Jump to content

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன….


Recommended Posts

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன….

 

 

வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை  ஆளுநர் நிறைவேற்றி வைப்பார் – முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன்…

 

 

vikki.png

தலைவர் அவர்களே, நீண்ட காலமாக எனக்குப் பரீட்சயமான சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி இந்திரா சமரசிங்க அவர்களே, எனது அன்பு மாணவர் திரு.இராஜகுலேந்திரன் அவர்களே, எனது மற்றொரு அன்பு மாணவன் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அவர்களே! சிரேஷ்ட பொருளாளர் பிரதி சட்டவரைஞர் திரு.செல்வகுணபாலன் அவர்களே, கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே, எனதருமை சட்ட மாணவ மாணவியரே!

பல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். உங்கள் நக்கீரம் இதழுக்கு வருடா வருடம் கட்டுரைகள் எழுதி அனுப்பிய காலம் இருந்தது. அரசியலுக்குள் நுழைந்ததும் என்னை அறிவுடையோர் பட்டியலில் இருந்து நீங்கள் அவிழ்த்து விட்டீர்களோ அல்லது நானாகவே கழன்று கொண்டேனோ நினைவில்லை! என்னுடைய முதல் ஐந்தாண்டு அரசியல் வாழ்க்கை முடியுந்தறுவாயில் என்னை நீங்கள் அழைத்ததில் இருந்து மீண்டும் என்னை அறிவுடையோர் பட்டியலுக்குள் ஏற்கச் சித்தமாய் இருக்கின்றீர்கள் என்பது புலனாகியுள்ளது.

நான் சட்ட மாணவர் தலைவராக இருந்த வருடத்தில் தான் அதாவது 1963ல்த் தான் உங்கள் இந்து மகா சபை உதித்தது. சாவகச்சேரியில் பின்னர் சட்டத்தரணி தொழிலை பார்த்த ஏ.மயில்வானகம் என்ற அப்போதைய சட்ட மாணவரே உங்கள் முதல்த் தலைவராக இருந்தார். செயலாளராக இருந்தவர் தி.யோகநாதன் அவர்கள். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் இருவரும் என் முன்னிலையில் வழக்குகளில் ஆஜராகி இருந்தனர். இப்பொழுது இருவருமே எம்முடன் இல்லை.

அன்றைய காலத்தையும் உங்களையும் இணைக்கும் பாலமாக நான் என்னைக் காண்கின்றேன். இவ்வாறு இணைக்கும் காலகட்டத்தையே வரலாறு என்ற கண் கொண்டு பார்ப்பார்கள் அறிஞர்கள். சரித்திரம் என்ற பாடம் எமது மாணவ பருவத்தில் எமது பாட விதானத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாம் இலத்தீன் மொழி படித்தோம். சிலர் இலத்தீனையும் கிரேக்க மொழிகளையும் படித்தார்கள். சிலர் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைத் தத்தமது தாய் மொழிகளுடன் சேர்த்துக் கற்றார்கள். அம் மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வரலாற்றையே முதன்மைப்படுத்தின. இவற்றைவிட புராதன இலங்கையின் வரலாறு, நவீன இலங்கையின் வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்று சரித்திரம் பல பாடங்களாகக் கற்பிக்கப்பட்டது.

ஆனால் 1960களில் படிப்படியாக சரித்திரம் பற்றிய அறிவு குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக மாணவ மாணவியரிடையே விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை முதன்மை பெறத் தொடங்கின. காரணம் சரித்திர அறிவு, மொழியறிவு போன்றவை விரைவானதும் வளமானதுமான வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர முடியாது போனமையே. வெள்ளையர் காலத்தில் மூன்று ‘R’ கள் பயிற்றப்பட்டன. வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing),  மற்றும் எண்கணிதம் (Arithmetic)  ஆகியனவே அவை. அந்தப் பாடங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலிகிதர்களாக வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வேலையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. காலம் போகப் போக மூன்று ‘சு’ கள் போதாமல் போயிற்று. வரலாறும் தேவையற்றதாகிவிட்டது. 1966ல் 17507 பேர் மேல் வகுப்புகளில் சரித்திரம் படித்திருந்தார்கள் எனின் 1990ல் 1981 பேரே சரித்திரம் படிக்க முன்வந்தார்கள்.

இப்பொழுது எத்தனை பேர் சரித்திரத்தை ஒரு பாடமாக மேல்படிப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று நான் அறியேன். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான கால சரித்திரத்தை எத்தனை பேர் அறிவார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.அவற்றை ஏன் அறிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எமது பாரம்பரியம் பற்றி, வரலாறு பற்றி, சரித்திரம் பற்றி சரியாகவோ தவறாகவோ நாம் அறிந்திருக்கும் அறிவு தான் எம்மை மறைமுகமாக இன்றும் ஆட்டிப்படைக்கின்றன. அந்த அறிவு தவறுடையதாக இருந்தால் நாம் மற்றவர்களால் வழிநடத்தப்படுவோம். அத்துடன் மற்றவர்களின் சரித்திரம் குறைகள் உடையதாக இருந்தால் அவற்றின் குறைகளை மறைத்துத் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பச் செய்ய எமது அசட்டையினம், அறிவின்மை உதவி புரிவன. இன்று அது தான் இந்த நாட்டில் நடைபெறுகின்றது. எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது.ஆகவே வரலாறு பற்றிய அறிவு எமது மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியம் என்பதையே எடுத்துச் சொல்ல வருகின்றேன். அதைப் பாடமாகப் படிக்காவிடினும் உங்கள் பரந்த அறிவினுள் பகுதியாகவேனும் புகுத்தி வைத்தல் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

1948 தொடக்கம் இன்று வரையில் 70 வருடங்களுக்கு இலங்கையில் நடைபெற்றவையும் வரலாறே. அது அரசியலாக இருக்கலாம்; சமூகவியலாக இருக்கலாம்; பொருளாதாரம் பற்றியதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தின் ஒரு பார்வையாளராக நான் இருந்துள்ளேன் என்பதையே பாலமென நான் முன்னர் குறிப்பிட்டேன். இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்றுப் பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.

வெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந் நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம் அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்துங் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது. அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையேயுந்தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள்; பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதே போல்த்தான் அண்மையில் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல்த் தீர்வொன்று வரும் என்று எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம். கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! கயிறைக் கையில் எடுத்துக் காத்திருப்பவர்கள் தான் தமிழ்த் தலைவர்கள். கயிறைக் கொடுத்து மேலே உங்களை இழுத்துச் செல்வோம் என்பார்கள் கயிறு கொடுப்பவர்கள். கடைசியில் கயிறு மட்டுமே கைக்கு வரும். கை கொடுத்து மேல் எழுப்ப மாட்டார்கள். சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக அவர்கள் கோரிய போது அவர் பின்வருமாறான ஒரு உறுதி மொழியை அளித்தார் – ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.

இலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா?’ என்று. ‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதம மந்திரியாக அதன் பின் பதவி ஏற்ற பின் உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே.

பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம். அதாவது சுதந்திர காலந்தொடக்கம் இன்று வரையிலான அண்மைய கால சரித்திரத்தின் வாயிலாக அறிகின்றோம். இவை பற்றித் தெரியாவிட்டால் மேலும் மேலும் நாம் ஏமாற்றப்படுவோம். 1975ம் ஆண்டில் அவர் இறக்க சில வருடங்களுக்கு முன் வால்டர் ஷ்வார்ட்ஸ் Walter Shwartz  என்றவருக்கு காலஞ்சென்ற தந்தை செல்வா பின்வருமாறு கூறியிருந்தார். ‘நாங்கள் செய்த அடிப்படைத் தவறு பிரித்தானியர் எம்மை விட்டு ஏகும் போது அவர்களிடம் நாம் எமது சுதந்திரத்தைக் கோராமையே’ என்றார். அப்பொழுது நாம் எம்மை வடகிழக்காகப் பிரித்து சிந்திக்காமையே நாம் எமக்கு சுதந்திரம் கேட்காததன் காரணம். அப்போது தெற்கில் இருந்த சிங்களவர்களும் தமிழர்களும் மிக அன்னியோன்யமாகப் பழகி வந்தார்கள்.

1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க அவர்கள் தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என்று கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.

ஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை திரு.பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம். அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று அதே பெரும்பான்மையினச் சமூகம் சமஷ்டி தர முடியாது என்று கூக்குரல் இடுகின்றார்கள்.

என்ன நடந்தது என்று பார்த்தோமானால் சுமார் 1920 வரையில் சிங்கள மக்கள் தம்மைத் தமிழ் அரசியல்த் தலைவர்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ற தலைவர்களை அதுவரையில் ஏற்றிருந்தார்கள். சிங்கள மக்கள் சார்பில் 1915ல் இலண்டன் போய் வந்த இராமநாதனை தேரில் வைத்துத் தாமே இழுத்துப் போனார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். ஆனால் 1920ல் சுயாட்சி தரப்போவதாக பிரித்தானியர் அறிவித்த பின்னர் சிங்களவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதை எம்மவர் காலம் கடந்தே உணர்ந்து கொண்டார்கள். தமது ஆதிக்கம் இனி மும்முரமடைய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்பொழுதே இந்நாடு பௌத்த சிங்களவருடையது, மற்றவர்கள் எம்மை அண்டி வாழ வேண்டுமே ஒளிய எமது ஆதிக்கத்திற்கு அப்பால்பட்டு வாழ விடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கத் தொடங்கி விட்டது. அதனால்த்தான் 1930களிலேயே Pan Sinhala எனப்படும் சிங்களவர் மட்டும் அதிகாரம் பெற்ற அரசவை ஆக்கப்பட்டது.

கௌரவ D.S. சேனாநாயக்கவிற்கு அதற்கான அடி எடுத்துக் கொடுத்தது கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் என்று கூறப்படுகிறது. அதே திரு.சி.சுந்தரலிங்கந் தான் ஈழம் கோரிய அடங்காத் தமிழன் என்று பின்னர் அழைக்கப்பட்டார். ஏமாற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் அது. முன்னர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலமும் ஏமாற்றப்பட்டதும் இலங்கைத் தமிழர் பேரவையை தொடக்கியிருந்தார். ஆகவே ஏமாற்றப்பட்ட பின்னர் எமக்கு ஏற்பட்ட பட்டறிவே எமது அரசியலை இன்று வரையில் நிர்ணயித்து வருகின்றது. நாமாக நிர்ணயித்த ஒரு நோக்கை இலக்கை அடைய நாம் முனையவில்லை. ஆனால் அவ்வாறான இலக்கையடைய ஆயுதங்கள் எடுக்கப்பட்டும் இன்று அவை மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நாம் தொடர்ந்து பட்டறிவின் பாற்பட்டே காய்களை நகர்த்தி வருகின்றோம்.

அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை. வெள்ளையர் இடம் இருந்து சுதந்திரம் பெற சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருப்பினும் வெற்றிக் கம்பத்துக்குக் கிட்ட வருகையில் சிங்களத் தலைவர்கள் எம்மைத் தள்ளிவிட்டு முன்னேறியமையே சரித்திரம். அதன்பின் எம்மை வலுவிழக்கச் செய்ய சிங்களத் தலைவர்களால் நடாத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம், 1970 களில் கல்வியில் தரப்படுத்தல் முறை, வடகிழக்கு மாகாணங்களில் வலுவான சிங்களக் குடியேற்றம், பெருவாரியாகத் தமிழ் அரச அலுவலர்களை அரச சேவையை விட்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுத்தமை, வன்முறைக் கலாச்சரத்தை 1974ம் ஆண்டு அகில உலகத் தமிழ் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது நடைமுறைப்படுத்தியது என்று பலதையுஞ் சொல்லலாம். அவற்றை விட 1958,1977, 1983ம் ஆண்டுகளிலும் இன்னும் சில வருடங்களிலும் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் குறிப்பிடலாம். இன்னும் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் வகையில் நடைபெற்று வந்துள்ளன, வருகின்றன. அவற்றை மாற்றி ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்று கூடி சிந்திக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் கட்சி பேதமில்லாமல் தமது குறிக்கோளில் மிகத் திடமாக இருந்து வருகின்றார்கள். அடுத்து அவர்களின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கூட அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோம் நாம். அவர்களோ படிப்படியாகத் தங்கள் குறிக்கோள்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். இதைக் கூறுவதால்த் தான் நான் என் கட்சியில் வேண்டாதவனாகப் பார்க்கப்படுகின்றேன். ஆனால் உண்மையை அலசிப் பாருங்கள். நீங்கள் சட்ட மாணவ மாணவியர். இது உங்களுக்கு விளங்க வேண்டும்.

ஆயுதமேந்திய எம் இளைஞர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டியதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி கண்டார்கள். பயங்கரவாதம் என்பதற்கும், சட்டப்படி வன் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று இன்னமும் சரியாக அர்த்தம் தரப்படவில்லை. பொதுவாக பயங்கரவாதம் என்பது நிதி, அரசியல், சமய காரணங்களுக்காக அல்லது வெறுமனே மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப வேண்டுமென்றே கண்மூடித்தனமாக வன்முறையைப் பாவிப்பதையே குறிக்கின்றது. 1981 தொடக்கம் 1989 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனல்ட் ரேகன் (Ronald Reagan)  காலத்தில்த்தான் பயங்கரவாதம் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் 2001ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 11ந் திகதிய இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்களின் பின்னர் குறித்த சொல் பலராலும் பாவிக்கப்பட்டது. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது அரசியல்வாதிகளிடையே பிரசித்தி பெற்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டம் வன்முறையில் ஈடுபடுபவரைத் தண்டிக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்றவுடன் தண்டனையானது தரம் கடந்துவிடுகிறது. அரசியல் வெறுப்பு, குரோதம் போன்றவை உட்புகுந்து மரண தண்டனையிலும் பார்க்கக் கொடிய தண்டனையை நிகழ்த்த அது பற்றிய சட்டங்கள் இடமளித்து நிற்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் கேட்டவன் என்ற முறையில் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்படுபவர்களுக்கு நடைபெற்றவற்றை நான் ஓரளவு அறிந்தவன். ஒழுக்க நடத்தைக்கு மாறானது பயங்கரவாதம் என்ற எண்ணம் உலாவிவர அதை மனதிற்கெடுத்து தமிழ் மக்களின் உரிமைகள் கேட்ட போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டி, இலங்கைத் தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமை பற்றிப் பேசுபவர்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எம் இனத்தவர்களை வேண்டாதவர்கள், வெறுப்பு மிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளன.

தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றிப் பேசினால் அவர் ஒரு பயங்கரவாதி என்று இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றார். அல்லது எப்படி ஆயுதமேந்திய பிரபாகரனுடன் என்னை ஒப்பிட்டு என்னையும் பயங்கரவாதி என்கின்றார்கள்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் மற்றவருடன் தர்க்கிக்க முடியாவிட்டால் அவன் ஒரு பைத்தியம் என்பார்கள். அப்படித் தான் இந்தப் பயங்கரவாதி என்ற சொல். இப்போ அது ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது. சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான கோரிக்கைகளை மழுங்கடிக்க இவ்வாறான வார்த்தைகளைப் பாவித்து இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முக்கியமாக போரானது இலங்கையில் முடிவுக்கு வந்த பின், தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் புறக்கணித்து வருவதையும் அரசியல் ரீதியாக அவர்களை அடக்கியாள எத்தனிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதைச் சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறவில்லை. ‘புலிகளின் போர் பயங்கரவாதத்தின் எதிரொலி என்றிருந்தோம். ஆனால் இப்பொழுது உண்மையை உணர்கின்றோம். தொடர்ந்து தமிழ் மக்களின் உரித்துக்களைப் புறக்கணித்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று கூறி அண்மைய வரலாற்றைப் படித்தறிந்து வருகின்றார்கள் சர்வதேசத்து மனித உரிமையாளர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் ஓய்ந்த பின் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் அவை செய்யவில்லை. வெறும் கட்டுமாண புனரமைப்பையே அரசாங்கம் மனமுவந்து செய்து வருகின்றது என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது.

வரும் காலத்தில் இந்த செயற்பாடு உக்கிரமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ.நா.மனித உரிமை சபையில் ஒன்றிணைந்த பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நழுவ எத்தனிப்பது இதுவரை காலமும் தமிழ்த் தலைவர்கள் தொடர் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் பற்றிக் கூறியதை ருசுப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மை வெளியாகி வருகின்றது. உலக அரங்கில் தொடர் இலங்கை அரசாங்கங்களின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக ஒருமித்த கோரிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைக்காது காலந் தாழ்த்துவது எமக்குப் பாதகமாக அமையப் போகின்றது.

நேற்றைய தினம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதே.

இந்த தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இதனால்த்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றோம். அந்தப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது.

சமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர்ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம். தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல்த் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன். சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மகாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் முன் எடுத்துரைத்தார். ‘எமக்கு நூறுவீதம் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்’ என்று அவர் கூறினார். முழுமையான அதிகாரப் பகிர்வு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது. சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை.

சமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒருசாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள். இன்னொருசாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண்டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களுடன் தாம் மிக நெருக்கமாகப் பழகிவருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையுந் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன். முக்கியமாகச் சில முறையற்ற செயல்த்திட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் ‘பார்த்தீர்களா? இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள்?’ என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களே.

சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரீக நவிலல் அல்ல. அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை. ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள். இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்த்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்திவிடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.
அன்றைய சிங்கள மக்கட் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கட் தலைவர்களும் கடைப் பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.

ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது.
ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.

சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந் நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும். இன்றைய தினம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. எனது கருத்துக்களை வருங்காலத் தலைவர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் திருப்தி அடைந்து, அழைத்தமைக்கு நன்றி கூறி நான் என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

இலங்கை சட்டக் கல்லூரி
சட்ட மாணவர் இந்து மகா சபை
நக்கீரம் இதழ் வெளியீடு
உள்ளடங்கலான கலை விழா 2018
29.07.2018 அன்று காலை 9.30 மணிக்கு
வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் கருத்தரங்க கூடத்தில்
‘அன்றும் இன்றும்’
எனும் பொருள் பற்றிய
பிரதம அதிதியுரை
குருர் ப்ரம்மா….

http://globaltamilnews.net/2018/89833/

Link to comment
Share on other sites

சலுகைகளை காட்டி ஏமாற்ற முடியாது - சி.வி.

 

 
 

( எம்.எம். மின்ஹாஜ், நா. தினுஷா)

வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார்.    தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார் 

கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேச­மாட்­டார்கள்  என்று அவர் எண்­ணு­கின்றார் போன்று கரு­து­கின்றேன் என  வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

எமது வட­மா­காண சபை ஒக்­டோ­பரில் கலைக்­கப்­பட்­டதும் வட­மா­காண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்­பது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று அறி­கின்றேன்.   கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்றைத் திறந்து வைப்­பது அதில் முக்­கி­ய­மாக உள்­ளது.  கிளி­நொச்­சியை பௌத்­தர்கள் வாழும் இட­மாக மாற்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இலங்கை சட்ட கல்­லூரி  சட்ட மாண­வர்­களின்  இந்து மகா சபையின் ஏற்­பாட்டில் வெள்­ள­வத்தை  தமிழ் சங்­கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  நடை­பெற்ற கலை விழா மற்றும் நக்­கீரம் நூல் வெளி­யீட்டு விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

வடக்கு முதல்வர் அங்கு  தொடர்ந்து உரை­யாற்­று­கையில், 

viki.jpg

எதிர்வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நிற்க ஆவல் கொண்­டி­ருக்கும் ஒருவர் பேசி­யதைப் பத்­தி­ரி­கையில்  பார்த்தேன். வட­கி­ழக்கு மக்கள் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யையே கேட்­கின்­றார்கள் என்­றி­ருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்­துள்­ளார்கள். படித்­த­வர்கள், பல்­தொழில் விற்­பன்­னர்கள் எனப் பலர் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று விட்­டார்கள். வலு இழந்­த­வர்­க­ளுக்கு எலும்புத் துண்­டு­களை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்­திரம் பற்றி, தனித்­துவம் பற்றி பேச­மாட்­டார்கள் என்­ப­தாகும்.  

இந்த தொடர் குழப்­ப­நி­லையை எமக்­கி­டையே ஏற்­ப­டுத்­து­வ­திலும் சிங்­கள அர­சியல்த் தலை­வர்கள் வெற்றி கண்­டுள்­ளார்கள். தனிப்­பட்ட சலு­கை­களை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நல்கி அவர்­களைத் தம்பால் ஈர்க்க எத்­த­னித்து இது­வ­ரையில் வெற்­றியும் கண்­டுள்­ளார்கள் என்றே கூற வேண்­டி­யுள்­ளது. இத­னால்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்­கி­ருந்­தாலும் தமது பகை­மை­யு­ணர்­வு­களை மூட்டை கட்­டி­விட்டு ஒருங்­கி­ணைந்து ஒற்­று­மை­யாக ஒரு பொது­வான அர­சியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளி­யிட்டு வரு­கின்றோம். அந்தப் பொது­வான கோரிக்கை தான் சமஷ்டி அர­சாங்கம் என்­பது. 

சமஷ்டி என்­ற­வுடன் அது பிரி­வினை என்று சிங்­கள மக்கள் மனதில் பயத்­தையும் பீதி­யையும் நிலை நாட்­டி­யுள்­ளார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள். சமஷ்டி பற்­றிய புரிந்­து­ணர்வு சிங்­களப் பொது மக்­களைச் சென்­ற­டை­யா­மையே சமஷ்­டியை தொடர்ந்து வரும் பெரும்­பான்மை அர­சாங்­கங்கள் எதிர்ப்­பதன் காரணம். தாம் சமஷ்டி பற்­றிய உண்­மையை மக்­க­ளுக்கு உணர்த்­தினால் தம்மைத் துரோ­கிகள் என்று அவர்கள் முடிவு செய்­து­வி­டு­வார்­களோ என்று கவ­லைப்­ப­டு­கின்­றார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள். சமஷ்டி பற்­றிய பொய் கூறிய சிங்­கள அர­சியல் தலை­வர்கள் அது பற்­றிய உண்­மையைக் கூறத் தயங்­கு­கின்­றார்கள். அதற்­காகத் தான் ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்­களத் தலை­வர்­க­ளிடம் கோரி வரு­கின்றேன். சில காலத்­திற்கு முன்னர் நடந்த ஒன்­பது மாகாண முத­ல­மைச்­சர்கள் மா­நாட்டில் வட­மத்­திய மாகா­ணத்தின் அப்­போ­தைய முத­ல­மைச்சர் பின்­வ­ரு­மாறு ஜனா­தி­பதி சிறி­சேனா  முன் எடுத்­து­ரைத்தார். “எமக்கு நூறு­வீதம் அதி­காரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்” என்று அவர் கூறினார். முழு­மை­யான அதி­காரப் பகிர்வை ஒரு சமஷ்டி அர­சியல் யாப்பின் கீழ்த் தான் நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்­பது அவ­ருக்கு தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவ­ருக்கு வேண்­டா­தி­ருந்­தது. சமஷ்­டியின் உள்­ள­டக்­கமும் உள்­நோக்­கமும் அவ­ருக்கு எந்­த­வித இடர்­பாட்­டி­னையும் கொடுக்­க­வில்லை.

சமஷ்டி பற்றி தமி­ழர்­க­ளி­டையே இரு வித­மான எதிர்ப்­பா­ளர்கள் இருக்­கின்­றார்கள். ஒரு ­சாரார் சமஷ்டி கிடைக்­காது; ஆகவே வேறே­தேனும் பொறி­மு­றையை நாங்கள் மாற்­றாக உரு­வாக்க முனைவோம் என்­கின்­றார்கள். இன்­னொ­ரு ­சாரார் ஒற்­றை­யாட்சி முறையே சிறந்­தது என்­கின்­றார்கள். இரண்டாம் பிரி­வினுள் பணம் படைத்த தமிழ் வர்த்­த­கர்கள் பலர் இடம் பெறு­கின்­றார்கள். சமூ­கத்தின் உயர் மட்டச் சிங்­களத், தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் தாம் மிக நெருக்­க­மாகப் பழ­கி­வ­ரு­வதால் அவர்­களைக் கொண்டு நாடு பூரா­கவும் எத­னையம் தாம் செய்­விக்­கலாம் என்ற ஒரு இறு­மாப்பு அவர்­க­ளி­டையே காணப்­ப­டு­வதை நான் அவ­தா­னித்­துள்ளேன். 

முக்­கி­ய­மாகச் சில முறை­யற்ற செயற்றிட்­டங்­களை இவ்­வா­றா­ன­வர்கள் மாகா­ணங்­க­ளுக்குக் கொண்டு வரும் போது மாகாண அர­சாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரி­வித்தால் “பார்த்­தீர்­களா? இந்தப் பல்­லில்­லாத 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழேயே இவ்­வ­ளவு பந்தா காட்­டு­கின்­றார்கள் என்றால் உண்­மை­யான சமஷ்டி கிடைத்தால் என்­ன­வெல்லாம் இவர்கள் சொல்­வார்கள்?” என்று கூறி ஒற்­றை­யாட்சி முறையே சிறந்­தது என்­கின்­றார்கள். அதி­க­மாக இந்தப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்­த­கர்­க­ளே­யாவர்.

சமஷ்டி கிடைக்­காது என்­பதால் சமஷ்­டியை வெறுப்­பது எமது கையா­லா­காத தனத்தைக் காட்­டு­கின்­றது. சமஷ்டி என்ற சொல் சிங்­கள மக்­க­ளி­டையே வெறுப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது உண்­மை­யே­யாகும். ஆனால் அந்த வெறுப்பு சமஷ்­டிக்கு எதி­ரா­ன­தல்ல. சமஷ்­டியை ஆத­ரித்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­னது. தமி­ழர்­களை வெறுத்­த­வர்கள் அவர்கள். தமி­ழர்கள் சமஷ்டி கேட்­டதால் சமஷ்­டி­யையும் வெறுத்­தார்கள். சமஷ்டி என்­பது ஒரு நாகரிக நவிலல் அல்ல. அது அத்­தி­யா­வ­சி­ய­மா­னது என்­பதை இங்கு கூற விரும்­பு­கின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாண பெரும்­பான்மை மக்கள் நாட்டின் பெரும்­பான்மை மக்­க­ளி­ட­மி­ருந்து மொழியால், கலா­சா­ரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறு­பட்­ட­வர்கள். அவர்கள் சர்­வ­தேச சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளின்­படி ஒரு மனி­தக்­கு­ழுமம் ஆவார்கள். அவர்­க­ளுக்­கென்று ஒரு நீண்­ட­ச­ரித்­திரம் உண்டு. வேடர்­களுட் பட இவ்­விரு மாகாண மக்­க­ளுமே இலங்­கையின் பூர்­வீகக் குடிகள். சிங்­கள மொழி கி.பி.6ஆம் அல்­லது 7ஆம் நூற்­றாண்டில் வழக்­குக்கு வரமுன் சிங்­களம் பேசியோர் இருக்­க­வில்லை. ஆகவே வெள்­ளை­யர்கள் நாட்டை 1833ஆம் ஆண்டில் நிர்­வாக ரீதி­யாக ஒன்­றி­ணைக்கும் போது இரு­த­ரப்­பட்ட மக்­களை அல்­லது கண்­டிய சிங்­க­ள­வ­ரையும் தனி­யாகச் சேர்த்தால் மூன்று வித­மான மக்கள் குழு­மங்­களை இணைத்­தார்கள். இன்று பெரும்­பான்­மையோர் அர­சாங்­கங்கள் கண்­டிய சிங்­க­ள­வர்­க­ளுக்கும் சம அந்­தஸ்து அளித்து சிங்­கள மக்­களை ஒன்­றி­ணைத்­துள்­ளார்கள். அடுத்து வட­கி­ழக்கைத் தம் வச­மாக்க பெற்றுக் கொள்ள நட­வ­டிக்­கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது

தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்தி விடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.

அன்றைய சிங்கள மக்கள் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கள் தலைவர்களும் கடைப்பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால்  நாம்    பௌத்த    சிங்களவராகவோ   பௌத்த  தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது. 

ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பதாகும். கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். 

சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந்த நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும்.  சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும்  என்றார்.

http://www.virakesari.lk/article/37481

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.