Jump to content

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி


Recommended Posts

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

 
 
98col63131301077_6034193_15082018_AFF_CM

66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இவற்றுள் யாழ் மாவட்டத்திலிருந்து 04 அணிகளும் மன்னார் மாவட்டத்திலிருந்து இரண்டு அணிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒரு அணியும் அடங்குகின்றன.

66 போட்டிகள் அடங்கிய இச்சுற்றுப்போட்டியின் 5 போட்டிகள் மாத்திரம் கிளிநொச்சியிலும் ஏனைய அனைத்துப் போட்டிகளும் யாழ். துரையப்பா விளையாட்டங்கிலும் நடைபெறுகின்றன. யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஒரு நாளுக்கு தலா இரண்டு போட்டிகள் வீதம் அனைத்து போட்டிகளும் மின்னொளியில் இடம்பெறுகின்றன. முதலாவது போட்டிகள் தினமும் பி.ப. 04.00 மணிக்கும் இரண்டாவது போட்டிகள் இரவு 09.00 மணிக்கும் ஆரம்பமாகின்றன.

போட்டியில் வெற்றி பெற்று முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுகின்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணம், பதக்கம் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கப்படவுள்ளன.

 

 
 

முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணிக்கு பணப்பரிசாக ரூபா. 5,000,000.00 உம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணிக்கு ரூபா. 3,000,000.00 உம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொள்கின்ற அணிக்கு ரூபா 1,500,000.00 உம் நான்காம் இடத்தைப் பெறுகின்ற அணிக்கு ரூபா. 500,000.00 உம் வழங்கப்படவுளளது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்படுபவருக்கு ரூபா. 10,000.00 பணப்பரிசாக வழங்கப்படுகின்றது.

ப்ளே ஓப் இறுதிப் போட்டிகளைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் 10வது போட்டி தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தற்பொழுது வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அணிகள் தமது ப்ளே ஓப் வாப்பினை உறுதிப்படுத்திக் கொள்தற்கான சமரில் ஈடுபட்டுள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. சில போட்டிகள் எதிர்பாராத முடிவுகளை எய்தியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகின்றது.

Vavuniya Warriors அணி ப்ளே ஓப் வாய்ப்பை பெற்றுக்கொள்ள கடுமையான சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனலாம். எனவே இவ்வணிக்கு Tilko Conqerors அணியுடனான போட்டி மிகவும் சவாலான போட்டியாக அமையப் போகின்றது என்பதில் ஐயமில்லை.

http://www.thinakaran.lk/2018/08/16/விளையாட்டு/26218/வடக்கு-கிழக்கு-பிறீமியர்-லீக்-உதைபந்தாட்டச்-சுற்றுப்போட்டி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.