நவீனன்

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Recommended Posts

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Yal-Ramanan.jpg?resize=800%2C590

 

 

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும்  யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார்.

இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல பாடல்களைக்கு இவர் ராஜன் இசைக்குழுவுக்காக இசையமைத்தார். பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார். அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா.. உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.

இதுபோன்ற பல ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பிஞ்சு மனம் ஈழத் திரைப் படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். அத்துடன் அப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற குமாரசாமி பாடிய பிரபலமான ஈழப் பாடலுக்கும் இவர் இமையமைத்தார். அத்துடன் நீரடித்து நீரங்கு விலகாது .. என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.

இதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.

ஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார். இவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை பிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார். இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/91025/

Share this post


Link to post
Share on other sites

மிகவும் சிறப்பாக இசையமைக்கப் பட்ட எனக்கு மிகவும் பிடித்த பாடல். யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

Share this post


Link to post
Share on other sites
இசையமைப்பாளர் யாழ். றமணன், இன்று மாலை இயற்கை எய்தியுள்ளார்.
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites


ஓ மரணித்த வீரனே பாடல் எப்ப கேட்டாலும் மனசுக்குள் கண்ணீரை கசிய வைக்கும் பாடல். மிகவும் கனதியான மனனிலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய பாட்டு

ஊரில் இருக்கும் போது  (சுண்டிக்குளி) ராஜன் இசைக்குழுவின் பல நிகழ்ச்சிகள் பலவற்றை ரசித்து இருக்கின்றேன். ரமணனின் கிட்டார் இசை அற்புதமாக இருக்கும்.  சினிமா பாடல்களில்  'மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா' வும் 'ராஜா ராஜாதி ராஜன் எங்கள் ராஜாவும்' இவர் குரலில் கேட்க அருமையாக இருக்கும்.

ரமணனுக்கு அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

Share this post


Link to post
Share on other sites

மறைந்த யாழ் மண்ணின் இசையமைப்பாளர் ரமணனுக்கு அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் ரமணன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

Share this post


Link to post
Share on other sites

இசையமைப்பாளர் ரமணனுக்கு அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

 

ஓ மரணித்த வீரரே

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதணிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

 

மழை பொழியும் ஓர் நாளில்

மலர் சூடும் கல்லறைகள்

உமைப் பிரிந்த உறவெல்லாம்

உமைத்தேடி வந்திருக்கும்

 

உமைத்தேடி அழுதழுது

உம்முன்னே உயிர் துடிக்கும்

உமக்கென்று ஏதேதோ

கொண்டு வந்து சேர்த்திருக்கும்

 

மணம் நிறைத்த மலராலே

மாலைகளும் அவை சூடும்

மனம் நிறைந்த வேதனையால்

விழி நீரை அவை சிந்தும்

 

அண்ணன் உரை தொடர்கையிலே

அமைதியாக செவிமடுக்கும்

மணியோசை ஓய்ந்த பின்னே

மௌனமாக அஞ்சலிக்கும்

 

வேளை வந்து சேர்ந்தவுடன்

விளக்கொன்றை அவை ஏற்றும்

மழைத்துளிகள் வீழ்கையிலும்

சுடர் ஒளிரும் கல்லறை முன்

 

சுடர் ஒளியின் நடுவினிலே

முகம் தெரியும் இரவினிலே

முகம் காணும் விழிகள் எல்லாம்

குளமாகும் நீராலே

 

நீர் வழிந்த முகங்கள் எல்லாம்

உமை நினைந்தே சிவந்திருக்கும்

நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்

வந்து வந்து போயிருக்கும்

 

நீர் நிறைத்த நினைவுகளோ

நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்

நீர் சுமந்த கனவதுவோ

நிமிர்ந்து நட என்றிருக்கும்

 

உங்கள் பணி தொடர்ந்திடவே

உறுதியெடு என்றிருக்கும்

விடை பெறும் வேளையிலே

விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்

உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்

உம் பணி தொடர..

 

 

 

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

யாழ் ரமணனுக்கு எனது இதய அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

எனது அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now