Jump to content

சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம்


Recommended Posts

சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம்

 

Star Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய்

சென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம்

 

 

கதை

 

சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்பன் (கே.பாக்யராஜ்). இதற்கிடையே சில முக்கிய புள்ளிகளை சம்ஹாரம் செய்கிறார் ஒரு நபர். இதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்யும் நபர் யார், ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அந்த மர்ம நபரை பாக்யராஜ் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.

Aaruthra movie review

 

கவிஞர், பாடலாசிரியர், நடிகன் என தனது அடையாளங்களை வளர்த்து வரும் பா.விஜய்யின் இயக்குனர் அவதாரம் தான் ஆருத்ரா. இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. முதல் படத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரானதாக எடுத்துள்ள பா.விஜய்க்கு பாராட்டுக்கள்.

 

பாடலாசிரியராக உச்சந்தொட்ட பா.விஜய்க்கு, நடிகனாக, இயக்குனராக மேலே உயர இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கின்றன. படத்தின் கதைக்கரு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் உறுத்தலாக இருக்கிறது.

 

அந்நியன் கருடபுராணம் ரேஞ்சுக்கு, ஆகாயவதம், ஜலசமாதி, அக்னிசாபம், காற்று சம்ஹாரம், நில சதுக்கம் என ஒவ்வொரு சம்ஹாரத்துக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் படு கமர்சியலாக எடுக்கப்பட்டு இருப்பதால், உணர்வுகளை கடத்த தவறிவிடுகின்றன.

 

முதல் பாதி முழுவதுமே படம் ஏனோ தானோவென பயணிக்கிறது. சுமி மாமி, மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ் காமெடி எல்லாம் 'கடுப்பேத்துறாங்க மை லார்டு' சொல்ல வைக்குது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அதே நேரத்தில், பாலியல் தொடர்பான காட்சிகளை இவ்வளவு டீடெய்லாக காட்டியிருக்க வேண்டாம் பா.விஜய். இது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

 

நீண்ட நாட்கள் கழித்து விக்னேஷை திரையில் பார்க்கிறோம். எதிர்மறையான கேரக்டராக இருந்தாலும், நேர்த்தியாக செய்திருக்கிறார். வெல்கம்பேக் விக்னேஷ். மெகாலி, யுவா, ஞானசம்பந்தம், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சன்ஜனா சிங், தக்சிதா உள்பட மற்ற நடிகர்களும் அவரவர் ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒரு படத்துக்கு திரைக்கதை மிக முக்கியம். அதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், திரில்லிங், சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஸ்தபதி தொடர்பான காட்சிகள் நல்ல டீலெய்லாக இருக்கிறது.

 

வித்யாசாகரின் இசையில் 'புலி ஒன்னு வேட்டைக்கு போகுது' பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. 'செல்லம்மா செல்லம்' பாட்டு மனதுக்கு இதமளிக்கிறது. பின்னணி இசை தான் பொருந்தாமல் துறுத்துகிறது. சஞ்சய்லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் தன்னால் முயன்ற வரை படத்தை தரம் உயர்த்த போராடியிருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தட்டிக்கேட்ட விதத்தில் ஓங்கி ஒலிக்கிறது 'ஆருத்ரா'வின் குரல்.

Read more at: https://tamil.filmibeat.com/reviews/aaruthra-movie-review-055458.html

Link to comment
Share on other sites

`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்

 

பா.விஜய் இயக்கி நடித்திருக்கும் 'ஆருத்ரா' படம் பற்றிய விமர்சனம்.

`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்
 

மிழ் சினிமாவில் இது த்ரில்லர் சீசன் போல! 'எப்பய்யா சஸ்பென்ஸை உடைப்பீங்க?' என நகம் கடிக்க வைக்கும் த்ரில்லர்கள் ஒரு ரகம். 'எப்பய்யா எண்ட் கார்ட் போடுவீங்க?' எனச் சலிக்கவைக்கும் த்ரில்லர்கள் இன்னொரு ரகம். பா.விஜய் எழுதி இயக்கி நடித்திருக்கும் ஆருத்ரா இந்த இரண்டாவது ரகம்.

பா.விஜய்

தமிழக அமைச்சரின் தம்பி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் நெஞ்சில் தூய தமிழில் ஒரு பட்டயம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலீஸார் விசாரிக்கும்போதே அடுத்தடுத்து கடத்தல்களும் கொலைகளும் நடக்கின்றன. நகரமே நடுங்கும் இந்த சீரியல் கில்லர் வழக்கில் தனியார் துப்பறிவாளரான பாக்யராஜின் உதவியை நாடுகிறது காவல்துறை. இந்த பரபரப்புகள் எதுவுமே பாதிக்காத வகையில் குடும்பத்தோடு பாக்யராஜின் மேல்வீட்டில் வசித்து வருகிறார் பா.விஜய். இருவரின் பாதைகளும் எங்கே குறுக்கிடுகின்றன? கொலைகளைச் செய்வது யார் என்பதுதான் ஆருத்ரா.

 

 

பா.விஜய் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம் இது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பில் தேறியிருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் தடுமாறவே செய்கிறார். தக்சிதா, மெகாலி என இரண்டு ஹீரோயின்கள். நடிப்பதற்குக் கதையில் எதுவுமில்லை. ஆங்காங்கே வந்து பொருத்தமில்லாத உதட்டசைவில் பேசிச் செல்கிறார்கள். விக்னேஷ், ஜோ மல்லூரி, ஞான சம்பந்தம், பாக்யராஜ்.. ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் அஜய்ரத்னம் கூட மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே வழங்குகிறார்கள். படத்தில் கொஞ்சம் இயல்பாய் இருப்பது எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருவர்தான்.

 

 

தமிழ் சினிமாவின் காமெடி காட்சிகளில் (இல்லை அப்படி இயக்குநர்கள் நினைக்கும் காட்சிகளில்) இனி மொட்டை ராஜேந்திரன் வரக்கூடாது என வேண்டிக்கொண்டுதான் தியேட்டர் செல்லவேண்டும் போல. ஒரே மேனரிசம், ஒரே மாதிரியான டயலாக்குகள் என ரொம்பவே போரடிக்கிறார். குழந்தை நட்சத்திரம் யுவாவின் ஒருசில காட்சிகள் ஆறுதல்.

பாக்யராஜ்

வித்யாசாகர் என்ற பெயரை டைட்டில்கார்டில் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஏனோ இந்தப் படத்தில் வித்யாசாகருக்கே பெரிய உற்சாகமில்லை போல! பாட்டும் பின்னணி இசையும் சுத்தமாக ஒட்டவில்லை. இங்கே அங்கே என அலைபாயும் திரைக்கதையை இருப்பதை வைத்து ஒட்டியிருக்கிறார் எடிட்டர் ஷான் லோகேஷ். 90களின் கலர் பேக்ட்ராப்பை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய்லோக்நாத்.

சிவபக்தனான சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்குக் காணிக்கையாக்குகிறான் என்ற ஒன்லைன் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படமாக்கியவிதத்தில் அநியாய நாடகத்தன்மை. அதுவும் 90 சதவீத காட்சிகளில் க்ரீன் மேட் பயன்படுத்தியிருப்பதால் ஒருகாட்சி கூட இயல்பாகவே இல்லை. இதுபோக எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி லிஸ்ட் போடுமளவிற்கு லாஜிக் ஓட்டைகள் வேறு.

சமூகப் பிரச்னைகளைப் பற்றி தன் படங்களில் பேச நினைக்கும் பா.விஜய் இதில் சிறார் பாலியல் வன்கொடுமை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், அதைப் படமாக்கிய விதம் முகம் சுளிக்கவைக்கிறது. அவ்வளவு டீட்டெயிலாக காண்பித்தே ஆகவேண்டுமா என்ன? போக, பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமை பற்றி மெசேஜ் சொல்லும் அதே வேளையில் இன்னொருபக்கம் போலீஸ் அதிகாரி, அப்பார்ட்மென்ட் மாமி, அவரின் தங்கை என எல்லாரையும் உடல்சார்ந்து அணுகும் காட்சிகள் எக்கச்....சக்கம். ஏன் சாரே இப்படி? அதிலும் 'பின்னழகுப் பித்தர்' எனப் பெருமையாக அடைமொழி வேறு கொடுத்துக்கொள்கிறார்கள். கஷ்டம்!

 

 

ஆருத்ரா

தமிழ் சினிமாவில் தன் பிரதான அடையாளம் தவிர்த்து பல அவதாரங்களில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் பலர். ஆனால், கவிஞர் பா.விஜய்யிடம் மிகப் பரிதாபமாக தோற்றுப் போகிறார் இயக்குநர் பா.விஜய்! 

மெசேஜ் சொல்ல நினைத்து கதையை கோட்டைவிட்டு இஷ்டத்துக்கு பயணித்து தடுமாறி நிற்கும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது.    

https://cinema.vikatan.com/movie-review/135681-aaruthra-tamil-movie-review.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.