Sign in to follow this  
Kavi arunasalam

முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்

Recommended Posts

முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்

வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது  பேர் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள்  தொடர்பான துணிவான ஆய்வுகளை மேற்கொண்டு ”Ende der Aufklärung: Die offene Wunde NSU”  ( தமிழில் சுமாராக இப்படிச் சொல்லலாம்: ‘முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்’) என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார் ஜெர்மனிய ஊடகவியலாளர் துமிலன் செல்வகுமரன் அவர்கள். அவரது இந் நூலை முன்வைத்து இடம்பெற்ற வானொலி நேர்காணலில் புதிய சந்தேகங்களையும், புதிய தகவல்களையும் தருவதோடல்லாமல் தனது தேடலின் போது பெற்ற அனுபவங்களையும் குறிப்பிடுகின்றார்.

https://www.swr.de/swraktuell/baden-wuerttemberg/heilbronn/Journalist-aus-Schwaebisch-Hall-Buchvorstellung-Ende-der-Aufklaerung-die-offene-Wunde-NSU,av-o1047841-100.html

7_D133624-_A766-4929-89_DD-_CB106_C64_D3

விடயம்:

வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது சிறிய கடைவியாபாரிகள் (8 பேர் துருக்கியர் மற்றும் ஒருவர் கிறீக் நாட்டவர்) ஜெர்மனியின் பல பெரு நகரங்களில் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள் நடந்த காலப்பகுதியில் புலன்விசாரணை என்கிற பெயரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை பொலிசாரும் மற்றும் அரச சட்ட நிறுவனங்களும் வறுத்தெடுதார்கள். பாதிக்கப்பட்டவர்களையே,   அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், அவர்கள் மீது சந்தேகித்து அவர்களே சூத்திரதாரிகளாகவும் குற்றவாளிகளாவும் இருக்கலாம் என்ற இவ்விட்டதுப் பொதுப்புத்தியின் படியே விசாரணைகள் நடைபெற்றன. இக் கொலைகளுக்குப் பின்னால் நிறவாதம், இனவாதம், வெளிநாட்டார் எதிர்ப்பு, இஸ்லாம் மதவெறுப்பு போன்றவை ஒன்றோ பலவோ இருக்கலாம் என்ற சிறு சந்தேகம் கூட எழுந்துவிடாமல் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டன புலன்விசாரணைக் கட்டமைப்புக்கள். பரபரப்பு வெகுஜன ஊடகங்களோ இக் கொலைகளையிட்டு செய்திகளை வெளியிட்டபோது கொல்லபட்டவர்கள் பாரிய குற்றங்கள் புரியும் குற்றவளிக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்ற சிந்தனையே வருமாறு தம் செய்திகளைப் பரப்பினர்

இன்னும் சொல்லப்போனால் இக் கொலைகளை மலினப்படுத்தினார்கள். உதாரணமாக Dönermord. ( தொனர் கேபாப் என்பது துருக்கி மக்களின் உணவு. அந்த உணவு விற்கப்படும் சாலையோரச் சிறு கடைவியாபாரிகளே அனேகர்.)  

சுமார் 5 வருடங்களின் பின்னரே இக் கொலைகளுக்குப் பின்னால் புதிய நாசிப் பயங்கரவாத அமைப்புக்கள் இருப்பது வெளியானது. அதுமட்டுமல்லாது இக் கொலைகளைச் செய்த NSU ( National Socialist Underground) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது கொலையாளிகள் மத்திய மற்றும் மாநில அரச உளவுக் கட்டமைப்புகளிடமிருந்து  ”இரகசியத் தகவல் தருபவர்கள்என்ற உளவாளிகள் பதவிக்காகச் சம்பளமும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டார்

இவையெல்லாம் வெளியில் கசியவே இந் நபர்கள் பற்றிய கோப்புக்கள் மேற்படி நிறுவனங்களில் இருந்து காணாமல் போயின. ஆக மொத்தத்தில் வங்கிக் கொள்ளையொன்றின்போது தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்லப்படும் இரண்டு நபர்களும் மற்றும் கைது செய்யப்பட ஒரு பெண்ணுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அந்தப் பெண்ணுக்கான ஆயுட் சிறைத்தண்டனையுடனும் மற்றும் இருவருக்கான சில ஆண்டுகள் சிறைத் தீர்ப்புடனும்   வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்கள் இக்கொலைகள் பற்றி எதுவரையான தகவல்களை முற்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டனர், இனவாதம், வெளிநாட்டார் எதிர்ப்பு போன்றவற்றின் பின்னணியில் பல ஆண்டு காலம் விசாரணைகள் நடைபெறாமல் இருந்தமைக்கு இவற்றின் பங்களிப்பு என்ன?     பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏன் சுடப்பட்டார்போன்றவற்றுக்கு விடைகிடைக்கப்போவதில்லைஜெர்மன் பொலிஸ், இராணுவம், மற்றும் பாதுகாப்பு அமைச்சு நிறுவனங்களில் பணியாற்றுவோர் பலரது  புதிய நாசி அமைப்புக்களுடனான தொடர்புகள்  வெளிவருவதே இல்லை

https://www.amazon.de/Ende-Aufklärung-Die-offene-Wunde-ebook/dp/B07DXM63GF/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1534925831&sr=1-1&keywords=ende+der+aufklärung.+die+offene+wunde+nsu

- சுசீந்திரன் நடராஜா

 

 
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this