Jump to content

சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை


Recommended Posts

சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை

 
 
mahinda1.jpg

 

 

முன்னைய மகிந்த அர­சின் தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­கள் நாட்டை அந்­நி­ய­ருக்­குத் தாரை வார்த்­துக் கொடுக்­கின்ற நிலையை உரு­வாக்­கி­விட்­டது. இதன் கார­ண­மா­கவே, சீனா இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­கா­கவே இலங்­கை­யில் முத­லீ­டு­களை மேற்­கொள்­கி­றது என்று அமெ­ரிக்­கா­வின் இரா­ணு­வத் தலை­மை­ய­க­மான பென்­ட­கன் கூறு­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது.

சிறிய நாடு­க­ளுக்கு உத­வி­களை வழங்கி அவற்றை வளைத்­துப் போடு­கின்ற செயற்­பா­டு­க­ளைச் சீனா முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பெரும்­பா­லான ஆசிய நாடு­க­ளில் சீனா இதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கின்­றது. படை பல­மும், பொரு­ளா­தார பல­மும் அதி­க­ள­வில் காணப்­ப­டு­வ­தால், தான் நினைத்­ததை நிறை­வேற்­றிக் கொள்­வது சீனா­வுக்கு இல­கு­வா­கப் போய்­விட்­டது.

மகிந்­த­வைப் பயன்­ப­டுத்தி  கால் பதித்­தது சீனா

மகிந்த ராஜ­பக்ச சீனா­வுக்­குச் சார்­பான கொள்­கை­க­ளைக் கொண்ட ஒரு­வர். இத­னால் அவ­ரது ஆட்­சிக் காலத்தை சீனா நன்கு பயன்­ப­டுத்­திக் கொண்­டது. இலங்­கை­யின் அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் சீனா­வுக்கு முன்னுரிமை வழங்­கப்­பட்­டது. மகிந்­த­வின் சொந்த மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட முக்­கிய அபி­வி­ருத்திப் பணி­கள், சீனா­வி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இதில் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தின் நிர்­மா­ணப் பணி­கள் முதன்­மை­யா­னது. துறை­முக நிர்­மா­ணப் பணி­க­ளுக்­கான நிதி முழு­வ­தை­யும் கட­ன் அடிப்­ப­டை­யில் சீனாவே வழங்­கி­யது. மிகப்­பெ­ரிய தொகை­யைச் செல­விட்டு துறை­மு­கத்­தின் நிர்­மா­ணப் பணி­களை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இலங்­கைக்கு ஏன் ஏற்­பட்­டது என்­பது புரி­ய­வில்லை. அத்­து­டன் கட­னா­கப் பெற்ற மிகப்­பெ­ரிய தொகை­யைத் திருப்­பிச் செலுத்­து­கின்ற சக்­தி­யும் இலங்­கைக்கு இல்­லை­யென்­பது பல­ரது கருத்­தா­கும். ஆனால் மகிந்த இதை­யெல்­லாம் கவ­னத்­தில் கொள்­ள­வில்லை.

இதைப் போன்­று­தான் மத்­தள வானூர்தி நிலை­ய­மும் பெரிய பொருட் செல­வில் அமைக்­கப்­பட்­டது. ஆனால் துறை­மு­க­மும், வானூர்தி நிலை­ய­மும் நாட்­டுக்­குப் பெரும் சமை­க­ளா­கவே மாறி­விட்­டன. இவற்றை நிர்வகிப்பதற்கான செலவினம், வரு­மா­னத்­தை­விட பல மடங்கு அதி­க­மா­கவே காணப்­பட்­ட­தால் இவற்றின் செயற்பாடுகளைக் கைவி­ட­வேண்­டி­ய­தா­யிற்று. இந்­தச் சந்­தர்ப்­பத்தை சீனா நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்­டது.

சீனா­வி­ட­மி­ருந்து பெற்ற கடன் அந்த நாட்­டி­டம் இலங்­கையை மண்­டி­யிட வைத்­து­விட்­டது. இதன் கார­ண­மாக இந்­தி­யா­வின் கடும் எதிர்ப்­பை­யும் மீறி அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கம் நீண்­ட­கால குத்­தகை அடிப்­ப­டை­யில் சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மத்­தள வானூர்தி நிலை­யத்­தி­லும் சீனா­வுக்கு ஒரு கண் உள்­ள­போ­தி­லும், இந்­தியா அதைத் தனது வச­மாக்­கு­வ­தில் முனைப்­புக் காட்­டு­கின்­றது.

ஆனால் இந்­தி­யா­வின் போர் வானூர்­தி­கள் இந்த வானூர்தி நிலை­யத்­தைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டா­தென சீனா கூறி­வ­ரு­கின்­றது. இதை இந்­தியா ஏற்­குமா என்­ப­து­தான் இன்­றுள்ள பிரச்­சினை. கொழும்பு துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­ட­மும் சீனா­வி­டம் சென்­றுள்­ள­தால், இலங்­கை­யில் அதன்­பிடி இறு­கி­யுள்­ளது.

தெற்­கா­சிய வட்­ட­கை­யில் இந்­தியா – சீனா மோதல்

தெற்­கா­சி­யா­வி­லுள்ள அநேக நாடு­க­ளில் சீனா கால் பதித்­துள்­ளது. இது இந்­தி­யாவை நெருக்­க­டிக்­குள் தள்­ளி­யுள்­ளது. தான் தெற்­கா­சி­யா­வின் வல்­ல­ர­சென இந்­தியா கூறிக்­கொண்­டா­லும், சீனா­வைச் சமா­ளிக்­கக் கூடிய அள­வுக்கு அந்த நாடு பலம் வாய்ந்ததாக உள்­ளதா என்­பது கேள்­விக் குறி­யா­கவே நீண்டு செல்­கின்­றது.

உல­கின் முதல்­நிலை நாடான அமெ­ரிக்கா, சீனா­வுக்கு மட்­டுமே அஞ்­சு­வ­தா­கத் தெரி­கின்­றது. பொரு­ளா­தார பலத்­தில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த நிலை­யில் உள்ள சீனா, இன்­ன­மும் சில ஆண்­டு­க­ளில் பொருளாதார முன்னேற்றத்தில் அமெ­ரிக்­காவை விஞ்சி வி­டு­மென்ற கணிப்­பு­க­ளும் உள்­ளன. முன்னைய காலத்­தில் ரஷ்ய நாடு அமெ­ரிக்­கா­வுக்­குச் சவா­லா­கக் காணப்­பட்­டது.

அப்­போது பல நாடு­களை இணைத்து சோவி­யத் ரஷ்யா என்ற மிகப்­பெ­ரிய நாடு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இன்­றைய நிலை­யில் ரஷ்யா மட்­டுமே தனித்து நிற்­கின்­றது. ஏனைய நாடு­கள் பிரிந்து தனித்தனி நாடு­க­ளா­கி­விட்­டன. மக்­கள் தொகை­யில் உல­கின் முதன்நிலை நாடாக விளங்­கும் சீனா, தனது மக்­கள் சக்­தியை நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றது.

இத­னால் உற்­பத்­தி­கள் பெருக, ஏற்­று­மதி வரு­மா­ன­மும் அதன் எல்­லை­யைத் தொட்டு நிற்­கின்­றது. சீனா­வின் உற்­பத்­திப் பொருள்­கள் அமெ­ரிக்கா உட்­பட உல­கின் பல நாடு­க­ளை­யும் சென்­ற­டை­கின்­றன. இவற்­றின் விலை­கள் குறை­வாக இருப்­ப­தால் மக்­கள் அவற்றை விரும்பி வாங்­கு­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

இமா­ல­ய­மா­னது சீனத்­துப் பலம்

உல­கி­லேயே படை வீரர்களை அதி­க­மா­கக் கொண்ட நாடும் சீனா­தான். இத­னால் பெரிய நாடு­கள்கூட சீனா­வின் படை­ப­லத்­தைக் கண்டு அஞ்­சு­கின்­றன. இலங்­கை­யில் தனது இரா­ணுவ ஆதிக்­கத்தை பர­வ­லாக்­கிக் கொண்­டால், இந்­தி­யா­வுக்­குச் சவா­லாக விளங்க முடி­யு­மெனச் சீனா கரு­து­கின்­றது.

இலங்கை இந்­தி­யா­வுக்கு மிக அரு­கில் இருப்­ப­தோடு, கேத்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இடத்­தி­லும் அமைந்­துள்­ளது. நாற்­பு­ற­மும் கட­லால் சூழப்­பட்­டி­ருப்­ப­தால் இதற்கு அதிக முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில் இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­கா­கவே சீனா இலங்­கை­யில் காலூன்றி முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தா­கக் கூறப்­ப­டு­வ­தில் தவ­றேதும் காண இயலாது.

https://newuthayan.com/story/12/சீனாவின்-இராணுவ-நோக்கத்துக்கு-துணை-போகின்றது-இலங்கை.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.