Jump to content

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்


Recommended Posts

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார் Share on FacebookShare on Twitter
மாலை 6.10 மணிக்கு கருணாநிதி உயிர் பிரிந்தது

http://www.dinamalar.com/

கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi

 

கருணாநிதி காலமானார் :

தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi

 
LIVE: கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi
 

 

kalaingar_1_18100.jpg

கருணாநிதி காலமானார் :

தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

கலைஞர் கருணாநிதி காலமானார்

 

 
kalaijpg

கருணாநிதி | கோப்புப் படம்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவில் திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 29-ம் தேதி மாலை அவருக்கு இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையால் உடல்நிலை படிப்படியாக சீராகி வந்தது.

 

ஜூலை 31-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய மருத்துவமனையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என கூறப்பட்டது. இந்நிலையில், கல்லீரல் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ஆரம்பகட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு கல்லீரல் மருத்துவ நிபுணர் முகமது ரேலா ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூச்சுத் திணறல் காரணமாக கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவரது உடல் நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்த படங்களை திமுக தலைமை அலுவலகம் உடனடியாக வெளியிட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் நேரில் பார்த்த படங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் நேற்று பார்த்தார். பகல் 1.50 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி, துணைவியார் ராசாத்தி அம்மாள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் நேற்று மருத்துவமனையில் முகாமிட்டிருந்தனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னை பெருநகர் காவல் இணை ஆணையர் அன்பு, மயிலாப்பூர் காவல் ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் நேற்று பகல் 12.30 மணியளவில் மருத்துவனைக்கு வந்து நிலவரத்தை ஆராய்ந்தனர். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. எனவே, அவரது உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத் துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க முடியும்' என்று கூறப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ள தகவலை அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். கட்சி நிர்வாகிகளும் வரத் தொடங்கினர். பெண்களும் தொண்டர்களும் கதறி அழுதனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24624461.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

 

தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரை இழந்துவிட்டோம்!

 

- கருணாநிதி மறைவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு

 

#Karunanidhi #RIPKarunanidhi #MissUKarunanidhi

 

 

குடியரசுத்தலைவர் இரங்கல் :

kalaingar_2_19060.jpg

 

 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், கருணாநிதி மறைவுக்கு அவர் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Link to comment
Share on other sites

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... #Karunanidhi #RIPKarunanidhi #MissUKarunanidhi

 

karunanidhi_art_19489.jpg

7 நாள் துக்கம் அனுசரிப்பு. நாளை அரசு விடுமுறை :

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Link to comment
Share on other sites

ரஜினிகாந்த்: "என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்” 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, இரவு 6.10 மணியளவில் காலமானார்.

 

கருணாநிதி

19:20: அலைப்பேசியில் உள்ள டார்ச் விளக்குகளை காட்டி தொண்டர்கள் மருத்துவமனையின் வெளியே கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

19:15: கருணாநிதி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

19.10: ரஜி்னிகாந்த் இரங்கல்

 

LIVE: "என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்" - ரஜினிகாந்த்

19.01: கருணாநிதியின் உடல் முதலில் மருத்துவமனையில் இருந்து அவரின் கோபாலபுர இல்லத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

19.00: புதுச்சேரியிலும் நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

18.56: திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததைத் தொடர்ந்து நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஏழு நாட்களுக்கு அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

18.54: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajiniபடத்தின் காப்புரிமைTWITTER

18.53: கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் இன்று காலமானார் கருணாநிதிபடத்தின் காப்புரிமைTWITTER

18.52: கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் இன்று காலமானார் கருணாநிதிபடத்தின் காப்புரிமைTWITTER Presentational grey line

18:50: மாலை 6:10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-45093520

 

 

Link to comment
Share on other sites

நாளை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.

 

karunanidhi_art_19489.jpg

ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது கலைஞர் உடல்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து சிறிது நேரத்தில் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்துக்கும் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து நாளை காலை 11.00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாளை சென்னை வருகிறார்கள்.

 

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள்,

அதிகாரமும் சந்தர்ப்பமும் இருந்தும், செய்யக் கூடியவற்றைச் செய்யாமலிருந்த அரசியல்வாதிகளுக்கு இவரும் ஒரு உதாரணம்.

விரும்பியோ, விரும்பாமலோ எமது தாயக விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டவர் என்பதால் இவர்பற்றியும் எழுதவேண்டியிருக்கிறது.

2009 இல் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகமும், அதன்பின்னரான மழை ஓய்ந்தும், தூவானம் நிற்கவில்லை என்கிற போருக்கான உவமானமும் இப்போது மனதில் வந்து போகிறது.

சோனியாவின் அரசின் பங்காளியாகவிருந்து, இனவழிப்புப் போரை நிறுத்த திராணியற்று, தனது மகளுக்காகவும், வளர்ப்பு மகனுக்காகவும் இனத்தை விட்டுக் கொடுத்தார் என்கிற அவப்பெயர் இவருடன் எப்போதும் இருக்கப்போகிறது.

ஈழத்தமிழரைப் பொறுத்தவரை அமரர் திரு எம் ஜி ராமச்சந்திரன் எப்போதுமே கதாநாயகனாகவும், இவர் எப்போதுமே வில்லனாகவும் இருந்துவந்துள்ளார், இனியும் அதில் மாற்றம் இருக்கப்போவதில்லை.

ரஜீவின் கொலையுடன் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை மட்டுமே பெரும் தியாகமாக சொல்லிச் சொல்லி ஈழத் தமிழர்மேல் தனக்கு அனுதாபம் உண்டு என்பதை இவர் பலமுறை நிரூபிக்க முயன்றும், தோல்வியில்தான் முடிந்தது.

ஈழத் தமிழருக்காக இவர் எதுவும் செய்யாவிட்டாலும் கூட, தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பணிக்காக எனது ஆழ்ந்த  இரங்கல்கள் !!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளங்களில் பலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்,பலர் திட்டி தீர்க்கிறார்கள், பலர் ஒரு மனிதனின் இறப்பிற்கு பிறகும் வசைபாடகூடாது என்கிறார்கள்...

ஆனால்,ஒரு மனிதன் தன் இறப்பிற்கு பிறகும், பிறர் வசைபாடுவதுமாதிரி வாழகூடாது என்பதற்கு கருணாநிதியின் மறைவும் ஒரு உதாரணம்...

தமிழகத்தின் நன்கு தமிழறிந்த ஒரு தமிழ் தலைவர் என்பதைதவிர ஈழ தமிழரின் சந்ததி வேறு எந்தவிததிலும் இவரை நினைவுகொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை பொறுத்தவரை

வரலாற்றில் மறுக்கப்படமுடியாத தலைவராகவும்

ஈழத்தமிழினத்தைப்பொறுத்தவரை

மன்னிக்கப்பட முடியாத துரோகத்தை செய்தவராகவும் செல்கின்றார்.

எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே. 
செல்லுங்கள் கலைஞரே.

இனி ஒருமுறை எம் தமிழர் வாழ்வில் மீள வராதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் காலாமாகிவிட்டார்!

காலமாகிய கலைஞருக்கு 
எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

சிலர் வசை பாடினாலும் தமிழ் நாட்டில் சமூக நீதியை காப்பாற்ற பாடுபட்ட  தலைவர் கலைஞர் கருணாநிதி.  அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

கோபாலபுரம் நோக்கி புறப்பட்டது கருணாநிதி உடல்... தொண்டர்கள் கண்ணீர் #RIPKarunanidhi

 

கோபாலபுரம் நோக்கி புறப்பட்டது கருணாநிதி உடல் :

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் மு.க.ஸ்டாலின் காரில் செல்கிறார்.

கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1.00 மணி வரையில் உறவினர்களால் இறுதி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

karunewssss_21584.jpg

மெரினாவில் இடம் மறுப்பு : வலுக்கிறது அரசியல் சர்ச்சை !

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார். அவர் போலவே தி.மு.க.வினரும், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

 

மெரினாவில் இடம் ஒதுக்காதது தற்போது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய நிலையில், தற்போது கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்காதது ஏன் என்ற கேள்வியையும் தி.மு.க.வினர் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுவதற்கு, 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது' என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கொண்ட தலைவர் என்ற தார்மிக அடிப்படையில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கலாம் என்றும் தி.மு.க.வினர் கோரி வருகின்றனர். நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை என்றும் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

vaikoooss12_21473.jpg

"தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில், முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் மறைந்தபோது, மூவருக்கும் நினைவிடம் கட்டிப் போற்றிய அரசியல் பண்பாடு கொண்டவராக கருணாநிதி இருந்திருக்கிறார். காமராஜர் இறந்தபோது, அவரது நினைவைப் போற்றும் வகையில் தி.மு.க. கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடச் சொன்னார்; 'தமிழினத்தலைவர் காமராஜர் மறைந்தார்' என தி.மு.க. பத்திரிகைகள் செய்தி வெளியிட காரணமாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது சரியானது அல்ல. அவரிடம் இருந்த அரசியல் பண்பாடு தற்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது," எனவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவேரி மருத்துவமனை அருகே சாலை தடுப்புகளை உடைத்து தி.மு.க.வினர் ஆவேசமாகப் போராடி வருகின்றனர். இதற்கிடையே, கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

karudsdss1_21579.jpg

கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்தில் இன்று இரவு இறுதி மரியாதை

காவேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்படுகிறது. அதன்பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல்
நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்," என அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

karunews1_21083.jpg

மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது... தி.மு.க. கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், "கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் தலைவரின் விருப்பமும், தி.மு.க.வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தோம். அவர்கள் 'பார்ப்போம்' என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்கவேண்டும் என்றும் செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும், பொன்முடி, நேரு ஆகியோர் சென்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமையைச் சந்தித்து தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். முழுமையான பதிலை தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்," எனத் தெரிவித்திருந்தார்.

அரசு அறிவிப்பு

இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்," எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

 

Link to comment
Share on other sites

மெரினா வேண்டும்.. மெரினா வேண்டும்! - தொண்டர்கள் தொடர் கோஷம் #karunanidhi

 

மெரினா வேண்டும்... மெரினா வேண்டும் என கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
 

காவேரி மருத்துவமனை

 கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாக முதல்வர் பதிலளித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் காமராஜர் நினைவிடம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் எதிரே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

 

 

இந்தநிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பாகக் கூடியிருக்கும் தொண்டர்கள் தொடர் கோஷமிட்டு வருகின்றனர். அவர்கள், மெரினா வேண்டும்... மெரினா வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்தும் தொண்டர்கள் ஆவேசமாகக் கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தொண்டர்களை லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க வேண்டி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கையில் கருப்புக் கொடியுடன் திரண்டிருக்கின்றனர்.  

https://www.vikatan.com/news/tamilnadu/133334-dmk-cadres-urges-tn-government-to-allocate-land-in-marina-for-karunanidhi.html

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுப்பு - திமுகவின் மனு இரவு 10.30 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை

 
அ-அ+

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், இதற்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்

 
 
 
 
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுப்பு - திமுகவின் மனு இரவு 10.30 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை
 
சென்னை:
 
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.
 
இந்நிலையில், 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
மெரினாவில் இடம் மறுக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நடந்து வருகிறது.
 
மேலும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
 
தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியிடம் திமுக முறையிட்டுள்ளது. பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் இந்த அவசர மனுவை இரவு 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/07210236/1182425/dmk-to-approach-high-court-in-govt-refused-to-allocate.vpf

Link to comment
Share on other sites

தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது: கருணாநிதி மறைவுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல்

 

 
ahr

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி : கோப்புப்படம்

 சூரியன் முழுமையாக அஸ்தமித்தது, தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது என்று திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

 

திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் கருணாநிதி. கருணாநிதியின் இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது. அந்த காந்தக்குரலை இனி எப்படிக் கேட்பேன் கருணாநிதி ஐயா. முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்.''

இவ்வாறு ஹர்பஜன் சிங் இரங்கலில் தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24625843.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு தமிழ் அறிஞர் இழப்பு அவ்வளவே .. அதற்காக உலக தமிழனமே கலங்குது.. கதறுது .. தமிழ் முடிவுரை எழுதியது .. என்பதெல்லாம் ரொம்ப ஓவர் ..  ? 

அவருக்கு ஒரு சக மனிதனாக  என் ஆழ்ந்த வருத்தங்கள் ..

Link to comment
Share on other sites

கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த அனுதாபம்

 

 
 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

38676766_264783167654084_774044949890360

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

38729500_226893501351694_713723502594621

இந்நிலையில் அவரது மறைவால் தமிழகம் மற்றும் உலகத் தமிழர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

38624348_366478233885983_888675136369065

இந்நிலையில் அவரது மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது அனுதாபங்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/38030

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது

"தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது"
இதுக்கு பேர் தான் அதிகப் பிரசங்கித்தனம் என்பது...
தமிழை வைத்து வயிறு வளர்த்தவர்கள் ... தமிழுக்கு முடிவுரையா?
தொடக்கமே கிடையாத என் அன்னை தமிழுக்கு எந்த சும்பனாலும் முடிவுரை எழுத முடியாது.

தமிழ் வியாபாரியின் மரணத்துக்கு அஞ்சலிகள்...
சாந்தி நிலவட்டும் ...

Link to comment
Share on other sites

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 - 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார். தவிர, பள்ளிக்கூடத்தில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த பானகல் அரசர் குறித்த 50 பக்க நூலும் அவரை வெகுவாக கவர்ந்தது.

கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.

17 வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

1949ல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகியிருந்தார் மு. கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.

1953ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறைசென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.

தோல்வியை சந்திக்காதவர்

1957ல் நடந்த தேர்தலில் தி.மு.க. முதல் முறையாகப் போட்டியிட்டபோது அதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி, 2016ல் திருவாரூர் தொகுதியில் வென்றதுவரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

1963ல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கருணாநிதி, 1967ல் கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் அண்ணாதுரை மறைந்தவுடன் புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கருணாநிதி.

இட ஒதுக்கீட்டில் முக்கியப் பங்கு

அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

கருணாநிதி தலைமையின் கீழ் கட்சி இரண்டு முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்திருக்கிறது. 1972ல் தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993ல் வைகோ தலைமையில் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. அப்போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி.

தேசிய அரசியலில்

1989ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக தி.மு.கவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர். தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைகளில் தி.மு.க அமைச்சர்கள் இடம்பெற்றனர்.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

ஆனால், இந்த காலகட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றது, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு சிக்கலான, விமர்சனத்திற்குரிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மாநில உரிமைக்கான குரல்

கருணாநிதி முதலமைச்சராக பங்கேற்ற காலத்திலிருந்தே மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி ஆகியவை குறித்து தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். முதல்வராக பதவியேற்றதும் 1969ல் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழு, இந்தியாவின் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கவேண்டிய உறவைச் சுட்டிக்காட்டியது. கருணாநிதி செய்த முயற்சிகளின் காரணமாகத்தான் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட்டது.

1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.

கலைத்துறையில் பங்கு

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.

இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-44990106

Link to comment
Share on other sites

LIVE: கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பு... தமிழக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது! #RIPKarunanidhi

 
 

மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பு... தமிழக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது!

தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய விரும்பிய நிலையில், தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அரசியல் கட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் என பலரும் தொடர்ச்சியாக மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். "ஜெயலலிதாவுக்கு இடம் வழங்கியதை போல் கலைஞருக்கும் மெரினாவில் இடம் தரவேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். "கலைஞர் அவர்களை, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை," என நடிகர் ரஜினிகாந்த்தும் தெரிவித்துள்ளனர். இதேபோல் பா.ம.க.ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்...

 

 

முதுபெரும் அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும் நாடு முழுவதும் நாளை தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

 

மெரினாவில் இடம் ஒதுக்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சியே... எதிர்கட்சிகள் காட்டம் !

80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை; 5 முறை முதல்வர்; 13 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என தமிழக அரசியலில் அழுத்தம் திருத்தமாக முத்திரைப்பதித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதியின் உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானது என பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும் என்றும், இப்பிரச்சனையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மெரினாவில் இடம் கோரி தி.மு.க. மனு... இன்று இரவே விசாரிக்கிறது நீதிமன்றம் :

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் முன்பு திமுக வழக்கறிஞர் வில்சன் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிபதி வீட்டிற்கு சென்று மனுத்தாக்கல் செய்துள்ள தி.மு.க., உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. தி.மு.க.வின் இந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் இடம் மறுப்பு ; இறந்தும் போராடும் கருணாநிதி :

80 ஆண்டு அரசியல் வாழ்க்கையைக் கொண்ட கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை கண்டவர். உடல்நலக்குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடியவர், இன்று மாலை தன் முடிவை எய்தினார். இந்நிலையில் உயிரிழந்த பின்னர் தற்போது அண்ணா நினைவிடம் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்துக்காக இறந்தும் போராடி வருகிறார் கருணாநிதி. 

https://www.vikatan.com/news/tamilnadu/133328-dmk-president-m-karunanidhi-passes-away.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.