Jump to content

"மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம்


Recommended Posts

"மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம்

 
 

வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள்.

132275_thumb.jpg
 

ன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்!

சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண்டனுக்குக் கிளம்ப, அங்கே ஓர் அமானுஷ்யம் அத்தனை பேரையும் துரத்துகிறது, இந்தத் துரத்தலில் த்ரிஷாவுக்குக் கூடுதல் அதிர்ச்சி. துரத்தும் பேய்க்கும், அவருக்கும் என்ன தொடர்பு, அதிலிருந்து த்ரிஷா மீண்டாரா, ஆவியின் ஆசை நிறைவேறியதா... இப்படிப் பல கேள்விகளுக்கான பதிலே இந்த 'மோகினி'. 

வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! பேய், மாந்திரீகம், காமெடி, காதல்... எனத் தாறுமாறாகத் திரைக்கதை அமைத்து, காதில் பூ சுற்றுகிறார், இயக்குநர் ஆர்.மாதேஷ். ஏன் இந்தக் கொலவெறி?!

 

 

த்ரிஷா

தோழியின் திருமணம், ஆவியின் பழிவாங்கல், அதற்கான ஃபிளாஷ்பேக் என பிரேக் பிடிக்காமல் நகரும் கதையில், ஒரே நம்பிக்கை 'வைஷ்ணவி / மோகினி'யாக வரும் த்ரிஷா. காதல், திகில், ஆக்‌ஷன்... என அத்தனை ஏரியாவிலும் தன் பெஸ்டை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை த்ரிஷாவுக்குத் தீனி போட்டிருந்தால், நடிப்பில் தனித்துத் தெரிந்திருப்பார். மத்தபடி, 'கேக்' ஸ்பெஷலிஸ்ட் த்ரிஷாவுக்கு மட்டும் ஆயிரம் லைக்ஸ்!

 
 

 

யோகி பாபு பேசினாலே ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ, நொடிக்கு ஒருமுறை வசனம் பேசி, சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். சில வசனங்களைத் தவிர, மற்றவையெல்லாம் ஏமாற்றம்தான். த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் கூட்டணிக்கு அடைக்கலம் தரும் லண்டன்வாசிகள் மதுமிதா - கணேஷ்கரின் ஓவர் ஆக்டிங் முடியல! த்ரிஷாவுடன் காதல் கொள்ளும் பாலிவுட் நடிகர் ஜாக்கிக்கு இது தமிழில் முதல் படம். கொஞ்சம் காட்சிகள், இரண்டு பாடல்கள் என வந்து போகிறார், அவ்வளவுதான். 

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்! பேய் படம்னாலும் இப்படியா பாஸ்? ஆற்றில் விழுந்த பிரேஸ்லெட்டை படகில் இருந்தபடியே எடுத்துக்கொடுக்கிறார் த்ரிஷா. மந்திரிக்கப்பட்ட கயிறு கட்டியிருப்பவர்களை அடித்தே அவிழ்க்கச் சொல்கிறது, அந்தப் பேய் (பேய் அண்டாதுனுதானே பாஸ், அந்தக் கயிறையே கட்டச்சொன்னீங்க!), இன்டர்வெல் வரை வந்த வேலையை முடிக்காமல் அத்தனை கேரக்டர்களையும் அலறவிடுவது.. எனப் 'பேய்த்தன' லாஜிக்குகள் 'நியாயமாரே...'! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள்.

 

 

மோகினி

லண்டனில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காககோ என்னவோ, அடிக்கடி டாப் ஆங்கிளில் லண்டனைச் சுற்றுகிறது, குருதேவ்வின் கேமரா. பேய் படத்திற்குப் பின்னணி இசை எவ்வளவு முக்கியம், ஆனால் கத்தல், கதறல் மட்டும்தான் இதில் பின்னணி இசை. தவிர, பாடல்களும் சுமார் ரகம்தான். எடிட்டரும் 'உள்ளேன் ஐயா!' சொல்லிக் கிளம்புகிறார். 

கதையில் நரபலி தொடர்பான விஷயத்தை முன்னிலைப்படுத்தியிருக்கும் இயக்குநர், அதற்கான தேடலுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட்டு இருக்கலாம். அதேபோல வழக்கமான பேய் பட க்ளிஷேக்களைத் தவிர்த்து திரைக்கதை அமைத்திருந்தால், இந்த 'மோகினி'யின் ஆட்டம் வேற லெவலில் இருந்திருக்கும். அதனாலேயே வழக்கமான பேய் படமாகக்கூட இல்லாமல் கடந்துபோகிறாள், இந்த மோகினி.

 

https://cinema.vikatan.com/movie-review/132275-mohini-tamil-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: மோகினி

 

 

 
mohinijpg

ரெசிபி நிபுணரான த்ரிஷா சென்னையில் கேக் ஷாப் நடத்துகிறார். தோழியின் காதலுக்காக திடீரென சென்னையில் இருந்து அவர் லண்டனுக்கு செல்ல நேரிடுகிறது. விடாப்பிடியாக வீட்டில் சம்மதம் பெற்று, யோகிபாபு, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோருடன் லண்டன் புறப்படுகிறார். அங்கு மூவரும் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த சக்தி, த்ரிஷா உடலுக்குள் நுழைகிறது. அவரைப் போலவே உருவம் கொண்ட அந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? அது ஏன் த்ரிஷாவின் உடலுக்குள் நுழைய வேண்டும்? அதை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இதுதான் ’மோகினி’யின் திகில் ஆட்டம்

பாழடைந்த பங்களா, இருள், மலைப் பின்னணி என வழக்கமான திகில் படங்களில் இருந்து விலகி, பரபரப்பான சென்னையில் ஒரு கேக் ஷாப், அடுத்தடுத்து லண்டன், அங்கே விரியும் அழகு என கொஞ்சம் வித்தியாசமான பேய் படம் தர முயன்றுள்ளார் இயக்குநர் மாதேஷ். லொக்கேஷன்கள் மாறினாலும், வழக்கமான அதே திகில் திரைக் கதை பார்முலா. இதனால், ஆரம்பம் முதலே படம் விறுவிறுப்பை இழக்கிறது.

 

திறமையான சமையல் கலை ஞர் என்பதில் தொடங்கி, லண்ட னில் தனக்குள் அமானுஷ்ய சக்தி நுழைந்து செய்யும் திகில் சம்பவம் வரை மிரட்டியிருக்கிறார் த்ரிஷா. ஆனால், அந்த நடிப்புக்கு பக்கபல மாக அவரைச் சுற்றி வலம் வரும் யோகிபாபு, சுவாமிநாதன், கணேஷ், மதுமிதா ஆகிய துணை கதாபாத்திரங் களின் பங்களிப்பும், காமெடியும் இல்லை.

வைஷ்ணவி, மோகினி என த்ரிஷாவின் இரண்டு கதாபாத்திர பின்னணியும், அதன் செயல்பாடுகளை பிரித்து உணர்த்துவதும் தெளிவாக கையாளப்பட்டுள்ளது. லண்டனின் தேம்ஸ் நதியில் தொலைக்கும் செயினை தேடும்போது வெண் சங்கு கிடைப்பது, த்ரிஷாவின் ஒரு துளி ரத்தம் நதியில் கலந்து அனுமாஷ்ய சக்தியாக உருமாறுவது உள்ளிட்ட சில இடங்கள் சுவாரசியம். அதேபோல, சிறுவர்களை அடைத்து வைத்து விற்பனை செய்யும் இடத்தை கண்டுபிடிக்கும் த்ரிஷாவின் சாதுர்ய மும், அதற்காக முன்னெடுக்கும் யோசனையும் சிறப்பு.

வீட்டுக்குள் பேய் இருப்பதாக அலறுபவர்கள் த்ரிஷாவை தேடுவதே இல்லை ஏன்? மோகினி வீட்டுக்குள் நுழைய முடியாதபடி தாயத்து வேலி போட்ட பிறகு, வீட்டுக்குள் இருப்பவர்களை அந்த சக்தி தாக்குவது எப்படி? மோகினி போலவே வைஷ்ணவி இருந்தும், வில்லன்களுக்கு சந்தேகம் வராதது ஏன்? எதிரிகளால் தாக்கப்பட்டு நதிக்குள் வீசப்படும் மோகினி, மற்றொரு சந்தர்ப்பத்தில் நதிக்குள் இறங்க முடியாதது ஏன்? இப்படி ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். பேய் படத்துக்கு தேவையில்லைதான். அதற்காக இவ்வளவு அநியாயத் துக்கா?

படம் முழுக்க த்ரிஷாவுடன் பயணித்தாலும், யோகிபாபுவின் காமெடிகள் அவ்வளவாக ஒட்ட வில்லை. நாயகிக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவே த்ரிஷா வுக்கு காதலராக இந்தி நடிகர் ஜாக்கி பக்னானி. மற்றபடி, அவருக்கு வேலை எதுவும் இல்லை. வில்லன் முகேஷ் திவாரியின் நடிப்பு மற்ற பல படங்களை நினைவுபடுத்து கிறது.

படத்தின் பெரிய ஆறுதல்.. லண்டனை பசுமையாக காட்டியிருக் கும் ஆர்.ஜி.குருதேவ் ஒளிப்பதிவு. ‘வெளிநாடுகளில் படம் எடுக்கிறேன்’ என்று ஓரிரு காட்சிகளை எடுத்துவிட்டு, மிச்சத்துக்கு சென்னையில் செட் போடாமல், பெரும் பகுதியை லண்டனிலேயே காட்சிப்படுத்தியது, கண்ணுக்கு குளுமை.

மற்றொரு முக்கியமான ஆறுதல்.. த்ரிஷாவின் ஸ்வீட் அன் ஸ்மைலி நடிப்பு. ஆக்சன், கோபம், சோகம், மகிழ்ச்சி என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

நரபலி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் சிறுவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை சமூகக் கருத்தோடு, பேய் கதை பின்னணி யில் தொட முயற்சித்தது பாராட்டுக் குரியது. புதுமையாக யோசித்திருந் தால், பழைய ‘ஜெகன்மோகினி’ போல இந்த மோகினியும் ஜொலித்திருப்பாள்!

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24545061.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.