Jump to content

பாதுகாக்கப்படுமா வெடுக்கு நாறி மலை.?


Recommended Posts

பாதுகாக்கப்படுமா வெடுக்கு நாறி மலை.?

வவுனியா வடக்கு ஒலுமடு பாலமோட்டை பகுதியில் தான் இந்த மலை அமைந்துள்ளது. பரந்து விரிந்த காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த மலையை வெடுக்கு நாறி மலை என அப்பகுதி மக்கள் அழைக்கின்றார்கள். வெடுக்கு நாறி என்ற மரம் அந்த காட்டில் அதிகமாக இருப்பதால் தான் அந்த மலை அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த மலையிலும் அதனை அண்டிய காட்டு பகுதியிலும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதாக யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறை தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறுகின்றார். இங்குள்ள மலைகளில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த பிராகிருத மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு பல பொக்கிசங்களை தாங்கியுள்ள மலையை அபகரிக்க பௌத்த துறவிகள் சிலர் முயன்று வருகின்றனர். எனினும் அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அது தடுக்கப்பட்டு தற்போது மலை உச்சியில் ஆதி சிவன் ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஐயனார், பிள்ளையார், ஐயன் சாமி என்பனவற்றையும் வைத்து வழிபட்டு வருகின்றார்கள். இந்த இடம் வரலாறுகளை சுமந்து இருப்பது மட்டுமல்லாது, வடக்கின் சுற்றுலாவின் பிரதான தளத்தையும் தன்னகத்தே வைத்துள்ளது. ஆனால் பலராலும் இன்று வரை இந்த மலை அறியப்படாமலே இருக்கின்றது. இதனை காப்பாற்ற அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அடுத்து வருகின்ற சந்ததிகள் இந்த மலையை மறந்து விட்டால் எம்மிடமிருந்து அந்த மலை பறிபோய்விடும், அந்த மலையை பாதுகாப்பதற்கு தற்போது எம்மிடம் உள்ள ஒரே வழி தமிழ் மக்கள் அதிகளவில் அங்கு சென்று வர வேண்டும். நீங்கள் பாதுகாவலராக சென்று வராவிட்டாலும், ஒரு சுற்றுலாவாக சென்று வாருங்கள். நீங்கள் எங்கும் காணாத ஒரு புதுமையை அந்த மலை தந்து விடும்..

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் முறியடிக்கப்படும்வரை இது போன்ற தமிழின அழிப்புகள் தொடரத்தான் செய்யும்!

தமிழின படுகொலைகாரக் கும்பலின் கைக்கூலிகள் இது போன்ற விடயங்களில் மௌனம் தான். 

Link to comment
Share on other sites

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருக்கின்ற வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் வழிபாடுயியற்றவும் தடைவந்திருக்கிறது. தொல்லியல் திணைக்களம் இந்தத் தடையை அறிவித்திருக்கின்றமை, இவ்விடம் பௌத்தமயமாகப்போகின்றமையை கட்டியம் கூறி நிற்பதாகப் பிரதேசவாசிகள் ஐயுறுகின்றனர்.

 

 

 

Oorukai

 

Link to comment
Share on other sites

அடுத்துவரும் தேர்தல் பிரசாரத்தில் வெடுக்குநாறிமலை பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி தமிழில் வழங்கப்படும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.