Sign in to follow this  
ragunathan

கிறுக்கியதில் பிடித்தது !

Recommended Posts

துடிப்பில்லாத இதயமும்

சில எலும்புத்துண்டுகளும்

 

 

துடிப்பில்லாத இதயமும்

சில எலும்புத்துண்டுகளும்

போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும்

போதும் என்கிறதுமனம்

 

உணர்வெல்லாம் விற்று

வெறுமை வாங்கி

சாம்பல் வெளியொன்றில்-அது

புரண்டிடத் துடிக்கிறது

 

விழி திறந்த வேளைகளில்

வெறுமைகள் தேடி

பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது

சலித்துக் கொள்கிறது

போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து

புழுதி புரண்டழுகிறது

 

வர்ணமெல்லாம் சேறுபூசி

தூரவெறிந்த தூரிகைகளை

தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது

குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி

நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது

இந்தப் பாழாய்ப்போன மனம்

 

ஒரு கைப்பிடிச் சாம்பலும்

சில எலும்புத்துண்டுகளும்

போர்த்தியிருக்கத்தோலும்

கூடவே துடிப்பில்லாத இதயமும்

போதுமென்று புலம்புகிறது !

 

என்னை ஆக்கிரமி !

 

 

வா, வந்து முற்றாக என்னை ஆக்கிரமி

என் உணர்வெல்லாம் பந்தாக்கி

மனவறையில் எறிந்து விளையாடு

உனது தேடல்களின் சாயல் என்று எனை அழை

அடிக்கடி எனக்கதை நினைவூட்டு

ரத்தமும் சதையுமான என் இதயத்தை சருகாக்கு

உனது தேடல்களின் தெருக்களின் ஓரத்தில் அதை எறிந்துவிட்டுப் போ

உனது தேடல்கள் தொடரத்தும் முடிவில் எவருமே இல்லை என்றால் அதே தெருக்களில் நடந்து வா

வந்து உனக்காகக் கத்திருக்கும் எனதியத்தை தேடியெடு பத்திரப்படுத்து

அப்போதாவது உனது தேடல்களின் முடிவு நான் என்று சொல்

எனது இதயம் மீண்டும் துளிர்க்கும்

 • Like 9
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கவிதையின் கருப் பொருள் ...தேடல் முடிவில்லாதது என்பது போல உள்ளது! உண்மயும் அது தானே! பிரபஞ்சத்தின் இயக்கமும் அதைத் தானே சொல்கின்றது

எல்லாமே.... ஒரு வட்டம் தான்!

தொடர்ந்தும் கிறுக்குங்கள், ரகு!

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காற்றில்லா பொழுதொன்றில்

 

காற்றில்லா பொழுதொன்றில்

மணல்வெளிக் கிறுக்கல்களில்

காவியம் எழுதுகிறேன்

தொலைவில் தெரியும் அலைகள்

திருடும் எனத் தெரிந்தும்

காவியம் நிற்க மறுக்கிறது

ஆழ்கடல் அழித்ததுபோக மீதியெல்லாம் நான் அழிக்கிறேன் என்கிறது அலைகள் ..

ஆனாலும், காவியம் நிற்கப்போவதில்லை

நாளுக்கொரு அத்தியாயம் தொடங்கி

காவியம் வளர்கிறது

தொடர்வதற்கான காரணங்களுக்கு என்னிடம் பஞ்சமில்லை...

எனது கேள்விகளுக்கும் நானே விடைகளை எழுதிக்கொள்கிறேன்

 

 

எனது காவியத்தின் நாயகன்

 

காரிருட்டில் ஒளிபோல அவன் வந்தான்

உலகமெல்லாம் நீதான் என்றான்

விடியும்பொழுது எமக்கு ஒன்றாக விடியுமென்று சத்தியம் செய்தான் நம்பினேன், முழுவதுமாக

காவியத்தின் நாயகனாகினான் அவன்

நாட்கள் தொடர அவன் தனக்கென்று தனியே எழுதத் தொடங்கினான்

நான் அழித்து அழித்து அவன் எழுதும் காவியத்துள் - எனைப் புகுத்திக்கொண்டேன்

என் நிறைவேறா ஆசைகள் பற்றியும் நீர்த்துப்போன நம்பிக்கை பற்றியும் - அவன் பேசவில்லை

ஆனாலும் எனது காவியத்தில் அவன் இன்றும் நாயகன்தான்

அவனுக்காகவே எத்தனை முறை காவியம் அழித்து எழுதினேன்?

கணக்கில் அடங்காதவை போக

ஆயிரத்தொருமுறை ஆயிற்று இப்போது!

எப்போது நிற்பேன் என்று தெரியவில்லை

பேனாவில் மை ஓயும்வரை - அல்லது உடலில் குருதி தீரும்வரை

மணலில் காவியம் கிறுக்குகிறேன்

நிறைவேறா ஆசைகள் கொண்டும், திணிக்கப்பட நம்பிக்கைகள் கொண்டும்

காவியம் கிறுக்குகிறேன்

துரத்தே அலை தெரியும் மணற் காடொன்றில் !

 

 

 

 • Like 4
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எனது முதலாவது பதிவில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன, அவற்றைத் திருத்துவது எப்படி? 

Share this post


Link to post
Share on other sites

மொட்டைச் சுவர்களில் சித்திரங்கள் கிறுக்கினேன்...

சிவப்பும், மஞ்சளும் பச்சையும் என்று

எண்ணங்களுக்கு வர்ணம் பூசிச் சித்திரம் தீட்டினேன்...

மை காயுமுன்னே மழையும் வெயிலும் பட்டுச் சித்திரம் கரைகிறது...

கரைந்தவை போக மீதமெல்லாம் சேர்த்து வைத்தேன்..

மழைவரா இலையுதிர் காலத்தில் பார்ப்பதற்கு..

வந்ததோ கோடை காலமென்று எவருமே சொல்லவில்லை..

கடுங்கோடையென்றாலும் கிடைத்த வர்ணம் கொண்டு தீட்டலாம் என்று இருந்தேன்..

கோடையோ, என் தூரிகைகளை காய்த்துப் போட்டது..

கடுங்கோடையிலும் குளிர்காற்றுப்போல ஒரு காலம்...

வறண்ட வர்ணங்களும், முரிந்த தூரிகையும் எடுத்து வைத்தேன் மீண்டும் என் சித்திரம் கிறுக்க ஆனால் இந்தக் குளிர்காலமும் எதுவரை ?

 

 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நன்றாக இருக்கிறது 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிசப்தமான இரவுகளில் நான் விழித்திருக்கிறேன்

உறக்கங்கள் தேடி நான் அலைவதில்லை

எனக்கென்று எவருமேயில்லை என்று நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும் தூக்கமும் என்னை விட்டுச் சென்றுவிடுகிறது

 

கால்கள் குறுக்காகி

என் கைகளே என்னைச் சுருக்க

முழங்கால்களிடையே தலை புதைத்து

விழிகள் தரையைக் குத்திட

நான் விழித்திருக்கிறேன்

 

மணிப்பொழுதுகள் கடந்துபோக நான் காத்திருக்கிறேன்

சிலர் தவிர்த்து எவர்க்காகவும் எதற்காகவும்

நான் இனி இருக்கப்போவதில்லை

என்மீது ஏறியிருக்கும் உலகத்துச் சுமையெல்லாம் இறங்கிச் செல்லக் காத்திருக்கிறேன்

அது வரை - நிசப்தமான இரவுகளில் நான் விழித்திருக்கிறேன்.

 

எனக்காகவும் ஒருமுறை வாழ்ந்துபார்ப்பதற்காக !

 

 

 • Like 2
 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, ragunathan said:

நிசப்தமான இரவுகளில் நான் விழித்திருக்கிறேன்

உறக்கங்கள் தேடி நான் அலைவதில்லை

எனக்கென்று எவருமேயில்லை என்று நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும் தூக்கமும் என்னை விட்டுச் சென்றுவிடுகிறது

 

எனக்கு சொல்லப்படுவது போலுள்ளது

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, colomban said:

எனக்கு சொல்லப்படுவது போலுள்ளது

ஓ...அப்படியா? இந்த வயதில் எம்போன்ற பலருக்கு வரும் ஒரு நிலைதான் இது

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்தும் எழுதுங்கள்.

நன்றாக இருக்கிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்களின் கிறுக்கல்கள் எல்லாம் தலையை கிர் என்று சுற்ற வைக்கிறது, பல நினைவுகள் தெறிக்கின்றன.... தொடர்ந்தும் கிறுக்குங்கள்......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this