Jump to content

ராஜபக்ஷ சம்­பந்தன் சந்­திப்பின் பின்­னணி


Recommended Posts

ராஜபக்ஷ சம்­பந்தன் சந்­திப்பின் பின்­னணி

S-01Page1Image0002-240a06b925ec3c90c6b8d6f73d61a4b818ec2691.jpg

 

-என்.கண்ணன்

சீனாவில், மக்கள் விடு­தலை இரா­ணுவம் உரு­வாக்­கப்­பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளி­நா­டு­களில் உள்ள சீனத் தூத­ர­கங்­களின் ஏற்­பாட்டில் கொண்­டா­டப்­ப­டு­வது இப்­போது வழக்­க­மாகி விட்­டது.

இலங்­கை­யிலும் அண்­மைக்­கா­ல­மாக இந்த கொண்­டாட்டம் மிகப்­பெ­ரி­ய­ளவில் இடம்­பெற்று வரு­கி­றது.

கடந்த திங்­கட்­கி­ழமை, கொழும்பில் சங்ரி லா விடு­தியில், மிகப்­பெ­ரிய நிகழ்­வாக சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழா கொண்­டாட்டம் இடம்­பெற்­றது.

சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீனத் தூத­ரக பாது­காப்பு ஆலோ­சகர் ஆகியோர் இணைந்து ஏற்­பாடு செய்த இந்த நிகழ்வில், இம்­முறை அர­சாங்கத் தரப்பைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களைக் காண­வில்லை.

கடந்த ஆண்டு ஹில்டன் விடு­தியில் சுமார் 400 பேர் பங்­கேற்ற, சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் 90 ஆவது ஆண்டு விழாவில், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன பிர­தம விருந்­தி­ன­ராகப் பங்­கேற்­றி­ருந்தார்.

இம்­முறை விழாவில் 600 பேருக்கு மேல் பங்­கேற்­றனர். இம்­முறை, பாது­காப்புச் செய­ல­ரான கபில வைத்­தி­ய­ரத்ன தான் பிர­தம விருந்­தி­ன­ராக அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் ஆளும்­கட்சி அர­சி­யல்­வாதி அல்ல.

அதை­விட, அரச தரப்பில் இருந்து எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் இந்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்லை.

அவ்­வா­றாயின், அர­சி­யல்­வா­தி­களை ஒதுக்கி விட்டு பாது­காப்புத் துறை சார்ந்­த­வர்­க­ளுக்குத் தான், சீனத் தூத­ரகம் அழைப்பு அனுப்­பி­யதா என்றால் அதுவும் இல்லை.

ஏனென்றால், இலங்­கையின் இரண்டு முக்­கிய அர­சி­யல்­வா­தி­க­ளான மஹிந்த ராஜபக் ஷவும் இரா.சம்­பந்­தனும் இந்த நிகழ்­வுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அவர்­க­ளுடன், முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷவும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் இப்­போது அரை அர­சி­யல்­வா­தி­யாக மாறி விட்டார்.

எதிர்க்­கட்சி வரி­சையில் உள்ள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மாத்­திரம் சீனா அழைப்பு விடுத்­தி­ருப்­பதன் பின்னால், எந்­த­வொரு உள்­நோக்­கமும் சீனா­வுக்கு இருக்­காது என்று யாராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

ஆண்­டு­தோறும் சீனா தனது இரா­ணு­வத்தின் பலத்­தையும், பெரு­மை­யையும் பறை­சாற்­று­வ­தற்­காக இந்த ஆண்டு விழாவை நடத்­து­கி­றது.

சீனாவில் பெய்ஜிங் நகரில் மிகப் பெரி­ய­ள­வி­லான இரா­ணுவ அணி­வ­குப்பு நடத்­தப்­படும். அதில் இலட்­சக்­க­ணக்­கான சீனப் படை­யினர், அதி­ந­வீன போர்த்­த­ள­பா­டங்­க­ளுடன் அணி­வ­குத்துச் செல்­வது வழக்கம்.

வெளி­நா­டு­களில் சீனா அவ்­வா­றான இரா­ணுவ பலத்தைக் காட்­ட­மு­டி­யாது. ஆனால் தனது இரா­ணுவ பலத்தின் பெரு­மையைப் பேச முடியும். அதன் மதிப்பை உயர்த்திக் காட்ட முடியும்.

அதனை வைத்து, பிற நாடு­க­ளு­ட­னான இரா­ணுவ உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்ள முடியும். அதற்­காக தான் கொழும்­பிலும், வேறு பல நாடு­களின் தலை­ந­க­ரங்­க­ளிலும், இந்த விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

கொழும்பில் சீன இரா­ணு­வத்தின் ஆண்டு விழாக் கொண்­டாட்­டங்கள் என்­பது, வழக்­க­மாக ஒரு இரா­ணுவ அடை­யா­ளத்­துடன், இரண்டு நாடு­க­ளி­னதும் பாது­காப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான இலக்­குடன் தான் நடத்­தப்­ப­டு­வது வழக்கம்.

ஆனால், இந்­த­முறை ஒழுங்கு செய்­யப்­பட்ட சீன இரா­ணு­வத்தின் ஆண்டு விழா அவ்­வா­றான ஒன்­றாகத் தென்­ப­ட­வில்லை. அதற்கும் அப்­பாற்­பட்ட அர­சியல் நோக்­கங்­க­ளுடன் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டதா என்று சந்­தே­கிக்கத் தக்க பல கார­ணங்கள் உள்­ளன.

1. அரச தரப்பு அர­சி­யல்­வா­திகள் இல்­லாத ஒன்­றாக இருந்­தமை.

2. மஹிந்த ராஜபக் ஷவுக்கும், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம்.

3. எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா.சம்­பந்­தனும் அழைக்­கப்­பட்­டமை.

இந்த நிகழ்வில் அரச தரப்பு அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டாமல் தவிர்க்­கப்­பட்­டதா என்று தெரி­ய­வில்லை. அவ்­வாறு தவிர்க்­கப்­பட்­டி­ருந்தால், அர­சாங்­கத்­துக்கும் சீனா­வுக்கும் இடையில் காணப்­படும் இடை­வெ­ளியை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்கும்.

இந்த நிகழ்வு நடப்­ப­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் தான், பொலன்­ன­று­வையில், சீனாவின் நிதி­யு­த­வி­யுடன் சிறு­நீ­ரக மருத்­து­வ­ம­னையை அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்­டது. (11ஆம் பக்கம் பார்க்க)

ராஜபக் ஷ... (தொடர்ச்சி)

சீனத் தூது­வரும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பங்­கேற்­றி­ருந்த அந்த நிகழ்வில், சீனாவின் தேசிய கீதம் முதலில் இசைக்­கப்­பட்­டது தொடர்­பான சர்ச்­சையும் உரு­வா­னது.

அதை­விட, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பிய திட்டம் ஒன்­றுக்­காக 4,800 கோடி ரூபாவை வழங்­கு­வ­தாக சீன ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருப்­ப­தான செய்­தியும் இங்கு வைத்தே அறி­விக்­கப்­பட்­டது.

எனவே, அர­சாங்கத் தரப்­புடன் சீனா முரண்டு பிடிக்­கி­றதா என்­பதில் குழப்­ப­மான சந்­தே­கங்­களும் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு, சீன நிறு­வனம் நிதி வழங்­கி­யது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­பட்­டதை சீனா விரும்­ப­வில்லை என்ற செய்­தியும் உள்­ளது.

இந்த விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முதல் நாள், பிர­தமர் ரணி­லுடன் தொடர்­பு­கொண்ட கொழும்பில் உள்ள சீனாவின் மூத்த இரா­ஜ­தந்­திரி ஒருவர், அது­பற்றி எச்­ச­ரிக்கை செய்­த­தா­கவும், அதன் பின்­னரே விவாதம் அடக்கி வாசிக்­கப்­பட்­டது என்றும் தக­வல்கள் உள்­ளன.

இதன் கார­ண­மாக, ஐ.தே.க.வைச் சேர்ந்த அர­சியல் பிர­மு­கர்கள் ஓரம்­கட்­டப்­பட்­டி­ருக்கும் வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரிக்க முடி­யாது.

எவ்­வா­றா­யினும், ஐ.தே.க. அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட, மஹிந்­த­வுக்கும் கோத்­தா­வுக்கும் சீனா கூடுதல் முக்­கி­யத்­துவம் அளிக்­கி­றது என்­பது மீண்டும் உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

ஆட்­சியை இழந்த பின்­னரும், மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும், சீனாவின் அரச விருந்­தி­னர்­க­ளாக அவ்­வப்­போது அழைக்­கப்­ப­டு­கின்­றனர். பேச்­சுக்­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன.

அதன் தொடர்ச்­சியை, சீன இரா­ணு­வத்தின் 91 ஆவது ஆண்டு விழா­விலும் காண முடிந்­தது.

இதில் இன்­னொரு முக்­கி­ய­மான விட­ய­மாக கூறத்­தக்­கது, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் அழைக்­கப்­பட்­டதும், அவர் பங்­கேற்­றதும்.

இரா.சம்­பந்தன் ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அழைக்­கப்­பட்­டாரா, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக அழைக்­கப்­பட்­டாரா என்­பது சீனா­வுக்குத் தான் வெளிச்சம்.

மஹிந்த ராஜபக் ஷவையும், கோத்­தா­பய ராஜபக் ஷவையும் அழைக்கும் போது, அவர்­களை, அர­சி­யல்­வா­திகள் என்ற முறையில் தான் அழைத்தோம் என்று நியா­யப்­ப­டுத்­தவும் சீனா அவ்­வாறு செய்­தி­ருக்­கலாம்.

அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷவையும், இரா.சம்­பந்­த­னையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து பேச வைக்கும் முயற்­சி­யாக இருந்­தி­ருக்­கவும் வாய்ப்­புகள் உள்­ளன.

பொது­வாக, சீரான உறவைக் கொண்­டி­ருக்­கா­த­வர்­களை இணைப்­ப­தற்கு இது­போன்ற நிகழ்­வு­களை குடும்­பங்­களின் மத்­தியில் மாத்­திரம் நடத்­து­வ­தில்லை. நாடுகள் கூட, உயர்­மட்­டத்தில் நடத்­து­கின்­றன. அவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவே இந்த நிகழ்வு பார்க்­கப்­ப­டு­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு ஆத­ரவு கோரி, மஹிந்த ராஜபக் ஷவை இரா.சம்­பந்தன் சந்­திக்கப் போகிறார் என்று செய்­திகள் வெளி­யாகி பல வாரங்­க­ளாகி விட்­டன. ஆனாலும் அந்தச் சந்­திப்பு நடக்­க­வே­யில்லை.

இப்­ப­டி­யான நிலையில், இவர்கள் இரு­வரும், சீனா ஒழுங்கு செய்த நிகழ்வில் ஆறு­த­லாக அமர்ந்து பேசி­யி­ருக்­கி­றார்கள். பல்­வேறு விட­யங்­க­ளையும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றார்கள்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில், மஹிந்த தரப்பில் உள்ள ஒரு­வரே வெற்­றியைப் பெற வேண்டும் என்று சீனா விரும்பும் என்­பதில் எந்த சந்­தே­கமும் கொள்ளத் தேவை­யில்லை.

ஏனென்றால் சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், ராஜபக் ஷவினர் தான் அவர்­க­ளுக்கு மிகவும் நம்­ப­க­மான கூட்­டா­ளிகள். அவர்­களை வெல்ல வைப்­ப­தற்­காக, சீனா இப்­போதே காய்­களை நகர்த்த ஆரம்­பித்­துள்­ளது என்றால் அதனை ஆச்­ச­ரி­ய­மான ஒன்­றாக பார்க்க முடி­யாது.

கடந்த முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­தவின் தோல்­விக்கு முக்­கி­ய­மான கார­ணி­யாக இருந்­த­வர்கள் தமிழ் பேசும் வாக்­கா­ளர்கள்.

இந்த தமிழ் பேசும் வாக்­கா­ளர்­களில் இலங்கைத் தமி­ழர்கள், மலை­யகத் தமி­ழர்கள், முஸ்­லிம்கள் என்று மூன்று வகை­யினர் உள்­ளனர். இந்த மூன்று தரப்­பி­னரும் ஒன்­றாக மஹிந்­தவை எதிர்த்­தி­ருந்­தனர்.

மஹிந்த தரப்­புக்கு இப்­போது, இந்த மூன்று தரப்­பி­னதும் ஆத­ர­வையும் பெற வேண்­டிய தேவை உள்­ளது.

ஏற்­க­னவே முஸ்­லிம்­களை வளைத்துப் போடும் முயற்­சிகள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. அதற்­காக பொது­ஜன முன்­ன­ணியில் முஸ்லிம் பிரிவு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது, அதற்­கான பேச்­சுக்கள், முஸ்­லிம்­க­ளு­ட­னான நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்தும் சந்­திப்­புகள், நிகழ்­வுகள் நடந்து வரு­கின்­றன.

மலை­யக அர­சி­யலில் இன்­னமும் ஆறு­முகன் தொண்­ட­மானை மஹிந்த அதி­க­ளவில் நம்­பு­கிறார். அண்­மையில் நுவ­ரெ­லி­யாவில் "எலிய" அமைப்­பினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட ஒரு கூட்­டத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ, விபூ­தியும் சந்­தனப் பொட்­டு­மாக, தமி­ழர்­களைக் கவரும் வகையில் தோன்­றி­யி­ருந்தார்.

இது மலை­யக வாக்­கா­ளர்­களை வளைத்துப் போடும் அடுத்த தந்­திரம்.

ஆனாலும், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வளைத்துப் போடு­வது தான் சிக்­க­லான காரி­ய­மாக இருந்து வரு­கி­றது.

கூட்­ட­மைப்பை வளைத்துப் போட்டு, தமிழ் வாக்­கா­ளர்­களின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்த வழி­தெ­ரி­யாமல் மஹிந்த தரப்பு நிற்­கின்ற சூழலில் தான் மஹிந்­த­வையும் சம்­பந்­த­னையும் சந்­திக்க வைத்­தி­ருக்­கி­றது சீனா.

இந்தச் சந்­திப்பில் தாம் ஆட்­சிக்கு வந்த பின்னர், தீர்வு ஒன்றைக் காண, கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கை அபி­வி­ருத்தி செய்ய உதவ வேண்டும் என்றும் மஹிந்த கேட்­டி­ருக்­கிறார்.

ஆனால் சம்­பந்­தனோ புதிய அரசியலமைப்புக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இப்படியான நிலையில் தான், மஹிந்த, தமிழ் மக்களை சரியாக வழிகாட்டி ஒத்துழைக்காவிடின், கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அணிகள் உருவாகும், அப்படியான நிலையில் நீங்கள் தான் கவலைப்பட நேரிடும் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக் ஷவுடன், சம்பந்தனை நெருக்கமாக்குவதற்கும் அவர் முயற்சித்திருக்கிறார் என்று தெரிகிறது.

எப்படியாவது, கூட்டமைப்பை வளைத்துப் போட்டு விட வேண்டும் என்பதில் ராஜபக் ஷவினர் ஆர்வம் கொண்டுள்ளனர். சீனாவுக்கும் அத்தகைய ஆர்வம் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இதில் சம்பந்தன், மஹிந்த, கோத்தா போன்றவர்களுக்கு வெவ்வேறு சிந்தனைகளும் நோக்கங்களும் இருந்தாலும், சீனாவைப் பொறுத்தவரையில் அதைப்பற்றிய கவலைகள் ஏதுமில்லை.

ஏனென்றால், சீனாவுக்கு யார் குற்றினாலும் அரிசியானால் சரி. அதாவது ராஜபக் ஷவினர் ஆட்சிக்கு வந்தால் சரி. அவ்வளவு தான் அதன் எதிர்பார்ப்பு.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-29#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் கையை சுட்டுக்கொண்ட சம்பந்தனுக்கு ரோசம் மானம் சூடு சுரணையே இல்லையா?
குரங்கு கொப்புக்கொப்பாய் அங்கையும் இஞ்சையும் தாவுற மாதிரி........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.