Jump to content

ஜனநாயக தேர்தல் முறை தடம்புரண்டு செல்கின்றது


Recommended Posts

ஜனநாயக தேர்தல் முறை தடம்புரண்டு செல்கின்றது

Untitled-3-cab1c453040665ee916d421ad9b6f17bd720efdb.jpg

 

த. மனோகரன் 

ஆங்­கி­லேயர் ஜன­நா­யகம் என்ற கோட்­பாட்டு முறை­மையில் நம் நாட்டில் தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்திச் சென்­றனர். இன்று நாமோ அதி­லி­ருந்து நழுவி படிப்­ப­டி­யாக மக்­க­ளுக்காக மக்களால் தெரி­வு­செய்­யப்­பட்ட மக்­க­ளாட்சி என்ற நிலை­யி­லி­ருந்து விடு­பட்டு அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் ஆதிக்­கத்­திற்கு நம்மை உட்­ப­டுத்தி வரும் நிலைமை உரு­வா­கி­வ­ரு­வதை   உண­ரா­துள்ளோம்.

மாகாண சபைக்­கான தேர்தல் எந்த முறையில் அதா­வது ஏற்­க­னவே நடை­மு­றை­யி­லி­ருக்கும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­யிலா அல்­லது தொகுதி வாரி­யாக ஐம்­பது வீதமும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­க­ளி­ன­டிப்­ப­டையில் ஐம்­பது வீத­மு­மாக நடத்­தப்­பட வேண்­டுமா? என்ற வாதப்­பி­ரதி வாதங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. நம் நாடு இது­வரை மூன்று வகை­யான தேர்­தல்­க­ளுக்கு முகங்­கொடுத்­துள்­ளது. இவற்றில் எது பொருத்­த­மா­னது என்­பதை ஆராய வேண்டும். எந்தத் தேர்தல் முறை நடை­மு­றைக்­கி­டப்­பட்­டாலும் தமி­ழ­ருக்­கெ­தி­ரான இன­வாதம் மட்டும் வழ­மைபோல் கட்­ட­விழ்த்து விடப்­படும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்­கி­ட­மில்லை.

எது எவ்­வா­றா­யினும் நாட்டில் நடை­மு­றைக்­கி­டப்­பட்ட மூன்று வகைப்­பட்ட தேர்தல் முறை­மை­களில் பொது­மக்­களின் விருப்பம் அல்­லது நோக்கம் நேர­டி­யாக வெளிப்­படும் முறைமை எது, என்ன என்­ப­தையும் அதேபோல் பொது மக்­களின் விருப்­பத்தை மீறி அர­சியல் கட்­சி­களின் ஆதிக்கம் வலு­வ­டைந்த முறைமை எது என்­ப­தையும் ஆராய்­வது அவ­சி­ய­மாகும்.

சுதந்­திரம் என்ற பெயரில் நாட்டில் நடை­மு­றைக்­கிடப்பட்ட சோல்­பரி அர­சியல் அமைப்பின் கீழான தேர்தல் முறை­மையில் பாரா­ளு­மன்­றத்­திற்­கான தேர்தல் தொகு­தி­வா­ரி­யாக இடம்­பெற்­றது. அதேபோல் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் வட்­டார ரீதி­யாக இடம் பெற்­றது. இவற்றில் அர­சியல் கட்­சி­களின் ஆதிக்கம் குறைந்தே காணப்­பட்­டது. அர­சியல் கட்­சிகள் தமக்கு இயை­வா­ன­வர்­களை தொகு­தி­வா­ரி­யா­கவோ, வட்­டா­ர­ரீ­தி­யா­கவோ தேர்­தலில் நிறுத்­தின. அதேபோல் கட்­சி­சாரா தனி­வேட்­பா­ளர்­களும் தொகு­தி­யிலோ, வட்­டா­ரத்­திலோ மட்டும் போட்­டி­யிட்டு தெரி­வாகும் வாய்ப்பு இருந்­தது. அதா­வது வெற்றி பெறு­வ­தற்கு கட்­சியின் செல்­வாக்கு மட்­டு­மன்றி தனி­ம­னித ஆளு­மையும் வாக்­காளர் மத்­தியில் செல்­வாக்கு செலுத்­தின. இது வாக்­காளர் அர­சியல் கட்­சிக்கு மட்டும் அடி­மைப்­ப­டாது தனிப்­பட்­ட­வர்­களின் ஆளுமை, செல்­வாக்கு என்­ப­வற்­றையும் கவ­னத்­தில்­கொண்டு தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்­கி­யது.

சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பின் கீழான தேர்தல் முறை­மையில் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தொகு­தி­ய­டிப்­ப­டையில் தொண்­ணூற்றி ஐந்து பேரும் ஆளும் கட்­சியின் நிய­ம­னத்தின் மூலம் ஆறு பேரும் நிய­மனம் பெற்­றனர். குறித்த ஆறு நிய­மன உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வா­காத சமூ­கங்­களின் பிரதி நிதித்­து­வங்­க­ளுக்­கா­ன­வை­யென்று கூறப்­பட்­டது. இருப்­பினும் அது ஆளுங்­கட்­சியின் சுய­தே­வைக்­கா­கவும் பயன்­பட்­டமை வர­லாறு.

1972 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பின்­ப­டி­யான தேர்தல் முறை­மையில் நிய­மன உறுப்­பினர் முறைமை நீக்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனை­வரும் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­மையின் கீழ் தெரி­வாகும் நிலை உரு­வாக்­கப்­பட்­டது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் வழ­மை­போன்று வட்­டார ரீதி­யாக நடத்­தப்­பட்­டது. அவற்­றிற்கு நிய­மன உறுப்­பினர் நிய­மனம் இடம் பெற­வில்லை. 1972 இன் அர­சி­ய­ல­மைப்பின் மூல­மான தேர்­தல்­களில் தனிப்­பட்ட ஆளு­மை­யுடன் கூடிய அர­சியல் கட்­சி­களின் செல்­வாக்­குள்­ள­வர்கள் மட்­டுமே மக்கள் பிர­தி­நி­தி­க­ளாகத் தெரி­வாகும் நிலை இருந்­தது. மக்கள் பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­வதில் அர­சியல் கட்சித் தலை­மை­க­ளுக்கு வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்யும் அதி­காரம் மட்­டு­மே­யி­ருந்­தது. பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்யும் நேரடி ஆதிக்கம் இருக்­க­வில்லை.

1978 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பின்­படி தேர்­தல்கள் விகி­தா­சா­ரப்­படி நடத்தும் நிலை ஏற்­பட்­டது. பாரா­ளு­மன்றத் தொகு­தி­முறை மாவட்ட தொகு­தி­மு­றை­யாக மாற்­றப்­பட்­டது. உள்­ளூ­ராட்சி சபை­களின் வட்­டா­ர­முறை முழு உள்­ளூ­ராட்சி சபை எல்­லை­யையும் உள்­ள­டக்­கிய வட்­டா­ர­மு­றை­யாக மாற்­றப்­பட்­டது. இத்­தேர்தல் முறையின் மூலம் குறிப்­பிட்ட தொகு­தியில் அல்­லது வட்­டா­ரத்தில் மட்டும் செல்­வாக்­கு­டை­ய­வர்கள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாகத் தெரி­வாகும் வாய்ப்பு மறுக்­கப்­பட்டு மாவட்­டத்­திலும், உள்­ளூ­ராட்சி பிர­தே­சத்­திலும் செல்­வாக்­குள்­ள­வர்கள் மட்­டுமே வெற்­றி­பெறும் வாய்ப்பு ஏற்­பட்­டது. இதனால் பல தனிப்­பட்ட செல்­வாக்­குள்­ள­வர்கள் சுயேட்­சை­யாகப் போட்­டி­யிட்டு வெற்­றி­பெறும் வாய்ப்பை இழந்­த­துடன் விரும்­பியோ விரும்­பா­மலோ அவ்­வா­றா­ன­வர்கள் அர­சியல் கட்சி சார்பில் போட்­டி­யிடும் நிலை ஏற்­பட்­டது. அர­சியல் கட்­சி­களின் ஆதிக்கம் வலுப்­ப­டுத்­தப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்­திற்கு விகி­தா­சார வாக்­குகள் மூலம் மக்­களால் நூற்று தொண்ணூற்­றாறு பேரும் அர­சியல் கட்­சிகள் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களின் விகி­தா­சார அடிப்­ப­டையில் கட்­சி­களின் தலை­மை­களால் இரு­பத்­தொன்­பது பேரும் நிய­மனம் பெற­வழி வகுக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்­திற்கு தேர்தல் மாவட்ட ரீதி­யாக மக்கள் செல்­வாக்குப் பெற்­ற­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். நிய­மனம் மூலம் அர­சியல் கட்­சி­களின் தேவைக்­கேற்ப நிய­ம­னங்கள் இடம்­பெற்­றன. நிய­மன பிர­தி­நி­தித்­து­வங்கள் மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளாக அமை­யாது அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளாக அமைந்­தன.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு நிய­மனப் பிர­தி­நி­தித்­து­வங்கள் இல்­லா­மையால் அவை முற்று முழு­தாக மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை மட்­டுமே கொண்­ட­வை­யா­யி­ருந்­தன.

பின்­னாளில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லா­னது மாவட்­டங்­களைத் தேர்தல் தொகு­தி­க­ளாகக் கொண்டு நடத்­தப்­பட்­டது. அதில் நிய­மனப் பிர­தி­நிதித்­து­வங்கள் இருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் பரந்­து­பட்ட பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மாகா­ண­சபைத் தேர்­தலில் அர­சியல் கட்­சி­களின் செல்­வாக்கு மேலோங்­கி­யி­ருந்­தது. தனிப்­பட்ட செல்­வாக்கு மிகவும் குறை­வா­க­வே­யி­ருந்­தது.

இறு­தி­யாக இவ்­வாண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் முறைமை கலப்பு முறையில் அதா­வது வட்­டார முறையில் அறு­பது வீதமும், அர­சியல் கட்­சிகள் பெற்­றுக்­கொண்ட வாக்­குகள் மூலம் நாற்­பது வீதமும் பிர­தி­நி­தித்­துவம் இடம் பெற்­றது. மக்­க­ளுக்கு நேரடி பொறுப்­புக்­கூறக் கூடி­ய­தாக வட்­டார ரீதி­யான பிர­தி­நி­தித்­துவ தெரிவு அறு­பது வீத­மாக அமைந்த போதிலும் மக்­க­ளுக்கு நேரடி பொறுப்பு கூற தேவை­யற்ற நாற்­பது வீதத்­தி­னரும் புதிய உள்­ளூ­ராட்சி சபையில் இடம் பெறும் நிலை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த நாற்­பது வீதத்­தினர் அர­சியல் கட்­சி­க­ளி­னதோ, சுயேட்­சைக்­கு­ழுக்­க­ளி­னதோ தலை­மை­களின் தேவை­க­ளுக்­காக தலை­மைத்­து­வங்­க­ளிடம் உள்ள நெருக்கம் மற்றும் செல்­வாக்கின் அடிப்­ப­டையில் நிய­மனம் பெறு­கின்­றனர். அதா­வது ஒரு உள்­ளூ­ராட்சி சபையில் மக்­களின் விருப்­புக்­கு­ரிய தெரிவு அறு­பது வீத­மா­கவும் அர­சியல் கட்சித் தலை­மை­களின் சுய விருப்பு நாற்­பது வீத­மா­கவும் அமை­கின்றது.

இது ஜன­நா­யக தத்­து­வத்தில் புதிய பரி­ணாமம் என்று கூறப்­ப­டு­கின்­றது. இதை நம்ப முடி­யுமா? குறித்த உள்­ளூ­ராட்சி சபையில் போட்­டி­யிட்டு மக்­களின் ஆத­ர­வுடன் தெரி­வாகும் தகு­தி­யற்­ற­வர்கள், மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள், அர­சியல் கட்­சி­களின் தலை­மையின் நெருக்­கத்தால் உள்­ளூ­ராட்சி சபை­களில் பிர­தி­நி­தித்­துவம் பெற்று மாதாந்த கொடுப்­ப­னவு மற்றும் வச­திகள், சலு­கைகள் பெறு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத்­தேர்தல் முறைமை ஜன­நா­யக கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் அமைந்­த­தல்ல என்­பதே அர­சியல் ஆய்­வா­ளரின் கருத்­தாகும்.

இவ்­வா­றுள்ள நிலையில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் ஐம்­பது வீத­மாக மக்­களின் வாக்­குகள் மூலமும் ஏனைய ஐம்­பது வீதம் கட்­சிகள், சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதி­யாகப் பெற்­றுக்­கொண்ட வாக்­குகள் மூலமும் பிர­தி­நி­தித்­து­வத்­துக்­கு­ரி­ய­தாக அமையும் என்ற முன்­மொ­ழிவு உள்ளது.

அதா­வது ஒரு மாகாண சபையின் மக்கள் பிர­தி­நி­திகள் ஐம்­பது வீத­மா­கவும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் ஐம்­பது வீத­மா­கவும் அமையும் என்­பது எதிர்­பார்ப்பு. இவ்­வா­றான முறையில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் இடம் பெற்றால் மக்கள் மத்­தி­யிலே செல்­வாக்­கற்ற, தேர்­தலில் போட்­டி­யிட்டு மக்­களின் வாக்­கு­களைப் பெற­மு­டி­யாத அர­சியல் கட்­சி­களின் அர­வ­ணைப்பில் உள்­ள­வர்கள் மாகாண சபை­களில் ஐம்­பது வீதம் இடம்­பெற வாய்ப்­புள்­ளது இதுவே உண்மை நிலை யதார்த்­தமும் கூட. மக்­க­ளது விருப்பை விஞ்­சிய அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் ஆதிக்­கத்தை நிலை­நாட்டும் தேர்தல் முறை­யாக நிய­மன உறுப்­பி­னர்­களை நிய­மிக்கும் முறைமை அமை­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்­திற்கும் இதே­முறை கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்ற கருத்­தா­ட­லு­முள்­ளது. இந்­நி­லை­யா­னது நாட்டில் படிப்­ப­டி­யாக மக்­களின் விருப்­புக்­க­மைய மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்கள் உரு­வா­வதை முறி­ய­டித்து அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் ஆதிக்­கத்தை மக்கள் மீது சுமத்­து­வ­தாக, திணிப்­ப­தாக அமையும் என்­பதில் ஐய­மில்லை.

ஆங்­கி­லேயர் ஜன­நா­யகம் என்ற கோட்­பாட்டு முறை­மையில் நம்­நாட்டில் தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்திச் சென்­றனர். இன்று நாமோ அதி­லி­ருந்து நழுவி படிப்­ப­டி­யாக மக்­க­ளுக்­காக மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட மக்­க­ளாட்சி என்ற நிலை­யி­லி­ருந்து விடு­பட்டு அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் ஆதிக்­கத்­திற்கு நம்மை உட்­ப­டுத்தி வரும் நிலைமை உரு­வா­கி­வ­ரு­வதை உண­ரா­துள்ளோம்.

இந்­நிலை தொட­ரு­மானால் காலப் போக்கில் அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் எதேச்­ச­தி­கா­ரத்­திற்கு நாடும், நாட்டு மக்­களும் கட்­டுப்­படும் நிலை ஏற்­பட இட­மேற்­படும். சரி­யாக நோக்­கும்­போது நமது நாட்டின் ஜன­நா­யக தேர்தல் முறைமை தடம்­பு­ரண்டு செல்­வதை அவ­தா­னிக்­கலாம். விகி­தா­சார தேர்தல் முறைமை வேட்­பா­ளர்­க­ளுக்கு அதி­க­ செ­லவை ஏற்­ப­டுத்­து­கின்­றது. பரந்த நிலப்­ப­ரப்பில் பணி­யாற்ற வேண்­டி­யேற்­ப­டு­கின்­றது. அதனால் அது பொருத்­த­மற்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றாயின் எது­வித செலவும் செய்­யாமல் பரந்த நிலப்­பரப்பில் மக்கள் எவ­ரையும் சந்­தித்து அவர்­க­ளது ஆத­ரவைப் பெறாமல் சில­வேளை வாக்­கா­ளர்­களால் வெறுக்­கப்­ப­டு­ப­வர்கள் கூட மக்­களின் வாக்­கு­களைப் பெற்று மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக ஆக முடி­யா­த­வர்கள் பின்­க­தவால் அர­சியல் கட்­சி­களின் தலை­மை­களின் தயவால் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மனம் பெறு­வது ஜன­நா­யக கோட்­பாட்டைக் கேலி­செய்­வ­தாக, தரம் தாழ்த்­து­வ­தாக அமை­கின்­றது. அதனால் தடுமாறும் நிலையிலுள்ள மக்கள் பிரதிநிதித்துவம் சரியான பாதையில் செல்ல வழிவகுப்பது இன்றைய தேவை­யாயுள்ளது சிந்திப்போமா?

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-22#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.