Jump to content

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்


Recommended Posts

1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்

9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.

16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது 
கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை 
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் 
அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் 
அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் 
கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 
வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, 
பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் 
கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று 
(இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே 
தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் 
கொலைபழியை சுமந்தது கலைஞர்.

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின் 
மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்

76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.

77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .

78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !

79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர் !

80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !

81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !

82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு 
மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !

83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது 
கலைஞர்.

84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை 
அழித்தவர் ஜெயலலிதா)

85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் 
தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் 
படுத்தியவர் கலைஞர் !

86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie 
University) 

87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம். 

89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)

90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் 
ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.

91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். 

94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை 
மற்றும் ஆராய்ச்சி மையம்.

95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், 
துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் 
போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின... 

96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம். 

97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர் 
ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.

98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று  இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் 
சாலைக்கான துவக்கம்.

100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம். 

101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
 
102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக 
மாற்றிட அனுமதி. 

103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி. 

104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம். 

105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 

106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய 
குளிர் உருட்டாலை உருவாக்கம்.

108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் 
செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், 
நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..

109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 
கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.

111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில் 
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..

113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன 

114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி 
செயல்படுத்தியது கலைஞர்

115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் "பவானி 
அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்

116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், 
நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், 
அண்ணா நூற்றாண்டு நூலகம்.... இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..

117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா.... 
இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...

118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய 
நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் 
துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...

119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், 
நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை 
கொண்டுவந்ததும் திமுகதான்...

120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் 
வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் 
உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..

121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை 
மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..

122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்... 
தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக 
ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு.. 
GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு 
முன்னிலை வகிக்கிறது..

123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது 
திமுக ஆட்சியில்..

124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று 
குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..

125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் 
ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு 
பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..  

இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...  

உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 
இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...

 

கலைஞரில் எமக்கு 100முரண்பாடுகள் இருக்கலாம் அவரால் தமிழக மக்களும் தமிழகமும் கண்ட நன்மைகள் ஆயிரம்....

இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ்தலைவரான அவரிற்கான பிரியாவிடையை சிறந்த முறையில் கொடுத்து எங்களிடமும் மனிதம் இருக்கிறது என்பதை காட்டுவோம் 

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

பெரியார் ஆசைப்பட்டதை, நிறைவேற்றியவர் கருணாநிதி -நடிகர் சிவகுமார் புகழஞ்சலி! #Karunanidhi

 

நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்:

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர், “சமூகத்தில் என்ன மாற்றம் எல்லாம் செய்ய வேண்டும் எனப் பெரியார் ஆசைப்பட்டாரோ, அதை ஆட்சிக்கு வந்தது செய்தவர் கருணாநிதி. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறையில் அவர் தொட்டத்தை யாரும் தொட முடியாது” என்றார். 

அழுதுகொண்டே பேசும் கேப்டன் விஜயகாந்த்

 

 

``அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணம் எல்லாம் கலைஞரிடம் தான் இருக்கிறது” - கருணாநிதி மறைவுக்கு அழுதுகொண்டே பேசும் கேப்டன் விஜயகாந்த்

 

 

 

cm_07292.jpg

தமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் தி,மு,க-வின் தலைவராக இருந்தவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு, தமிழகத்துக்கு  பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். செய்தியாளர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்  முதல்வர் பழனிசாமி

 
 

 

அஞ்சலி செலுத்திய முதல்வர் துணை முதல்வர்:

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்  ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் எம்.பி தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

 

 

md_06127.png

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ஒப்பற்ற தலைவர். அவர்களின் சாதனைகள் இனியும் யாரும் செய்ய முடியாது. அரசியல், கலை, இலக்கியம் எல்லம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்” என்றார், 

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். 

newesss_06319.jpg

கருணாநிதிக்கு ரஜினிகாந்த் மலர் அஞ்சலி:

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவர் மனைவி லதா , மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.

DkCdJlgWsAAddp9_06088.jpg

DkCdMB6W4AMSik4_06381.jpg

கருணாநிதிக்கு ராணுவ மரியாதை:

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்மீது முப்படை வீரர்கள் தேசியக்கொடியைப்  போர்த்தி சல்யூட் அடித்து ராணுவ மரியாதை செலுத்தினர்.

DkCa1wZXcAI-x6g_1_06031.jpg

டி.டி.வி.தினகரன் வருகை:

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகைதந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழையில் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அருகில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர். 

DkCVnHqWwAACS_u_05183.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், சி.ஐ.டி காலனியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸின் முன்னே,  'வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்' என்று தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். 

63bb17cf-44f8-45ad-938f-b4b3473ff9f3_052

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

10586637-170a-4e88-9f78-92c588fda13f_052

அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், அவரது உடல் சி.ஐ.டி காலனியிலிருந்து தொண்டர்கள் முழக்கத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸுக்கு முன்னே மு.க.ஸ்டாலின் காரில் சென்றார்.

4fa210c5-26fb-4d2a-8208-b867a36c2900_055

ஆம்புலன்ஸுக்கு முன் சிறிது தூரத்தில் தி.மு.க தொண்டர்கள் 'வேண்டும்... வேண்டும்.. மெரினா வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பியபடியே தொண்டர்கள் நடந்து சென்றனர். 

cc520bdd-ce0b-4651-bfc1-2c5bb9c45b27_053

ராஜாஜி அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் அமர்ந்துள்ளனர். காவல் துறையினர், பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, அபராஜிதன் said:

 

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

 

 

6 hours ago, நிழலி said:
 அத்துடன் ஈழ ஆதரவால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி மட்டுமே.
 

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77ஹ்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்
கீற்று

மேலே   கீற்றில் இணைக்கப்பட்ட ஆக்கம் '2009'ல் எழுதப்பட்டது.

Link to comment
Share on other sites

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi

 
 

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi
 

ந்திய அரசியலில் ஒரு சகாப்தம் கருணாநிதி. இவர், பிரதமராக இருந்ததுமில்லை; அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. இவரது கட்சியோ மாநிலக் கட்சிதான். ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.

கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான். கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்திவந்தது தமிழ் சினிமா. இந்த ட்ரெண்டை மாற்றி, ``மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை, நல்ல சமூகக் கருத்துகள்தான்'' என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில், சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.  கருணாநிதியின் `பராசக்தி',  `மந்திரிகுமாரி' பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதைச் சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. அரசியலில் நொடித்துப்போனால், நான் சினிமாவையும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

1957-ம் ஆண்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகக் குளித்தலை தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஏ.தர்மலிங்கத்தை 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தனது முதல் சட்டசபை உரைக்கு கருணாநிதி ஒத்திகைபார்த்துவிட்டுப் போய் சட்டமன்றத்தில் பேசினாராம். செய்யும் விஷயத்தைத் தெளிவாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும் என்பதைத் தன் முதல் உரையிலிருந்து செய்யத் தொடங்கியவர் கருணாநிதி. ஆரம்பத்திலிருந்தே பேச்சில் வல்லவர்... கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது, கற்பனைத் திறன், சாதுர்யமாக எதிரியின் பேச்சுக்குப் பதிலளிப்பது, பேச்சில் உள்ள நக்கல், நையாண்டி எனக் கருணாநிதிக்கு எல்லாமே ப்ளஸ்.

 

 

கலைஞர்

1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை. 

 
 

 

1972-ல், எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கோரினார். அதைக் கட்சித் தலைமை மறுத்தது. அதனால் கட்சியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அவர்தான் கருணாநிதியின் நேரடி அரசியல் எதிரியாக உருவாகினார். கருணாநிதியின் பலம் அவரது பேச்சு, எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சாதுர்யமான பதிலால் அசர வைப்பதில் வல்லவர்

ஒருமுறை,“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் காங்கிரஸின் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ``இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!” என்று.  தர்க்கம் செய்வது கருணாநிதிக்குக் கைவந்த கலை... தலைக்கு மேல் பிரச்னை வந்தாலும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார் கருணாநிதி. இதற்குக் காரணம் அவர் அதிகம் படிப்பதுதான். 

 

 

எதிரியைப் பாராட்டி நெகிழவைப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். அழகாகத் திட்டிப் பாராட்டுவார். ``தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்துவிட்டீர்களே!” - இந்தக் கவிதையைத் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ``தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவிவிட” என்றார். அதன்பின் பீட்டர் அல்போன்ஸுக்குப் பேச வாயே வரவில்லை.

1996 - 2001 வரையிலான ஆட்சி, தி.மு.க தலைவரின் ரிப்போர்ட் கார்டில் மிக முக்கியமான காலம். 1976 முதல் 1989 வரை 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனதுபோல கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது மிகவும் சோர்ந்துபோனவர், 1996 - 2001ல் ஐந்தாண்டுக் காலம் முழுமையாகக் கிடைத்தபோது, ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். அந்த ஐந்து வருடம்தான் கருணாநிதி முதல்வராக இருந்ததிலேயே சிறந்த காலம். ராமானுஜம் கமிஷன் அமைத்தார்; அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து தனித்தனியாகக் கூட்டம் நடத்தினார். அலுவலகம் செல்வதுபோல சின்சியராக சட்டசபையில் இருந்து பணிகளைக் கவனித்தார். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட்போல சட்டசபையை நடத்தினார் . 

கலைஞர்

கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது. 80-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய்,        2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். இவருக்காகக் காத்திருக்காத டெல்லி வாலாக்களே இல்லை. தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி... இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கு எப்போதும் இடமுண்டு.

2016-ம் ஆண்டு முதல் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே இல்லை. 2016 செப்டம்பரில் நெஞ்சு சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை மோசமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, உடல்நிலை தேறி டிசம்பர் 7,2016ல் வீடு திரும்பினார். பின்னர் அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி, முரசொலி 75-ம் ஆண்டு கண்காட்சியையும், ஒருமுறை அறிவாலயத்தையும் பார்வையிட்டார். கடந்த ஜூலை 18-ம் தேதி ட்ரக்கியோஸ்டமி  கருவி மாற்றத்துக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, ஐசியூ-வில் தொடர் கண்காணிப்பில் இருந்தார். ஜூலை 29-ம் தேதி உடல்நிலை மோசமடைந்துவிட்டது என டாக்டர்கள் கூறும்போதே இதயத்துடிப்பும் குறைந்தது. ஆனால் கருணாநிதியின் உடல்நிலை மீண்டு, மீண்டும் இதயத்துடிப்பு சீரானது. இதை மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை. இந்த தன்னம்பிக்கை கருணாநிதிக்கு எப்போதும் உண்டு. 

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் கண்கள் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் வீட்டிலும்தான் இருந்தன. கருணாநிதி எனும் மூத்த அரசியல்வாதி மறைந்துவிட்டார் என்ற செய்தி தமிழகத்தின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திப் பார்த்தது. சாதுர்யமாகப் பதில் சொல்வது, விமர்சனத்தை ஒரே வார்த்தையில் விளாசுவது என எல்லா நிகழ்விலும் கருணாநிதி வாழ்வார்.  ''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' எனும் கருணாநிதியின் குரலை தி.மு.க-வும், தமிழகமும் இழந்து தவிக்கிறது. கருணாநிதி விட்டுச் சென்றது 80 வருட அரசியல். இது இன்னமும் 100 வருடங்களுக்கு மேல் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். ஆதவனே போய் வா!

கருணாநிதி அரசியல் பாதை

https://www.vikatan.com/news/coverstory/133329-karunanidhi-the-history-of-a-political-legend.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவிற்குப் பின் ஆரிய இன வெறியிலிருந்து தமிழரையும் , 'தேவபாடை'த் தாக்குதலில் இருந்து தமிழையும் காத்து நிற்க திராவிடக் கட்சி அரசியல் இன்றியமையாததாய் இருந்தது ; இருக்கிறது. அந்த வகையில் இத்தனைக் காலம் முட்டுக் கொடுத்து  ( பெரும்பாலும் சுயநலம் சார்ந்தே ) கட்சியின் மற்றும் திராவிட அரசியலின் இருப்பை உறுதி செய்தவர் கருணாநிதி. அதன் குறியீடாக அண்ணாவின் அருகில் அடக்கம் (அடங்கியிருக்கும் ) கொள்ளும் தகுதியுள்ளவர்தான் கருணாநிதி. அண்ணாவைப் போல் மொழி, இலக்கிய ஆர்வலரும் கூட . மற்றபடி நிழலி அவர்கள் சொன்னது போல்  குடும்பம், பணம், பதவி என அத்தனைக்கும் ஆசைப்படும் ஒரு சராசரி தமிழக அரசியல்வாதிதான் அவர். Nedukkalapoovan சொன்னதைப் போல் உலகத் தமிழருக்காகக் குரல் கொடுக்கும் வலுவான தலைமைப் பொறுப்பிலிருந்த கருணாநிதி முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது தம் குடும்பத்தினர்க்காகப் பதவி பேரம் பேச சக்கர நாற்காலியில் சென்ற அசிங்கத்தையெல்லாம் மறக்க முடியுமா என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் தர முடியாது - தமிழக அரசு பதில் மனு.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடற்கரைக்குப் பதில் காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு தமிழக அரசின்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Aug 8, 2018.  8:00 AM (தமிழக நேரம்) https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-govt-files-reply-hc-on-marina-beach-issue-live-updates-326637.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

DkBoXuDUwAA1g2L.jpg:large

பக்கத்து இலைக்கு... பாயாசம்  என்ற மாதிரி,
கமல ஹாசனுக்கும்... மெரீனாவில்  படுக்க, ஆசை அரும்புது போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Madras HC Acting CJ shall sit along with Justice SS Sundar to hear DMKâs case

மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் தர முடியாது - தமிழக அரசு மீண்டும் கைவிரித்தது.

மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் தர இயலாது என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

முன்னதாக திமுக தரப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தைத் தொடர்ந்து நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேர்று இரவு ஹுலுவாடி ரமேஷுடன், எஸ்.எஸ். சுந்தர் இந்த வழக்கை விசாரித்தனர். ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகியிருந்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். வாதம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது.

தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலோட்டமாக இந்த வழக்கை அணுக முடியாது என்பதால் எழுத்துப்பூர்வ பதிலை அரசு தரப்பு தாக்கல் செய்ய கோரப்பட்டுள்ளது. என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை அரசு தெளிவாக தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா என அரசு தரப்பை நீதிபதிகள் கேட்டபோது, காலை 10.30 வரை நேரம் தருமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் இது உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், காலை 8 மணிக்காவது பதிலை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Madras HC Acting CJ shall sit along with Justice SS Sundar to hear DMKâs case

இதையடுத்து தற்போது தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மெரீனாவில் சமாதி அமைக்க இடம் தர இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்னும் சற்று நேரத்தில் நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணை முடிந்ததும் தீர்ப்பு அளிக்கப்படும்.

கருணாநிதிக்கு மெரீனா கடற்கரை ஒதுக்கப்பட வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் இதற்கு பெரும் ஆதரவு காணப்படுவதால் ஹைகோர்ட்டின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-acting-cj-shall-sit-along-with-justice-ss-sundar-to-hear-dmk-case-326886.html    Wednesday, August 8, 2018, 8:42  (தமிழக நேரம்.)
 

Link to comment
Share on other sites

கருணாநிதி உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வைரமுத்து! #Karunanidhi

 

மெரினாவில் குவியும் தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். 
 

koottam_08050.jpg

 

 

கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்குக் கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் துக்கம் தாளாமல் அழுதார். 

vaira_08438.jpg

நடிகர் அஜித் அஞ்சலி!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி! 

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் மற்ற குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 
 

 

gov_07390.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளின் நாடகம் ஒரு முடிவுக்கு வர 
கண்ணீர் விட்டார் காலை விட்டார் என்று 
இவர்களின் நாடகம் தொடங்கீட்டுது. 

Link to comment
Share on other sites

கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி! #Karunanidhi

 

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

thIpaa_09356.jpg

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜாஜி அரங்கம் வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

 

தொல். திருமாவளவன் அஞ்சலி!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 

 

thirum_08287.jpg

கவிஞர் வைரமுத்து கண்ணீர் பேட்டி!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் கவியரங்க தலைவர் மறந்து போனான். வயது முதிர்வு தானே. 95 வயது தானே, இது இயற்கை தானே என சிலர் கருதலாம். பெரியார் மறைந்த போது கருணாநிதி ஒரு இரங்கல் கடிதம் எழுதினார். தாஜ்மஹால் வயதானதென்று, பூமிக்குள் மறைந்து போனால் பொறுத்துக் கொள்வோமா? அப்படி தான் பெரியார் என்றார். அதுபோது தான் கருணாநிதி மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருணாநிதியின் வரலாற்றை இளைய சமூகம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பை தாண்டவில்லை அவர். ஆனால், பல பல்கலைக்கழகங்களை தொடங்கினார். அண்ணாவுக்கு மறுக்கப்பட்ட ஆயுள், பெரியார் மறுத்த ஆட்சி பொறுப்பு, இரண்டும் கிடைக்கப்பட்டவர் கருணாநிதி" என கண்ணீர் மல்க பேசினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Maruthankerny said:

அந்தாளின் நாடகம் ஒரு முடிவுக்கு வர 
கண்ணீர் விட்டார் காலை விட்டார் என்று 
இவர்களின் நாடகம் தொடங்கீட்டுது. 

தமிழ் நாட்டு ஊடகங்கள் தினத்தந்தி அளவிற்கு தரம்தாழ்ந்து "பலே ஆசாமி, வலைவீச்சு, கதறினார் பதறினார், பேரிக்கார்டு, டர்ரென கிழிந்தது etc.." போன்ற சொற்பதங்களை தற்பொழுது 'விகடன்' போன்றவைகள் பயன்படுத்துவது, அப்பத்திரிக்கைகளுக்கு அசிங்கம், தரக்குறைவு.

 

ஊடகங்களின் அனுமானப்படி இங்கே யாரும் பதறவும் இல்லை, கதறவும் இல்லை..!

மனுசன் நாலு கட்டினார், வாழ்ந்தார், ஆண்டார், பல தலைமுறைக்கும் சொத்து சேர்த்தார்..

இயற்கையின்படி, வயது முதிர்வில் இறைவனடி சேர்ந்தார்..!!

மறைவிற்கு அஞ்சலி செலுத்துவோம்..

இந்த அலங்கார, மிதமிஞ்சிய விளம்பர, ஊதிபெருப்பித்தலால் இருக்கும் அனுதாபமும் மறைந்து, வெறுப்பே துளிர்விட ஆரம்பிக்கிறது.
 

Link to comment
Share on other sites

2 hours ago, கந்தப்பு said:

 

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77ஹ்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்
கீற்று

மேலே   கீற்றில் இணைக்கப்பட்ட ஆக்கம் '2009'ல் எழுதப்பட்டது.

இதை நிரூபிக்கிறதுக்கு கூட ஒரு நாம் தமிழர் எழுதிய கட்டுரை தான் உங்களிற்கு உதவிகிறது இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, அபராஜிதன் said:

இதை நிரூபிக்கிறதுக்கு கூட ஒரு நாம் தமிழர் எழுதிய கட்டுரை தான் உங்களிற்கு உதவிகிறது இல்லையா 

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php

http://kanthappu.blogspot.com/2009/02/blog-post.html?_sm_au_=iVV7jQ16N0mNlPHr

 

Link to comment
Share on other sites

கடந்த ஐம்பதாண்டுகால அரசியல் காலத்தில் காணாமல் போன கண்மாய்கள் குளங்கள் ஆற்று மணல் கொள்ளை என அரச நிர்வாக முறைகேடுகள் தமிழக நீர் நில வளத்தை எவ்வகையில் எல்லாம் சுரண்டியதோ அவற்றில் எல்லாம் கருணாநிதியின் சாதனைகளின் மறுபக்க பட்டியல் நீண்டுகொண்டே போகும். 

மதுவிலக்கு மற்றும் திமுக வுக்கு சொந்தமான சாராய ஆலைகள் அதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்  பாதிப்புகளிலும் சாதனைகள் பட்டியல் நீண்டு◌கொண்டே இருக்கும்.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல், சொத்துக்குவிப்பு ஊழல் இவைகளையும் கருணாநிதியையும் பிரிக்கமுடியாது. ஒரு அரச நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுக்காக நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள், மாற்று ஏற்பாடுகள், இவைகளையே தனிப்பட்ட சாதனையாக பெரும்பாலும் கடந்த ஐம்பது ஆண்டுகால திட்டத்தில் கூறப்படுகின்றது தவிர புதிதாக ஏதுவும் இல்லை. 

கருணாநிதியின் ஐம்பதாண்டுகால அரசியலில் அறம் நீதி நேர்மை என்பது பிரச்சனைக்குரியது. 

அவரின் மரணம் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. அது ஒரு இயற்கை நிகழ்வு. அவரது அரசியலை அறிவுபூர்வமாக ஆராய்வதும் தவறுகளை இனம் காண்பதும் எதிர்கால தமிழக மக்களின் அரசியலுக்கு பயன்தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .

1f449.png? இன்னும் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் திமுகவுக்கு

1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு

14. பண்ணை வீடு

15. எழிலரசி பண்ணை வீடு

16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு

17. மெட்ராஸ் போட் க்ளப்

18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்

19. ராயல் கேபில் விஷன்

20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்

21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\

22. சிஐடி காலனி வீடு

23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்

24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்

25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்

26. கோரமென்டல் சிமென்ட்

27. பெங்களூருவில் உள்ள வீடு

28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு

29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு

30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு

31. ரெயின்போ இன்டஸ்ட்ரி

32. முக.தமிழரசு பண்ணை வீடு

33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்

34. வெனரேடஷன் பப்ளிகேஷன்

35. டன்டாரா நிறுவனம்

36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்

37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்

38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்

39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்

40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்

41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்

42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு

43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்

44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்

48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்

49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்

50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்

51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்

52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்

53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்

54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்

55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு

56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்

58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்

59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.

60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்

61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு

62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி

63. தயா சைபர் பார்க்

64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.

65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு

66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்

67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

68. நீலகிரி டீ தோட்டம்

69. ஊட்டி தேயிலை தோட்டம்

70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்

71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்

72. சினிமா தியேட்டர்கள்

73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.

75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்

76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்

77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்

78. எஸ்டி கொரியர்

79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்

80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்

82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்

85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்

86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்

87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்

89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்

90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்

91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்

92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்

95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்

97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்

99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்

100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்

101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்

102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்

103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்

106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.

107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்

108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்

109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை

110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்

111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்

112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்

113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்

114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு

115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்

117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்

119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்

120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்

121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்

122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்

123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்

128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்

129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்

130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.

131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.

132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.

133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்

134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்

135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்

136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்

137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்

138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்

139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்

140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை

141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை

142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை

143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)

144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்

145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி

146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்

147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்

148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்

149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்

150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்

151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்

152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்

153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்

154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்

155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்

156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்

157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்

158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்

159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு

160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு

161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு

162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு

163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்

164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு

165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி

166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்

167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்

168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்

169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்

170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி

171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்

172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்

173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்

174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி

175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்

176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்

177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்

178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு

179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance

180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்

181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்

182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1

183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3

184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A

185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்

186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்

187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்

188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்

189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்

190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்

191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்

192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்

193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்

194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்

195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்

199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்

201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்

202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்

203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்

204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது

205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி

207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி

209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி

210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி

212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி

213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்

216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு

218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு

219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்

220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656

221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023

222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்

223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்

224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்

225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு

226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்

227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்

228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி

229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்

230.

231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்

232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்

233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்

234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்

235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்

236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்

237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு

238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்

239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்

240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்

241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்

242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று

243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது

244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து

245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது

246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு

247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று

248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு

249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்

250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்

256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது

257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று

258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது

259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு

260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்

261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்

262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்

263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்

264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்

265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்

266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று

267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்

268. ப்ரியா தயாநிதிமாறன் ப?

Link to comment
Share on other sites

கருணாநிதி உடலுக்கு மலர்வைத்து அஞ்சலி; கனிமொழியின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறிய மோடி #Karunanidhi

 

கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, திருவாரூரில் கருணாநிதி இல்லம் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பணிகள் தொடக்கம்

 

 

8_11363.jpg

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதேபோல் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

7_11063.jpg

அண்ணா சமாதியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். அண்ணா நினைவிடத்தில் வலதுபுறத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி அஞ்சலி

5_11596.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அஞ்சலி செலுத்தினார்.

6_11448.jpg

 

இதேபோல் ராஜாத்தியம்மாள், மு.க தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இரங்கல்

தி.மு.க தலைவர் மறைவை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களைவையில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தீர்மானத்தை வாசித்தனர். அப்போது மறைந்த கருணாநிதி மிகச் சிறந்த தலைவர் என வெங்கைய நாயுடு புகழாரம் சூட்டினார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 

தொண்டர்கள் முழக்கம்!

தி.மு.க தொடர்ந்த வழக்கில் அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ராஜாஜி மஹாலில் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பி வருகின்றனர். வாழ்க வாழ்க வாழ்கவே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்கள் தலைவருக்கு கிடைத்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இறந்தபிறகும் கருணாநிதிக்கு வெற்றி

``உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்தபிறகும் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என ராஜாஜி மஹாலில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்

கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மெரினாவில் இடம் ஒதுக்க கோரி உத்தரவிட்டார்.

கண்ணீர்விட்டு கதறிய ஸ்டாலின்

கண்ணீர்விட்ட ஸ்டாலின், கனிமொழி

நீதிபதிகள் உத்தரவை தெரிந்தவுடன் முக ஸ்டாலின், கனிமொழி, உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். அதேபோல் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்டார் மு.க.ஸ்டாலின்.

வைகோ, திருநாவுக்கரசர் அஞ்சலி 

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரும் அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி சென்னை வந்தார் - இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி !

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர். அவர் இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

3_10511.jpg

photo credit:@ani

கருணாநிதிக்கு விஷால் விஜய் சேதுபதி இறுதி மரியாதை

நடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். 

கமல்ஹாசன் அஞ்சலி 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். 

1_10499.jpg

ராமதாஸ் அஞ்சலி 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் பா.ம.க முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ``எனது உற்ற நண்பர் கருணாநிதி மறைந்தது நம்ப முடியவில்லை. அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ் மக்களுக்கு அயராத பாடுபட்டவர் கருணாநிதி" என்றார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ``சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டவர் கருணாநிதி. தமிழகத்தில் 19 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்." என்றார் .

திரையுலகினர் அஞ்சலி 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் கவுண்டமணி, சத்யராஜ், சிபிராஜ், பாக்யராஜ், சாந்தனு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினர். 

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், ``ஒரு சகாப்தம் முடிவுற்றிருக்கிறது. அவர் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவர். அவர் செய்த நல்ல காரியங்களை தொடர்வதுதான் அவருக்கு நாங்கள் செய்கிற நல்ல மரியாதை.  நடிகர் சங்கம் அவர் மீது அதிக அன்பு கொண்டுள்ளது, அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 

திரண்டு வந்த திரையுலகம்!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். 

md_09034.png

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

thIpaa_09356.jpg

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜாஜி அரங்கம் வந்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

தொல். திருமாவளவன் அஞ்சலி!

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

thirum_08287.jpg

கவிஞர் வைரமுத்து கண்ணீர் பேட்டி!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் கவியரங்க தலைவர் மறந்து போனான். வயது முதிர்வு தானே. 95 வயது தானே, இது இயற்கை தானே என சிலர் கருதலாம். பெரியார் மறைந்த போது கருணாநிதி ஒரு இரங்கல் கடிதம் எழுதினார். தாஜ்மஹால் வயதானதென்று, பூமிக்குள் மறைந்து போனால் பொறுத்துக் கொள்வோமா? அப்படி தான் பெரியார் என்றார். அதுபோது தான் கருணாநிதி மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருணாநிதியின் வரலாற்றை இளைய சமூகம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பை தாண்டவில்லை அவர். ஆனால், பல பல்கலைக்கழகங்களை தொடங்கினார். அண்ணாவுக்கு மறுக்கப்பட்ட ஆயுள், பெரியார் மறுத்த ஆட்சி பொறுப்பு, இரண்டும் கிடைக்கப்பட்டவர் கருணாநிதி" என கண்ணீர் மல்க பேசினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கண்ணீர் அஞ்சலி போடும் நானும் போடத்தான் வேணும்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

கருணாநிதியின் மறைவால் தமிழ் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது - வடக்கு முதல்வர்  விக்கி இரங்கல் 

 

 
 

“இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்” என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகை சோகத்தில் ஆழ்தியுள்ளதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

DMK.jpg

இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

கலைஞர் கருணாநிதி தனது 94 ஆவது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும் தமிழக அரசியலிலும் தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மன நிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன.

கலைஞர் கருணாநிதி சுமார் 60 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். 5 தடவைகள் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒரு வரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் சமூக ரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன். இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ள விடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார்.

தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய – மாநில – தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்.

தமிழ்மொழி மீது தீராப்பற்று மிக்க கலைஞர் கருணாநிதி தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததோடு, செம்மொழித் தமிழ் ஆய்வுக்காகச் சென்னையில் மத்திய நிறுவனம் ஒன்றையும் உருவாக்க வழிவகுத்தார். இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதை போடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கூட்டினார். கேட்கும் தோறும் உணர்வு முறுக்கேறும் “நீராடும் கடலுடுத்த” என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியவரும் இவரே.

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1956 இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்” என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்தார். அன்றில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். எனினும் முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவைத் தடுத்திருக்க முடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவு செய்து விட்டு மறைந்துள்ள கலைஞர் மு. கருணாநிதிக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோப இலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்குந் திருவள்ளுவர் சிலை போன்று அவர் பெயரும் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்க இறைவன் அருள்புரிவானாக! என வடக்கு மாகாண முதலமைச்சரின் அனுதாப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

http://www.virakesari.lk/article/38058

Link to comment
Share on other sites

மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதிஊர்வலம் - தி.மு.க தலைமைக்கழகம் அறிவிப்பு! #Karunanidhi

 

மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதிஊர்வலம்

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என தி.மு.க தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினாவுக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த ராஜதந்திரியை இனி நாடு பார்க்க முடியாது

 

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில், கருணாநிதி இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அரசியல் தலைவர். அவர் போன்ற சிறந்த ராஜதந்திரியை நாடு இனி பார்க்க முடியாது. தந்தையைப் போன்ற கருணாநிதி இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு" எனக் கூறியுள்ளார்.

 

 

சந்திரபாபு நாயுடு மவுன அஞ்சலி!

14_12591.jpg

அமராவதியில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

கோடானு கோடி மக்களின் இதயத்திலும் வாழ்வார் - மோடி

15_12253.jpg

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது குறித்து கூறியுள்ள மோடி, ``தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்" என்றார்.

தமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டேன்! - மம்தா

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என நேற்று வெளியான தகவல் வருத்தமடைந்தேன். இதற்காக தமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டேன். ஆனால் முடியவில்லை. இதுதொடர்பாக பிரதமரிடம் பேசினேன். தற்போது வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 

கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, திருவாரூரில் கருணாநிதி இல்லம் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பணிகள் தொடக்கம்

8_11363.jpg

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதேபோல் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

அண்ணா சமாதியில் துரைமுருகன்  ஆய்வு

7_11063.jpg

அண்ணா சமாதியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். அண்ணா நினைவிடத்தில் வலதுபுறத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி அஞ்சலி

11_12131.jpg

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அஞ்சலி செலுத்தினார்.

6_11448.jpg

 

இதேபோல் ராஜாத்தியம்மாள், மு.க தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html

Link to comment
Share on other sites

ஓர் சகாப்தத்தின் பயணம்

 

 
Desktop%202jpg

போராட்டமே வாழ்க்கை

porattame%201jpg

இன்றைய நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. சாதிரீதியாக பெரும் தாக்குதலை எதிர்கொண்ட ஒரு சமூகத்தில் பிறந்த கருணாநிதி, நாட்டிலேயே அதிகபட்சமாக 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் அதிக நாள் முதல்வராக இருந்தார் என்பதும் சாதி ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஜனநாயகத்தில் பெரும் ஆச்சரியங்களில் ஒன்று. இளவயதில் திருவாரூரில் பள்ளிக்கூடத்தில் சேரச் சென்றபோது தலைமையாசிரியர் கஸ்தூரி ஐயங்கார், “இடமில்லை” என்று சொல்லிவிட, “பள்ளியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் கமலாலயம் தெப்பக்குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்று சொல்லி பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவர் கருணாநிதி. இந்தப் போராட்டக் குணம்தான் அவரை காலம் முழுமைக்கும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும் வாகனமாக இருந்தது.

   
 
 

எதிலும் துணைநின்ற குடும்பம்

Desktopjpg

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் பெரும் துணையாக இருந்தது அவருடைய குடும்பம். அவர் பத்திரிகை நடத்தினால், குடும்பத்தினர் அதை விற்பனைக்குக் கொண்டுசேர்ப்பவர்களாக இருந்தார்கள். அவருடைய அக்காள் மகன்கள் மாறன், செல்வம் இருவரும் தங்கள் வாழ்க்கை இலக்கையெல்லாம் மறந்து கருணாநிதிக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தது ஓர் உதாரணம். 1944-ல் திருமணம் முடித்தார் கருணாநிதி. முத்து என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி பத்மா 1948-ல் மறைந்தார். பிறகு, தயாளுவைக் கரம் பிடித்தார் கருணாநிதி. அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோர் தயாளுவுக்குப் பிறந்தவர்கள். அடுத்து, ராஜாத்தியை மணந்தார். கனிமொழி இவருக்குப் பிறந்தவர். குடும்ப-வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு இடையில்தான் கருணாநிதியின் அரசியல் பயணமும் இடைவிடாமல் தொடர்ந்தது.

பெரியாரின் பட்டறையில் உருவெடுத்த சூரியன்

periyarjpg

பள்ளிக்கூடத்தில் படித்தபோதே சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி. அவருடைய 14-வது வயதில் அழகிரிசாமியின் பேச்சு அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம் இதில் முக்கியமானது. அதேபோல, பள்ளிக் காலத்தில் அவர் வாசித்த ‘பனகல் அரசர்’ சிறுநூலும் அவரிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. சமூகநீதிக்கான அரசியலே தனக்கான பாதை என்று வகுத்துக்கொண்டார் கருணாநிதி. இந்தப் பாதை பெரியாரிடம் அவரைக் கொண்டுசேர்ந்தது. ஈரோட்டில் ‘குடிஅரசு’ பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியாற்றிய ஓராண்டு காலத்தில் தன்னைப் புடம் போட்டுக்கொண்டார். பெரியாரியத்துக்கு வெகுஜன அரசியல் வடிவம் கொடுத்தவர் அண்ணா என்றால், அதற்குப் பெருமளவில் செயல் வடிவம் கொடுத்தவர் கருணாநிதி.

அண்ணா காட்டிய வழி

annajpg

எவர் ஒருவரையும்விட கருணாநிதிக்குப் பிடித்தமானவராக இருந்தார் அண்ணா. முதல் முறை அண்ணாவைப் பார்த்தபோதே அவருடைய எளிமையைக் கண்டு பெரும் தாக்கத்தைப் பெற்றார். ‘பெரியாரா, அண்ணாவா’ என்ற கேள்வி எழுந்தபோதும் கருணாநிதி தேர்ந்தெடுத்தது அண்ணாவைத்தான்; உடல் நலம் குன்றி வீட்டிலேயே முடங்கிவிட்ட இறுதிக் காலத்தில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர் முதலில் உச்சரித்ததும் அண்ணாவைத்தான். அண்ணாவோடு திமுக முடிந்துவிடும் என்ற கணக்கை உடைத்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கட்சியைத் தன் தலைமையில் வழிநடத்தினார் கருணாநிதி. 1959 சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100 இடங்களில் 45 இடங்களைப் பிடித்தது திமுக. அண்ணா போட்டியிட நினைத்த இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, வென்றும் காட்டினார் கருணாநிதி. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்குப் பரிசளித்தார் அண்ணா. அதைத் தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்தார் கருணாநிதி. 1967-ல் முதன்முதலில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரானார் கருணாநிதி. தேர்தல் வியூக அமைப்பிலும் பங்காற்றினார். அப்போதே அவருடைய பணி கவனிக்கும்படியாக இருந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்றவர் அண்ணாவின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதையே தனது அரசியலாக மாற்றிக்கொண்டார் என்று சொல்லலாம். சென்னையின் முக்கியமான மேம்பாலம், சாலை தொடங்கி ஆசியாவிலேயே பெரிய நூலகம் வரை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட முக்கியமான அமைப்புகள், திட்டங்களுக்கு அண்ணாவின் பெயரையே சூட்டினார் கருணாநிதி.

உற்ற தோழன், கண்ணியமான எதிரி!

samooga%20nalanjpg

இந்திய வரலாற்றின் மிக சுவாரஸ்யமான அத்தியாயங்களில் ஒன்று, எம்ஜிஆர் – கருணாநிதி உறவு. சினிமா காலத்திலேயே தொடங்கிவிட்ட நட்பு அது. எம்ஜிஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டத்தைக் கொடுத்தவர் கருணாநிதி. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதல்வராவதற்குத் துணை நின்றவர் எம்ஜிஆர். இருவரின் உறவில் ஏற்பட்ட விரிசல் அதிமுக எனும் புதிய அத்தியாயத்துக்கு வழிவகுத்தது. 1977-ல் முதல்வரான எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் கருணாநிதியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல, கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராவதையோ, திமுக வலுவான எதிர்க்கட்சியாக திகழ்வதையோ எம்ஜிஆராலும் தடுக்க முடியவில்லை. பிற்பாடு பேசிக்கொள்வதே அரிதாகிவிட்ட சூழல் உருவானது என்றாலும், இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நேசித்தனர், மதித்தனர். ஒருமுறை எம்ஜிஆர் மகிழ்வார் என்று கருதி அதிமுக தலைவர் ஒருவர் அவரிடம் பேசும்போது, ‘கருணாநிதி’ என்று பெயர் சொல்லி அவரைக் கீழே வைத்துப் பேச, ‘என் முன்பே எப்படி கலைஞரை ‘கருணாநிதி’ என்று அழைக்கலாயிற்று?’ என்று அவரைக் கடிந்து வெளியேற்றினார் எம்ஜிஆர். உடல்நலம் குன்றி எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்தபோது ‘நானும் பிரார்த்திக்கிறேன்’ என்று ‘முரசொலி’யில் எழுதினார் கருணாநிதி. எம்ஜிஆர் மறைந்த அன்றிரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தார் கருணாநிதி.

சமூக நலத் திட்டங்களின் முன்னோடி

இந்தியாவுக்கே வழிகாட்டுகிற பல நல்ல சமூக நலத் திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. சத்துணவுடன் முட்டை, பள்ளி செல்ல கட்டணமற்ற பஸ் பாஸ், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், குடிசையிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மறுவாழ்வு என்று பல சமூக நலத்திட்டங்களைக் கொண்டுவந்தவர் அவர்.

தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை அவர் அறிவித்தபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. “ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவர் வெற்றிகரமாக அத்திட்டத்தையும் நிறைவேற்றினார். ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ எனும் வாக்குறுதியோடு 1967-ல் தேர்தலைச் சந்தித்த திமுக, கருணாநிதியின் 2006 ஆட்சிக்காலத்தில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற மகத்தான திட்டத்தைச் செயல்படுத்தியது.

பிற்பாடு அது விலையே இல்லாமல் குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டமாக அதிமுக ஆட்சியில் வளர்ந்தது. இந்தியாவிலேயே முதலாவதாக கை ரிக்ஷாக்களை ஒழித்ததுடன், அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷாவும் வழங்கினார். பெண்கள் உயர்வுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் வகையில் படிப்பு முதல் மகப்பேறு வரையில் பல்வேறு உதவித் திட்டங்களைக் கொண்டுவந்தார். பெண்களுக்குச் சொத்தில் சமவுரிமை கொண்டுவந்தது அவருடைய முக்கியமான சாதனைகளில் ஒன்று!


 

மாநில உரிமைக்கான போர்க்குரல்

maanila%203jpg

திமுகவின் ‘திராவிட நாடு’ லட்சியம் நேரு கொண்டுவந்த பிரிவினைவாதத் தடைச் சட்டத்தால் தகர்க்கப்பட்டது. தனி நாடு கோரும் திமுக உள்ளிட்ட இயக்கங்களை முடக்கும் இலக்கோடு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக திமுகவின் இலக்கை ‘மாநில சுயாட்சி’ என்றாக்கினார் அண்ணா. கருணாநிதி ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை 1970-களின் பெரும் முழக்கம் ஆக்கினார். “மக்களவை மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களவை தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட அவையாக இருக்க வேண்டும்” என்று 1970 தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் பேசினார். அரசமைப்புச் சட்டத்தில் மத்திய - மாநில அரசுகளின் உறவு ஆராயப்பட வேண்டும் என்றவர் அதை ஆராய ‘நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான குழு’வை அமைத்தார். மாநிலங்களின் உரிமை தொடர்பாகப் பேசுவோர் இன்றும் ஒரு பெரும் சாசனமாகக் கருதும் ஆவணம் ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரைகள். மாநிலத்துக்கு என்று தனிக் கொடி கேட்டு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கொடியை வடிவமைத்து டெல்லியில் அதை வெளியிடவும் செய்தார். கொடி கோரிக்கை நிறைவேறவில்லை என்றாலும், “சுதந்திர தின விழாவில் டெல்லியில் பிரதமர் கொடியேற்றுவதுபோல, மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும்” என்ற அவரது கோரிக்கையை பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார். இன்று நாடு முழுக்க மாநில முதல்வர்கள் கொடியேற்றுகிறார்கள் என்றால், காரணம் கருணாநிதி. 20.4.1974-ல் தமிழக சட்டமன்றத்தில் அவர் அரசு நிறைவேற்றிய “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்” என்ற மாநில சுயாட்சித் தீர்மானம் இவற்றுக்கெல்லாம் உச்சம்!

அரசியல் முரணியக்கம்

arasiyaljpg

கருணாநிதி எதிர்கொண்ட அரசியல் எதிரிகளிலேயே இளையவர், மிகச் சவாலாக விளங்கியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் ஜெயலலிதாவுடனேயே கருணாநிதியின் அரசியல் கழிந்தது. ஏனைய தலைவர்களுடன் இருந்த நல்லிணக்கம் இவர்கள் இடையே இல்லை. ஆட்சி மாறும்போது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்ற விவாதங்களில் பங்கெடுப்பதைக்கூட இருவருமே தவிர்க்க விரும்பினார்கள். ஆனால், திமுக – அதிமுக இரு கட்சிகளையும் தாண்டி இங்கே யாரும் ஆதிக்கம் செலுத்தாத சூழலை இருவரும் பராமரித்தார்கள். எதிரும் புதிருமாக இருந்தார்கள். ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்து அரசியல் களத்திலிருந்து விலகிய அதேசமயம் கருணாநிதியும் உடல் நலம் குன்றி அரசியல் களத்தில் ஓய்ந்திருந்தார்.

நெருக்கடி நிலை யுகத்தின் நாயகன் 

தன்னுடைய அரசியல் வாழ்வில், அவருடைய அரசியல் போட்டியாளர்களுடன் ஒப்பிட பெருமளவில் ஜனநாயகவாதியாக இருந்தார் கருணாநிதி. பத்திரிகைகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர். பதிலுக்கு அவரும் பேனாவைப் பிடித்தார். மத்திய அரசு கொண்டுவந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இருந்தார். இந்திய வரலாற்றில் அழியா கரும்புள்ளியான நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே ‘இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்’ என்று கண்டன அறிக்கை எழுதினார் கருணாநிதி. எதிர்க்கட்சியினருக்குப் புகலிடம் தந்தார். இந்திராவை எதிர்த்ததால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. மகன் ஸ்டாலின் உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ‘முரசொலி’ வழியே ஜனநாயகத்துக்காகப் பெரும் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கட்சியையும் கட்டிக் காத்தார்.


 

கூட்டணி ஆட்சியின் தளகர்த்தர்

koottani%20aatchijpg

டெல்லியில் தேசியக் கட்சிகளின் சர்வாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய ஆட்சியில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்பதற்கான கூட்டணி யுகத்தின் தளகர்த்தர்களில் கருணாநிதியும் ஒருவர். 1988-ல் ‘தேசிய முன்னணி’ உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றினார். தேவகவுடா பிரதமரானபோது ‘இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்ல; மெட்ராஸ்’ பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு கருணாநிதிக்குச் செல்வாக்கு இருந்தது. தமிழ்நாட்டுக்குப் பல முக்கியமான திட்டங்கள் இக்காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதி டெல்லி சென்றால், வாசல் வரை வந்து அவரை வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எழுத்தில் வாழ்பவர்

ezuthiljpg

தமிழில் அதிகம் மேடைகளில் பேசிய, எழுதிய ஆளுமை கருணாநிதி. சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியவற்றைத் தொகுத்தாலே 1.5 லட்சம் பக்கங்கள் வரும். 21 நாடகங்கள், 16 சமூக, சரித்திர நாவல்கள், 8 கவிதை நூல்கள், 6 தொகுதி தன் வரலாறு இவையெல்லாம் நீங்கலாக அன்றாடம் கட்டுரைகள், கடிதங்கள் வழியே தமிழ் மக்களிடம் உரையாடிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. கவிஞர், வசனகர்த்தா, நாடகாசிரியர் என்று அவர் எடுத்த அவதாரங்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவுக்கு என்று பெரும் நட்சத்திர அந்தஸ்தை அவர் உருவாக்கினார். சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ‘பராசக்தி’க்கு கதை வசன புத்தகங்கள் வெளியாகி பரபரப்பாக விற்றன. அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் நாயகன் சிவாஜியைப் போல இரண்டு மடங்கு!

 

கை விலங்குகளை மாலைகளாக மாற்றியவர்

kai%20vilangujpg

எப்போதெல்லாம் கைதுசெய்யப்பட்டாரோ அப்போதெல்லாம் அரசியலில் பெரும் எழுச்சி பெற்றார் கருணாநிதி. 1953-ல் ‘டால்மியாபுரம்’ பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்ற வலியுறுத்தி போராடச் சென்ற கருணாநிதி திடீரென நான்கு பேருடன் ரயில் தடத்தை மறித்து, தலை வைத்துப் படுத்தார். கைது செய்த அரசு ஆறு மாதம் சிறையில் வைத்தது. திமுகவில் கவனத்துக்குரிய தலைவரானார் கருணாநிதி. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, அவரைக் கைது செய்து, அலைக்கழித்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைத்தது அரசு. “என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில் கிடக்கும் இந்த இடம் யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி” என்று அண்ணா சொல்லும் நிலைக்கு உயர்ந்தார் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் உச்சமானது, 78 வயது முதியவர் என்றும் பாராமல் ஜூன் 30, 2001 நள்ளிரவில் கருணாநிதியின் படுக்கை அறைக்குள்ளேயே போலீஸை அனுப்பி, ஜெயலலிதா அரசு செய்த கைது. கருணாநிதியை போலீஸார் இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு இந்தியாவே கொந்தளித்தது. இந்த நெருக்கடியான சூழலிலும் கருணாநிதியிடம் ஒரு காகிதத்தை நீட்டி கைதுகுறித்து எதையாவது எழுதுங்கள் என்றார் பத்திரிகையாளர் ஒருவர். கருணாநிதி சிரித்தபடி ஒரு வரி எழுதிக் கையெழுத்திட்டார்: ‘அநீதி வீழும், அறம் வெல்லும்!’

https://tamil.thehindu.com/opinion/columns/article24629655.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டு ஊடகங்கள் தினத்தந்தி அளவிற்கு தரம்தாழ்ந்து "பலே ஆசாமி, வலைவீச்சு, கதறினார் பதறினார், பேரிக்கார்டு, டர்ரென கிழிந்தது etc.." போன்ற சொற்பதங்களை தற்பொழுது 'விகடன்' போன்றவைகள் பயன்படுத்துவது, அப்பத்திரிக்கைகளுக்கு அசிங்கம், தரக்குறைவு.

 

ஊடகங்களின் அனுமானப்படி இங்கே யாரும் பதறவும் இல்லை, கதறவும் இல்லை..!

மனுசன் நாலு கட்டினார், வாழ்ந்தார், ஆண்டார், பல தலைமுறைக்கும் சொத்து சேர்த்தார்..

இயற்கையின்படி, வயது முதிர்வில் இறைவனடி சேர்ந்தார்..!!

மறைவிற்கு அஞ்சலி செலுத்துவோம்..

இந்த அலங்கார, மிதமிஞ்சிய விளம்பர, ஊதிபெருப்பித்தலால் இருக்கும் அனுதாபமும் மறைந்து, வெறுப்பே துளிர்விட ஆரம்பிக்கிறது.
 

ஜெயலலிதாவின் 90களின் ஆட் சி காலங்களில் 
தமிழகம் நோக்கி தஞ்சம் புகுந்த ஈழ தமிழர்கள் 
முகாம்களுக்குள் முடங்குவதும் .....
கருணாநிதி ஆட்சி மாறினால் நிம்மதி பெரும்மூச்சு 
விட்டு திரிவதும் என்பதை மறக்க  முடியாது 

இந்த நாடகங்கள்தான் ....
இருக்கும் மரியாதையும் போய் வெறுப்பு வருகிறது. 

Link to comment
Share on other sites

கலைஞரின் இறுதிக் கிரியையில் பிரதமர், கரு சார்பில் மனோவும் செல்வமும் பங்கேற்பு
 

image_64a80757fb.jpgதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மறைந்த மு.கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக, இலங்கைப் பிரதமர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனும் சபாநாயகர் சார்பில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதனும், இன்று (08) காலை, சென்னை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இவர்களுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகர் ஆகியோரும் பயணித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கலைஞரின்-இறுதிக்-கிரியையில்-பிரதமர்-கரு-சார்பில்-மனோவும்-செல்வமும்-பங்கேற்பு/175-220040

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எல்லோரும் கண்ணீர் அஞ்சலி போடும் நானும் போடத்தான் வேணும்

கண்ணீர் அஞ்சலிகள்

வாங்கோ வாங்கோ !
எப்போதும் கூடத்துக்குள் நிக்கிறதிலே 
சில நண்மைகள் உண்டு. 

தனித்து நின்று கல்லெறி வாங்கிய 
இளமைக்காலம் கடந்து போகிறது.

Link to comment
Share on other sites

13 தொடர் வெற்றி... முறியடிக்கப்படாத 'சாணக்கியன்' கருணாநிதியின் டிராக் ரெக்கார்ட்! #VikatanInfographic #MissUKarunanidhi

 

தமிழகத்தில், ஒரு மாநிலக் கட்சியின் தலைவர்தான் கருணாநிதி, இவரை 61 ஆண்டுகளாகத் தோற்கவிடாமல் தங்களது பிரதிநிதி என்ற அந்தஸ்திலிருந்து இறக்கிப் பார்க்க மறுக்கிறார்கள் மக்கள். கருணாநிதியின் தேர்தல் வரலாறு மிக நீண்டது. 

13 தொடர் வெற்றி... முறியடிக்கப்படாத 'சாணக்கியன்' கருணாநிதியின் டிராக் ரெக்கார்ட்!  #VikatanInfographic #MissUKarunanidhi
 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடலை அடக்கம்செய்ய மெரினாவில் இடம் கேட்டால், ''கிண்டியில் 2 ஏக்கர் தருகிறோம், மெரினாவில் தர இயலாது'' என்று பதில் வருகிறது. உங்களுக்கு ஒரு வரலாறு தெரியுமா... கருணாநிதிதான் நிலமில்லா ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தவர். இவருக்கா நிலமில்லை என்கிறார்கள். 1972-ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர், அவர் இறந்த பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு இருந்த இடம், கருணாநிதிக்கு மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வியை மக்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலக் கட்சியின் தலைவர்தான் கருணாநிதி, இவரை 61 ஆண்டுகளாகத் தோற்கவிடாமல், தங்களது பிரதிநிதி என்ற அந்தஸ்திலிருந்து இறக்கிப் பார்க்க மறுக்கிறார்கள் தமிழக மக்கள். கருணாநிதியின் தேர்தல் வரலாறு மிக நீண்டது. 

1957-ம் ஆண்டு, குளித்தலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ.தர்மலிங்கத்தை எதிர்த்து நின்ற கருணாநிதியை அத்தொகுதி மக்கள் 8296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கிறார்கள். வென்ற கருணாநிதி, முதல்முறையாக சட்டமன்றம் செல்கிறார். அன்று அவர் பேசவேண்டிய உரையை கண்ணாடி முன் ஒப்பித்துப்பார்க்கிறார், முதல் உரைக்கு ஒப்பனை பார்த்த கருணாநிதி, எதையும் திட்டமிட்டுச் செய்பவர். 61 ஆண்டுகளில் எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ இவரிடம் கேள்வி எழுப்பினால், முகத்தில் அறைந்தார்ப்போல பதில் வரும். 

கருணாநிதி

 

 

1962ல் தஞ்சாவூரில், காங்கிரஸின் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்தநாடாரை வென்ற கருணாநிதிக்கு, அடுத்த 1967 தேர்தலிலும் வெற்றி முகம்தான். ஹாட்ரிக் அடித்த கருணாநிதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் அண்ணா. 1969ல் அண்ணா மறைந்த பிறகு, ஒட்டுமொத்த தி.மு.க தொண்டர்களும் முதல்வர் பதவிக்கு கருணாநிதியைத்தான் கைகாட்டுகிறார்கள். தி.மு.க-வை திறம்பட நடத்திய கருணாநிதி, தமிழகத்தையும் நடத்துவார் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருந்தது. 

 

 

1972-ம் ஆண்டு கட்சியை விட்டு விலகி அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். அன்றிலிருந்து, இறக்கும் வரை கருணாநிதியை முதல்வர் பதவி பக்கமே வரவிடாமல் தடுத்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க தோற்றதே தவிர, மக்கள் கருணாநிதியைத் தோற்க விடவில்லை. வென்றார், வென்றார், கேள்வி கேட்டார்... ஜார்ஜ் கோட்டைக்குள் தி.மு.க-வின் உயிர்மூச்சாக இருந்தார்.

சட்டமன்றம்

ராஜீவ் காந்தி படுகொலையை ஒட்டி நடந்த 1991 தேர்தலில், அ.தி.மு.க-விடம் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க  கண்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி, வெறும் இரண்டு தொகுதிகள்தான். அதில் ஒன்று கருணாநிதி. துறைமுகம் தொகுதியை தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கருணாநிதி முதலமைச்சராக ஆட்சி நடத்தவில்லை, ஒரு கார்ப்பரேட் சிஇஓ-வாக ஆட்சி நடத்தினார். ராமானுஜம் கமிட்டி அமைத்தார். சட்டசபைக்கு காலையிலேயே வந்துவிடுவார். அமைச்சர்களுக்கு டாஸ்க் கொடுத்து முடித்தார். தமிழக ஆட்சிக் காலத்தில் இந்த 5 ஆண்டுகளைப் 'பொற்காலம்' என்று சொல்லவைத்தார். 

 

 

DMK

2011-க்குப் பிறகு, கருணாநிதிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. முன்புபோல அவ்வளவு ஆக்டிவாக இல்லை. இருந்தாலும் சட்டமன்றம் வருவார். 2016 தேர்தலில் கையெழுத்துப் போட மட்டும்தான் சட்டமன்றம் வந்தார். பிறகு, ஓய்வில்தான் இருந்தார். 2016ல் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானபோது வருத்தம் தெரிவித்தார். அதன்பின், காவேரி மருத்துவமனைக்கும் கோபாலபுரம் வீட்டுக்கும்தான் கருணாநிதி சென்று வந்துகொண்டிருந்தார். 

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாளில் 130 இந்திய அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்ததற்குக் காரணம், கருணாநிதி என்ற ஆளுமையும், அவரது நட்பும்தான். கருணாநிதி, வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இன்று கோபாலபுரத்து வாசலில் கதறிய தொண்டனின் சத்தம், இந்த உதய சூரியனுக்கு மறைந்தாலும் கேட்கும். கருணாநிதியை தி.மு.க-வும், தமிழகமும் இழந்து தவிக்கிறது. தோல்வியே காணாத இந்த 95 வயது தலைவன், சூரியனாய் என்றும் இருப்பார்.

https://www.vikatan.com/news/coverstory/133352-karunanidhi-and-his-election-records.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.