Sign in to follow this  
நவீனன்

கரீபியன் பிரீமியர் லீக் டி20

Recommended Posts

நடுவிரல்களை காட்டிய சோஹைல் தன்விருக்கு 15 சதவிகித அபராதம்

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CPL2018

 
 
 
 
நடுவிரல்களை காட்டிய சோஹைல் தன்விருக்கு 15 சதவிகித அபராதம்
 
வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

செயின்ட் கிட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கயானா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பாகிஸ்தானின் சோஹைல் தன்விர் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் பென் கட்டிங் இமாலய சிக்ஸ் ஒன்று விளாசினார். சிக்ஸிற்கு அடுத்த பந்தில் களீன் போல்டானார்.

201808121536468149_1_tanvir003-s._L_styvpf.jpg

இதனால் தன்வீர் தனது இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தினார். பிறர் மனதை புண்படும் வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் சைகை காட்டிய தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12153646/1183405/Sohail-Tanvir-fined-15-percent-of-match-fee-after.vpf

Share this post


Link to post
Share on other sites

 

CPL 2018 Match 6 GAW vs BT Highlights | Guyana Amazon Warriors vs Barbados Tridents Highlights

 

CPL 2018 Match 6 GAW vs BT Highlights Guyana Amazon Warriors vs Barbados Tridents

Share this post


Link to post
Share on other sites

கெய்ரன் பொலார்டின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசல்: 36 பந்துகளில் 94 விளாசிய டேரன் பிராவோ

 

 
darren%20bravo

பொலார்டை சிக்சர் வெளுக்கும் டேரன் பிராவோ. | கெட்டி இமேஜஸ்

கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் இடது கை வீரர் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்டின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசியதையடுத்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செய்ண்ட் லூசியா ஸ்டார்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

36 பந்துகளில் 94 ரன்களை டேரன் பிராவோ விளாசித்தள்ளியதையடுத்து 212 ரன்கள் இலக்கை பரபரப்பான முறையில் ஒரு பந்து மீதம் வைத்து வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ். இந்த அதிரடியில் அவர் 6 பவுண்டரிகளையும் 10 சிக்சர்களையும் வெளுத்துக் கட்டினார்.

 

செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கெய்ரன் பொலார்ட் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார் டேரன் பிராவோ.

4 சிக்சர்களை வரிசையாக பறக்க விட்ட டேரன் பிராவோ பிறகு ஒரு 2 ரன்களையும் 6வது பந்தை மீண்டும் சிக்சருக்கும் தூக்கி ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசியது ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.

செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் முன்னதாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ரக்கீம் கார்ன்வால் 53 ரன்களையும் கேப்டன் பொலார்ட் 65 நாட் அவுட்.

டேரன் பிராவோவுடன் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணி மேற்கொண்டு 42 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

ஒரே போட்டியில் 34 சிக்சர்கள் அடிக்கப்பட்டது, இது புதிய டி20 உலக சாதனையாகும்.

https://tamil.thehindu.com/sports/article24716961.ece

Share this post


Link to post
Share on other sites

தன் பந்துவீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றிக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித்: ஆல்ரவுண்டராகவும் சோபித்தார்

 

 
Capture

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் பார்பேடோஸ் ட்ரைடண்ட்ஸ் அணிக்கு ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது லெக்ஸ்பின் பந்து வீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றி அதில் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றி கண்டுள்ளார்.

லாடர்ஹில்லில் நேற்று நடைபெற்ற சிபிஎல் டி20 போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமை பார்பேடோஸ் டிரைடண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்த பொது ஸ்டீவ் ஸ்மித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுக்க, இவருடன் கூட்டணி அமைத்த ஷேய் ஹோப் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 43 ரன்களையும் எடுக்க பார்பேடோஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

 
Capture2PNG
 

தொடர்ந்து ஆடிய ஜமைக்கா தல்லவாஸ் 9 ஓவர்களில் 80 ரன்கள் என்று அபாரமாக வெற்றியை நோக்கி உறுதியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் தனது மாற்றியமைத்த, ஷாகித் அஃப்ரீடி போன்ற ஆக்‌ஷனில் லெக் ஸ்பின் வீசி தொடக்க வீரர்களான ஜான்சன் சார்லஸ், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.

5 பந்துகள் இடைவெளியில் இருவரையும் ஸ்மித் வீழ்த்த திருப்பு முனை ஏற்பட்டது. ஷாகித் அஃப்ரீடி போல் தன் லெக்ஸ்பின் பந்து வீச்சு ஆக்‌ஷனை மாற்றியிருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித், இதனையடுத்து பந்து வீச்சில் பெரிய அளவுக்கு சோபிக்காத ஸ்மித் 3 ஓவர்களில் 19 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.

ஜமைக்கா தல்லவாஸ் அணி 20 ஓவர்கள் ஆடி 3 விக்கெட்டுகளையே இழந்தாலும் இலக்கை எட்ட முடியாமல் 154/3 என்று தோல்வி தழுவியது ஒரு வேளை உஷ் கண்டுக்காதீங்கவாக இருக்க வாய்ப்புண்டு.

இத்தனைக்கும் ராஸ் டெய்லர் 26 ரன்களிலும் அதிரடி இடது கை வீரர் டி.ஏ.மில்லர் 25 ரன்களுடனும்  நாட் அவுட்டாக இருக்கின்றனர், பின்னால் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் இருக்கிறார், போவெல் இருக்கிறார் ஆனால் அவர்களெல்லாம் இறங்க முடியாமலேயே ஜமைக்கா தோல்வி அடைந்தது.

ஸ்மித் தனது 18 பந்துகளில் 10 பந்துகளை டாட் பால்களாக வீசினார். 2 சிக்சர்களைக் கொடுத்தார்.

ஆல்ரவுண்ட் திறமைக்காக ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

https://tamil.thehindu.com/sports/article24760283.ece

Share this post


Link to post
Share on other sites

கரிபியன் பிரீமியர் லீக்- செயின்ட் கிட்ஸ், ஜமைக்கா அணிகள் வெற்றி

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் வெற்றி பெற்றன. #CPL2018

 
 
 
 
கரிபியன் பிரீமியர் லீக்- செயின்ட் கிட்ஸ், ஜமைக்கா அணிகள் வெற்றி
 
கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பார்படோஸ் டிரிடென்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 35 பந்தில் 54 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல் டக்அவுட்டிலும், எவின் லெவிஸ் 1 ரன்னில் வெளியேறினாலும், பிராண்டன் கிங் 60 ரன்களும், டேவன் தாமஸ் 32 ரன்களும், பென் கட்டிங் 29 ரன்களும் அடிக்க 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது இர்பான் 4 ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும் மற்ற பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்ததால் பார்படோஸ் அணி வெற்றியை இழந்தது.

201808261649170024_1_simmons-s._L_styvpf.jpg
க்ளீன் போல்டாகும் லென்டில் சிம்மன்ஸ்

மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் ரோவ்மன் பொவேல் (64), டேவிட் மில்லர் (13 பந்தில் 32 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. வார்னர் 42 ரன்னும், பொல்லார்டு 46 ரன்னும், லென்டில் சிம்மன்ஸ் 45 ரன்னும் அடித்தாலும் செயின்ட் லூசியாவில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/26164917/1186710/Caribbean-Premier-League-2018-st-kitts-Jamaica-Tallawahs.vpf

Share this post


Link to post
Share on other sites

 

#CPL18 Match Highlights M19: St Kitts & Nevis Patriots v Guyana Amazon Warriors

 

#CPL18 Match Highlights M20: Barbados Tridents v Jamaica Tallawahs

Share this post


Link to post
Share on other sites

 

#CPL18 Match Highlights M22: Barbados Tridents v Guyana Amazon Warriors

 

#CPL18 Match Highlights M23: St. Kitts & Nevis Patriots v Trinbago Knight Riders

Share this post


Link to post
Share on other sites

 

#CPL18 Match Highlights M24: Barbados Tridents v St. Lucia Stars

 

#CPL18 Match Highlights M25: St. Kitts & Nevis Patriots v Jamaica Tallawahs

 

#CPL18 Match Highlights M26: St. Kitts & Nevis Patriots v Barbados Tridents

Share this post


Link to post
Share on other sites

 

TKR vs BT Match 28 CPL 2018 Full Highlights

 

Cpl 29 match highlights

 

CPL 2018Match 30 Trinbago Knight Riders vs Guyana ?? Amazon Warriors Full Highlights

Share this post


Link to post
Share on other sites

கரிபியன் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. #CPLFinal #GAWvTKR

 
 
கரிபியன் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்
 
டிரினிடாட்:
 
கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
 
டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
201809170807581899_1_Guyana-Amazon-Warriors-vs-Trinbago-Knight-Riders-Final2._L_styvpf.jpg
 
148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
 
அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.

Played
Fought
Won

REPEAT???#PlayFightWinRepeat#TimeForARepeat#GAWvTKR#CPL18#CPLFinalpic.twitter.com/gW8UjkToyS

— TrinbagoKnightRiders (@TKRiders) September 17, 2018
கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. #CPLFinal #CPL2018 #GAWvTKR 

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/17080758/1191805/.vpf

 

#CPL18 Match Highlights Playoff 1 : TKRvGAW

 

#CPL18 Match Highlights Playoff 2: JTvSKP

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this