• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது

Recommended Posts

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது

 

Dollar-300x200.jpgஅமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82 வீதம்) வீழ்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99 வீதம்) வீழ்ச்சியடைந்திருக்கிறது.

http://www.puthinappalakai.net/2018/08/31/news/32622

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் சரிந்தது ரூபாவின்  பெறுமதி!!!

 

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலை 164.37 ரூபாவாக மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

us_dollar_and_SL_rupees.jpg

http://www.virakesari.lk/article/40405

Share this post


Link to post
Share on other sites

சரிந்து கொண்டுதான் இருக்கிறது எழும்ப வாய்ப்பில்லை  சொறிலங்கா அரசியல்வாதிகள் அரசியலை பிழைப்பாய் கொண்டு இனவாதம் கக்கும் மட்டும் சரிவுதான் .

Share this post


Link to post
Share on other sites

வரலாற்றில் முதன்முறையாக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!

 

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165. 14 ரூபாவாக பதிவாகியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவா பதிவாகியிருந்தது.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/106253

Share this post


Link to post
Share on other sites

சரிந்துகொண்டே செல்கிறது ரூபாவின் பெறுமதி

 

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.central_bank_of_srilanka.jpg

 

 

இதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 166.64 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40630

Share this post


Link to post
Share on other sites

மிக விரைவில் மகிந்த திரும்பி வந்து 10,000 ரூபா நோட் அடிக்க கணக்குச் சரியா இருக்கும். பாவம் போர் வெற்றில் களித்தவர்களும்.. போரால் சிதைந்தவர்களுமே. 

Share this post


Link to post
Share on other sites

சரிந்துகொண்டே செல்லும் ரூபாவின் பெறுமதி

 

 

இலங்கை ரூபாவின் பெறுமதியானது நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது.central_bank_of_srilanka.jpgஇந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்சியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தியம் 167 ரூபா 41 சதமாக ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40714

Share this post


Link to post
Share on other sites
ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சி
 

image_cb04b4b66e.jpgரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை  ரூபாவின் பெறுமதி 170.65 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி இன்று (21) அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரூபா-தொடர்ந்தும்-வீழ்ச்சி/175-222317

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this