Sign in to follow this  
நவீனன்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

Recommended Posts

‘கிரேட் எஸ்கேப்’: மிரட்டிய தொடக்க வீரர்கள்; தோல்வி பயம் காட்டிய ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது இந்தியா

 

 
hongkong

ஹாங்காங் தொடக்க வீரர்கள் கேப்டன் ராத் (இடது), நிசாகட் . | படம். | ஏ.பி.

ஆசியக் கோப்பை குரூப் ஏ போட்டியில் அன்று பாகிஸ்தானுடன் ஆடிய ஹாங்காங் இல்லை நாங்கள் என்ற விதமாக இந்திய அணிக்கு சாதனை தொடக்கக் கூட்டணியுடன் தோல்வி பயம் காட்டியது ஹாங்காங் அணி, ஆனால் கடைசியில் 26 ரன்களில் தோல்வி தழுவ, இந்திய அணி போராடி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 240/2 என்ற நிலையிலிருந்து அனுபவ வீரர், மூத்த வீரர், ‘கிரேட் பினிஷர்’ தோனியின் டக் உடன் 285 ரன்களையே எடுத்தது.

 

ஏதோ இது ஒரு நல்ல ‘வார்ம் அப்’ மேட்சாக இருக்கும் என்ற மனநிலையில் இறங்கிய இந்திய அணிக்கு ‘மரணபயம்’ காட்டியது ஹாங்காங். ஏனெனில் ஹாங்காங் வென்றிருந்தால் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுவாகவே இருந்திருக்கும். கோலி கூறியது ரோஹித் சர்மாவுக்கு நினைவில் இல்லை போலும், முதல் போட்டியே உயர்மட்ட போட்டிதான், அதில் வார்ம்-அப் மனநிலையில் களமிறங்கக் கூடாது என்று கூறியது இந்திய அணியைப் பொறுத்தவரை 100% உண்மையானது நேற்று.

இந்திய அணி வீரர்களெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் ஐபிஎல் சூரப்புலிகளாக மட்டுமே தேங்கும் நாள் நம் கண்களுக்குத் தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணியின் நிஸாகட் கான் (92), கேப்டன் அன்ஷுமன் ராத் (73) 34 ஓவர்களில் 174 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்க்க ரோஹித் சர்மா அண்ட் கோ வயிற்றில் மோட்டார் ஓடத் தொடங்கியது.

செத்தப் பிட்சில் இந்திய நடுவரிசையில் அம்பாத்தி ராயுடு தவிர பெரிய அளவில் ஒருவரும் ஆடாமல் 285 ரன்களுக்கு மட்டுப்பட்டது இந்தியா.

இலக்கை விரட்டக் களமிறங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்கள் மிக அருமையாக, மிக அருமையாக இன்னிங்ஸை இலக்கு நோக்கி பில்ட் அப் செய்தனர், ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஒன்றுமேயில்லை. 4 ஓவர் பவுலரைக் கொண்டு வந்து 10 ஓவர் வீசச்சொன்னால் அவர் 4 ஓவர்களையே ஒழுங்காக வீசவில்லை.

கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுவாகவே அமைந்திருக்கும். ஆனால் அறிமுக இடது கை வீரர் கலீல் அகமட், சாஹல் ஆகியோரது தொடர்ச்சியான முயற்சியினாலும் ஹாங்காங்கின் அனுபவமின்மையினாலும் 259 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்று முடிந்தது.

khaleel%20ahmedjpg

விக்கெட் நாயகர்கள் கலீல், சாஹல்.| ஏ.எப்.பி.

 

அசோசியேட் அணியா தேவையில்லை என்ற ஐசிசியின் பணக்கார வாரியங்களின் முகச்சுளிப்புக்கு ஹாங்காங் நேற்று பதிலடி கொடுத்தது. நிச்சயம் பாகிஸ்தானுக்கு ஹாங்காங் நல்லது செய்துள்ளது. இந்திய அணி இந்த வெற்றியினால் பெருமையடைய ஒன்றுமில்லை, மாறாக பாகிஸ்தான் அணி இந்த இந்திய அணி இந்தப் பிட்ச்களில் இவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்து திட்டமிடத் தொடங்கியிருக்கும்.

நிசாகட் மற்றும் ராத் அருமையாக, பதற்றமில்லாமல் தொடங்கினர். கலீல் அகமடின் 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தனர். புவனேஷ்வர் குமாரையும் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தனர். ஷர்துல் தாக்குர் 10 பந்துகள் வீசி தன் ஓவரை முடித்தார், அதில் ஃப்ரீ ஹிட்டெல்லாம் வர 17 ரன்களைக் கொடுத்தார். இதனையடுத்து முழு தன்னம்பிக்கையுடன் ஆடிய ஹாங்காங் 12 ஒவர்களில் 77 ரன்கள் என்று பிரமாதமாகச் சென்று கொண்டிருந்தது.

ஆனால் இத்தகைய மந்தமான பிட்ச் நீளமான பவுண்டரி உள்ள மைதானத்தில் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது கடினம், ஆனால் எதிர்பார்த்தது போல் நிசாகட், ராத் இருவரும் சாஹல், குல்தீப்பிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை ஆனால் ரன் விகிதம் கட்டுப்பட்டது, 18 ஓவர்களில் 67 ரன்களே ஒரு கட்டத்தில் வந்தது.

ஷர்துல் மீண்டும் பந்து வீச வந்த போது வா.. வா.. என்று 13 ரன்கள் விளாசினர். கேதார் ஜாதவ் வீச வந்த போது மிட்விக்கெட் மீது ஒரு மிகப்பெரிய சிக்சரை அன்ஷுடம் ராத் விளாசினார்.

97 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்கோர் 174/0 அப்போது குல்தீப் யாதவ் மீண்டும் வீச வந்த போது சாதாரண பந்தை கவரில் ரோஹித் சர்மாவிடம் நேராகக் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாபர் ஹயாத் இறங்கி அதே ஓவரில் 3 பந்துகளில் பீட் ஆகி 2 பந்துகளில் ரன் இல்லாமல் போக மெய்டன் விக்கெட் ஆனது.

இதனால் எதிர்முனையில் நிசாகட்டுக்கு பிரஷர் எகிற கலீல் அகமட் பிரஷரைக் கூட்டினார் தனது கூடுதல் பவுன்ஸ் மற்றும் லெந்த் மூலம் 12 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருந்த நிசாகட் கடைசியில் ரவுண்ட் த விக்கெட்டில் கலீல் வீசிய பந்து உள்ளே வர நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ விரயமானது. 175/2 முதல் 4-5 ஓவர்களுக்கு ரன் வறட்சி ஏற்பட்டது. பிறகு பாபர் ஹயாத், கலீல் அகமடை ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியும் பிறகு குல்தீப் யாதவ்வை குதித்து வந்து நேராக ஒரு சிக்சரையும் விளாசினார். 40வது ஓவரில் கார்ட்டர் (3) விக்கெட்டை கலீல் அகமட் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேற இதே ஓவர் கடைசி பந்தில் பாபர் ஹயாத், கலீல் அகமடின் ஷார்ட் எகிறு பந்தை பின்னால் சென்று ஒரே அறை அறைந்தா லாங் ஆஃபில் சிக்ஸ். பிரமிக்கத்தக்க ஷாட். ஹாங்காங் 40 ஒவர்கள் முடிவில் 198/3 என்று இருந்தது.

ஆனால் 41வது ஓவரை சாஹல் வீச அபாயகரமான ஹயாத் 18 ரன்களில் லெக் ஸ்பின்னில் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பிறகு கே.டி.ஷா ஒரு சிக்சருடன் 13 பந்துகளில் 17 ரன்களையும் இசான் கான் 11 பந்துகளில் 12 ரன்களையும் எடுக்க 44 ஒவர்களில் 227/4 என்ற நிலையில் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் 45வது ஓவரில் சாஹல் ஹாங்காங் நம்பிக்கைக்கு ஆணியடித்தார். ஷா, பாயிண்டில் தவணிடம் கேட்ச் ஆக அதே ஓவரில் அய்ஜாஜ் கான் கூக்ளியில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி வெளியேற ஹாங்காங் 230/6 என்று ஆனது.

விக்கெட் கீப்பர் மெக்கனியை, குல்தீப் யாதவ் பந்தில் தோனி ஸ்டம்ப்டு செய்தார். தன்வீர் அப்சல் இறங்கி குல்தீப் யாதவ்வை அவர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸ் விளாசினார். 246/7 என்ற நிலையில் 18 பந்துகளில் 40 ரன்கள், வேறு அணியாக இருந்தால் சாத்தியமே. ஆனால் 258/8 என்று முடிந்தது ஹாங்காங்.

இந்தியத் தரப்பில் அறிமுக போட்டியிலேயே கலீல் அகமட் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சாஹல் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். புவனேஷ் குமார் 9 ஓவர்களில் 50 ரன்களைக் கொடுத்து ஏமாற்றம் அளிக்க, ஷர்துல் தாக்குர் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து வீணானார். ஆட்ட நாயகனாக சதமெடுத்த ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார்.

https://tamil.thehindu.com/sports/article24983030.ece

 

 

புவனேஷ் குமார், சாஹல், குல்தீப் இருக்கும் போது ‘அனுபவமற்ற பந்துவீச்சு’ என்ற ரோஹித் சர்மா

 

 
rohit

படம். | ஏ.எஃப்.பி.

ஹாங்காங்குக்கு எதிராக ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஏகப்பட்ட லிட்டர்கள் தண்ணி குடித்தது. மிரட்டிய ஹாங்காங் 29 ரன்கள் என்ற குறைந்த இடைவெளியில் தோல்வி தழுவியது.

இந்திய அணி ஷிகர் தவண் சதம் ராயுடு அரைசதத்துக்குப் பிறகு ஈரச்சுவர் போல் உதிர்ந்து விழுந்தது. 285 ரன்கள் போதும் என்பது இந்திய அணியின் நினைப்பு, அந்த நினைப்புக்கு ஆப்பு வைத்தனர் ஹாங்காங் தொடக்க வீரர்கள் நிசாகட் மற்றும் கேப்டன் அன்ஷுமன் ராத். 174 நோ-லாஸ். விரட்டலில் முதல் முறையாக 200 ரன்களைக் கடந்த்து என்று இந்திய ‘வார்ம்-அப்’ மேட்ச், ஹாங்காங்குக்கு நம்பிக்கையளிக்கும் ஆட்டமாக மாறியது.

 
 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது அனுபவமற்ற பந்து வீச்சு என்று உளறிக் கொட்டினார். ஹாங்காங் அணியையே இந்தப் பந்து வீச்சைக் கொண்டு எளிதில் வீழ்த்த முடியாததற்குக் காரணம் உத்வேகமற்ற ரோஹித் சர்மாவின் மந்தமான கேப்ட்சன்சிதான், அணித்தேர்வுதான், ஷர்துல் தாக்குரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் கணிசமான போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ள நிலையில் அனுபவமற்ற பேச்சாகத்தான் இருந்தது ரோஹித் சர்மாவின் ‘அனுபவமற்ற பவுலர்கள்’ கருத்தும்.

கடைசியில் அனுபவமற்ற கலீல் அகமெட் தான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்,  அபாய வீரர் நிசாகட் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார்.

ஹாங்காங்கை வீழ்த்தவே டெனிஸ் லில்லி, தாம்சன், ஆம்புரோஸ், வாசிம் அக்ரம் வேண்டும் என்று கேட்பார் போலிருக்கிறது, ‘கேப்டன்’ ரோஹித் சர்மா

ரோஹித் கூறியது:

போட்டியை வெல்வது முக்கியம், அதை நிகழ்த்தி விட்டோம். நிச்சயம் எளிதல்ல என்பதை அறிந்திருந்தோம். நம்மிடம் அனுபவமற்ற பந்து வீச்சு வரிசை, ஆனால் அது ஒரு சாக்கல்ல. இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்க வேண்டும், அதுதான் நாம் செய்த தவறு.

இது கற்றுக் கொள்ளும் இடம். ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் எங்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் ஹாங்காங் அணியைப் பாராட்டுகிறேன். தொடக்க வீரர்கள் கிரேட் பார்ட்னர்ஷிப். நம் பந்து வீச்சாளர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள நல்ல வாய்ப்பு.

பாசிட்டிவ் அம்சங்கள் என்றால் ஷிகர் தவண் சதம், இங்கிலாந்தில் போராடி விட்டு இங்கு வந்து ஆடி சதம் எடுத்துள்ளார். அம்பாத்தி ராயுடுவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நன்றாக ஆடினார், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோரும் இந்த ஸ்கோரை எட்ட உதவினர்.

கலீல் அகமட் ஒரு உத்வேகமான பவுலர். அவர் சரியாகத் தொடங்கவில்லை, ஆனால் பிறகு நன்றாக வீசினார். 2-3 ஓவர்கள் தடுமாறினால் பிரச்சினையல்ல, ஆனால் பிறகு லைன் மற்றும் லெந்த்தை கண்டுபிடித்துக் கொள்வது அவசியம், அதனை கலீல் செய்தார்.

அடுத்தடுத்து போட்டிகள்தான், ஆனால் அதற்காகத்தான் இந்தப் போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்தோம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

https://tamil.thehindu.com/sports/article24983400.ece?utm_source=articlePage&utm_medium=artRel

Share this post


Link to post
Share on other sites

ஓராண்டுக்குப் பின் மோதும் இந்தியா - பாகிஸ்தான்: பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துமா?

 


இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் - குல்தீப் யாதவ், சஹால்

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இரு நாடுகளின் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பது வாடிக்கை. அதிலும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஓராண்டுக்குப் பின்னர் மோதுகின்றன. 

கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்கொண்டன. அதன் பின்னர், இப்போதுதான் துபாயில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் வெற்றிவாய்ப்பை இழந்தது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த பேட்டிங் பலம் உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்று இப்போது கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிலும் இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. மிகச்சாதாரண அணி என்று நினைத்த ஹாங்காங் அணியுடன் நேற்றைய போட்டியில், இந்தியா கடுமையாகப் போராடித்தான் வெற்றிபெற முடிந்தது. அந்த அளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சோபிக்காமல் போனார்கள். 

 

 

அதேபோல் இன்றைய போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் சொதப்பாமல் திட்டமிட்டு விளையாடினால் மட்டுமே, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை எளிதாக்க முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் தரவரிசை சிறப்பான முறையில் இருந்தாலும், பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், சஹால் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியினருக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இந்திய நேரப்படி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. 

https://www.vikatan.com/news/sports/137354-india-to-take-on-pakistan-in-asia-cup-cricket-after-one-year.html

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவா? பாகிஸ்தானா? ஆரம்பிக்கிறது கிரிக்கெட் சமர்  - முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான்

 

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று மாலை 5.00 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளது.

asia.jpg

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

'ஏ' பிரிவில் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிக் கொண்ட ஹொங்கொங் அணி வெளியேறியுள்ள நிலையில் இவ் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

எனவே இன்று இடம்பெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தமது பலத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றது.

india_pak_2.jpg

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஹொங்கொங் அணியுடனான வெற்றியை மிகவும் போராடிப் பெற்றுக் கொண்டமையினால் இன்று இடம்பெறவுள்ள இப் போட்டியில் அவர்கள் முழுத்  திறமையையும் வெளிப்படுத்தியாக வேண்டும். 

ஏனெனில் பாகிஸ்தான் அணி துபாயில் நீண்ட காலமாக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளது. அந்த அணியினர் அங்குள்ள சூழ்நிலை, ஆடுகளத்தை நன்கு அறிந்து இருப்பார்கள். 

ஆகவே பாகிஸ்தான் சவாலை இந்தியா சமாளிக்க பல வியூகங்களை வகுத்து போராட வேணடியிருக்கும். 

ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொறுத்தவரையில் இவ் இரு அணிகளும் இதுவரையில் 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40738

 

 

இந்தியாவுடனான போட்டி குறித்து பாக்கிஸ்தான் அணித்தலைவர் கருத்து என்ன?

 

 

 இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகள் எப்போது கடும் அழுத்தங்களை  வழங்க கூடியவை என தெரிவித்துள்ள பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்பிராஸ் அகமட் நான் எனது வீரர்களிடம் இன்றையை போட்டியை மாத்திரமல்ல ஒவ்வொரு போட்டியையும் இந்தியாவிற்கு  எதிரான போட்டியாக  கருதுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடான இன்றைய போட்டி காரணமாக நாங்கள் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளோம், ஆனால் அது எங்களை பாதிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்தியாவுடனான இன்றைய போட்டியை மற்றொரு போட்டியாக  கருத முயன்றாலும் இந்த போட்டி காரணமாக உருவாகியுள்ள அழுத்தங்கள் எதிர்பார்ப்புகள் வீரர்கள் மீது அழுத்தங்களை திணித்துள்ளன எனவும் பாக்கிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் என்ற அடிப்படையில் இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகளை நாங்கள் சாதாரணமாகவே கருதுகின்றோம் ஆனால் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த போட்டி குறித்து காணப்படும் எதிர்பார்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

india_pak_2.jpg

அனைவரும் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40739

Share this post


Link to post
Share on other sites

162 ஓட்டத்துடன் பாகிஸ்தானின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி ; வெற்றியிலக்கு 163

 

இந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ளத் தெரியாமல் திணறி, 43.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும்இழந்து 162 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாட இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட, 2.1 ஆவது ஓவல் இமாம் இரண்டு ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஜமானம் எதுவித ஓட்டங்களும் இன்றி புவனேஸ்வர் குமாரின் பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

buva.jpg

இதனால் பாகிஸ்தான் அணி 4.1 இரண்டு விக்கெட்டுக்களை இழந்து மூன்று ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அடுத்து ஜோடி சேர்ந்து ஆரம்பித்த மலிக் மற்றும் பாபர் அசாமின் ஜோடி அடித்தாட ஆரம்பிக்க பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 25 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்தும் 14.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களை கடக்க 17 ஆவது ஒவருக்காக பந்து வீசிய பாண்டி தீடீரென ஏற்பட்ட தசை பிடிப்புக் காரணமாக சுருண்டு வீழ்ந்ததையடுத்து ஆடுகளம் விட்டு வெளியேறினார்.

pandiya.jpg

அணியின் ஒட்ட எண்ணிக்கை 85 ஆக இருக்கும் போது பாபர் அசாம் 47 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் போல்ட்  முறையில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் சப்ரஸ் அஹமட்டும் 6 ஓட்டத்துடன் கேதர் யாதவ்வின் பந்து வீச்சில் மணீஷ் பாண்டேவின் அசத்தலான பிடியெடுப்பு காரணமாக வெளியேறினார்.

kulde.jpg

இதையடுத்து மலிக்குடன் ஜோடி சேர்ந்து ஆசிப் அலி துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதையடுத்து மலிக் 43 ஒட்டங்களை பெற்றுக் கொண்டு அநாவசியமாக ரன் அவுட்  முறையில் ஆட்டமிழந்தார்.

அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஆசிப் அலி 9 ஓட்டத்துடனும் ஷாத் கான் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 33 ஓவர்களுக்கு ஏழு விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அதன்பின் அஷ்ரப் மற்றும் மொஹமட்  அமீர் ஜேடி சேர்ந்து ஆடி வர அணி 150 ஓட்டங்களை கடந்தது. எனினும் அதையடுத்து 41.1 ஆவது ஓவரில் அஷ்ரப் 21 ஓட்டத்துடன் பும்ராவின் பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் ஹசான் களமிறங்கிய ஹசான் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஒரு ஓட்டத்துடன் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 160 ஓட்டங்களுக்குள் ஒன்பதாவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது.

இறுதியாக பும்ராவின் பந்து வீச்சில் உஷ்மன் கான் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களுக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 163 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில புவனேஸ்வர் குமார் மற்றும் கேதர் யாதவ் தலா 3 விக்கெட்டுக்களையும், பும்ரா இரண்டு விக்கெட்டுக்களையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40766

Share this post


Link to post
Share on other sites

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா ;  8 விக்கெட்டுக்களால் வெற்றியிலக்கை கடந்தது

 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி 29 ஓவர்களில் நிர்ணயித்த வெற்றியிலக்கினை கடந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

idn.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல், 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 47 ஓட்டத்தையும், மலிக் 43 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

malik.jpg

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

india1.jpg

அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 8.4 ஆவது ஓவரில் ரோஹித் சமர்மா ஒரு நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது.

rohith1.jpg

12.4 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா தனது 35 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்து, 13.1 ஓவரில் 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஷாத் கானுடைய பந்து வீச்சில் 52 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு தவானுடன் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 100 ஒட்டங்களை தொட்டது. இதையடுத்து தவான் 46 ஓட்டத்துடன் அஷ்ரப்புடைய பந்து வீச்சில் பாபார் அசாமிடம் பிடிகொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறிட்டார்.

இவரையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் எதிர்கொண்ட மூன்றாவது பந்தை ஆறு ஓட்டமாக மாற்றிக் காட்ட அரங்கில் ஆராவாரம் அதிகரித்தது. மறுமுனையில் 27.2 ஆவது ஓவரில் ராயுடு ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.

இறுதியில் ராயுடு மற்றுமோர் நான்கு ஓட்டத்தை விளாச இந்திய அணி 29 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கான 163 ஓட்டங்களை கடந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தினேஷ் கார்த்திக் மற்றும் ராயுடு 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக அஷ்ரப் மற்றும் ஷாத் கான் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நாளை மாலை 5.00 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பஙகளாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40774

Share this post


Link to post
Share on other sites

இமாலய வெற்றி: இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் பிரமாதம்; காற்றுப்போன பலூனானது பாகிஸ்தான்

 

 
indiaflag

ஏ.எப்.பி.

ஹாங்காங் அணியுடன் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை பார்த்து கவலை பட்டிருந்தால், விமர்சித்திருந்தால், அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.

துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு, டாப் கிளாஸ் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஆசியக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

     
 

புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஜாதவ் ஆகியோரின் பந்துவீச்சு, ரோஹித் சர்மா, தவணின் “கிளாஸிக் பேட்டிங்” ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக முதல் 10 ஓவர்களை புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் சராசரியாக 135 கி.மீ வேகத்திலும், துல்லியமாகவும், லைன் அண்ட் லென்திலும் வீசி பாகிஸ்தானை திணறடித்தனர். அதிலும் கடந்த 18 மாதங்களில் பந்துவீச்சில் மிகக்குறைவான சிக்கனவிகிதம் வைத்துள்ள இந்திய வீரர் எனும் பெருமையை பும்ரா தக்கவைத்து வருகிறார்.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் அதில் 35 பந்துகள் டாட் பால்கள்கள். மீதமுள்ள 7 பந்துகளில் மட்டுமே 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

rohit-dhawanjpg
 

கேதார் ஜாதவும் ஏறக்குறைய 9 ஓவர்கள் வீசிய அதில் 34 பந்துகள் டாட்பால்கள்,மீதமுள்ள 20 பந்துகளில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

அதேபோல பும்ரா 7.1ஓவர்கள் வீசிய அதில் 31 பந்துகள் டாட்பந்துகள், 2 மெய்டன்கள். மொத்தம் 11 பந்துகளில்தான் 23 ரன்களைக் கொடுத்துள்ளார்.

இந்த அளவுக்கு சிறப்பாக விளைாடிய இந்திய வீரர்கள் ‘அசோசியேட்’ ஹாங்காங் அணிக்கு எதிராக மட்டும் மிகமோசமாக பந்துவீசி 34 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது ஏனோ காரணம் தெரியவில்லை. ஒருவேளை பந்துவீச்சு நேற்றுமுன்தினம் மோசமாக இருந்ததா அல்லது நேற்று விளையாடிய பாகிஸ்தான் அணி பலவீனமாக இருந்ததா… அல்லது ‘உஷ்! கண்டுக்காதீங்க’ மேட்சா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய 15 மாதங்களுக்கு பின் களத்தில் பங்காளிகளான இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் என்பதால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் திறமை குறித்தும், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் குறித்து பலூன்களில் அடைத்த காற்றுபோன்று ஊதி பெரிதாக்கப்பட்டது.

சற்றும் குறைவில்லாமல் இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்தில் இருந்தால்கூட ஒரு செயற்கைத்தனமான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மூளைக்குள் திணித்து ஆட்டம் கவனிக்க வைக்கப்பட்டது.

ஆனால், விளைவு பாகிஸ்தான் அணியின் ஆட்டம் “காற்றுப் போன டயர்” போன்று நைந்து போனது, ஊதிப் பெரிதாக்கப்பட்ட “பலூன் புஸ்ஸானது”.

தங்கள் முன் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் தங்களின் பந்துவீச்சு, பேட்டிங் மூலம் இந்திய வீரர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் மிகமோசமான தோல்வியை அளித்த பாகிஸ்தானுக்கு தகுந்த பரிசை இந்திய வீரர்கள் முதல் போட்டியிலேயே அளித்திருக்கிறார்கள்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவதை அதிரடியான, தாக்குதல் ஆட்டத்தைக் கையாளவில்லை, நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். பாகிஸ்தான் 39 சதவீதம் தாக்குதல் ஆட்டத்தை கையாண்ட நிலையில், இந்திய அணி 36 சதவீதமே கையாண்டது. ஆனால், பாகிஸ்தான் சேர்த்ததோ ஓவருக்கு 6.25 ரன்கள், இந்திய அணியோ ஓவருக்கு 12.27 ரன்களாகும்.

buvaneshjpg
 

துபாய் ஆடுகளம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார்கள். வேகப்பந்துவீசினாலும், சுழற்பந்து வீசினாலும், முழங்காலுக்கு மேல் எழவில்லை. இந்தப் போட்டிக்காக பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் ஏனோ பாகிஸ்தானுக்கு ஒத்துழைக்கவில்லை.

டாஸ்வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 126 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுடன் 9 ஒருநாள் போட்டிகளில்(ஆசியக் கோப்பை,சாம்பியன்ஸ் கோப்பை, உலகக்கோப்பை) விளையாடியுள்ள இந்திய அணி இத்துடன் சேர்த்து 7-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 2014-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக 102 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான். அதன்பின் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின் முதலில் பேட் செய்து இ்ந்த அளவு குறைவான ஸ்கோர் செய்வது இது முதல் முறையாகும்.

தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் மிகுந்த கட்டுக்கோப்புடன், “டைட்டாக” பந்துவீசினார்கள். புவனேஷ்குமாரைப் பொறுத்தவரை ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிய போது, 10ஓவர்கள்வரை வீசியும் விக்கெட் வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டார். ஆனால், இந்த ஆட்டத்தில் 3-வது ஓவரில் இமாம் உல் ஹக்கையும், 5-வது ஓவரில் பக்கர் ஜமானையும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.

உலகளவில் தற்போது சிறந்த ஓபனிங் பாட்னர்ஷிப் வீரர்களாக பக்கர் ஜமானும், இமாம் உல் ஹக்கும் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருவரின் விக்கெட்டையும் மிக அனாசயமாக கழற்றிவிட்டார் புவனேஷ்குமார். கடந்த சாம்பியனஸ் டிராபி போட்டியில் ஜமான் சதம் அடித்ததால், இந்த முறை எதிர்பார்ப்பு அதிகரி்த்து இருந்தது, ஆனால், ஜமானை எளிதாக துரத்தினார் புவனேஷ்.

பும்ரா தொடர்ந்து இரு மெய்டன்கள் எடுத்து அசத்தினார். பவர்ப்ளே முதல் 10ஓவரில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு சோயிப் மாலிக், பாபர் ஆசம் இருவரும் இணைந்தனர். இதில் பாபர் ஆசம் மிகவும் ஆபத்து நிறைந்த பேட்ஸ்மேனாக கருதப்படக்கூடியவர். இரு பேட்ஸ்மேன்களையும் பிரிக்க இந்திய வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். ஜாதவ் வீசிய 22 ஓவரில் பாபர் ஆசம் 47 ரன்கள் சேர்த்திருந்த போது போல்டாகி ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 82-ரன்கள்சேர்த்துப் பிரிந்தனர்.

sarfrazjpg
 

அடுத்து வந்த சர்பராஸ் அகமது 6 ரன்களில் ஜாதவ் பந்துவீச்சில் வெளியேற்றினார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே களமிறங்கினார். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு மணிஷ்பாண்டே பிடித்த கேட்ச் மிக அற்புதமானது.

நிதானமாக ஆடிவந்த சோயிப் மாலிக்கை 43 ரன்களில் ரன்அவுட் ஆக்கினார் ராயுடு. இதன் பின் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. 100 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி அடுத்த 62 ரன்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் சீராக இழந்தது.

25 ஓவர்களுக்கு மேல் குல்தீப், யஜுவேந்திர சாஹல், ஜாதவ் ஆகியோர் நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசி பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பாகிஸ்தானின் நடுவரிசை வீரர்களும், கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

8-வது விக்கெட்டுக்கு அமிர், அஷ்ரப் 37 ரன்கள் சேர்த்த போதிலும் இருவரும் நிலைக்கவில்லை. அஷ்ரப் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

43.1ஓவர்களில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் களமிறங்கினார்கள். இருவரும் அதிரடியான ஆட்டத்தைக் கையாளாமல், நிதானமாகவே பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் வெவ்வேறு இலக்குகளை ரன் சேர்க்க வைத்து விளையாடியதால் பீல்டிங் மாற்றியமைக்க பாகிஸ்தான் அணியின் மிகுந்த சிரமப்பட்டனர். உதாரணமாக ரோகித் சர்மா 81 சதவீதம் ஆப்-சைடிலும், 40 சதவீதம் லெக்திசையிலும் ஷாட்களை அடித்தார், தவண் 45 சதவீதம் ஆப் சைடிலும் 120 சதவீதம் லெக்திசையிலும் ஷாட்களை அடித்தார். இதனால், பீல்டிங்கை மாற்றியமைப்பதில் பெரும்குழப்பம் ஏற்பட்டது.

6-வது ஓவர் வரை கட்டுக்கோப்பாகவே பாகிஸ்தான் பந்துவீச்சு இருந்தது. ஆனால், முகம்மது ஆமிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசி ரோகித் சர்மா அசத்தினார். உஸ்மான்கானின் 8-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை ரோகித் சர்மா பறக்கவிட்டார். ரோஹித் சர்மாவுக்கு செட்டில் ஆன பிறகு ஷார்ட் பிட்ச் வீசினால் என்ன ஆகுமோ அது நடந்தது. ஹூக் ஆடும்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பெரிதும் நினைவூட்டுகிறார் ரோஹித் சர்மா.

பவர்ப்ளே 10 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. தவண் தனது பங்கிற்கு பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

ஹசன் அலி வீசிய 13-வது ஓவரில் ரோகித் சர்மா ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

சதாப்கான் வீசிய 14 ஓவரில் கூக்ளியில் கீளின் போல்டாகி ரோகித் சர்மா 52 ரன்களில் வெளியேறினார். இதில் 3சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ராயுடு களமிறங்கினார். தவாண் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் வேகமெடுத்தது.

தவண் 46 ரன்கள் சேர்த்திருந்தபோது, அஷ்ரப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ராயுடுவுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் பக்கர் ஜமான் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து தூள்பறத்தினார். அதன்பின் இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தான் தரப்பில் அஷ்ரப், சதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

https://tamil.thehindu.com/sports/article24991666.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Share this post


Link to post
Share on other sites

`மைதானத்தில் சுருண்டு விழுந்த ஹர்திக் பாண்ட்யா’ - மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பு

 
 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

ஹர்டிக் பாண்ட்யா

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் மற்றும் கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின்  பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். அந்த அணி 43.1 ஓவர்களுக்கு 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியா 8 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்தார்.

 

 

இந்தப் போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலியால் மைதானத்தில் அப்படியே சுருண்டு விழுந்தார். 18-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசியபோது முதுகுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு துடித்தார். அவரால் எழுந்திருக்க முடியாததால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்துகொண்டு செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக மணிஷ் பாண்டே ஃபீல்டிங் செய்தார்.

 

 

இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ``ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தது. ஹர்திக் இனி வரும் போட்டிகளில் பங்கேற்பரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

https://www.vikatan.com/news/sports/137462-hardik-pandya-sustains-back-injury-stretchered-off-field.html

Share this post


Link to post
Share on other sites

லீக் சுற்றின் இறுதிப் போட்டி இன்று ; முதலில் களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான்

 

 
 

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் போட்டி அபுதாபியில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

aff.jpg

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானினத்தார்.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கவுள்ளது.

6 நான்கு பங்கு கொண்ட 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் வெளியேற, 'சுப்பர்- 4' சுற்றுக்குள் குழு “ஏ” யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் குழு “பி” யில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும் நுழைந்தன.

Asia-Cup-2018-Super-4-Round-Qualified-Te

இந் நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4' சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதன்படி நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4' சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா, பங்களாதேஷ் அணியையும் (துபாய்) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை (துபாய்) எதிர்கொள்கிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர்- 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணியை (அபுதாபி) எதிர்கொள்கிறது.

'சுப்பர் -4' சுற்றில் முதல் இரண்டு இடங்களையும் பிடிக்கும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40835

40.png&h=42&w=42

166/7 * (41.4/50 ov)

Share this post


Link to post
Share on other sites

‘தோனியைப் பார்க்க 10 வருஷம் காத்திருந்தேன்’: ஹாங்காங் அணியினரை தேடிச் சென்று சந்தித்த இந்திய அணியினர்

 

 
india-vs-hong-kong

ஹாங்காங் வீரர் இஷான் கானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தோனி, கேப்டன் ரோகித் சர்மா   -  படம் உதவி: பிசிசிஐ டிவிட்டர்

ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணியை தனது முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, போட்டி முடிந்த பின் அவர்களின் அறைக்குச் சென்று சந்தித்து தங்களின் நட்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து ஆடியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேட் செய்த ஹாங்காங் அணி 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்து 26 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

தொடக்க ஆட்டக்காரர்கள் அன்சுமன் ராத், நிசாகத் கான் ஆகியோர் 170 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்குக் கிலி ஏற்படுத்தினார்கள். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹாங்காங் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டி முடிந்த பின், தங்களின் நட்பையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், இந்திய அணியினர் ஹாங்காங் அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்குச் சென்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தோனி, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவண், தினேஷ் கார்த்திக். குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சென்று ஹாங்காங் அணி வீரர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது ஹாங்காங் வீரர்கள் சிறப்பாக பேட் செய்ததற்கும், பந்து வீசியதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். தங்களின் அனுபவங்களை பாபர் கான், இஷான் கான், கின்சிட் ஷா ஆகியோரிடம் இந்திய வீரர்கள் பகிர்ந்து கொண்டு புகைப்படங்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.

ஹாங்காங் அணி வீரர் இஷான் கான் ரோஹித் சர்மா விக்கெட்டையும், தோனி விக்கெட்டையும் வீழ்த்தியவர். சுழற்பந்துவீச்சாளரான இஷான் கான், ரோஹித் சர்மாவுடனும், தோனியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக இஷான் கான் கூறுகையில், ''தோனியைச் சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பது என்னுடைய 10 ஆண்டு கனவு.  அது இப்போது நிறைவேறிவிட்டது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்திய வீரர் புவனேஷ் குமார், பந்துகளை எவ்வாறு ஸ்விங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஹாங்காங் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவினார்.

https://tamil.thehindu.com/sports/article24996655.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Share this post


Link to post
Share on other sites

 

40.png&h=42&w=42

255/7 * (50 ov)
 

இறுதித் தருணங்களில் தெறிக்கவிட்ட ஆப்கான் ; வெற்றியிலக்கு 256

 
 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இறுதித் தருணங்களில் ரஷித்கான், நைய்ப்பின் அதிரடி ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

af1.jpg 

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்கார்களாக மெஹாமட் ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் களமிறங்கி 10 ஓட்டங்களை அணி பெற்றுக கொண்டபோது 1.4 ஆவது ஓவரில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன்படி நான்கு பந்துகளை எதிர்கொண்ட ஜனாத் இரண்டு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 8 ஓட்டத்துடன் அபு ஹைடருடய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து ரஹ்மத் ஷாவும் 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு பொல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 5.5 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

af2.jpg

அதன் பின் களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹதி, மெஹாமட் ஷஹ்சாத்துடன் இணைந்து ஜோடி சேர்ந்தாட ஆப்கானிஸ்தான் அணி 16 ஓவர்களுக்கு 60 ஓட்டங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து 19.3 ஆவது ஓவரில் அணியின்  ஓட்ட எண்ணிக்கை 79 ஆக இருந்தபோது மெஹாமட் ஷஹ்சாத் 37 ஓட்டத்துடன் ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

hon.jpg

ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து 25 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடக்க 25.1 ஆவது ஓவரில் அஸ்கர் ஆப்கான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆடுகளம் நுழநை்த சாமிமுல்லா ஷேவாரி 18 ஓட்டங்ளுடன் ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 36 ஆவது ஓவரின் இறுதியில் 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக அரைசதம் கடந்தது ஆடி வந்த ஹஷ்மத்துல்லா ஷஹதியும் 37.1 ஆவது ஓவரில் 58 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவரையடுத்து களம்புகுந்த மெஹமட் நைய்பி 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து குல்பாடின் நைய்பியுடன் ஜேடி சேர்ந்து ஆடி வந்த ரஷித் கான் 45 ஆவது ஓவரில் 2 நான்கு ஓட்டத்தையும் ஒரு ஆறு ஓட்டத்தையும் பெற்று அதிரடி காட்ட 45 ஆவது ஓவரின் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்தும் பங்களாதேஷ் அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் தெறிக்க விட ரஷித் கான் இறுதி ஓவரில் அரை சதம் கடந்தார். 

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரஷித் கான் 32 பந்துகளில் 57 ஓட்டத்தையும் நைய்ப் 38 பந்துகளுக்கு 42 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர். 

ras.jpg

இதன்மூலம் பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக 256 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுக்களையும், அபு ஹேடர் ரோனி 2 விக்கெட்டுக்களையும், ஹுசேன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40858

 

Share this post


Link to post
Share on other sites

கிரிக்கெட்டில் பல நாடுகள் பங்கு பற்றுவது ,சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆப்கானின் பந்து வீச்சில் சின்னாபின்னமானது பங்களாதேஷ் ;136 ஓட்டத்தால் ஆப்கான் அபார வெற்றி

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானின் புயலில் சிக்கி 119 ஒட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 136 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

ra.jpg

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

ஆப்கான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷஹதி 58 ஓட்டத்தையும், ரஷித் கான் 57 ஓட்டத்தையும், குல்பாடின் நைய்பி 42 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

rasith1.jpg

256 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸும், ஹுசைன் ஷான்டோவும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிலையில் ஷான்டோ 7 ஓட்டத்துடனும் லிட்டான் தாஸ் 6 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 4.5 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்குள் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

aff.jpg

இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஷகிப் அல் ஹசனும் மெமனுள் ஹாக்கும் ஜோடி சேர்ந்து ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தபோது மெமனுள் ஹாக் 9 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இவரையடுத்து களம்புகுந்த மெஹமட் மிதுன் 2 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

edf.jpg

இதனால் பங்களாதேஷ் அணி 14.1 ஓவரில் 43 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதற்கடுத்தபடியாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் சுழலில்  சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர்.

அதன்படி ஷகிப் அல் ஹசன் 32 ஓட்டத்துடனும், மாமதுல்ல 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

மேலும் 32.5 ஆவது ஓவரில் அணி 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள ஹுசேன் 11 ஓட்டத்துடனும் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வந்தனர். இருந்தபோதும் 33.1 ஆவது ஓவரில் மெய்டி ஹசான் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழந்தார்.

ras.jpg

இறுதியாக பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானின் பந்துகளை சமாளிக்க முடியாது திக்குமுக்காடி 42.1 ஒவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 136 ஒட்டத்தால் வெற்றி பெற்றது. 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், குல்பாடின் நைய்பி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அத்தாப் ஆலம், ரஹ்மத் ஷா மற்றும் மெஹமட் நைய்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40865

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆசியக் கோப்பை கிரிக்கெட் - `சூப்பர் 4’ சுற்றுகள் இன்று தொடக்கம்

 
 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் ‘ஏ’பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் லீக் சுற்றுப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ஹாங்காங் மற்றும் இலங்கை அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறின. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தையும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. 

https://www.vikatan.com/news/sports/137578-asia-cup-2018-india-vs-bangladesh-super-four.html

Share this post


Link to post
Share on other sites

ஃபகர் ஜமான், தினேஷ் கார்த்திக் செய்தது சரியல்ல: சுனில் கவாஸ்கர்  விமர்சனம்

 
jnpng

பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமானும், தினேஷ் கார்த்திக்கின் களத்தில் அவர்களது செயல் சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையில்  ரசிகர்களிடம் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்தில் தனது ஜெர்சியில் தனது முழு பெயருடன் விளையாடமல் டிகே என்று அணிந்திருந்த ஜெர்சியை அணிந்துக் கொண்டு விளையாடினார்.

 

பின்னர் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் 18வது ஓவரில்  பந்துவீசும் போது தனது தொப்பியை பின்புறமாக அணிந்துக் கொண்டு விளையாடினார்.

தற்போது இந்த இரண்டு வீரர்களின் செயல்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "பாகிஸ்தான் கேப்டனோ அல்லாது வேறு யாராவதோ ஃபகர் ஜமான்னிடம் கூறி இருக்கலாம் அவர் தொப்பியை சரியாக அணிய வேண்டும் என்று. நீங்கள் தொப்பியை பின்புறமாக அணிந்துக் கொண்டு பாகிஸ்தான் பீரிமியர் லீகில் விளையாடலாம். ஆனால் இது நீங்கள் உங்கள் தேசிய அணிக்காக விளையாடும் விளையாட்டு.

fakharzamananddk1537439872725x725jpg
 

மேலும், தினேஷ் கார்த்தின் செல்ல பெயர் டிகேவாக இருக்கலாம். ஆனால் அவர் களத்தில் அவருடைய பெயர் மற்றும் ஜெர்சி நம்பர் இடப்பெற்றுள்ள ஆடையை அணிந்து விளையாட வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை அடையாளம் காணுவார்கள்” என்றார்.

https://tamil.thehindu.com/sports/article25004070.ece

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் ஸ்பெஷல்: வங்கதேசத்தை 'அடக்கிய’ ராஷித் கான்

ra

அரைசதம் அடித்து அசத்திய ஆப்கான் வீரர் ராஷித்கான்   -  படம் உதவி: ட்விட்டர்

ராஷித் கானின் அசத்தலான பேட்டிங், மாயஜான சுழற்பந்துவீச்சால் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் அதிகம் களமாடாத அணி, கத்துக்குட்டி என்று நினைத்து ஒவ்வொரு விக்கெட்டுக்கும் எதிரணியினரை வெறுப்பேற்றும் வகையில் பாவனைகள் செய்த வங்கதேச அணிக்குச் சரியான பாடத்தை ஆப்கானிஸ்தான் அணியினர் புகட்டினர்.

     
 

ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமே அந்த அணியின் நட்சத்திர வீரர் ராஷித் கான் என்றால் மிகையாகாது. தனது 20-வது பிறந்தநாளான நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளையும், அதிரடியாக பேட் செய்து அரைசதம் அடித்து ஆர்ப்பரிக்க வைத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

தன்னை இத்தனை நாட்களாக டி20 போட்டிக்கு மட்டுமே உகந்த வீரராக வெளிக்காட்டி வந்த ராஷித்கான் தன்னால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஷ்தான் அணிக்குத் தனது பிறந்தநாள் பரிசாக ராஷித்கான் இதைக்காட்டிலும் சிறந்ததை அவரால் கொடுக்க முடியாது. லீக் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி முக்கியமில்லாததாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி கொண்டாடக்கூடியதாகும்.

rasdjpg

ராஷித்கான், நயிப் ஜோடி

 

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. 256 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 42.1 ஓவர்களில் 119 ரன்களில் சுருண்டு, 136ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் 2-வது ஓவரிலே இன்ஷானுல்லா(8) விக்கெட்டை இழந்தது, இந்த விக்கெட் இழந்தபோது வங்கதேச வீரர்கள் மீண்டும் எதிரணியினரை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டனர்.

அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியில் களமிறங்கிய வீரர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 160 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறியது. இதனால், ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 200 ரன்களுக்குள் முடிந்துவிடும் என வங்கதேச வீரர்கள் எண்ணி இருப்பார்கள்.

bang1jpg

விக்கெட் வீழ்த்தி கிண்டல் செய்த வங்கதேச பந்துவீச்சாளர்

 

ஆனால், 8-வது விக்கெட்டுக்கு ராஷித்கான், குல்புதின் நயிப் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவுண்டரிகளாக பறக்கவிட்ட ராஷித் கான் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இவருக்குத் துணையாக ஆடிய நயிப் 42 ரன்கள் சேர்த்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் அணி 8-வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது.

வங்கதேசம் தரப்பில் சஹிப் அல்ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஹைதர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

256 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடனும், நம்பிக்கையுடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அளித்தனர். 100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதிலும் சர்வதேச அளவில் தனது லெக்ஸ்பின்னில் பேட்ஸ்மேன்களை திணறவைத்துவரும் ராஷித் கான் வங்கதேச வீரர்களுக்கு நிற்கவைத்து படம் காட்டினார். தனது கூக்ளி மூலம் பேட்ஸ்மேன்களின் பேட்டில் பந்தை தொடவே விடவில்லை. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்கள். 14 ஓவர்களுக்கு வங்கதேச அணியினரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

rrjpg

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ராஷித் கான்

 

ஆப்கானிஸ்தான் அணியைத் தவறாக எடைபோட்டுவிட்டோமே என்ற பதற்றத்தில் வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்ததைக் காண முடிந்தது. அனுபவமற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போன்று ராஷித் கான் பந்துவீச்சையும் மற்ற வீரர்களின் பந்துவீச்சையும் எதிர்கொண்டு விக்கெட்டுகளை இழந்தனர்.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக சகிப் அல் ஹசன் 32 ரன்களும், மகமதுல்லா 26 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினார்கள். 42.1 ஓவர்களில் 119 ரன்களில் வங்கதேசம் அணி சுருண்டு, 136 ரன்களில் தோல்வி அடைந்தது

வங்கதேச வீரர்களுக்குக் கிலி ஏற்படுத்திய ராஷித் கான் 9 ஓவர்கள் வீசிய 3 மெய்டன்கள் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜிபுர் ரஹ்மான், நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

https://tamil.thehindu.com/sports/article25005436.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

ஆப்கான் பாக்கிஸ்தான் மோதலும் அரசியலும்

 

 
 

ஆசிய கிண்ணப்போட்டிகள் ஏற்பாடு செய்ப்பட்ட விதம் குறித்த குழப்பம் சீற்றம் ஏமாற்றத்திற்கு பின்னர் தற்போது சுப்பர் 4 சுற்றில் யார் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் பாக்கிஸ்தானின் பங்கு முக்கியமானது.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆப்கான் கிரிக்கெட் தனது பராமரிப்பில் எடுத்திருந்ததுடன் அதன் வளர்ச்சிக்கும் உதவியிருந்தது.

பாக்கிஸ்தானின் தேசிய  கிரிக்கெட் அக்கடமியில் ஆப்கானிஸ்தானின் பல வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

ஆப்கானிஸ்தானிற்கு எதிராக முதன்முதலில் ஒரு நாள் போட்டியில் விளையாடிய நாடும் பாக்கிஸ்தான்.

ஆரம்பகாலங்களில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஆதரவு இல்லாவிட்டால் ஆப்கான் கிரிக்கெட் இவ்வளவு தூரம் வளர்ச்சி கண்டிருக்குமா என்பது சந்தேகமே

ஆனால் காலங்களும் அரசியலும் மாற்றமடைந்தன.

பாக்கிஸ்தானிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையிலான இடை வெளி அதிகரித்தது.

கடந்த வருடம் ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற மிகமோசமான குண்டு தாக்குதல் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போன்று இந்தியா ஆப்கானிஸ்தான் உறவுகள் வளர்ச்சி கண்டன.

தாங்கள் ஆரம்பநாட்களில் வழங்கிய ஆதரவிற்கு உரிய மரியாதை கிடைக்கவி;ல்லை என்ற ஏமாற்றம் பாக்கிஸ்தானிடம் உள்ளது.

இந்திய ஆப்கான் உறவுகள் வலுவடைவதையும் பாக்கிஸ்தான் விரும்பாது.

ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் தன் மீது சுமத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை மீறி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையை தோற்கடித்து  சுப்பர் 4 சுற்றில் தகுதி பெற்ற அந்த அணி பங்களாதேசையும் தோற்கடித்துள்ளது.

ஆனால் பாக்கிஸ்தான் குறித்து இவ்வாறு தெரிவிக்க முடியாது- அவர்கள் இந்தியாவிடம் 8 விக்கெட்களால் தோல்வியடைந்துள்ளனர்.

afghan__fans1.jpg

இன்றைய போட்டியில் அவர்கள் மீண்டெழுவதற்கு ஆப்கான் இலகுவில் அனுமதிக்காது.

 

 

http://www.virakesari.lk/article/40881

Share this post


Link to post
Share on other sites

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று: டாஸ் வென்றது இந்தியா

 

 

 
toss

டாஸ் சுண்டிவிடும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா   -  படம் உதவி: ட்விட்டர்

துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4- சுற்றில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

அபுதாபியில் நடக்கும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 

துபாயில் 6 நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. 2-வது சுற்றான சூப்பர்-4 இன்று தொடங்கின. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் களம்காண்கிறது.

பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக தீபக் சாஹர், ரவிந்திர ஜடேஜா, சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியில் மோமினுல் ஹக், அபு ஹைதர் ஆகியோருக்கு பதிலாக முஸ்பிகுர் ரஹிம், முஸ்தபிஜுர்  ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் ரவிந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக கிங்ஸ்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஜடேஜா இல்லாமல் 27 ஒருநாள் போட்டிகளை இந்திய அணி விளையாடிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் முயற்சியில் தோல்வி அடைந்து வந்தார். ஆனால், ரோஹித் சர்மா டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆடுகளம் எப்படி:

துபாய் ஆடுகளம் வழக்கமாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைப்பு இல்லாத வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. புற்கள் நிறைந்து, தட்டையாக இருப்பதால், பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும். இங்கு ரன்கள் சேர்ப்பது கடினமாகும். பேட்ஸ்மேன்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்புதான் அடித்து ஆட முடியும்

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவண், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, யஜுவேந்திர சாஹல்

https://tamil.thehindu.com/sports/article25007655.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

 

 

ஒரு ரசிகரின் உணர்வு இன்னொரு ரசிகருக்குத்தான் புரியும்!- உதவிய பாக்., ரசிகர்; நெகிழ்ச்சியில் சச்சின் ரசிகர்


 

 

pakistan-cricket-fan-helps-sachin-fan

 

 

துபாயில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண சச்சினின் தீவிர ரசிகருக்கு பாகிஸ்தான் ரசிகர் உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் சுதிர் கவுதம், இந்திய அணியின் தீவிர ரசிகர். அதைவிட முக்கியம் சச்சினின் தீவிர வெறியர். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய காலம் வரை அவர் எந்த நாட்டில், எந்த மாநிலத்தில் விளையாடினாலும் சுதிர் கவுதமை அழைத்துவிடுவார். அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்துவிடுவார். 

ஆனால், சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் சுதிர் கவுதமால் இந்திய அணி பங்கேற்றும் போட்டிகளுக்குச் செல்ல முடியவில்லை. உள்நாட்டில் நடக்கும் போட்டிகளுக்கு தவறாமல் செல்லும் சுதிர் கவுதம் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பண வசதி இல்லாத காரணத்தால் செல்வதைக் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் ஆசியக் கோப்பைப் போட்டியைக் காண சுதிர் கவுதமுக்கு ஆசை வந்தது. அதிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண அவருக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால், துபாய் செல்வதற்கு சுதிர் கவுதமிடம் போதுமான பணம் இல்லை.
இந்தியாவுக்கு சுதிர் கவுதம் தீவிர ரசிகராக எவ்வாறு இருக்கிறாரோ அதுபோல் பாகிஸ்தானுக்கு பஷீர் சாச்சா தீவிர ரசிகர். பாகிஸ்தான் போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்துவார்.
இந்திய ரசிகர் சுதிர் கவுதமும், பாகிஸ்தான் ரசிகர் பஷீர் சாச்சாவும் நல்ல நண்பர்களாகவும் இருக்கின்றனர். துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால், இந்தப் போட்டியைக் காண சுதிர் கவுதம் எப்போது வருகிறார் என்று அறிய அவரை பஷீர் சாச்சா விசாரித்துள்ளார்.

அப்போது தன்னால் துபாய்க்கு வர இயலாது, தன்னிடம் விமான டிக்கெட் எடுக்கவும், தங்குமிடத்துக்கும் பணம் இல்லை என்று சுதிர் கவுதம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு வருத்தப்பட்ட பஷீர் சாச்சா, சுதிர் கவுதமுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் துபாய்க்கான விசா எடுக்கும் செலவை மட்டும் பார்த்துக்கொள்ளுமாறும், துபாய் வந்து செல்லும் செலவு, தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு அனைத்தும் தான் கவனித்துக்கொள்வதாகவும் பஷீர் சாச்சா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுதிர் கவுதம் துபாய்க்கு விசா எடுத்துவிட்டதாகத் தெரிவித்தவுடன் தன்னுடைய செலவில் விமான டிக்கெட் எடுத்து அனுப்பி அவரை துபாய்க்கு வரவழைத்துள்ளார்.

இருவரும் துபாயில் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, நட்புணர்வால் கட்டித்தழுவி தங்கள் சகோதரத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர். 

என் இதயம் பெரியது..
இது குறித்து பஷீர் சாச்சா கூறுகையில், ''உண்மையில் இது அன்பின் அடிப்படையில் செய்த உதவி. வாழ்க்கையில் பணம் வரும் போகும், அல்லாஹ்வின் ஆசி முக்கியம். சுதிரிடம் விசா மட்டும் துபாய்க்கு எடுத்து விடு, மற்ற செலவுகளையெல்லாம் நான் பார்த்துவிடுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். நான் பணக்காரர் கிடையாது, ஆனால், என் இதயத்தை கடலைக் காட்டிலும் மிகப்பெரியதாக இறைவன் கொடுத்திருக்கிறான். நான் சுதிருக்கு உதவினால், அல்லாஹ் மகிழ்ச்சி அடைவான்'' எனத் தெரிவித்தார்.

துபாய் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் சுதிர் கவுதம் அளித்த பேட்டியில், ''நான் விசா எடுத்துவிட்டேன் என்று கூறியவுடன் எனக்கு சாச்சா டிக்கெட்டுகளை அனுப்பிவிட்டார். நானும் அவரும் வெவ்வேறு அணிகளுக்கான ரசிகர்களாக இருந்தாலும், சகோதரர்களாகவே இருக்கிறோம். எனக்குத்தேவையான அனைத்தையும் சாச்சா பார்த்துக்கொள்கிறார், என்னுடைய உணவு, ஹோட்டல் செலவு அனைத்தையும் சாச்சா பார்த்துக்கொள்வார்" எனத் தெரிவித்தார். 

https://www.kamadenu.in/news/sports/6265-pakistan-cricket-fan-helps-sachin-fan-1.html

Share this post


Link to post
Share on other sites

173 ஓட்டத்துடன் பதுங்கியது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 174

 

 
 

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்திய நான்கு விக்கெட்டுக்களின் துணையுடன் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 173 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தியது.

india1.jpg

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களமிறங்கி ஆடுமாறு மொஷ்ரபி மோர்டாசாவை பணித்தார்.

அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸ், ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களமிறங்கி ஆடிவர 4.3 ஆவது ஓவரில் பங்களாதேஷுக்கு இராகுகாலம் ஆரம்பித்தது.

அதன்படி 4.3 ஆவது ஓவரில் லிட்டான் தாஸ் ஏழு ஓட்டத்துடன் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் கேத்தர் யதவ்விடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அவருடன் இணைந்து களறிங்கிய ஹுசைன் ஷான்டோ 7 ஓட்டத்துடன் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.

india2.jpg

ஷகிப் அல் ஹசன், ஜடேஜாவின் முதல் ஓவரில் 2 நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டு 17 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 9 ஓட்டத்துடன் ஓரளவு நிதானமாக ஆடி வந்த ரஹிம் 21 ஓட்டத்துடனும் ஜடேஜாவின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆட்டமிழந்தனர்.

இதனால் பங்களாதேஷ் அணி 17 ஆவது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து  65 ஓட்டங்களை பெற்று தடுமாறி வந்தது.

இதையடுத்து மாமதுல்லாவும், மொசாடெக் ஹுசேனும் ஜோடி சேர்ந்து ஆடிவர பங்களாதேஷ் அணி 30 ஓவருக்கு 90 ஓட்டத்தை பெற்றது. மாமதுல்லா 17 ஓட்டத்தையும் ஹுசேன் 9 ஓட்டத்துடனும் நிதானமாக ஆடி வர 32 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து  மாமதுல்லா 25 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவருடன் இணைந்து ஆடி வந்த ஹுசேனும் 12 ஓட்டத்துடன் ஜடேஜாவின் சுழலில் சிக்கி தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

al_hasan.jpg

44.3 ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டத்தை பெற்று துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் மெய்டி ஹசானும் ஜோடி சேர்ந்து ஆடிவர 46.3 ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் மோர்டாசா 26 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் பும்ராவின் பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து 42 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40930

Share this post


Link to post
Share on other sites

அஸ்கர் தட்டிக்கொடுக்க, ஷஹதி தூக்கிக் கொடுத்தார் ; வெற்றியிலக்கு 258

 

 
 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டவது போட்டியில் ஷஹாதி மற்றும் அஸ்கர் காட்டிய அதிரடியினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ... ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

pak2.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஆஸ்கர் ஆப்கான் முதலில் களமிறங்க தீர்மானித்தார்.

அதன்படி மொஹமட் ஷஹ்சாதும், இஷ்சனுல்லா ஜனாத்தும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வர 8.6 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது தனது முதில் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதற்கிணங்க இஷ்சனுல்லா ஜனாத் 10 ஓட்டத்துடன் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹ்மத் ஷா களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

aff1.jpg

எனினும் 10.1 ஆவது ஓவரில் மொஹமட் நவாஸின் பந்து வீச்சில் மொஹமட் ஷஹ்சாத்தும் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷாத்துடன் ஜோடி சேர்ந்தாட ஷஹதி களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 13.5 ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷஹதி 19 ஓட்டத்துடனும் ரஹ்மத் ஷா 23 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 94 ஆக இருக்கும்போது மீண்டும் மொஹமட் நவாஸ் பந்து பறிமாற்றம் மேற்கொள்ள ரஹ்மத் ஷா 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களம் நுழைந்த அணியித் தலைவர் அஸ்கர் ஆப்கான் தான் எதிர்கொண்ட முதல் பந்திலே ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 26 ஆவது ஓவரில் 100 ஐ கடந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த 35 ஆவது ஓவரில் ஆப்கான் அணி 132 ஓட்டத்தை பெற்றது.

36 ஆவது ஓவருக்காக மொஹமட் நவாஸ் பந்து வீச அஸ்கர் ஆப்கான் அடுத்தடுத்து ஒரு 4 நான்கு ஓட்டத்தையும் ஒரு 6 ஓட்டத்தையும் பெற்று அதிரடி காட்ட 37.2 ஆவது ஓவரில் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டத்தை பெற்றது.

இதையடுத்து ஷஹதி 86 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுணையில் 45 பந்துகளை எதிர்கொண்ட அஸ்கர் ஆப்கன் 45 பந்துகளில் 8 ஆவது அரைசதத்தை விளாசினார். 

எனினும் மைதானத்தில் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த அஸ்கர் 56 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 67 ஓட்டத்துடன் ஷாஹீன் அப்ரீடியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இவரையடுத்து களமிறங்கிய மொஹமட் நபி 7 ஓட்டத்துடனும் நஜிபுல்லா ஸத்ரான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க‍ ஆப்கான் அணி 46.2 ஆவது ஓவருக்கு 6 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது.

ஷஹதி தொடர்ந்தும் மைதானத்தை அதிர விட இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டினை இழந்து 257 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 258 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஷஹதி 97 ஓட்டத்துடனும், நைய்ப் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

http://www.virakesari.lk/article/40931

 

Share this post


Link to post
Share on other sites

வங்கப் புலிகளை வெளுத்துக் கட்டிய வரிப்புலிகள் ; 7 விக்கெட்டினால் இந்தியா அசத்தல் வெற்றி

 

 
 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா காட்டிய வான வேடிக்கையின் காரணமாக இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் அசத்தலாக வெற்றயீட்டியது.

rohith1.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களமிறங்குமாறு பங்களாதேஷ் அணியை பணித்தது, இதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி 49.1 ஓவர்கள‍ை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் மெய்டி ஹசான் 42 ஓட்டத்தையும் மொஸ்ராபி மோர்டாசா 26 ஓட்டத்தையும் மாமதுல்லா 25 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

174 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி இந்திய அணி சார்பாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தாவன் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களுக்கு 61 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 16.2 ஓவருக்கு முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி தவான் 47 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்லாக  40 ஓட்டங்களுடன்  ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

dawan1.jpg

இதைத் தொடர்ந்து ராயுடு களமிறங்கி ரோஹித்துடன் கைகோர்த்தாட ரோஹித் சர்மா வழமைப் போன்று பந்துகளால் வான வேடிக்கை காட்டி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக  அதிகரித்தது.

44 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மா 22.3 ஆவது ஓவரில் 1 ஆறு ஒட்டத்தை தூக்கிப்போட இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன் ரோஹித் சர்மா தனது 36 ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

rohith2.jpg

அதற்கடுத்து அம்பத்தி ராயுடு 13 ஒட்டத்துடன் ரூபல் ஹுசேனின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆட்டமிந்து களம் விட்டு நீங்க தோனி களம் புகுந்தாடி வர இந்திய அணி 30 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டின இழந்து 142 ஓட்டங்களை பெற்றுது.

ரோஹித் சர்மா 74 ஒட்டத்துடனும் தோனி 14 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். 31.2 ஓவரில் தோனி 1 நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஆக மாறியது. எனினும் 35.3 ஆவது ஓவரில் தோனி 33 ஓட்டத்துடன் மோர்டாசாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஆடிவர இந்திய அணி 36.2 ஓவர்களில் பங்களாதேஷ் நிர்ணயித்த 174 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுக்களினால் வெற்றியை பதிவு செய்தது.

அதற்கிணங்க அணித் தலைவர் ரோஹித் சர்மா 5 நான்கு ஓட்டம் 3 ஆறு ஒட்டம் அடங்கலாக 83 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹுசேன் மற்றும் மோர்டாசா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். 

மேலும் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40937

Share this post


Link to post
Share on other sites

இறுதி ஓவரில் முடித்து வைத்தார் மலிக் ; 3 விக்கெட்டால் திரில் வெற்றி

 

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டாவது போட்டியின் இமாம், பாபர் அசாம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் மலிக்கின் அதிரடி ஆட்டத்தினாலும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியையீட்டியது.

babar.jpg

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்கள முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டின‍ை  இழந்து 257 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

ஆப்கான் அணி சார்பில் ஷஹதி 97 ஓட்டத்தையும் அஸ்கர் ஆப்கான் 67 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

ha3.jpg

258 என்ற வெற்றியிலக்க‍ை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி சார்பில் பகர் ஜமான், இமாம்-உல்-ஹக் முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்தனர்.

இதில் இமாம் எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே எதுவித ஓட்டமும் இன்றி டக்கவுட் முறையில் முஜீபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களை வேதனை அளித்தார். எனினும் இவரின் வெளியேற்றத்தை அடுத்து களம்புகுந்த பாபர் அசாம் ஜமாமுடன் ஜோடி சேர்ந்தாட ரசிகர்கள் மனதில் இருந்த வேதனை துடைத்தெறியப்பட்டது.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சுகளை மிகவும் துல்லியமாக எதிர்கொண்ட இவர்கள் நான்கு திசைகளிலும் பந்தை அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவடைந்தது.

fdfd.jpg

இவர்கள் இருவரதும் ஜோடி 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டவேளை அணியின் இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன்படி இமாம் அநாவசியமான முறையில் 80 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அவருக்கு தோள் கொடுத்தாடி வந்த பாபர் அசாமும் 35.1 ஓவரில் 66 ஓட்டத்துடன் ரஷித் கானுடைய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணி 158 ஓட்டத்துக்கு மூன்று விக்கெட்டினை இழந்தது. இதனையடடுத்து ஜோடி சேர்ந்தாடி வந்த ஹரிஸ் சோஹைல், மலிக் அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரான கதியில் கொண்டு வந்தனர். 

எனினும்  41.1 ஆவது ஓவரில் ஹரிஸ் சோஹைல் முஜிபுர் ரஹ்மானின் பந்தினை எதிர்கொண்டு 13 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 42.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க 44.6 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் 8 ஓட்டத்துடனும் இவரையடுத்து அஸீப் அலி 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

அதற்கிணங்க 47 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டத்தை பெற்றுக் கொள்ள, பாகிஸ்தான் அணி வெற்றி பெற 18 பந்துகளுக்கு 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. 

மலிக் அடித்தாட ஆரம்பிக்க அரங்கில் பாகிஸ்தான் ரசிகர்களின் குரல் ஓங்க அந்த குரலை ரஷித் கான் தனது சுழல் புயல் மூலம் மொஹமட் நவாஷை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்ய பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் சற்று நேரம் மெளனித்தது. எனினும் அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த ஹசன் அலி எதிர்கொண்ட முதல் பந்தையே 6 ஓட்டமாக மாற்றிக் காட்டினார்.

இறுதி ஓவருக்கு 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருக்க மலிக் 1 ஆறு ஓட்டத்தையும் 1 நான்கு ஓட்டத்தையும் விளாசி 49.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை பூர்த்தி செய்து போட்டியை முடித்து வைத்தார்.

pakffds.jpg

அதன்படி மலிக் 51 ஓட்டத்துடனும், ஹசன் அலி 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டடுக்களையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் நைய்ப் ஒரு விக்கெட்டினையு வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40941

Share this post


Link to post
Share on other sites

கனநாட்களாக இந்த விளையாட்டுப்பக்கம் வரமுடியாமல் போய் விட்டது, ஆயினும் தொடர்ந்து வாசிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது..... தொடருங்கள் நன்றி நவீனன் .....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this