Jump to content

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி : அமெரிக்கா - சீனா நடத்திய பேச்சு தோல்வி


Recommended Posts

Tamil_Daily_News_Aug18_2018__3823358416558.jpg

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனாவின் வர்த்தகத்தை முற்றிலும் முடக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்தார். இதன் படி, கடந்த ஜூலை 6ல் ரூ.2.38 லட்சம் கோடி சீன இறக்குமதி பொருட்களுக்கும், நேற்று முன்தினம்  ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. 

இதை அறிந்ததும் சீனா அதே அளவு, அதாவது மொத்தம் ரூ.3.50 லட்சம் கோடி அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இருநாடுகள் இடையிலான வர்த்தக போர் மிகவும் பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜூன் மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. எந்தவித ஒப்பந்தமும் செய்யப்படாமல் தோல்வியில் முடிந்தது. 

தற்போது மீண்டும் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது. இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்ட்டர்ஸ் கூறுகையில், ‘‘அமெரிக்கா - சீன பிரதிநிதிகள் இடையே இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இருதரப்பினரும் நியாயமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், வர்த்தகம் தொடர்பான எதிரெதிர் கருத்துக்கள் குறித்தும் விவாதித்தனர்’ என்று குறிப்பிட்டார். சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ இருதரப்பினரும் ஆக்கப்பூர்வமாக, திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தொடர்ந்து இருதரப்பு வர்த்தகம் குறித்து கருத்து பறிமாறிக்கொள்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை, நிபந்தனை பற்றி விவரங்கள், ஏன் தோல்வியில் முடிந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மீண்டும் வரி: அமெரிக்கா பரிசீலனை;

ஆண்டுதோறும் ₹35 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், ₹14 லட்சம் கோடி மதிப்பு சீன பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ₹14 லட்சம் கோடி பொருட்களுக்கும் வரிவிதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அப்படி செய்தால் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கும் ஒட்டுமொத்தமாக வரிவிதிக்கும் முடிவை சீனா எடுக்கும் என்று தெரிகிறது.

பிரச்னை என்ன?

அமெரிக்கா அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் சீனா நிலைகுலைந்து போய் உள்ளது.  சீனாவின் உயர் தொழில்நுட்ப கொள்கைதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி டிரம்ப் நிர்வாகம் கூறுகையில்,’ அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடும் வேலையை சீனா செய்து வருகிறது. மேலும் வர்த்தக ரகசியங்களை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெற்று, அதை சீன சந்தையில் களமிறக்கும் வேலையையும் செய்து வருவதால்தான் இந்த பிரச்னை உருவாகி உள்ளது’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=430474

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.