Jump to content

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 12 ஆம் ஆண்டு நினைவு இன்று


Recommended Posts

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 12 ஆம் ஆண்டு  நினைவு இன்று

 

 

images-1-5.jpg

முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான இலங்கை வான்­ப­டை­யின் குண்­டுத்­தக்­கு­த­ லில் கொல்­லப்­பட்ட 61 மாண­வி­க­ளின் 12 ஆண்டு நினைவு தினம் இன்­றா­கும்.
2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்­ப­டை­யின் இரண்டு கிபிர் செஞ்­சோலை சிறு­வர் இல்­லம் மீது குண்­டுத் தாத் தாக்­கு­தலை நடத்­தி­யது.

61 மாண­வி­கள் கொல்­லப்­பட்­ட­து­டன், 100க்கும் மேற்­பட்ட மாண­வி­கள் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­த­னர். அன்று இந்த சம்­ப­வம் தமி­ழர் தாய­கம் – புலம்­பெ­யர் தேசம் எங்­கும் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

போரால் பெற்­றோரை, பாது­கா­வ­லரை இழந்த பெண்­பிள்­ளை­க­ளின் பார­ம­ரிப்­புக்­காக தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பணிப்­பு­ரை­யின் பேரில் 1991 ஐப்­பசி 23ஆம் திகதி செஞ்­சோலை சிறு­வர் இல்­லம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. அப்­போது தலை­வர் பிர­பா­க­ர­னால் அனுப்­பப்­பட்ட வாழ்த்­துச் செய்­தி­யில் ‘வர­லாற்­றுப் பெரு­மை­மிக்க சுதந்­தி­ரப் போராட்ட சூழ­லில் இந்­தச் செஞ்­சோலை வளா­கத்­தில் நாம் இன்று இளம் விதை­க­ளைப் பயி­ரி­டு­கின்­றோம்.

இவை வேர்­விட்டு வளர்ந்து விழு­து­கள் பரப்பி விருட்­சங்­க­ளாய் மாறி ஒரு காலம் தமி­ழீழ தேசத்­தின் சிந்­த­னைச் சோலை­யா­கச் செழிப்­புற வேண்­டும் என்­பதே எனது ஆவல். இந்த புரட்­சி­க­ர­மான பணி வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட எனது நல்­லா­சி­கள்’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

செஞ்­சோலை சிறு­வர் இல்ல மாண­வி­கள், முல்­லைத்­தீவு வள்­ளி­பு­னத்­தில் தற்­காப்பு பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­ததை அறிந்த இலங்கை அரச படை­கள், 2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை அரச வான்­ப­டை­யின் இரண்டு கிபிர் விமா­னங்­களை அனுப்பி மிலேச்­சத்­த­ன­மாக தாக்­கு­தல் நடத்­தின.

இதில் 61 மாண­வி­கள் கொல்­லப்­பட்­ட­து­டன் 100இற்­கும் அதி­க­மா­ன­வர்­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளில் பலர் தற்­போது சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­க­ளாக உள்­ள­னர். இந்த தாக்­கு­தல் விடு­த­லைப் புலி­க­ளின் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டோர் மீதே நடத்­தப்­பட்­டது என இலங்கை அரசு அப்­போது உலக நாடு­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருந்த்து.

எனி­னும் மாண­வி­கள் தற்­காப்­புப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த போதே விமா­னத் தாக்­கு­தல் நடப்­பட்­டது என பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளும் தொண்டு நிறு­வ­னங்­க­ளின் அதி­கா­ரி­க­ளும் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

மாண­வி­கள் படு­கொ­லை­யின் 12ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்வு இன்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணிக்கு யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/09/செஞ்­சோ­லை-படு­கொ­லை­யின்-12-ஆம்-ஆண்டு-நினைவு-இன்று.html

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக சிறுவர்கள், பெண்கள் கொல்லப்பட்ட செஞ்சோலைப் படுகொலை!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்….

Sensolai.jpg?resize=800%2C450

 

செஞ்சோலை பள்ளி மாணவர் இனப் படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியாது. அப் படுகொலை இடம்பெற்ற கனத்துப்போன அந்த நாள் இன்னும் அதிர்ச்சியுடன் நினைவில் நிற்கிறது. 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வடக்கில் போர் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் தொடங்கப்பட்ட போரால் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். வடக்கில் போர்ச் சூழல் ஏற்பட்டு ஓர், இரு நாட்கள் தான் ஆகியிருந்தன. யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு, யாழ்ப்பாணமட் முழு நேர ஊரடங்கில் வைக்கப்பட்டிருந்த நாட்கள் அவை.

அப்படி ஒரு தருணத்தில்தான் வன்னியில் செஞ்சோலைப்படு கொலை நிகழ்த்தப்பட்டது. ஒருவரல்ல, இருவரல்ல, 53 மாணவிகள் கொல்லப்பட்டார்கள். ஈழத்து சிறுவர்களின் வாழ்க்கையை விமானத்தைப்போல ஒரு யுத்த தளவாடம் பாதித்ததில்லை. துப்பாக்கிச் சன்னங்களை எண்ணி விளையாடுவதும், வெற்று எறிகணைகளை இருக்கையாக பாவித்துக் கொள்வதும் போர்க்காலத்தின் வாழ்க்கையாகிப் போனது. ஆனால் விமானங்கள் அப்படியல்ல. விமானங்களின் ஏற்படுத்திய பதகளிப்பும் பாதிப்பும் ஈழக் குழந்தைகள், சிறுவர்களின் வாழ்க்கையை இருண்ட பதுங்கு குழிக்குள் தள்ளியது.

விமானங்கள் நாளுக்கு நாள் இனக் கொலை செய்யும் உத்திகளை மாற்றிக் கொண்டிருந்தன. புக்காரா, சுப்பர் சொனிக், கிபீர் என்று அதன் பெயர்களை போர்க்கால சிறுவர்கள் மறந்துவிட மாட்டார்கள். விமானங்கள் எங்களை வானத்திடமிருந்து பிரித்தன. விமானங்கள் எங்களை பறவைகளிடமிருந்து பிரித்தன. விமானங்களால் நாங்கள் வானத்தை பார்க்க அஞ்சினோம். விமானங்களால் நாங்கள் பறவைகளை கண்டு அஞ்சினோம். அப்படி ஒரு யுகத்திற்கும் வாழ்க்கைகும் ஈழச் சிறுவர்களை தள்ளியது விமானங்கள்.

ஈழத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு போரில் ஆலயங்கள்மீதும் பாடசாலைகள்மீதும், அகதிமுகாங்கள்மீதும், மக்களின் வீடுகள் மீதும் வைத்தியசாலைகள்மீதும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. நாகர் கோவில் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 19955ஆம் ஆண்டில் நடந்த விமானத் தாக்குதலில் 39 மாணவர்கள் பலியாகினார்கள். அதன் பின்னர், அதிக எண்ணிக்கையான மாணவிகள், 53பேர் படுகொலை செய்யப்பட்டனர் செஞ்சோலையில். உலகிலேயே அதிக பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இதுவாகும். இத்தகைய பெருமையைத்தான் இலங்கை அரசாங்கம் தனதாக்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் இவர்கள் என்பதையும் இவர்கள் அனர்த்த முகாமைத்துவ தலைமைத்துவப் பயிற்சிக்காக சென்றமையும் கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் உறுதி செய்தது. அத்துடன் அதற்கான முறையான பதிவுகள், கடிதங்கள் யாவும் பேணப்பட்டிருந்தன. போரில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுதி செய்தது. ஆனால் இலங்கை அரசு, கொல்லப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் என்றது. தமக்கு 100வீதம் திருப்தி தருகின்ற தாக்குதல் இது என்று அப்போதைய இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார். செஞ்சோலையில் 50க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மகிந்த ராஜபக்ச புன்னகையுடன் பதில் அளித்தார். அவர்கள் புலிகள். நாங்கள் பயங்கரவாதிகளை தான் கொன்றிருக்கிறோம். இந்த தாக்குதல் சரியானது. இந்த தாக்குதல் எனக்கு 100வீதம் திருப்தி தருகிறது என்றார்.

விடுதலைப் புலிகளின் நிலைகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் குழந்தைப் போராளிகள் என்றும் வாய் கூசாமல் கூறினார் அன்றைய இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. அப்பாவி மக்கள்மீது நடாத்தப்படும் அத்தனை தாக்குதல்களையும் அப்பாவி மக்கள்மீது எறியப்படும் அத்தனை குண்டு வீச்சுக்களையும் இவர் அவ்வாறே கூறினார். இதனையண்டிய நாட்களில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் வீட்டில் இருந்தபோது குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர்களையும் விடுதலைப் புலிகள் என்றே சிங்கள அரசு கூறியது.

நவாலி தேவலயத்திலும் நாகர்கோவில் பாடசாலையிலும் நந்தாவில் அம்மன் கோவிலிலும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்றால் இவர்களும் விடுதலைப் புலிகளே. அங்கு கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால் இவர்களும் பயங்கரவாதிகளே. செஞ்சோலைப்படுகொலை தமிழ் மக்களின் வரலாற்றில் தமிழ் மாணவர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக செஞ்சோலைப்படுகொலை நிலைத்துவிட்டது. ஒரு பெரும் கல்விச் சமூகத்தை இழந்திருக்கிறோம் என்ற பொறுக்க முடியாத பெருந்துயரை அரசு தமிழருக்கு கையளித்தது.

மு/வித்தியானந்தா கல்லூரி மாணவிகள்

நிவேதனா தமிழ்வாசன்,அனோயா சுந்தரம்,தயானி கிரிதரன்,புவனேஸ்வரி புவனசேகரம்

மு/.குமுளமுனை மகாவித்தியாலைய மாணவிகள்

நிந்துயா நல்லபிள்ளை,ராஜிதா வீரசிங்கம்,கெளசிகா உதயகுமார்,சுகிர்தா சாந்தகுமார்,தாட்சாயணி விவேகானந்தம்

மு /புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவிகள்

பென்சிடியூலா மகாலிங்கம்,தர்சிகா தம்பிராசா,சுதர்சினி துரைலிங்கம்,

மு/உடையார்கட்டு மகாவித்தியாலைய மாணவிகள்

கோகிலா நாகலிங்கம்,மதனி பாலகிருஸ்ணன்,விதுசா கனகலிங்கம்,நிருபா கனகலிங்கம்,அருட்செல்வி முருகையா,இந்திரா முத்தையா,கோகிலா சிவமாயஜெயம்,சாந்தகுமாரி நவரட்ணம்,கார்த்திகாயினி சிவமூர்த்தி,சத்தியகலா சந்தானம்,தபேந்தினி சண்முகராஜா

மு/விசுவமடு மகாவித்தியாலைய மாணவிகள்

நந்தினி கணபதிப்பிள்ளை,யசோதினி அருளம்பலம்,ரம்ஜா ரவீந்திரராசா,தீபா நாகலிங்கம்,தீபா தம்பிராசா,நிரந்ச்சலா திருநாவுக்கரசு,நிசாந்தினி நகுலேஸ்வரன்,தயாளினி தம்பிமுத்து,கேமாலா தர்மகுலசிங்கம்,சிந்துஜா விஜயகுமார்,ஜெசீனா சந்திரன்

மு /முல்லைத்தீவு மகாவித்தியாலைய மாணவிகள்

கம்சனா ராஜ்மோகன்,கலைப்பிரியா பத்மநாதன்,தனுஷா தணிகாசலம்,சுகந்தினி தம்பிராசா,வத்சலாமேரி சிவசுப்பிரமணியம்,திவ்யா சிவானந்தம்,பகீரஜி தனபாலசிங்கம்,கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை

கிளி/தர்மபுரம் மகாவித்தியாலைய மாணவிகள்

நிவாகினி நீலையனார்,

மங்களேஸ்வரி வரதராஜா,மகிழ்வதனி இராசேந்திரம்,

மு /செம்மலை மகாவித்தியாலைய மாணவிகள்

கிருத்திகா வைரவமூர்த்தி,திசானி துரைசிங்கம்,வசந்தராணி மகாலிங்கம்,நிவேதிகா சந்திரமோகன்

மு /ஒட்டுசுட்டான் மகாவித்தியாலைய மாணவி

நிலோஜினி செல்வம்

கிளி /முருகானந்தா மகாவித்தியாலய மாணவிகள்

பிருந்தா தர்மராஜா,சர்மினி தேவராசா

கிளி /பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவி

லிகிதா குபேந்திரசிங்கம்

செஞ்சோலை சிவப்புசோலையானது.

மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/91422/

Link to comment
Share on other sites

செஞ்சோலைப் படுகொலை ; நினைவேந்தல் நிகழ்வு 

39120550_2179854912044333_40796413697678

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  வன்னிக்குரோஸ்” நினைவேந்தல் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

செஞ்சோலை வளாக வீதியில்  விளக்கேற்றி அஞ்சலி நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது.

முல்லைத்தீவுப் பகுதியில், 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் 14 ஆம் நாள் இலங்கை அரச வான் படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லம்மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

http://newuthayan.com/story/11/செஞ்சோலைப்-படுகொலை-நினைவேந்தல்-நிகழ்வு.html

Link to comment
Share on other sites

செஞ்சோலையில் பாலகர்களை கொன்றுக் குவித்த கொடிய தினம்: மட்டக்களப்பில் நினைவஞ்சலி

 

DSCN2786-720x450.jpg

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்த கொடிய நாள் இன்றாகும்.

இக்கொடிய தினத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்கள் வைத்து உயிரிழந்த சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌனப்பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன் நினைவாக மட்டக்களப்பு கொடுவாமடுவிலுள்ள முன்பள்ளி பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு நிதி அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் கடந்த 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCN2783-428x285.jpgDSCN2792-428x288.jpgDSCN2818-428x285.jpg

http://athavannews.com/செஞ்சோலையில்-பாலகர்களை-க/

Link to comment
Share on other sites

செஞ்சோலைப் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் இன்று !

 

 
 
Image

முல்லைத்தீவில் ஓகஸ்ட் 14, 2006 சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று காலை நினைவுகூரப்பட்டது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உட்பட பல பிரதேசங்களிலும் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படமும் வைத்து நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா வான்படையால் குண்டு வீசித் தாக்கப்பட்ட அப்பாவி மாணவிகளில்,

பெரும்பாலனவர்கள் 15-18 வயதுக்குட்பட்ட மாணவிகளேயாவர். அவ்வாறு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) கற்கும் மாணவிகள். இவர்கள் உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரிவுசெய்யப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்தனர்.

அவ்வாறு கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.

இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு,பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (CWRD)" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு படுகொலைக்கு பல சர்வதேச அமைப்புக்களும் கண்டனம் வெளியிட்டிருந்த வேளை,

சிறிலங்கா அரச பேச்சாளராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியிருந்தார்.

எனினும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தன. ஆனாலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/104708?ref=imp-news

 

Link to comment
Share on other sites

நினைவஞ்சலிகள்! 

நாங்கள் அஞ்சலி செய்கிறோம் ஆனால் இந்தக் கொடூரத்தை மேற்கொண்ட மனித மிருகங்கள் இன்றும் அரசு செய்கின்றன.

Link to comment
Share on other sites

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு…

IMG_8384.jpg?resize=800%2C533
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆண்டு ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் பன்னிரெண்டாவது ஆண்டு நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது

 

படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது வள்ளிபுனம் பிரதேசத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் இயங்கிய இடத்தில் மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தில் காலைப் பொழுதில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG_8392.jpg?resize=800%2C533IMG_8397.jpg?resize=800%2C533IMG_8412.jpg?resize=800%2C533

IMG_8429.jpg?resize=800%2C533IMG_8460.jpg?resize=800%2C533IMG_8467.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91434/

 

 

 

யாழ் பல்கலையில், செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல்…

செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

IMG_9108.jpg?resize=800%2C600IMG_9117.jpg?resize=800%2C600IMG_9124.jpg?resize=800%2C600IMG_9131.jpg?resize=800%2C600IMG_9137.jpg?resize=800%2C600IMG_9147.jpg?resize=800%2C600IMG_9154.jpg?resize=800%2C600IMG_9155.jpg?resize=800%2C600IMG_9170.jpg?resize=800%2C600IMG_9181.jpg?resize=800%2C600IMG_9202.jpg?resize=800%2C600IMG_9214.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/91443/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

ஹிந்திய சுதந்திர தினத்தில் லான்ஸ் ஆடப் போன கூட்டம்.. இந்த மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை நடத்தி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.