Jump to content

மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Recommended Posts

மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளது. இதுபோன்றே இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எமது நாட்டிற்கும் எச்சரிக்கை விடுப்பதாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம் பெற்றதாகவும், இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகளும் புலம் பெயர் அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. இதனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட இலங்கை இராணுவத்திற்கும் எச்சரிக்கை விடுவதாகவே அமைகிறது.

அடுத்த மாதம் ஐ. நா சபையில் இடம் பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பாரிய எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க தயாராகவே உள்ளன. இருந்தபோதும் உள்ளக அறிக்கையினை மேற்கொள்வதாக குறிப்பிட்ட அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கதத்தின் எவ்வித அனுமதியும் இன்றி ஐ.நா வின் கருத்துக்களுக்கு சம்மதம் தெரிவித்தமையே பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக சில அரச சார்பற்ற அமைப்புக்களும், இயக்கங்களும் மாத்திரமே குரல் கொடுத்தன. ஆனால் இலங்கை அரசாங்கம் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்பட்டது.

ஐ. நா. அரசாங்கத்திற்கு வழங்கிய காலவகாசம் நிறைவுறும் தருணத்திலிருக்கின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகளிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணையினையே கோருகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாக செயற்பட்டால் மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது நாட்டு இராணுவத்தினருக்கு ஏற்படும்" என்று அட்மிரல் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/105309

Link to comment
Share on other sites

15 minutes ago, நவீனன் said:

மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

 இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம் பெற்றதாகவும், இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகளும் புலம் பெயர் அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. 

ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாக செயற்பட்டால் மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது நாட்டு இராணுவத்தினருக்கு ஏற்படும்" என்று அட்மிரல் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். 

நீங்கள்தான் எந்தக்குற்றங்களும் செய்யவில்லை என்பதில் உறுதியாக உள்ளீர்களே.! பின்பு எதற்காகப் பயப்படவேண்டும்.? 

மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகள் எந்தவிதமான குற்றங்களும் செய்யவில்லை என்று சொல்லவருகிறீர்களா.? 

அல்லது மலையாள தேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவர்கள் உதவிகள் உங்களுக்குக் கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சமா.?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி அரசு வராமல் மகிந்த வந்திருந்தால் இலங்கைப் பிரச்சனையும் இப்போ சர்வதேசத்தின் கைகளுக்கு போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லாட்சி அரசு வராமல் மகிந்த வந்திருந்தால் இலங்கைப் பிரச்சனையும் இப்போ சர்வதேசத்தின் கைகளுக்கு போயிருக்கும்.

மகிந்த திரும்பவும் வந்தாலும் அதே கதை தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லாட்சி அரசு வராமல் மகிந்த வந்திருந்தால் இலங்கைப் பிரச்சனையும் இப்போ சர்வதேசத்தின் கைகளுக்கு போயிருக்கும்.

எங்கட பக்கக் கோவில்களில்.....எப்பவுமே ஒரு நந்தி குந்திக்கொண்டிருக்கும்!

அந்த நந்தியிடம் அனுமதி கேட்ட பிறகு தான்....ஐ.நா. சபையுக்குள்ள போக முடியும்! ஐ மீன் கோவிலுக்குள்ள போக முடியும்!

ஆர் அந்த இந்தி...மன்னிக்கவும் நந்தி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மர் இராணுவத்தின் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு. ஏமனில் போர்க்குற்றச்சாட்டு. 

ஆனால் சிரியாவில் ஆளும் அரசுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட பயங்கரவாதம் நிகழ்த்திய கொடுமைகளுக்கு ஒரு தண்டனையும் இல்லை. உலக வரலாற்றில்.. 2ம் உலகப் போருக்குப் பின் அதிக அகதிகளையும் மக்கள் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திய அமெரிக்காவின் தூண்டி விடு பயங்கரவாதம்.. ஐநாவின் ஆசீர்வாதம் பெற்ற ஒன்றாகிவிட்டது.

ஆக அமெரிக்க ஆசீர்வாதம் பெற்ற குழுப் பயங்கரவாதமாக இருக்கட்டும்.. அரச பயங்கரவாதமாக இருக்கட்டும்.. அவற்றை எல்லாம் ஐநா பாதுகாக்கும். இப்படியான ஒரு ஐநா இந்தப் பூமிக்கு அவசியம் தானா..??! 

Link to comment
Share on other sites

இவை எல்லாம் வெறும் செய்தியாக மட்டும் கடந்து செல்ல தான்... இந்தியா வின் ஆதரவு இருக்கு மட்டும் இலங்கையின் 1முடியைக்கூட பிடுங்க முடியா.. இந்தியா ஆதரவை விலக்கி கொண்டால் அந்த இடத்தை சீனா நிரப்பும்..அவ்வளவு தான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2018 at 3:37 AM, அபராஜிதன் said:

இவை எல்லாம் வெறும் செய்தியாக மட்டும் கடந்து செல்ல தான்... இந்தியா வின் ஆதரவு இருக்கு மட்டும் இலங்கையின் 1முடியைக்கூட பிடுங்க முடியா.. இந்தியா ஆதரவை விலக்கி கொண்டால் அந்த இடத்தை சீனா நிரப்பும்..அவ்வளவு தான் ..

இனி இந்தியா கூட ஸ்ரீலங்காவின் 1 மயிரை புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம்.

Link to comment
Share on other sites

On ‎8‎/‎30‎/‎2018 at 3:37 AM, அபராஜிதன் said:

இவை எல்லாம் வெறும் செய்தியாக மட்டும் கடந்து செல்ல தான்... இந்தியா வின் ஆதரவு இருக்கு மட்டும் இலங்கையின் 1முடியைக்கூட பிடுங்க முடியா.. இந்தியா ஆதரவை விலக்கி கொண்டால் அந்த இடத்தை சீனா நிரப்பும்..அவ்வளவு தான் ..

தமிழர்களுடன் சீனர்கள் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததுதான் வரலாறு.

Link to comment
Share on other sites

9 hours ago, Eppothum Thamizhan said:

இனி இந்தியா கூட ஸ்ரீலங்காவின் 1 மயிரை புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம்.

நான் எழுதின கருத்தை விளங்கி அதற்கு பதிலளிக்க முயற்சி செய்ங்க 

8 hours ago, Paanch said:

தமிழர்களுடன் சீனர்கள் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததுதான் வரலாறு.

நான் படித்த வரலாற்றிலிருந்து மதம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமாக சிங்களவர் மற்றும் சீனர்களிடையே தான் அதிக தொடர்புகள் காணப்பட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2018 at 1:53 AM, அபராஜிதன் said:

நான் எழுதின கருத்தை விளங்கி அதற்கு பதிலளிக்க முயற்சி செய்ங்க 

உங்களுக்கு விளங்கும்  வகையில் எழுதுவதென்றால்  நல்லிணக்க அரசாங்கம் உள்ளவரை இந்தியாவால் ஸ்ரீலங்காவின் 1 மயிரை கூட புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். இந்தியா செய்த அத்தனை யுத்த மீறல்களின் எல்லா சாட்சியங்களும் இலங்கையிடம் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

On 8/29/2018 at 3:45 PM, nedukkalapoovan said:

மியன்மர் இராணுவத்தின் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு. ஏமனில் போர்க்குற்றச்சாட்டு. 

ஆனால் சிரியாவில் ஆளும் அரசுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட பயங்கரவாதம் நிகழ்த்திய கொடுமைகளுக்கு ஒரு தண்டனையும் இல்லை. உலக வரலாற்றில்.. 2ம் உலகப் போருக்குப் பின் அதிக அகதிகளையும் மக்கள் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திய அமெரிக்காவின் தூண்டி விடு பயங்கரவாதம்.. ஐநாவின் ஆசீர்வாதம் பெற்ற ஒன்றாகிவிட்டது.

ஆக அமெரிக்க ஆசீர்வாதம் பெற்ற குழுப் பயங்கரவாதமாக இருக்கட்டும்.. அரச பயங்கரவாதமாக இருக்கட்டும்.. அவற்றை எல்லாம் ஐநா பாதுகாக்கும். இப்படியான ஒரு ஐநா இந்தப் பூமிக்கு அவசியம் தானா..??! 

ஐ.நா.வின் அமைப்பும் வரலாறும்   நீங்கள் அறியாதது போலும்.

Link to comment
Share on other sites

11 hours ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு விளங்கும்  வகையில் எழுதுவதென்றால்  நல்லிணக்க அரசாங்கம் உள்ளவரை இந்தியாவால் ஸ்ரீலங்காவின் 1 மயிரை கூட புடுங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். இந்தியா செய்த அத்தனை யுத்த மீறல்களின் எல்லா சாட்சியங்களும் இலங்கையிடம் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

நான் சொல்ல வருவது இந்த நல்லிணக்க அரசாங்கம் அமைய காரணமே இந்தியாவும் தான் மைத்திரியை பிரித்து மகிந்தவை வீட்டிற்கு அனுப்பியதில் இந்தியாவின் RAW க்கு பங்கிருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அபராஜிதன் said:

நான் சொல்ல வருவது இந்த நல்லிணக்க அரசாங்கம் அமைய காரணமே இந்தியாவும் தான் மைத்திரியை பிரித்து மகிந்தவை வீட்டிற்கு அனுப்பியதில் இந்தியாவின் RAW க்கு பங்கிருக்கிறது 

நான் நினைத்தேன்  மேற்குலக நாடுகள்தான் நல்லிணக்க அரசாங்கத்தை ( மஹிந்தவை ஒதுக்கி ) கொண்டுவரவேண்டுமென முனைப்பில் இருந்தார்கள் என்று!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.