Jump to content

சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம்.

Recommended Posts

தமிழக வேட்பாளர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை ...

அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன் ஆற்றை தூர்வாரிய சீமான் கட்சியினர் கைது .. போலிஸாரிற்கு நீதிபதி கண்டனம்.. இப்படியான செயற்பாடுகள் மூலம்..மக்களை அடையக்கூடிய இன்னும் பல செயல்களை செய்யலாம் ..

வந்தேறி அது இது என வெறுப்பரசியலை வளர்ப்பதை விட்டு.. நான் சொல்வதெல்லாம் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு அவரை மிகையாக ட்ரோல் பண்ணி அவரின் விம்பத்தை மக்கள் மத்தியில் சிதைத்தது தான் முக்கிய காரணம்.. அந்த வழியில் தான் சீமானினையும் கொண்டு செல்கிறார்கள்.. கட்சியின் குறிக்கோள் தி.மு.க வை எதிர்ப்பதா ஆட்சியமைப்பதா.. ? ஆட்சியமைப்பது தான் எனில் அது தொடர்பான வேலைகளில் உறுப்பினர்களை இறங்கி வேலை செய்ய பண்ணணும் .. ஆனால் உறுப்பினர்கள்..வலைத்தளங்களில்

கடுமையான திமுக எதிர்ப்பை காட்டுகின்றனர்  திமுக இப்போது ஆட்சியிலும் இல்லை அவர்களை இப்போது எதிர்பதில் எதும் பலன் இருக்கிறதா ? 

கப்பல் / கப்பல்கள் ஒருமை பன்மை பொஸ் :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அபராஜிதன் said:

விஜயகாந்த் தனது இமேஜினை தானே கெடுத்துக் கொண்டார். எவ்வாறு என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

சீமான் சொன்ன 60,000 யானைகள் அவரது சொந்த கருத்து ஆக இருக்க முடியாது பாஸ். 

பண்டைய இலக்கியங்களில் இந்த இலக்கங்களில் பாரிய நம்பகத்தன்மையின்மை உள்ளது. முக்கியமாக திருத்தராச்டிசன் மன்னன் மனைவி காந்தாரி 100 பிள்ளைகள் பெற்று எடுத்தார் என்று பண்டைய கதைகள் சொல்கின்றது.

சாத்தியமானதா? தமிழில் எழுத்து சீர்திருத்தம் வந்தது போல, எண் சீர்திருத்தம் பின்னர் வந்து இருக்கலாம். 

ஆகவே 60,000 யானைகளா என்று சும்மா அதிர்ந்து போகாதீர்கள்.... அப்படியே இந்தக் காதாலே எடுத்து அந்தக் காதாலே விட்டு விடுங்கள்.

அடுத்த தேர்தலில்... பா ஜ க யினால் முண்டு கொடுக்கப் படும் அதிமுக காணாமல் போகும். எடப்பாடி, பன்னீர் தமது தொகுதிகளிலே வெல்ல முடியாது.

தினகரன் பெரிதாக வெல்ல முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. டோக்கன் அரசியல் சரி வராது.... மக்கள் பணம் கேட்ப்பார்கள். கொடுத்தால் சிக்குவார்...

ரஜனி + பா ஜ க கூட்டு பெரிதாக எடுபட போவதில்லை. 

அடுத்து வருவது திமுக தான்.

ஆகவே சீமான் திமுகவை எதிர்ப்பதே சரியான அரசியல். பொசிஷனிங்....

தி மு க வை மட்டுமல்ல, ரஜனியையும் எதிர்க்கிறாரே கடுமையாக.

உங்கள் தகவலுக்கு: முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனே, சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வருவேன் என்று 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊர் ஊராக சொன்னாராம். அதைக் கேட்டும் கூட வாக்களித்து வெல்ல வைத்தார்கள் நம் ஊர்  வாக்காள பெருமக்கள்.

உங்கள் ஊர் என்றால் ஓகே. பக்கத்து தமிழ் நாடு என்றால் பம்மாத்தா? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சண்டமாருதன் said:

இந்த களத்தில் இவர் சீமானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கவே வருகின்றார். இது ஒரு தனிப்பட்ட காழ்புணர்வு சார்ந்தது. 

ஒன்றை எழுதும் போது
முதலில் ஒரு சிறு
அளவுக்கேனும் ஆராய்ந்து
பார்த்து விட்டு எழுதுவது
நல்லது

நான் இதுவரைக்கும்
224 பதிவுகள் இட்டுள்ளேன்
இதில் 150 இற்கும் மேற்பட்டவை
சீமான் சாராத பதிவுகள்

சரி
அவ்வாறே நான் சீமானை
விமர்சிக்கத்தான்
வருகின்றேன் எனில்
அது என் தெரிவு
என் சுதந்திரம்
என் உரிமை

உங்களுக்கு பொறுக்கவில்லை
என்றால் ஒன்றில்
பதில் கருத்து எழுதுங்கள்
அல்லது பொத்திக் கொண்டு
இருங்கள்

13 hours ago, சண்டமாருதன் said:

1996 ல் சீமான் தயாரித்த  பாஞ்சாலம் குறிச்சி படத்தில் சீமான் என்றே பெயர் உள்ளது. ஏதோ ஒன்றை இழுத்து சொட்டை நொட்டை சொல்வதே நோக்கமாக உள்ளது. கிறித்தவ பெயர் இஸ்லாமியப்பெயர் இந்து பெயர் என எதுவாக இருந்தால் தான் என்ன பிரச்சனை ?

நான் சீமானை
குறிப்பிடும் போது
செபஸ்டியன் சைமன் என்ற
அவரின் ஆரம்பகால
பெயரை குறிப்பிட்டு
எழுதினேன்
அது கிறிஸ்தவ பெயராக
இருந்தமையால் தான்
நான் எழுதினேன் என
நீங்களும் நாதமுனியும்
நினைத்தால் அது
என் பிரச்சனை அல்ல

ஆனால் அப் பெயரை
குறிப்பிட்டு எழுதிய
கருத்தின் பிரதான அம்சத்தினை
விட்டு விட்டு ஏன் அப் பெயர்
எழுதினேன் என்பதில்
பிடித்து தொங்கி
கொண்டு இருக்கிறியள்

மாட்டை பற்றி
எழுதாமல் அது கட்டியிருக்கும்
கயிற்றை பற்றி எழுதுதல்
ஒரு தப்பித்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சண்டமாருதன் said:

தமிழக அரசியலை பெறுத்தவரை தேமுதிக மதிமுக போன்ற கட்சிகள் வலைத்தளங்களில் கேலிகளுக்கு உள்ளாகி பெரும் பின்னடைவை சந்தித்தது. ஒருவகையில் குறிவைத்து தக்கப்பட்டது என்ற செல்ல முடியும். இவ்வாறு நடக்கும் போது வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் திமுக அதிமுக மீளவும் பலம்பெறுகின்றது. அரசியல் வாதியை விமர்சனம் செய்கின்றேன் என்ற போர்வையில் தன்தலையில் தானே மண்ணள்ளி போடும் கதைதான் நடக்கின்றது. புலிகள் இருக்கும் வரை அவர்களை விமர்சிப்பதையே ஒரு வேலையாக செய்துகொண்டிருந்த தளங்கள் கடசியாக கண்டது ஒன்றும் இல்லை. புலிகளின் முடிவுக்கு பின்னர் அவர்கள் வலைத்தளங்களை கூட காப்பாற்ற முடியவில்லை. 

விசயகாந்தின் கட்சி
பலவீனமடைந்தமைக்கு பிரதான
காரணங்கள் அவர்
எதிர்க்கட்சியாக தெரிவாகியும்
எதுவும் செய்யாமை,
தவறான கூட்டணியுடன்
சேர்ந்தமை,
மற்றும் அவரது உடல்நிலை
மோசமானவை
ஆகியன

வைகோவின் கட்சி
பலவீனமடைந்தமைக்கு
காரணம் வைகோ வை
விட வேறு எதுவும்
இல்லை
வைகோ
அரசியல் சதுரங்கத்தில்
ஆட வந்த ஒரு கோமாளி

திமுக விட மோசமாக
வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்ட
கட்சி அங்கு எதுவும் இல்லை
ஆனால் அது எவ்வாறு
பலம்பெறுகின்றது?

தமிழத்தின் தலைவிதியை
நிர்ணயிப்பது
பாமர மக்களும்
வறுமை நிலையில் இருப்பவர்களும்
அவர்கள்
மீம்ஸ் பார்த்து வாக்களிப்பார்கள்
என நினைக்கும் அளவுக்கு
உங்கள் அறியாமை இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சண்டமாருதன் said:

தமிழ்த்தேசீயம் - இனம் சர்ந்த உணர்வு எங்கெல்லாம் துளிர்விடுகின்றதோ அவைகள் தமிழர்களாலேயே கிள்ளி எறியப்படும். சாதியச் சமூகங்களின் சிந்தனை முறை ஒரு போதும் நேர்த்தியாகவோ தூரநோக்கிலோ இருக்காது. இனத் தேசீய எழுச்சிக்கு எதிராகவே அது இயங்கும். அதை புரிந்துகொள்வது கடினம். இன்றய தமிழகத்தின் "கலாய்த்தல்" என்ற பகிடி கலாச்சாரம் நேற்றய சாதிய நையப்புடைப்புகளின் நீட்சியோடு தொடர்புடையது. அரசியல் விமர்சனங்களிலும் இவை கலந்தே உள்ளது.  சாண் ஏற முழம் சறுக்கும். 

நாம் சாதி மத பிரதேசவாத முரண்பாடுகளை கடந்து ஒரு இனமாக மாற முற்படுகின்றோம் தவிர நாம் ஒரு பலமான தேசீய இனத்தை சார்ந்தவர்கள் இல்லை.  தமிழர்களது அரசியல் என்பது எப்போதும் தனது இனத்தை கட்டமைப்பதும் பிற இனங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொளவதும் என்ற  இரண்டு நிலை இயக்கத்தில் இருக்கும் அதனடிப்படையில் எமக்கு நாமே எதிரிகள் மற்றது புறநிலை எதிரிகள். எமது வார்த்தைகள் கருத்துக்கள் நாம் எதிர்பார்ப்பதை விட  நூறுமடங்கு இனமென்ற அடிப்படையில் எமக்கே எதிரானவை. அழிவுகளை ஏற்படுத்துபவை. 

தமிழர்கள் மத்தியில்
சாதியத்தை விதைத்தது
வர்ணாசிரமம்

வர்ணாசிரமத்தை
கொள்கையாக
தன் பாதையாக
தன் வழியாக
வைத்துக் கொண்டுள்ளது
ஆரியமும் பார்ப்பனியமும்

தமிழ் தேசியத்தின்
பெரும் எதிரியே இந்த
ஆரியமும் பாப்பனியமும்
தான்

அதை முழு மூச்சாக
எதிர்க்க கொண்டு
வரப்பட்டதே 'திராவிடம்'
எனும் கருத்தியல்

மற்ற மானிலங்களில்
வேரூன்ற முடிந்த
காவிக் கட்சிக்கு
தமிழகம் நோட்டாவை
கொடுப்பதே இந்த
திராவிடம் எனும் கருதியலும்
பெரியாரின் கருத்துகளும்
ஆகும்

ஆனால் சைமன் எதிர்ப்பதே
இந்த திராவிடம் எனும்
கருத்தியலையும்
அதன் இயங்கு
தளத்தையும்

எதை காவிக் கட்சியும்
ஆர்.எஸ்.எஸ் சும்
சங்க பரிவார்களும்
எதிர்க்கின்றனரோ
எந்த கருத்தியலை தகர்க்க
முற்படுகின்றார்களோ
அதையே சைமனுன் செய்கின்றார்

நீங்கள்
சாதியத்தை கடந்து
தமிழர்களாக அணிதிரள்வது
பற்றி குறிப்பிட்டு கொண்டே
சைமனையும் ஆதரிக்கின்றீர்கள்

சைமன் செய்வது
இவன் தெலுங்கன்
இவன் மலையாளி
இவன் நாயக்கன்
என்று வகை பிரித்து
மேலும் மேலும்
சிதைப்பதே

தீவிர தமிழ் தேசியம்
பேசுகின்றோம் என்ற
பெயரில்
தமிழ் இனவாதத்தை
கக்கிக் கொண்டு இருக்கின்றார்
சைமன்

அதுக்காக எம் இனத்து
விடுதலையையும்
தலைவரையும்
போராளிகளையும்
அவர்கள் செய்த
தியாகங்களையும்
பயன்படுத்தி கொண்டு
இருக்கின்றார்

இப்படிப்பட்ட ஒருவரை
கண்ணை மூடிக் கொண்டு
உங்கள் அரைகுரை
அரசியல் பார்வைகளுடன்
தூக்கி தலையில் வைத்து
கொண்டாடுங்கள்

ஆனால் என்னால்
முடியாது
சைமன் எம் போராட்டத்தை
எம் போராளிகளை
தலைவரை தன்
சுய அரசியல் லாபத்துக்கு
பாவிக்கும் வரை
எதிர்த்து எழுதிக் கொண்டு
இருப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வைரவன் said:

தமிழ் தேசியத்தின்
பெரும் எதிரியே இந்த
ஆரியமும் பாப்பனியமும்
தான்

அதை முழு மூச்சாக
எதிர்க்க கொண்டு
வரப்பட்டதே 'திராவிடம்'
எனும் கருத்தியல்

மற்ற மானிலங்களில்
வேரூன்ற முடிந்த
காவிக் கட்சிக்கு
தமிழகம் நோட்டாவை
கொடுப்பதே இந்த
திராவிடம் எனும் கருதியலும்
பெரியாரின் கருத்துகளும்
ஆகும்

ஆனால் சைமன் எதிர்ப்பதே
இந்த திராவிடம் எனும்
கருத்தியலையும்
அதன் இயங்கு
தளத்தையும்

எதை காவிக் கட்சியும்
ஆர்.எஸ்.எஸ் சும்
சங்க பரிவார்களும்
எதிர்க்கின்றனரோ
எந்த கருத்தியலை தகர்க்க
முற்படுகின்றார்களோ
அதையே சைமனுன் செய்கின்றார்

உங்கள் பிடிவாதத்தினால், சில உண்மைகளை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.

அண்ணா, பெரியார் உருவாக்கிய 'திராவிடம்' எனும் கருத்தியல் ஊழல், குடும்ப- வாரிசு அரசியல் என, நாசமறுத்தது யார்? 

இறுதியில் யாரை எதிர்த்து திராவிடம் வந்ததோ, அதே பிராமணத்துப் பெண் இன்னொரு (அ)திமுகவுக்கு தலைமை தங்கியது எவ்வாறு? 

ஏனைய மாநிலங்களில் காலூன்றிய காவிக் கட்சிக்கு, தமிழகத்தில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது எந்த திராவிட கட்சி?

சீமான் இந்த திராவிட கருத்தியலை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள்? இந்த போலி 'திராவிடம்' தமிழகத்தினை, அதன் மலை, மண் வளங்களை வித்து அந்த பணத்தினை வாக்குக்கு லஞ்சமாக கொடுத்து... மேலும் மேலும் ஊழல் செய்கின்றனவே. 

அது, கண்ணை வித்து, சித்திரம் வாங்கும் அது, உங்களுக்கு சம்மதமோ?

முதலில் சீமான், சைமன் இரண்டில் ஒன்று குறித்த தெளிவான முடிவுக்கு வாருங்கள். அதன் பின்னர் நியாயம் பிளக்கலாம். 

உங்கள் ஊரில், இனவாதம் பேசும் சிங்கள அரசியல் வாதிகள் குறித்து பேசுங்கள்... பின்னர் அடுத்த நாட்டு சீமானின் இனவாதம் குறித்து பேசலாம்.

சீமானுடைய ஊர், தாய், தந்தை... சகல விடயங்களையும் ஊடகங்கள் ஆய்வு செய்து ஆவண படங்களாக போட்டு இருக்கின்றன. 

பெயர் விடயத்தில் பொய் சொல்லி... அரசியல் நடத்த முடியும் என்று நம்பும் உங்களுடன் விவாதங்களில் ஈடுபட முடியுமா என்பதே எனது கவலை.

உங்கள் கருத்துக்களை பதிவிடும் உரிமை உங்களுக்கு உள்ள அதே நேரம்... இங்கே உள்ள அடுத்த பதிவாளர்கள், தரமான பதிவுகளை எதிர்பார்க்கும் உரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசமத்தனமான அபத்தங்களை அல்ல..

Link to comment
Share on other sites

11 hours ago, வைரவன் said:

தமிழத்தின் தலைவிதியை
நிர்ணயிப்பது
பாமர மக்களும்
வறுமை நிலையில் இருப்பவர்களும்
அவர்கள்
மீம்ஸ் பார்த்து வாக்களிப்பார்கள்
என நினைக்கும் அளவுக்கு
உங்கள் அறியாமை இருக்கின்றது

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பது வறுமையில் இருப்பவர்களும் பாமர மக்களும் எனில் அதற்கு அர்த்தம் பணம் படைத்த கட்சியே தலைவிதியை தீர்மானிக்கின்றது என்பதாகும். கடந்த காலங்களில் நடந்ததும் இதுவே. 50 ஆண்டுகளில் திமுகவும் அதிமுகாவும் ஆட்சிக்கு வந்ததே தவிர கருத்தியல் ரீதியான அரசியல் மாற்றம் ஏற்படவில்லை. வறுமைப்பட்ட மக்கள் ஆட்சியை தீர்மானித்தால் ஏன் அவர்கள் வறுமை போகவில்லை ? நீங்கள் மீம்ஸ் என்ற சிறு விசயத்தோடு நிற்பது உங்கள் அறியாமை. வியாபாரிகள் அரசியல்கட்சிகள் செய்தி ஊடகங்கள் என்ற கூட்டணியில் வலைத்தளங்கள் ஒரு அங்கமே ஆகும். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வறுமைப்பட்ட மக்கள் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதில்லை. மேலே சொன்ன கூட்டணியில் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். 

11 hours ago, வைரவன் said:

சைமன் செய்வது
இவன் தெலுங்கன்
இவன் மலையாளி
இவன் நாயக்கன்
என்று வகை பிரித்து
மேலும் மேலும்
சிதைப்பதே

தெலுங்கு மலையாளி கன்னடர் என்பது சாதிகள் இல்லை இனங்கள். தமிழனத்தை தமிழன் ஆழவேண்டும் என்பது உங்கள் பாணியில் சிதைவென்றால் பிறகெதுக்கு சிங்கள இனத்தோடு சண்டை தனிநாடு எல்லாம் ?

11 hours ago, வைரவன் said:

ஆனால் என்னால்
முடியாது
சைமன் எம் போராட்டத்தை
எம் போராளிகளை
தலைவரை தன்
சுய அரசியல் லாபத்துக்கு
பாவிக்கும் வரை
எதிர்த்து எழுதிக் கொண்டு
இருப்பேன்

ஏன் நீங்கள் தலைவரையும் போரட்டத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா ? 

தலைவர் படத்தை தூக்கிப்பிடிப்பதால் புலிக்கொடியை தூக்கிப் பிடிப்பதால் வருமானம் வரும் என்றால் புலம்பெயர் நாட்டில் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் லாபம் இல்லை என்றவுடன் கீழே போட்டாகிவிட்டதே. 

இன எழுச்சிக்கு அடயாளமாக தலைவர் படத்தை நாம்தமிழர் பயன்படுத்துகின்றார்கள். இந்தியாவை பொறுத்தவரை அதனால் அவர்களுக்கு நட்டமே தவிர லாபம் கிடையாது. அவர்களால் கனகாலத்துக்கு இதை பயன்படுத்தவும் முடியாது. குறிப்பிட்ட காலத்தில் அவை தடைசெய்யப்படும். நீங்கள் தமிழ் தேசீயம் சார்ந்து இன எழுச்சி ஐக்கியப்படு சார்ந்து ஏதாவது இயக்கம், அரசியல், மாநாடு நடத்துகின்றீர்களா ? அதற்காக தலைவர் போராட்டம் போராளிகளை பயன்படுத்தப்போகின்றீர்களா ? இல்லை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சட்ட ரீதியாக உரிமை கொண்டாடுகின்றீர்களா? இல்லை புலிகளின் முடிவுக்கு முன்னர் இவற்றைப் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு முடிந்துபோனார்களா ? ஒன்றும் புரியவில்லை, உங்கள் எதிர்பிற்கு என்ன அடிப்படை ?அதனால் எதை முன்வைக்க விரும்புகின்றீர்கள் ? 

நீங்கள் ஈழத்தமிழனாக தலைவர் போராளிகள் போராட்டத்தை பாவிப்பதை எதிர்த்தால் நாங்கள் ஈழத்தமிழராக பாவிப்பதை ஆதரிக்கின்றோம். முடிந்தவரை இன தேசீய எழுச்சிக்காவும் ஐக்கியப்பட்டுக்காகவும் யார் பயன்படுத்தினாலும் ஆதரிக்கின்றறோம். இவற்றைப் பாவித்து புலம்பெயர் நாட்டில் நிகழ்ச்சி நடத்துவது வியாபாரம் செய்வது காசு சேர்த்து கல்லா கட்டுவது வடை வாய்பன் விற்பதை எதிர்க்கின்றோம். சீமான் பாவிப்பதால் உங்களுக்கு எங்க அரிக்கின்றது என்பது நன்கு விளங்குது ஆனால் இங்க சொறிய யாரும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் அவர்களை,  உடனே... மேடைக்கு வரும்படி,  அன்புடன். அழைக்கின்றோம்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வைரவன் அவர்களை,  உடனே... மேடைக்கு வரும்படி,  அன்புடன். அழைக்கின்றோம்.  ?

ஒரு mac ஐடிக்கு யுசெர் நேம் கொடுக்கும் கருத்துக்களமாக மாறினால் நல்லது போல் உள்ளது ஓனரிடம் கேட்கணும் ஒவ்வொரு பெயரில் வந்து இருட்டுக்குள் இருந்து கல் எறிபவர்கள் போல் கருத்துகளை உமிழ்ந்துவிட்டு ஓடிசெல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நேற்றோ அதற்கு முந்திய நாள் சீமான் பேசிய பேச்சு மிக அதிகமான எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது... திராவிட சுடுகாடு என பேசியதில்.. ஆபாச கருத்துகள் இருப்பதாகவும்..பூநகரி சண்டையில் தமிழ்ச்செல்வன் காயப்பட்டிருக்கும் போது காலிழந்த இன்னொரு போராளியிடம் வீரச்சாவடைந்த இன்னொரு போராளி பற்றி அவர் சொன்னதாக சீமான் கூறிய ( அவனவன் தலை இல்லாமல் கிடக்கான் நீ என்னடா என்றால் கால் போனதுக்கு இந்த கத்து  கத்திறாய் என்று சாரப்பட ) கருத்தும்... இதை வைத்து கடுமையான கருத்துக்களை வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அபராஜிதன் said:

நேற்றோ அதற்கு முந்திய நாள் சீமான் பேசிய பேச்சு மிக அதிகமான எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது... திராவிட சுடுகாடு என பேசியதில்.. ஆபாச கருத்துகள் இருப்பதாகவும்..பூநகரி சண்டையில் தமிழ்ச்செல்வன் காயப்பட்டிருக்கும் போது காலிழந்த இன்னொரு போராளியிடம் வீரச்சாவடைந்த இன்னொரு போராளி பற்றி அவர் சொன்னதாக சீமான் கூறிய ( அவனவன் தலை இல்லாமல் கிடக்கான் நீ என்னடா என்றால் கால் போனதுக்கு இந்த கத்து  கத்திறாய் என்று சாரப்பட ) கருத்தும்... இதை வைத்து கடுமையான கருத்துக்களை வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்

ஆங்கிலத்தில் 'Taken out of  context' என்று ஒரு விசயம் சொல்லுவார்கள்.

ஒரு நீண்ட ஒரு விபரணத்தில், அல்லது உரையில் ஒரு சிறு வசனத்தினை மட்டும் எடுத்து, தமது நியாயப்பிளப்புக்கு பயன்படுத்திக் கொள்வது.

சீமானின் இரு மணி நேர நீண்ட உரையினை கேட்டால் அவர் சொல்ல வந்தது சரியாக புரியும். இது ஒரு சிறு பகுதி. அதனால் அது ஆபாசமாக தெரியும்.

அவர் சொல்ல வந்தது எந்த பிராமணியத்தினை திராவிடம் எதிர்த்ததோ, அந்த எதிர்த்த மூவர்களுடன், எதிர்க்கப் பட்ட பிராமணியத்தின் ஒரு பெண்ணும் சேர்ந்து  அந்த 'திராவிட மயானத்தில்' படுத்து இருக்கிறார்கள், என்பது.

அந்த முக்கிய விசயத்தினை விட்டு ஒரு பெண் மூன்று ஆண்களுடன் படுத்து இருக்கிறார் என்று ஆபாசமாக சொல்லி விட்டார் என்று அலம்பறை பண்ணுகிறார்கள்.

அனைவருமே இறந்தவர்கள், வயதானவர்கள்... நோயினால் மாண்டவர்கள்..

இப்படி எழுதும் அந்த ஒரு சில நெட்டிசன்கள் தான் தமது எழுத்துக்கு வருந்த வேண்டும்.

ஒரு காலிழந்த போராளி, வலியில் துடித்த போது, அவரை வீரனாக... உற்சாகப் படுத்தவே.... சொல்லப் பட்ட வார்த்தைகளையே அவர் சொல்லி இருந்தார்... உனக்கு காலிலேதான் காயம். அங்கே தலையிலே காயம் பட்டும், சிலர் தலையே இழந்து இருக்கிறார்கள். ஆகவே கவலைப் படாமல் எழுந்து வா' என்று சொல்லப் பட்டது என்பதே சீமானின் பேச்சின் நோக்கம்.

இந்த பின்னூட்டம் பார்க்க முனைந்தால் தலை கிறுகிறுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில், உலகமெங்கும் சமூக ஊடகங்களின் பின்னூடடம் பெரும் தலைவலியாக மாறி வருகிறது என்கிறார். 

பல தற்கொலைகளுக்கும் பின்னூடடம் காரணமாகி உள்ளது. அண்மையில் கூட மத்திய கிழக்கு நாடொன்றில், ஒரு கேரள நிறுவனம், கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட பெண்களுக்கு நாப்கின் வேண்டும்... உதவுங்கள் என்று கோர... அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு கேரள ஊழியர்.... பின்னூடடம் போட்டிருந்தார்...  'சரி தான்.... ஆண்களுக்கு ஆணுறை வேண்டாமோ'..என்று..

அடுத்தநாளே பெரும் கண்டனங்களை சந்த்தித்து.... மது வெறியில் பிழையாக எழுதி விட்டேன் என்று சொன்னாலும்.... நிறுவனம் அவரை பதவி நீக்கியது.

ஆகவே இந்த பின்னூட்டம் போடுவர்களை சீரியஸ் ஆக எடுக்க முடியாது, கூடாது.

Link to comment
Share on other sites

26 minutes ago, Nathamuni said:

ஆம்நீங்கள் சொல்வது சரி ஆனால் ட்ரோல் பண்ணுபவர்கள்.. அந்த குறுகிய பகுதியை மட்டுமே எடுத்து போட்டு வறுக்கின்றனர்..அவர்களில் யாருமே சீமானின் முழு பேச்சையும் கேட்கவே இல்லை கேட்கப்போவதுமல்லை.. அவர்களிற்கு தேவையே இப்படியான சில துண்டுகளே அதற்கு தான்.. அவர்கள் பாத்திருக்கிறார்கள்., அதற்கும் மேலாக இன்னொரு தி.மு.க கூட்டம்.. இப்படி வருகிறது.. என்ன தான்  எனக்கு புலிகள் மேல் விமர்சனம்கள் இருந்தாலும் களத்தி்ல் போராடிய போராளியை இப்படி சொல்வது.. என்பதாக தொடர்கிறது.. இத்தனைக்கும் இந்த ஐடி புலிகளை மிக கேவலமாக ட்ரக் கடத்தியவர்கள் குழந்தை போரளிகள் என கேவலமா எழுதியது..இப்படியான ஐடிகள் கிட்டத்தட்ட 5000 வரையான நட்புகளையும்  20000-30000 வரையான பலோவர்களையும் கொண்டவை இவர்கள்சொல்லும் கருத்துகள் அதிகமானோர்களால் பார்க்கப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.