Jump to content

டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா?


Recommended Posts

டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா?

 

 

SLvSA-ODI-Preview-696x463.jpg
 

விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது.

கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

 

அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஞாயிற்றுக்கிழமை (29) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஒரு நாள் தொடர் பற்றி

நம்பிக்கையான முறையில் துடுப்பாடக்கூடிய அணித்தலைவர், வியூகங்களை கட்டமைத்துக் கொடுக்கும் பயிற்றுவிப்பாளர், அணி முகாமையாளர் யாருமின்றி தென்னாபிரிக்க அணியை இளம் வீரர்களுடன் 2-0 என வைட் வொஷ் செய்த இலங்கை அணியின் திறமை இன்னுமொரு தடவை இந்த ஒரு நாள் தொடர் மூலம் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்திருந்த போதிலும், அப்போது விட்ட தவறுகளை திருத்தி மீண்டும் தமது வழமையான ஆட்டத்திற்கு மீள முயற்சிக்கும் இலங்கை அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவுகளுடனும் காணப்படுகின்றது.

அடுத்த உலகக்கிண்ணத்தில் எப்படியான இக்கட்டான நிலைமைகள் உருவாகினாலும் அவற்றை சமாளித்து அணியை மீட்கும் திறமை கொண்ட வீரர்களை தமக்கென எதிர்பார்க்கும் இலங்கை அணி, புதிய வீரர்கள் சிலருக்கு தென்னாபிரிக்க ஒரு நாள் தொடரில் வாய்ப்புத் தந்திருக்கின்றது.

இதேநேரம், ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள இலங்கை வீரர்கள் தமது நிலையை முன்னேற்றிக் கொள்ளவும், இந்த ஒரு நாள் தொடரில் முயற்சி செய்யவுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக கடைசியாக  2015 ஆம் ஆண்டிலேயே, ஒரு நாள் தொடர் ஒன்றை தமது சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றிய இலங்கை அணி அதன் பின்னர் அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஒரு நாள் தொடர்களில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக கூட இலங்கையில் வைத்து ஒரு நாள் தொடர்களை கைப்பற்ற தவறியிருந்தது.  ஆனால், இலங்கை அணி தற்போது சில மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் காரணத்தினால் சொந்த மண்ணில் இலங்கை அணியின் இப்படியான நிலை தென்னாபிரிக்க தொடரில் மாறும் என எதிர்பார்க்க முடியும்.

மறுமுனையில், ஐ.சி.சி. ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படும் அணியே, இந்த ஒரு நாள் தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டில் இறுதியாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்கா அப்போது இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்ததுடன், கடந்த ஆண்டு தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரிலும் இலங்கை அணியை 5-0 என வைட் வொஷ் செய்திருந்தது.

எனினும், நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் தென்னாபிரிக்க அணி மிகவும் தடுமாற்றம் காட்டியிருந்தது. இது நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கம் இருக்கும் எனக்கூறப்படும் செய்தியை பொய்யாக்கி விடுமோ என எண்ணத் தோன்றுகின்றது.

  • இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் போட்டித்தடையின் காரணமாக தினேஷ் சந்திமாலுக்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டித்தடை காரணமாக தனுஷ்க குணத்திலக்கவுக்கும் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில்  விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், திறமையாக ஆடக்கூடிய இரண்டு துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணி இந்த ஒரு நாள் தொடரில் இழக்கின்றது.

இதேநேரம், அடுத்த உலகக் கிண்ணத்திற்கு சரியான வீரர்களை இனம் காண பல இளம் வீரர்கள் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் அடக்கப்பட்டிருக்கின்றனர்.

 

 

 

நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் இத்தொடரின் மூலம், மீண்டும் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவராக பொறுப்பெடுத்துக் கொள்கின்றார். இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு ஆளாகிய மெதிவ்ஸ் அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் எதிலும் இலங்கை அணிக்காக விளையாடியிருக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் 5,000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருக்கும் மெதிவ்ஸின் அனுபவம் இலங்கை அணிக்கு, துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கும் விடயம் ஒன்றாகும்.

Angelo-Mathews-5-300x199.jpgமெதிவ்ஸ் போன்று அனுபவமிக்க மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவையும் இலங்கை அணி கொண்டிருக்கின்றது. இத்தொடரில் இருக்கின்ற இலங்கை வீரர்களில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்திருக்கும் தரங்க, தென்னாபிரிக்க அணிக்கெதிராக இதுவரையில் ஒரு சதம், மூன்று அரைச்சதங்கள் என்பவற்றினையும் விளாசியிருக்கின்றார்.

Upul-Tharanga-5-200x300.jpgதரங்க, மெதிவ்ஸ் ஆகியோரோடு இலங்கை அணி குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல ஆகியோருடன் இன்னும் பலம் பெறுகின்றது. இதேவேளை தனஞ்சய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம்  வழங்கப்பட்டிருக்கின்றது.

திசர பெரேரா, தசுன் சானக்க ஆகியோர் இலங்கை அணிக்கு இத்தொடரில் சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாக காணப்படுகின்றனர். இதில், தசுன் சானக்க உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் ஒரு நாள் அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

Dasun-Shanaka-3-300x200.jpgதென்னாபிரிக்க அணி சுழலுக்கு தடுமாறும் ஒரு அணி, என்பதால் மூன்று முழு நேர சுழல் பந்துவீச்சாளர்கள் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அகில தனஞ்சய பிரதானமானவராக இருப்பதோடு லக்ஷான் சந்தகன், ப்ரபாத் ஜயசூரிய ஆகியோர் அகில துணையாக அணியின் சுழல் துறையை முன்னெடுக்கவுள்ளனர். அறிமுக வீரரான ப்ரபாத் ஜயசூரிய லிஸ்ட் A என அழைக்கப்படும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகள் 25 இல் விளையாடி, 36 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Prabath-2-300x200.jpgஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுதுறையை எடுத்து நோக்கும் போது, சுரங்க லக்மால் முதன்மையானவராக இருக்கும் நிலையில் லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் லக்மாலுடன் அணியின் வேகப்பந்துவீச்சு துறைக்கு பலம் சேர்க்கவுள்ளனர்.

Lahiru-Kumara-1-300x200.jpgதென்னாபிரிக்க அணிக்கெதிராகவே ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகிய லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகிய இருவரும் அண்மைய மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டதே அவர்களை ஒரு நாள் அணியில் இணைக்க காரணமாக இருக்கின்றது.  

இலங்கை குழாம் 

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தசுன் சானக்க, குசல் ஜனித பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய


  • தென்னாபிரிக்க அணி

ஏ.பி.டி. வில்லியர்ஸ் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகிய சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் தென்னாபிரிக்க அணி விளையாடுகின்ற முதலாவது ஒரு நாள் தொடராக, இலங்கை அணியுடனான போட்டிகள் அமைகின்றன.

 

 

எனினும், வெள்ளைப் பந்து பயன்படுகின்ற இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி மிகவும் திறமை வாய்ந்த குழாம் ஒன்றினையே களமிறக்கவுள்ளது. ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களையும், ஒரு பந்துவீச்சாளரையும் அவ்வணி கொண்டிருக்கின்றது.

Faf-Du-Plesis-1-300x200.jpgஇதன்படி, முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பாப் டு ப்ளேசிஸ் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறைக்கு மிகவும் பலம் சேர்க்க கூடிய ஒருவராக இருக்கின்றார். பாப் டு ப்ளேசிஸ் உடன் சேர்த்து ஒரு நாள் போட்டிகளில் 50 இற்கு மேலான துடுப்பாட்ட சராசரியை வைத்திருக்கும் ஹஷிம் அம்லா இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (353) குவித்த தென்னாபிரிக்க அணி வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அம்லாவுடன் தென்னாபிரிக்க அணி இன்னும் பலம் பெறுகின்றது.

Hashim-Amla2-300x199.jpgஇதேநேரம், ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குயின்டன் டி கொக், இலங்கை அணிக்கெதிராக இதுவரையில் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 538 ஓட்டங்களை சேர்த்திருக்கின்றார். இந்தப் பதிவுகள் அவர் இலங்கை அணியுடனான கடந்த காலப் போட்டிகளில் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தார் என்பதைக் காட்டுகின்றது.

Quinton-de-Kock-1-200x300.jpgஅத்துடன் டேவிட் மில்லர், ஜே.பி. டுமினி, எய்டன் மார்க்ரம் போன்றவர்கள் தென்னாபிரிக்க அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலிக்க கூடிய ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர்.

அவ்வணியின் பந்துவீச்சை எடுத்து நோக்கும் போது, அது அதி திறமையான சுழல் வீரர்களையும், உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் அடக்கியிருக்கின்றது. இதில் சுழல் பந்துவீச்சுத்துறையை பார்த்தால் இலங்கை அணிக்கு டெஸ்ட் தொடரில் நெருக்கடி தந்த கேசவ் மஹராஜை தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடரில் அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் தப்ரைஸ் சம்சி அவ்வணியின் நம்பிக்கை தரக்கூடிய சுழல் வீரராக உள்ளார். இன்னும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக செயற்படும் ஜே.பி. டுமினியின் சேவையும் இத்தொடரில் தென்னாபிரிக்காவுக்கு கிடைக்கின்றது.

Maharaj-1-300x200.jpgதென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ககிஸோ றபாடா, அன்டைல் பெஹ்லுக்வேயோ, லுங்கி ன்கிடி ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். இவர்களில் ஐ.சி.சி. ஒரு நாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் காணப்படும் ககிஸோ றபாடா இலங்கை அணிக்கு அழுத்தம் தரக்கூடிய பந்துவீச்சாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகின்றார்.

Rabada-1-300x200.jpgதென்னாபிரிக்க அணி அண்மைக்காலமாக உள்ளூர் T20 போட்டிகளில் சிறந்த முறையில் செயற்பட்டுவரும் வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் டல இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் அறிமுகம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

தென்னாபிரிக்க அணி 

பாப் டு ப்ளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டல, குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி, ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளஸ்ஸன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வில்லியம் முல்டர், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வெயோ, ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி

ஆடுகளங்கள் பற்றி

இந்த ஒரு நாள் தொடரின் போட்டிகள் யாவும் தம்புள்ளை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. மூன்று இடங்களிலும் உள்ள ஆடுகளங்கள் பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக சுழல் வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுனர்களினால் எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.

ஒரு நாள் தொடர் அட்டவணை

  • ஜுலை 29 – முதல் ஒரு நாள் போட்டி – ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை (பகல் போட்டி)
  • ஆகஸ்ட் 1 – இரண்டாவது ஒரு நாள் போட்டி – ரங்கிரி தம்புள்ளை மைதானம், தம்புள்ளை (பகலிரவுப் போட்டி)
  • ஆகஸ்ட் 5 – மூன்றாவது ஒரு நாள் போட்டி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி (பகல் போட்டி)
  • ஆகஸ்ட் 8 – நான்காவது ஒரு நாள் போட்டி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி (பகலிரவுப் போட்டி)
  • ஆகஸ்ட் 12 – ஐந்தாவது ஒரு நாள் போட்டி – ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு (பகலிரவுப் போட்டி)

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

முதலாவது ஒருநாள் போட்டி இன்று ; முதலாவது துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

 

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி நாண சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

south.jpg

அதன்­படி இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது போட்டி தம்­புள்ளை மைதா­னத்தில் இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி மூன்­று­ வகைக் கிரிக்கெட் போட்­டிகளிலும் இலங்­கை­யுடன் மோது­கின்­றது.

அந்­த­வ­கையில் முத­லா­வ­தாக நடை­பெற்ற இரு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழு­மை­யாக வென்று அசத்­தி­யது.

அதனைத் தொடர்ந்து 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

அடி­பட்ட சிங்­க­மாக ஒருநாள் தொட­ருக்கு வரு­கி­றது தென்­னா­பி­ரிக்க அணி. அதனால் தங்­க­ளு­டைய முழு பலத்­தையும் ஒருநாள் தொடரில் இறக்­கு­வார்கள் என்­பது திண்ணம்.

அதேபோல் டெஸ்ட் தொடரில் தென்­னா­பி­ரிக்­காவை வீழ்த்­திய வெற்றி வேட்­கையில் இருப்­பதால் இலங்­கையும் ஒருநாள் தொடரில் மேலும் நம்­பிக்­கை­யுடன் கள­மி­றங்கும்.

டெஸ்ட் தொடரில் சோபிக்­காத தென்­னா­பி­ரிக்­காவின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளான ரபடா மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் ஒருநாள் தொடரில் தங்­களை நிரூ­பித்துக் காட்­ட­வேண்­டிய கட்­டா­யத்தில் இருப்­பதால் இலங்கை அணிக்கு நெருக்­கடி கொடுப்­பார்கள்.

அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணியைப் பார்க்­கையில் சம­பலம் பொருந்­திய அணி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆனாலும் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான தனுஷ்க குண­தி­லக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தடை­பெற்­றி­ருப்­பதால் அவரும் அணியில் இல்லை. அதேபோல் உபுல் தரங்­கவும் அணி 

யில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆனாலும் குசல் ஜனித் பெரேரா அணிக்கு திரும்­பி­யி­ருப்­பது பலமே. அத்­தோடு அணியில் புதி­தாக பந்­து­வீச்­சா­ள­ரான பிரபாத் ஜய­சூ­ரிய இணைக்­கப்­பட்­டுள்ளார்.

தென்­னா­பி­ரிக்க அணியைப் பொறுத்­த­வ­ரையில் டெஸ்ட் தொடரில் ஆடிய பலரும் ஒருநாள் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர்.

டிவில்­லியர்ஸ் திடீ­ரென ஓய்வை அறி­வித்­ததால் தற்­போது தென்­னா­பி­ரிக்க அணி திணறி வரு­வ­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. ஆனாலும் ஒற்றை வீரரை நம்பி அணி இல்லை என்­பதை நிரூ­பிக்க வேண்­டிய கட்­டா­யத்தில் தென்­னா­பி­ரிக்கா இத் தொடரில் களமிறங்க வேண்டி உள்ளது.

சமபலம் பொருந்திய இரு அணிகளும் இன்று வெற்றி வேட்கையுடன் களமிறங்குவதால் டெஸ்ட் தொடரைப் போல ஒருநாள் தொடரும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/37451

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொடரில் மண் கவ்விக் கொண்டிருக்கிறது.

SL 36/4 * (8.4/50 ov)

36/5 * (8.5/50 ov

Link to comment
Share on other sites

193 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை ; வெற்றியிலக்கு 194

 

 
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 194 ஓட்டங்களை நிர்ணயித்து உள்ளது. 

cricket.jpg

அந்த வகையில் இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஆரம்பமான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் பிரகாரம் களமிறங்கிய இலங்கை அணியினர் தென்னாபிரிக்க அணியின் பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்களை சேகரிப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை வாரி வழங்கினர். முதலாவது களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஜோடி முதலாவது ஓவரின் மூன்று பந்துகளை எதிர்கொண்டபோதே பிரிவடைந்தது.

இதற்கிணங்க நிரோஷன் திக்வெல்ல மூன்று பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 2 ஓட்டங்களுடன் ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து துடுப்பெடுத்தாட களம்புகுந்த குசல் மெண்டீஸ் ரபடாவின் இரண்டாவது ஓவரில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தபடியாக உபுல் தரங்க 10 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையிலும் இவரையடுத்து அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 8 பந்துகளை எதிர்கொண்டு 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

10 ஓவர்கள் நிறைவடையும் போது இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் பிறகு இணைந்த குசல், திஸர ஜோடி தென்னாபிரிக்க அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தது. 

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய குசல் மற்றும் திஸர ஜோடி 13.2 ஓவர்கள் இருக்கும்போது இருவருமாக இணைந்து 28 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 15.2 ஓவர்கள் இருக்கும் போது இலங்கை அணி 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனது.

cri.jpg

இதன் பின்னர் அதிரடியாக ஆட்டம் காட்டிய திஸர பெரேரா 30 பந்துகளுக்கு எட்டு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 49 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சம்ஸியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரோ மற்றும் திஸர பெரேரா ஆகியோர் இணைந்து இலங்கை அணிக்காக 55 பந்துகளை எதிர்கொண்டு 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். 

இதன் பின்னர் குசலுடன் ஜோடி சேர்ந்தார் அகில தனஞ்சய 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆரம்பத்தில் 100 ஓட்டங்களை இலங்கை  அணி தாண்டுமா? என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் இருந்தது இருப்பினும் இந்த கேள்வியை இரசிகர்கள் மனதிலிருந்து தனது துடுப்பாட்டம் மூலமாக அழித்தார் குசல் இறுதியாக 30.3 ஓவரில் 72 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்களாக  81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது குசல் பெரேரா சம்சியுடைய பந்தில் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

cric1.jpg

இதனையடுத்து இலங்கை அணி அடுத்துடுத்து விக்கெட்டுக்களை இழக்க இறுதியாக 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 194 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் ரபடா 41 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் சம்சி 33 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் லுங்கி நிட்ஜி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

http://www.virakesari.lk/article/37460

Link to comment
Share on other sites

அசத்தலாக ஆட்டம் காட்டியது தென்னாபிரிக்கா

 

 
 

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றியீட்டி தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

01.jpg

அந்த வகையில் இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஆரம்பமான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி இலங்கை அணி 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 81 ஓட்டங்களையும் திஸர பெரேரா 49 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

இந் நிலையில் 194 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாபிரிக்க அணி. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய அஸிம் அம்லா மற்றும் டீகொக் ஜோடியினர் தென்னாபிரிக்க அணிக்காக 31 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது.

இதன் பின்னர் 4.3 ஓவருக்கு அகில தனஞ்சயவின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அஸிம் அம்லா பொல்ட் முறையில் ஆட்டமிழக்க இவரையடுத்து களமிறங்கிய அடீன் மர்க்ரம் வந்த வேகத்திலேயே அகில தனஞ்சயவின் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2.jpg

இதனையடுத்து டீகொக்குடன் கைகோர்த்து அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி பொறுமையாக ஆட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்த இருவரும் 20 ஆவது ஓவர்கள் நிறைவின் போது அணியின் ஓட்டத்தை 112 ஆக உயர்த்தினர். 

அதன் பின்னர் அகில தனஞ்சய வீசிய 20.3 ஓவரில் டீகொக் 59 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சுரங்க லக்மாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

south.jpg

இதனையடுத்து 23.1 ஓவரில் தென்னாபிரிக்க அணி 129 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 56 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களுடன் சந்தகனின் பந்து வீச்சில் மெத்தியூஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் களம்புகுந்த டேவிட் மில்லிர் 27.2 ஓவரில் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோது எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். 

இறுதியாக தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை இலகுவாக கடந்தது. போட்டியில் டுமினி 32 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களையும் வில்லிம் முல்டர் 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய 50 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன் 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் சுரங்க லக்மால் 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணி சார்பாக 33 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய சம்ஸி தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ் இரு அணிகளுக்குமான இரண்டாவது ஒருநாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக ( 2:30 பி.ப) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

http://www.virakesari.lk/article/37469

Link to comment
Share on other sites

இலங்கை, தென்னாபிரிக்கா ODI தொடர்
 
 

- ச. விமல் 

image_922d9c3e1a.jpg

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் மிக அபாரமான வெற்றியைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி அதே உத்வேகத்துடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரிலும் விளையாடினால் தென்னாபிரிக்கா அணியினை வெற்றி பெற முடியும். ஆனால் டெஸ்ட் அணி வேறு. ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணி வேறு. இரண்டையும் வேறு வேறாகவே பார்க்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இத்தொடரில் இலங்கை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வீரர்கள் ஒழுக்கமாக இல்லாததன் விளைவே இந்த மாற்றங்கள். தினேஷ் சந்திமால் சர்வதேசக் கிரிக்கெட் சபையால் தடை செய்யப்பட்டுள்ளார். தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட்ட சபையால் தடை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இல்லாதது இலங்கை அணிக்கு பின்னடைவே. தனுஷ்க, சந்திமால் அணியில் நிச்சயம் இல்லை என்ற நிலையில் உபுல் தரங்கவுடன் குஷல் பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப இடத்தில் துடுப்பாடும் நிலை காணபப்டுகிறது. மத்தியூஸ் மீண்டும் அணிக்குள் வந்துள்ளமையினால் டினேஷ் சந்திமாலின் இடம் பூர்த்தி செய்யப்படும். ஆகவே இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை என்பது ஓரளவு பலமாகவே காணப்படுகிறது. ஆனால் பந்துவீச்சு பலமில்லை. சுரங்க லக்மால் வேகப்பந்துவீச்சில் பலமாக காணப்படுகிறார். அதேவேளை திசர பெரேரா சிறப்பாக பந்துவீசி வருகிறார். அடுத்த வேகப்பந்துவீச்சாளர் யார் என்பதுதான் கேள்வி. லஹிரு குமார அல்லது கஸூன் ராஜித்த இருவரில் ஒருவர் வாய்ப்பை பெறுவார்கள்.

அகில தனஞ்சய மற்றும் லக்ஷன் சந்தகான் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக விளையாடுவார்கள். மேலதிக பந்துவீச்சாளர் ஒருவர் தேவைப்பட்டால் இலங்கை அணியின் நிலை சிக்கலாகவே காணபப்டும். பகுதி நேரப்பந்துவீச்சாளர்களாக சரியான ஒருவர் இல்லை. இலங்கை அணி பெரிய வெற்றிகளை பெற்ற போதெல்லாம், சனத் ஜெயசூரியா, திலகரட்ன டில்ஷான், அரவிந்த டி சில்வா போன்றவர்கள் பெரியளவில் கை கொடுத்துளார்கள். ஆனால் இலங்கை அணியில் அவ்வாறானவர்கள் இப்போது இல்லை. இருந்தாலும் அவர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற நிலையும் காணப்படுகிறது. இலங்கை அணியில் ஷெஹான் ஜெயசூரிய, பிரபாத் ஜெயசூரியா ஆகிய சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் விளையாடும் வாய்ப்புகள் குறைவு. ஆறாவது பந்துவீச்சாளர் தேவை என்ற நிலையை கருதினால் குசல் பெரேரா அணியில் இருந்து நீக்கப்பட்டு தசுன் ஷானக அணியில் சேர்க்கபப்டும் வாய்ப்புகளும் உள்ளன.

இலங்கை அணியின் வீரர்கள் பலமாக உள்ளனரா இல்லையா என்பதனை கூறுவது கடினமான விடயம். அஞ்சலோ மத்தியூஸ் உபாதையில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இத்தொடரிலும் முழுமையாக விளையாடுவாரா இல்லையா என்தைக் கூற முடியாது. அவர் இல்லாமல் போனால் யார் அடுத்த அணியின் தலைவர்? ஆரப்ப ஜோடி மீண்டும் ஒரு புதிய ஜோடியாக களமிறங்கப்போகிறது. உபுல் தரங்க நம்பகரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர். நிரோஷன் டிக்வெல்ல நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடிய வேளையில் அவர் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவர் அந்த இடத்தை பெற்றறால் சிறப்பாக துடுப்பாட்ட முடியுமா? அல்லது குசல் பெரேரா ஆரம்ப இடத்தை பிடிப்பாரா? இலங்கை அணியின் சிறந்த எதிர்கால வீரராக போற்றப்படும் குசல் மென்டிஸ் இறுதி ஒரு வருட காலத்தில் சரியாக பிரகாசிக்கவில்லை. அவர் இந்த தொடரில் நல்ல முறையில் துடுப்பாடுவாரா? டெஸ்ட் போட்டிகளில் கூறும்படியாக நல்ல முறையில் துடுப்பாடவில்லை. தனஞ்சய டி சில்வா  அணியில் உள்ளார். இவரை அணிக்குள் கொண்டுவந்தால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளருக்கான வாய்ப்புகள் உள்ளன. அது இலங்கை அணிக்கு பலத்தினை வழங்கும்.  யாரை அணியால் நிறுத்துவது? குசல் பெரேரா தான் அங்கேயும் வாயுப்புள்ளவராக காணப்படுகிறார். திசர பெரேரா மீது நம்பிக்கை வைக்கக் கூடியதாகவுள்ளது. பந்துவீச்சாளர்களையும் நம்பலாம். ஆனால் இந்த பலமான தென்னாபிரிக்கா அணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் பெரிய கேள்வி. இலங்கை அணியினை பொறுத்தளவில் இந்த தொடர் பெரிய ஒரு சோதனை. வெற்றியும் பெறலாம். தோல்வியையும் பெறலாம். சுழற்பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

இலங்கை அணி விபரம்

அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், திஸர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க  லக்மால்,  லஹிரு குமார,  கசுன் ராஜித்த, அகில தனஞ்செய, பிரபாத் ஜெயசூரிய, லக்சான் சந்தகான் , ஷெஹான்  ஜெயசூரிய

நான்கு வருடங்களின் பின்னர் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியில் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-1 என தொடரை வெற்றி பெற்றது. அந்த தொடரில் விளையாடிய நான்கு வீரர்கள் மாத்திரமே இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். புதிய வீரர்கள் அணியில் உள்ளார்கள் என்பது இலங்கை அணிக்கு பலமாக அமையும். ஹஷிம் அம்லா, டேவிட் மில்லர், குயின்டன் டி கொக், ஜெ.பி டுமினி ஆகியோரே அந்த நால்வர். தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோல்விடைந்தமையினை வைத்து இந்த தொடரில் அவ்வாறு கணக்கிட முடியாது. பலமான அதிரடியான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளார்கள். ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக் இருவரும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த ஆரம்ப ஜோடியாக கருதக் கூடியவர்கள். இருவருமே போர்மில் இல்லை என்பதுதான் தென்னாபிரிக்கா அணிக்கு தலையிடியைக் கொடுக்கும் விடயம். பப் டு பிளெஸி மூன்றாமிடத்தில் பலமான வீரர். நான்காமிடத்தில் ஏய்டன் மார்க்கம் கூறும் படியாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் ஒரு சதத்தைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பிரகாசிக்கவில்லை. இலங்கையின் ஆடுகளங்களை இவரால் கணிப்பிட முடியவில்லை. அடுத்த இடத்தில் டுமினி. இவர் சிறப்பாக துடுப்பாடும் வாய்ப்புகள் உள்ள அதேவேளை, இவரின் சுழற்பந்துவீச்சு தென்னாபிரிக்கா அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். டேவிட் மில்லரின் அதிரடியான துடுப்பாட்டம் ஆடுகளம், சுழற்பந்துவீச்சு இப்படியான கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது. அடிக்க ஆரம்பித்து விட்டால் அதன் பின்னர் நிறுத்துவது கடினம்தான்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் அனுபவமுள்ளவர்கள் இல்லை. இலங்கை ஆடுகளங்களில் அவர்களின் முக்கியமான ஐந்து பந்துவீச்சாளர்களும். முதல் முறையாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசப்போகிறவர்களே. கஜிஸோ றபாடா, அன்டிலி பெக்லுவாயோ, லுங்கி என்கிடி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள். டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேஷவ் மஹராஜ், தப்ரையாஸ் ஷம்சொ ஆகிய சுழற் பந்து வீச்சாளர்கள் இருவரும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவுள்ளார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக பந்துவீசியுள்ளமையால்ல், ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இவர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையும் என நம்பலாம். ஐந்து போட்டிகள் என்ற காரணத்தினால் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் அணியில் உள்ள புதிய வீரர்களும் விளையாடும் வாய்ப்புகள் உள்ளன. மேலதிக விக்கெட் காப்பாளர், ஆரம்ப துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், பந்துவீச்சாளர் என நால்வர் அணியில் மேலதிக வீரர்களாக உள்ளார்கள். எனவே போர்மில் இல்லாத வீரர்கள் அல்லது சரியாக பிரகாசிக்க தவறும் வீரர்கள் அணியால் நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

 

தென்னாபிரிக்கா அணி

பப் டு பிளேஸிஸ் (தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டலா, குயின்டன் டி கொக், ஜெ.பி டுமினி, றீஸா ஹென்ரிக்ஸ், ஹென்றிச் க்ளாஸன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்கம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்டிலி பெக்லுவாயோ, கஜிஸோ ரபாடா, தப்ரையாஸ் ஷம்சி

 

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இதுவரையில் 66 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தென்னாபிரிக்கா அணி 35 போட்டிகளிலும், இலங்கை அணி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தலா ஒவ்வொரு போட்டி கைவிடப்பட்டும் சமநிலையிலும் முடிவடைந்தும் உள்ளன.  நிறைவடைந்துள்ளன. இரண்டு அணிகளும் 1992 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் முதற் தடவையாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதினர்கள். கடந்தாண்டு சர்வதேசக் கிரிக்கெட் சபையின் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் இறுதியாக விளையாடியுள்ளார்கள். 1993 ஆம் ஆண்டு இலங்கைக்கு தென்னாபிரிக்கா அணி வருகை தந்ததன் மூலம் இரண்டு அணிகளுக்குமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் ஆரம்பமானது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் வைத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோசமான முடிவுகளையே பெற்றுள்ளது. 19 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளும் மட்டும் பங்குபற்றிய தொடர்கள் நான்கு நடைபெற்றுள்ளன. முதற் தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களையும் இலங்கை அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இறுதியாக நடைபெற்ற தொடரில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு அணிகளை பொறுத்தளவிலும் இந்த தொடர் ஒரு சோதனையான தொடர். வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில் காணப்படுகிறார்கள். எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையட முனைவார்கள். தம்புள்ள, பல்லேகல, கொழும்பு என மூன்று இடங்களிலும் போட்டிகள் நடைபெறுவதனால் தென்னாபிரிக்கா அணி வேறு வேறு மைதானங்களில் விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு பழக்கமான மைதானங்கள் இவை. எனவே போட்டிகள் இலங்கை அணிக்கு சாதக தன்மையை வழங்கும் என நம்பலாம். தொடர் வெற்றி என்பது இலங்கை அணிக்கு பலமாக அமையும். அதேவேளை நம்பிக்கையினையும் ஏற்படுத்தும். கடுமையாக இலங்கை அணி வீரர்கள் போராடினால் தொடர் வெற்றியினை நோக்கி செல்ல முடியும்.

 

போட்டி விபரம்

29/7 - 10:00 am - தம்புள்ள

1/8 - 02:30 pm - தம்புள்ள (பகலிரவு)

5/8 - 09:45 am - கண்டி

8/8 - 02:30 pm - கண்டி (பகலிரவு)

12/8 - 02:30 Pm - கொழும்பு (பகலிரவு)

http://www.tamilmirror.lk/sports-articles/இலங்கை-தென்னாபிரிக்கா-ODI-தொடர்/139-219623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் டுமினியின் ஆட்டம் ஒரு பத்துநிமிடம் வரை பார்த்தேன், அகில தனஞசயவின் பந்தை கணிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார் , ஒரு பிடி ஒன்றையும் வழங்கினார் அதனை மத்தியுஸ் தவறவிட்டார் அதன் பின் மட்டையை நேராகவைத்து ஆடுவதற்கு பந்தை சரியாக கணிக்க வேண்டும் என்பதற்காக சுவீப் செய்தார் அதுவும் சுழ்லுக்கு எதிராகவும் கூட, இறுதி வரை மிட் விக்கட் பகுதியில் ஒரு களத்தடுப்பாளரை நிறுத்தவில்லை ,நேற்றைய ஆட்டம் மத்தியுஸின் 100 வது அணித்தலமை ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி அனுபவம் மிக்க அணித்தலைவர் ஏன் மிட் விக்கட் பகுதியில் ஒரு களத்தடுப்பாளரைநிறுத்தவில்லை நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருந்த்திருக்கலாம் யாராவது தெரிந்த்தவர்கள் சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

Vasee, முதலில் இந்த போட்டியை நான் பார்க்கவில்லை. ஆனால் இடைக்கிடை app இல் ஸ்கோர் பார்த்தேன்.

நேற்று நீங்கள் இங்கு எழுதிய பிறகுதான் டுமினி துடுப்பெடுத்தாட வந்த பின் என்ன நடந்தது என்று commentry வாசித்தேன். மத்தியுஸ் பிடி ஒன்றை தவற விட்டார் என்று இல்லை. சரி அதை விடுவம்.

ஆனால் மிட் விக்கெட் பகுதியால் அதிகமான ஓட்டங்களை சேகரித்து இருக்கிறார் டுமினி.

உங்கள் கேள்விக்கான பதில் நான் நினைக்கிறேன். களத்தடுப்பு கட்டுப்பாடுகளாக இருக்கலாம். (சிலவேளை பிழையாகவும் இருக்கலாம்) 

டுமினி துடுப்பெடுத்தாட வந்தது 20.5 ஓவரில்.

அந்த நேரம் Power play இல்லை. 11 இல் இருந்து 40 ஓவர்வரை 4 களதடுப்பாளர்களை 30 யார் வட்டத்துக்கு வெளியே நிறுத்தமுடியும். (Between overs 11 and 40 a maximum of 4 fielders are allowed outside the 30-yard circle)

வேறு ஏதாவது காரணம் இருக்குமோ தெரியாது. அணித்தலைவர் என்ற ரீதியில் மத்தியுஸ் இன் முடிவு எங்கு களதடுப்பாளரை நிறுத்துவது என்பது... அதே நேரம் பந்து வீசுவரும் மத்தியுஸ் இன் சம்மதத்தோடு முடிவு செய்வார். இவர்கள் இருவருக்குமே வெளிச்சம் ஏன் மிட்விக்கெட்டில் களத்தடுப்பாளரைநிறுத்தவில்லை என்பது.

 

18 hours ago, vasee said:

தென்னாபிரிக்காவின் டுமினியின் ஆட்டம் ஒரு பத்துநிமிடம் வரை பார்த்தேன், அகில தனஞசயவின் பந்தை கணிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார் , ஒரு பிடி ஒன்றையும் வழங்கினார் அதனை மத்தியுஸ் தவறவிட்டார் அதன் பின் மட்டையை நேராகவைத்து ஆடுவதற்கு பந்தை சரியாக கணிக்க வேண்டும் என்பதற்காக சுவீப் செய்தார் அதுவும் சுழ்லுக்கு எதிராகவும் கூட, இறுதி வரை மிட் விக்கட் பகுதியில் ஒரு களத்தடுப்பாளரை நிறுத்தவில்லை ,நேற்றைய ஆட்டம் மத்தியுஸின் 100 வது அணித்தலமை ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி அனுபவம் மிக்க அணித்தலைவர் ஏன் மிட் விக்கட் பகுதியில் ஒரு களத்தடுப்பாளரைநிறுத்தவில்லை நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருந்த்திருக்கலாம் யாராவது தெரிந்த்தவர்கள் சொல்ல முடியுமா?

 

Link to comment
Share on other sites

தம்புள்ள தென்னாபிரிக்க போன்று காணப்பட்டது- சம்சி

 

 

இலங்கையின் தம்புள்ள மைதானத்தில் விளையாடும்போது நான் தென்னாபிரிக்காவில் விளையாடுவது போன்று உணர்ந்தேன் என அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்பிரைஸ் சம்சி தெரிவித்துள்ளார்.

தம்புள்ள ஆடுகளம் தென்னாபிரிக்க ஆடுகளம் போன்று காணப்பட்டது,நாங்கள் முதலில் பந்துவீசியதால் பந்து அதிகம் சுழலவில்லை ஆனால் இவ்வாறான ஆடுகளங்களில் ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாங்கள் விளையாடியுள்ளதால் நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் மிகச்சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பணியை இலகுவாக்கினர் என குறிப்பிட்டுள்ள சம்சி 35 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்திருந்த  இலங்கை 190 ஓட்டங்களை பெற்றதையும் பாராட்டியுள்ளார்.

south_africa_2_jpg.jpg

 

எங்கள் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் எனக்கு என்னை வெளிப்படுத்துவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளனர் எனவும் தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/37550

Link to comment
Share on other sites

இரண்டாவது போட்டி நாளை; பதிலடி கொடுக்குமா இலங்கை?

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை பகலிரவு ஆட்டமாக (2.30) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

dambulla.jpg

நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரை 2:0 என்ற கணக்கில் இலங்கையிடம் இழந்த தென்னாபிரிக்க ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற மோகத்துடனும் பழி உணர்வுடனும் ஒரு நாள் தொடரை ஆரம்பித்தது. 

இதன் பிரகாரம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டுமினி, டிகொக் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆகியோரின் அசத்தலான துடுப்பாட்டத்தின் மூலமாகவும் ரபடா மற்றும் சம்ஸி ஆகியோரின் நுணுக்கமான பந்து வீச்சின் காரணமாகவும் இலங்கை அணியை தம்புள்ளை மைதானத்தில் மண்டியிட வைத்து, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா? அல்லது அடுத்த போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் அடி பணியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மெத்தியூஸின் தலைமையில் நாளை களமிறங்கும் இலங்கை அணியில், அகில தனஞ்சய, தனஞ்சிய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, செஹன் ஜெயசூரிய, பிரபாத் ஜெயசூரிய, லஹிரு குமார, சுரங்க லக்மால், குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, திஸர பெரேர, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகன், சானக மற்றும் உபுல் தரங்க ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

டூப்பிளஸ்ஸி தலைமையில் களமிறங்கும் தென்னாபிரிக்க அணி சார்பாக, ஹஸிம் அம்லா, ஜூனியர் தலா, டீகொக், ஜே.பி.டூமினி, ஹேண்டிரிக்ஸ், கிளேஸின், மஹாராஜ், மர்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி நிங்கிடி, ரபடா மற்றும் சம்ஸி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/37554

Link to comment
Share on other sites

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; வெற்றி பெறுமா?

 

 
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

cricket.jpg

sri.jpg

அந்த வகையில் இந்த போட்டியில் பிரபாத் ஜயசூரியவும் கசூன் ராஜிதவும் தங்களது சர்வதேச ஒருநாள் கன்னிப் போட்டியில் இன்றைய தினம் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37646

8.png&h=42&w=42

78/3 * (17/50 ov)
Link to comment
Share on other sites

244 ஓட்டங்களை குவித்தது இலங்கை ; வெற்றி பெறுமா தென்னாபிரிக்கா?

 

 
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரனா இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

sri3.jpg

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமானது.

கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றியீட்டி, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானத்தார்.

அதன்படி முதலாவதாக களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான உபுல் தரங் மற்றும் திக்வெல்ல ஆகியோர் இணைந்து 13 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அதற்கிணங்க முதலாவது ஓவரில் நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்ட இலங்கை அணி இரண்டவது ஓவரில் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்றுக் கொடுத்த உபுல் தரங்க லுங்கி நிகிடியின் ஐந்தாவது பந்து வீச்சில் டிகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

sril2.jpg

இவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த குசல் மெண்டீஸும் லுங்கி நிகிடியின் அடுத்த பந்தில் டக்கவுட் முறையில் முறையில் வெளியேற இலங்கை அணி தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அதன் பின்னர் இணைந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் பெரேரா ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.

எனினும் 11 ஓவரில் இலங்கை அணி 56 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 12 ஓட்டங்களுடன் குசல் பெரோ ஆட்டமிழந்தார். அதன் பின்னர் திக்வெல்லவுடன் கை கோர்த்த மெத்தியூஸ் சிறப்பாக திக்வெல்லவுக்கு தோல் கொடுத்தார்.

இதன்படி திக்வெல்ல 19 ஓவரின் போது சம்ஸியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசி 58 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பின்னர் இலங்கை அணி 20.2 ஓவருக்கு 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

sril1.jpg

இதன் பின்னர் திக்‍8வெல்ல 78 பந்துகளை எதிர்கொண்டு பத்து நான்கு ஓட்டங்கள் அடங்களாக 69 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை 25.2 ஓவரில் பெலுக்கொயோவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய செஹான் ஜெயசூரிய 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 36 ஆவது ஓவரின் போது 71 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். திஸர பெரோ 19 ஓட்டங்களை பெற்றிருந்த போது லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் டிகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறி கொடுத்தது.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இந்து 244 ஓட்டங்கள‍ை பெற்றுக் கொண்டது. இறுதி வரையும் ஆட்டமிழக்காது களத்திலிருந்து அணித் தலைவர் மெத்தியூஸ் 111 பந்துகளில் ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 79 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ரபடா 48 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினையும் லுங்கி நிகிடி 50 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களையும் பெலுக்கொயோ 44 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களையும் முல்டர் 26 ஒட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன் மூலமாக தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 245 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 245  என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சினை எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடையுமா? அல்லது மண்டியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

 

http://www.virakesari.lk/article/37673

Link to comment
Share on other sites

மோசமான களத்தடுப்பால் இரண்டாவது போட்டியிலும் தோல்வி

 

 
 

இலங்கையின் அணியின் அசமந்தப் போக்கின் காரணமாகவும் மோசமான களத் தடுப்புக் காரணமாகவும் தென்னாபிரிக்க அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. 

2.jpg

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில்  இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களினை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 111 பந்துகளுக்கு 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 78 பந்துகளுக்கு 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

1.jpg

245 என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் டீகொக் மற்றும் அம்லா ஜோடி உறுதியான ஒரு அஸ்த்திபாரத்தை அணிக்காக இட்டது. அதனூடன் இலங்கை அணியின் மோசமான களத் தடுப்பும் இரண்டு பிடி நழுவல்களும் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு மேலும் வலுச் சேர்த்தது. 

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களை எதிர்கொண்ட இந்த ஜோடி 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அகில தனஞ்சயவின் பந்து வீச்சினால் ஹஸீம் அம்லா 43 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது ஆட்டமிழந்து வெளியேற 14.2 ஓவரில் இவருக்கு பக்க பலமாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 43 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் விளாச 15 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 

ஹஸீம் அம்லாவின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய மர்க்ரம் வெகு நேரம் தாக்கு பிடிக்காமல் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மூன்று ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியும் டீகொக்குமாக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த வேளை டீகொக் 87 ஓட்டங்களுடன் ராஜிதவின் பந்து வீச்சில் லக்மலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரையடுத்து சிறப்பாக ஆடி வந்த டூப்பிளஸ்ஸி மூன்று ஆறு ஓட்டங்கள் மூன்று நான்கு ஓட்டங்கள் அடங்களாக 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அகில தனஞ்சயவின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து அரைசதம் அடிப்பதற்கான வாய்ப்பினை நழுவ விட்டார். 

அவரைத் தொடர்ந்து களம்புகுந்த மில்லருடம் மூன்று ஓட்டங்களுடன் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 33 ஆவது ஒவரின் போது தென்னாபிரிக்க அணி  ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 

இறுதியாக இங்கிலாந்து அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை கடந்தது.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால், கசூன் ராஜித மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் டீகொக் தெரிவானார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இவ் இரு அணிகளுக்குமான மூன்றாவது போட்டி எதிர்வரும் 03 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/37678

Link to comment
Share on other sites

பல தவறுகளால் போட்டியில் தோற்றோம்- திக்வெல

 

 

போட்டி முழுவதும் நாங்கள் நிறைய தவறுகளை இழைத்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் டிக்வெல போட்டியில் வெல்லவேண்டும் என்றால் நாங்கள் பலதவறுகளை இழக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட்களால் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமாக காணப்பட்டது. தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டது. மேலும் களத்தடுப்பும் மோசமானதாக காணப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல ஒரிரு தவறுகளை இழைத்தால் அதனை போட்டியின் போதே சரிசெய்து போட்டியில் வெல்லலாம் ஆனால் பல தவறுகளை இழைக்க முடியாது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தான் சிறப்பாக விளையாடியதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நான் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீரவுடன் இணைந்து எனது ஆட்ட முறையில் சில மாற்றங்களை செய்தேன் அதன் காரணமாக நான் கவலையடைந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நான் எனது வழமையான பாணியிலேயே விளையாட தீர்மானித்தேன் இன்று அவ்வாறே விளையாடினேன் என டிக்வெல தெரிவித்துள்ளார்.

இரண்டு விக்கெட்களை இழந்தபின்னர் எதிர்மறையான எண்ணத்தில் சிக்கிகொண்டால் மேலும் விக்கெட்களை இழக்கவேண்டியிருக்கும் நான் அதனை நினைக்கவில்லை ஏனைய வீரர்களுடன் இணைந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்துவது குறித்தே சிந்தித்தேன் எனவும் டிக்வெல தெரிவித்துள்ளார்.

second_on1.jpg

மத்தியுஸ் ஆடுகளத்தில நுழைந்த பின்னர் எனக்கு நிறைய உதவினார் அவர் ஒரு மூத்த வீரர் அவர் எப்போதும் ஆலோசனை வழங்கிக்கொண்டிருப்பார் எனவும் டிக்வெல குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/37690

Link to comment
Share on other sites

மூன்றாவது போட்டி நாளை; தொடரை தக்க வைக்குமா இலங்கை?

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

po.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரை இலங்கை அணி 2:0 என்று கைப்பற்றியுள்ளது இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி  இரண்டு போட்டிகளை வென்று 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அந்த வகையில் கடந்த 29 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் தென்னாபிரிக்க அணி நான்கு விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

இந் நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. நாளை இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவினால் தென்னாபிரிக்க அணி ஒரு நாள் தொடரை கைப்பறி ருஷித்துவிடும். 

ஆகையினால் நாளைய போட்டியிலாவது இலங்கை அணி வியூகம் வகுத்து போட்டியை வெற்றிக் கொண்டு தொடரை தக்க வைக்க முயற்சியை மேற்கொள்ளுமா அல்லது போட்டியில் மண்டியிட்டு கிண்ணத்தை தென்னாபிரிக்காவிடம் பறிகொடுத்து சொந்த மண்ணில் தலைகுனியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை களமிறங்கவுள்ள மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டீஸ், செஹான் ஜெயசூரிய, திஸர பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், பிரபாத் ஜெயசூரிய, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகான், தனஞ்சய டிசில்வா மற்றும் தசூன் சானக்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டுப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிக் குழாமில் டிகொக், ஹஸிம் அம்லா, மக்ரம், டூமினி, டெவிட் மில்லர், முல்டர், ரபடா, சம்ஸி, லுங்கி நிகிடி, கிளேஸின், கேஷவ் மஹாராஜ், ஹென்ரிக்ஸ் மற்றும் ஜூனியர் டாலா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/37844

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம்

 

 
 
தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளமை கூறத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=104966

Link to comment
Share on other sites

ஹேண்ட்ரிக்ஸ், டூமினியின் அதிரடி ஆட்டத்தால் இலங்கைக்கு வெற்றியிலக்கு 364

 

 

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்கள‍ை பெற்று 364 என்ற இமாலய வெற்றியிலக்கினை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. 

du1.jpg

அந்த வகையில் இன்று காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகலயில் ஆரம்பமான இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி சார்பில் களமிறங்கிய ஹஸீம் அம்லா மற்றும் டீகொக் ஜோடியினர் 42 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்திருந்த போது லஹிரு குமாரவின் பந்து வீச்சில் டீகொக், குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெளியேறினார்.

am.jpg 

இதனையடுத்து களமிறங்கிய ஹேண்ட்ரிக்ஸ் அம்லாவுக்கு பக்க பலமாக இருந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை  அதிகரிக்க ஆரம்பித்தார். இருவருமாக இணைந்து அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை 16 ஓவிரன் இறுதிப் பந்தில் அம்லா 59 பந்துகளுக்கு ஒன்பது நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை திஸர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஆடுகளம் புகுந்த அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 10 ஓட்டங்களுடன் வெளியேற அடுத்து களமிறங்கிய டூமினி ஹேண்ட்ரிக்ஸுடன் இணைந்து இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினர்.

35 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்களை விளாசி எட்டு நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஒட்டம் அடங்களாக 88 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த ஹேண்ட்ரிக்ஸ், லஹிரு குமாரவின் அதே ஓவரின் இறுதிப் பந்தில் பொல்ட் முறையில் அட்டமிழந்தார். இதனையடுத்து டூமினி 39.4 பந்தில் அரைசாதம் கடந்தார். 

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 40 ஓவர்கள் நிறைவின் போது நான்கு விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு மிகவும் வலுவான ஒரு நிலையில் இருந்தது. 

45 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்கள் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசி 70 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 92 ஓட்டங்களை பெற்றுக் அதிரடியாக பெற்றுக் கொண்ட டூமினி திஸர பெரேராவின் பந்து வீச்சில் அகில தனஞ்சயவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் டேவிட் மில்லர் 46 பந்துகளில் அரை சதம் கடந்து, திஸர பெரேராவின் அடுத்த பந்தில் தனஞ்சய டிசில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 364 ஓட்டம் என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்தது. 

பந்து வீச்சில் இலங்கை அணி லஹிரு குமார 67 ஓட்டங்களக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் திஸர பெரேரா 75 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 81 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

மேலும் கண்டி பல்லேகல மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/3786

Link to comment
Share on other sites

இலங்கையை மண்டியிட வைத்து தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

 

 
 

ஹேண்ட்ரிக்ஸ், டூமினி, அம்லா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.

01.jpg

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான மூன்றாவது போட்டி இன்று காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை கேட்டுக் கொண்டது.

இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின்  நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 363 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக ஹேண்ட்ரிக்ஸ் 102 ஓட்டங்களையும் டூமினி 92 ஓட்டங்களையும் அம்லா 59 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

02.jpg

364 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான உபுல் தரங்க மற்றும் திக்வெல்ல ஆகியோர் அதிரடி காட்ட நினைத்த போதும் அது சாத்தியப்படவில்லை. காரணம் இலங்கை அணி 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வேளை 3.4 ஆவது பந்தில் திக்வெல்ல 10 ஓட்டங்களுடன் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் டூப்பிளஸ்ஸியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களம் புகுந்த குசல் பெரேரா எதிர்கொண்ட முதலாவது பந்திலே நான்கு ஓட்டங்களை விளாச ஆடுகளம் சூடு பிடித்தது. இருப்பினும் இவருடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்த உபுல் தரங்க 5.3 ஆவது ஓவரில் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் முல்டரிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் பெரோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 27 ஒட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை 8.4 ஆவது ஓவரில் பெலுக்கெய்யோவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்தார்.

10 ஒவர்கள் நிறைவின் போது இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களினை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதன்  பின்னர் 11.3 பந்தில் திஸர பெரேரா 16 ஓட்டங்களுடன் முல்டரின் பந்து வீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேற அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் களம்புகுந்தார். 14 ஆவது ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தையும் ஒரு நான்கு ஓட்டத்தையும் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 100 ஓட்டங்களை எட்டியது. 

மெத்தியூஸுடன் இணைந்து நிதானமாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்த குசல் மெண்டீஸ் 19.3 ஆவது ஓவரில் 31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதானமாக ஆடி வந்த  அணித் தலைவர் மெத்தியூஸ் 32 ஓட்டங்களுடன் சம்ஸியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டிசில்வாவும் அகில தனஞ்சயவும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். தனஞ்சய டிசில்வா 35 ஆவது ஓவரின் போது 47 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டம் அடங்களாக அரை சதத்தினை பூர்த்தி செய்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 39.1 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதன் பின் தனஞ்சய டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக ஆடி வந்த அகில தனஞ்சய 37 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து ஆடுகளத்தில் அசத்தலாக ஆடி வந்த தனஞ்சய டிசில்வா 41 ஆவது ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அதே ஓவரில் 66 பந்துகளுக்கு 8 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற இவரையடுத்து வந்த பிரபாத் ஜயசூரிய எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் ஓட்டம் எதையும் பெறாது சம்ஸியின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி 45.2 ஓவர்களுக்கு சலக விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதன் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தி தொடரை கைப்பற்றியது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுக்களையும் பெலுக்கெய்யோ மூன்று விக்கெட்டுக்களையும் சம்ஸி இரண்டு விக்கெட்டுக்களையும் முல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

lungi.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக 89 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்ற ‍ஹேண்ட்ரிக்ஸ் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்குமிடையான நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 08 ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக (2.30) மணிக்கு அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/37881

 

 

பந்து வீச்சு குறித்து மத்தியுஸ் ஏமாற்றம்

 

இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்துள்ள நிலையில் அணித்தலைவர் மத்தியுஸ் பந்து வீச்சு குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

எங்கள் அணி பந்துவீச்சை ஆரம்பித்த விதம் குறித்து நான்  ஏமாற்றமடைந்துள்ளேன் இறுதி 10 ஓவர்களையும் கூட நாங்கள் திட்டமிட்டபடி வீசவில்லை என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடுகளத்தில் 360 என்பது அதிகமான எண்ணிக்கை,நாங்கள் எங்கள் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்தவில்லைஎனவும்மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

தனஞ்செய டி சில்வா லகிருகுமார விளையாடிய விதங்களே இந்த போட்டியில் கிடைத்த சாதகதன்மை எனவும் குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் தென்னாபிரிக்காவின் ரீசா ஹென்ரிக்ஸ் சிறப்பாக விளையாடினார் டுமினி இனிங்ஸை சிறப்பாக முடித்து வைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய போட்டியில்( தனது முதல் போட்டியில் )சதமடித்த ஹென்டிரிக்ஸ் தனது முதல் போட்டியில் விளையாடி அணிக்கு பங்களிப்பு செய்தமை குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.

amlaaaaaa2.jpg

நான் ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளேன் ஆனால் ஒரு நாள் போட்டி என்பது வித்தியாசமானது என குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்க அணியில் இடம்பெறுவது கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/37887

Link to comment
Share on other sites

தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்குமா இலங்கை?

 

 
 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு (2.30) ஆட்டமாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக தனது திறமையினை வெளிப்படுத்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்க‍ை அணி ஒருநாள் தொடரை அப்படியே தலைகீழாக மாற்றிப் போட்டாது. 

srilankan.jpg

ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடி படுதோல்வியடைந்துள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள நான்காவது போட்டியில் சரி வெற்றியீட்டி இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த போட்டியின் போது தென்னாபிரிக்க அணியின் தலைவர் டூப்பிளஸ்ஸிக்கு வலது தோள் பகுதியில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் தொடரிலிருந்து நீங்கியதனால் இன்றைய தினம் தென்னாபிரிக்க அணித் தலைவராக டீகொக் செயற்படுவார்.

http://www.virakesari.lk/article/38061

Link to comment
Share on other sites

குசல், சானக்க மற்றும் திஸரவால் தென்னாபிரிக்காவுக்கு பலத்த அடி ; வெற்றியிலக்கு 307

 

 

குசால் பெரேரா, சானக்க மற்றும் திஸர பெரேராவின் அதிரடி ஆட்டம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்காக தென்னாபிரிக்க அணிக்கு 307 ஓட்டங்களை நிர்ணயித்தது.

38722242_225093294864188_186208624516163

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டாரங்கில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.

இருந்தபோதும் மழைக் குறுக்கீட்டதன் காரணாக போட்டி காலம் தாழ்த்தியே ஆரம்பித்தது. இதனால் போட்டியில் ஓவர்களின் எண்ணிக்கை 43 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.

2.jpg

இலங்கை அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி இலங்கைக்கு சிறந்ததொரு அடித்தளத்தையிட்டனர். இதன் மூலம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவான நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும்போது 8.2 ஆவது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து போட்டி இடை நிறுத்தப்பட்டதுடன் சற்று நேரம் சென்று மழை நின்றதும் போட்டி மீண்டும் ஆரம்பமானதுடன் ஓவர்களின் எண்ணிக்கையும் 39 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் மழைக்கு முன்னராக சிறப்பாக ஆடி வந்த உபுல் தரங் மற்றும் திக்வெல்ல ஆகியோர் 61 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை நிரோஷன் திக்வெல்ல 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரையடுத்து குசல் மெண்டீஸுடன் இணைந்த உபுல் தரங்க 14.3 ஓவரின் போது 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு முல்டர் வீசிய பந்தில் வில்லியமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

3.jpg

இதையடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஆக இருக்கும் வேளை 14 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த குசல் மெண்டீஸ் மஹாராஜின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அதன்  பின் அணித் தலைவர் மெத்தியூஸும் குசல் பெரராவும் இணைந்து இலங்கை அணியை சரிவு பாதையிலிருந்து மீட்டெடுத்தனர்.

இவர்கள் இருவருமாக  இணைந்து அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை மெத்தியூஸ் லுங்கி நிகிடியின் பந்து டீகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேற அடுத்து வந்த தனஞ்சய டிசில்வா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

களத்தில் தென்னாபிரிக்க அணியின் பந்துகளை பந்தாடி வந்த குசல் பெரராவும் தனது பங்கிற்கு அணிக்காக அரைசதம் ஒன்ற‍ை பெற்றுக் கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 195 ஆக இருக்கும் போது 32 பந்துகளில் 6 நான்கு ஒட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 51 ஓட்டங்கள‍ை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 28.4 ஆவது ஓவரின் போது 6 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 

இதையடுத்து திஸர பெரராவும் சானக்கவும் ஜோடி சேர்ந்து தென்னாபிரிக்க அணியின் பந்துகளை பறக்க விட்டனர். இவர்கள் காட்டிய அதிரடி காரணாக இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது 

சானக்க 37 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஒட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்களை விளாசியதன் மூலம் சானக்க 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதையடுத்து இந்த ஜோடி இணைந்து 65 பந்துகளில் 100 ஓட்டங்களை அணிக்கா பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து மறுமுனையில் அதிரடி காட்டிய திஸார பெரோரா இறுதி ஓவரில் 32 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 300 தாண்டியது. 

இதன்பின் 38.3 பந்தில் பெலக்கொய்யோவோவின் பந்து வீச்சில்  சானக்க 4 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 65 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 307 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ஜே.பி.டூமினி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் முல்டர் மற்றும் மஹாராஜ், பெலக்கொய்யோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

http://www.virakesari.lk/article/38115

Link to comment
Share on other sites

தொடர் தோல்விக்கு ஓர் முற்றுப் புள்ளி ; தென்னாபிரிக்காவுக்கு பதிலடி

 

 
 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இலங்கை அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் மூலம் முகங்கொடுத்து வந்த தொடர் தோல்விகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

a5.jpg

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்ளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட 39 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்காக 307 ஓட்டங்களை நிர்ணயித்தது.

39 ஓவர்களுக்கு 307 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இரண்டு ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டு இரவு 10.00 மணியளவில் மறுபடியும் ஆரம்பமானது.

மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு 21 ஓவர்களுக்கு 191 ஓட்டம் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாபிரிக்க அணியின் சார்பாக 10 ஓட்டங்களுடன் அம்லாவும் 16 ஓட்டங்களுடன் டீகொக்கும் ஆட்டமிழக்காது மறுபடியும் களம் புகுந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தபோது டீகொக் 13 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களை பெற்று சுரங்க லக்மாலின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற இவரையடுத்து வந்த ஹேண்ட்ரிக்ஸும் இரண்டு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

a1.jpg

அதன் பின்னர் களம் நுழைந்த ஜே.பி.டூமினியுடன் இணைந்த ஹஸிம் அம்லா அதிரடியாக ஆட ஆரம்பிக்க தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் ஒன்பது ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை தொட்டது.

இதையடுத்து அதிரடியாக ஆட்டம் காட்டி வந்த அம்லாவின் துடுப்பாட்டத்துக்கு அகில தனஞ்சய முற்றுப்புள்ளி வைத்தார். இதன் பிரகாரம் அம்லா 23 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்று லஹிரு குமாரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளேசன் தனஞ்சய டிசில்வாவின் பந்துவீச்சில் மெத்தியூஸின் அபாரமான பிடியெடுப்பு காரணமாக ஆட்டமிழந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 130 ஆகவிருந்த போது டூமினி 38 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து டெவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த பெலக்கெய்யோவும் ஒன்பது ஓட்டங்களை பெற்றிருந்தவேளை திஸர பெரேராவின் பந்தி வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு ஐந்து ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் கையிலிருக்க வெற்றிக்காக 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பெலக்கொய்யோவையடுத்து ஆடுகளம் நுழைந்த முல்டர், 16.4 ஆவது ஓவரில் சுரங்க லக்மாலின் பந்தில் தனஞ்சய டிசில்வாவின் அற்புத பிடியெடுப்பு காரணமாக ஆட்டமிழந்தார். 

இதன் பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 183 ஆக இருக்கும் வேளை மஹராஜ் திசரவின் பந்தில் பொல்ட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை ரசிகர்களின் மனதில் வெற்றிக்கான நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. இருப்பினும் இறுதி ஓவரில் லக்மலின் பந்தில் தென்னாபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான மில்லர் போல்ட் முறையில் ஆட்டமிழக்க  அந்த நம்பிக்கை விருட்சமாக மாறியது.

இறுதியில் 21 ஆவது ஓவரின் நிறைவின் போது தென்னாபிரிக்க அணி 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு மூன்று ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லக்மால் மூன்று விக்கெட்டுக்களையும் திஸர பெரோ  இரண்டு விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி பகலிரவு (2:30) ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/38124

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.