Jump to content

பாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா?


Recommended Posts

பாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா?

 

ஓர் எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் இருந்தன. அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்வதற்கு காரணம் என்ன என்பது அவரது பெற்றோருக்கு புரியவில்லை.

brain

சுமார் ஆறு மாதங்களாக தொடரும் தலைவலிக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

"சிறுமியின் மூளைக்குள் 100க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்களின் முட்டைகள் இருந்தன. அவை சிறு சிறு கட்டிகளைப்போல் காணப்பட்டன," என்று கூறுகிறார் மருத்துவர் பிரவீண் குப்தா.

டெல்லிக்கு அருகில் குருகிராமில் பிரபலமான ஒரு மருத்துவமனையில் நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் பிரவீண் குப்தாவின் கண்காணிப்பில் சிறுமிக்கு சிகிச்சை நடைபெறுகிறது.

"எங்களிடம் வருவதற்கு முன்னரே சிறுமி வேறு பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார். அடிக்கடி ஏற்படும் கடுமையான தலைவலி மற்றும் வலிப்பு நோய்க்காகவும் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்."

டாக்டர் பிரவீண் குப்தாபடத்தின் காப்புரிமைDR PRAVEEN GUPTA Image captionடாக்டர் பிரவீண் குப்தா

மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்காக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதன் பக்கவிளைவாக, எட்டு வயது சிறுமியின் எடை 40 கிலோவில் இருந்து 60 கிலோவாக அதிகரித்துவிட்டது.

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க, பிரச்சனைகளும் அதிகரித்தன. நடப்பதில் பிரச்சனை, மூச்சு விடுவதில் சிக்கல் என வேறு பல பிரச்சனைகளும் உருவானதோடு, முழுமையாக மருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும் உருவானது.

சிகிச்சைக்காக தன்னிடம் அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்த குப்தா, அவர் நியூரோசிஸ்டிசிரோசிஸ் (Neurocysticercosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

"மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது சிறுமி மயக்கநிலையில் இருந்தார். அவரது மூளையில் நூற்றுக்கணக்கான வெண்ணிற புள்ளிகள் இருப்பதை சி.டி ஸ்கேன் காட்டியது. அவை என்ன தெரியுமா? நாடாப்புழுவின் முட்டைகள்."

டாக்டர் குப்தாவிடம் வரும்போது,சிறுமிக்கு ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. நாடாப்புழுக்கள் கொடுத்த அழுத்தம் மூளையை பாதித்து, மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிட்டது.

brainபடத்தின் காப்புரிமைDR PRAVEEN GUPTA

"முதலில் மருந்துகள் கொடுத்து மூளையின் அழுத்தத்தை குறைத்தோம். (மூளைக்குள் வெளிப்புற பொருட்கள் ஏதாவது வந்தால் அது மூளையின் உட்புற சமநிலையை குறைக்கிறது). பின்னர், மூளையில் கட்டிகளைப்போல் இருந்த முட்டைகளை கொல்ல மருந்து கொடுத்தோம். இது நிலைமையை மோசமாக்கும் அபாயமும் இருந்தது. ஏனெனில் இந்த சமயத்தில் மூளைக்கு அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்."

மூளையில் உள்ள நாடாப்புழுவின் முட்டைகளை கொல்லும் மருந்து சிறுமிக்கு கொடுக்கப்பட்டாலும், அவை இன்னும் முற்றிலுமாக அழியவில்லை. அவை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அழியும்.

மூளையில் இந்த முட்டைகளின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கும். இது வலிப்பு வருவதற்கும் முக்கிய காரணமாகிறது என்கிறார் டாக்டர் குப்தா.

மூளைக்குள் முட்டைகள் சென்றது எவ்வாறு?

அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவை உண்பது, அசுத்தம், சுகாதார பராமரிப்பு குறைவு போன்ற பல காரணங்களால் நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கிருந்து ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்கின்றன.

"வலிப்பு நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் நாடாப்புழுக்களும் ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் மனிதர்களின் உடலில் நாடாப்புழுக்கள் இருப்பது இயல்பானது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 12 லட்சம் மக்களுக்கு நியூரோசிஸ்டிசிரோசிஸ் (Neurocysticercosis) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் பிரதானமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாப்புழு என்றால் என்ன?

நாடாப்புழு என்பது ஒரு வகை ஒட்டுண்ணியாகும். ஊட்டச்சத்துக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும் உயிரினமான இது, உணவை கிரகிப்பதற்காக நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது.

நாடாப்புழுபடத்தின் காப்புரிமைDR. PRAVEEN GUPTA Image captionவெள்ளை நிறத்தில் கட்டிகள் போல இருப்பது நாடாப்புழுவின் முட்டைகள்

5000க்கும் அதிகமான வகை நாடாப்புழுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 15 மீட்டர் நீளம் வரை பல்வேறு அளவுகளில் இவை காணப்படுகின்றன.

நாடாப்புழுக்கள் உடலின் உட்புற பாகங்களுக்குள் சென்று ஒட்டிக் கொள்கின்றன. தனது உடலின் புறத்தோல் மூலம் உணவை எடுத்துக்கொள்கிறது. இவை நமது உடலில் உள்ள செரிக்கப்பட்ட உணவுகளையே எடுத்துக் கொள்கின்றன. ஏனெனில் நாடாபுழுக்களுக்கு செரிமாண உறுப்புகளோ செரிமானப் பாதையோ கிடையாது.

கோடு கோடு

நாடாப்புழுக்களின் பரவுவது எப்படி?

நாடாப் புழுக்கள் தட்டையாகவும், பார்ப்பதற்கு ரிப்பனைப் போலவும் இருக்கும். பாக்டீரியாவின் முட்டை உடலில் நுழைந்ததும், குடலை தனது இருப்பிடமாக மாற்றிக் கொள்கிறது. அது எப்போதும் குடலிலேயே இருக்கும் என்று சொல்லமுடியாது, ரத்தத்துடன் இணைந்து பயணித்து உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது.

கல்லீரலுக்குள் சென்று அங்கே கட்டியாக மாறுகிறது, அதில் சீழ் உருவாகிறது. பல நேரங்களில் அவை கண்களுக்கும், மூளைக்கும் சென்றுவிடுகின்றன.

brainபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆசியாவுடன் ஒப்பிடும்போது, நாடாப்புழுக்களின் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் குறைவாகவே உள்ளது. உடலில் நாடாப்புழுக்கள் இருந்தால் அதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவேண்டும் என்ற அவசியமில்லை.

அதேபோல், நாடாப்புழுக்களால் பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளுக்கு அவை சென்றுவிட்டால் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் நாடாப்புழுவின் பாதிப்புக்கு சிகிச்சை செய்வது எளிதானதே. நாடாப்புழுக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அவற்றை அலட்சியம் செய்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் இரைப்பை நோய் மருத்துவர் டாக்டர் நரேஷ் பன்சல்.

அவரது கருத்துப்படி, உலகம் முழுவதிலும் உள்ள மக்களை நாடாப்புழுக்கள் பாதித்தாலும், இது சுகாதாரத்துடன் தொடர்புடையது என்பதால், இந்த தொற்று இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

உடல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாடாப்புழு உருவாவதன் காரணங்கள்

முழுமையாக வேக வைக்கப்படாத உணவு உட்கொள்வதாலும், பன்றி, மாட்டிறைச்சி, மீன் போன்றவற்றை சமைக்காமல் சாப்பிடுவதால் நாடாப்புழு உடலில் உருவாகும். இந்த உணவுகளில் லார்வாக்கள் இருப்பதுதான் காரணம். எனவே உணவு ஒழுங்காக சமைக்கப்படாவிட்டால், உடலில் நாடாப்புழுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

  • அசுத்தமான குடிநீரை பருகுவது
  • முட்டைகோஸ், கீரைகளை சரியாக வேக வைக்காவிட்டால் அவற்றின் மூலமாக நாடாப்புழுக்கள் உடலில் குடியேறும்.
  • எனவே, அசுத்தமான தண்ணீரில் வளரும் காய்களையோ அல்லது மண்ணிற்கு அருகில் முளைக்கும் காய்கறிகளை நன்றாக கழுவி உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கோடு கோடு

நாடாப்புழு தொற்றின் அறிகுறிகள்

பொதுவாக, நாடாப்புழு உடலில் இருப்பதை கண்டறிய துல்லியமான அறிகுறிகள் என்று எதையும் கூறிவிடமுடியாது. ஆனால் குடலில் உணவு செரிமானம் ஆன பிறகு உருவாகும் கழிவுகள் மலமாக வெளியேறும்போது அதில் நாடாப்புழுக்களும் ஓரளவு வெளியேறும். அதிலிருந்து அவற்றின் இருப்பை அறியலாம்.

முட்டை கோஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதைத்தவிர, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பலவீனம், வாந்தி, அடிக்கடி பசி எடுப்பது போன்றவற்றால் நாடாப்புழுக்களின் இருப்பை அறிந்துக் கொள்ளலாம்.

உடலில் உள்ள நாடாப்புழுக்கள், அவற்றின் முட்டைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தால், தலைவலி, தோல் வெளுத்துப்போவது, இருமல், மூச்சுத்திணறல், பார்வைக்கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

மலமாற்று அறுவை சிகிச்சை

நாடாப்புழுக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

நாடாப்புழுக்கள் உடலில் இருப்பது தெரிந்தால், மருந்துகளின் உதவியால் அதனை சரிசெய்யலாம். ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், நாடாப்புழு நம்மை தொற்றாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

  • எந்தவிதமான இறைச்சியாக இருந்தாலும் அதை நன்றாக வேகவைத்து உண்ணவேண்டும்.
  • பழங்களை உண்பதற்கு முன்பதற்கு நன்றாக கழுவவேண்டும்.
  • சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை நன்றாக கழுவவும். கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளையும், நகங்களையும் நன்றாக கழுவவும். நகங்களில் பாக்டீரியாக்கள் தங்கியிருக்கலாம்.
  • சுத்தமான நீரையே குடிக்கவும்
  • கால்நடைகளுடன் நேரடி தொடர்பை தவிர்க்கவும் அல்லது சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

நாடாப்புழுக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்றாலும், அதை அலட்சியம் செய்யக்கூடாது. இது உடலின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம், உடல் உறுப்புகளை முடக்கிவிடலாம் என்று சொல்கிறார் டாக்டர் பன்சல்

https://www.bbc.com/tamil/science-44974114

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.