Jump to content

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி...தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி


Recommended Posts

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி

02MAIN18082018Page1Image0003-89ddbc307b241aa6514dcf4f791edbe4ff86269c.jpg

 

(ஆர்.ராம்)

தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி

ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் வேட்­பா­ர­ளாக கள­மி­றங்­கு­வ­தற்கு இந்­தியா பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தாக இரா­ஜ­தந்­திர வட்­டாரத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து அடுத்­து­வரும் காலத்தில் வடக்கின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முழு­மை­யான தயார்ப்­ப­டுத்­தல்­களில் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்சி கள­மி­றங்­கி­யுள்­ள­தாக அக்­கட்­சியின் உள்­ளகத் தக­வல்கள் மூலம் அறிய முடி­கின்­றது.

வட­மா­காண சபைக்­கான ஆயுட்­காலம் எதிர்­வரும் ஒக்­டோபர் 25ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வர­வுள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ரா­வதை தனது கன­வாகக் கொண்­டி­ருக்கும் டக்ளஸ் தேவா­னந்தா பல்­வேறு தரப்­பட்ட தரப்­பி­னர்­க­ளு­டனும் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது குறித்து ஆலோ­ச­னை­களை நடத்தி வரு­கின்றார்.

அதன்­பி­ர­காரம் அண்­மையில் இந்­திய இரா­ஜ­தந்­திர தரப்­பு­க­ளு­டனும் அவர் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டுள்ளார். இதன்­போது அத்­த­ரப்­பினர் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தோடு முழ­மை­யான ஆத­ர­வினை நல்­குவோம் என்ற தொனி­யி­லான சமிக்­ஞை­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

குறிப்­பா­க­வ­ட­மா­காண சபைக்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது குறித்து கூட்­ட­மைப்­பிற்குள் சர்ச்­சைகள் நீடித்­து­வ­ரு­கின்­றன. அதே­நேரம் தற்­போ­தைய முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தனி­யான கூட்­ட­ணியை அமைத்து கள­மி­றங்­கு­வது தொடர்­பி­லான திரை­ம­றைவு நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

இவ்­வ­றான நிலையில் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் கூட்­டணி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மாக இருந்தால் இந்­தியா தொடர்பில் எதிர்­ம­றை­யான சிந்­த­னை­யு­டைய அல்­லது இந்­தி­யாவை கடு­மை­யான விமர்­சித்து வரு­கின்ற தரப்­புக்­க­ளையும் அவர் இணைத்­துக்­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தையும் இந்­திய இரா­ஜ­தந்­திரத் தரப்­புக்கள் கவ­னத்தில் கொண்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து இந்­தி­யா­வுக்கு நேச­மில்­லாத சக்­தி­களை வலுப்­ப­டுத்தும் வகையில் அர­சியல் நகர்­வுகள் அமை­யக்­கூ­டாது என்ற தொனியில் சூட்­சும அறி­வு­ரை­யொன்றும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு இந்­திய இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களால் வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு மீண்டும் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக அவ­ரையே கள­மி­றக்­கு­வது குறித்து கூட்­ட­மைப்பின் தரப்­புக்­க­ளு­டனும் இந்­திய இரா­ஜ­தந்­திர தரப்­புக்கள் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­ட­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. எவ்­வா­றா­யினும் இந்த விடயம் தொடர்பில் எவ்­வி­த­மான உறு­தி­யான முடி­வு­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அத்­துடன் விக்­கி­னேஸ்­வரன் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­காத பட்­சத்தில் அதற்கு பதி­லாக மாவை.சோ.சேனா­தி­ராஜா கள­மி­றக்­கப்­ப­டு­வ­தற்கே அதிக வாய்ப்­புக்கள் உள்­ள­தாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உள்­ள­கத்­த­க­வல்கள் குறிப்­பிட்­டுள்­ளன. மாவை.சேனா­தி­ராஜா இந்­தி­யா­வுக்கு எதி­ரான சிந்­த­னை­களை கொண்­டி­ருக்­காது விட்­டாலும் பொது­வாக கூட்­ட­மைப்பின் அண்­மைக்­கால நகர்­வுகள் தொடர்­பாக இந்­தியா கரி­ச­னையைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் மேலும் அறி­ய­மு­டி­கின்­றது.

மறு­பக்­கத்தில் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை முறை­மை­களை நீக்கி மாவட்ட சபை­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டு­மென்ற கோரிக்கை எழுத்­து­மூ­ல­மாக வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் வசந்த சேனா­ந­ாயக்­க­வினால் இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் மற்றும் பாரா­ளு­மன்ற அர­சியல் தலை­வர்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தென்­னி­லங்­கை­யிலும் அத்­த­கையை சிந்­த­னைகள் மேலெ­ழுந்து வரு­கின்­றன.

ஆகவே இத்­த­கைய விட­யங்கள் மீது அதிக கரி­சனை கொண்­டுள்ள இந்­திய இரா­ஜ­தந்­திரத் தரப்­புக்கள், 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை ஆரம்பம் முதல் ஆத­ரித்து வரு­ப­வரும் மாகாண சபை முறைமை ஊடாக காரி­யங்­களை சாதிக்க முடியும் என்­பதில் அதீத நம்­பிக்கை கொண்­ட­வரும் இந்­தி­ய­வுக்கு எதி­ரான சிந்­த­னையைக் கொண்­டி­ருக்­கா­த­வ­ரு­மாக டக்ளஸ் தேவா­னந்தா காணப்­ப­டு­கின்றார் என இந்­திய இரா­ஜ­தந்­திர தரப்­புக்கள் கரு­து­கின்­றன.

அத்­த­கைய ஒருவர் வட­மா­காண சபைத் தேர்தல் களத்தில் பிர­வே­சிப்­ப­தா­னது இந்­தி­யா­வுக்கும், இந்­தி­யா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட மாகாண சபை முறைமை பாது­காக்­கப்­ப­டு­வ­தற்கும் வழி­வ­குக்கும் என்றும் உயர்­மட்டத் தரப்­புக்கள் கரு­து­வதன் கார­ணத்­தி­னாலேயே மேற்­படி சாத­க­மான சமிக்ஞை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதேவேளை சூளைமேட்டுச் சம்பவத்தினை அடுத்து டக்ளஸ் தேவானந்தாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கசப்பான நிலைமை நீடித்திருந்தது. இந்நிலையில் அச்சம்பவம் குறித்த வழக்கு நிலுவையில் காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு அவ்வழக்கிற்கான சாட்சியப்பதிவினை இலங்கையில்

உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத் திலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் டக்ளஸ் தேவானந்தா வழங்கி யிருந்தார்.

இந்­நி­லையில் அவ்­வ­ழக்கின் சாட்­சி­களில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டுகள் மற்றும் பொலிஸ்­த­ரப்பு சாட்­சி­யங்கள் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு சாத­க­மாக காணப்­ப­டு­வ­தாக ஈ.பி.டி.பியின் உயர்­மட்­டத்­த­ரப்­புக்கள் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-08-19#page-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனால் வரும்காலத்தில் ..வார்டு கவுன்சிலர்க்கு கூட கிந்தியாவின்ற ஆதரவு வேணுமாக்கும் அட போங்கப்பா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்படியே போனால் வரும்காலத்தில் ..வார்டு கவுன்சிலர்க்கு கூட கிந்தியாவின்ற ஆதரவு வேணுமாக்கும் அட போங்கப்பா ?

Image may contain: 1 person

அடுத்து... ஸ்ரீதரன் எம். பியும்.... தனது ஆசையை,  இந்தியாவிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.