 5, 26 க்கு 1, 23 க்கு 3, 17 க்கு 4) அடிப்படையில் மலேசியாவும் டி குழுவுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸை 71 க்கு 36 என்ற கோல்கள் (20 க்கு 10, 20 க்கு 9, 18 க்கு 6, 13 க்கு 11) கணக்கில் தாய்லாந்தும் வெற்றபெற்றன.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இந்தியாவை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. (என்.வீ.ஏ.)

http://www.virakesari.lk/article/39555

Link to comment
Share on other sites

இலங்கைக்கு இரண்டாவது இலகுவான வெற்றி

 

 
 

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓ.சி.பி.சி. எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 ஆவது ஆசிய கிண்ணப் போட்டிகளில் பி குழுவில் இடம்பெற்ற முன்னாள் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் 100 கோல்களைக் கடந்து அபார வெற்றிபெற்றது.

netball.jpg

தனது முதலாவது ஆட்டத்தில் சைனிஸ் தாய்ப்பே அணியை 137 க்கு 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் அமோக வெற்றிகொண்ட இலங்கை இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை 101 க்கு 29 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது.

இப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 25 க்கு 8 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில்  33 க்கு 4 என்ற கோல்கள் கணக்கிலும் முன்னிலை வகித்த இலங்கை இடைவேளையின் போது 58 க்கு 12 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 20 க்கு 7 என முன்னிலை வகித்த இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியில் இந்திய அணியிடம் சிறு சவால எதிர்கொண்டது. எனினும் அப் பகுதியில் 22 க்கு 10 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இலங்கை இறுதியில் 101 க்கு 29 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது.

netball2.jpg

இந்த வெற்றியுடன் பி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கை ஆசிய கிண்ணத்துக்கான இரண்டாவது சுற்றில் பிரதான அணிகளை சந்திக்கவுள்ளது.

நாளை ஓய்வு தினமாகும். இரண்டாவது சுற்றுப் போட்டிகள் செவ்வாயன்று ஆரம்பமாகும்.

http://www.virakesari.lk/article/39596

Link to comment
Share on other sites

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

Tharjini-696x464.jpg
 

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை வலைப்பந்து அணி, 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப் பிரிவு (Cup Category) முதல் போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 74-41 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து வெற்றிகரமாக முன்னேறுகின்றது.

 

 

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் சைனீஸ் தாய்ப்பே அணியினை 137-5 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்த இலங்கை வலைப்பந்து அணி, அதன் பின்னர் இந்தியாவை 101-29 என்கிற புள்ளிகள் அடிப்படையில் துவம்சம் செய்து மிகவும் வெற்றிகரமான ஒரு ஆரம்பத்தை காட்டியிருந்தது.

இப்படியான ஒரு ஆரம்பத்தை காட்டிய இலங்கையின் வலைப்பந்து அணிக்கு ஆசியாவின் ஜாம்பவான் சிங்கப்பூர் வலைப்பந்து அணியுடனான ஆட்டம் அணியுடனான ஆட்டம் மிகவும் சவலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விடயங்கள் எதிர்பார்த்தது போன்று சிங்கப்பூருக்கு சாதகமாக அமையவில்லை.

சிங்கப்பூரின் OCBC அரங்கில் ஆரம்பான போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணி முதல் நிமிடங்களில் 7-4 என்கிற முன்னிலையில் காணப்பட்ட போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்காக புள்ளி வேட்டையில் ஈடுபட்ட தர்ஜினியின் திறமையான ஆட்டத்தினால் முதல் கால் பகுதி இலங்கைக்கு 18-12 என்கிற புள்ளிகள் கணக்கில் சொந்தமாகியது.

இரண்டாம் கால் பகுதியிலும் முதல் கால் பகுதியினை கைப்பற்றிய உற்சாகத்தில் இலங்கை வலைப்பந்து அணி 28-18 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தமது முன்னிலையினை நீடித்தது. இந்த கால் பகுதியில் ஹாசித மென்டிஸ் பரிமாறிய பந்துகளின் மூலம் தர்ஜினி சிவலிங்கம் புள்ளிகள் மழை பொழிந்தார்.

 

எனினும், தமது கோல் காப்பாளராக செயற்பட்ட சென் லிலியினை சிந்து நாயர் மூலம் பிரதியீடு செய்த சிங்கப்பூர் வலைப்பந்து அணி பதில் தாக்குதல் நடாத்தியது. இதனால் இலங்கை இராண்டாம் கால் பாகுதியில் பெற்ற புள்ளிகளுக்கு (19) கிட்டவாக சிங்கப்பூர் வலைப்பந்து அணியின் புள்ளிகள் (16) இருந்த போதிலும் போட்டியின் முதல் பாதி 37-28 என்கிற புள்ளிகள் அடிப்படையில் முடிந்தது.

முதல் பாதி – இலங்கை 37 – 28 சிங்கப்பூர்

சிங்கப்பூர் வலைப்பந்து அணிக்கு மூன்றாம் கால் பகுதி அவர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. சிங்கப்பூர் வலைப்பந்து அணி தமது வீராங்கனைகளில் சில மாற்றங்களையும் செய்து முயற்சித்தது எனினும், அவை எதுவும் கைகூடமால் போன நிலையில் மூன்றாம் கால் பகுதியும் இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்துடன் 58-42 என்கிற புள்ளிகள் கணக்கில் முடிந்தது.

போட்டியின் நான்காவதும் இறுதியுமான கால் பகுதியினை சிங்கப்பூர் 19-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி ஆதிக்கத்தை காட்டிய போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்கு முன்னர் இடம்பெற்ற கால் பகுதிகளில் கிடைத்த புள்ளிகள் ஆட்டத்தில் வெற்றி பெற போதுமாக அமைந்தது.

முழு நேரம் – இலங்கை 74 – 61 சிங்கப்பூர்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஆசிய சம்பியனை வீழ்த்தியது இலங்கை வலைப்பந்தாட்ட அணி

 

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி நடப்புச் சம்பியனான மலேஷியாவை வீழ்த்தி தனது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.41020287_542670456170632_275411944036578

 

 

ஆசிய நாடுகளில் 12 அணிகள் பங்கேற்றுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம்  இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இத் தொடரில் கலந்துகொண்டு விளையாடிவரும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் சைனிஸ் தாய்பே அணியை 137–5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது. 

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவை 101–29 என வீழ்த்தியது. இந்த 3 வெற்றிகளுடன் இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியை 74-–61 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி நேற்று ஆசிய சம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சம்பியனான மலேஷியாவை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கின. ஒவ்வொரு அணியும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள புள்ளிகள் பட்டியல் சரிசமமாகவே நகர்ந்தது.

இறுதியில் முந்திக்கொண்ட இலங்கை அணி 62-–59 என்ற புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சம்பியனை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்து கொண்டது. 

இரண்டாவது சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று ஹொங்கொங் அணியை சந்திக்கின்றது இலங்கை.

http://www.virakesari.lk/article/39854

Link to comment
Share on other sites

ஹொங்கொங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் இலங்கை

 

 

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹொங்கொங் அணியை 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

singapore.jpg

சிங்­கப்­பூரில் நடை­பெற்­று­வரும் 11 ஆவது ஆசிய வலைப்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் தொடரில் மொத்தம் 12 நாடுகள் பங்­கேற்று விளை­யா­டி ­வ­ரு­கின்­றன.

இத் தொடரில் மோதிய 5 போட்­டி­க­ளிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி கோப்பைப் பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அந்­த­ வ­கையில் இன்று நடை­பெற்ற இரண்­டா­வது சுற்றுப் போட்­டியில் ஹொங்­கொங் அணி, தர்ஜினியின் ஆட்டத்துக்கும் உயரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாது 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கையிடம் வீழ்ந்தது.

நாளை தொடரின் ஓய்­வு நாள் என்பதுடன் நாளை மறுதினம் முதல் அரை­யி­றுதிப் போட்­டிகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளமையும் குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/39901

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத்திற்கு தகுதி பெறுவதே இலக்கு – தர்ஜினி

 

Tharjini-1-696x464-720x450.jpg

வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு என நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் சாம்பியனாகி, வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு.

அதற்கு ஏற்றவாறு எமது அணியினர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்“ என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

லீக் சுற்றில் சைனிஸ் தாய்பே, இந்தியா ஆகிய அணிகளை வென்ற இலங்கை அணி இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேஷியா, ஹொங்கொங் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு கிண்ணத்திற்கான அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேவேளை, இந்தப் போட்டித் தொடரில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக தர்ஜினி சிவலிங்கம் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உலகக்கிண்ணத்திற்கு-தகுத/

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது

srilanka-netball-2.jpg?resize=696%2C464
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி இவ்வாண்டிற்கான சம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட இலங்கை அணி 69 – 50 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலும் தோல்வியடைந்திருக்கவில்லை என்பதுடன் 9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்ற சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

srilanka-netball.jpg?resize=650%2C433

http://globaltamilnews.net/2018/94902/

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் 5 ஆவது முறையாகவும் வெற்றி வாகை சூடியது இலங்கை

 

 
 

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.

net1.jpg

இது­வ­ரையில்  நடை­பெற்­ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித் தொடர்­களில் இலங்கை 5 ­முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது.

1985 ஆம் ஆண்டு முதன்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட ஆசிய சம்­பி­யன்ஷிப் தொடரை மலே­ஷியா வென்­றது.

அதன்­பி­றகு நடை­பெற்ற இரண்­டா­வது தொடரை இலங்கை அணி வென்­றது. அதன்­பி­றகு 1997 ஆம் ஆண்டு, 2001 ஆம் ஆண்டு, 2009 ஆம் ஆண்டு என 4 முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது. 

net2.jpg

கடந்த முதலாம் திகதி முதல் நடை­பெற்று வரும் இப்­போட்­டியில் நடப்பு சம்­பி­ய­னான மலே­ஷியா, உப சம்­பி­யனான இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், மாலைத்­தீவு, சீனா, ஜப்பான், ஹொங்கொங், சைனீஸ் தாய்ப்பே, பிலிப்பைன்ஸ், தாய்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் போட்டி ஏற்­பாடு நாடான சிங்­கப்பூர் ஆகிய 12 நாடுகள் பங்­கேற்­றன.

தலா­மூன்று அணிகள் ஏ,பீ,சி,டி என நான்கு குழுக்­க­ளாக நடை­பெற்ற லீக் சுற்றில் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பெறும் 4 அணிகள் சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­துக்­கான பிரி­விக்கு முன்னேறியது.

இதன்­படி குழு ஏயில் மலே­ஷி­யாவும், குழு பீயில்  இலங்­கையும், குழு சியில் சிங்­கப்­பூரும், குழு டியில் ஹொங்­கொங்கும் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பிடித்து சம்­பி­யன்­ஷிப்­புக்­கான பிரிவில் இடம்­பெற்­றன.  

தனது முதல் சுற்றில் விளை­யா­டிய இலங்கை இந்­தி­யாவை 101 – 29 என்ற கோல்கள் கணக்­கிலும், சைனீஸ் தாய்ப்­பேயை 137 – 5 என்ற கோல்கள் கணக்­கிலும் அபார வெற்­றியை ஈட்­டி­யது.

இதே­வேளை, தத்­த­மது குழுக்­களில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் 5 முதல் 8 வரை­யான இடங்­க­ளுக்­கான போட்டிப் பிரி­விலும், மூன்றாம் இடம் பெறும் அணிகள் 9 முதல் 12 வரை­யான இடங்­க­ளுக்­கான பிரி­விலும் போட்­டி­யிட்­டன.

சம்­பி­யன்­ஷிப்பின் பிர­தான போட்­டியில் பங்­கேற்ற இலங்கை அணி ஹொங்கொங்கை 71 – 48 என்ற கோல்கள் கணக்­கிலும், சிங்­கப்­பூரை 74 – 61 என்ற கோல்கள் கணக்­கிலும், நடப்புச் சம்­பி­யனான மலே­ஷி­யாவை 62 – 59 என்ற கோல்கள் கணக்­கிலும் வெற்றி பெற்று இரண்­டா­வது சுற்­றிலும் முத­லி­டத்தைப் பெற்று அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது. 

நேற்­றைய தினம் ஹொங்கொங் அணி­யு­ட­னான அரை­யி­றுதிப் போட்­டியில் பெரும் சவாலை அளித்த ஹொங்கொங் அணியை 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தோல்­வி­ய­டை­யாத அணி­யாக இலங்கை இறுதிப் போட்­டிக்கு நுழைந்­தது. 

இதன் முதல் கால்­ம­ணியில் 14 – 13 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பின்­னிலை­யி­லிருந்­த­போதும், அடுத்த மூன்று கால் மணி­க­ளிலும் முறையே 15 – 10, 12 – 10, 15 – 12 என கோல்­களை போட்டு மொத்­த­மாக 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டின.

இரண்டாவது அரையிறுதியில் மலேஷியாவுடனான போட்டியில் -51 – 43 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சிங்கப்பூர்  இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

அதன்படி இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி சிங்­கப்­பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை நேரப்­படி  இன்று பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்பமானது.

இதில் இலங்கை அணி 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40037

Link to comment
Share on other sites

வலைப்பந்தாட்ட அணிக்கு கட்டுநாயக்காவில் வரவேற்பு!!

 
 
41456179_2639220579438855_13795214150483

 

 

வெற்றிவானை சூடிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை நாடு திரும்பினர்.

அவர்களுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை வரவேற்றார்.

இவர்கள் ஆசிய வலைப்பந்தாட்ட கிண்ணத்தினை தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாகவும் வென்று இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

41539646_2639220666105513_2082889590431041515120_2639220979438815_4190590863333641489452_2639220679438845_4440299944095541472374_2639221222772124_1322601239971641566215_2639220749438838_39354604257426

https://newuthayan.com/story/19/வலைப்பந்தாட்ட-அணிக்கு-கட்டுநாயக்காவில்-வரவேற்பு.html

 

 

Link to comment
Share on other sites

 

Welcoming Tharjini Sivalingam at Seylan Bank Head Office... winners of the Asian Netball Championship 2018

எழிலின் முதல் அனுபவமும் அடுத்த இலக்கும்

 

நடைபெற்று முடிந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற இலங்கை அணி வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய பின்னர் தனது அனுவத்தைப் பகிர்ந்த தருணம்.

 

 

எனது பங்கை முழுமையாக செய்து கொடுத்தேன் – தர்ஜினி

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பியதும், இத்தொடரில் தான் பெற்ற அனுபவம் மற்றும் தான் அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவம் என்பவை குறித்து தெரிவித்த கருத்து.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.