Jump to content

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்


Recommended Posts

ஆசிய கிண்ணப்போட்டிகளில் மலிங்க

 

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்மாதம் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார்.

malinga.jpg

மலிங்க ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாட தயாராகயிருக்கவில்லை,இதன் காரணமாக நாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம் இதன் காரணமாக நாங்கள் மலிங்கவிற்கு ஓய்வளித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இடம்பெறுகின்ற உள்ளுர் போட்டிகளில் அவரது உடல்தகுதி நல்ல நிலையில் இருந்தால் நாங்கள் அவரை ஆசிய கிண்ண அணியில் இணைத்துக்கொள்வோம் எனவும் லபரோய் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39198

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

விராட் கோலிக்கு ஓய்வா?: 5 வீரர்களிடையே கடும் போட்டி; ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி நாளை அணி தேர்வு

 

 
rohit%20vira

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா : கோப்புப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளைத் தேர்வு செய்யப்பட உள்ளது.

தொடர்ச்சியான விளையாட்டு, அதிக வேலைப்பளு, அடுத்து வரும் தொடர்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

   
 

அதேசமயம் இந்திய அணியின் நடுவரிசையை பலப்படுத்தும் நோக்கில் புதிய வீரர்கள் சேர்க்கையும் இருக்கும். இதற்காக 5 வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பரமவைரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருப்பதால், அதற்கேற்றவாறு வலுவான அணியைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் முன்னுரிமை அளிப்பார்கள்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் நாளை மும்பையில் கூடுகின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களாக இந்திய அணியினர் இங்கிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகின்றனர். இதில் விளையாடும் மூத்த வீரர்களில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

கேப்டன் விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக திடீரென முதுகு வலியால் விராட் கோலி அவதிப்பட்டு, சிகிச்சைக்குப் பின் அணிக்குத் திரும்பினார். இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கு அடுத்ததாக மேற்கிந்திய்த்தீவுகள் இந்தியாவுக்கு வந்து 2 டெஸ்ட் போட்டிகளும், அடுத்தார்போல், இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

விராட் கோலிக்கு இந்த நேரத்தில் ஓய்வு அளிக்காவிட்டால், அடுத்தடுத்து ஓய்வு அளிப்பது கடும் சிரமம் என்பதால், ஆசியக் கோப்பையில் விராட் கோலியின் வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில், ஓய்வு அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பையும் கருத்தில் கொண்டு அதிக பளு இல்லாத வகையில் விராட் கோலி குறித்து முடிவு எடுக்கப்படும். அதேசமயம் அணியின் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் மாறலாம்.

அவ்வாறு விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது என தேர்வுக்குழுவினர் முடிவு செய்துவிட்டால், அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவண் இயல்பாகவே அணிக்குள் வந்துவிடுவார்கள் எனும் நிலையில், மற்றொரு தொடக்க வீரருக்காக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படலாம்.

இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் நடுவரிசைதான் மிகவும் சிக்கல் மிகுந்ததாக, சில நேரங்களில் பேட்டிங்கில் ஸ்திரத்தன்மை இல்லாததாக இருந்து வருகிறது. அதில் இந்த முறை கூடுதல் அக்கறை காட்டப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

inidan%20temajpg

மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், அம்பதி ராயுடு, குர்னல் பாண்டியா

 

நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும்.

இதில் மணிஷ் பாண்ட இந்திய பி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 4 போட்டிகளஇல் 300 ரன்களுக்கு மேல் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் அதிரடி பேட்டிங்கில் அனைவரையும் மிரளவைத்த அம்பதி ராயுடு, யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்ததன் காரணமாக இங்கிலாந்து தொடரில் தேர்வாகவில்லை. தற்போது யோயோ டெஸ்டில் தேர்வாகிவிட்டதால், அவரின் பெயர் பரிசீலிக்கப்படும்.

ஐபிஎல் போட்டி, இந்திய ஏ அணியில் இடம் பெற்ற மயங்க் அகர்வால் கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனிலும் ஆயிரம் ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராகவும், நடுவரிசையில் களமிறங்கவும் சரியான வீரர். ஒரேவேளை மயங்க் அகர்வால் சேர்க்கப்படாவிட்டால், மேற்கிந்தியத்தீவுகள் எதிரான டெஸ்டில் இடம் அளிக்கப்படலாம்.

பந்துவீச்சில் புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம்.

dhonijpg
 

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக முன்னாள் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், மாற்று கீப்பராக ரிஷாப் பந்த்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு இங்கிலாந்தில் மோசமாக இருப்பதால், ஆசியக் கோப்பையில் அவரின் பெயர் சேர்க்கப்படுவது உறுதியில்லாத நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.thehindu.com/sports/article24833943.ece

Link to comment
Share on other sites

கோலிக்கு ஓய்வு; ரோஹித் கேப்டன்: ராஜஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட் அணியில்

 

 
rohit%20sharma

கேப்டன் ரோஹித் சர்மா, ஆசியக் கோப்பை 2018, - ராய்ட்டர்ஸ்.

செப்டம்பர் 15 முதல் 28ம் தேதி வரை யுஏஇ-யில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவண் அணியின் துணைக் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

செப்டம்பர் 11ம் தேதி நடப்பு இங்கிலாந்து தொடர் முடிவுக்கு வருகிறது, அதிலிருந்து ஆசியக் கோப்பைக்கு 4 நாட்களே உள்ள நிலையில் ஆசிய கோப்பை முடிந்தவுடன் ஒரு வாரத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது, தொடர்ந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருப்பதால் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது முறையே. மேலும் மே.இ.தீவுகள் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி கடினமான ஆஸ்திரேலியா தொடருக்குச் செல்கிறது.

 

ஆனால் ஷிகர் தவண், ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கவில்லை.

khaleeljpg

புதுமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமெட். | படம்: ஜி.பி.சம்பத்குமார்.

 

இந்த அணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் லிஸ்ட் ஏ மற்றும் டி20-யில் இவர் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர். இவற்றில் 29 போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்து சென்ற இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்தார், சமீபத்தில் முடிந்த லிஸ்ட் ஏ நான்கு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடினார் கலீல் அகமட்.

நடுவரிசை வீரர்களான அம்பாத்தி ராயுடி, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கவில்லை, அதே போல் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோரும் இல்லை.

இந்திய அணி வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்). ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ராயுடு, பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், கலீல் அகமட், ஹர்திக் பாண்டியா, பும்ரா.

https://tamil.thehindu.com/sports/article24840411.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மலிங்க மீண்டும் இலங்கை அணியில்

 

 
 

 

இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை அணியில் மீண்டும்  இணைக்கப்பட்டுள்ளார்.malalinga.jpgகடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத லசித் மலிங்க தற்போது இலங்கை அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  இடம் பெறவுள்ள நிலையில் இலங்கை  குழாமில் இணைக்கப்பட்ட லசித் மலிங்க ஆசிய கிண்ண போட்டிகளில் வியைாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் லசித் மலிங்க 35 ஆவது  பிறந்த தினத்தை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39553

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

mali-3-696x464.jpg
 

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (1) அறிவித்துள்ளது.

ஒரு நாள் தொடராக இடம்பெறவுள்ள இந்த ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டிலேயே இலங்கை அணிக்காக சர்வதேச போட்டியொன்றில் விளையாடிய லசித் மாலிங்க பின்னர் முழங்கால் உபாதை மற்றும் போதிய உடற்தகுதியின்மை போன்ற காரணங்களினால், இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். எனினும், மாலிங்கவின் மீள் வருகையினால் ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

மாலிங்கவுடன் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியினை தாமதம் செய்த குற்றச்சாட்டில் ஆறு சர்வதேச போட்டிகளில் ஐ.சி.சி இனால் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட முன்வரிசை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலும் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கின்றார்.

சந்திமால் போன்று ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவும் இலங்கை அணிக்கு ஆசிய கிண்ணத் தொடர் மூலம் திரும்பியிருக்கின்றார்.

இவர்களோடு சுழல்பந்து சகலதுறை வீரர் தில்ருவான் பெரேரா, காயத்தில் இருந்து மீண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், அண்மைய தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, லஹிரு குமார (காயம்), லக்ஷான் சந்தகன் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை குழாமில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம் – அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க, திசர பெரேரா, தசுன் சானக்க, தனசஞய டி சில்வா, அகில தனஞ்சய, தில்ருவான் பெரேரா, அமில அபொன்சோ, கசுன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க.

மேலதிக வீரர்கள் – நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் மதுஷங்க, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், ஷெஹான் ஜயசூரிய

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண பாகிஸ்தான் குழாமில் புதிய அப்ரிடி

Pakistan-Asia-Cup-696x391.jpg
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி பாக். குழாத்தில் இணைக்கப்பட்டிருப்பதோடு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத்தும் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார். அனுபவ கிரிக்கெட் வீரர்களான யாஸிர் ஷாஹ் மற்றும் மொஹமட் ஹபீஸ் இக்குழாமில் இடம்பெறவில்லை. 

 

 

கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்ற எஞ்சிய வீரர்கள் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக் மற்றும் பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் பெற்ற ஒரே வீரரான பர்கர் சமான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கவுள்ளனர். இவர்களுடன் அனுபவ வீரர்களான சொஹைப் மலிக் மற்றும் சர்ப்ராஸ் அஹமது ஆகியோரும் அணியில் உள்ளனர்.  

வேகப்பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் முன்னின்று செயற்படவுள்ளதோடு ஹசன் அலி, உஸ்மான் கான் ஷின்வாரி, ஜுனைத் கான் மற்றும் அப்ரிடி ஆகியோர் அவருக்கு உதவியாக இருப்பர். பாஹிம் அஷ்ரப் சகலதுறை வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, ஷஹதாப் கான் சுழற்பந்து வீச்சாளராக செயற்படுவார்.

மத்திய வரிசையில் முக்கிய துடுப்பாட்ட வீரராக தம்மை நிலைநிறுத்திக் கொண்ட ஆசிப், ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் 41*, 22, 37* மற்றும் 17* ஓட்டங்களை பெற்றதோடு ஒருநாள் போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தை பெற்று தனது இடத்தை அணியில் தக்கவைத்துக் கொண்டார்.

Shan-Masood-1.jpg ஷான் மசூத்

மசூத், 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக தனது கன்னி போட்டியில் ஆடியது தொடக்கம் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். எனினும், A நிலை போட்டிகளில் தனது திறமையை நிரூபித்ததை அடுத்தே முதல்முறை பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 28 வயதான மசூத் கடைசியாக ஆடிய தனது 10 இன்னிங்ஸ்களிலும் மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரைச்சதங்களை பெற்றதே பாக். அணிக்கு அழைக்கப்பட முக்கிய காரணமாகும்.    

இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ICC உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அப்ரிடி, மேற்கிந்திய தீவுகளுடனான உள்நாட்டு டி-20 தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு தனது கன்னி ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் இஹ்சான் மானி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தியே மூத்த வீரர்களான ஹபீஸ் மற்றும் ஷாஹ்வை குழாத்தில் இருந்து நீக்கியுள்ளார். ஹபீஸுக்கு ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் ஏமாற்றம் தந்தது. அந்த தொடரில் அவர் இரண்டு டி-20 இன்னிங்ஸ்களிலும் ஏழு மற்றும் பூஜ்ய ஓட்டங்களையே பெற்றதோடு, ஷாஹ் இரு ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் 1/10 மற்றும் 0/31 என சோபிக்கத் தவறினார்.  

ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டித் தொடர் மூலம் தகுதியை பெறும் அணியுடன் வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி பாகிஸ்தான் தனது முதல் ஆசிய கிண்ண போட்டியில் ஆடவுள்ளது.        

பாகிஸ்தான் குழாம்

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), பர்கர் சமான், சொஹைப் மலிக், மொஹமட் ஆமிர், ஷதாப் கான், இமாமுல் ஹக், ஷான் மசூத், பாபர் அஸாம், ஆசிப் அலி, ஹரிஸ் சொஹைல், மொஹமட் நவாஸ், பாஹிம் அஷ்ரப், ஹசன் அலி, ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி, ஷஹீன் அப்ரிடி    

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்

dinesh-chandimal.jpeg?resize=595%2C427
எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் முடிவடைந்த உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரில் அவரது வலது கையின் நடு விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் தினேஷ் சந்திமால் பங்கேற்பாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அகில தனஞ்சய தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/94430/

Link to comment
Share on other sites

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: யுஏஇ அணியை வீழ்த்தி ஹாங்காங் அணி தகுதி

 

 
hong

கோப்புப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15-ம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடருக்கு தகுதிச் சுற்று மூலம் ஹாங்காங் அணி வாய்ப்புப் பெற்றுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த தகுதிச் சுற்று இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்த வாய்ப்பை ஹாங்காங் அணி பெற்றது.

 

ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இதில் 6-வது அணியாக தகுதிச்சுற்று மூலம் ஒரு அணி தேர்வு செய்யப்படும்.

அந்த வகையில் தகுதிச்சுற்றுக்கான இறுதிப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இன்றுநடந்தது. இதில் ஹாங்காங் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. மழை காரணமாக ஓவர்கள் 24 ஆகக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த ஐக்கிய அமீரக அணி 24 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அந்தஅணியில் அதிகபட்சமாக ஆஷப் அகமது 79 ரன்கள்சேர்த்தார். ஹாங்காங் அணித் தரப்பில் ஆஜஸ்தான் 5 விக்கெட்டுகளையும், நதீம் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 23.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகம் அணிதான் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாங்காங் அணி தகுதி பெற்று ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 16-ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ஹாங்காங்அணி. இந்திய அணியுடன் 18-ம் தேதி ஹாங்காங் மோதுவது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24882756.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

‘விராட் கோலி இல்லையா?: இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவேன்’: பாக் வீரர் ஹசன் அலி பேராசை

 

 
Hasan-Ali

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி : கோப்புப்படம்

ஆசியக் கோப்பையில் விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் நான் வீழ்த்துவேன் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வாஹா-அடாரி எல்லைக்குச் சென்ற ஹசன் அலி, கொடி இறக்கும் நிகழ்ச்சியின் போது, இந்திய ராணுவ வீரர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத சூழலில் கூட, எல்லையில் இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு ராணுவம் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்திய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி தொடர்நாயகன் விருதை ஹசன் அலி வென்றார். முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான். அப்போது, ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் கொடுத்தார் ஹசன் அலி.ஆனால் 2017, ஜூன் 18-ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த ஆட்டத்தில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்.

இந்நிலையில், லாகூரில் நிருபர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களைப் பொறுத்தவரை வரும் 19-ம் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, ஒட்டுமொத்த ஆசியப் போட்டித் தொடரிலும் கவனம் செலுத்துவோம். எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, எங்களுக்கு புதிய உத்வேகம், வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது.

இதே நம்பிக்கை, உத்வேகத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்கொள்வோம். இந்த அழுத்தம் என் மீது இருக்கும் போதுதான் நான் களத்தில் சிறப்பாகப் பந்துவீசி எனது அணியை வெற்றி பெற வைக்க முடியும்.

இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும் போது என்னுடைய விக்கெட் வீழ்த்தும் திறமையை 10 மடங்கு உயர்த்திக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்குத்தான் அதிகமாக விரும்புவார்கள், ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன். எங்கள் அணிக்கு வெற்றி தேடித் தருவேன்.

Hasan-Ali%201jpg
 

ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் வருவது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாகும். இதனால், இந்திய அணிதான் மிகுந்த நெருக்கடியில் சிக்கப்போகிறார்கள். விராட் கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொரு இளம் பந்துவீச்சாளரும் அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் அது சாதனையாகக் கருதுவார்கள். இந்த முறை அவரை நான் சந்திக்காவிட்டால் அடுத்த முறை அவரைச் சந்தித்து அவரின் விக்கெட்டை வீழ்த்துவேன்.

இவ்வாறு ஹசன் அலி தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பொதுவாக மிடில் ஓவர்களில் பந்துவீசுவதற்குத்தான் அழைக்கப்படுவார். கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் வீசக்கூடியவர் ஹசன் அலி என்றபோதிலும், தொடக்கத்திலேயே இந்திய விக்கெட்டுகள் சரிந்துவிட்டால் அவரால் எப்படி 10 விக்கெட்டுகள் வீழ்த்த முடியும். இல்லாவிட்டால், 20 ஓவர்களுக்கு மேல் பந்துவீசும் ஹசன் அலியால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒருநாள் தொடரிலேயே இதுவரை அதிகபட்சமாக ஒரு பந்துவீச்சாளர் 8 விக்கெட்டுகளை (சமிந்தா வாஸ்) வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24882462.ece

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணத்தொடரில் சிறியதவறையும் செய்ய முடியாது- மத்தியுஸ்

 

 
 

இலங்கை அணியிடம் எந்த  அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது அதற்கான வீரர்கள் உள்ளனர் என அணித்தலைவர் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் நாங்கள் ஒரு நாள் தொடர் எதனையும் வெல்லாத போதிலும் தென்னாபிரிக்காவுடனான ஓரு நாள் தொடரின் இறுதியில் நாங்கள் விளையாடிய விதம் எங்களிற்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ணத்தை நாங்கள் வெல்வோம் என்பதற்கான உத்தரவாதம் இல்லை ஆனால் நாங்கள் எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி விளையாடினால் துடுப்பாட்டம் பந்து வீச்சு களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பான செய்தால் எங்களால் வெல்ல முடியும்  அதற்கான வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் கடினமான தொடர்  என தெரிவித்துள்ள மத்தியுஸ் சிறிய தவறை கூட செய்யமுடியாது,அவ்வாறு தவறிழைத்தால் நீங்கள் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டியிருக்கும்  தவறுகளை குறைத்து வெற்றிபெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

mathews.jpg

நான் மலிங்கவிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றேன், அவர்  முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவார்,அவரிடம் திறமை உள்ளதன் காரணமாகவே அவரை அணியில் சேர்த்தோம் அவர் குறித்து எனக்கு முழு நம்பிக்கையுள்ளது என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40124

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண போட்டிகள் அனைத்துக்கும் ஒருநாள் அந்தஸ்து

ASIA-1-696x391.jpg Image courtesy - ESPN
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் முழுமையான ஒருநாள் போட்டி அந்தஸ்து வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

அத்துடன், பல அணிகள் ஒன்றிணைந்து மோதும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கும், எதிர்காலத்தில் சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் ஐசிசி பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஒருநாள் அந்தஸ்து இல்லாத அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து உள்ள அணிகள் மோதும் போட்டிகளுக்கு ஐசிசி சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்குவதை தவிர்த்திருந்தது.

இந்நிலையில், ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் வெற்றியீட்டியிருந்த ஹொங்கொங் அணி, இம்முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் குழாமில் இணைந்துள்ள ஹொங்கொங் அணிக்கு ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால், ஹொங்கொங் அணி ஆசிய கிண்ணத்தில் விளையாடும் போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் உட்பட சில அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் விளையாடியிருந்தன. இதனால், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகளுடனான போட்டிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் 2004, 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்துக்கு தெரிவாகியிருந்த ஹொங்கொங் அணிக்கு, தற்காலிகமான ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் இம்முறையும் ஹொங்கொங் அணிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், பல அணிகள் பங்கேற்கும் அனைத்து தொடர்களின், சகல போட்டிகளுக்கும் ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

 

 

இதன்படி எதிர்வரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இந்த முறையே பின்பற்றப்படும் எனவும் ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் குறி்ப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் ஒரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்தும், மற்றொரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படாமலும் போட்டிகள் நடைபெற்றன. இதனால், ரசிகர்கள் குழப்பங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான காரணம் விளையாடியிருந்த சில அணிகள் மாத்திரமே ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்தன. எனினும், தற்போது ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்களுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்தை வழங்க தீர்மானித்துள்ளோம். இதன்படி குறித்த தொடர்களில் விளையாடும் அணிகளுக்கு தற்காலிக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும்.

இதேவேளை, நாம் 104 உறுப்பு நாடுகள் உட்பட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்திவரும் நாடுகளுக்கு T-20 அந்தஸ்தை வழங்கியுள்ளோம். இதனிடையே ஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான தீர்மானம் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

ASIA-CUP-696x464.jpg
 

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி செய்யும் நோக்கோடு, ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் வாரியத்தின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அதன் 14 ஆவது அத்தியாயத்தை அடைந்திருக்கின்றது.

இந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் விழாக்கோலம் காணவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதுடன் இம்முறைக்கான தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் என ஆசியாவின் திறமை மிக்க கிரிக்கெட் அணிகள் தமக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

 

2016 ஆம் ஆண்டு கடைசியாக T20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்முறை ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் கடந்த காலத்தினை எடுத்துப் பார்க்கும் போது ஐந்து தடவைகள் இலங்கை அணியும், இந்திய அணியும் சம்பியன் பட்டத்தை வென்று தொடரில் வெற்றிகரமான அணிகளாக மாறியிருந்தன.

அந்தவகையில், கடந்த கால ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நினைவுகளை ஒரு தடவை மீட்டுவோம்.

1986 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 3

1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது அத்தியாயப் போட்டிகளே, இலங்கையின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றித் தொடராக அமைந்திருந்தது.

இந்த ஆசியக் கிண்ண தொடரை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்தியா புறக்கணித்ததுடன், இந்தியாவிற்கு பதிலாக 1984 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி தொடருக்குள் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை  பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய போதிலும் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷினை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆடும் தகுதியைப் பெற்றது.

தொடர்ந்து கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 192 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்த இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் கன்னி சம்பியன்களாக நாமம் சூடினர்.

 

இலங்கை அணியின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றிக்கு அர்ஜூன ரணதுங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி உதவியிருந்ததுடன், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெளசிக் அமலன் 4 விக்கெட்டுக்களை சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கி இருந்தார்.

1997 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 4

தமது கன்னி ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கை அணி அடுத்ததாக இடம்பெற்ற மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களின் (1988,1990/91,1995) இறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற போதிலும், மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவுடன் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியிருந்தனர்.

இப்படியான ஒரு நிலையில் 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இலங்கையில் மீண்டும் நடைபெற்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் புதிய கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக இலங்கை களம் கண்டிருந்தது.

இலங்கை அணி தொடரின் முதல் கட்ட போட்டிகள் எதிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.  மறுமுனையில் இந்திய அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரில், தொடர்ச்சியாக நான்காவது தடவை இலங்கையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள தயராகினர்.

கொழும்பு ஆர். பிரேதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு மாவன் அட்டபத்து (84) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இதனால், இந்தியாவின் வெற்றி இலக்கை இலங்கை 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்ததுடன், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.

2004 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 6

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின், எட்டாவது அத்தியாயப் போட்டிகளிலேயே இலங்கை மூன்றாவது சம்பியன் பட்டத்தை வென்றது.

 

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் ஆசியாவில் டெஸ்ட் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகள் முதல் தடவையாக பங்குபற்றியிருந்தன.

ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் அதனை அடுத்து இடம்பெற்ற “சுபர் 4” சுற்றின் அடிப்படையில் இலங்கை அணியும், இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, இந்தியாவுக்கு சவால் குறைந்த வெற்றி இலக்கான 229 ஓட்டங்களையே நிர்ணயம் செய்தது.

Asia-Cup-1.jpg @AFP

இந்த இலக்கை 50 ஓவர்களில் இந்தியா இலகுவாக அடைந்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உபுல் சந்தன, சனத் ஜயசூரிய ஆகியோரின் சுழல் பந்துவீச்சினை முகம் கொடுக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி 203 ஓட்டங்களையே குவித்து போட்டியில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய அணியை மூன்றாவது தடவையாக வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது சம்பியன்களாக நாமம் சூடினர்.

2008 – பாகிஸ்தான்

  • பங்குபற்றிய அணிகள் – 6

பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்  கிண்ணத்தின் ஒன்பதாவது அத்தியாயப் போட்டிகளிலேயே, இலங்கை தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது. இதேநேரம் வெளிநாடு ஒன்றில் இலங்கை அணி வென்ற முதல் ஆசியக் கிண்ணத் தொடராகவும் இது பதிவாகியது.

Ajantha-Mendis-3-189x300.jpg @AFP

இந்த ஆசியக் கிண்ணத் தொடரிலும், 2004 ஆம் ஆண்டு தொடரில் பங்குபற்றியிருந்த அதே ஆறு அணிகளே பலப்பரீட்சை நடாத்தின. தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளுக்கு அமைவாக இந்திய அணியும், இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கராச்சி தேசிய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, சனத் ஜயசூரியவின் அதிரடி சதத்தோடு சவால் மிக்க வெற்றி இலக்கான 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, விரேந்திர ஷேவாக்கின் அதிரடியோடு நல்ல ஆரம்பத்தை காட்டியிருந்த போதிலும் இலங்கை சார்பில் பந்துவீச வந்த அஜந்த மெண்டிஸ் இந்திய வீரர்களை தனது சுழல் மூலம் நிலைகுலையச் செய்தார்.

 

Asia-Cup-2-300x196.jpg @AFP

இதனால், இந்திய அணி 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மிகவும் மோசமான தோல்வியொன்றை பதிவு செய்தது. அஜந்த மென்டிஸ் வெறும் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் சிறந்ததொரு பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்தார்.

இந்த அதிரடி வெற்றியோடு இலங்கை அணி, நான்காவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

2014 – பங்களாதேஷ்

  • பங்குபற்றிய அணிகள் – 5

இலங்கை அணி சரிவுகளை சந்திக்க முன் அதனுடைய பொற்காலம் எனக் கருதப்படும், 2014 ஆம் ஆண்டிலேயே ஐந்தாவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

Thirimanna-224x300.jpgபங்களாதேஷில் இடம்பெற்ற இந்த 12 ஆவது அத்தியாய ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன.

தொடரின் முதல் கட்ட போட்டிகளின் அடிப்படையில் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இலங்கையின் சவாலை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள பாகிஸ்தான் அணி தயராகியிருந்தது.

சேர்-ஈ-பங்களா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, பவாட் அலாம் பெற்றுக் கொண்ட சதமொன்றுடன் (114*) 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை குவித்தது.

Asia-Cup-3-300x228.jpg @AFP

இதன் பின்னர், ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு, லஹிரு திரிமான்ன சதம் (101) கடந்து நம்பிக்கை அளித்தார். திரிமான்னவின் சதத்தின் உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 46.2 ஓவர்களில் அடைந்ததுடன், ஆசியக் கிண்ண தொடரின் சம்பியன்களாக ஐந்தாவது தடவையும் நாமம் சூடியது.

அத்தோடு இலங்கை இந்த ஆசியக் கிண்ண வெற்றியோடு ஒரு நாள் போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தை அதிக தடவைகள் (5) வென்ற இந்தியாவின் சாதனையையும் சமநிலை செய்தது.

 

இப்படியாக ஆசியக் கிண்ணத்தில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் இலங்கை அணி, இம்முறைக்கான தொடரில் என்ன செய்யப் போகின்றது என்பதை நாம் பார்க்க சில நாட்களை பொறுமையாக கடத்த வேண்டி உள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண குழாத்திலிருந்து வெளியேறும் தனுஷ்க குணதிலக

213800262ab39c7c2d5eb3bec1e48cbd-1-696x4
 

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக உபாதை காரணமாக மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனானாயக்க ThePapare.com இடம் தெரிவித்தார்.

நேற்று (12) டுபாயில், இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்க குணதிலகவின் முதுகுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது அவர் முழுமையான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார் எனவும் சரித் சேனானாயக்க  தெரிவித்தார். 

எனவே, செஹான் ஜயசூரிய இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கை அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்த தனுஷ்க குணதிலகவின் இழப்பு, இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் சபையினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவில்லை.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கிடையிலான SLC T-20 லீக் தொடரில் தனுஷ்க குணதிலக சிறப்பான சகலதுறை பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது அவர் 7 போட்டிகளில் 2 சதங்கள் உள்ளடங்கலாக 247 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவ்வாறு சிறந்த திட நம்பிக்கையுடன் இருந்த தனுஷ்க குணதிலக தற்போது துரதிஷ்டவசமாக மீண்டும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

 

அத்துடன், குழாத்தில் தனுஷ்க குணதிலகவின் இடத்தை பிடித்துள்ள செஹான் ஜயசூரியவும் SLC T-20 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த இவர், மீதமிருந்த மூன்று போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர், SLC T20 லீக்கில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் 139 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, சகலதுறை வீரரான இவருக்கு மீண்டும் தேர்வுக்குழு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆசிய கிண்ணத்துக்கான அணிக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த தினேஷ் சந்திமால் விரல் உபாதை காரணமாக வெளியேறியிருந்தார். இதனால் இவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்பட்டார். இதேநிலையில், அகில தனன்ஜயவும் தனிப்பட்ட காரணத்திற்காக ஆசிய கிண்ணத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தின் ஆரம்ப மோதல்களில் முக்கிய வீரர்கள் இன்றி களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ணம் நாளை ஆரம்பிக்கின்றது
 

image_6e9065d0a0.jpg

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கும் 14ஆவது ஆசியக் கிண்ணத் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இலங்கை நேரப்படி நாளை மாலை ஐந்து மணிக்கு மோதவுள்ள குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இதுவரை நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் ஆறு தடவைகள் சம்பியனாகி இந்தியாவே அதிக தடவைகள் சம்பியனான அணியாகக் காணப்படுகின்றது. இது தவிர, இறுதியாக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரிலும் இந்தியாவே சம்பியனாகியிருந்தது.

அந்தவகையில், தமது முதன்மை துடுப்பாட்ட வீரரான விராத் கோலிக்கு ஓய்வு வழங்கிவிட்டு இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கே கிண்ணத்தை தக்க வைக்கும் அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகளானவை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகக் காணப்படுகின்ற நிலையில், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் இந்தியாவுக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1984ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக் கிண்ணமானது, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுகையில், 2015ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஆசியக் கிண்ணங்களானதை அதைத் தொடர்ந்து வருகின்ற உலகத் தொடர்களைப் பொறுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாகவும் மாறி மாறி இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், 2016ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20 நடைபெற்றமையால், இறுதியாக நடைபெற்ற அவ்வாண்டு ஆசியக் கிண்ணம் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாக இடம்பெற்ற நிலையில், அடுத்தாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாண்டுப் போட்டிகள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாக இடம்பெறுகின்றன.

இவ்வாண்டு ஆசியக் கிண்ணத்தில், ஆசிய கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவ நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நேரடியாகத் தொடருக்குத் தகுதிபெற்றிருந்தன.

ஹொங் கொங், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், நேபாளம், மலேஷியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் தகுதிகாண் தொடரில் விளையாடி அதில் சம்பியனானனதன் மூலமே ஆசியக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்தது.

இவ்வாண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 10ஆம் இடத்தையே பெற்று ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை ஹொங் கொங் இழந்தபோதும் பல அணிகள் பங்கேற்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களின் அனைத்துப் போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தபடி, இவ்வாண்டு ஆசியக் கிண்ணத்தில் ஹொங் கொங் விளையாடும் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை பெறுகின்றன.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஆசியக்-கிண்ணம்-நாளை-ஆரம்பிக்கின்றது/44-221763

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணத்திற்காக முட்டிமோதவுள்ள 6 ஆசிய அணிகள் : மோதல் நாளை ஆரம்பம்

 

 
 

உலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய கிண்ணத்  தொடர் நாளை 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம்  திகதி வரை இடம்பெறவுள்ளது.

ASIA2.jpg

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்த‍ை பொருத்தவரையில் இதுவரை இரண்டு ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்தியுள்ளது. அதன்படி முதலாவது ஆசிய கிண்ணத் தொடரை 1984 ஆம் ஆண்டிலும் ஐந்தாவது ஆசியக் கிண்ணத் தொடரை 1985 ஆம் ஆண்டிலும் நடத்தியிருந்தது.

அத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியை நடத்துவதன் மூலம் மொத்தமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களை நடத்திய பெருமையை பதிவு செய்யும்.

ASIA1.jpg

அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஆரம்பமாகும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 13 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

14 ஆவது தடவையாக நாளை ஆரம்பாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை, மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ், அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தானும் மற்றும்  ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அங்கத்துவ நாடான அனுஸ்மன் ராத் தல‍ைமையிலான ஹொங்கொங் அணியுமாக மொத்தம் 6 அணிகள் பங்கு கொள்கின்றன. 

ASIA3.jpg

இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் குழு 'A' யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு 'B' யிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாளை  15 ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான 'சுப்பர் -4' சுற்றுக்கு முன்னேறும். 

செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 'சுப்பர் -4' சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இதுவரை நடந்து முடிந்த ஆசியக் கிண்ணத் தொடர் வரலாற்றில் இந்திய அணி ஆறு தடவைகளும் (1984,1988, 1990-91, 1995, 2010, 2016 ) இலங்கை அணி ஐந்து தடவைகளும் (1986, 1997, 2004, 2008, 2014) பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் (2000, 2012) தொடரை வெற்றிகொண்டு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. 

ஒருநாள் தொடராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் இலங்கை அணியை பொருத்தவரையில், நீண்ட நட்களுக்குப் பிறகு அனுபவம் நிறைந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இணைக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப் பெரிய பலமாகவுள்ளது. 

இந்நிலையில் ஆசிய கிண்ணக் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என தெரிவித்த பாகிஸ்தான் அணியின் தலவைர் சப்ராஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளமானது ஸ்லோ பீட்ச் ஆக இருப்பதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

இம்முறை போட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும், இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40440

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்?

Untitled-1-7-696x464.png
 

கிரிக்கெட் இரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளாக்கியிருக்கும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது அத்தியாயம் நாளை (15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின்றது. 

 

இம்முறைக்கான தொடரில் ஆசியாவில்பலம் வாய்ந்த ஆறு அணிகள் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு  மோதல்கள்  இடம்பெறவுள்ளதோடு  தொடரின்  முதல்  போட்டியில்  குழு B  இல்காணப்படும்  இலங்கை அணி,  பங்களாதேஷுடன் பலப்பரீட்சை  நடாத்துகின்றது. நாளை நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியின் முன்னோட்டமே இது.
 

போட்டியின் விபரம்

இலங்கை எதிர் பங்களாதேஷ் (குழு B)

இடம்துபாய் சர்வதேச மைதானம், துபாய்

திகதி, நேரம்செப்டம்பர் 15 (சனிக்கிழமை), மாலை 5 மணி (இலங்கை நேரப்படி)  

  • இரு அணிகளதும் கடந்தகாலம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் புதிய அத்தியாயம் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெறுவதால், இலங்கைபங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கடந்த கால ஒரு நாள் பதிவுகளை முதலில் நோக்குவோம்.  

இரண்டு அணிகளும் இதுவரையில் 44 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளதோடு, அவற்றில் 6 போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்க இலங்கை அணி 36 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றது. இந்த பதிவுகள் கடந்த காலத்தில் இரண்டு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் ஆதிக்கம் உச்ச அளவில் இருந்தது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

 

இதேநேரம் ஆசியக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றை எடுத்து நோக்கும் போது, இலங்கை அணியினர் கடைசியாக ஒரு நாள் போட்டிகளாக 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக நாமம் சூடியிருந்தனர். இதேவேளை, ஐந்து தடவைகள் ஆசியக் கிண்ணத்தை வென்றிருக்கும் இலங்கை ஒரு நாள் போட்டிகளாக இதுவரையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றிகளை (34) பதிவு செய்த ஆசிய அணியாகவும் இருக்கின்றது.

இதேவேளை ஆசியக் கிண்ணத்தை இதுவரையில் ஒரு தடவையேனும் வெல்லாத பங்களாதேஷ் அணி 2012 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடராக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதே அவர்களின் சிறந்த பதிவாக உள்ளது. அதோடு ஒரு நாள் தொடராக  இதுவரையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணியினர் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றியினை பதிவு செய்துள்ளனர்.

  • இரு அணிகளதும் நிகழ்காலம்

2017 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான தோல்விகளால் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்த இலங்கை அணி, தற்போது அதிலிருந்து வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வருகின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணியினர், அண்மையில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரை 3-2 என பறிகொடுத்த போதிலும் அத்தொடரில் பல நேர்மறையான (Positive) விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் தமது வழமையான ஆட்டத்திற்கு திரும்பி வரும் இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ணத் தொடர் பெரிய சவால்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கத்துக்குட்டி என்ற அந்தஸ்தில் இருந்து விடுபட்டு இன்று திருப்புமுனையான ஆட்டங்கள் மூலம் போட்டிகளில் வெற்றிபெறும் பங்களாதேஷ் அணிக்கு, இந்த ஆண்டு அவ்வளவு பிரகாசமாக அமையாது போயிருப்பினும் அவர்கள் தாம் இறுதியாக பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு நாள் தொடரினை 2-1 என கைப்பற்றி மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இலங்கை அணி போன்று பங்களாதேஷ் அணியும் இங்கிலாந்தை சேர்ந்த புதிய பயிற்சியாளர்  ஸ்டீவ் ரோட்ஸின் ஆளுகையின் கீழ் பங்குபற்றும் பெரிய தொடராக ஆசியக் கிண்ணப் போட்டிகள் அமைகின்றன.

 

எனவே, புதிய பயிற்சியாளர் ஒருவரின் கீழ் பல்வேறு புதிய வியூகங்களை பரீட்சித்து  பார்க்க நினைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

  • அச்சுறுத்தும் காயங்கள்

இப்போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளையும் பாதிக்கும் முக்கிய காரணியாக வீரர்களின் உபாதை உள்ளது.

இலங்கை அணி, ஆசியக் கிண்ணத் தொடருக்காக  ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாக முன்னர் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தினேஷ் சந்திமால் விரல் உபாதை ஒன்றினால் அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக நிரோஷன் திக்வெல்ல இணைத்துக்  கொள்ளப்பட்டிருந்தார்.

இதேநேரம், நேற்று (13) முதுகு உபாதை ஒன்றின் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் பயணித்திருந்த இலங்கை அணியில் இருந்து தனுஷ்க குணத்திலக்கவும் விலக, அவருக்கு பதிலாக ஷெஹான் ஜயசூரிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். இப்படி உபாதைகள் காரணமாக அண்மைய நாட்களில் திறமையினை வெளிப்படுத்திய இரண்டு முக்கிய வீரர்களை இலங்கை இழப்பது பின்னடைவான ஒரு விடயமாகும்.

பங்களாதேஷ் அணியினை எடுத்து நோக்கினால் அவ்வணியின் நட்சத்திர வீரர்களான சகீப் அல் ஹசன், தமிம் இக்பால் மற்றும் சுழல்பந்து வீச்சாளர் நஷ்முல் ஹொஸ்ஸைன் ஆகியோரும் தமது விரல்களில் ஏற்பட்ட  உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மூவரும்  இலங்கையுடனான போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது. எனினும், வீரர்களின் உபாதைகள் தமது அணியின் செயற்திறனை குறைத்து விடாது என பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலேத் மஹ்முட் தெரிவித்திருந்தார்.

  • இரு அணிகளதும் வீரர்கள்

வீரர்கள் காயம் ஒரு பக்கம் இருந்த போதிலும் இரண்டு அணிகளும் திறமையான வீரர்களினால் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் தமிம் இக்பால், சகீப் அல் ஹஸன், மஹ்மதுல்லாஹ், முஸ்பிகுர் ரஹீம் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றோர் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்காக போராடக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

 

இலங்கை அணி காயம் காரணமாக அனுபவமிக்க தினேஷ் சந்திமாலை இழந்த போதிலும் திசர பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சுரங்க லக்மால் மற்றும் லசித் மாலிங்க போன்றோரினை தமக்காக வைத்திருப்பது மிகப் பெரிய அனுகூலமாகும்.

  • எதிர்பார்ப்பு வீரர்கள்

தமிம் இக்பால் (பங்களாதேஷ்? பங்களாதேஷ் அணியின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒருவராக உள்ளார். பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்ற தமிம் இக்பாலின் துடுப்பாட்டம் பிரதான காரணியாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட தொடரில் தமிம் இரண்டு சதங்களை (130* & 103) விளாசியிருந்ததோடு அவர் சதம் விளாசிய அந்த இரண்டு போட்டிகளிலும் வென்றே பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரினை கைப்பற்றியது.

Tamim-4.jpgதமிமின் அனுபவமும் திறமையும் கைகொடுக்கும் எனில், இலங்கை அணியுடனான போட்டியினை பங்களாதேஷ் இலகுவாக வென்று விட முடியும். ஆனால், இவை அனைத்தையும் செய்ய விரல் உபாதையை எதிர் நோக்கியிருக்கும் தமிம் இக்பால் பூரண உடற்தகுதியினை நிரூபித்து நாளைய போட்டியில் ஆட வேண்டும்.

லசித் மாலிங்க (இலங்கை? நாளைய பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் மாலிங்கவுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு இரசிகரும் இரசிக்கும் வீரராக அவர் இருப்பார். இலங்கை அணிக்காக நீண்ட காலமாக விளையாடாது போயிருந்த அவருக்கு திறமையினை நிரூபித்து அடுத்த உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பினை இந்த ஆசியக் கிண்ணத் தொடர் ஏற்படுத்தி தந்திருக்கின்றது.

Malinga-7.jpg

 

மெதுவாக வீசப்படும் யோக்கர் பந்துகள் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்யும் மாலிங்க மீது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

  • மைதான நிலைமைகள்

துபாய் மைதானத்தில் நாளை போட்டி நடைபெறும் நேரம் மிகவும் உஷ்ணமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதோடு போட்டியில் இரண்டு அணிகளினாலும் அதிக ஓட்டங்கள் குவிக்க முடியும் எனவும், பந்துவீச்சு சுழல் வீரர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அணிக் குழாங்கள்

பங்களாதேஷ்

மஷ்ரபி மொர்தசா (அணித் தலைவர்), சகீப் அல் ஹஸன், லிடன் தாஸ், அரிபூல் ஹக், மொமினுல் ஹக், அபு ஹைடர், ருபெல் ஹசன், தமிம் இக்பால், நஷ்முல் இஸ்லாம், மஹ்மதுல்லாஹ், மெஹிதி ஹஸன் மிராஸ், மொஹம்மட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான், மொசாதிக் ஹொசைன், நஷ்முல் ஹொசைன்

இலங்கை

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அமில அபொன்சோ, துஷ்மந்த சமீர, அகில தனன்ஞய, நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், தில்ருவான் பெரேரா, குசல் பெரேரா, திசர பெரேரா, கசுன் ராஜித, தசுன் சானக்க, தனன்ஞய டி சில்வா, உபுல் தரங்க

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

அகில விளையாடுவது உறுதியானது

 

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஆசிய கிண்ணப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

akila_dhanajeya.jpg

கர்ப்பவதியாக இருந்த தனஞ்சயவின் மனைவிக்கு நேற்று குழந்தை பிறந்ததையடுத்தே அகில தனஞ்சய ஆசிய கிண்ணப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியில் பங்குபற்றுவதற்காக அகில நாளை துபாய் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40484

25.png&h=42&w=42

2/2 * (1.4/50 ov)
Link to comment
Share on other sites

48வது பந்தில் முதல் பவுண்டரி, முதல் ஓவரில் மலிங்கா 2 விக்கெட், தமிம் காயம்: ஆசியக் கோப்பைப் போட்டி ‘பரபர’தொடக்கம்

 

 
malinga

ஷாகிபை பவுல்டு ஆக்கிய மலிங்கா. | ஏ.எப்.பி.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் பிரிவு பி-யின் இலங்கை-வங்கதேசத்துக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து மோசமான தொடக்கம் கண்டது.

மலிங்கா சில காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளைப்பந்தில் முதல் ஓவரைத் தொடங்கினார். தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இறங்கினர்.

 

இதில் 5வது பந்தில் லிட்டன் தாஸ், அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி மெண்டிஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். அடுத்த பந்தே ஷாகிப் அல் ஹசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஃப் ஸ்டம்பில் ஃபுல் லெந்தாக வந்த பந்து உள்ளே ஸ்விங் ஆனது லேட் ஸ்விங், மிட் ஆனில் ஆடப்பார்த்தார் ஷாகிப், பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஆஃப் ஸ்டம்பைத் தரைத்தட்டச் செய்தது. இவரும் டக் அவுட்.

மலிங்கா கலக்கிவிட்டார் வங்கதேசத்தை. 2வது ஓவரை சுரங்க லக்மல் வீச 2 ரன்களில் இருந்த தமிம் இக்பால் லெக் ஸ்டம்பில் விழுந்து எழும்பிய எகிறு பந்தில் இடது மணிக்கட்டில் அடிபட்டு தொடர்ந்து ஆட முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த ஓவரில் மலிங்காவின் ஹாட்ரிக் வாய்ப்பை முஷ்பிகுர் தடுத்தார், முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மலிங்கா, தன் 2வது ஓவரை மெய்டனாக்க, வங்கதேசம் திணறித் திணறி கடைசியில் 8வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் பவுண்டரியுடன் தன் முதல் பவுண்டரி கணக்கைத் தொடங்கியது.

தற்போது மொகமது மிதுன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்களுடனும் முஷ்பிகுர் 23 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இருவருக்கும் கேட்ச்கள் நழுவ விடப்பட்டன. 15 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 67/2. மலிங்கா 4-1-8-2.

https://tamil.thehindu.com/sports/article24955625.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

25.png&h=42&w=42

101/2 * (19.4/50 ov)
 
Link to comment
Share on other sites

மலிங்க அடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் ரஹிம் ; வெற்றியிலக்கு 262

 

 
 

இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், நீண்ட நாட்களுக்கு பின்னர் களம்புகுந்த மலிங்க அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், ரஹிமின் துணையுடன் பங்களாதேஷ் 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்காக 262 ஓட்டங்களை நிர்ணயித்ததுள்ளது.

cri.jpg

டுபாய் சர்தேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் பங்காளாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோருக்கு, ஓய்விலிருந்து திரும்பி வந்த மலிங்கவின் பந்துக்கு முகங்கொடுக் முடியாது போனது.

அதன்படி மலிங்கவின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் லிட்டான் தாஸ் எதுவித ஓட்டத்தையும் பெறது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தமிம் இக்பாலும் சுரங்க லக்மாலுடன் எதிர்பாராத விதமாக மோதுண்டு உபாதைக்குள்ளானதில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டு வெளியேற அடுத்து வந்த ஷகிப் அல் ஹசனும் பசித்திருந்த சிங்கத்தின் (மலிங்கவின் ) வேட்டையில் சிக்கினார்.

malinga.jpg

அதன்படி ஷகிப் அல் ஹசன் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டமுமின்றி  கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடத்து ஜோடி சேர்ந்த ரஹிம் மற்றும் மொஹமட் மிதுன் இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை நிதானமாக எதிர்கொண்டு அணியின் ஓட்டத்தை அதிகரிக்க ஆரம்பித்தனர். 

ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 25.3 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து வலுவான நிலையில் 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இருப்பினும் ஐந்து நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஆட்டங்களை பெற்று அரை சதத்தை கடந்து 63 ஓட்டங்களுடன் ஆடி வந்த மிதுன் மலிங்கவின் வேட்டையில் சிக்கி குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மஹ்மதுல்லாவும் ஒரு ஓட்டத்துடன் அபோன்சோவுடைய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஹுசேனும் மலிங்கவினுடைய பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களம்புகுந்த மெஹீடி ஹசன் 21 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களுடன் லக்மலிலன் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார்.

அதையடுத்து களம்புகுந்தார் அணித் தலைவர் மொஸ்ரபி மோர்டாசா, பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கை தனஞ்சய டிசில்வாவின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆடிய மொஸ்ரபி மோர்டாசாவும் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஹசேனும் 2 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இலங்கை  அணியின் பந்துக்களுக்கு தாக்குப் பிடித்து ஆடிவந்த ரஹிம் 97 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 43.3 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச சதத்தை பூர்த்தி செய்தார். அதன்படி அவர் 123 பந்துகளுக்கு ஏழு நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 101 ஓட்டங்களை பெற்று துடுப்பாடி வந்தார்.  

அடுத்த படியாக பங்களாதேஷ் அணி 46.5 ஓவர்களுக்கு 229 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரஹுமானும் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு வெளியேறிய தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கி ஒரு கையை மாத்திரம் பயன்படுத்தி துடுப்பெடுத்தாடி வந்தார். 

இதையடுத்து இறுதி தருணங்களில் அதிரடியை காட்ட ஆரம்பித்த ரஹிம் 48 ஆவது ஓவரில் மாத்திரம் 15 ஓட்டங்களை விளாசினார், தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த அவர் 150 பந்துகளை எதிர்கொண்டு 144 ஓட்டங்களை பெற்று திஸர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 262 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 10 ஓவர்களுக்கு 23 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 7 ஓவர்களுக்க 38 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் அபோன்சோ, திஸர பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

http://www.virakesari.lk/article/40489

Link to comment
Share on other sites

அடுத்தடுத்த ஆட்டமிழப்பால் அடி பணிந்தது இலங்கை ; 137 ஓட்டத்தினால் பங்களாதேஷ் வெற்றி

 

 
 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது சொற்ப நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்து 137 ஒட்டங்களினால் படுதோல்வியைத் தழுவியது.

bang2.jpg

டுபாயில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் பங்களாதேஷ் அணி ரஹிமின் துணையுடன் 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் சார்பாக அதிரடியாக ஆடி வந்த ரஹிம் 150 பந்துகளுக்க 11 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 144 ஓட்டங்களை எடுத்தார்.

262 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக உபுல் தரங்க  மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்தில் உபுல் தரங் அதிரடியாக துடுப்பெடுத்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இருப்பினும் குசல் மெண்டீஸ் 1.6 ஆவது ஓவரில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டத்தையும் பெறாது கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மந்தகதியானது. 

tharanga.jpg

குசல் மெண்டீஸையடுத்து உபுல் தரங்கவும் மோர்டசாவினுடைய பந்து வீச்சில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது.

அதன்படி தனஞ்சய டிசில்வா டக்கவுட் முறையிலும் குசல் பெரேரா 11 ஓட்டங்களுடனும் தசூன் சானக்க 7 ஓட்டத்துடனும், அணித் தலைவர் மெத்தியூஸ் 16 ஓட்டங்களுடனும் திஸர பெரோ 6 ஓட்டத்துடனும ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 18.5 ஓவர்களுக்கு ஏழு விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

அதையடுத்து சுரங்க லக்மாலும் தில்றூவான் பெரேராவும் சற்று நிதானமாக ஆட நினைத்தாலும் முஸ்தபிஸுர் அவர்களை விட்டு வைக்கவில்லை. அதன்படி இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை, முஸ்தபிஸுரின் பந்து வீச்சில் சுரங்க லக்மால் 20 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அபோன்சோவுடன் இணைந்து தில்றூவான் பெரேரா ஆடி வர இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. அனையடுத்து 34.1 ஓவர்களுக்கு அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது தில்றூவான பெரேரா 29 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து அபோன்சோவும் ஆட்டமிழக்க இலங்கை அணி 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

ban1.jpg

இதனால் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது

http://www.virakesari.lk/article/40490

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இன்று முக்கிய போட்டி

 

DnLwnazW4AEUv9u.jpg

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் முக்கிய போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.

அந்தவகையில் டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஹொங் கொங் அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதவுள்ளன.

கடந்த 7 ஆம் மாதம் இடம்பெற்ற போட்டிக்கு பின்னர், நீண்ட இடைவேளைக்கு பின் பாகிஸ்தான் அணி களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஆசிய தகுதிகான் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட ஹொங் கொங் அணி, பாகிஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/ஆசிய-கிண்ண-கிரிக்கெட்-இன/

Link to comment
Share on other sites

ஒற்றைக் கையால் பாராட்டுக்களை அள்ளிய தமிம்

 

 

இலங்கைக்கு எதிரான முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இறுதி நேரத்தில் மீண்டும் களமிறங்கிய தமிம் இக்பால் ஒரு கையை மாத்திரம் பயன்படுத்தி துடுப்பெடுத்தாடியமையினால் அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

tamim.jpg

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாயில் ஆரம்பானது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.

இப் போட்டியின் போது நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி தமிம் இக்பால் லிட்டான் தாஸ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களாக களமிறங்கினர்.

இதன்போது சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் இரண்டு ஓடத்துடன் ஆட்டத்தை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு வெளியேறினார்.

இதையடுத்து போட்டியின் இறுதித் தருணங்களில் பங்களாதேஷ் அணியின் 9 ஆவது விக்கெட்டும் வீழ்த்தப்பட உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்ட தமிம் இக்பால் மீண்டும் களம்புகுந்து ரஹிமுடன் இணைந்து ஒரு கையால் மாத்திரம் பந்துகளை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடினார்.

ban3.jpg

இவரது பங்களிப்பு ரஹிமுக்கு இறுதித் தருணங்களில் மேலும் வலு சேர்த்தது. 

இந் நிலையில் நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மத்திரம் துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர். 

 

 

அத்துடன் வைத்தியர்கள் இவரை குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமையினால் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இழந்து இவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/40504

 

 

 

 

‘முறிந்த கை, துணிச்சலான இதயம்’ - ஒரு கையால் பேட் செய்த தமிமை பாராட்டிய கேப்டன் மோர்தசா

Tamim-Iqbal

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு கையால் பேட் செய்த வங்கதேச வீரர் தமிம் இக்பால்   -  படம் உதவி: ட்விட்டர்

இலங்கை அணிக்கு எதிரான ஆசியக்கோப்பைப் போட்டியில், கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும், அணிக்காகக் களமிறங்கி ஒரு கையால் பேட் செய்த வங்கதேச வீரர் தமிம் இக்பாலுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் வங்கதேச அணி வீரர் தமிம் இக்பால் பேட் செய்த போது பந்து கையில் பட்டு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து அவரால் பேட் செய்ய இயலவில்லை.

   
 
 

இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவர் களத்தில்இருந்து வெளியேறினார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் அவரின் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு கட்டுபோடப்பட்டது.

ஆனால், அணியின் ஸ்கோரைப் பார்த்த தமிம் இக்பால் 9-வது விக்கெட்டுக்க காயத்தையும் பொருட்படுத்தாமல், முஷ்பிகுர் ரஹிமிக்கு துணையாகக் களமிறங்கினார். தனது கையில் போடப்பட்டிருந்த கட்டை கழற்றிவிட்டு, ஒரு கையால் பேட் செய்து அனைவரையும் அசத்தினால், கடைசி நேரத்தில் தமிம் களமிறங்கி முஷ்பிகுருக்கு உதவியாக பேட்செய்ததால், கூடுதலாக 31 ரன்கள் வங்கதேசம் அணிக்குக் கிடைத்தது.

tamimiqjpg
 

இது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை நாங்கள் இழந்துவிட்டதால், அதிகமான நெருக்கடிக்கு ஆளாகினோம். இதில் தமிம் காயம் காரணமாக பேட் செய்யவில்லை. அதன்பின் ரஹிம், மிதுன் பேட்டிங் அணிக்கு பக்கபலமாகஅமைந்தது. கடைசி நேரத்தில் காயத்தையும் பொருட்படுத்தாமல், தமிம் களமிறங்கி ஒரு கையால் பேட் செய்தது துணிச்சலைக் காட்டுகிறது. உடைந்த கையாக இருந்தாலும், உடையாத துணிச்சல் இதயத்தோடு களமிறங்கினார். யாரும் தமிமை பேட்டிங் செய்யக்கூறவில்லை, ஆனால், அணிக்காக அவர் அர்ப்பணிப்புடன் களமிறங்கினார்.

tamimjpg
 

முஷ்பிகுரின் பேட்டிங் இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக இருந்தது, அவரின் சதத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. போட்டியின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தது உத்வேகம் அளிப்பதாக இருந்தது. ஆசியக் கோப்பையை நல்ல முறையில் தொடங்கி உள்ளோம். மிர்பூர் நகரில் உள்ள அரங்கைக்காட்டிலும் இங்கு அரங்கு பெரிதாக இருக்கிறது, ரசிகர்களும் நிறைந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தமிம் இக்பால் விரைவில் வங்கதேசம் செல்ல உள்ளார். அவருக்கு பதிலாக அணியில் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான செப்டம்பர் 20-ம் தேதி போட்டியில் ஷான்டோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில்இருக்கும் ஷான்டோ முழுயாக அணிக்கு திரும்பாவாரா என்பதுசந்தேகமே.

இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸும் வங்கதேச வீரர் தமிமை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், மலிங்கா சிறப்பாகப் பந்து வீசினார், தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதன்பின் பந்துவீச்சில் மந்தம் காணப்பட்டது. 262 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். இந்த போட்டியில் செய்த தவற்றில் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டோம். அடுத்து வரும்போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

வங்கதேச வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள், பேட்டிங்கும் செய்தனர். தமிம் இக்பால் காயத்தை பொருட்படுத்தாமல் கடைசிநேரத்தில் பேட் செய்தது சிறப்பு எனத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24960689.ece?utm_source=HP&utm_medium=hp-latest

 

 

Link to comment
Share on other sites

ஆரம்பமாகிறது தொடரின் இரண்டாவது போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது ஹொங்கொங்

 

இன்று இடம்பெறவுள்ள 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் அணிகள் மோதுகின்றன.

asia4.jpg

அதன்படி இப் போட்டியில் நாணய  சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கோங் அணியின் தலைவர் அனுஸ்மன் ராத் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் நேற்று இலங்கை இப்படி தோத்து இருக்கக் கூடாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.