• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்

Recommended Posts

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் பிர­தமர் ரணில் அழைப்பு

 யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய சகல இலங்­கை­யர்­களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அர­சாங்­க­மாக நாம் அனைத்து மக்­க­ளுக்கும் இந்த அழைப்பை விடுக்­கின்றோம். நாட்­டுக்கு திரும்பி வரும் மக்­க­ளுக்கு சகல உத­வி­க­ளையும் வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­க­ளையும் செய்­து­ கொ­டுக்க தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், யுத்­தத்தின் போது நாட்டை விட்டு வெளி­யே­றிய அக­திகள் குறித்தும் இந்­தி­யாவில் உள்ள ஈழ தமிழ் அக­தி­களை மீண்டும் நாட்­டுக்கு வர­வ­ழைப்­பது குறித்தும் யுத்­தத்தின் பின்னர் தற்­போது வரையில் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ள அக­தி­களின் வாழ்­வா­தார நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்டம் குறித்தும் எழுப்­பிய கேள்­விக்கு பதிலளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இதனை குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்.

யுத்­தத்தின் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் இந்­தி­யாவில் இருந்து 9509 அக­திகள் நாடு திரும்­பி­யுள்­ளனர். ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் உத­வி­யுடன் இவர்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்­கான இழப்­பீ­டுகள், வாழ்­வா­தார உத­விகள் என குறிப்­பிட்ட தொகை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 18 வய­துக்கு மேற்­பட்ட நபர்­க­ளுக்கு தலா 10 ஆயி­ரமும், 18 வய­துக்கு குறைந்த நபர்­க­ளுக்கு தலா 7500 ரூபா என்ற தொகையும், பிரத்­தி­யேக நிதி உத­வி­களும் அதேபோல் அவர்­க­ளுக்­கான தற்­கா­லிக வீடு­களை பெற்­றுக்­கொள்­ளவும் வாழ்­வா­தா­ரத்தை பார்த்­து கொள்­ளவும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் உரிய பிர­தேச சபை­களில் தம்மை பதிவு செய்­து­ கொள்­ளவும் ஏற்­பா­டுகள் செய்­து ­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் யுத்­தத்தின் போது வடக்கு கிழக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்து இந்­தி­யாவில் வசித்து வரும் இலங்கை தமி­ழர்­களில் மேலும் 3815 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக இந்­திய அர­சாங்கம் எமக்கு அறி­வித்­துள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடாக அவர்­களை நாட்­டுக்கு வர­வ­ழைக்கும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இவர்கள் கடல் மார்க்­க­மாக இலங்­கைக்கு வர முயற்­சி­களை எடுத்த போதிலும் இந்­திய அர­சாங்கம் இந்­திய விமா­னப்­படை உத­வி­யுடன் அவர்­களை இலங்­கைக்கு அழைத்­து­ வர நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. அவர்­க­ளுக்­கான இல­வச விமான பய­ணங்­களை முன்­னெ­டுப்­ப­துடன் அவர்­க­ளுக்­கான உத­வி­க­ளையும் செய்து கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளனர்.

அதேபோல் இந்­தி­யாவில் இலங்கை அக­தி­க­ளுக்கு பிறந்த குழந்­தைகள் தற்­போது வரையில் கல்வி கற்கும் சிறு­வர்கள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களை இலங்கை பிர­ஜை­க­ளாக பதிவு செய்­யவும் அவர்­க­ளுக்­கான கல்வி சுகா­தார மற்றும் அடிப்­படை வச­தி­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் தலை­மையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எவ்­வாறிருப்­பினும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்­டிய தேவை உள்­ளது. இலங்கை மக்கள் இலங்­கையில் சுதந்தி­ர­மாக வாழ வேண்டும். ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய சகல இலங்­கை­யர்­களும் மீண்டும் இலங்­கைக்கு வர­ வேண்டும். அர­சாங்­க­மாக நாம் அனைத்து மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். நாட்­டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் நாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-09#page-2

Share this post

Link to post
Share on other sites

இந்த அறிவிப்பை.. யுத்த காலத்தின் போது புலம்பெயர்ந்து.. பின்னர் எந்தச் சங்கடமும் இன்றி கொலிடே வந்து போகும்.. இரட்டைக் குடியுரிமை கொண்டவையை நோக்கியும் வைக்கலாம்... அசைலம் வழங்கின நாடுகளை நோக்கிக் கேட்கலாம். குறிப்பாக கனடா.. அவுஸி.. நியுஸி.. பிரிட்டன்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. இத்தாலி.. சுவிஸ்.. டென்மார்க்.. சுவிடன்..பின்லாந்து.. நார்வே... அமெரிக்கா..

அப்படிக் கேட்டால்.. உங்க.. தமிழ் ஆக்கள் பலருக்கு வயிற்றில புளி பிரளும். புலி அடியோடு மறந்திடும். 😋  இப்பவே கொலிடே போறதுக்கு.. புலியை மறந்தவை கனக்கப் பேர் இருக்கினம். 😂

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள்.

நான் இரண்டு இரட்டை குடியுரிமை பொற்றவன் என எப்படி  இல‌ங்கை குடியக‌ழ்வு திணைக்களத்திறிகு தெரியும்? 

உ+ம் நான் இங்கிலாந்தில் 12 வருடம் வ‌திக்கின்றேன். பிரித்தானிய கடவுச்சீட்டிற்கு விண்ண‌ப்பின்கிறேன் இந்த சந்தர்ப்பத்தில் :

1. பிரித்தானிய அரசின் நிபந்தனையின் படி நான் என்னுடைய தற்போதைய இலங்கை குடியுரிமையல் இரத்து செய்ய வேண்டுமா? அல்லது

2. நான் பிரித்தானிய குடியுரிமை பெற்றவுடன் தானகவே என்னுடைய இலங்கை குடியுரிமை இரத்தாகின்றதா? 

தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துவீர்களா?
  
Share this post

Link to post
Share on other sites

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

9 minutes ago, colomban said:

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி!

இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை ஸ்ரீ லங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இரட்டை பிரஜாவுரிமை வழங்காத நாடுகளில் இலங்கை குடியுரிமையை இழந்து வாழ்பவர்களுக்கு விசேட வீசா ஒன்றை அறிமுகப்படுத்திவைக்கும் நடவடிக்கையினை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளில் இலங்கைக் குடியுரிமையை இழந்தவர்களுக்கு இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

நீண்ட காலமாக இந்த நடவடிக்கை உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதனை துறைசார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி பெற்றுக் கொள்ளும் நோக்கில் விசேட திறமை மற்றும் முதலீட்டு திறன் உள்ள இலங்கையர்களுக்காக இந்த விசா வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசா அனுமதிப் பத்திரம் ஊடாக நீண்ட காலங்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நடவடிக்கையினை அமுல்ப்படுத்துவதற்கு இன்னும் மூன்று மாதங்களாகும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/104465?ref=home-imp-flag

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, நவீனன் said:

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி!

ஏதோ  அங்கே  எல்லாம் முடிஞ்சு

சனம்  நிம்மதியா இருக்கிற  மாதிரியும்

இலங்கையில் எல்லோருக்கும்  எல்லாம்  சமனாக நடக்கிற  மாதிரியும்

கதை  விடுகிறார்  நரி.

முதல்ல பயங்கரவாத  சட்டத்தையாவது எடுக்க முயலுங்க  நரி சார்

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

நான் எழுதியது ஜேர்மன் நடைமுறை.

ஆனால் நீங்கள் கேட்பது போல இங்கிலாந்தில் அப்படி ஒரு நடைமுறை இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. யாராவது இங்கிலாந்துகாரர்தான் பதில் தரவேண்டும்.

ஜேர்மனி  இரட்டை குடியுரிமையை அங்கீகரிப்பது இல்லை. ஆனாலும் 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் படி இங்கு பிறந்த பிள்ளைகள் விரும்பினால் இரட்டை குடியுரிமை எடுக்கலாம். (இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதில் பல சட்ட நுணுக்கங்கள் இருக்கிறது.)

24 minutes ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

வாராவன் எல்லாம் துரோகி ஆக்கப்படுவான்!

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

நான் வருவேன்

அதற்கு முன்  

கெட்டவற்றை கேட்காமல் பார்க்காமல்

கேட்டால்  பார்த்தால்

அதை  தட்டிக்கேட்காமல்

வாயை  பொத்திக்கொண்டு இருக்கும் வலிமையை  நான் பெறணும்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, நவீனன் said:

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்

சபையில் பிர­தமர் ரணில் அழைப்பு

 ...

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-09#page-2

ஓரளவிற்கு வசதியும், உயிருக்கு மதிப்பும் இருக்கும் புலம்பெயர் நாட்டில் வசித்துவிட்டு இலங்கை திரும்பிச் செல்ல விசரா பிடித்திருக்கு..? இலங்கையில் பிணத்தைக்கூட விட்டுவைக்காத அந்நாட்டில் தமிழருக்கு இருக்கும் பெறுமதியை உலகமே அறியுமே!

  • Like 3
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

ஊருக்கு போய் சாரத்தை மடிச்சுச் கட்டிக்கொண்டு, விதானையாரட்டை போய் நில்லுங்கோ. சவூதில இருந்து வந்தனான். துழைவார், ஏர்போட்டில எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு, போலீசில சொன்னா வெள்ளவான் அனுப்புவம் எண்டு திரத்திப்போட்டாங்கள். 

ஜயா நீங்கள் தான் தெய்வம் எண்டு பிறப்புச் சான்றிதலையும் கொடுத்து கொஞ்சம் காசும் வெட்டினால், புது அடையாள அட்டை.

நீங்கள் வெளிநாட்டவர் எண்டு சொன்னா, உனககென்ன தம்பி விசரே எண்டுவினம்.

பிறகென்ன, இரண்டு பாஸ்போட்டோட, திரியலாம். இரண்டையும் ஒரே நேரத்தில வைச்சிராதீங்கோ.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, Nathamuni said:

இது உண்மை நாதமுனி குறுக்கு வழி.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு அப்படி தன்னுடய இலங்கை குடியுரிமையை இழக்காமல் இருக்கவும் முடியுமா?  

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

இது சட்டபூர்வமான குடியேறிகளுக்கானது.

அகதிகள் குடியுரிமை பெறும் விடயத்தில் பொருந்தாது. 

அகதிளாக வந்து குடியுரிமை பெறுபவர் விடயம் இலங்கை அரசுக்கு தெரியாது. தெரிவிக்கவும் கூடாது. இதனால் தான் காணாமல் போன பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என சொல்லித் தப்ப முயல்கிறது இலங்கை அரசு.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

ரணில் கொஞ்சம் கொலிடே போறவேண்ட முஞ்சிப் புத்தகத்தை பாத்துட்டு ஒரு அறிவிப்பை விட்டால் நல்லா இருக்கும்..இல்ல முஞ்சிப்பு புத்தகத்தில தான் உள்ள அலப்பரை முளுக்க போடுறவே....

Share this post

Link to post
Share on other sites

அதென்ன ஒருநேரம் நீங்களும், உங்கள் அமைச்சர்கள் சிலரும் புலம்பெயர்ந்த சமூகம் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்று பேசுறது,நேற்றுகூட உங்கள் ராணுவ தளபதி ஒருவர் ஹெல்ப் கேட்டிருந்தார் புலம்பெயர் தமிழர்களிடம்....

 பிறகு அதே வாயால எல்லாரும் நாட்டுக்கு வாங்கோ எண்டுறது?

யுத்தம்தான் முடிவுக்கு வந்தது, யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களில் எதையாவது ஒன்றை தீர்த்து வைத்திருக்கிறீர்களா  ரணில் ஐயா?

புலம் பெயர்ந்தவர்களை திரும்பி வரசொல்லி அழைக்கும் உங்கள் சிறுபான்மையின பாசம், உள்நாட்டில் உள்ள அதே யுத்தத்தால் தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் சிறுபான்மை தமிழினம்மீது காட்டப்படுகிறதா?

யுத்தம் முடிந்த பத்தாண்டுகளில் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டியெழுப்புவதில் காட்டப்படும் வேகம் வீடுகளை கட்டி கொடுப்பதில் காட்டப்பட்டிருக்கிறதா?

தாயகத்தில் உள்ள தமிழனை நீங்கள் விரும்பியவாறு இருத்தி எழுப்பும் அளவிற்கு  கொண்டுவந்த உங்களுக்கு, காலம் காலமாய் உறுத்தலாய் இருப்பது, புலம்பெயர்ந்து பொருளாதாரம்,கல்வி,வெள்ளைக்காரனுக்கே வேலை கொடுக்கும் அளவிற்கு தொழில் முயற்சிகள் என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் லட்சம் லட்சமாய்  புலம்பெயந்ர்து வாழும் தமிழர்கள்தான்.

உங்களுக்கு ஒரு துணிவு புலம்பெயர் தமிழர்கள் மொத்தமாய் திரும்பி வந்தால்கூட சிங்கள மக்களின்  சனத்தொகையை தாண்டி தமிழர் சனதொகை அதிகரிக்காது,வேண்டுமென்றால் முஸ்லிம்களைவிட இன்னும் பல லட்சம் தமிழர்களின் தொகை அதிகரிக்கலாம்.

இந்த இருவரின் மக்கள்தொகை எப்படிபோனாலும் உங்களுக்கு ஒன்றுதான், தப்பித்தவறி புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்தால் சிங்கள மக்களைவிட தமிழர்களின் தொகை அதிகரிக்கும் என்ற நிலையிருந்தால், நீங்கள்தான் திருப்பி அழைப்பீர்களா..

அல்லது திருப்பி அழைக்கும் உங்கள் அறிக்கை வந்த மறுநாளே,சிங்கள தேசதுரோகி என்று பட்டமும் உங்கள் மக்களால் உங்களுக்கு வழங்கப்பட்டு சிங்கள தேசத்தில் பெரும் கலகம் ஏற்பட்டு உங்கள் ஆட்சி கவுழாதா?

சொந்தகுடி மக்களை அந்நியர்கள்போல் நடத்தி உயிர் உடமை உரிமை என்று அனைத்தையும் பறித்து நாட்டைவிட்டு ஓடவைத்த உங்களைவிட...

அந்நிய மக்களாய் நாமிருந்தாலும் சொந்தகுடிமக்கள்போல், உயிர்,உடமை,உயிர் என அனைத்தும் தந்து நிம்மதியான வாழ்வும் தந்த புலம்பெயர் தேசங்களின் கால் தூசிக்குகூட நீங்கள் சமானம் இல்லை.

தனக்கு வாழ்வும் வளமும் வளமான எதிர்காலமும் தந்த புலம்பெயர்நாடுகளுக்கு அனைத்துவிதமானவகையிலும் விசுவாசமாக இருக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமை,அதனை எத்தனை தலைமுறைகள் நீங்கள் வாழும் நாடுகளில் வாழ்ந்தாலும் அந்த விசுவாசத்திலிருந்து துளியளவுகூட விலகிநிற்காது வாழவேண்டியது ஒவ்வொரு புலம்பெயர்தமிழனதும் செஞ்சோற்றுக்கடன்!

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

9 hours ago, colomban said:

ஆனால் உண்மையில் ஒருவருக்கு அப்படி தன்னுடய இலங்கை குடியுரிமையை இழக்காமல் இருக்கவும் முடியுமா?

இதில் முதலில் பிரசாவுரிமை, குடியுரிமை, வதிவிடவுரிமை  வேறுபாடுகள் பற்றிய தெளிவு வேண்டும்.   

பிறப்பினால் ஏற்ப்படும் பிரசாவுரிமையை, இறையாண்மை மக்களிடம் அளித்த (உ.ம். பாராளுமன்றம்)  ஓர் அரசு நீக்கமுடியாது என்பது, மக்களிடம் இருந்தே அந்த அரசின் இறையாண்மை பிறக்கிறது என்பதால், இறையாண்மை உள்ள அப்படியான அரசால் பிரசாஉரிமையை பறிக்க முடியாது.

இந்தப் பிரச்னை, பிரித்தானியாவில் பிறந்து  ISIS இற்க்கு ஈராக் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பிரித்தானியாவிடற்கு திரும்பி வருவதை தடுப்பதத்ற்கு அரசு பிரசவுரிமையை பறிப்பதற்கு முயன்ற போது, சட்டமா அதிபர் அரசு  நீதி மன்றம் செல்வதையே தடுத்துவிட்டார்.    

இதன் காரணமாக, இப்படிப்பட்டவர்கல் திரும்பி வருவதை தடுப்பதத்திற்கு, பிரித்தானியா தனது SAS ஐ ISIS உடன் சண்டை பிடிப்பவர்களுக்கு பயிச்சி அளிக்கும் போர்வையில் இராக் மாற்றம் சிரியாவிற்கு அனுப்பியது என்பது அநேகமாக வெளியில் செய்தியாக வரவில்லை.
 
இறையாண்மை என்பதே 16ம் நூற்றாண்டில் ஓர் தேச-அரசு (nation state) என்பத்தின் தோற்றத்திலேயே பிறந்து, நிலப்புல ஒருமைப்படுள்ள இறையாண்மை ஆக Clausewitz இன் காலத்தில் கூர்ப்படைந்து பரிணாம முதிர்ச்சி அடைந்தது.       

முடியாட்சியில், பிரசாவுரிமை பறிக்கப்படலாம். ஏனெனில்,  இறையாண்மை முடிக்குரிய வம்சத்தின் உரிமையும் சொத்தும் ஆகும். மேலும், ஒரு நபர் முடியாட்சிக்கு உட்பட்டவர் / உட்பட்டது  (அதாவது subject) ஆகும்.     

சொறி லங்கா அரசு என்பது, பிரித்தானிய பாராளுமன்றத்திலேயே பிறந்தது என்பதால், சொறி லங்கா நிச்சயமாக பிரசவுரிமையை பறிக்கமுடியாது.

ஆயினும், சொறி சிங்களம்  பறிப்பது  குடியுரிமை என்றே சொல்கிறது. சிங்களத்தில் எப்படி  உள்ளது என்பது தெரியவில்லை.

நடைமுறையில் சிங்களம் பறிப்பது (இலங்கைத் தீவில் பிறந்தவர்களின்) குடியுரிமையை ஆகும்.

சொறி லங்கா  குடியரசு என்ற  வாதம், ஈழத்தமிழ் தேசம் தமது இறையாண்மையை தாரை வார்த்துக் கொடுத்து சொறி லங்கா குடியரசாக பரிணமிக்காத படியால், ஈழத்தமிழ் பூர்விகம் உள்ள, இலங்கைத் தீவில் பிறந்த ஒருவரின் பிரசவுரிமையை நிச்சயமாக சொறி லங்கா  குடியரசு பறிக்க முடியாது.

இது வரலாறும், சட்டமும் தெரிந்தவர்களுடன் பலாகும் பொது எனக்குப்  புரிந்தது.

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற நாள் தொடங்கி சொறீலங்கா பிரஜாவுரிமை ரத்தாகிவிடும். ஆனால் பிரித்தானியா இரட்டை பிரஜாவுரிமையை ஏற்றுக் கொள்ளும் நாடு என்ற வகையில்.. இன்னொரு நாட்டில் அது வழங்கும் பட்சத்தில்.. பிரஜாவுரிமையை பேண முடியும்.

ஒரு சொறீலங்கா பிரஜை பிரித்தானிய பிரஜா உரிமை பெற்றதும்.. அவரின் சொறிலங்கா பிரஜா உரிமை ரத்தாகி விடும். மீண்டும்.. அதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள பிரித்தானியா தடை போடாது. 

அந்த வகையில் தான் பிரித்தானிய பாஸ்போட் வைச்சிருக்கும் எம்மவர்கள் சொறீலங்கா பிரஜா உரிமைக்கும் விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சொறீலங்கா பிரஜா உரிமை ரத்தானாலும்.. அதன் கடவுச்சீட்டை கையளிக்கனும் என்ற அவசியம் இப்போதில்லை. அது தானாகவே ரத்தாக்கப்பட்டு விடும். 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, விசுகு said:

ஏதோ  அங்கே  எல்லாம் முடிஞ்சு

சனம்  நிம்மதியா இருக்கிற  மாதிரியும்

இலங்கையில் எல்லோருக்கும்  எல்லாம்  சமனாக நடக்கிற  மாதிரியும்

கதை  விடுகிறார்  நரி.

முதல்ல பயங்கரவாத  சட்டத்தையாவது எடுக்க முயலுங்க  நரி சார்

அவையவையின்ரை சனம் நல்லாய்த்தான் இருக்கினம்....
போற ஆக்களிட்டை வவுனியாவுக்கு அங்காலை ஏ9 வீதியை விலத்தி உள் ஒழுங்கைகளுக்காலை வானை விடச்சொல்லுங்கோ....... 
அங்கை தெரியும் வேதனகளும் அவலங்களும்...

இனியும் சம்சும் கொம்பனியை ஆரும் தூக்கி கதைச்சால் இழுத்துப்போட்டு குத்துவன் சொல்லிப்போட்டன்.

இன்றைய இலங்கை நிலமையில் இங்கே இன்னுமொரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சிங்கள மக்களிடமோ அல்லது சிங்கள அரசிடமோ யாருமே கோபப்படத்தேவையில்லை. அவர்கள் தாங்கள் தங்கள் இனம் நாடு அதை கட்டிக்காக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். எமது அரசியல் நாதாரிகள் தான் கைநிறைய காசு வந்தவுடன் தூங்கிவிடுகின்றார்கள். எமது சோம்பேறி/நயவஞ்சக அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்களையும் அரசையும் எதிர்ப்பதில் நியாயமில்லை

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

அப்ப பாஸ் போர்ட் கிழித்துவிட்டு இறங்கியவர்கள் ,பாஸ் போர்ட் அப்படி ஒரு சாமனே கண்ணால் கானவில்ல்லை இடையில் முகவர் பறித்துக்கொண்டு போய் விட்டான் என்பவர்கள் எப்படி சிற்றிசன் எடுத்து இருப்பினம் ?

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

அவையவையின்ரை சனம் நல்லாய்த்தான் இருக்கினம்....
போற ஆக்களிட்டை வவுனியாவுக்கு அங்காலை ஏ9 வீதியை விலத்தி உள் ஒழுங்கைகளுக்காலை வானை விடச்சொல்லுங்கோ....... 
அங்கை தெரியும் வேதனகளும் அவலங்களும்...

இனியும் சம்சும் கொம்பனியை ஆரும் தூக்கி கதைச்சால் இழுத்துப்போட்டு குத்துவன் சொல்லிப்போட்டன்.

இன்றைய இலங்கை நிலமையில் இங்கே இன்னுமொரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சிங்கள மக்களிடமோ அல்லது சிங்கள அரசிடமோ யாருமே கோபப்படத்தேவையில்லை. அவர்கள் தாங்கள் தங்கள் இனம் நாடு அதை கட்டிக்காக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். எமது அரசியல் நாதாரிகள் தான் கைநிறைய காசு வந்தவுடன் தூங்கிவிடுகின்றார்கள். எமது சோம்பேறி/நயவஞ்சக அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்களையும் அரசையும் எதிர்ப்பதில் நியாயமில்லை

இதில  இன்னொன்றையும் சேர்க்கலாம் அண்ணை

இவையளுக்குத்தான்  கருணாநிதியை  பேசினால் கோபம் வருகுது

வரும் தானே?

கற்றது அங்க தானே???

முன்பே எழுதியது தான்

இன்னும் சில  வருடங்களில்  உலக கோடிசுவரர்  வரிசையில் எம்  அரசியல்வாதிகளும் இருப்பார்கள்

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

இதில  இன்னொன்றையும் சேர்க்கலாம் அண்ணை

இவையளுக்குத்தான்  கருணாநிதியை  பேசினால் கோபம் வருகுது

வரும் தானே?

கற்றது அங்க தானே???

முன்பே எழுதியது தான்

இன்னும் சில  வருடங்களில்  உலக கோடிசுவரர்  வரிசையில் எம்  அரசியல்வாதிகளும் இருப்பார்கள்

புலம் பெயர்ந்த சிலர் இன்னும் இவங்களுக்கு செம்படிக்கிறார்களே நாட்டில் இல்லாமலே என்ன செய்வது :unsure:

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புலம் பெயர்ந்த சிலர் இன்னும் இவங்களுக்கு செம்படிக்கிறார்களே நாட்டில் இல்லாமலே என்ன செய்வது :unsure:

தவணைகள் பல தாண்டிய போதும் கற்பனையில்  இருக்கிறார்கள்

கச்சையும் போன  பின்  தான்..??

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this