Jump to content

டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு


Recommended Posts

டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு

 

 
4c48cea2P1448462mrjpg

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை.

சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் இரவு 7.15 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

திண்டுக்கல் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் என்.ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன்கள் சேர்த்துள்ளர். தொடக்க வீரரான ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆர்.விவேக் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். அதேவேளையில் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட்களை விரைவாக பறிகொடுப்பது சற்று பலவீனமாக உள்ளது. இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

 

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடைசி ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். இதிலும் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு சவால் கொடுக்கலாம்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.பி.அருண் கார்த்திக் நல்ல பார்மில் உள்ளார். கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் அருண் கார்த்திக் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

அருண் கார்த்திக்கை தவிர்த்து சீராக ரன்கள் குவிக்கும் பேட்ஸ் மேன்கள் அணியில் இல்லாதது பலவீமான கருதப்படுகிறது. தலைவன் சற்குணம் மட்டும் அவ்வப்போது சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த சீசனில் 191 ரன்கள் சேர்த்துள்ள அவர், நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக திகழ்கிறார்.

டிஎன்பிஎல் சீசன்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் திண்டுக்கல் அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. மதுரை அணி ஒருமுறை கூட வென்றது இல்லை. இந்த சோகத்துக்கு இம்முறை மதுரை அணி முடிவு கட்ட முயற்சிக்கக்கூடும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.

https://tamil.thehindu.com/sports/article24669428.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அணிகளிடையே நடை பெறும் மிகப் பெரிய போட்டி, சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்

 

 

அ-அ+

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் ஜெகதீசனின் அபார அரைசதத்தால் மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணியத்துள்ளது திணடுக்கல் #TNPL2018

 
 
 
 
டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- மதுரை பாந்தர்ஸ்க்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
 
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கவுரவமான ஸ்கோரை எட்ட கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன என் நடராஜன் போராடினார். அடுத்த வந்த ஆர் விவேக் 13 ரன்னில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு ராமலிங்கம் ரோஹித் ஜெகதீசன் உடன் ஜோடி சேர்ந்தார். ரோஹித்தை வைத்துக் கொண்டு ஜெகதீசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 85 ரன்னாக இருக்கும்போது ரோஹித் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது.

201808122106409640_1_jagadeesan001-s._L_styvpf.jpg

சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12210641/1183466/TNPL-2018-Final-Dindigul-Dragons-118-runs-targets.vpf

Link to comment
Share on other sites

டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது மதுரை பாந்தர்ஸ்

 
அ-அ+

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் அருண் கார்த்திக் அதிரடியால் திண்டுகல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. #TNPL2018

 
 
 
 
டிஎன்பிஎல் 2018 இறுதிப்போட்டி- திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது மதுரை பாந்தர்ஸ்
 
சென்னை :
 
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
 
ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
 
இதனால் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார். 
 
201808122306107941_1_tnbllllll._L_styvpf.jpg
 
மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
இதைத்தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர்  ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியளித்தனர்.
 
இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் சந்திரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கள் அணியை   வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
 
அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கள் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். #TNPL2018

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12224935/1183482/Madurai-Panthers-won-by-7-wkts.vpf

Link to comment
Share on other sites

முடிந்தது டிஎன்பிஎல் 2018: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

 

 
arun_karthik1

 

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி லீக் துவக்க சுற்று ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கலில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந் நிலையில் 31 ஆட்டங்கள் முடிந்து புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து திண்டுக்கல் அணி 117 ரன்களையே எடுத்தது. மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4-30, லோகேஷ் ராஜ் 3-31, வருண் சக்கரவர்த்தி 2-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 118 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து மதுரை அணி 119 ரன்களுடன் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 3-23 விக்கெட்டை வீழ்த்தினார். அருண் கார்த்திக் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக மதுரை பேந்தர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து இந்த டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ளது. டிஎன்பிஎல் போட்டியினால் சிலருக்கு ஐபிஎல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேபோல இந்தமுறையும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பில்: அதிக ரன்கள்

   பெயர்  ஆட்டங்கள்   ரன்கள்   ஸ்டிரைக்   ரேட்  அதிக   ரன்  சிக்ஸர்கள் 
 1 

 அருண் கார்த்திக்   (மதுரை)

 10  472  153.74   85*  23
2

ஜெகதீசன்   (திண்டுக்கல்)

 9  396  130.69  68*  10
3  அனிருதா   (காரைக்குடி)  8  347  154.22  93*  20
4  ஷாருக் கான்   (கோவை)  9  325  141.30  86  13
5  ஆர். விவேக்   (திண்டுக்கல்)  9  262  209.60  70*  22

டிஎன்பில்: அதிக விக்கெட்டுகள்

   பெயர்  ஆட்டங்கள்   விக்கெட்டுகள்   சிறந்த   பங்களிப்பு
 1   அபிஷேக் தன்வார் (மதுரை)  10  15  4/30
 2

அதிசயராஜ் டேவிட்சன்   (தூத்துக்குடி)

 7  13   3/35
 3  டி. நடராஜன் (கோவை)  8  12  4/24
 4  அஜித் ராம் (கோவை)  7  11  3/16
 5  ராஜேஷ் (கோவை)  9  11  3/22

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/13/tamil-nadu-premier-league-2018-2979847.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.