Jump to content

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும்


Recommended Posts

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் - 1

 

outline-of-human-body-vector.jpg

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம்

பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம்.

இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த சமசுகிருத வேத புரட்டுக்களால் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? அதனால் நமது தமிழினத்திற்கு ஏற்பட்ட அடிமைத்தனத்தின் விளைவு? வர்ணாசிரம தர்மத்தை பற்றி மேலும் எவரும் பேசினால் அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்விகாகவும் அல்லது அர்த்தமே தெரியாமல் கூறுபவர்களுக்கு பதில் கூறும் வன்னமாகவும் இருத்தல் வேண்டும்.

பகுத்தறிவு பகலவன் , வெந்தாடி வேந்தன் , சிறைக்கஞ்சா சிங்கம் தந்தைப் பெரியார், பிறாமண எதிர்ப்பு என்ற போராட்டத்தை துவக்கிய காரணம் இந்த புருச சூக்தத்தின் அடிப்படையில் தோன்றிய வர்ணாசிரம தர்மம் தான். இந்த மந்திரங்களை மேற்கோல் காட்டியே இராசாசி அவர்கள் ”காலங்காலமாக தமிழர்களை சூத்திரன் என்று அழைத்திருக்கிறார்கள் என்று பெரியாரிடம் கூறினார்” ஏனென்றால் இது வேதத்தில் இருக்கிறது என்று காட்டிட்ட சான்று தான் இந்த புருச சூக்தம்.

இதன் பிறகே ஐயா பெரியார் அவர்கள்

1- தமிழகத்து கோயில்களில் தமிழில் அல்லாமல் சமசுகிருதத்தில் மந்திரங்கள் ஏன்?

2- அனைவரும் கருவறைக்கு சென்று பூசை செய்ய வேண்டும்.

3- அனைவரும் பூசாறி ஆக வேண்டும், போன்ற போராட்டங்களை நடத்தினார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் தந்தைப் பெரியார் அவர்கள் நாத்திகர் அல்ல!மெய்யான இந்து மதமாகிய தமிழர்களின் இந்து மதம் தழைக்க பிறாமணர்களின் தோலை உரித்து காட்டினார்.

புருச சூக்தம் ஆய்வு
ரிக் வேதம் – அத்தியாயம் 10-090 – http://www.sanskritweb.net/rigveda/griffith.pdf

ஆயிரம் தலைகள் , ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்களை கொண்டவன் புருசா என்பவன். இவனின் நான்கில் ஒரு பங்கு தான் இந்த உலகமும் அதன் உயிரினமும் பயிரினமும் ஆகும் , மீதமுள்ள அளவு தான் பிரபஞ்சம் எனப்படுகிறது. இப்படிபட்ட புருசா என்பவனிடமிருந்து தான் பிரம்மா வந்தார். வந்த பிரம்மா மிக விரைவில் வளர்ந்து பின் பூமியை உருவாக்கினார். பிரம்மா, தேவர்களும் , முனிவர்களும் சூழ ஒரு வேள்வியை செய்தார் அந்த வேள்வியில் புருசா என்று மேலே குறிப்பிட்டவரை பலியிட்டனர்……

ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தின் விளக்கம் – பாகம் 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது

மனிதனை மனிதனாக பார்க்கமுடியாத அளவிற்கு சாதி சண்டைகள் வலு பெறுவதற்கான காரணம் இந்த புருஷ சூக்தத்தின் நாலு வரிகளே. இந்த நாலு வரிகளே வர்ணாசிரம தர்மத்திற்கு ஆதாரமாக உள்ளது

மேலும் படிக்க http://wp.me/p396IQ-6n

Link to comment
Share on other sites

938f84c478e24531d3e07661ce459ad9.jpg

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது

1- நெருப்பு – முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்)
2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின.
3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின.
4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின.
5- ரிக் வேதம் , சாம வேதம் , யசுர் வேதம் .
6- குதிரை , ஆடு போன்றவைகள் தோன்றின.
7- வெட்டப்பட்ட புருசா உடல் பாகத்திலிருந்து தோன்றியவைகள் :-

  • முகத்திலிருந்து பிறாமணர்கள் தோன்றினார்கள்.
  • கைகளிலிருந்து சத்ரியன் தோன்றினார்கள்.
  • தொடையிலிருந்து வைசியர்கள் தோன்றினார்கள்.
  • பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினார்கள்.

8- மனதிலிருந்து சந்திரன், கண்களிலிருந்து சூரியன், முகத்திலிருந்து இந்திரனும் நெருப்பும் தோன்றின. அவன் உயிலிருந்து காற்று , தொப்புளிலிந்து வானம், அவன் தலையிலிலிருந்து சொர்க்கமும் தோன்றியது.
9- பாதத்திலிருந்து பூமியும் தோன்றியது, அவன் காதுகலிருந்து திசைகள் தோன்றின. இப்படியாக உலகம் தோன்றியது.

இப்படி உலகத்தின் தோற்றத்தில் இவ்வளவு கற்பனையும் ஆபாசமும் கலந்திருப்பதை தான் தந்தைப்பெரியார் போன்றோர் சாடினார் , எதிர்த்தார்

நம் சிந்தனைக்கு

1- பாதத்திலிருந்து சூத்திரன் வந்தால் தீண்டாமை, பூமி வந்தால் புண்ணிய பூமியா?
2- புருசாவை பலியிடுவதற்கு முன் வானமும் இல்லை பூமியும் இல்லை அப்படியென்றால் தேவர்களும் முனிவர்களும் எங்கு வாழ்ந்தனர்?
3- இன்று உள்ள நம் இந்து மதக் கோயில்களில் இந்த புருசா என்று சொல்லுவதற்கான சிலைகள் உண்டா? அப்படி என்றால் கோயில்களை கட்டிய தமிழர்களுக்கும் ஆபாச கற்பனைகளை கூறும் வட ஆரிய வேத மதத்திற்கும் சம்பந்தம் உண்டா?
4- இந்த புருசா என்பவனை பற்றி , இந்த புருச சூக்தம் தவிர வேறு எங்கும், இவன் தான் முதலாக தோன்றினான் என்பதற்கான முகாந்திரம் இல்லை. அதாவது பொதுவாக பிறம்மா, விட்ணு , சிவா என்று தான் கூறுவார்கள்
5- இறைச்சி உண்ணுதல் தவறு என்றும் , பலியிட்டு பூசை செய்தல் தவறு என்று கூறும் வட ஆரிய வேத நெறியினர்கள் , இந்த உலகம் ஒரு மனிதனை பலியிட்ட பிறகே தோன்றியது என்று கூறுவது எப்படி தர்மமாகும்?
6- பலியிட்டு பூசை செய்ய கூடாது பாவம் , உயிரை கொல்லக்கூடாது என்று கூறுபவர்களின் வேதத்தில் ”நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின” வருகிறது

https://kuthoosi.wordpress.com/2015/06/06/வர்ணாசிரமமும்-அது-கூறு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.