Jump to content

கேர­ளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம்


Recommended Posts

கேர­ளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம்

 

கேர­ளாவில் வெள்­ளத்தால் 8,316 கோடி ரூபா அள­வுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக முதல்­கட்ட மதிப்­பீட்டில் தெரியவந்­துள்­ளது. கடந்த 1924 -ஆம் ஆண்­டுக்குப் பிறகு கேர­ளாவில் மழை மிக மோச­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

kerralsa0020.jpg

கேர­ளாவில் கடந்த சில நாட்­க­ளாகப் பெய்து வரும் வர­லாறு காணாத கன மழையால் அம்­மா­நிலம் முழுமை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கோழிக்­கோடு, இடுக்கி, மலப்­புரம், கண்ணூர், வய­நாடு ஆகிய மாவட்­டங்­களிலுள்ள ஆறு­களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது.

மாநிலம் முழு­வதும் 60 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் 1,750 தற்­கா­லிக நிவா­ரண முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்டுள்­ளனர்.இங்கு தஞ்சம் அடை­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால் கூடுதல் முகாம்களைத் திறக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் மாநிலம் முழு­வதும் இது­வரை 39 பேர் பலி­யாகியுள்­ளனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்­துள்­ள­தோடு 101 வீடுகள் முழு­வ­து­மாக இடிந்து விழுந்­துள்­ளன.

இரா­ணுவ வீரர்களும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு­வினரும் சாலை­களை தற்­கா­லி­க­மாக சீர­மைத்து பொது­மக்­களைப் பத்­தி­ர­மாக மீட்டு நிவா­ரண முகாம்­க­ளுக்கு அழைத்து வந்­த­வண்ணம் உள்­ளனர். வெள்ளம் சூழ்ந்த பகு­தி­களில் மக்கள் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் கிடைக்­காமல் அவ­திப்­பட்டும் வரு­கின்­றனர். 

kerala_01.jpg

மண்சரிவு மற்றும் கனமழையால் ஆயி­ரக்­க­ணக்­கான வாக­னங்­களும் சேதமடைந்­துள்ளன. 10 ஆயிரம் கி.மீ.நீளத்துக்கு சாலைகள் சேதமடைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வெள்ளப் பாதிப்­புக்­காக உட­ன­டி­யாக 400 கோடி ரூபா வழங்­க­வேண்டும் என்று கேரள முதலமைச்சர் விஜயன் மத்­திய அர­சிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

வெள்­ள­ப் பா­திப்­பு­களால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபா அள­வுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். மேலும், 1,200 கோடி ரூபா பேரிடர் நிவா­ரண த்தொகை­யாக வழங்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

http://www.virakesari.lk/article/38431

Link to comment
Share on other sites

கேரளா வெள்ளம்: ‘’இறுதிச்சடங்கு செய்யக்கூட உடல் கிடைக்கவில்லை’’ - பெற்றோரை இழந்த பெண்ணின் சோகம் #groundreport

கேரளா

''அம்மா, அப்பா இருவரையுமே நிலச்சரிவில் இழந்துவிட்டேன், இறுதிச்சடங்கு கூட செய்யமுடியவில்லை'' வெடித்து அழுகிறார் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலி(46).

1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கரமான இயற்கை பேரிடர் இது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். அதன் உண்மை ஒவ்வொரு மீட்பு மையக்களில் உள்ள மக்களின் முகத்தில் தெரிகிறது.

500க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ள இடுக்கி வெள்ளநிவாரண முகாமில் இழப்புகளைச் சந்தித்த பலரின் மத்தியில் சாலியை சந்தித்தோம்.

நிலச்சரிவில் இறந்த 13 நபர்களில் குஞ்சக்குழி பகுதியைச் சேர்ந்த சாலியின் தாய் ஏலிக்குட்டி(60), தந்தை ஆகஸ்தி(65) ஆகியோரும் அடங்குவர். விவசாயிகளான இவர்கள், பெரியார் நதிநீரைக் கொண்டு தென்னை மரங்களுக்கு நீர்பாய்ச்சிய காட்சிகள் தன்னுடைய கண்முன் விரிவதாகக் கூறுகிறார் சாலி.

மழையின் மொழி

''ஒவ்வொரு ஆண்டும் மழை கொட்டும், நிலச்சரிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு தூங்கிக்கொண்டிருந்த என் பெற்றோர் இறந்துவிட்டனர் என்பதை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அவர்களின் உடல்கூட கிடைக்கவில்லை,'' என்கிறார் சாலி.

மலைப்பிரதேசமான இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சாலி, சிறுவயதில் இருந்தே மழை பேசும் மொழியின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்தவர்தான்.

நடுவில் இருப்பவர் சாலி Image captionமத்தியில் இருப்பவர் சாலி

''மழைக் காலத்தில் முதலில் ஊர் இருட்டாகி தூறல் வரும் பின், அடுத்த நாட்களில் நல்ல மழைவரும், ஆனால் எங்கள் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்காது. அடுத்த சில தினங்களில் மழை கொட்டும், அந்த பருவத்தின் பெருமழை அது. வீடுகளுக்குள் இருப்போம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நிலச்சரிவு. எங்கள் குடும்பம் ஒருபோதும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டதில்லை.மழைக்காலம் முடியும்போது மீண்டும் ஒரு தூறலுடன் போகும். இந்த ஆண்டும் அதுபோலவே நடக்கும் என்று நினைத்தேன்,'' என்கிறார் சாலி.

தற்போது இடுக்கி மாவட்டத்தில் வெள்ளநிவாரண முகாமில் தங்கியுள்ள சாலிக்கு ஒருமுறை தனது பெற்றோர் இருந்த இடத்தையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது. விடாத மழையும், நிலச்சரிவும் மீண்டும் ஆபத்து ஏற்படும் என்ற அறிவிப்பும் எங்கும் போகமுடியாதவாறு அவருக்கு மனஉளைச்சலை தருகிறது.

கண்ணீரை வரவழைத்த மழை

கேரளா

பெற்றோர் இறப்பதற்கு முந்தைய இரவு அவர்களோடு தொலைபேசியில் பேசியதாகவும், அவர்கள் தன்னை அச்சப்படவேண்டாம் என்று நம்பிக்கை கூறியதாகவும் சொல்கிறார் சாலி. ''அவர்கள் இருந்த வீடு இருந்த சுவடு கூட இல்லை. அண்டை வீட்டார் சொல்லித்தான் அவர்கள் இறந்தது எனக்கு தெரியும். சுவர் விழுந்து, இருவரும் அதில் சிக்கியதால், வெளியே வரமுடியவில்லை. வெள்ளம் வந்து இருவரையும் இழுத்துச்சென்றுவிட்டது. எங்கள் குடும்பத்துக்கு கோரமான முடிவு இது,''என்று அழும் சாலியை அவரது உறவினர்கள் சாந்தப்படுத்தினர்.

சாலியின் கணவர் இதயநோயாளி என்பதால் பெற்றோரின் ஆறுதல் மட்டுமே சாலிக்கு பேருதவியாக இருந்தது. மகன் பிபின் மற்றும் மகள் ஸ்னேஹா இருவரும் தற்போதுதான் படிப்பை முடித்துள்ளார்கள். ''என் பிள்ளைகள் இனி என்னை பார்த்துக்கொள்வார்கள். என் பெற்றோருக்கு நான் உதவும் தருணம் வந்துவிட்டது என்று நம்பினேன். இருவருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது,'' என்கிறார் சாலி.

சிறு வயதில் இருந்து மழைத்துளிகளை ரசித்த சாலிக்கு இனி வரும் மழைக்காலங்கள் கண்ணீரை வரவழைக்கும் என்று தவிக்கிறார். ''நாங்கள் வாழ்ந்து பழகிய மழை இன்று எங்கள் வாழ்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது,'' என்கிறார் சாலி.

இடுக்கி மலை விவசாயி விக்ரமன்(65) பேசும்போது இந்த ஆண்டு ஏற்பட்டது போன்ற பேரிடர் எப்போதும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்கிறார். ''பலரும் வீடு, உடைமைகள் என இழந்து நிற்கிறோம். சாலியின் நிலை மோசமானது. நாங்கள் அவரை தேற்றிவருகிறோம். இதற்கு முன்னர் 1974ல் இடுக்கியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் இதுபோல பலர் இறக்கவில்லை,'' என்று நினைவுகூருகிறார்.

வெள்ள நிவாரண முகாமில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டு உணவு அருந்துகிறார்கள். அவ்வப்போது அழுகை சத்தம் கேட்கிறது, சிலர் யாரிடமும் பேசாமல் படுத்துவிடுகிரார்கள். முகாமில் உள்ள சுமார் எழுபது குழந்தைகள் மட்டும் அவ்வப்போது வெளியில் வந்து மழை தூறும்போது விளையாடுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-45179156

Link to comment
Share on other sites

கேரள வெள்ளம்: ஒரே நாளில் 25 பேர் பலி, 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை

எர்ணாகுளத்தில் வெள்ளக்காடான ஒரு சாலை... Image captionஎர்ணாகுளத்தில் வெள்ளக்காடான ஒரு சாலை...

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளச் சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியார் அணை அதன் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

 

எடப்பாடிக்கு பினராயி கடிதம்

இதனிடையே முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும், அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் பராமரிக்கவேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்டு 18ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்றும் கேரள முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கேரளா

முல்லைப்பெரியார் அணையின் வெள்ளநீர் கீழே உள்ள இடுக்கி அணைக்கு வந்து, அங்கிருந்து பெரியார் நதி பாயும் செருதோனிக்கு வந்துசேரும் என்பதால் நதிக்கு அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வார காலமாக கனமழை பெய்யும் கேரளாவில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து வெள்ள நிவராண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அரசாங்க தரவுகள் கூறுகின்றன.

 
 

கேராளாவில் 44 நதிகள் உள்ளன. இதில் பெரியார் நதி 244கிலோமீட்டர் பாய்ந்து செல்லும் நீண்ட நதி. மழைக்காலங்களில் இந்த நதியின் வெள்ள நீர் இறுதியாக வந்துசேரும் இடம் இடுக்கி மாவட்டம் ஆகும். தற்போது அங்குள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்வு,மக்கள் வெளியேற்றம்படத்தின் காப்புரிமைFACEBOOK

முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டம் உயந்ததால், புதன் கிழமை அதிகாலை வெறும் நான்கு மணிநேரத்தில் ஐந்து கிராமங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக கேரள மாநில நீர் மேலாண்மை குழுவின் சிறப்பு அதிகாரி ஜேம்ஸ் வில்சன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

''முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு வெள்ள நீர் செல்லும் வழியில் சுமார் 75,000 மக்கள் குடியிருக்கின்றனர். வெறும் நான்கு மணி நேரத்தில் அவர்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய காட்டாயம் நேர்ந்தது. தற்போது கேரளா சந்தித்து வரும் வெள்ளம் 1961ல் நடந்ததை விடவும் கோரமானது. 1924ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஒத்தது.'' என்று ஜேம்ஸ் வில்சன் தெரிவித்தார்.

இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்ததாகவும், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியன நொடிக்கு முறையே 30,056 கன அடி மற்றும் 2,178 கன அடியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இச்சூழலில், கொச்சி விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

35 அணைகளில் நீர் திறப்பு

"கேரளத்தில் உள்ள 35 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகின்றன. மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று கேரள முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

எர்ணாகுளம் மெட்ரோ சேவை பாதிப்பு

 

கேரள வெள்ளச் சூழ்நிலையில் இதுவரை பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்ட எர்ணாகுளம் பகுதியிலும் வெள்ளம் சூழத் தொடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் பாதை மேல் மட்டத்திலேயே இருந்தாலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இந்த சேவையை மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.

ஒரே நாளில் 25 பேர் பலி

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இன்று புதன்கிழமை மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர்.மலப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 14 பேர்.

இறந்தவர்களில் மற்றவர்கள் கோழிக்கோடு, பத்தனம் திட்டா, இடுக்கி, ஆலப்புழா, கொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மீட்பு விமானம், ராணுவம் வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை

கூடுதல் ராணுவப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரை கேரளாவுக்கு அனுப்பவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உபகரணங்களை அனுப்ப சி-17 ரக விமானங்கள் தேவை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/india-45191981

Link to comment
Share on other sites

கேரளா வெள்ளம் -164 பேர் உயிரிழப்பு, 2,23,000 பேர் முகாம்களில் தஞ்சம்

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

#KeralaFloods

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

கேரளா வெள்ளம் -164 பேர் உயிரிழப்பு, 2,23,000 பேர் முகாம்களில் தஞ்சம்

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

மத்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறினார்.

எர்ணாகுளத்தில் ஐந்து ஹெலிகாப்டர்கள், சாலக்குடியில் மூன்று ஹெலிகாப்டர்கள், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் தலா ஒரு ஹெலிகாப்டர் ஆகியன மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

Chief Minister Keralaபடத்தின் காப்புரிமைCHIEF MINISTER'S OFFICE, KERALA Image captionபினராயி விஜயன்

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 39 குழுக்கள் மாநிலம் முழுதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையிடம் இருக்கும் 11 விமானங்கள் பிரச்சனை உள்ள இடங்களில் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே 2015இல் தமிழ்நாட்டில் இருந்த அதே கோபமும் கைவிடப்பட்ட நிலையும் தற்போது கேரளாவில் நிலவுவதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#KeralaFloodsபடத்தின் காப்புரிமைTWITTER

தேசிய ஊடகங்கள் கேரள வெள்ளத்திற்கு கவனத்தை செலுத்துமாறு வலியுறுத்தியும் வேண்டியும் கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

 
 
View image on Twitter
 

https://www.bbc.com/tamil/india-45218497

Link to comment
Share on other sites

கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு

kerala-1.jpg?resize=800%2C451
கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மழையின் பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

kerala-2.jpg?resize=275%2C183kerala-3.jpg?resize=390%2C220

kerala-4.jpg?resize=800%2C533

kerala5.jpg?resize=800%2C573

http://globaltamilnews.net/2018/91793/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எம் கே நாரயணன், சிவசங்கர் மேனன் , நிரூபமா ராவ் மேனன் , விஜய் நம்பியார் மற்றும் அவர் சகோதரர் சதீஸ் நம்பியார் எல்லாரும் இருக்கும் வரை கேரளாவிற்கு என்ன குறை???

அமெரிக்கா ஐரோப்பா  எண்டு அகிலமும் போய் வெட்டியாடக்கூடிய ஆக்களெல்லோ....வெள்ளமாவது வெங்காயமாவது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக கேரளா அரசியல்வாதிகள் டெல்லியின் ஓரவஞ்சனையை எதிர்கொள்கின்றனர் மத்திய அரசின் இடர் நிவாரண  நிதி சுண்டங்காய் அளவே ஒதுக்கபட்டுள்ளது . வரும் வாரம் ஓணம் பண்டிகை சாதி மதம் இல்லாமல் கேரளாவே கொண்டாடும் விழா இம்முறை மழை ஊத்தி கொண்டாடுது . கடந்த வருடங்களில் சென்னை மழைநீர் பாதிப்புக்கு உள்ளானபோதும் ,ஜல்லிகட்டு போராட்ட நேரம்களிலும் அவர்கள் செய்த உதவிக்கு மறு பரிகாரம் தமிழ்நாட்டு பக்கம் இருந்து பெரிதாக போகவில்லை காரணம்  ஆற்று மணல் அள்ளமுடியவில்லை எனும் கடுப்பாக்கும் பன்னீர்ருக்கும் எடபாடிக்கும் .

Link to comment
Share on other sites

வரலாறு காணாத பேரழிவு உடையும் வீடுகள் வெள்ளத்தில் மக்கள் என்ன நடக்கிறது கேரளாவில் ------100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளம் 324 பேர் பலி உதவி கேட்கும் கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: 

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது. 

இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. மக்கள் சாப்பாடு, தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 

கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது. 

கேரளாவில் உள்ள 26 அணைகளில் இருந்தும் கடலுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை மழை , வெள்ளத்தால் அங்கே 324 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

கேரளா மூழ்கி இருக்கும் காட்சி. 

மழை மழை 

இந்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கண் முன்னே கட்டிடங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் நடக்கிறது. மிக மோசமான வரலாற்று அழிவை அம்மாநிலம் தற்போது எதிர்கொண்டு உள்ளது. 

ரெட் அலர்ட் 

இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

ரயில் சேவை பாதிப்பு 

கொச்சி விமான நிலையம் 26ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ உட்பட கேரள மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் மோசமான பாதிப்பு 

2,23,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கேரள முதல்வர் கோரிக்கை 

உங்களின் உதவி பாதிப்பப்பட்டவர்களின் மீண்டும் நிலைப்படுத்தும் என்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள் என்றும் கேரளமுதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://eluthu.com/kavithai/360640.html

Link to comment
Share on other sites

கேரளா வெள்ளம்: இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி அறிவித்தார் மோதி

கேரள வெள்ள நிவாரணத்திற்கு இடைக்கால நிதியாக 500 கோடி ரூபாய் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

ஏற்கெனவே 100 கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர், ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ரூபாயும் அளிக்கப்படும் என்று மோதி அறிவித்துள்ளார்.

ஏமாற்றம்

முதற்கட்ட நிதியாக 2000 கோடி ரூபாய் கேட்ட நிலையில் ஐநூறு கோடி மட்டும் அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முன்னதாக, கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோதி. சுமார் ஒரு மணி நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ள மோதி, அதன் பிறகு கேரள அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

கேரளா வெள்ளம்படத்தின் காப்புரிமை-

நேற்று இரவு பிரதமர் மோதி டெல்லியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு விரைந்தார்.

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கடந்த நூறு வருடங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவே மிகவும் மோசமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பருவமழை துவங்கியது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

நேற்று மாநில பேரழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியில் இருந்து நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி (ஆகஸ்ட் 17) 194 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவின் காரணமாகவே நிறைய பேர் உயிரிழந்ததாக கேரள அரசு கூறுகிறது. கேரளாவின் முக்கிய விமானநிலையமான கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா வெள்ள பாதிப்புகளுக்காக தெலங்கானா அரசு சார்பில் உடனடியாக 25 கோடி நிதி உதவி வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தங்களது அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான எர்ணாகுளத்தின் சட்டசபை உறுப்பினர் ஹிபி ஈடன் பிபிசியிடம் பேசினார்.

எங்களிடம் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை குறித்த துல்லியமான விவரங்கள் இல்லை ஆனால், எங்கள் தொகுதியில் இருக்கும் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள். என்னுடைய தொகுதி இவ்வளவு மோசமான நிலையைச் சந்திப்பது இதுவே முதல்முறை . மக்கள் காணாமல் போன தங்களது குடும்பங்களையும் உறவினர்களையும் பற்றி என்னிடம் கேட்கும்போது நான் மிகவும் நிலைகுலைந்துவிடுகிறேன்.

நிவாரண முகாம்கள் அனைத்தும் தற்போது நிரம்பிவிட்டன. நாங்கள் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் உணவையும் மருந்து பொருட்களையும் வழங்கிவருகிறோம். மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

ராணுவ விமானங்களும் மக்களை காப்பாற்றி வருகின்றன. தற்போதைக்கு எர்ணாகுளத்தின் பெரும்பகுதி தீவு போல காட்சியளிக்கிறது. போக்குவரத்து மிகவும் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது'' என குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.15 அளவில் முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கடந்த நூறு ஆண்டுகளில் மோசமான வெள்ளத்தை தற்போது கேரளம் சந்தித்து வருவதாகவும், 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Chief Minister Keralaபடத்தின் காப்புரிமைCHIEF MINISTER'S OFFICE, KERALA Image captionபினராயி விஜயன்

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக முதல்வர் முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மத்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

மீட்பு பணிபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

எர்ணாகுளத்தில் ஐந்து ஹெலிகாப்டர்கள், சாலக்குடியில் மூன்று ஹெலிகாப்டர்கள், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் தலா ஒரு ஹெலிகாப்டர் ஆகியன மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 39 குழுக்கள் மாநிலம் முழுதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையிடம் இருக்கும் 11 விமானங்கள் பிரச்சனை உள்ள இடங்களில் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு தங்களை மீட்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. அந்த கோரிக்கைகளில் நேரம், தேதி, இருப்பிடத்தின் அடையாளம், அருகே உள்ள குறிப்பிடத்தகுந்த கட்டடம் அல்லது இடத்தின் அடையாளம், மாவட்டம், மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-45231227

Link to comment
Share on other sites

கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர்

ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமர் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்படத்தின் காப்புரிமைANADOLU AGENCY

கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்து வருகிறது கேரளா. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவது ஐக்கிய அரபு நாடுகளின் கடமை என குறிப்பிட்டுள்ளார் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @HHShkMohd
View image on TwitterView image on TwitterView image on Twitter
 

The people of Kerala have always been and are still part of our success story in the UAE. We have a special responsibility to help and support those affected, especially during this holy and blessed days

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @HHShkMohd

ஐக்கிய அரபு நாடுகளின் வெற்றிக் கதைகளுக்கு பின்னால் கேரள மக்களின் பங்கு எப்போதுமே உண்டு. கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக அதுவும் இந்த புனிதமான ஈத் அல் அதா நாள்களில் அவர்களுக்கு உதவ வேண்டிய சிறப்பு பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தமது ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார் ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபரும், பிரதமருமான மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 2 இவரது @HHShkMohd
View image on TwitterView image on Twitter
 

UAE and the Indian community will unite to offer relief to those affected. We have formed a committee to start immediately. We urge everyone to contribute generously towards this initiative.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @HHShkMohd

''கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை அங்கே ஏற்படுத்தியுள்ளது இவ்வெள்ளம். பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஈத் பெருநாள் வரவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள நமது சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாம் மறந்துவிடக்கூடாது'' என மற்றொரு ட்வீட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 3 இவரது @HHShkMohd
View image on TwitterView image on TwitterView image on Twitter
 

The state of Kerala in India is currently witnessing huge floods, the most devastating in a century. Hundreds have been killed, hundreds of thousands have been displaced. Ahead of Eid Al Adha, do not forget to extend a helping hand to our brothers in India.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 3 இவரது @HHShkMohd

''கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இந்திய சமூகமும் ஒண்றிணைந்து உதவும். நங்கள் ஒரு குழுவை உடனடியாக உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும்'' என அவர் ட்விட்டர் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-45231236

Link to comment
Share on other sites

உதவிக்கரம் நீட்டிய யுஏஇ: இதயப்பூர்வ நன்றி சொன்ன கேரள முதல்வர்


 

 

people-of-kerala-will-not-forget-this-kind-gesture-shown-in-our-time-of-need

 

கேரள மாநிலத்துக்கு உதவ ஐக்கிய அரபு எமீரகம் முன்வந்துள்ளது. யுஏஇ அரசின் உதவிக்கு கேரள முதல்வர் இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரசீது அல் மக்தூம் தனது ட்விட்டரில், "இந்தியாவின் கேரள மாநிலம் மிக மோசமான மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இதில் மாண்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகள் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் உள்ளனர். பக்ரீத் திருநாள் வேறு நெருங்குகிறது. இந்த வேளையில் இந்தியாவில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு உதவ மறக்கக்கூடாது. யுஏஇ அரசாங்கம் இங்குள்ள இந்திய சமூகத்தினருடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ளும். உடனே ஒரு குழு அமைக்கிறோம். இந்தக் குழுவுக்கு தாராளமாக உதவிகளை அளிக்க வேண்டுகிறோம். யுஏஇ அரசின் வெற்றி மொழியில் கேரள சகோதரர்களுக்குப் பங்கு உண்டு. ஆகையால் அங்கே வாடுபவர்களுக்கு உதவும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

 

இதயப்பூர்வ நன்றி:
யுஏஇ அரசின் இந்த உதவிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இதயபூர்வமாக நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், "ஆழ்ந்த நன்றிகள். மேதகு ஷேக் முகமது பின் ரசீது அல் மக்தூம் அவர்களே தங்களது பெருந்தன்மையும் தயாள நெஞ்சமும் நெகிழச் செய்கிறது.

காலத்தினால் செய்த இந்த உதவியை கேரள மக்கள் இதை எப்போதுமே மறக்க மாட்டார்கள். ஷேக் முகமது, கேரளாவின் உற்ற நண்பர் என உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர், எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கியில் மட்டும் வழக்கத்தை விட 84 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 26-ம்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரம் வரை, கேரளத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.

https://www.kamadenu.in/news/india/4930-people-of-kerala-will-not-forget-this-kind-gesture-shown-in-our-time-of-need.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

கேரளா வெள்ளம்: இன்றைய நிலவரம் என்ன?

கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளா வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொச்சியில் வெள்ளம் நிறைந்த பகுதி ஒன்றில் விமானம் மூலம் மீட்கப்படும் சிறுவர் .

கடந்த 10 நாட்களுக்கும் மேல் கொச்சியில் மிகக்கடுமையாக இருந்த மழைப்பொழிவு இன்று குறைந்துள்ளது.

இடுக்கி, திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் காலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு வாரத்தை ஒப்பிடும்போது தற்போது போக்குவரத்து நிலைமை சற்றே மேம்பட்ட நிலையில் இருப்பதாக களத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்படத்தின் காப்புரிமைCHIEF MINISTER'S OFFICE, KERALA Image captionபினராயி விஜயன்

கேரளா அரசு கடும் வெள்ள பாதிப்பு அடைந்ததை அடுத்து அம்மாநிலம் முழுவதும் வைஃபை இணைப்பை இலவசமாக வழங்கிவருகிறது. மீட்புபணி மற்றும் உறவினர்களுக்கு தங்களது இருப்பை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக தற்காலிகமாக இந்த வசதி செய்துதரப்பட்டுள்ளது.

கேரளா முழுவதும் சுங்க கட்டண சாவடியில் இரண்டு நாட்களுக்கு மக்களிடம் எவ்வித கட்டணமும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி குவிந்துவருகிறது. தெலங்கானா மாநில முதல்வர் 25 கோடி நிதியை உடனடியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வந்தவண்ணம் உள்ளது.

எர்ணாகுளம் பகுதி இதுவரை கடும் வெள்ளத்தை சந்தித்ததில்லை என்பதால் வெள்ளம் வந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் கிட்டத்தட்ட அனைவருமே வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளனர்.

படகு வழியாக ஒரு குடும்பத்தை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் மீட்பு படை வீரர்கள்படத்தின் காப்புரிமைNDRF OFFICIALS Image captionபடகு வழியாக ஒரு குடும்பத்தை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் மீட்பு படை வீரர்கள்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாலக்குடி மட்டும் கொச்சிக்கு இடையில் உள்ள அங்கமாலி நகராட்சியில் கிட்டத்தட்ட முழு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மின்சாரம், குடிதண்ணீர் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

கேரளாவின் மற்ற பகுதிகளில் இன்னமும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் எடுத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புனே மற்றும் ரட்லம் பகுதியில் இருந்து 15 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கேரளாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தானும் தனது மனைவியும் கேரள வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளதகவும், எதாவதொரு வகையில் உங்களால் முடியுமென்றால் கேரளாவுக்கு உதவ செய்யுங்கள் என்றும் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @yadavakhilesh
 

My heart goes out to the people of Kerala. My wife & I have decided to make a personal donation to help those in need in Kerala. If you can help in anyway, I ask that you please contribute. Remember the ones who were lost, & pray for Keralites who continue to fight #UPforKerala

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @yadavakhilesh

'' கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @JustinTrudeau
 

Tragic news from Kerala, India - Canada sends its deepest condolences to all those who have lost a loved one in the devastating floods. Our thoughts are with everyone affected.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @JustinTrudeau

''கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனையை உரித்தாக்குகிறேன். நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளதும், இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதும் கோரமான நிலை'' என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

''நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் - மீனவர்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @cpimspeak
 

#KeralaFloods Update: Yesterday was a massive day of rescue. Over 2 lakh were rescued. Much more needs to be done, but Kerala is thankful for all the support. Especially from the Fishermen. Reports indicate that they alone rescued around 1 lakh people!
The unsung heroes!

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @cpimspeak

கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @IAF_MCC
 
Pfm4QeBFHZMtu4C0?format=jpg&name=small
 

#KeralaFloodRelief :Wg Cdr Prasanth of Garud Spl Force of IAF saved a toddler from rooftop in flood hit town of Alappuzha, Kerala. Smile on the face of mother, Priceless. IAF committed in Defence of Skies & Saving Precious Lives on Ground#SavingLives@CMOKerala@DefenceMinIndia

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @IAF_MCC

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/india-45237713

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.