Jump to content

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?


Recommended Posts

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

 

 

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடொராவின்  இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்து சமுத்திரத்தில் ஜப்பானும் ஆழக்கால்பதிக்கி;ன்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஒனொடொராவின் விஜயம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு முதல்தடவையாக மேற்கொண்ட விஜயமாகும்.

இந்த விஜயத்தின்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அமைச்சர் சென்றிருந்தார்.

இந்த வருடம் அம்பாந்தோட்டைக்கு ஜப்பானின் இரு விஜயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜப்பானின் இராஜதந்திரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஏப்பிரல் மாதம் ஜப்பானின் கடற்படை கப்பலான அகபொனோ அம்பாந்தோட்டைக்கு சென்றது. 

japan_de5.jpg

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்ட பின்னர் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது கடற்படை கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை குறித்த ஜப்பானின் மூலோபாயக்கொள்கை அதன் வெளிப்படையான திறந்த கடல் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது.

ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார வளத்தை உறுதிசெய்வதற்காக விதிமுறைகைள அடிப்படையாக கொண்டகடல்சார் அமைப்பு முறை என்பதே  திறந்த கடல் என்ற கொள்கையாகும்.

இலங்கை மிக முக்கியமான கடல்சார் நாடு, இந்து சமுத்திர கடல்பரப்பில் மிகமுக்கியமான பாதையில்  இலங்கை அமைந்துள்ளது என ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்து முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மீது கவனம் திரும்பியுள்ளதன் காரணமாக அதனைபோன்ற மற்றுமொரு கடல்சார் வளத்திலிருந்தும் கவனம் திரும்பியுள்ளது- திருகோணமலை துறைமுகமே அது.உலகின் இரண்டாவது இயற்கை துறைமுகம்.

கடற்படை நிபுணர்களை பொறுத்தவரை அது  மிகவும் பெறுமதியான பொக்கிசம்.

சீனாவிற்கு போட்டியாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் இந்தியா சிங்கப்பூருடன் இணைந்து ஈடுபடுவது குறித்து ஜப்பான் ஆராய்ந்து வருகின்றது.

இந்த துறைமுகத்திற்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை அரசாங்கம் திருகோணமலையின் மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்தி அதனை ஏற்றுமதிக்கான தளமாக மாற்ற எண்ணுகின்றது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையத்தை அமைக்கும் எண்ணமும் உள்ளது.

சீனாவிற்கான இலங்கையின் கடன்களை குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கு  99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்ததிலிருந்து இலங்கையில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கின்றது என்ற கருத்து வலுப்பெற்று வந்துள்ளது.

கடந்த வாரம் பென்டகன் தனது வருடாந்த அறிக்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக தனது நிதிப்பலத்தை காண்பிக்கின்றது என்பதற்கான அவதானமாகயிருக்க வேண்டிய உதாரணம் என அம்பாந்தோட்டையை பென்டகன் சுட்டிக்காட்டியிருந்தது.

சீனாவின் மூலதனத்தில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்துவதன் இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்வதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது எனவும் பென்டகன் குறிப்பிட்டிருந்தது.

எனினும் கொழும்பில் உள்ள சீன இராஜதந்திரிகள் விமர்சகர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை தெளிவாக படிக்கவில்லை என்கின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார பொறுப்புகளை இலங்கை அதிகாரிகளிற்கே வழங்கியுள்ளது என்பது அவர்கள் வாதம்

அம்பாந்தோட்டைக்கு யுத்தக்கப்பல்கள் வருகையை கூட  இலங்கை அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர் என்கின்றனர் சீன இராஜதந்திரிகள்

ஜப்பான் தனது பொருளாதார உயிர்நாடியை பாதுகாக்க முயல்கின்றது என கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதையின் நுனியில் அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.இந்த பாதை வழியாக வருடம்தோறும் 60,000 கப்பல்கள் செல்கின்றன.

இந்த கப்பல்கள் உலகின் 60 வீதமான எண்ணெயை கொண்டு செல்கின்றன.

hamm.jpg

சீனாவிற்கு இந்த கடல்பாதை எவ்வாறு முக்கியமோ அதேபோன்று ஜப்பானிற்கும் அது முக்கியம், என தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இரு நாடுகளும் இலங்கையுடன் தங்களிற்கு காணப்படும் நல்லுறவை இதற்காக பயன்படுத்த முயல்கின்றன என குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் சீனாவை எதிர்கொள்வதற்கு  இந்தியாவை விட ஜப்பானை பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு பயனளிக்கும் விடயமாக  அமையும் என மேலும் தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இந்தியாவை விட ஜப்பானை இலங்கை மக்கள் நம்புகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றார்.

நன்றி ஏசியா நிக்கெய் 

தமிழில் வீரகேசரி இணையத்தளம்

http://www.virakesari.lk/article/39016

Link to comment
Share on other sites

தன்னுடைய பங்குக்கு ஏதாவது கிடைக்குமா என எண்ணி தான் களத்தில் குதித்து உள்ளார்கள்.  சிங்க|ளம்  வேண்டாம் என்றா சொல்லப்போகிறது??

Link to comment
Share on other sites

ஜப்­பானின் கரி­சனை

S-01Page1Image0004-7f0404a800f7fc10e545661ece2b737ab87d8ea7.jpg

 

-ஹரி­கரன்

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் இட்­சு­னோரி ஒனோ­டெரா கடந்த 20ஆம் திகதி நள்­ளி­ர­வுக்கு சற்று முன்­ன­தாக கட்­டு­நா­யக்­கவில் வந்­தி­றங்­கி­யதில் இருந்து, அவர் புறப்­பட்டுச் செல்லும் வரை- சர்­வ­தேச ஊட­கங்­களின் கவனம் அவரை நோக்­கி­ய­தா­கவே இருந்­தது.

இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்­கைக்­கான பயணம் அதி­க­ளவில் உற்றுக் கவ­னிக்­கப்­பட்­ட­மைக்கு இரண்டு முக்­கிய கார­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.

முத­லா­வது,காரணம்- இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்ட முத­லா­வது ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் அவர் தான்.

இலங்கை சுதந்­திரம் பெற்று ,70 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், முதல் முறை­யாக ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் ஒருவர் இலங்­கைக்கு வந்­தி­ருக்­கிறார். இலங்கை சுதந்­திரம் பெற்­ற­போது, இரண்டாம் உலகப் போரில் தோல்­வியைத் தழுவி, அமெ­ரிக்­கா­விடம் சர­ணா­கதி அடைந்த நாடாக இருந்­தது ஜப்பான்.

பின்னர் பொரு­ளா­தார ரீதி­யாக தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்ட ஜப்பான் இப்­போது, மீண்டும் பாது­காப்பு ரீதி­யாகத் தன்னை வலுப்­ப­டுத்திக் கொள்ள ஆரம்­பித்­துள்ள நிலையில் தான், இலங்கை மீது அதிக கவ­னத்தை செலுத்த ஆரம்­பித்­துள்­ளது.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்கைப் பய­ணமே, இலங்கை மீதான ஜப்­பானின் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இரண்­டா­வது காரணம், இலங்­கையில் சீனாவின் செல்­வாக்கும், தலை­யீ­டு­களும் அதி­க­ரித்­துள்ள சூழலில், அதனை சமா­ளிப்­ப­தற்­கான ஜப்­பானின் உத்தி என்­ன­வாக இருக்கப் போகி­றது என்ற எதிர்­பார்ப்பு.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணத்தின் மூலம், இந்த விட­யத்தில் ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடு­களின் நிலைப்­பா­டுகள் வெளிப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. இந்த இரண்டு முக்­கிய கார­ணி­களும் தான் ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணத்­திற்கு கூடுதல் முக்­கி­யத்­து­வத்தை அளித்­தி­ருந்­தது.

ஐந்து நாட்கள் பய­ண­மாகத் தான் ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் டோக்­கி­யோவில் இருந்து புறப்­பட்­டி­ருந்தார். முதலில் அவர் சென்­றது புது­டெல்­லிக்கு. அங்கு இந்­திய பாது­காப்பு அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ரா­ம­னுடன் பேச்­சுக்­களை நடத்தி விட்டே கொழும்பு வந்­தி­ருந்தார்.

இந்தப் பேச்­சுக்­களின் போது, இந்­தி­யாவின் தரைப்­ப­டை­க­ளுடன் ஜப்­பா­னியப் படை­யினர் கூட்டுப் பயிற்­சியில் ஈடு­ப­டு­வது மற்றும், கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாட்டில் கைச்­சாத்­தி­டு­வது ஆகி­யன குறித்து இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­ட­தாக தக­வல்கள் உள்­ளன. கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாடு என்றால், ஜப்பான் -இந்­தியா ஆகிய நாடு­களின் படை­யி­ன­ருக்கு, விநி­யோக, மற்றும் வெடி­பொருள் உத­விகள் தேவைப்­படும் போது, ஒரு நாடு மற்ற நாட்­டுக்கு வழங்­கு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது.

ஜப்பான் அண்­மையில் கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ் போன்ற நாடு­க­ளுடன் இத்­த­கைய உடன்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

இலங்கை , இந்­தியா போன்ற நாடு­க­ளுடன் அமெ­ரிக்கா இத்­த­கைய உடன்­பாட்டை செய்­தி­ருக்­கி­றது. இப்­போது ஜப்­பானும் இந்­தி­யா­வுடன் இத்­த­கைய உடன்­பாட்டை செய்­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. ஜப்­பானைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தியப் பெருங்­க­டலின் மீதும் அதன் பாது­காப்பின் மீதும் அதிக அக்­கறை கொண்ட நாடு­களில் முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கி­றது.

இப்­போது இந்­தியப் பெருங்­கடல் பாது­காப்பு விட­யத்தில் அதிக அக்­கறை கொள்ளும் நாடு­களை வரி­சைப்­ப­டுத்­தினால், இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான், சீனா, அவுஸ்­தி­ரே­லியா ஆகி­யன அதில் முக்­கிய இடங்­களை வகிக்கும்.

இந்த நாடு­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்கு இந்­தியப் பெருங்­கடல் மாத்­தி­ர­மன்றி, தென் சீனக்­க­டலும் கூட முக்­கி­ய­மா­னது தான்.

மத்­திய கிழக்கில் இருந்து ஜப்­பா­னுக்குத் தேவை­யான எண்ணெய் இந்­தியப் பெருங்­கடல் மற்றும் தென் சீனக்­கடல் வழி­யாகத் தான் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது.

 

ஜப்­பானைப் போலவே சீனா­வுக்கும் அது பிரச்­சினை தான். ஆனாலும் சீனா­வுக்கு இருக்­கின்ற மாற்று வழி­களோ , தெரி­வு­களோ ஜப்­பா­னுக்கு இல்லை.

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கும் கூட, இந்­தியப் பெருங்­கடல் மற்றும் தென் சீனக்­கடல் கப்பல் பாதை­களில், சீனாவின் எந்தக் குறுக்­கீ­டு­களும் இருக்கக் கூடாது என்­பதே பிர­தான கவலை.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்தக் கப்­பல்­பா­தையின் மீது சீனா போன்ற நாடு­களின் தலை­யீ­டுகள்- குறுக்­கீ­டு­களால், தனது பாது­காப்பு நலன் கேள்­விக்­கு­றி­யாகி விடும் என்று அச்­சப்­ப­டு­கி­றது.

அண்­மையில் ஜப்­பானின் சச­காவா அமைதி நிறு­வகம், இந்­தி­யாவின் விவே­கா­னந்தா நிறு­வகம், அவுஸ்­தி­ரே­லிய தேசிய பல்­க­லைக்­க­ழகம், அமெ­ரிக்­காவின் சச­காவா அமைதி நிறு­வகம் ஆகிய சிந்­தனைக் குழு­மங்கள் இணைந்து, இந்தோ பசுபிக் பிராந்­தி­யத்தின் பாது­காப்புக் குறித்த அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

அதில் இடம்­பெற்­றி­ருந்த 20 பரிந்­து­ரை­களில், ஒன்று, இந்­தியப் பெருங்­க­டலில் சீனா நிரந்­தர இரா­ணுவத் தளம் அமைப்­பதை, அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடுகள் தமது பங்­காளி நாடு­க­ளுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தியப் பெருங்­க­டலில் அண்­மைக்­கா­லத்தில் சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், இந்தப் பகு­தியில் சீனா தனது இரா­ணுவத் தளத்தை அமைத்து விடக் கூடாது என்­பதில் இந்த நான்கு நாடு­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன.

இதனை முன்­னி­றுத்­தியே ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணமும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பயணம் மிகவும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஒன்­றாக இருந்­தது. ஆனாலும் சில விட­யங்கள் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டன.

இட்­சு­னோரி ஒனோ­டெரா கொழும்­புக்கு வந்து சேர முன்­னரே, ஜப்­பா­னியக் கடற்­ப­டையின் நாச­காரிக் கப்­ப­லான, ‘இகா­சுச்சி’ திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை வந்­த­டைந்­தி­ருந்­தது.

இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்­கைக்­கான பயணம் குறித்து தகவல் வெளி­யிட்ட ஜப்­பா­னிய தூத­ரகம், கொழும்பில் உயர்­மட்டச் சந்­திப்­பு­களை நடத்­துவார் என்றும், கொழும்­புக்கு வெளி­யிலும் சில பய­ணங்­களை மேற்­கொள்வார் என்றும் தான் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் ஜப்­பா­னிய ஊடகம் தான் முதன்­மு­தலில், அவர் அம்­பாந்­தோட்டை, திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­க­ளையும் பார்­வை­யி­டுவார் என்று செய்தி வெளி­யிட்­டது.

அது­பற்றி துறை­மு­கங்கள், கப்­பல்­துறை அமைச்சர் மகிந்த சம­ர­சிங்­க­விடம் கேட்­ட­போது, ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் அம்­பாந்­தோட்­டைக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார் என்று தெரி­யுமே தவிர, அங்கு என்ன செய்யப் போகிறார் -எதற்­காகப் போகிறார் என்று தெரி­யாது என கைவி­ரித்­தி­ருந்தார். அந்­த­ள­வுக்கு அவ­ரது பய­ணத்தில் இர­க­சியம் காக்­கப்­பட்­டது.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் இலங்­கைக்­கான பய­ணத்தின் முக்­கி­ய­மான இலக்­குகள் இரண்டு.

முத­லா­வது- இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வது.

இரண்­டா­வது- அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தில் சீனாவின் இரா­ணுவ ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்குத் தடை போடு­வது.

இந்­தியப் பெருங்­க­டலில் கப்­பல்கள் பய­ணிக்கும் பாதைக்கு அருகே இருப்­பதால் அம்­பாந்­தோட்டை துறை­முகம், மிக முக்­கி­ய­மா­னது என்று கூறி­யி­ருந்த ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர், எந்த வகை­யிலும் இது சீனாவின் இரா­ணுவப் பயன்­பாட்­டுக்­கு­ரி­ய­தாக இருக்கக் கூடாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே கவனம் செலுத்­தினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரைச் சந்­தித்த போதும் சரி, பாது­காப்பு அமைச்சில் ருவான் விஜே­வர்த்­தன தலை­மையில் பாது­காப்பு உயர் அதி­கா­ரி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பு­களின் போதும் சரி, அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் பிர­சன்னம் குறித்தே அதிக கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­தியப் பெருங்­கடல் பகுதி திறந்த- சுதந்­தி­ர­மான- வெளிப்­ப­டை­யா­ன­தாக இருக்க வேண்டும், கப்­பல்­களின் போக்­கு­வ­ரத்­துக்கு எந்த இடை­யூறும் இருக்கக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­திய இட்­சு­னோரி ஒனோ­டெரா, அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் இரா­ணுவச் செயற்­பா­டுகள் இருக்கக் கூடாது என்­ப­தையும் பகி­ரங்­க­மா­கவே வலி­யு­றுத்­தினார்.

இந்த விட­யத்தில், இலங்கை அர­சாங்கத் தரப்­பிடம் இருந்து, உறு­தி­மொ­ழி­களைப் பெற்றுக் கொள்­வ­திலும் அவர் வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் இரா­ணுவப் பயன்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்­ட­தாக இருக்கும், சீனா அதனை இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தி­மொ­ழியை இலங்கை அர­சிடம் தாம் பெற்­றுள்­ள­தாக ஜப்­பா­னிய தொலைக்­காட்­சிக்கு இட்­சு­னோரி ஒனோ­டெரா தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா 99 ஆண்டு குத்­த­கைக்குப் பெற்­றுள்ள போதும், அதனை இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தி­மொ­ழியைப் பெற்றுக் கொள்ளும் விட­யத்தில் மாத்­தி­ர­மன்றி, சீனாவின் கட்­டுப்­பாட்டில் உள்ள அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கும் சென்று அதனை உறு­திப்­ப­டுத்­து­வதில் ஈடு­பட்டார் இட்­சு­னோரி ஒனோ­டெரா.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா குத்­த­கைக்குப் பெற முடிவு செய்த பின்னர், ஜப்­பா­னிய கடற்­ப­டையின் இரண்டு பாரிய போர்க்­கப்­பல்கள் அங்கு நல்­லெண்ணப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தன.

அதன் தொடர்ச்­சி­யாகத் தான், இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவும் அங்கு பய­ணத்தை மேற்­கொண்டு, அம்­பாந்­தோட்டை சீனாவின் கோட்­டை­யாக இருக்­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை விட­யத்தில் சீனா­வுக்கு விட்­டுக்­கொ­டுக்க ஜப்பான் தயா­ராக இல்லை. அதற்­காக, இலங்­கை­யுடன் உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் ஜப்பான் முன்­வந்­தி­ருக்­கி­றது.

இலங்கை கடற்­ப­டைக்கு 1.1 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான இரண்டு ஆழ்­கடல் ரோந்துப் பட­கு­களை ஜப்பான் வழங்­கி­யி­ருக்­கி­றது. இவை 3000 கி.மீ வரை சென்று கண்­கா­ணிக்கக் கூடி­யவை.

திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை இந்­தி­யா­வுடன் இணைந்து கூட்­டாக அபி­வி­ருத்தி செய்­யவும் ஜப்பான் சாத­க­மான பதிலை அளித்திருக்கிறது,

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க. அல்லது அதற்குப் போட்டியாக செயற்பட ஜப்பானும், .இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருந்த ஜப்பானிய கடற்படையின் ஹெலிகொப்டர் தாங்கி கப்பலான “இசுமோ”வின் சகோதரக் கப்பலான, “காகா” (Kaga) அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானி நடவடிக்கைகள் சீனாவுக்குப் போட்டியாக தாமும் கடற்படையை நகர்த்துவோம் என்று எச்சரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி, இலங்கையுடனான நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த நாட்டுக் கடற்படையும் வரலாம்- போகலாம், ஆனால் எந்த நாடும் இலங்கையை தமது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த முடியாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது.

அதையும் மீறி சீனா தனது செல்வாக்கை நிலைநாட்டி விடக்கூடாது என்பதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது. அதனை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைப் பயணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் சிங்களவரின் வீட்டு வாசலில் பிரபாகரன் படம் தொங்கும்வரை ஒரு வழிபன்னாமல் விடமாட்டாங்கள் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.