Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்லாந்து சீ ஃபுட் சூப் ( டாம் யாம் தாலே)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள்:


வஞ்சிரம் மீன் – முள்ளில்லாத சதைப்பகுதி ஒரு துண்டு – 50 கிராம்...
இறால் – 15
நண்டுக்கால் – 2
மஷ்ரூம்(காளான்) – 8
பச்சை இஞ்சி – ஒரு துண்டு
லெமன் கிராஸ் – 2
எலுமிச்சை மர இலைகள் -4
எலுமிச்சை பழம் – ஒன்று
சீனி – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பிஷ் சாஸ் – ஒரு டீ ஸ்பூன் (கிடைத்தால் நல்லது. இல்லாவிடில் சுவை பெரிதாக மாறாது)
பச்சை மிளகாய் – 2
தண்ணீர் – 3 கப்

 

செய்முறை:
 

மீன், இறால், நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
லெமன் கிராசை (அடிப்பக்கம்) வெள்ளைப்பகுதியை வெட்டி எடுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
இஞ்சியை மெலிதான துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை பொடி செய்து கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
எலுமிச்சையை சாறு பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு தவிர மற்ற அனைத்தையும் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறை உடனடியாக சேர்க்கவும்.
செய்வது மிக சுலபம். பொருட்கள் அத்தனையும் கிடைத்தால் எளிதாக செய்து விடலாம்.

Image may contain: food
FB
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.