Jump to content

குள்ள மனிதர்கள் விவகாரம்-மூடி மறைக்க முயற்சிக்கும் பொலிஸார்- வடக்கு முதல்வரும் உடந்தை!!


Recommended Posts

குள்ள மனிதர்கள் விவகாரம்-மூடி மறைக்க முயற்சிக்கும் பொலிஸார்- வடக்கு முதல்வரும் உடந்தை!!

 

 

news_11-08-2018_90jaffna.jpg

மக்­கள் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி மக்­க­ளி­டம் நேரில் சென்று அறி­வ­தற்கு துளி­ய­ள­வே­னும் ஆர்­வம் காட்­டாத அல்­லது விருப்­பம் இல்­லாத வடக்கு மாகா­ண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலி­ஸார் கூறு­வதை நம்­பு­வ­தும், அதை பத்­தி­ரிகை­க­ளுக்­குத் தெரி­வித்து எது­வுமே நடக்­க­வில்லை என்­ப­து விச­­னத்­துக் கு­ரி­யது, ஒரு நாள் அவர் இங்கு வந்து இரவு முழு­வ­தும் நின்று நில­மை­களை அவ­தா­னித்­தால் தெரி­யும் மக்­கள் படும் பாடு. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் அராலி மக்­கள் கொதித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம், அரா­லிப் பகு­தி­யில் தொடர்ந்­துள்ள வீடு­கள் மீதான கல்­வீச்­சுத் தாக்­கு­தல் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் அந்த மக்­க­ளி­டம் நேற்று வின­வி­ய­போதே அவர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம், மட்­டு­மல்­லாது வடக்கு மாகா­ணத்­தி­லும் தற்­போது பர­வ­லா­கப் பேசப்­ப­டும் விட­யம் அராலி மக்­கள் எதிர்­கொள்­ளும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல் தொடர்­பா­னதே! குள்ள உரு­வம் கொண்­ட­வர்­களே வீடு­கள் மீது கற்­களை வீசி­விட்டுத் தப்­பித்­துச் செல்­கின்­ற­னர் என்று அராலி மக்­க­ளால் குற்­றஞ்­சாட்­டப்­பட்டுள்­ளது.

குள்ள மனி­தர்­கள் யார் என்­பதை அவர்­கள் அடை­யா­ளம் காணா­த­போ­தும், கல்­லெ­றி­வது குள்­ளர்­கள்தான் என்­பதே அவர்­க­ளு­டைய வாத­மாக உள்­ளது. அவர்­க­ளைச் சிலர் நேரி­லும் கண்­டுள்­ள­னர். இது தொடர்­பில் அண்­மை­யில் இடம்­பெற்ற கூட்­டம் ஒன்­றி­லும் பலர் கண்­கண்ட சாட்சி­யா­க தம­து­க­ருத்துக்களைப் பதிவு செய்­த­னர் .

வீட்­டுக் கூரை­க­ளின் மேல் குதிப்­பது போன்று சத்­தம் கேட்­கின்­றது, உட­ன­டி­யா­கவே வெளி­யில் சென்று பார்த்­தால் யாரும் அங்கு இல்லை, வேலி­க­ளில் உள்ள மரங்­கள் அசை­கின்­றன. வீதி­க­ளில் இருந்து வீடு­க­ளுக்கு கல் வீசப்­ப­டு­கி­றது. அப்­போது கூட அங்கு யாரும் இருக்­க­வில்லை. சப்­பாத்­துக் கால்­க­ளு­டன் வீதி­யில் ஓடு­வது போன்று சத்­தம் கேட்­கின்­றது மதி­லால் எட்­டிப்­பார்­தால் யாரும் இல்லை. அந்த நபர்­க­ளைத் தேடித் திரி­யும் போதும் எவ­ரும் அகப்­ப­ட­வில்லை.

ஆனால் சில நிமி­டங்­க­ளிலேயே இன்­னும் ஒரு வீட்­டுக்கு கல்­வீச்சு இடம்­பெ­று­கி­றது. இவ்­வாறு செய்­ப­வர்­கள் எங்­க­ளு­டைய கண்­க­ளுக்­குப் பட­வில்லை என்­றால் அவர்­கள் குள்­ளர்­கள் தான். நாங்­கள் வரு­வ­தைத் தெரிந்து உட­னேயே மறை­கின்­ற­னர். தாவும் திற­னைக் கொண்­டி­ருந்­தாலே கூரை­யில் இருந்து மரத்­துக்­குத் தாவி, வீதி­யில் குதித்து ஓட முடி­யும்.

சாதா­ரண நபர்­கள் என்­றால் மதி­லால் பார்க்­கும் போது ஓடு­வ­தைக் கண்­டு­கொள்ள முடி­யும், ஆனால் இவர்­க­ளைத் தெரி­ய­வில்லை. இவ்றை எல்­லாம் வைத்து குள்­ள­ம­னி­தர்­கள் என்றே கூறுகிறோம். என்­றும் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

எனி­னும் மக்­க­ளு­டைய குற்­றச்­சாட்­டுக்­கள் கண்­கண்ட சாட்­சி­கள் அனைத்­தும் பொய்த்­து­ வி­டு­மாற்­போல் வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று முன்­தி­னம் பத்­தி­ரி­கை­க­ளுக்கு விள­க்கத்­தைக் கூறி­னார். பொலி­ஸா­ரு­டைய கதையை நம்­பியே முதல்­வர் அவ்­வாறு கூறி­யுள்­ளார்.

பத்­தி­ரி­கை­க­ளில் வரும் குள்­ள­ம­னி­தர்­கள் பற்­றிய செய்தி அர­சி­யல் பின்­ன­ணி­யில் பரப்­பப்­பட்­டுள்­ளது. அரா­லி­யில் நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் தொடர்­பில் எவ­ரும் பொலிஸ் நிலை­யத்­தில் முறை­யி­ட­ வில்­லை, குள்­ள­ம­னி­தர்­க­ளைக் கண்­டேன் என்று யாரும் முன்­வந்து கூற­வில்லை. எனவே அது பொய் என்­பதே அவ­ரு­டைய விளக்­க­மாக உள்­ளது.

பர­வ­லா­கப் பேசப்­பட்ட சம்­ப­வம்
அரா­லி­யின் பல பகு­தி­க­ளி­லும் கடந்த ஒரு மாதங்­க­ளுக்கு மேலாக இந்­தச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கின்­றன. எனி­னும் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி இரவு அரா­லி­யில் கடும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது. இளை­ஞர்­கள் கூடி தேடு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

அந்த அசம்­பா­வி­தம் தொடர்­பாக நாடா­ளுமன்­ற உறுப்­பி­னர் ஈ. சர­வ­ண­ப­வ­னுக்­கும் அறி­விக்­கப்­பட்­டது. வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தின் போது வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் முன்­னி­லை­யி­லேயே அந்த மக்­கள் குள்ள மனி­தர்­களே இந்­தச் சம்­ப­வங்­க­ளுக்­குக் காா­ர­ணம் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யி­ருந்­த­ னர். மக்­க­ளு­டைய இந்­தப் பிரச்­சி­ னையை உத­யனே முதன் முதல் பொது வெளிக்­குக் கொண்­டு­வந்­தான்.

கட்­டுக்­கதை
கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­று­கி­ற­து, குள்­ள­ம­னி­தர்­கள் தான் கற்­களை வீசு­கின்­ற­னர் என்­பது வெறும் கட்­டுக்­கதை என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே. சயந்­தன் அண்­மை­யில் தெரி­வித்­தார். இந்­தக் கதை­யைப் பரப்­பி­ய­வ­ரைக் கைது செய்­ய­வேண்­டும் என்­றும் அவர் சீறி­னார். சம்­ப­வங்­கள் பற்றி ஏதும் அறி­யா­ம­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவ­ரைத் தொடர்ந்து பல­ரும் அந்­தச் சம்­ப­வம் பொய் என்­ற­னர்.

பொலி­ஸா­ரி­டம் சிற­ந்த உற­வைப் பேணி அதன் மூலம் அவர்­கள் கூறு­ப­வற்­றையே அவர்­க­ளும் பொது வெளி­யில் கொண்டு வந்­த­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் அவ்­வாறே. அர­சி­யல் பின்­ன­ணி, கட்­டுக்­கதை என்று பொலி­ஸார், நம்­பு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். பதிவு செய்­யப்­ப­டாத இணையத்­த­ளங்­க­ளும் அர­சியல் வாதி­க­ளின் கூற்­றுக்கு விசு­வா­சம் காட்­டத் தவ­ற­வே­யில்லை.

நடந்த உண்மை
‘‘எனது வீட்­டுக்­கும் கல்­லெ­றிந்­தார்­கள் வீதி­யில் சென்று பார்த்­தால் எவ­ரும் இல்லை. நீண்ட கால­மாக இங்­கு­தான் இருக்­கி­றோம். இப்­போதுதான் இந்­தப் பிரச்­சினை வந்­துள்­ளது. அடுத்­த­டுத்து கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இருந்­தும் என்ன செய்­வது பயத்­து­டனே வாழ்­கின்­றோம்’’ என்று அரா­லி­யைச் சேர்ந்த கம­லாம்­பிகை தெரி­வித்­தார்.

‘‘அரா­லி­யில் கல்­லெ­றி­யாத வீடு­களே இல்­லை, தொட­ர்ச்­சி­யாக தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம், பொலி­ஸார் இங்கு வந்து நடந்­த­வற்­றைக் கேட்­ட­னர். நாங்க­ளும் கூறி­யுள்­ளோம். அண்­மை­யில் இடம்­பெற்ற கூட்­டத்­தின்­போது கண்­ணால் கண்­டேன் என்று பெண்­கள் சிலர் கூறி­யுள்­ள­னர். பொலி­ஸா­ருக்கு முன்­னி­லை­யி­லேயே எமது இளை­ஞர்­கள் தேடு­தல்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர் என்று அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த கணே­ச­லிங்­கம் தெரி­வித்­தார்.

பொலி­ஸார் மீது மக்­கள் வெறுப்பு
அரா­லி­யில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­கள் தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் உட­ன­டி­யா­கவே சம்­பவ இடத்­துக்கு வர­வில்­லை, அடுத்­த­தாக 119 என்ற அவ­சர பொலிஸ் சேவைக்கு அழைத்­தோம் அதன் பின்­னரே வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் இங்கு வந்­த­னர்.வந்­த­தும் அவர்­கள் அவ­சர பொலிஸ் சேவைக்கு அழைத்­த­தைக் கண்­டித்­த­னர்.

உட­ன­டி­யாக இங்கு வர­மு­டி­யாத அவர்­கள் சம்­ப­வம் நடை­பெ­ற­வில்லை என்று கூறு­வது அவர்­கள் மீதே சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் தொடர்­பில் அண்­மை­யில் பொலி­ஸா­ருக்­கும், மக்­க­ளுக்­கு­மி­டை­ய­லான சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது. இதில் நடந்த விட­யங்­க ­ளைக் கூறி­யி­ருந்­தோம்.

கண்­ணால் கண்­டேன் என்று சில பெண்­கள் கூறி­யி­ருந்­த­னர். கறுப்பு உடை­அ­ணிந்­தி­ருந்­தார்­கள், முகம் தெரி­ய­வில்லை என்­றும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர். இதன்­போது பொலிஸ் அதி­கா­ரி­கள், கிராம அலு­வலர்­க­ளும் உட­னி­ருந்­த­னர். இத்­த­னை­யும் தாண்டி முறைப்­பாடு பதிவு செய்­யப்­ப­ட­வில்­லை, கண்­கண்ட சாட்சிகள் இல்லை என்று பொலி­ஸார் கூறு­வது முறைப்­பாடு செய்­ப­வர்­க­ளை தனிப்­பட்ட முறை­யில் பழி­தீர்ப்­ப­தற்கா? பொலி­ஸா­ருடை கதையை முத­ல­மைச்­சர் நம்­பு­வ­தும் அதை உண்மை என்று வெளிப்­ப­டுத்­து­வ­தும் விசனத்­துக்­கு­ரி­யது என்று அராலி அம்­மாள் சன­ச­மூக நிலை­யத்தை அண்­டி­யுள்ள பெயர் குறிப்­பிட விரும்­பாத ஒரு­வர் தெரி­வித்­தார்.

பெயர் மற்­றும், ஒளிப்­ப­டங்­களை வெளி­யிட்­டால் அத­னால் ஆபத்­துக்­கள் வரும் என்று மக்­கள் அஞ்­சு­கின்­ற­னர். அதனால் பலர் தங்­க­ளு­டைய பெயர்­க­ளையோ, ஒளிப்­ப­டங்­க­ளை­யோ, பத்­தி­ரி­கையில் பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்­கு­மாறு வேண்டிக் கொண்­ட­னர்.

கல்­வீச்­சுத்­தாக்­கு­தல்
அராலி ஐய­னார் கோவி­ல­டியை அண்­டிய பகு­தி­யில் உள்ள வீடொன்­றின் மீது நேற்று முன்­தி­னம் இர­வும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வீட்டு விறாந்­தை­யில் வீட்­டின் உரி­மை­யா­ளர் படுத்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றது. கூரை­யைப் பிரித்து உள்ளே வந்த கல்­லில் இருந்து மயி­ரி­ழை­யில் தப்­பி­யுள்­ளார் உரி­மை­யா­ளர்.

தற்­போ­தும் கல்­வீ­சப்­பட்ட அடை­ய­ளம் உள்­ளது. சம்­ப­வம் நடை­பெற்ற போதும் அது பற்றி பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கப்­ப­ட­வில்­லை, அங்­குள்ள நில­மை­களை அறி­யா­ம­லேயே பொலி­ஸார் தமது கண்­டு­பி­டிப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ள­னர் என்­ப­தை­யும், பொலி­ஸா­ரு­டைய கதை­களை நம்பி அதுவே உண்மை என்­பது போன்று முத­ல­மைச்­ச­ரு­டைய கருத்­து­க்­கள் உள்­ளன என்­ப­தை­யும் நேற்று முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற கல்வீச்­சுத் தாக்­கு­தல் சம்­பமே தெளிவுபடுத்­து­கின்­றது.

முத­ல­மைச்­சர் மீது கொதிப்பு
சம்­ப­வங்­கள் நடக்­காது அதைக் கூற­வேண்­டிய அவ­சி­யம் எமக்கு இல்லை. வேண்­டு­மென்றே பெண்­கள் அவ­லக் குரல் எழுப்­பு­வார்­களா? வீட்­டின் மீது கல்­லெ­றிந்­த­வு­டன் சத்­த­மி­டு­கின்­ற­னர். அங்கு ஓடிச் சென்று பார்ப்­ப­தற்­குள் இன்­னு­மொரு வீட்­டில் எறி­வி­ழு­கி­றது. இது கட்­டுக்­க­தை­யா வட்­டுக்கோட்­டை­யைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒரு­வர் அண்­மை­யில் இங்கு வந்­தி­ருந்­தார்.

அவர் நிற்­கும் போதே கல்­வீச்­சுத் தாக்­கு­தல் இடம்­பெற்­றது. அவ­ருக்­குத் தெரி­யும் நடந்­தது என்னவென்று. மக்­களை முட்­டாள்­க­ளாக்கி அங்­கி­ருந்து கதைப்­ப­தால் பய­னில்லை. சில பெண்­கள் கல்­வீச்­சுத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்­துள்­ள­னர். அவர்­கள் தாங்­க­ளா­கவே வேண்­டு­மென்று தமது தலையை தாமே உடைப்­பார்­களா? முத­ல­மைச்­சர் என்ன கதைக்­கின்­றார். என்று பெயர் குறிப்­பிட விரு­ம்பாத ஒரு­வர் தெரி­வித்­தார்.

முத­ல­மைச்­சரை இங்கு வந்து பார்க்­கு­மாறு கூறுங்­கள் எமது பிரச்­சி­னை­கள் தெரி­யும். இங்கு வந்து மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டா­மல் பிரச்­சி­னை­களை விளங்­கா­மல் கதைப்­ப­தில் நியா­யம் ஏது­மில்லை. வேலை­வெட்டி இல்­லாது தானா எமது இளை­ஞர்­கள் இர­வி­ர­வா­கக் காவல் நிற்­கின்­ற­னர். இர­வில் விழித்­தி­ருந்து பக­லில் வேலைக்­குச் செல்­லாது வரு­மா­னின்றி எத்­தனை குடும்­பங்­கள் உள்­ளன என்று அவ­ருக்­குத் தெரி­யுமா?

பொலி­ஸா­ ருடைய கதையை நம்­பிக் ­க­தைப்­பது வேடிக்­கை­யா­னது அவர் ஒரு நாள் இங்கு வந்து நின்­றி­ருக்­க­வேண்­டும் அப்­போதே தெரிந்­தி­ருக்­கும். நடக்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி யாகத் தலை­யிட்டு தீர்வு கண்டு எமக்கு ஆறு­தல் கூறா­து, பெரும் சம்­ப­வங்­கள் இடம்­பெ­றும் போதெல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருந்­து­விட்டு அதுவே சற்று ஓய்ந்து வரும் போது மக்­க­ளு­டைய மன­தைப் புண்­ப­டுத்­து­வது போன்­றும், எது­வுமே நடக்­காது போன்­றும் கதைத்­துக் கொண்­டி­ருக்­கக் கூடாது என்று மக்­கள் கொதித்­துள்­ள­னர்.

http://newuthayan.com/story/13/குள்ள-மனிதர்கள்-விவகாரம்-மூடி-மறைக்க-முயற்சிக்கும்-பொலிஸார்-வடக்கு-முதல்வரும்-உடந்தை.html

Link to comment
Share on other sites

நவாலிப் பகுதியில் வீட்டின் மீது கல் வீச்சு

 

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப் பகுதிக்கும் அது பரவியுள்ளது.

stone.jpg

நவாலி வடக்கு சங்கரத்தை பிரதான வீதியில் கேணியடிப் பகுதியிலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் சரமாரியாக கற்கள் வீசப்பட்டுள்ளது. வீட்டின் சீற் உடைந்துள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வன்னியசேகரம் இது தொடர்பில் தெரிவித்ததாவது எனது வீட்டிலிருந்து மூன்று வீடுகளுக்கு அப்பால் உள்ள சகோதரியின் வீட்டின் மீதே கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சகோதரியின் மகள் வீட்டு யன்னல் ஊடாக மதிலின் மேலாக இனந்தெரியாத சிலர் சிவப்பு நிற வெளிச்சத்துடன் ஏறிக் குதிப்பதை அவதானித்துள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் சத்தமிடவே 25 மேற்பட்ட இளைஞர்கள் அங்கு திரண்டனர். தேடுதல் நடத்தியபோதும் எவரும் சிக்கவில்லை.  இன்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர்  என்றார்.

http://www.virakesari.lk/article/38343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிபோடும் வேலையை உதயன் நன்றாகவே செய்யுது அந்த படத்தில் உள்ள உருவம்தான் உண்மையான உருவமா ?

அவ்வாறு இல்லாத முடிவில் ஏன் அந்த படத்தை போடுவதன் நோக்கம் ? இன்னும் மக்களை பீதிக்குள்ளாக்கி முட்டாள் ஆக்கும் வேலையை உதயன் திறம்படவே செய்கிறது .

கல்லெறி என்றாலே விளங்கனும் மக்களை பீதிக்குள்ளாக்கி வைப்பதே முக்கிய நோக்கம் அப்படி செய்பவர்கள் நேரில் வர பயம் கொண்டவர்கள் செய்யும் வேலைகள் அது விழிப்பு குழுவை உருவாக்கி நான்கு நாள் காவல் போட யார் அந்த மன்மத குஞ்சு என்று விளங்கிடும் .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர்  அல்லது ஒட்டுண்ணி குழுக்கள் அருகாமையில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து கல்வீச்சை நடாத்தியிருக்க சாத்தியம் உண்டா என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். விடுகளுக்கு அருகாமையில் சென்று கல்வீசுவதும் பின் அங்கிருந்து தப்பி ஓடுவதும் சாத்தியமில்லை. தொலைவில் இருந்து எறியப்படும் கல் மட்டுந்தான் இவ்வளவு வேகமாக சென்று ஒட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும். 70 களின் ஆரம்பத்தில் ஊரில் நான்வாழ்ந்த பகுதியில் இதுபோன்ற கல்லெறி தாக்குதல் நடந்தபோது நானும்  இரண்டு நண்பர்களும் துப்பாக்கி சகிதம் பல வாரங்கள் இரவில் ரோந்து சென்றது நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

news_11-08-2018_90jaffna.jpg

4 hours ago, பெருமாள் said:

மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிபோடும் வேலையை உதயன் நன்றாகவே செய்யுது அந்த படத்தில் உள்ள உருவம்தான் உண்மையான உருவமா ?

அவ்வாறு இல்லாத முடிவில் ஏன் அந்த படத்தை போடுவதன் நோக்கம் ? இன்னும் மக்களை பீதிக்குள்ளாக்கி முட்டாள் ஆக்கும் வேலையை உதயன் திறம்படவே செய்கிறது .

கல்லெறி என்றாலே விளங்கனும் மக்களை பீதிக்குள்ளாக்கி வைப்பதே முக்கிய நோக்கம் அப்படி செய்பவர்கள் நேரில் வர பயம் கொண்டவர்கள் செய்யும் வேலைகள் அது விழிப்பு குழுவை உருவாக்கி நான்கு நாள் காவல் போட யார் அந்த மன்மத குஞ்சு என்று விளங்கிடும் .?

பெருமாள்... படத்தைப் பார்க்க, உதயன் செய்தி ஆசிரியரின் படம் போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, vanangaamudi said:

இராணுவத்தினர்  அல்லது ஒட்டுண்ணி குழுக்கள் அருகாமையில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து கல்வீச்சை நடாத்தியிருக்க 

அருகாமையில் இராணுவ முகாம்??? எந்த செய்தியில் இதை கண்டீர்கள்? 

 

 70 களின் ஆரம்பத்தில் ஊரில் நான்வாழ்ந்த பகுதியில் இதுபோன்ற கல்லெறி தாக்குதல் நடந்தபோது நானும்  இரண்டு நண்பர்களும் துப்பாக்கி சகிதம் பல வாரங்கள் இரவில் ரோந்து சென்றது நினைவுக்கு வருகிறது.

70 களின் ஆரம்பத்தில் நீங்கள் துப்பாக்கி சகிதம் நடமாடி இருக்கிறீர்கள்.  இராணுவ முகாம்கள் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Jude said:

அருகாமையில் இராணுவ முகாம்??? எந்த செய்தியில் இதை கண்டீர்கள்? 

 

 

இராணுவத்தினர்  அல்லது ஒட்டுண்ணி குழுக்கள் அருகாமையில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து கல்வீச்சை நடாத்தியிருக்க சாத்தியம் உண்டா என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில்.. கிறீஸ் பூதம்.. குள்ள மனிதர்கள்.. இதென்னும் இருக்கல்லை. இப்ப சொறீலங்கா ஆக்கிரமிப்பின் பின் தான் உதெல்லாம்.. ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களின் தேவைகளோடு வந்து போகிறது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

அருகாமையில் இராணுவ முகாம்??? எந்த செய்தியில் இதை கண்டீர்கள்? 

 

70 களின் ஆரம்பத்தில் நீங்கள் துப்பாக்கி சகிதம் நடமாடி இருக்கிறீர்கள்.  இராணுவ முகாம்கள் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கவில்லை.

 

சும்மா செலுட்டுத்தனமாய் கேள்வி கேட்காமல்/கதைக்காமல் இப்படியான விடயங்களை எப்படி நிறுத்தலாம் என்று ஆலோசனையாவது கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சும்மா செலுட்டுத்தனமாய் கேள்வி கேட்காமல்/கதைக்காமல் இப்படியான விடயங்களை எப்படி நிறுத்தலாம் என்று ஆலோசனையாவது கூறுங்கள்.

குசா அண்ணை நாங்கள் கேள்வி மட்டும்தான் கேட்பம் கண்டியளோ. 

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

சும்மா செலுட்டுத்தனமாய் கேள்வி கேட்காமல்/கதைக்காமல் இப்படியான விடயங்களை எப்படி நிறுத்தலாம் என்று ஆலோசனையாவது கூறுங்கள்.

இப்படியான விடயங்களை எப்படி நீடிக்கலாம் என்று ஆலோசனை கேட்டால் பதில் பறந்து வரும் கண்டியளோ...... ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அராலியை முஸ்லீம் சகோதரர்களுக்கு கொடுத்துவிட்டு 
அங்கு பரம்பரையாக வாழும் தமிழர்கள் இடம்பெயர்வதே ஒரே வழி 

Link to comment
Share on other sites

On 8/12/2018 at 2:24 PM, நவீனன் said:

குள்ள மனிதர்கள் விவகாரம்-மூடி மறைக்க முயற்சிக்கும் பொலிஸார்- வடக்கு முதல்வரும் உடந்தை!!

On 8/12/2018 at 2:24 PM, நவீனன் said:

உதயன் போன்ற மூன்றாம் தரப் பத்திரிகையிலுள்ள அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களால் தான் கைக்கூலிகளுக்கு சார்பாக இப்படி போலியான தலைப்பை விடமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2018 at 8:45 PM, தமிழ் சிறி said:

news_11-08-2018_90jaffna.jpg

பெருமாள்... படத்தைப் பார்க்க, உதயன் செய்தி ஆசிரியரின் படம் போலுள்ளது. :grin:

?. தோழர் .. ஏலியன்சா கிடக்க போகுது.. 
எதற்கும் நாசாவிற்கு போன் போடுங்க ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

?. தோழர் .. ஏலியன்சா கிடக்க போகுது.. 
எதற்கும் நாசாவிற்கு போன் போடுங்க ..

தோழர்,  நாசாவை....  நவாலிப்  பக்கம்  கூப்பிட்டால், திரும்பி போக மாட்டாங்கள்  என்று பயமாக உள்ளது.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.