Jump to content

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள்

Recommended Posts

படம் சொல்லும் கதைகள் :

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே கோயில் கட்டுங்கள். கோயிலில் சிற்பங்களைச் செதுக்குங்கள். தேரோட்டுங்கள். பக்தி இலக்கியங்களைக் கொண்டு செல்லுங்கள். இவற்றின் மூலமாக தமிழனின் இறைமை கலை சார்ந்தது ; மானிடத்திற்கானது ; அறிவியல் பூர்வமானது என உலகோர்க்குப் பறைசாற்றுங்கள். அதை விடுத்து கன்னத்தில் அலகு குத்தி, முதுகில் கொக்கியை மாட்டி என்னை   நாகரிகமடையாதவனாய்க் காண்பிக்கவா கடல் கடந்து சென்றீர்கள் ?

Link to comment
Share on other sites

5 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இவை இந்து சமய பண்பாடுகள் இல்லையா? எல்லா சமய சம்பிராதயங்களிலும் இவ்வாறான பல கலாச்சார செயற்பாடுகள் இருக்கின்றனவே. நீங்கள் ஏன் இந்து சமய சம்பிராயதங்களை நாகரிகம் அற்றவை என்று கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

இவை இந்து சமய பண்பாடுகள் இல்லையா? எல்லா சமய சம்பிராதயங்களிலும் இவ்வாறான பல கலாச்சார செயற்பாடுகள் இருக்கின்றனவே. நீங்கள் ஏன் இந்து சமய சம்பிராயதங்களை நாகரிகம் அற்றவை என்று கருதுகிறீர்கள்?

பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பதும் சம்பிரதாயம் அல்லது வழக்கம் என்பதும் வெவ்வேறானவை . நீங்கள் சொல்கிற இந்து சமய சம்பிரதாயங்களில்தான் ஒரு காலத்தில் சில இடங்களில் உடன்கட்டை ஏறுதலும் , சிறார் திருமணங்களும் நடந்தேறின .  தன் சாமியை நினைத்து உடலை வருத்துவதிலும் மனித நாகரிகத்தில் வரைமுறை உண்டு . நெடுந்தூரம் நடந்து சென்று வணங்குவதில் வன்முறையில்லை. அலகு குத்துவதிலும் தீ மிதிப்பதிலும் வன்முறை உண்டு . அபாயமும் உண்டு .

இந்து சமயத்தில் மட்டுமல்ல . எந்த சமயத்திலும் தவறான வழக்கங்களைச் சுட்டுவது நம் கடமை . குடும்பக் கட்டுப்பாடு முறைகளுக்கு எதிரான கிறித்துவத்தையும் , பல (மூன்று) தார மணத்தை ஆதரிக்கும் இஸ்லாத்தையும் , துறவிகள் ஆடை துறந்து திரியும் ஜைனத்தையும் விமர்சிப்பது என் கடமை என நினைக்கிறேன் . மதம் சொல்லும் மானுடத்தை ஏற்கலாம் . மதம் 'மதம்' கொள்வதை ஏற்க இயலாது . அநாகரிகங்களை  ஜனநாயக அரசேயானாலும் நிராகரிக்க வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் ஒரு ஜனநாயக அரசுதான் முதலில் நிராகரிக்க வேண்டும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.