Sign in to follow this  
Athavan CH

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

Recommended Posts

Yogarathi.png?resize=270%2C220

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது.

அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் அலுவலகம் எங்கும் அந்தப் பையுடனேயே அழைந்து திரிகிறார்.

இரண்டு மகன்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறும் யோகரதி, இவனைத் தானே வளர்த்ததாகவும் கூறுகிறார். “இருக்கும் தன்னுடைய பேரப்பிள்ளைகளின் படிப்புக்கும், சாப்பாட்டுக்குமே எனது மகளும் மருமகனும் நாள் முழுவதும் உழைக்கிறார்கள். நான் இன்னும் எவ்வளவு காலம்தான் இருப்பேன். நான் செத்த பிறகு இவர்கள் மகனுக்காக அலைந்துதிரிய முடியுமா? இருப்பவர்களைக் கவனிக்கவேண்டாமா?” தனக்குப் பின்னால் பேரனைத் தேடுவதற்கு இயலாத குடும்ப சூழ்நிலை யோகரதியின் ஏக்கத்தில் தெரிகிறது.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசாங்கங்கள் நீதி வழங்க முன்வராத நிலையில் இதுவே ஒவ்வொரு காணாமலாக்கப்பட்ட குடும்பங்களும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். இன்றைய தினத்தை முன்னிட்டு யோகரதியின் கதையை 360 டிகிரியில் சுழலும் வகையிலான காணொளிகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறோம். விர்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம்.

http://maatram.org/?p=7089

Edited by Athavan CH

Share this post


Link to post
Share on other sites

360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”

இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது.

இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள். “பச்சை நிற ஜீப்பில் வந்த விடுதலைப் புலிகள் மூத்த மகனைப் பிடித்துச் சென்றதை அயலவர்கள் கண்டிருக்கிறார்கள். 20 வயதான இளைய மகனை என் கண் முன்னால்தான் கொண்டுசென்றார்கள். நான் எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை” என்கிறார் தர்மராணி.

தர்மராணியின் கணவர் அன்றாடம் கூலி வேலைகள் செய்துவருகிறார். மகள் ஆடைத்தொழிற்சாலையொன்றுக்குச் செல்கிறார். தன்னால் வேலைக்குச் செல்ல முடியாததை நினைத்து கவலையடைவதாகக் கூறும் தர்மராணி, அதைவிட தனது பிள்ளைகளைத் தேடி எங்கும் செல்ல முடியாமல் இருப்பதே கொடூரமான வேதனையாக இருப்பதாகவும் கூறுகிறார்.

தர்மராணியின் கதை 360 டிகிரி பாகையில் சுழலும் வகையிலான காணொளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம்.

 

http://maatram.org/?p=7107

 “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

 

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இப்படியான பதிவுகள் யாழ் காலக்கோட்டில் பதியப்பட வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this