Jump to content

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்


Recommended Posts

சனி முழுக்கு – 1 -நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்…..

POSITIVE-Ponnapalam2.png
நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்.இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும்.

விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை , கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள்.வந்திட்டுப் போறியள்.வரேக்கை கொண்டு வந்து சொக்கிலேட்டைக் குடுக்கிறியள், காசைக் குடுக்கிறியள், போனைக் குடுக்கிறியள்.. அதோடை முடிஞ்சிது எண்டு நினைக்கிறியள்.அதுக்குப் பிறகுதான் பிரச்சினையே தொடங்கிது. அவையிட்டை நீங்கள் விட்டிட்டுப் போற சில கிரிச கெட்ட பழக்கத்தை மறந்து போயிடுறியள்

 

எல்லாரும் நல்லது நடக்க வேணும் எண்ட அவாவிலைதான் எல்லாத்தையும் செய்யிறம். எங்கடை தேசம், எங்கடை இனசனம், எங்கடை கோயில், எங்கடை வாசிகசாலை , எங்கடை பள்ளிக்குடம் எண்டு எல்லா ம் எங்கடை எண்ட எண்ணத்தோடை நீங்கள் அண்டையிலைபோய் இருக்கிறது எனக்கு நல்லா விளங்கும். இருந்தும் “செய்வன திருந்தச் செய்” எண்ட ஒரு பழ மொழி இருக்கிதெல்லே? அதைச் சரியா விளங்கிக் கொள்ள வேணும். “பாத்திரம் அறிஞ்சு பிச்சை இடு” எண்டும் ஒரு பழஞ்சொல் இருக்கு. பிழையா ஒண்டைச் செய்யிறதாலை வாற பிரச்சினை கனக்க.

தோதில்லாதது ஒண்டைச் செய்யேக்கை வாற பிரச்சினை என்னெண்டு தெரியுமே? முன்னம் இலங்கையிலை ஒரு லொத்தர் சீட்டு “சியவச” எண்டு இருந்திது. அப்ப அது ஐம்பது சதம். லொத்தர் சபையாலை கொண்டு வந்து சந்தேக்கை வித்தவங்கள். எங்கடை குருசாமி அண்ணை ஒரு கயிட்டப்பட்ட ஆள். கீரைப்பிடி விக்க கொண்டு சந்தைக்குப் போனவர். மனுசன் சும்மா வந்திருக்கலாம். ஆசை ஆரை விட்டிது. எல்லாரும் எடுக்கினமெண்டிட்டு குருசாமி அண்ணையும் ஐம்பது சதத்தைக் குடுத்து ஒரு சீட்டை வாங்கினார். அந்த ஆளின்ரை கெட்ட காலத்துக்கு அது விழுந்திட்டுது. அப்ப அந்தச் சீட்டு விழுந்தா முதல் பரிசு ஒரு லட்சம் காசு இல்லாட்டி ஒரு பேர்ஜோ 404 கார்.குருசாமி அண்ணை தமையனையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போய் லொத்தர் சபையிலை கொண்டு போய் சீட்டை நீட்டின உடனை அவங்கள் கேட்டாங்களாம் கார் வேணுமோ இல்லாட்டிக் காசு வேணுமோ எண்டு.குருசாமி அண்ணை முன்பின் யோசியாமல் சொன்னராம் கார் எண்டு. தமையன் கார் வேண்டாம் எண்டு அந்தாளுக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்லியும் அந்தாள் கேக்கேல்லை.கார் வேணும் எண்டு கையெழுத்து வைச்சுக் குடுத்தால் அடுத்த பிரச்சினை காரைக் கொண்டு வரப் பெற்றோல் அடிக்கிறது எப்பிடி எண்டு . றைவருக்குப் பிரச்சினை இல்லை. குருசாமியின்ரை தமையன் ஆஸ்பத்திரியடியிலை ரைக்ஸி வைச்சிருக்கிறவர் எண்ட படியாலை லைசென்ஸ் எல்லாம் இருந்திது. உடனை இரண்டு பேரும் ஓடிற் கந்தோருக்குப் போய் அங்கை வேலை செய்யிற ஒரு மருமேன் முறையான ஆளைப் பிடிச்சுப் பெற்றோலுக்கக் காசு வேண்டிக் கொண்டு வந்து காரை ஊருக்குக் கொண்டு வந்து அது நிக்க எண்டு ஒரு கிடுகாலை கொட்டில் போட்டு, அதை மூடிக்கட்ட எண்டு துணி தைச்சு எல்லாம் ஒரு ஆயிரம் மட்டிலை செலவாப்போச்சு. கிடந்த போயிலைப்பாடத்திலை ஒரு பங்கை வித்தாச்சு. பிறகும் அப்பிடி இப்பிடி எண்டு காருக்குச் செலவு ஒரு கணக்கு வந்திட்டுது. முழுப் போயிலைப் பாடத்தையும் வித்தால் இப்ப சீவிக்க எண்டு குருசாமியின்ரை கையிலை ஒரு சதமும் இல்லை. இதுக்கை கொழும்பாலை காரைக் கொண்டு வந்த உடனை , ஊரிலை உள்ள ஒரு வியாபாரி காரை ஒண்டகால் கேட்டவர். “உனக்குத் தரவோ காரைக் கொண்டந்தனான். என்னைப் பொறுத்தவரை அது ஐம்பது சதத்துக்குத்தான் நான் வேண்டின்னான். அது கிடக்கட்டே ,” எண்டு இறுமாப்பாச் சொல்லிப் போட்டார். கடைசியா மழையாலை காரின்ரை அடித் தகடு உக்கிப் போனப் பிறகு குருசாமி விக்க வெளிக்கிட்டவர். காரை வேண்ட ஒரு தரும் இல்லாமல் “தாறதைத் தா” எண்டு ஒரு மெக்கானிக்கைப் பிடிச்சுக் குடுத்து வாங்கின காசிலை பட்ட கடனிலை காவாசியைத்தான் குருசாமி குடுத்தவர்.அப்ப அதிஸ்டம் எண்டு வாறதெல்லாம் அதிஸ்டம் இல்லை. அதோடை “தன்னை அறிஞ்சுதான் தானத்தையும் ஏற்கவேணும்” எண்டு அப்பு அடிக்கடி சொல்லுறவர். இப்ப இதை ஏன் சொன்னனான் எண்டு அடுத்த சனிக்கிழமையும் படியுங்கோ. அப்ப தெரியும். வாறன்….

– “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/89556/

Link to comment
Share on other sites

“சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது” – சனி முழுக்கு – 2

 

 

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

 

சும்மா தாறாங்கள் எண்டிட்டு எல்லாத்தையும் வாங்கக்குடாது எண்டதுக்கு எங்கடை சுப்புறுவின்ரை கதை ஒண்டு இருக்கு. போன கிழமை சுப்புறுவின்ரை பெறாமகன் ஒருத்தன் சுவிஸிலை இருந்து வந்து தாயோடை நிண்டவன். அவன் சுவிஸிலை இருந்தெல்லே வந்திருக்கிறான்? சுப்புறு பாத்திது ஒரு நாளைக்கு  அவனைக் கூப்பிட்டு மீனைக் கீனை வாங்கிச் சாப்பாடு குடுப்பம் எண்டு . மற்ற நாள் மதியம் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டவர். ஒரு  லீற்றர் சோடாப் போத்தில்லை பனையுக்கும் சொல்லிப்போட்டு, அப்பிடியே சாவக்காட்டிலை மீனையும் வேண்டிக் கொண்டு வந்து குடுத்திட்டு நிக்க ,  சுப்புறுவின்ரை மனுசி சுப்புறுவைக் கூப்பிட்டுச் சொல்லிச்சிது குடிக்கிற தண்ணி முடிஞ்சிது வயிரவர் கோயிலடிக் கிணத்திலை போய் தண்ணி அள்ளிக் கொண்டு வாங்கோவன் எண்டு. சுன்னாகம் பவர் ஸ்ரேசன் ஒயில் கிணறுகளிலை கலக்கத் துவங்கினாப் பிறகு, என்னத்துக்கு இல்லாட்டிலும் குடிக்க எண்டு வயிரவரடித் தண்ணியைத்தான் எல்லாரும் அள்ளிக் குடிக்கிறது. அப்ப சுப்புறுவும் வழமையாப் போற மாதிரி 5லீட்டர் தண்ணிக் கானையும் எடுத்துக் கொண்டு தண்ணியள்ளப் போனவர்.போனவர் தண்ணியை அள்ளிக் கொண்டு நல்ல பிள்ளை மாதிரி வீட்டை வரவெல்லோ வேணும். ஆசை ஆரை விட்டிது?

இதுக்கிடையிலை சுப்புறுவுக்கு இருக்கிற சீனி  வருத்தத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும். ஒரு நாள் இறைக்க எண்டிட்டு சுப்புறு மிஷினையுங் கொண்டு தோட்டப் பக்கம் போனதுதான் தெரியும். கொஞ்ச நேரத்திலை தண்ணி கட்டிறவன் ஆத்துப் பறந்து ஓடி வந்தான். என்னடா எண்டு கேட்டதுக்கு சுப்புறுத் தம்பி வாய்க்காலுக்கை மயங்கி விழுந்து ஓட்டோ ஒண்டிலை ஆஸ்பத்திரி காணக் கொண்டு போயினம் உங்களை வரட்டாம்” எண்டு சொன்னதுதான் தாமதம் சுப்புறுவின்ரை மனுசி வீட்டிலை நிண்ட றேசின் கவுணோடை “ஐயோ” எண்டு குளறிக் கொண்டு ஓடிப்போனால் வாயுக்கை, மூக்குக்கை எல்லாம் வயருகள் செருகினபடி சுப்புறுவை மல்லாத்திக் கிடத்திக்கிடக்காம். அதைக் கண்ட மனுசி வாட்டிலை வருத்தக்காரர் கிடக்கினமெண்டும் பாராமல் நிலத்திலை விழுந்து பிரண்டு ஒப்பாரி வைக்க, மிஸிமார் வந்து நல்ல பேச்சு. பிறகு சுப்புறுவின்ரை மனிசீன்ரை அழுகை ஓயவிட்டில்அவவுக்கு  விவரத்தைச் சொல்லி, ஆளுக்கு ஒண்டும் இல்லை. இரத்தத்திலை சீனி கூடிப்போச்சு. அவ்வளவுதான், நாளைக்குத் துண்டு வெட்டிவிடுறம். கொஞ்ச நாளைக்கு ஆளைப் பக்குவமாப் பாத்துக் கொள்ளுங்கோ. சீனி உள்ள சாப்பாடு, மாச்சாப்பாடு, பாண் ஒண்டும் குடுக்காதையுங்கோ எண்டு மருந்தையுங் குடுத்து, சாப்பாடு இன்னதெண்டதையும் எழுதிக் குடுத்து ஆளை விட்டிட்டினம். அப்ப மனுசியும் கவனம்.கண்டபடி ஒண்டுங் குடுக்கிறேல்லை. பத்தியம் மாதிரித்தான்.நாங்கள் சுப்புறுவை வைச்சு லோட்டிக் கட்டுவம். என்னெண்டால் சுப்புறுவை நடுவிலை இருத்தி வைச்சுத் தொட்டுக் கொண்டு வெறுந் தேத்தண்ணிக் குடிக்கலாம். சீனி தேவை இல்லை எண்டு.

அப்ப சுப்புறு தண்ணி அள்ளப் போனனி உன்ரை பாட்டிலை தண்ணியைக் கொண்டு வரவெல்லோ வேணும். சுப்புறுவின்ரை கயிட்ட காலத்துக்கு வயிரவற்றை அபிஷேகம் முடிஞ்சு அங்கை கோயிலிலை எடுபிடி வேலைசெய்யிற ஆள்  பஞ்சாமிர்தச் சட்டியோடை நிண்டுகொண்டு “சுப்புறு அண்ணை, பஞ்சாமிர்தம் ” எண்டு சொல்ல, சுப்புறு “வேண்டாம். எனக்குச் சீனி வருத்தம்” எண்டு மறுமொழி சொல்ல, “இது பிரசாதம். வேண்டாம் எண்டு சொல்லப்பிடாது. கொஞ்சத்தைப் பிடி அண்ணை” எண்டு எடுபிடி வற்புறுத்த, “ஐயோ டாக்குத்தர் பேசுவர்” எண்டு சுப்புற வீச்சா நடக்க, “ஒரு எப்பனை நாக்கிலை நனைச்சுக் கொண்டு போ.” எண்டு எடுபிடி விட்டுக் கலைக்க, “ஐயோ மனுசி பேசும். வேண்டாம்” எண்டு பிறகும் சுப்புறு  அடம்பிடிக்க, அங்கை நிண்ட ஒண்டு சொல்லிச்சுதாம், “அவன்(எடுபிடி) கலைச்சுக் கலைச்சுக் கேக்கிறதிலை ஏதோ ஒரு அருள் இருக்கு. சிலவேளை உதைத் திண்டால் சீனி வருத்தம் முற்றா இல்லாமல் போவிடும் போலை. இந்த வயிரவர் லேசுப்பட்ட ஆள் இல்லை. ஆனபடியால்  சுப்புறு வாங்கித் தின்  எண்டு ” சொல்ல ஒரு கையடங்கல் பஞ்சாமிர்தத்தைச் சுப்புறு வேண்டிக் கொண்டு போய்த் தேர் முட்டியடியிலை வைச்சு நல்லா அதக்கிப் போட்டு வீட்டை போனதுதான் தெரியும்…!  சுப்புறுவைக்  கிறுதி தூக்கி எறிஞ்சு மண்டையும் லேசா கட்டிலோடை அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு ஓட்டோவிலை ஏத்திக் கொண்டு பெரியாஸ்பத்திரியிலை சேத்தினம். ஆளின்ரை உடம்பிலை, வேட்டி சால்வையிலை எல்லாம் பிலாப்பழ வாசம். டாக்குத்தருக்குத் தெரிஞ்சு போச்சு மச்சான் பிலாப் பழத்தை முழுசா விழுங்கிப் போட்டு வந்திருக்கிறார் எண்டு. “இதுதான் முதலும் கடைசியும். சீனி வருத்தம் இருக்கிது எண்டு தெரிஞ்சு கொண்டு பிலாப்பழம் திண்டவருக்கு இஞ்சை இனிமேல் “ற்ரீட்மன்ட் ”  இல்லை, தெரிஞ்சிதோ?” எண்டு எல்லாற்றை முன்னாலையும் சுப்புறுவின்ரை மனிசியை டொக்டர் பரிசுகெடுத்துப் போட்டாராம். அப்ப சுப்புறு தண்ணியள்ளப்போன வேலையை மட்டும் பாத்துக்கொண்டு வந்திருந்தால் தப்பி இருப்பர். இது வீணாத் தேவை இல்லாத வேலையைப் பாக்கப்போய் பெறாமேனுக்கு வைச்ச கள்ளுப்பாட்டியும் குழம்பி மற்ற நாள் புளிச்ச கள்ளை எடுத்துது் தூர எறிஞ்சவையாம். அதோடை சுப்புறுவின்ரை மனுசி பதறிப் பட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போனாப்போலை குசினிக் கதவைப் பூட்ட மறந்து போனாவாம். அப்ப பொரிச்சு வைச்ச மீனைப் பூனை பதம்பாத்ததுதான் மிச்சம்.

உதுக்குத்தான் சொல்லுறது சும்மா தருகினமெண்டிட்டு வாங்கப்பிடாது எண்டு. அப்பிடி தாறவை பிடியாப் பிடிச்சுத் தந்தாலும் அது எங்களுக்குப் பொருத்தமானதோ இல்லாட்டித் தேவையானதொண்டோ எண்டு ஆற இருந்து யோசிக்க வேணும். என்ன? உப்பிடித்தான் கந்தையன்ரை பேரன் பேத்தி ஜேர்மனியிலை இருந்து வந்து நிண்டவை.போகேக்கை தாங்கள் கொண்டு வந்த இரண்டு மாட்டு சூட்கேஸையும், அங்கை சமறிலை போட்ட  “கிழிஞ்சு கந்தலாப்போனதைப் போலை தொங்கிக் கொண்டு கிடக்கிற” உடுப்புகளையும் விட்டிட்டுப் போட்டினம். சூட்கேஸை நிலத்திலை வைக்க இடமில்லாமல் பரண் கட்ட கந்தையாவுக்கு இரண்டாயிரம் செலவாம். அதோடை இஞ்சை இருக்கிற கந்தையன்ரை பேத்தி அவை விட்டிட்டுப் போன அந்த மேற்சட்டையைப் போட்டுக் கொண்டு நெஞ்சு தெரியத் திரிய வெறியோடை வந்த பூமணியின்ரை பெடி அதைப் பாத்து புளங்காகிதப் பட்டு அவளைக்  கட்டிப் பிடிச்சு அசிங்கப் படுத்திப் போட்டானாம். வெறியிலை வந்தவனுக்குச் செய்யிறது எது, செய்யப்பிடாதது எது எண்டு தெரியுமோ? சொந்தத்துக்கை நடந்ததெண்டபடியாலை பொலிஸுக்குப் போகேலுமோ? அப்பிடியே விசியத்தை  வீட்டுக்கை சடைஞ்சாச்சு. அந்த நிமிசமே கந்தையன் அவையின்ரை உடுப்பையெல்லாம் எடுத்து முத்தத்தலை போட்டுக்  காவோலையாலை மூடிக்  கொளுத்திப் போட்டான். அப்ப சும்மா தந்ததெண்டதாலை எத்தினை வில்லங்கம் தெரியுமோ? அதுகும் தங்களுக்குத் தோதில்லாததுகளை ஆர் தந்தாலும் ஓசி எண்டிட்டு வேண்டப்பிடாது.  எல்லாத்தையம் பொசுற்றிவ்வா யோசிக்க வேணும். என்ன? ஏன்  அப்பிடி யோசிக்க வேணும் எண்டு அடுத்த சனிக்கிழமை சொல்லுறன் ..!

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/90471/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கட்டுநாயக்கா எயாப்போட்டோடை விட்டிட்டு வந்து, போகேக்க எடுத்திட்டு போங்கோவன்…

பொஸிற்றிவ் பொன்னம்பலம் – சனி முழுக்கு – 3

Positive-ponnar01.png?resize=683%2C800
காலமையே சனி பிடிச்சமாதிரியாப்போச்சுது. மனுசி நேற்றைக்குச் சொன்னவள்தான். அதை இல்லை எண்டு சொல்லேல்லை.. சீனி வேண்ட மறக்காதையுங்கோ. வெள்ளணத் தேத்தண்ணி குடிக்கச் சீனி இல்லை எண்டு இரண்டு மூண்டு தரம் சொல்லிப்போட்டுத்தான் கோயில் காணப் போனவள். ஆனால் நான் தான் கதைப் புலாதியிலை மறந்து போனன். சீனி வேண்ட வேணும் எண்ட ஞாபகம் வரேக்கை பாத்தால் ஐயாத்துரை கடையைப் பூட்டிப் போட்டான். காலமை வேண்டுவம் எண்டு சொல்லிப்போட்டுப் படுத்திட்டன்.

 

எழும்பக் கொஞ்சம் சுணங்கிப்போச்சுது. தடார்.. பிடார்.. எண்டு குசினிக்கை சத்தம். அதோடை என்ரை பதிவிரதை கத்தியும் கேட்டிது. “காலமை குடிக்கிற தேத்தண்ணியைத்தன்னும் எப்பன் சந்தோஷமாக் குடிக்க விடுகிறியளே? வெறும் சாயைத்தைத்தான் குடிக்க வேண்டிக் கிடக்கு. அப்பு வீட்டை குமர்பிள்ளையா நான் இருக்கேக்கை , காலமையிலை உடன் கறந்த ஆட்டுப்பால் தேத்தண்ணிதான் ஆச்சி தாறவ. இஞ்சை சீனியை உள்ளங்கையிலை போட்டு நக்க வேண்டிக் கிடக்கு ” எண்டு பெரிய ஒப்பாரி. விசியம் என்னெண்டால் தாராளமாப் போட்டுக் குடிக்கச் சீனி இல்லை எண்டதுதான்.

அதுக்கு ஏதோ அவளின்ரை சீதனக் காணியை நான் விக்கக் கேட்ட மாதிரி காலத்தாலை ஒரே கலவரம். அதைப் பாத்த எனக்கு விசராக்கிப் போட்டுது. வாய் திறந்தால் பிரச்சினை கூடும் எண்டிட்டு போய் முத்தத்திலை கண்ணை மூடிக் கொண்டு இருந்திட்டன். கொஞ்ச நேரம் ஆளின்ரை சிலமனைக் காணேல்லை.பிறகு “டொக் ” எண்டு ஒரு சத்தம் கேட்டிது. பாத்தால் தேத்தண்ணியோடை ஒரு துண்டு பேப்பரிலை அரைத் தேக்கரண்டி சீனியை வைச்சிட்டு “நக்கிக் குடிச்சால்தான் சீனி இல்லாத அருமை தெரியும்” எண்டிட்டு உள்ளுக்கை போட்டா. “எட நக்கிறது எங்களுக்குப் புதுசே, என்ன? ஸ்ரீ மான்ரை காலத்திலை சக்கரையோடையும், பேரீச்சம்பளத்தோடையும், பனங்கட்டியோடையும் தேத்தண்ணி குடிச்சனாங்கள். சிலர் பினாட்டைக் கடிச்சுக் கொண்டு குடிச்சவையாம். ஆனால் நான் அதைக் காணேல்லை. பிறகு இடம்பெயர்விலை ஒண்டுக்கும் வழி இல்லாமல் இருந்தனாங்கள். அப்பிடி எங்களுக்கு எல்லாம் பழகிப்போச்சுது,” எண்டு நினைச்சுக் கொண்டு தண்ணியைக் கு டிச்சு முடிச்சன்.

முதல் வேலையா ஐயாத்துரை கடைக்குச் சீனி வேண்ட வெண்டு போனன். “அண்ணை எப்பன் பொறு” எண்டிட்டு அப்பதான் ஐயாத்துரை மஞ்சள்தண்ணி தெளிச்சு படத்துக்கு விளக்கு வைச்சுக் கொண்டிருந்தவன். எனக்குப் பிறகும் இரண்டு மூண்டு பேர் வர, கடையடியிலை சனங் கூடிவிட்டுது. மனுசி முழுகிப்போட்டு வாறதுக்கு முன்னம் சீனியைக் கொண்டு போயிடலாம் எண்டால் சரிவராது போலை கிடக்கு எண்டு யோசிச்சுக் கொண்டு நிக்க, முத்துலிங்கத்தின்ரை பேரன் பச்சை நோட் ஒண்டோடை ஆத்துப் பறந்து வந்தான். தனக்கு முன்னம் நாலைஞ்சு பேர் நிக்கினம். ஐயாத்துரை கதிரையிலை ஏறிப் படத்தடியிலை நிக்கிறான் எண்ட ஒரு கரிசனையுமில்லாமல் “ஐயாத்துரை அண்ணை….ஐயாத்துரை அண்ணை ரொயிலற் பேப்பர் றோல் ஒண்டு தாருங்கோ ” எண்டு கத்தினபடி ஆயிரத்தை நீட்ட, “பொறடா” எண்டு ஐயாத்துரை கத்தின சத்தத்திலை பெடி பயந்திட்டிது. கொஞ்ச நேரம் நிண்டம். ஐயாத்துரை வந்த ஓடரின்படி எனக்கு முதல் சீனியைத் தந்தான். நான் அதை வேண்டிக் கொண்டு வந்து கொஞ்சம் தள்ளி மருதமரத்தடியிலை முத்திலிங்கத்தின்ரை பேரன் வாறவரைக்கும் அவனைக் கதை கேப்பம் எண்டு நிண்டன்.

ஒரு கையிலை ரொயிலற் றோல் பக்கற். மற்றக் கையிலை சில்லறைக்குப் பதிலா குடுத்த இரண்டு பபிள் கம். அதிலை ஒண்டைக் கையிலையும் மற்றதை வாயுக்கையும் வைச்சுக் கொண்டு வந்தவனைிட்டை “ டே .. பேரா? ரொயிலற் றோலோடை வாறாய். ஆரேன் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கினமோ? எண்டு கேட்டன். “இல்லை. திருவிழாவுக்கு வந்தவை எல்லாரும் போன கிழமையே போவிட்டினம். “ எண்டான். “அப்ப ஏனெடா உதை வேண்டிக் கொண்டு போறாய்” எண்டு கேட்டன்.“அது அம்மா பாவிக்கிறவ. சித்தி வந்து காட்டிக் குடுத்திட்டுப் போனாப் பிறகு இப்ப அம்மா இதைத்தான் பாவிக்கிறவ” எண்டான். “என்னடா கறுமம் இது. அந்தக் குளிருக்கை தண்ணி பட்டால் குளிரும் எண்டிட்டு வெள்ளைக்காரன் கடுதாசியாலை துடைக்கப் போய் இப்ப எங்கடை சனமும் அதைப் பழகிவிட்டினம். பறவாயில்லை, வந்து இஞ்சை வெக்கேக்கை இருக்கிற ஆக்களுக்கும் உதைப் பழக்கிப் போட்டுப் போனகினமெல்லே! அதுான் எனக்கக் கவலை” எண்டு யோசிச்சபடி நடந்தன். எனக்குத் தலை கிறுகிறுக்கத் துவங்கிவிட்டுது.

எட எங்கடை முந்தின சனம் எல்லா பழக்க வழக்கத்துக்கும் பின்னாலை ஒரு இயற்கை இரகசியத்தை வைச்சிருக்கினம் எண்டதை விளங்காமல் எல்லாத்தையும் மாத்திக் குழப்பி, கூழாம் பாணியாக்கிப் போட்டிருக்கினம் இப்பத்தேயுள்ளவை. முந்தின காலத்திலை எல்லாற்றை வீட்டிலையும் ரொயிலற் வசதி கிடையாது. பொம்பிளையள் எல்லாரும் வீட்டுக்குப் பின்னாலையும். ஆம்பிளையள் எல்லாரும் வீட்டுக்குக் கிட்ட பனை இருந்தால் பனை வெளிக்கும், பத்தை மறைவிலையும் போறதாத்தான் நிலமை இருந்தது.

முந்தின ஆக்கள் எதுக்கெடுத்தாலும் ஒரு இயற்கை விஞ்ஞான விளக்கம் சொல்லுவினம். அதாவது தண்ணியாலை கழுவேக்கை கைவிரலுகள் எல்லாம் அண்டத்திலை படுமாம். அப்ப கைவிரல் நுனியிலை இருக்கிற மின்னலைகள் எல்லாம் அண்டத்திலை (குண்டலினி) பட்டு ஒரு மின்சார சுழற்சியை உடம்பிலை உண்டாக்குமாம். அது உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும் எண்ட விஞ்ஞான விளக்கத்தோடை பழக்கின பழக்கத்தை உந்த ரொயிலற் பேப்பர் கலாச்சாரம் வந்து கெடுத்துப்போட்டுது.

அது தானா வரேல்லை. போனவை அதைப் பழகிக் கொண்டு வந்து விட்டிட்டுப் போறது. சரி வாறனியள் அங்கத்தை சூழ்நிலையிலை பழகினதை எல்லாத்தையும் கட்டுநாயக்கா எயாப்போட்டோடை விட்டிட்டு வந்து இஞ்சத்தைச் சூழ்நிலைக்கேத்தாப்போலை நடவுங்கோ பாப்பம்.. பிறகு திரும்பிப் போகேக்கை விட்டதெல்லாத்தையும் கட்டுநாயக்காவிலை எடுத்துக் கொண்டு பிளேன் ஏறுங்கோ வன் .ஆர் வேண்டாம் எண்டு சொன்னது!

இப்ப முத்திலிங்கத்தின்ரை மேளுக்குத் தங்கைக்காரி வந்து துடைக்கிற பழக்கத்தைப் பழக்கிப்போட்டுப் போட்டாள் எண்டு வைச்சுக் கொள்ளுங்கோ.ரொயிலற் பேப்பரின்ரை விலை என்ன? அப்ப மாதத்துக்குச் செலவென்ன? முத்திலிங்கத்தின்ரை மருமோனின்ரை சம்பளம் என்ன? பெடிச்சி ரொயிலற் பேப்பரோடை நிக்கேல்லை. இப்ப அவளும் பிள்ளை குட்டியளும் “கோக் ” இல்லாமல் மத்தியானச் சாப்பாடு சாப்பிடுகினமில்லையாம்.

அதோடை போற வாறதெல்லாம் ஓட்டோவிலைதானாம். அது மாதிரி எத்தினை எத்தினை அரியண்டங்கள் நடக்கிது தெரியுமே? அப்ப வாறவை இதை யோசிக்கிறேல்லை. நிக்குமளவுக்கும் சதிராடிப் போட்டுப் போவிடுவினம். இருக்கிறவைக்கெல்லோ கழுத்திலை கயிறு. அப்ப எங்களுக்குத் தோதில்லாத விசியத்தைத் தலையிலை தூக்கி வைக்கிறதாலை வாற வில்லங்கங்கள் என்ன எண்டதை அடுத்த சனிக்கிழமையும் சொல்லுவன்.
– பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/91251/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொன்ன மூன்று கதைகளும் சிரிக்க/ சிந்திக்க அருமை. அந்த வட்டார வழக்கு கூடுதல் சுவை. ஒரே மொழியாயினும் இடத்திற்கு இடம் வழக்கு மாறும். ஆனாலும் கால்வாய் போன்ற ஒரு சிறிய கடற்பிரிவு எவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வருகிறது ! இந்த வழக்கு வகைகளே மொழியின் வளம். தமிழ் பல வண்ணங்களில் மிளிர்வது சிறப்பு.  

Link to comment
Share on other sites

“டொக்டரை விடாமல் பிடி” சனி முழுக்கு 4…

பொஸிற்றிவ்” பொன்னம்பலம்…

Positive-ponnar01.png?resize=683%2C800

 

வெய்யில் ஏற முன்னம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போட்டு வந்தாச்சு. இல்லாட்டி பஸ்ஸுக்கு  நிண்ட கழைப்போடை வெய்யிலுக்கையும் அம்பிட்டிருந்தால் பித்தம் கிளறித் தலையிடி வந்திருக்கும். பிறகு தலையைச்  சுத்து, சத்தி எண்டு வந்து பாட்டிலை போட்டிருக்கும். அதை நினைக்கப் பயமாக்கிடக்கு.

அது சரி நான் சொல்ல வந்ததை என்னெண்டு கேக்கேல்லை! ஏன் நான் ஆஸ்பத்திரிக்குப் போன்னான் எண்டும் கேக்கேல்லை! உவன் சந்திரன்ரை மகள் ஆஸ்பத்திரியிலை அக்சிடன்ற் வாட்டிலை  இருக்கிறாள். குதிக்கால் பிரண்டு நிமித்த ஒப்பிரேஷன் செய்து ஆறு தையல் போட்டபடி. கட்டோடை பெடிச்சியைப் பாக்கப் பாவமாக்கிடக்கு.  மோட்டுப் பெடிச்சி. அவள் செய்ததும் பிழைதானே. மச்சாள்காரி சொல்லிப்போட்டாள் எண்டதுக்காகத் தனக்கு  ஒவ்வாததைச் செய்யிறதே?

போன கிழமை உவளைப் பொம்பிளை பாக்க ஒரு பகுதி மட்டுவிலிலை இருந்து வந்தவை. சாதகமும் பொருத்தம். பெடிச்சியும் பளிச்செண்டு நல்ல ‘மா’  வெள்ளை. ஆனால் மாப்பிளையின்ரை தங்கைக்காரி சொன்னாளாம் பொம்பிளை கொஞ்சம் உயரக் குறைவெண்டு. அதாலை வீட்டை போய்  ஒருக்காக் கதைச்சுப்போட்டுச்  சொல்லுறம் எண்டு சொல்லிப்போட்டுப் போனவையாம். பதிலைக் காணேல்லை எண்டு உவள் சந்திரன்ரை மகள் எடுத்து ஜேர்மனியிலை உள்ள தன்ரை தமையனிட்டை  ரெலிபோனிலை அழுதவளாம். உடனை அவன்ரை பெண்சாதி – அதுதான் சந்திரன்ரை மருமேள்  ரெலிபோனைப் பறிச்சு,  “ ஏன் இவ்வளவு நாளும் அதுக்கெண்டு ஒண்டுஞ் சேய்யாமல் இருந்தனியள்? போன முறையும் நான் ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை படிச்சுப் படிச்சுச் சொன்னான். குதிக்கால் செருப்பு வாங்கிப் போட்டு நடந்து பழகும் எண்டு. நீர் என்ரை சொல்லைக் கேக்கேல்லை. இப்ப பாத்தீரே என்ன நடந்ததெண்டு? பறவாயில்லை இன்னும் ஒண்டும் குடி முழுகிப்போகேல்லை. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் உடனை  வாங்கும். வீட்டிலை ஒண்டுக்கு இரண்டு ஸ்கூட்டர் வாங்கித் தந்திருக்கிறம். அதிலை போய் வாங்க உங்களுக்குப் பஞ்சியாக் கிடக்கு என்ன?”  எண்டிட்டு மச்சாள்காரி ரெலிபோனை வச்சிட்டாவாம்.

சந்திரனுக்கு இதைச் சொன்ன உடனை சந்திரன் சொன்னானாம், “அண்ணிக்காரியின்ரை  சொல்லை அப்ப கேட்டிருந்தால்  உந்தச் சம்பந்தம் வடிவா ஒப்பேறி இருக்கும். ஒரு குதிக்கால் செருப்பாலை ஒரு பாங்கற்றை சம்பந்தத்தை விட்டிட்டம். சரி இனியாவது புத்தியோடை நடப்பம். சரி வெளிக்கிடு ரவுணுக்குப் போயிட்டு வருவம் எண்டு சந்திரன் மேளைக் கூட்டிக் கொண்டுபோய் நாலைஞ்சு கடையா ஏறி இறங்கினவனாம். ஏனெண்டால்  எல்லாச் சீலைக்கும் பொதுவாப் போடக் கூடியமாதிரி ஒண்டை வாங்க வேணுமெண்டு பெடிச்சி பிடிவாதமா நிண்டவளாம். கடைசியா ஒரு கடையிலைதான்  இரண்டு இஞ்சி உயரமான  செருப்பு ஒரு சோடியை வாங்கிக் கொண்டு வந்தவையாம். .  பெடிச்சி அதை ஒரு கிழமையாப் போட்டுப் பழகினாப் பிறகு ஒரு நாள் பாங்குக்கும் போகேக்கை போட்டுக் கொண்டு போயிருக்கிறாள். போயிட்டுத் திரும்பி வந்து ஸ்கூட்டரை எடுக்கேக்கை கானுக்கை கிடந்த கல்லைப் பெடிச்சி கவனிக்கேல்லை.  குதிக்கால் பக்கம் கல்லிலை பட்டுப் பிரட்டி விட்டிட்டுது. பின்பக்கமா விழுந்தாப்போலை கால்  “டானா” மாதிரித் திரும்பிவிட்டுது. செருப்பும் அறுந்து போச்சுது. ஒரு டாக்குத்தருக்குப் படிக்கிற பெடி பின்னாலை வந்தபடியாலை அவளின்ரை தலை  றோட்டிலை அடிகுண்ணாமல் அந்தப் பெடி பிடிச்சுப்போட்டான்.  அவன்தான் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேத்துப்போட்டுச் சந்திரனுக்கும் தகவல் குடுத்தவன். பெடி நல்லவனாக் கிடக்கு. ஏனெண்டால் தினமும் வந்து சந்திரன்ரை பெட்டையைப் பாக்கிறனாம். டாக்குத்தர்மாரோடை கதைக்கிறானாம். “அங்கிள் நீங்கள் கஷ்டப்பட்டு வராதையுங்கோ நான் பாத்துக் கொள்ளுறன்” எண்டு சொல்லி  சந்திரன்ரை பெட்டைக்கு ஒரே அப்பிளாலையும் ,தோடம்பழத்தாலையும்  அபிஷேகமாம். நான் போய் நிக்கேக்கையும் அவனைக் கண்டனான். அப்ப சந்திரன் அங்கை  இல்லை. அந்தப் பெடிதான் அவளுக்குத் தண்ணி, வெந்நி குடுத்தவன். அவளும் கால் மடங்கிப் போச்சுதெண்ட  துக்கமும் இல்லாமல் சந்தோஷமா இருக்கிறதாத்தான் எனக்குத் தெரியிது. நான் நினைக்கிறன் சந்திரனுக்கு ஒரு தலையிடி நீங்கிச்சுதெண்டு. பெடிச்சீன்ரை கால் எப்பிடியும் சரிவந்திடும் என்ன?

சந்திரன்ரை பெடிச்சீன்ரை விசியத்திலை கால் மடங்கினாலும் வெற்றி எண்டு தான் சொல்லவேணும். ஆனால் எல்லாருக்கும் உப்பிடி ஒரு சான்ஸ் வருமோ? சந்திரன்ரை பெடிச்சியைக் கட்டப்போறவனுக்குப் பொல்லாலை அடிச்ச மாதிரிச்  சொத்தும் காசும் எல்லே சீதனமாக் கிடக்கு. சந்திரனிட்டை என்ன இல்லை?  இதைக் கேட்டிட்டு  ஜேர்மனியிலை சந்திரன்ரை பெடி தன்ரை பெண்சாதியோடை சண்டையாம். “சும்மா நிண்டவளைக் குதிக்கால் செருப்பை வாங்கி நடந்து பழகு எண்டு  சொல்லிக் கடைசியிலை தங்கச்சியை  நொண்டி ஆக்கினதுதான் மிச் சமெண்டு.”  அதுக்கு அவள் சொல்லுறாளாம்  “போன முறை ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை உங்கடை தங்கச்சியின்ரை சாதகத்தைப் கொண்டுபோய்ப் பாத்தனான். அவளுக்குக் கிரக தோஷம் இருக்காம். அது கழிஞ்சால்தான்  கழுத்திலை தாலி ஏறுமாம்”  எண்டு சாத்திரி பலன் சொன்னவர். “அப்ப குதிக்கால் பிரண்டபடியாலை கிரகதோஷம் விலகிவிட்டுது.இனி கலியாணஞ் சரிவருமாம்”  எண்டு அவள் அடிச்சுச் சொல்லுறாளாம். டொக்டர் பெடியின்ரை  கதையை ஆரும் இன்னும் அவைக்குச்  சொல்லேல்லையாம். சொன்னால் மேன்காரன்  சிலவேளை தன்னிலை பாய்வனோ?  எண்டு சந்திரன் பயப்பிடுறான்.

சந்திரனுக்கு , “இப்ப உள்ளவைக்கு நாட்டு நடப்பு  விளங்குமோ? கலியாணம் ஒண்டை ஒப்பேற்றிறதிலை   இருக்கிற கயிட்டப்பாடு தெரியுமோ?  நல்ல முயற்சியுள்ள, குடும்பத்தை அக்கறையோடை தாங்கிற ஒருத்தன் வந்து அமையிறதுக்குக் குடுத்து வைக்க வேணும்.” எண்டு நான் சொன்னன். அதுக்குச் சந்திரன் சொல்லுறான் பொன்னம்பலண்ணை  எனக்கு உது விளங்கிது. ஆனால் என்ரை பெடியன் “ உந்த டாக்குத்தர் பெடி  ஆர்  எவரெண்டு  விசாரிச்சனீங்களோ? அவன்ரை பின்னணி என்ன அப்பா?” எண்டு கட்டாயம் கேப்பன். அப்பிடி அவன் கேட்டால், நான் என்னத்தைச் சொல்லுறது? அவனுக்கு உது பிடியாட்டில் தண்ணியைப் போட்டிட்டு விடிய விடிய என்னை முழிக்க வைச்சுக் கேளாத கேள்வி கேட்டே சாக்காட்டிப் போடுவன். அதுக்கெல்லே பயமாக்கிடக்கு.” எண்டு சந்திரன் சொல்லுறான். சந்திரன்ரை இக்கட்டும் எங்களுக்கு நல்லா விளங்கிது. ஆனால் உதெல்லாத்துக்கும் முதல் சந்திரன் தன்ரை  பெடிச்சி “சொல்வழி கேப்பளோ ? பிடிச்சவள் விடுவளோ?எண்டு தெரியாது,”  எண்டு சந்திரன் நல்லாப் பயப்பிடுறான்.

உதை எப்பிடிச் சமாளிக்கிறதெண்டு நான் சந்திரனுக்கு ஒரு உத்தி சொல்லிக் குடுத்தன். “சந்திரன்!  குதிக்கால் செருப்பு வாங்க ஐடியா  குடுத்தது ஆர்? அவளின்ரை தமையன் பெண்சாதி. அது தான்  உன்ரை மேன்ரை பெடிச்சி எல்லே! அவள் உனக்கு மருமோள். என்ன? பேசாமல்  அவளோடை உன்ரை மேளைக் கதைச்சு விசியத்தைக் கக்கப்பண்ணு. அவள் தன்ரை புருசனைச் சமாளிக்கட்டும். வேற வழியில்லை. முள்ளை முள்ளாலைதான் எடுக்க வேணும். ” எண்டு புத்தி சொல்லிக் குடுத்து இருக்கிறன்.

ஒரு கட்டைப் பொம்பிளைக்கு இரண்டு  இஞ்சி உயரமுள்ள ஒரு குதிக்கால் செருப்பு வாங்கிக்குடுத்து அவளைப் பாக்கிற பெடியை அவள் உயரம் எண்டு நம்பப் பண்ணுறது அவ்வளவுக்குச் சரி எண்டு எனக்குப் படேல்லை. அதைப் பாத்துப் பெடிச்சி உயரம் எண்டு  நம்பி அவளைக் கட்டுறவன் நல்ல விளப்பமுள்ளவனா இருப்பன் எண்டு நினைக்கிறியளே? நல்லகாலம் , உவன்  பாங்கர் திரும்பி வராதது. நாங்கள் கயிட்டத்திலை இருக்கேக்கை உதவுறவன்தான் உண்மையான விசுவாசி. ஆனபடியாலை டொக்டரை விடாமல் பிடி”  எண்டு சந்திரனிட்டைச் சொன்னன். பிறகு நான் சந்திரனைச் சந்திக்கேல்லை. ஆனபடியாலை அதுக்கங்காலை என்ன நடந்ததெண்டதுக்கு என்னட்டை விபரமும் இல்லை

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

http://globaltamilnews.net/2018/91862/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு விசியத்தைப் பற்றிக் கதைக்கேக்கை நல்லது கெட்டது எண்டு எல்லாத்தையும் கதைக்க வேணும்…

சனி முழுக்கு 5 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

 

படம் – சிரித்திரன் சுந்தர்…

ஒரு விசியத்தைப் பற்றிக் கதைக்கேக்கை நல்லது கெட்டது எண்டு எல்லாத்தையும் கதைக்க வேணும். அது தான் ஒரு ஜென்ரில்மேனுக்கு அழகு. அதைவிட்டிட்டு கெட்டதை மட்டும் கதைச்சிட்டு விடப்பிடாது. அதிலை  நல்லதைக் கதைச்சு அவையளைப்பற்றிப்  புழுகிப்போட்டு விடவும் பிடாது. இரண்டும் வில்லங்கமான விசியம்.கெட்டதை மட்டும் கதைச்சிட்டு விட்டால் அவையின்ரை மனம் நொந்து போம். செய்யிறதையும் செய்யாமல் விடடிடுவினம்.  நல்லதைமட்டும் சொல்லிப் போட்டு விட்டால் அவை கண்விண் தெரியாமல் போய் எங்கையாச்சும் மோதிக் கீதி இருக்கிறதையும் துலைச்சுப்போட்டு நடுச்சந்தியிலை நிப்பினம். உதிலை எனக்கு நல்ல அனுபவம் இருக்கு.

வெளிநாட்டிலை இருக்கிற தமிழ் ஆக்களுக்கை நல்லவையும் வருகினம். அவை நல்லதைச் செய்திட்டுப் போகினம்.  சிலர் வந்து இஞ்சை உள்ளவையளைக் குட்டிச் சுவராக்கிப்போட்டுப் போறவையும்  இருக்கினம். இப்ப கிட்டடியிலை அம்பலவாணி வாத்தியாற்றை மேன் கனடாவிலை இருந்து வந்தவன். வாத்தியாற்றை மேனெண்டால் சின்ன வயசெண்டு நினைக்காதையுங்கோ. அவனுக்கும் இப்ப ஐம்பத்தெட்டைத் தாண்டீட்டுது. கட்டினது வெள்ளைக்காரியை. வாத்தியார் இருக்கும்வரைக்கும் இந்தப் பக்கம் எட்டிப் பாக்காதவன் வாத்தியார் செத்தாப் பிறகு தாயைப் பாக்க எண்டு இரண்டொருதடவை வந்து போய்  இப்ப மூண்டாம் முறையா வாத்தியாற்றை துவசத்திக்கு வந்திருக்கிறான்.  வந்தவன் வெள்ளையையும் கூட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறான். அவளும் தெற்றித் தெற்றிக் கொஞ்சம் தமிழ் கதைக்கிறாள். சீலை உடுத்துக் கும்குமப்பொட்டும் வைச்சு அவள் நல்லாத் தமிழ் பண்பாட்டோடை சேந்திட்டாள். இரண்டு பேருமாச் சேந்து தங்கடை தங்கடை உழைப்பிலை கொஞ்சம் கொண்டு வந்தவை. துவசத்துக்கு எல்லாரையும் வரச்சொல்லி நல்ல சாப்பாடு போட்டிட்டு தன்ரை தாயின்ரை ஆக்களையும் தேப்பன்ரை ஆக்களையும் நிக்கச் சொன்னவன். வந்த மற்றெல்லாரும் போனாப் பிறகு, எல்லாரையும் கூப்பிட்டு வட்டமாக் கதிரையைப் போடச் சொல்லி முத்தத்திலை இருத்தினான். பொக்கற்றுக்காலை ஒரு துண்டை எடுத்துப் படிக்கத்துவங்க எல்லாருக்கும் முகம் கறுத்துப் போச்சுது. அவன்  அங்கை நிண்ட தன்ரை சொந்தக்காரற்றை போக்கு வரவு எல்லாத்தையும் சொல்லி அவையின்ரை  செலவு சித்தாயத்தை எல்லாம் துல்லியமா வாசிச்சவன். ஆர்  வீட்டை மோட்டச் சைக்கிள் இருக்கு.ஆர் வீட்டை இரண்டு சில்லுச் சைக்கிள் இருக்கு. ஆற்றை பிள்ளையள் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போறவை. ஆற்றை பிள்ளை படிக்கிது. ஆற்றை றோட்டிலை அலையிது  எண்டு அவை சம்பந்தப்பட்ட எல்லாக் காரியத்தையும் அக்கு வேறா ஆணி வேறா ச் சொல்லிப்போட்டு உங்களுக்கு என்ன உதவி செய்தால் கொஞ்சம் சந்தோஷமா ச் சீவியத்தைக் கொண்டு போவியள்? எண்டு கேக்க ஒருத்தரும் வாய் திறக்கேல்லை. என்னெண்டு திறக்கிறது. பிறகு அவன் அதிலை உண்மையாக் கஸ்டப்பட்டவை கொஞ்சப்பேருக்கு உதவி செய்தவன். காசாக் குடுக்கேல்லை. படிக்கக் கூடிய பிள்ளையளுக்கு மாதா மாதம் வரக் கூடியமாதிரி ஒரு உதவி. பெரியவைக்குத் தொழில் செய்யக்கூடிய முறையிலை அதுக்குரிய சாமான்களை வாங்கிக் குடுத்தவன்.

அவன் ஒரு பகுதிக்குத் தையல் மெஷினை வேண்டிக் குடுத்துத் துவக்கிவிட்டதாலை அந்தப் பெடிச்சி இன்னும் இரண்டு மூண்டு பெடிச்சியளோடை சேந்து சங்கக்கடைக்குப் பக்கத்திலை கிடந்த கடையை மாதம் ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்துத் தையல் கடை போட்டிருக்கிறாள். மற்றொரு பெடிச்சி இரண்டு ஆடு வாங்கியிருக்கிறாள். இன்னுமொருத்தனுக்கு வாட்டர் பம்ப் , வயர் எண்டு வேண்டிக்குடுத்து ஊரிலை இருக்கி கிணறுகளை இறைக்கிற தொழில். இப்பிடிப் பல விசியத்திலை அம்பலவாணியின்ரை பெடி சொந்தக்காருக்கு உதவி செய்திருக்கு. அவன் மனுசன்.

இப்ப பொன்னம்பல அண்ணை என்ன சொல்லவாறன் எண்டால் ஒரு தனி  மனுசனாலை இவ்வளவையும் செய்யேலுமெண்டால் உலகம் முழுக்க இருக்கிற கிட்டத்தட்ட வசதியான யாழ்ப்பாணத்துத் தமிழ் ஆக்கள் எவ்வளவத்தைச் செய்யலாம்?கொஞ்சம் யோசியுங்கோ.  தயவு செய்து வந்து எங்கடை மண்ணுக்கு ஏதேனும் செய்யுங்கோ. அம்பலவாணி வாத்தியாற்றை மேன் செய்தமாதிரித்தான் செய்யுங்கோ. மறந்துபோயும் காசாக் குடுத்திடாதையுங்கோ. அதாலை  சிலதுகள் செடில்குத்திக் காவடி எடுக்கத் துவங்கிவிடுவினம். ஆனால் உங்கடை காலிலை விழுந்து மன்றாடிச் சொல்லுறன்  கோடி கோடியாக் கொட்டி கோயிலுக்கு எடுப்பெடாதையுங்கோ. நீங்கள் கோயிலுக்குச் செய்தது காணும். அப்பிடிக் கோயிலுக்குத்தான் செய்ய வேணும் எண்டால் எங்கையேன் தூந்து போயிருக்கிற கோயிலாப் பாத்துப் போய் அதுக்குச் செய்யுங்கோ. ஒண்டையே திருப்பித் திருப்பி இடிச்சுக் கட்டாதையுங்கோ. இப்ப கிட்டடியிலை ஒரு பேப்பரிலை பாத்தனான். வெளி நாட்டிலை இருந்து வந்தவை கோயிலுக்குப் போய் அரிச்சனை செய்தாப் பிறகு  அந்தக் கோயிலுக்குப் பொறுப்பான ஐயரிட்டை “நாங்கள் கன நாளைக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறம். இந்தக் கோயிலிலை என்ன குறை இருக்குச் செய்ய?” எண்டு கேட்டினமாம். அதுக்கு ஐயர் சொன்னாராம்  செய்ய வேண்டிய எல்லாம் திருப்தியாச்  செய்திட்டம். உந்தக் கொடித் தம்பத்துக்குப் பவுண் முலாம் பூசினால் நல்லது எண்டு பாக்கிறம் எண்டு. அப்ப பாருங்கோ அவனாரோ சென்ன மாதிரி “ சந்தனம் கூடினால்……… அங்கை தடவச் சொல்லி” எண்ட மாதிரிக் கதை கிடக்கு. முந்தின மாதிரிக் கோயிலாலை இப்ப சனத்துக்கு ஒரு சுகமும் இல்லை. கடைசி ஒரு பிரசங்கம், வில்லுப்பாட்டுக் கச்சேரி. தமிழ் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திற நாட்டியம், நாடகம் எண்டு ஒண்டும் நடக்கேல்லை. கோயிலைச் சேந்திருக்கிற ஆக்கள்தான் கோயிலை வைச்சு உழைச்சுச் சொத்துச் சுகத்தோடை இருக்கினம். அப்பிடிச்  சனத்தை வருத்திக் கொஞ்சச் சோம்பேறியளை வளக்கிறதுக்கு விருப்பம் எண்டால் கோயிலை மாடி மாடியாக் கட்டுங்கோ. அதுக்கு லிப்ட் வசதியும் போட்டு விட்டால் சனம் நோகாமல் ஏறிக் கும்பிட்டிட்டுப் போகும். கோயிலடியிலைதான் செய்ய வேணும் எண்டால் ,சனம் நல்லா இருக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சா  அந்தக் கோயில்களுக்குக் கிட்டவா கடைசி தண்ணி தேங்கக் கூடிய மாதிரி ஒரு குளத்தை வெட்டுங்கோ. அப்ப அயலிலை இருக்கிற கிணறுகளிலை தண்ணி நிக்கும். சனம் கன காலத்துக்கு நின்மதியா  நல்ல தண்ணியாவது குடிக்கும். ஒரு மனுசனுக்கு என்னத்தைக் குடுக்கலாம். என்ன செய்தால் அவன் நல்லா வருவன் எண்டு கணிச்சுச் செய்ய வேணும். அப்பிடித்தான் ஊருக்கும் செய்ய வேணும். சனத்துக்கு நல்ல மனசு.  என்னத்தைக் குடுத்தாலும் வேண்டாம் எண்டு சொல்லாமல் வேண்டுவினம். “பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடு”எண்டு..! உதைத்தான் எங்கடை மூதாதையர் சொன்னவையள் எண்டு அப்பு அடிக்கடி சொல்லுறவர்.

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/92792/

Link to comment
Share on other sites

“அங்கை இருந்து வந்து முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம்”

 

 

சனி முழுக்கு – 6 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

Positive-ponnar01.png?resize=683%2C800

 

நல்லூர்த் திருவிழா நடக்கிது. அதோடை கனக்கக் கலியாண வீடுகளுக்கும் நாள் வைச்சிருக்கினம். எப்பிடியும் ஒரு குடும்பத்துக்கு ஒராள் தன்னும் இப்ப  வெளியாலை இருக்கினமெல்லே! அவை இப்பிடியான சாட்டை வைச்சுக் கொண்டு வந்துதானே ஒருக்கா ஊரைப் பாத்திட்டுப் போகலாம். அப்பிடி என்ரை மருமோன்ரை சகோதரிக்குக் கலியாணம் எண்டு அவனும் இப்ப குடும்பத்தோடை வந்திருக்கிறான். வந்திறங்கின உடனை அவன் என்னட்டை முதல் கேட்ட கேள்வி “மாமா இஞ்சை உங்களிட்டை வை-பை இருக்கோ?” எண்டதுதான். எனக்கு முதலிலை அது விளங்கேல்லை. “பொலித்தீன் பையளைப் பாவிக்க வேண்டாம் எண்டு அரசாங்கம் சொன்னாப் பிறகு கடதாசிப் பையனைச் சனம் இப்ப பாவிக்கத் துவங்கிவிட்டினம். ஓம் இருக்கு.” எண்டன். அவன் சிரிச்சுப்போட்டு தான் கேட்டதை எனக்கு விளங்கப்படுத்தினவன். அப்பதான் எனக்குத் தெரிஞ்சிது ரெலிபோனுக்குத் தீன் போடக் கேக்கிறான் எண்டு. இரண்டாவதாக்  கேட்ட  கேள்வி  “பாத்ரூம் அற்றாஜ்டோ?” அதாவது குளியலறை கக்கூஸ் வீட்டோடை சேந்தோ இருக்கு? எண்டதுதான். இல்லைக் கொஞ்சந் தள்ளித் தண்ணி ராங்குக் கீழைதான் கட்டியிருக்கிறம் எண்டன். “மாமா இன்னும் நீங்கள் மாட்டு வண்டிக் காலத்திலைதான் இருக்கிறியள். உலகம் இப்ப எங்கை போயிட்டுது தெரியுமோ? எண்டு கேட்டானே ஒரு கேள்வி. எனக்கு வந்த கோவம். மெல்ல அடக்கிப் போட்டன். எட உங்கை போக முன்னம் நீயும் பனை, பத்தையளைத் தேடிப்போன ஆள் தானே? இப்ப என்ன அதை எல்லாத்தையும் மறந்து நிண்டு ஆடுறாய்? எண்டு கேக்க வேணும் எண்டுமனசுக்கை நினைச்சுக் கொண்டு ஒண்டும் பேசாமல் இருந்திட்டன். அவனுக்கு என்ரை கோலம் விளங்கீட்டுது.அவனுக்கு என்னை எப்பிடி மடக்கலாம் எண்டு தெரியம். உடனை தோளிலை கிடந்த பாக்குக்குள்ளாலை தான் எனக்கெண்டு கொண்டு வந்த போத்திலை எடுத்துத் தந்திட்டு உள்ளுக்கை போட்டான்.

கொஞ்சம் பொறுத்து அவன்ரை மனுசி வந்தாள். “எப்பிரி மாமா இருக்கிறியள்? சுக்கம் தானே?” எண்டிட்டு “இங்க கிற்ற சலூன் இறுக்கா?” எண்டாள். “ஓம் கோயிலடியிலை மணியத்தின்ரை சலூன்  இருக்கு. ஆருக்குப் பிள்ளை தலைமயிர் வெட்டப்போறாய்? எண்டு கேட்டன்.“தலமுடி வெட்ட இல்ல. பேஷியல் செய்ய” எண்டாள். பிறகு இஞ்சை ஆருக்காருக்கோ ரெலிபோன் எடுத்துப் பேசினாள். கொஞ்ச நேரத்திலை ஒருத்தி ஒரு ஓட்டோவிலை வந்து இவளையும் கூட்டிக் கொண்டு போனவள். போகேக்கை என்னோடை இருக்கிற பெறாமேளையும் கூட்டிக் கொண்டு போய் நாலு மணித்தியாலத்துக்குப் பிறகு திரும்பி வந்தினம். வரேக்கை அவளவையின்ரை கோலத்தைப் பாக்க  எனக்கு விசராக்கிப்போட்டுது.

அதுக்கை முசுப்பாத்தி என்னெண்டால் அவையோடை போன என்ரை பெறாமேளை எங்கையெண்டு தேடினதுதான். அவள் கறுப்பி எண்டாலும் நல்ல முகவெட்டு. கன்னங் கரேல் எண்டு நீட்டுத் தலைமயிர். பாக்க வடிவுதான். இவளவை அவளின்ரை தலைமயிரையும் அரைவாசியா வெட்டி முகத்துக்கும் அதை இதைத் தேச்சு கண் புருவத்தையும் வழிச்சு அலங்கோலமாயக் கொண்டு வந்து விட்டாளவை. எனக்கு அவளின்ரை தலை வெட்டைப் பாக்கேக்கை என்ன மாதிரிக் கிடந்தது எண்டால் எங்கடை ஊர்ச் சாவல் சேத்துக்கை கிடந்து உருண்டு போட்டு வரேக்கை நல்ல காய்ஞ்ச வால் இறகுகள் சேறுபட்டு அரியண்டமாக் கிடக்குமெல்லே? அப்பிடி இருந்திது. ஆனால் அவளைப் பாத்தன் கழுத்துக்கை பிடிச்சவை கழுத்தைத் திருப்பாமல் இறுக்கிப் பிடிக்கிற மாதிரிக் கழுத்தை வைச்சுக் கொண்டு சுத்திச் சுத்திக் கண்ணாடியிலை தன்ரை தலைமயிர் வெட்டைப் பாத்து இரசிச்சுக் கொண்டு நிக்கிறா. அந்தக் கண்ணுறாவியைக் கண் கொண்டு பாக்கேலாமை கிடந்திது. கேட்டதுக்குச் சொல்லுறாளவை  “உதைத்தான் இப்ப உள்ளவையும் விரும்பீனம். நீங்கள் மாமா இன்னும் பங்கருக்கை இருக்கிறமாதிரித்தான் இருக்கிறியள். வெளியிலை வந்து ஊருலகத்திலை என்ன நடக்கிதெண்டதையும் பாருங்கோ” – எண்டு. ஒண்டும் கதைக்கேலாமைக் கிடக்கு. நல்லூருக்கை பாத்தன் . வெள்ளைக் காறியள் தலைமயிரை வளத்துப் பின்னிச் சீலை உடுத்து,  சிவத்த ஒட்டுப் பொட்டுப் போட்டுக் கொண்டு திரியினம். அவளவைக்கு எங்கடை கலை கலாச்சாரத்திலை இருக்கிற பெறுமதி என்ன எண்டு வளங்கிது. ஆனால் இவை எங்கடையள் என்ன செய்யினம் எண்டு பாத்தால் இப்பிடிச் செடில் குத்திக் காவடி ஆடினம்.

அப்ப உவளவையின்ரை நினைப்பென்ன? கலை கலாசாரம் பண்பாடு எண்ட எல்லாத்தையும் வெட்டிக் குழி தோண்டிப் புதைச்சாப் பிறகு உவை என்னத்தைச்  செய்யப் போகினம். ஆக மிதமிஞ்சி இன்னும் ஒரு இருவது வருசத்துக்கு இவை இஞ்சை வருவினம். பிறகு உவையின்ரை பிள்ளை குட்டியள் உவயைக் கொண்டு போய் அங்கை உள்ள வயோதிப மடத்திலை விட்டுடிவினம். அவை இஞ்சை வந்து என்ன சொந்தங் கொண்டாடப் போயினமே? அப்ப இப்ப வந்து இங்கை உள்ளவையளைக் குழப்பாமல் எங்கடை கலாசாரத்தையும் அனுசரிச்சுப் போற மாதிரியெல்லே விசியங்களைக் கொண்டு போக வேணும்.

இதென்ன நடக்கிதெண்டால், கொஞ்சப் பேர் வந்து கோயிலை இடிச்சுக் கட்டுறன் எண்டிட்டு கோயிலையும் சனத்தையும் இடஞ்சல் படுத்தினம். அவை கொஞ்சக் காசோடை வந்து முதலிலை ஊருக்கை பெரியவை எண்டு இருக்கிறவைக்கும், ஐயருக்கும் சேத்து வாய்க்கரிசி போட்டுடுவினம். பிறகு அவை வாய்திறக்காயினம். பிறகு தாங்கள் நினைச்ச  சதிரை ஆடுறதுதானே?

இன்னுங் கொஞ்சம் வந்து என்ன ஏதெண்டு பாராமல் இஞ்சை இருக்கிறவைக்கு உதவி செய்யிறம் எண்ட கரிசனையிலை அவையின்ரை வசதி வாய்ப்பைக் கூட்டி அவையளை முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம். ஊருக்குச் சோக்காட்டின பிறகு அவை என்னெண்டு கீழை இறங்கிறது. அப்பிடியே அதைக் காப்பாற்ற கடனைக் கிடனை வேண்டிச் சமாளிச்சுக் கடைசியிலை கந்தறுகிறதுதானே!

இப்ப கிட்டியிலை நடந்ததொரு விளையாட்டைச் சொல்லுறன். ஒரு பகுதி சுவிஸிலை நிண்டு வந்தவை. சகோதரி வீட்டைதான் நிண்டவை. அவளின்ரை பெடி  உற்சாகம் குறைஞ்ச ஒரு சீவன். நாள் கூலிக்குப் போய் வந்தது.வந்தவை தாங்கள் நிக்கிற லீவிலை  அந்தப் பெடியை  வேலைக்குப் போக வேண்டாம் எண்டு நிப்பாட்டி லேணேர்ஸ்ஸிட்டை அனுப்பி  அதுக்கு ஒட்டோ ஓடப் பழக்கத் துவக்கிவிட்டு அவை திரும்பிப் போட்டினம். பெடியும் தட்டித்தவறிப் பழகி லைசென்ஸ் எடுத்திட்டு அவைக்கு அறிவிச்சால் அவை இண்டைக்கு நாளைக்கு எண்டு சொல்லிக் கடத்தி கொஞ்சக் காசை அனுப்பி உதை முதலிலை கட்டி ஒட்டோவை எடுங்கோ பிறகு மிச்சத்தைத்தாறம் எண்டு சொல்ல, இஞ்சையுள்ள பேயடையளும் நம்பி லீசிங் போட்டு ஒரு ஓட்டோவை எடுத்தாச்சு. பெடி ஒரு நாளைக்கு ஓடும். மற்ற நாள் படுத்திடும். அப்பிடி இப்பிடி ஓடினதாலை லீசிங்கை ஒழுங்காக் கட்டேல்லை. கொம்பனியாலை ஆளைத் தேடி வந்திட்டினம்.பிறகு வந்தவைக்கு இவை சுவிஸ் கதையைச் சொல்ல அவங்களும் ஒரு மாதத் தவணையைக் குடுத்திட்டுப் போட்டாங்கள். பிறகு சுவிஸுக்குப் போன் பண்ணி விசியத்தைச் சொல்லுறதுக்காக வேண்டிப் போன் எடுத்தால் அங்காலை இருந்து பதில் இல்லை. சரி நிலமையைச் சரிக்கட்ட வேணும் எண்டிட்டுப் பெடியின்ரை சகோதரி காப்பை அடைவு வைச்சு லீசிங் காசிலை ஒரு பகுதியைக் கட்டினால் அவங்கள் அதிலை கட்டாமல் கிடந்த  வட்டியைக் கழிச்சுப்போட்டாங்கள். இப்ப அந்த அடவையும் எடுக்கேலாமல் திண்டாடுகினம். ஒரு மாதிரி சுவிஸுக்கு ரெலிபோன் எடுத்தால் அவன் மாமன்காரன் காரிலை அடிபட்டு ஆஸ்பத்திரியிலையாம். அதாலை அங்கையிருந்து ஒரு சதமும் இப்ப வராது. அதுக்கிடையிலை ஒண்டரை மாசத்துக்கப் பிறகு லீசிங் கம்பெனி வந்து ஓட்டோவையும் பறிச்சுக் கொண்டுபோயிட்டினம். இப்ப எல்லாரும் நடு ரோட்டிலை நிக்கினம்.  கேட்டியளே  சங்கதியை என்னெண்டு?

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

http://globaltamilnews.net/2018/93750/

Link to comment
Share on other sites

“அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” –

சனி முழுக்கு – 7 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”…

Positive-ponnar01.png?resize=683%2C800
சொன்னால் கேக்கமாட்டினம். தாங்கள் நினைச்சது மாதிரித்தான் எல்லாத்தையும் செய்வினம்.ஏதேன் சொல்ல வெளிக்கிட்டால் “அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” எண்டு ஒற்றைச் சொல்லிலை முறுச்சுக் கதைப்பினம். அதாலை அவை எங்கை பொறிஞ்சு கொட்டிண்டாலும் நான் வாய் திறக்கிறேல்லை. என்ன? நான் சொல்லுறது சரியோ, பிழையோ? தெரியாது! இண்டைக்கு சனிக்கிழமை. நல்லூர்த் தேர் எண்டு எல்லாருக்கும் விளங்கும். நானும் போன்னான். வெய்யில் நல்லாச் சுட்டுப் போட்டுது. இருந்தும் நான் ஒண்டுக்கும் கிறுங்கேல்லை. சுட்டால் சுடட்டுக்கும் எண்டு நிண்டு தேர் இருப்புக்கு வரும் வரைக்கும் பாத்துச் சுவாமியைக் கும்பிட்டிட்டு துர்க்கா மணி மண்டபத்திலை மதியம் அன்னதானச் சாப்பாடு. அதையும் நிண்டு நல்லா வெட்டிப் போட்டு, பருத்தித்துறை றோட்டிலை போட்டிருக்கிற முன் வாசல் பந்தலிலை கொஞ்ச நேரம் இருந்து விடுப்புப் பாத்திட்டுத்தான் வந்தனான்.

 

வரியம் வரியம் வாற மாதிரி வெளி நாட்டுச் சனம் கனக்க. அவை வெளிநாட்டாக்கள் எண்டதை அவையின்ரை சீலை சட்டையையும், பூச்சையும் வைச்சுச் சொல்லலாம். அதோடை கையிலை ஒரு தண்ணிப் போத்திலையும் கட்டாயம் வைச்சிருப்பினம். அப்பிடி ஒரு சனம் வந்து மேற்கு வீதியிலை நிண்டவை. அப்பிடியே ரெம்பிள் றோட்டாலை வந்த தூக்குக் காவடியைப் பாத்துக் கொண்டு நிண்டினம். தொடர்ந்து கன காவடியள் வந்தது. வழக்கமா வந்ததிலும் பாக்கக் கன காவடியள். நிண்டும், இருந்தும், கிடந்தும் எண்டு பல கோணத்திலை காவடி எடுத்தவையைக் குத்திக் கட்டிக் கிட்ந்திது. இதைக் கண்டிட்டுத்தான் அந்த ஜேர்மனியிலை இருந்து வந்த குடும்பமொண்டும் நரிசலையும் பாக்காமல் நிண்டிட்டினம். அதிலை வந்தவையளிலை தாய்க்காரி தன்ரை கான்போனிலை காவடியளைப் படம் எடுத்துக் கொண்டு நிண்டதிலை மேளைக் கவனிக்கேல்லை. பின்னுக்கு நிப்பாள் எண்ட நினைவிலை நிண்டிட்டாள்.படம் எடுத்து முடியத்தான் சடார் எண்டு திரும்பிப்பாத்தால் மேளைக் காணேல்லை. ஆத்துப் பறந்து தேடினால் அந்தச் சனத்துக்கை ஆரைப் பிடிக்கிறது? என்ரை ஐயோ எண்டு ஒப்பாரி. தாங்கேலாமைப் போச்சுது.“பிள்ளையைக் காணேல்லை….. பிள்ளையைக் காணேல்லை” எண்டு சத்தம் போட்டால் காணுமே? தேடவெல்லோ வேணும். அந்தச் சனத்துக்கை எங்கையெண்டு தேடுறது? இவையுக்கை ஒரு பிரச்சினை என்னெண்டால், பெடிச்சிக்கு ஜேர்மன் பாஷையைத் தவிர வேறை பாஷை ஒண்டுந் தெரியாது. இங்கிலிசும் அரை குறையாம்.

தாய் பெடிச்சியைத் தேடினமாதிரிப் பெடிச்சியும் தாயைத் தேடிப்போட்டுப் பயத்திலை போய் அழுது கொண்டு மேற்கு வீதியிலை உள்ள வயிரவரடியிலை இருந்திட்டுது. அதைப் பாத்த ஆரோ வந்து சொல்ல ஒரு மாதிரித் தேடிப் பிடிச்சாச்சு எண்ட சந்தோஷத்திலை திருவிழாப் பாத்தது காணும் எண்டிட்டு அவை வெளிக்கிட்டுப் போட்டினம்.

உந்த வெளிநாட்டிலை இருந்து வாற சனம் தங்கடை பிள்ளையளுக்கு வீட்டிலை யாவது வைச்சுத் தமிழைச் சொல்லிக் குடுக்கலாம் எல்லே? எல்லாரும் இல்லை. சில பேர் அதிலை அக்கறை இல்லை. தமிழைப் பேசுறதை நாகரீகமில்லை எண்டு நினைக்கினமோ தெரியாது. தமிழைப் படிக்கிறதாலை லாபம் கனக்க எண்டு அவைக்குத் தெரியாது. எத்தினை வெள்ளையள் வந்து தமிழ் நாட்டிலை விழுந்து விழுந்து தமிழைப் படிக்கினம். ஏனெண்டால் தமிழிலைதான் இயற்கைக் கல்வி கனக்கக் கிடக்கிதெண்டு பண்டிதர் அடிக்கடி சொல்லுறவர். இப்ப பாருங்கோவன் திருக்குறளை எத்தினை பாஷையிலை மொழிபெயர்பு்புச் செய்து படிச்சாலும் தமிழிலை படிக்கிற மாதிரி அதின்ரை ஒரிஜினல் சுவை வருமோ? மொழிபெயர்ப்புப் பிறகு டுப்ளிக்கெற்தானே? சித்த வைத்தியம் முழுக்க முழுக்கத் தமிழிலைதானே கிடக்கு.அப்ப இந்தியாவுக்கு வந்த ஜேர்மன் காறன் திரும்பிப் போகேக்கை தமிழிலை உள்ள ஏடுகளைத்தான் களவா எடுத்துக் கொண்டு போனவனாம். அவனுக்குத் தமிழைப் பற்றி விளங்கின விளக்கம் எங்கடையளுக்கு விளங்கேல்லை. எல்லாம் சுயத்தை மறந்து பாய நிக்கிதுகள்.

இதுக்கிடையிலை இதையும் சொல்லவேணும். நல்லூரடியிலை நேற்றைக்கு நிண்டாப்போலை ஆரோ ஒரு வித்தியாசமாத் தமிழழைப் பேசுறதைக் கேட்டுத் திரும்பினால் அவள் ஒரு ஜப்பான் பொம்பிளை. அவ்வளவு கிளியராத் தமிழைப் பேசுறாள். அவள் வந்து தமிழைப் படிச்சு தமிழாலை பேசி கைவேலையைத் தமிழ் பெண்டுகளுக்குப் படிப்பிக்கிறாள். அப்ப அவளைப் பற்றி என்ன நினைக்கிறியள்?

இப்ப கிட்டடியிலை கேள்விப்பட்டனான். உண்மையோ, பொய்யோ தெரியாது. அமெரிக்காவிலை பிளேன் ஓடப் படிச்ச ஒரு முல்லைத்தீவுத் தமிழ் பெடி அதின்ரை லைசென்ஸ் வாங்கப் போனவனாம். அவன் போனது வேட்டியோடை. அப்ப அவை சொல்லிச் சினமாம் வேட்டியோடை வந்தால் லைசென்ஸ் தரேலாது, போய் காற்சட்டை போட்டுக் கொண்டு வா! எண்டு. அப்ப அவன் கேட்டானம் வேட்டிக்கும் பிளேன் ஒடுறதுக்கும் என்ன சம்பந்தம் எண்டு? வாக்குவாதப் பட்டிட்டு அப்ப லைசென்ஸ் எனக்கு வேண்டாம் எண்டு பெடி வெளிக்கிட, பிறகு ஆளைக் கூப்பிட்டு ஒரு மாதிரிச் சமாளிச்சுப்போட்டு லைசென்ஸஸைக் குடுத்திட்டினமாம்.

அந்தக் காலத்திலை காந்தியும் “ காற்சட்டை போட மாட்டன்” எண்டு வெள்ளக்காரனோடை சண்டைப் பிடிச்சவராம். இந்தியாவின்ரை கலாசாரப்படி கதர் வேட்டிதான் கட்டுவன் எண்டு. காற்சட்டை போடமாட்டன் எண்டு சொல்லி அந்தக் கடுங் குளிருக்கையும் கதரோடைதானே திரிஞ்சவர். காந்தியின்ரை ஓர்மத்தைப் பாத்திட்டுக் கடைசியா வெள்ளைக்காரன் விறைச்சுப் போனானாம். மனுசர் எண்டால் அப்பிடி இருக்க வேணும்.

எங்கடைதான் உலகத்திலை பெரிசெண்டு முதலிலை நாங்கள் நினைக்க வேணும். எங்கை முஸ்லிம் ஆக்கள் எங்கை தங்கடை பாரம்பரியத்தை விட்டுக் குடுக்கட்டும் பாப்பம்? எந்தச் சூழ்நிலையிலையும் அவங்கள் அசையாங்கள்.ஒருக்கா இந்தியாவுக்குப் போகேக்கையும் பாத்தனான். எங்களோடை நிண்டவன் ஒருத்தன் தொழுகை நேரம் வந்திட்டுதெண்டு ஓடிப்போய் பைப்படியிலை உள்ள வாஸ்பேஷினுக்கை காலைத் தூக்கிக் காலைக் கழிவிக் கும்பிட்டவன். அப்பிடி அவங்கள் எந்தச் சந்தர்பத்திலும் தங்கடை தங்கடை பழக்க வழக்கங்களை விட்டுக் குடுக்காங்கள். அதாலைதான் அவங்கள் பெருக்கம் கூட. இது நாங்கள் தான் மற்றையவைக்குள்ளை போய் மறைஞ்சு போறது. மற்றையவன் எதையும் எங்களுக்குத் திணிக்கத்தேவை இல்லை. எங்கடையள் விட்டில் பூச்சிப் போய் விழுந்து சாகிறமாதிரி தானாப் போய் விழுந்தே செத்துப் போயிடுவினம். என்னெண்டாலும் நாங்கள் கனவமா இருப்பம். என்ன?

– “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

http://globaltamilnews.net/2018/94939/

Link to comment
Share on other sites

ஆக்களை மட்டும் மாத்தாதையுங்கோ மற்ற எல்லாத்தையும் புதுசா மாத்துங்கோ

 

 

சனி முழுக்கு – 8  “பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01-1.png?resize=683%2C800

 

கோயில் திருவிழா எல்லாம் முடிஞ்சு கொண்டு வந்திட்டுது. இனிமேல் நவராத்திரி, கந்த சஷ்டி, கௌரிக்காப்பு எண்டு  விரத காலம் வரும். இனி மாரி மெல்ல மெல்லத் துவங்கிவிடும். அதைச் சொல்லுற மாதிரி இப்ப சாதுவா மழை தூறத் துவங்கிவிட்டுது. இனிமேல் அட்டையளுக்குக் குறைவிருக்காது. முத்தமெல்லாம் ஒடித் திரிவினம். போன மாதம் தமிழுக்கு ஆவணியோடை கலியாணவீடுகளும் ஓய்ஞ்சு போய்ச்சுது.  இனி ஏதேனும் நடந்தால் ஐப்பசியிலைதான் நாளிருக்கு. அதுக்குள்ளை அவதிப்பட்டவை செய்வினம். இப்ப நாள், கோள் எண்டு பாக்கிற சம்பிரதாயங்களும் குறைஞ்சு கொண்டு போகுது. சாத்திரிமாரும், ஐயர் மாரும் தாங்கள் நினைச்சபடி தங்களுக்கேத்தமாதிரிச் சட்ட திட்டங்களை மாத்தி எங்களிட்டை இருந்த  நல்ல விசியங்களை எல்லாம் சீரழிச்சுப் போட்டினம்.

இப்ப கலியாண வீடு ஒண்டு நடக்கிதெண்டு வைச்சுக் கொண்டால், முதலிலை எந்த மண்டபத்திலை நடத்திறதெண்ட யோசினை. ஏசி உள்ளதிலையோ, இல்லாட்டிச் சும்மா மண்டபத்திலையோ? பிறகு ஆர் மேக் அப், ஆர் வீடியோ, ஆற்றை சாப்பாடு எண்ட கேள்வி. இதையும் சில கலியாண மண்டபங்கள் வலு லேசாக்கி வைச்சிருக்கினம். எப்பிடி எண்டால் தங்கடை ஹோலிலை கலியாணம் நடந்தால் இன்னாரைத்தான் மேக் அப்புக்குப் பிடிக்க வேணும், இன்னாரைத்தான் வீடியோவுக்குப் பிடிக்க வேணும், இன்னாரிட்டைத்தான் சாப்பாட்டைச் சொல்ல வேணும் எண்ட கொண்டிஷன்  வேறை வைச்சிருக்கினம். அதையும் தாண்டினால்  வரவேற்பு என்ன மாதிரி. நாலாஞ் சடங்கு எண்டு பலதையும் பற்றின யோசினை. எப்பிடியும் குறைஞ்சது பெரிய பத்துக்கை கொண்டு போய்தான் முடிப்பினம். ஆனால் போன கிழமை பேப்பர் ஒண்டிலை பாத்தன். பண்டத்தரிப்பிலை கலியாண வீட்டுக் கெண்டு சிலவழிச்சது ஐம்பது லட்சத்துக்கு மேலையாம். வெளி நாட்டிலை இருந்து வந்த மாப்பிளை “ஆக்களை மட்டும் மாத்தாதையுங்கோ. மற்ற எல்லாத்தையும்  புதுசா மாத்துங்கோ” எண்டு சொல்லிப் போட்டானாம். ஆனால் அது வெளி நாட்டுக்குப் போகேக்கை காணியை ஈடு வைச்சுத்தான் போனதெண்டு கேள்வி.பச்சத் தண்ணிக்கே  வழி இல்லாமல் போய் வந்து இப்ப படுகிற பாட்டையும், ஊரைப்படுத்திற பாட்டையும் பாருங்கோவன்.

ஆனால் அதுக்கையும் நல்லதுகளும் இருக்கினம். ஒருதன் தன்ரை சகோதரியின்ரை பெடிச்சிக்கு் கலியாணம் எண்டு வந்தவன், வர  முதலே சொல்லிப் போட்டு வந்திட்டானாம். “எல்லாம் நான் வந்து பாப்பன். வீட்டை மட்டும் கொஞ்சந் திரித்தி வெள்ளை அடிச்சு வையுங்கோ” எண்டு  ஒரு ரூபா காசும் அனுப்பி வைச்சவன். வந்திறங்கின உடனை அவன் போய் கோயில் ஐயரைச் சந்திச்சு வீட்டிலைதான்  கலயாணத்தை வைச்சிருக்கிறம் ஆனபடியால் வடிவா நேரத்தைச் சிலவழிச்சு முறைப்படி எல்லாம் செய்ய வேணும் எண்டு சொல்லிப் போட்டுத் தன்ரை தாயின்ரையும்,  தகப்பன்ரையும் பக்கத்திலை உள்ள உறவுக்காரருக்கும் சொல்லி ஒரு நூற்றைம்பது பேர் வந்திது. அவைக்குச் சாப்பாடு வீட்டிலையே செய்ய வேணும் எண்டு வடிவாச் சமைக்கக் கூடிய ஆக்களைச் சொந்தக்காரருக்கையே தெரிஞ்சு அதுக்குரிய சாமான் சக்கட்டை வேண்டிக் குடுத்துப் போட்டு கலியாணத்தை வலு வடிவாயும், திருப்தியோடையும் செய்து போட்டுப் போயிருக்கிறான். இதுக்கை படமும் எடுத்தவன்தான். வீடியோவும் எடுத்தவன். எல்லாச் செலவுகளும் அளவோடை இருந்திது. போக முன்னம் கலியாண வீட்டை முன்னுக்கு நிண்டு நடத்தின ஆக்களை வடிவாக் கவனிச்சான். அவையின்ரை குறை நிறைக் கேற்றமாதிரிக் கவனிச்சவன். எல்லாருக்கும் வலு சந்தோஷம்.

அதுக்கை அவன் செய்த நல்ல காரியம். கலியாணத்துக்குப் பிறகு எல்லாச் சடங்குகளும் முடிஞ்சு பொம்பிளை மாப்பிளையைக் கொண்டு இல்லாதவயளைத் தேடிப்போய் அவையின்ரை கையாலை அவைக்குத் தேவையான சாமான் சக்கட்டுகளை வேண்டிக் குடுத்தவன். அவன் மனுசன்

உதைச் சொன்னாப்போலை எங்கடை பேரன் சொல்லுறான் தன்ரை கலியாணத்தை ஒரு வயோதிப  மடத்திலைதான் செய்ய வேணுமாம். ஏனெண்டால் அவைக்குத்தான் தங்கடை தங்கடை பிள்ளையளின்ரை கலியாண வீட்டைப் பாக்கிற சந்தர்பம் கிடையாது. அதை நாங்கள் செய்தால் அவையின்ரை மனம் எங்களை நல்லா வாழ்த்தும். அதோடை அந்த ஆசிகளிலைதான் மனமார வாழ்த்திறதெண்ட விசியம் இருக்கும் எண்டு தத்துவத்தையும் பேசுறான். அப்பதான் யோசிச்சன். எங்கடை பிள்ளை குட்டியளுக்கு நல்லதைச் சொல்லிக் குடுத்து நல்லதைக் காட்டிக் குடுத்து வளத்தால் அவையும் நல்ல விசியங்களைத்தான் செய்வினம் எண்டு. உப்பிடிக் கண்ட கண்ட ஆக்களுக்குப் பின்னாலை திரிஞ்சு வாளோடை அலையாயினம் எண்டு.

முந்தினைப்போலை ஆர் இருத்தி வைச்சுச் சின்னஞ் சிறுசுகளுக்கு கதை சொல்லினம். பாட்டுச் சொல்லிக் குடுக்கினம். முந்தி எங்களுக்கு வீட்டிலை சாப்பாடு தீத்தேக்கையே நிலாப் பாட்டுச் சொல்லித் தருவினம். பிறகு  ஓடி விளையாடு பாப்பா. காலமை எழும்பிப் பள்ளிக்குடத்துக்குப் போக முதல் பல்லுத் தீட்டி முகம் கழுவச் சொல்லி சுவாமி கும்பிட்ட பிறகுதான் ஒரு வாய்த் தண்ணி கிட்டும். அதுக்கையும் ஏதாவது சிறிசா வீட்டு வைலையும் செய்து போட்டுத்தான் படிக்கப் போவேணும்.

எங்கடையளுக்கு ஒண்டை மட்டும் சொல்லுறன். நீங்கள் உள்நாடோ இல்லாட்டி வெளிநாடோ எண்டது பிரச்சினை இல்லை, கொஞ்ச நேரம் பிள்ளை, குட்டியளோடை இருந்து அவையளோடை கதையுங்கோ. அவைக்கு நல்லது கெட்டது எது எண்டு சொல்லிக்குடுங்கோ. இண்டைக்கு வைரைக்கும் அவையின்ரை மனதிலை எத்தினை சந்தேகங்களும் மறுமொழி தெரியாத கேள்விகளும் இருக்குமெண்டு தெரியுமோ? இல்லாட்டி அதைப்பற்றித்தான் யோசிச்சிருக்கிறியளோ?  அவை  அந்தக் கேள்வியளை உங்களிட்டைக் கேக்கப் பாப்பினம். நீங்கள் அவையளின்ரை கேள்வியளு்க்குச் சரியாக் காது குடுக்காட்டி அவை அந்தக் கேள்வியளை வேறை ஆரிட்டைக் கேக்கலாம் எண்டு ஆளைத் தேடுவினம். அப்ப அவையளுக்கு ஒரு பிழையான ஆள் அம்பிட்டால் அவையின்ரை கதை முடிஞ்சுது. பிறகு வாள் எடுப்பினம். தூள் அடிப்பினம். உள்ள கிரிச கெட்ட வேலையளை எல்லாம் செய்யப் பாப்பினம். ஒண்டு பிழைச்சால் தொடந்து எல்லாம் பிழைக்கிறமாதிரி எல்லாம் பிழைச்சுக் கடைசியா நீங்களும் பிழைச்சுப் போயிடுவியள்.

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/95957/

Link to comment
Share on other sites

“யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை எதிரியோட சேர்ந்து நாங்களும் எல்லோ அழிக்கிறம்”

சனி முழுக்கு – 9 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

 

உதுக்குத்தான் நல்லவன் பெரியவனோடை பழக வேணும் எண்டு சொல்லுறது. அவங்களோடை போய் பழகினால்தான் நல்லது கெட்டது என்ன எண்டு தெரியும். அவங்களிட்டைப் போய் இன்னது இன்னது எனக்குத் தெரியாது. வகுப்பெடுங்கோ எண்டு சொல்லேலாது. மாறிச் சாறிக் கதைக்கேக்கை கதையோடை கதையாத்தான் உதுகள் வெளியிலை வரும்.

சும்மா யாழ்ப்பாணத்தின்ரை பொருளாதாரம் எண்ட கதையைத் துவக்கிவிட்டான் அங்கை நிண்ட ஒருத்தன்.  உடனை அந்தாள் சொல்லிச்சுது “யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை இரண்டு பேர் அழிக்கிறாங்கள். ஒண்டு எதிரி மற்றது நாங்கள்” எண்டு . அந்தாள் எண்டு நான் சொல்லுறது அந்தப் பேராசிரியரை. அவர் சொல்லிப் போட்டார் என்னத்தை வேணும் எண்டாலும் எழுதும் மிஸ்டர் பொன்னம்பலம். அதிலை என்ரை பேரை மாத்திரம் போட்டிடாதையும் எண்டு. அதாலை இனி எழுதேக்கை அந்தாள் எண்டு நான் எழுதினால் அது அந்தாள்தான். என்ன?

முதுலாவதா  தெற்கிலை இருந்து வாற சாமான் சக்கட்டை வாங்கிக் குவிக்கப் பண்ணுறான் எதிரி செய்யிற விளையாட்டு. அதுக்குப் பாங்குகளும், லீசிங் கொம்பனியளும் காசைக் குடுத்து எங்கடை ஆக்களைச் செலவழிக்கப் பண்ணினம். லீசிங் கொம்பனி கசல சாமான்களை வாங்குறதுக்கும் உடனை, சுடச் சுட,  பிணை இல்லாமல் லோன் குடுக்கினம். இஞ்சை மாசம் மாசம் எடுக்கிற சம்பளத்திலை முக்கால்வாசிக் காசை  கொம்பனியள் கொண்டு போகுது. போன வெள்ளிக் கிழமை தெல்லிப்பழையிலை ஒரு பெரிய பள்ளிக்குடத்துக்கு  “மக்களுக்குான வங்கி நாங்கள் தான்” எண்டு நெஞ்சிலை அடிச்சுச் சொல்லுற வங்கி ஒண்டு வந்து அங்கை நிண்ட ரீச்சர் மாரைப் பிடிச்சு பைபோசாத் தங்கடை வங்கிக் கடன் அட்டையளை குடுக்கினம். அதை அந்தப் பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற வாத்திமாரும் தண்ணீர்ப் பந்தலிலை வரிசையிலை நிண்டு தண்ணி வேண்டிக் குடிக்கிறமாதிரி வேண்டினம். அங்கை வந்த வங்கிக்காரருக்குத் தெரியும் வாத்திமாற்றை சம்பளம் அரசாங்கம் குடுக்கிறது எண்டு. மாதம் மாதம் சுளை சுளையா அவையின்ரை கைக்கு வரும் எண்டு.அதாலைதான் அவைக்கு அந்தக் கடன் அட்டையைக் குடுக்கினம்.  அதோடை எங்கை எங்கை கடன் வாங்கலாம் எண்டும் சொல்லியும் குடுக்கினம். வேணுமெண்டால் அதிலை வரிசையிலை நிண்டு கடன் அட்டையை வாங்கின ரீச்சர் மார் வீட்டை அடுத்த கிழமை போய்ப் பாருங்கோ என்னென்ன  விதமான சமான்களெல்லாம் அவை வாங்கிக் குமிச்சு வைச்சிருக்கினம் எண்டு. உலகத்திலை விக்காத குப்பை கூழமெல்லாம் அவையின்ரை வீட்டிலை இருக்கும்.

அடுத்த எதிரியள் நாங்கள். நாங்களிலை சர்வதேசத்திலை குளிருக்கை நிண்டு விறைச்சு உழைக்கிற நீங்களும் அடங்கிது. நீங்கள் வந்து நிக்கேக்கை ஊரிலை செய்து போட்டுப் போற அட்டகாசம் பெரிசு. உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் எங்கடை இனத்துக்குச் செய்யிற பேரழிவு என்ன தெரியுமோ? இஞ்சை நீங்கள் வந்து நிக்கேக்கை “தம்பி சுகமோ?” எண்டு கேட்டுக் கொண்டு இல்லாட்டி “தம்பியை ஒரு அலுவல் சந்திக்க வேணும். எப்ப வர” எண்டு கேட்டுக் கொண்டு ஒரு கூட்டம் வரும். வந்து சொல்லும் “மற்ற மற்ற ஊர் ஆக்களைப் பாருங்கோ. அவை தங்கடை கோயிலை எப்பிடி எப்பிடி எல்லாம் கட்டிக் குடுத்திட்டுப் போயினம். வெளியிலை இருக்கிற எங்கடை ஊர் ஆக்களுக்கு ஊரிலை அக்கறை இல்லை” எண்டு உங்கடை மண்டையைக் கழிவி கோயிலை இடிக்கப் பண்ணிப் போட்டு இடிச்சதைக் கட்ட வேணுமே எண்டிட்டு ஊருக்கு வராமல்  வெளியிலை இருக்கிற ஆக்களுக்கு இடிச்ச கோயிலின்ரை படத்ததை வைபரிலையோ இல்லாட்டி வட்ச்சப்பிலையே அனுப்பி ஐயோ பையோ எண்டு கத்திக் குளறி ஒரு மாதிரிக் கோயிலைக் கட்டின பிறகு தான் விளையாட்டுத் துவங்கும். கும்பாபிஷேகம் செய்ய வேணுமெல்லே. அதுக்கு ஐயர் கும்பாபிஷேகச் செலவெண்டும் தன்ரை செலவெண்டும்  ஒரு பட்டியலைக் குடுப்பர். இப்ப கிட்டியிலை வேலணையிலை ஒரு வயிரவர் கோயிலை இடிச்சுக் கட்டினவை. கட்டின செலவு நாலு லட்சம். கும்பாபிஷேகத்துக்கு ஐயர் குடுத்த லிஸ்டின் படி மூண்டரை வேணும் எண்டு கோயில் பொறுப்பாளர் மூக்காலை அழுது கொண்டு யாழ்ப்பாண பஸ்ராண்டிலை நிண்டதைக் கண்டனான். பத்திருபது லட்சம் துவக்கம் ஒரு கோடிவரை கும்பாபிஷேகத்துக் கெண்டு செலவழிச்சிருக்கினம் எண்டது ஒரு வரலாறு. கும்பாபிஷேகம் முடிஞ்சதோடை எல்லாம் முடிஞ்சுதோ? பிறகு பராமரிக்கிற செலவு ஆற்றை கணக்கு? என்ன ஐயற்றை தெட்சணை காணுமோ? அதுக்கும் பிறகு ஆரையேன் பிடிச்சுத் தாக்க வேணும் எல்லே? எப்பிடி பாருங்கோ தானே தன்னை அழிக்கிற விளையாட்டு. யாழ்ப்பாணத்தானை அழிக்க எதிரி மல்ரி பெரலைக் கொண்டு வரத் தேவை இல்லை. உதுகளே காணும். தாங்களே தங்களை அழிக்க.

அப்ப அந்தப் பேராசரியர் சொல்லுறார், “ கோயில் எவ்வளவுக் கெவ்வள வு  கூடிக் கொண்டு போகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு பொது சனத்தின்ரை காசு போய் சீமெந்தாயும், கொங்கிறீற்றாயும்,கம்பியளாயும் இறுகிப் போகுது. அப்பிடிப்பட்ட முதலீட்டிலை இருந்து ஒரு சதமும் சனத்தின்ரை நன்மைக்கு வரப்போறதில்லை. வேணுமெண்டால் சனம் போடுற உண்டியலிலை நல்ல காசு சேந்தால் அவை கோயிலின்ரை முகட்டு ஒட்டைப் புவுணாலை போடுவினம். இல்லாட்டிக் கொடித்தம்பத்தை பவுணாலை போடுவினம். கோயில் வருமானத்திலை இருந்து சமூகசேவை நடக்கிறது ஆகத் தெல்லிப்பழையிலைதான். இன்னும் யாழ்ப்பாணத்தாருக்குப் பக்தி எண்டால்என்ன? ஆன்மீகம் எண்டால் என்ன? கோயிலுக்கான விளக்கம் என்ன? அது பொது சனத்தோடை எப்பிடித் தொடர்பு பட்டுக் கிடக்கு? எண்ட விளக்கம் குறைவு. ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைச்சு, கற்பூரச் சட்டியையும் எரிச்சு, தூக்குக் காவடி எடுக்கிறதைத்தான் பக்தி எண்டு எண்ணினமே இல்லாமல் சரியான ஆன்மீகம் எண்டால் என்ன எண்டு செவ்வையான விளக்கம் குறைஞ்ச சனந்தான் கோயிலைச் சுத்தி நிக்கினம். சனத்தை விடுவம் கோயிலைப் பராமரிக்கிறவையளைப் பாருங்கோ.  கோயிலைப்பற்றிச்  சரியான அறிவும், விளக்கமும் உள்ளவையும் கோயில் பொறுப்பிலை இல்லை. சண்டை நேரத்திலை புத்திசாலியள் எல்லாம் ஒடித் தள்ளீட்டினம். நிண்ட பன்னாடையள்தான் “தடி எடுத்தவன் தண்டல்காரான்” எண்டு நிண்டு கொண்டு  கோயிலை நடத்தினம். கோயிலுக்கை நடப்பும், நட்டாமையுமாக் கிடக்கு.  அப்ப உப்பிடித்தான் கோயிலுகளின்ரை நிலமை இருக்கு. நினைக்கக் கவலையாக் கிடக்கு.

அப்ப இதையெல்லாம் எப்ப எங்கடை சனம் சிந்திக்கப் போயினமோ தெரியாது. வெளி நாட்டிலை உள்ள நீங்கள் இதைச் சிந்திக்கலாம். ஏனெண்டால் இஞ்சை இருக்கிற ஆக்களின்ரை நிதிமூலத்திலை ஒரு பங்கு நீங்களுந்தான். உங்களுக்குத் தெரியாது உங்களைக் குறி வைச்சுத்தான் எல்லாத்தையும் துவங்கினம். நடத்தினம் எண்டு. “வெளியிலை உள்ள பெடி பெட்டையளைக் கேட்டுப்பாக்கலாம்” எண்டு கதைக்கிறதைக் கேள்விப்பட்டிருக்கிறன். அப்ப இனி ஆரேன் காசெண்டு கேட்டால் ஏன், என்னத்துக்கு ? எண்டு கேளுங்கோ. பொது சனத்துக்கு அதாலை ஏதேன் நன்மை வருமோ ? எண்டு பாருங்கோ. நீங்களும் எவ்வளவு காலம் உப்பிடி உழைச்சுழைச்சு அனுப்பப் போறியள்? இருக்கேக்கை நல்லதாப் பாத்துச் செய்து விட்டால் நாலு சனம் பிழைக்கும். நாலு வீட்டிலை உலை எரியும். நாலு சனம் நல்லா வரும் என்ன? ஏதோ யோசியுங்கோவன்!

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

 

http://globaltamilnews.net/2018/96896/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு”

September 30, 2018

சனி முழுக்கு 10

Positive-ponnar01.png?resize=683%2C800

இந்த நாளிலை பொன்னம்பலண்ணை வலு பிசி. ஒண்டுமில்லை புரட்டாசி பிறந்திட்டுது. மற்ற நாளிலை  சோனக தெருப் பக்கம்போய் அது இது எண்டு வீட்டுக்குத் தெரியாமல் நடத்தினாலும் புரட்டாசி மாதத்துச் சனிக்குப் பேய்க்காட்டேலாது பாருங்கோ. சனிபகவான் காலைக் கையை முடக்கிப்போடுவர் எண்டு பயம். அதாலை இந்த மாசம் மட்டும் நல்ல பிள்ளையா இருந்து எல்லாத்தையும் மறந்து விரதம்.  கொஞ்சம் வெய்யிலிலை நடந்தாலும்  களைப்பு வந்திடுகிது. அதாலை ஒரு அலுவலும் பாக்கிறேல்லை. மத்தியானம் விரதச் சாப்பாடு முடிஞ்சால் சாக்குக் கட்டிலைவிட்டு அரக்கிறேல்லை. மனுசிக்கு வலு சந்தோஷம். தன்னை விட்டிட்டு  அங்காலை இங்காலை போறேல்லை எண்டு. என்னத்தை  விட்டாலும் சனிக்கிழமயளிலை உங்களைச் சந்திக்கிறதை நிப்பாட்டேலுமோ? இல்லையெல்லே! அது தான் ஒரு சின்னக் கதை சொல்லிப்போட்டு போகப்போறன்.

போன கிழமை தெல்லிப்பழையிலை இருக்கிற ஒரு பள்ளிக்குடத்துக்கு ஒரு வாத்தியாரைச் சந்திக்கப் போன்னான். எங்கடை வீட்டுக்கருகிலை இருக்கிற தங்கமணியின்ரை பெடிச்சிக்கு அந்தப் பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற ஒரு வாத்திப் பெடியின்ரை சாதகம் பொருந்தீட்டுது.  அப்ப தங்கமணி வந்து நாண்டு கொண்டு நிக்கிறாள் “பொன்னம்பலண்ணை உனக்குத் தெரிஞ்சவை  ஆரேன் அந்தப் பள்ளிக்குடத்திலை இருப்பினம். போய்  ஒருக்கா விசாரிச்சிட்டு வாவன்” எண்டு. அவளையும் முகத்தை முறிக்கேலாது. ஏனெண்டால் அவள்தான் தடக்குப்பட்டால் கைகாலுக்கை நிக்கிறவள். அதோடை அவளின்ரை வீட்டிலை என்ன விசேஷம் எண்டாலும் ஒரு பங்கு எங்களுக்கு வந்திடும். அதாலை  எங்கடை தூரத்துச் சொந்தக்காரன் ஒருதன் அங்கை வாத்தியாரா இருக்கிறான் எண்டதை மணந்து பிடிச்சு அறிஞ்சு வெளிக்கிட்டுப் போனன். ஒரு பக்கம் வெய்யில் சூடு. மற்றப்பக்கம் பஸ்ஸிலை சன வெக்கை. அடிச்சுப் பிடிச்சுப் போனால் அங்கை நான் சந்திக்கப்போன வாத்தியார் வகுப்பெடுத்துக் கொண்டு நிக்கிறார். அப்ப அங்கை நிண்டவை அங்கை கிடந்த கதிரையைக் காட்டிச் சொல்லிச்சினம்  “இருங்கோ வந்திடுவர்”  எண்டு.  எப்பன் இருந்தன்.

பக்கத்து அறையிலை ஒரு வாத்தியார்  “ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு. இல்லாட்டிப் பள்ளிக்குடத்திலை இருந்து சேட்டுபிக்கற் தந்து கலைச்சுவிட்டிடுவம்” எண்டு சத்தம்போட்டுக் கேக்கிது. அதுக்கு அவருக்கு முன்னாலை நிண்ட பெடி  “மாமா தந்தவர்” எண்டு சொல்ல “மாமா என்ன கோடீஸ்வரனோ இவ்வளவு காசைத் தந்து சிலவழிக்கச் சொல்ல” எண்டு வாத்தியார் கேக்க, “ஓம். அவர் பெரிய வசதியா சுவிஸிலை இருக்கிறார். முந்தி இஞ்சையும் வியாபாரந்தான் செய்தவர். சுவிஸிலையும் வியாபாரந்தான் செய்யிறார்.” எண்டு அந்தப் பெடி சொல்லக் கடைசியா அதிபரிட்டைக் கொண்டந்தவை. அதிபர் உடனை சொன்னார் “அவன்ரை பெற்றாரை நாளைக்கு என்னை வந்து சந்திக்கச் சொல்லிக் கடிதம் ஒண்டு எழுதி அவன்ரை கையிலை குடுத்துவிடுங்கோ. காலையிலை அவன் அவன்ரை பெற்றாரோடை வர வேணும். இல்லாட்டிப் பள்ளிக்கூடத்துக்கை அனுமதியாதையுங்கோ” எண்டு சொல்லி அனுப்பி விட்டிட்டார்.

இப்பதான் யோசிச்சுப் பாத்தன் உப்பிடி எல்லாம் ஏன் நடக்கிதெண்டு. அந்த வாத்தியாரைக் கூப்பிட்டுக் கேட்டன். நடந்தது என்ன எண்டு?  இப்ப ஒரு கிழமையா அந்தப் பெடி எந்த நாளும் 500 ரூபா கொண்டு வந்து கன்ரீனிலை செலவழிக்கிறானாம். அது இது எண்டு வாங்கிச் செலவழிக்கிறதும் சினேகிதருக்கு வேண்டிக் குடுக்கிறதுமாத்தான் அவன்ரை நடத்தை. அந்தக் கிழமையிலையிருந்து அவனுக்குப் பள்ளிக்குடத்திலை இருக்கிற பெரிய வகுப்புப் பெடியள் எல்லாம் சினேகிதமா விட்டினமாம். இதை வேறை  பெடியள் வந்து வகுப்பாசிரியரிட்டைச் சொல்லி அவ தான் ஒழுக்கத்துக்குப் பொறுப்பானவரிட்டை கேசைக் குடுத்திருக்கிறா. அதைத்தான் அவர் விசாரிச்சவர். அந்தப் பெடியன்ரை மாமன் சுவிஸிலை இருக்கிறவர். போனமாதம் கோயில் திருவிழாச் செய்ய வந்தவராம். வந்து போகேக்கை தான் சிலவழிச்ச காசிலை மிஞ்சின ஏழாயிரம் ரூபாவை “வேணுமானதை வேண்டு” எண்டு சொல்லி அவன்ரை தாய் தேப்பனுக்குத் தெரியாமல் பெடியின்ரை கையிலை காசைக் குடுத்திட்டுப் போயிருக்கிறார். அவன் என்ன செய்வன். வேணுமானதை வேண்ட அவனுக்குக்  கன்ரீன்தான் கிடைச்சிது. வேண்டித் திண்டு குடிக்கிறான். நல்ல காலம் அதுக்கங்காலை அவன் போகேல்லை. கொஞ்சம் வளந்தவன் எண்டால் வெளியிலை சிநேகிதப் பெடியளோடை போய் வேணுமான வேறை சாமான்களை வேண்டத் துவங்கியிருந்தால் முழுக் குடும்பத்தின்ரை கதையும் கந்தலாப் போயிருக்கும்.

அப்ப உது ஆற்றை பிழை? வந்த பெடியின்ரை மாமன்ரை தான்.  அவர்  மிஞ்சின காசைப் பெடியிட்டையே குடுக்கிறது?  அவரிட்டைப்  பெடி நல்லா வரவேணும் எண்ட கரிசனை இருந்திருந்தால் அந்தப் பெடியின்ரை தாய் தேப்பனைக் கூப்பிட்டு இந்தாங்கோ  காசு கொஞ்சங் கிடக்கு, இதிலை அவனுக்கு விருப்பமானதை வேண்டிக் குடுங்கோ எண்டு அவையிட்டைக் காசு குடுத்துச் சொல்லிப் போட்டுப் போயிருப்பர். அப்ப அவர் செய்ததுதான் பிழையான காரியம். தான் அந்தப் பெடியின்ரை மனசிலை இடம் பிடிக்க வேணும் எண்டு அவர் செய்த கெம்பர் வேலை இப்ப எத்தினை பேருக்குப் பெருந்தலை இடியாப் போச்சுது பாருங்கோ. இப்ப தாய் தேப்பன் தங்கடை தங்கடை வேலைவெட்டியை விட்டிட்டுப் பெடியோடை பள்ளிக்குடத்துக்கு அலைய வேணும். அந்தப் பள்ளிக்குடத்திலை இருக்கிற வாத்திமாரும் வேறை சோலியளைவிட்டிட்டு இவையை விசாரிச்சுக் கொண்டு திரிய வேணும். இப்ப கடைசியா நடந்ததைப் பாத்தால் தேவை இல்லாத விசியங்கள் எல்லாம் எப்பிடி? எப்பிடி? முளைக்கிதெண்டது தெரியும். மாமன்காரனுக்கும் புத்தி குறையப்போலை தெரியிது. விசாரிச்சால் அவனும் அவ்வளவு படிக்கேல்லையாம். ஏதோ தப்பித்தவறி வெளிநாடு போட்டான் எண்டு சொல்லிச்சினம். அவன்ரை லக்குத்தான் அவனைக் கொண்டுபோய் சுவிஸிலைவிட்டிட்டுது. அங்கை வியாபாரம் செய்யிறதாலை காசையும் அவன் அவ்வளவு கயிட்டப்படாமல்தான் உழைக்கிறான்போலை. அதாலைதான் காசின்ரை அருமை தெரியாமல்  ஏழாயிரத்தைத் தூக்கி அந்தச் சின்னப்பெடியிட்டை குடுத்திட்டுப்போட்டான்.

இப்பவும் ஏழாயிரத்தைக் கொண்டு தங்களின்ரை ஒரு மாசச் செலவை ஓட்டுற குடும்பம் எத்தினை இருக்குதெண்டது தெரியுமோ?  அது அந்தச் சுவிஸ்காரனுக்குத் தெரியுமோ, தெரியாது? அப்ப வந்து நிக்கேக்கை விசியம் விளங்காமல் பொறுப்பு மில்லாமல் நடந்திட்டுப் போனால்?  உவை வந்து நிக்கேக்கை தாங்களும் கெட்டு நிக்கிறவையையும் கெடப் பண்ணிப்போட்டுப் போனால்…என்ன கணக்கு? கொஞ்சம் தலையை விட்டு யோசியுங்கோ. நீங்கள் செய்யிறதாலை துன்பப்படுகிறது உங்கடை குடும்பம் மட்டுமில்லை…சங்கிலித் தொடராச் சமூகமும்…பிறகு தொடர்ந்து  ஊருலகமும்தானே..!

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/97746/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை வெளி, சனி முழுக்கு , மயிலிட்டி – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

October 7, 2018

சனி முழுக்கு 11

Positive-ponnar01.png?resize=683%2C800

சண்டைக்குப் பிறகு இன்னாற்றை காணி இது, இன்னாற்றை காணி இது எண்டு  கண்டுபிடிக்க வலு கஷ்டமாக்கிடக்கிற இடமும் உண்டு. விட்ட காணியள் பலதைப் பாக்கேக்கை  சிலதுகள் வல்லை வெளி மாதிரித் தெரியிற காணியாயும் கிடக்கு.  சிலது மாங்குளம் பக்கம் தெரியிற பத்தைக் காடுமாதிரியும் கிடக்கு. அப்ப ஏதோ ஒரு விதத்திலைதான் கண்டு பிடிக்க வேண்டிக் கிடக்கு. அது போகட்டே! இது இப்ப நான் சொல்லப்போறது குடிசனம் இருக்கிற சூழலிலை இருக்கிற ஒரு காணி பூமியைப் பற்றினது. எங்கடை குடி மனேக்கை ஒரு வீடு. அந்தக் காலத்திலை அவை சிங்கப்பூரிலை உளைச்சுக் கொண்டு வந்து கட்டினது. அதிலை இருந்த சிலபேர் சண்டைக்கு முதலே படிக்கக்கிடிக்க எண்டு வெளிநாடு போவிட்டினம். மிஞ்சி இருந்த ஒண்டு இரண்டுபேரும் சண்டையோடை வெளிநாடு போய்ச் சேந்திட்டினம். கனகாலம் இஞ்சத்தைத் தொடர்பு எண்டு ஒண்டும் இல்லை. அப்ப கனகாலம் தேடுவாரில்லாமல் கிடந்த காணிக்கை தன்ரை மாட்டைக் கட்டிக் கொண்டு வந்தவன் தான் சின்னராசு. அவன்  மயிலிட்டிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவன். சண்டை முடிஞ்சாப் பிறகு அவன் இருந்த வீட்டுச் சொந்தக்காரன் வன்னியிலை இருந்து குடும்பத்தோடை வந்து எழும்பச் சொல்லி ஆக்கினை குடுத்தவன். சின்னராசும் அரியண்டம் வேண்டாம் எண்டிட்டு எழும்பி அந்த சிங்கப்பூரான்ரை காணிக்கை குடிகுந்தீட்டான்.

ஏழெட்டு  வரியம் இருந்தாப்பிறகு அவன்  தன்ரை சொந்த வீடு மாதிரிக் கண்டு காலி வைச்சு இறைச்சு பக்குவமா காணியைப் பாத்துக் கொண்டிருக்கேக்கை “வீட்டுச் சொந்தக்காரன்ரை சொந்தம் நான்” எண்டு  ஒண்டு வந்து “வீட்டை உடனை காலி பண்ண வேணும். அப்பிடிப் பண்ணாட்டில் பிரச்சினை வரும். என்க்கு அவனைத் தெரியும். இவனைத் தெரியும். அப்பிடிச் செய்வன்.இப்பிடிச் செய்வன்.”  எண்டு வாள் வெட்டுக் கதையும் கதைச்சவனாம். அதுக்குச் சின்னராசு சொன்னவனாம். “எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை. வன்னியிலை சாவைக் கண்டு கழிச்சிட்டு வந்தவன் தான் நான். காணியை விடேலாது. விருப்பமெண்டால் போய் காணிச் சொந்தக்காரன வரச் சொல்லு. இதுக்கு மேலை நிண்டால் வீண் வில்லங்கம் வருமெண்டு” – சொல்லிக் கோடாலிப் பிடியைக் கையிலை எடுத்ததுதான் தாமதம் வந்த காய் திரும்பிப் பாராமல் எடுத்தானாம்  ஓட்டம்.

இந்தக் கதை கடகடவெண்டு பரவ வெளிநாட்டிலை இருக்கிற அந்த வீட்டுக்காரற்றை கடைசிப்பெடி   ஆரையோ பிடிச்சு  ரெலிபோனிலை சின்னராசுவோடை கதைச்சு  தான் வரும்வரைக்கும் ஆர் வந்தாலும் காணியை விட்டிட வேண்டாம் எண்டு  சொல்லிப்போட்டாராம். பிறகுதான் தெரிஞ்சிது காணியை விடச் சொல்லி வந்தது டுப்ளிக்கெற் எண்டு. உப்பிடித்தான் எத்தினை பேற்றை காணியை அபகரிச்சு வைச்சிருக்கிறாங்கள் தெரியுமே?

சிலபேர் விலாசம் இல்லாமல் போனபடியாலை காணியளைச் சொத்துகளைப் பிடிச்சவனுகளுக்கு வாச்சுப் போச்சுது. சண்டை முடிஞ்ச கையோடை கிடைச்சது மிச்சம் எண்டு  பலர் வந்து கண்டதுகளுக்குக் காணியளை வித்துப்போட்டுப் போட்டினம். இப்ப அதிலை அவங்கள் வந்து இருந்து கொண்டு நடுச் சாமத்திலை எழும்பி அக்கம் பக்கத்திலை கிடக்கிற தடி தண்டுகளை அள்ளுறதும், எல்லைக் கதியாலைத் தள்ளிப் போடுறதுமா பெரிய அதிகுதியாக் கிடக்கு.

கொஞ்ச நஞ்சமெண்டால் பறவாயில்லை. அரைப் பரப்பு, ஒரு பரப்பெண்டு பெருவாரி நிலத்தையெல்லே பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள். சண்டைக்குப் பிறகு உப்பிடி இப்பிடி எல்லாம் பணக்காரரானவையள் கனபேர். கடைசி சண்டை நடந்துகொண்டு இருக்கேக்கை உயிரைக் காவாந்து பண்ணினால்போதும் எண்டு சனம் ஓடேக்கை செத்த பிணத்திலை இருந்து நகை நட்டுகளையும் கழட்டக் கன பேர் மினைக் கெட்டவையாம். இடம் பெயந்து வன்னிக்குப் போகேக்கை வெறும் சொப்பிங் பாக்கோடை போனவை வரேக்கை நூறு நூற்றைம்பது பவுணோடை வந்த கதை தெரியுமோ? என்ன எண்ணைக் கிணறிருக்கிற சவுதியிலையே இருந்து வந்தவை? வந்த உடனை  தூந்து போய்க் கிடந்த கிணத்தைத் திருத்திக்  கட்டிச்சினம். வரம்பு வாய்க்காலைக் கட்டிச்சினம். கண்ட கண்ட காணியளையெல்லாம் காசைக் குடுத்து வேண்டிச்சினம். வீட்டிலை உள்ள ஒவ்வொருத்தருக்கும் ஆளுக்கொரு  மோட்டார் சைக்கிள், சைக்கிள் எண்டு அவைபட்ட பாடு. நல்ல காலம் அவை வீட்டு நாய்க்கு சைக்கிள் ஓடத் தெரிஞ்சிருந் தால் அதுக்கும் சைக்கிளை வேண்டிக் குடுத்திருப்பினம். பலர் ஹயஸ் வேண்டி றைவரை வைச்சு கூலிக்கும் விட்டவை. அப்பிடி வந்த பலர் இண்டைக்கு வெள்ளை வேட்டியும் கட்டிக் கொண்டு நியாயம் கதைச்சு, சண்டித்தனமும் விடுகினமெண்டால் பாருங்கோவன்.

பலர் காணியளைப் பிடிச்ச மாதிரி, பொதுச் சொத்துகளையும் அதுதான் கோயில் காணியளைப் பிடிச்சு ஆட்சிப்படுத்தியும் வைச்சிருக்கினம். அப்பிடிக் கோயில் சொத்தை அபகரிச்சு வைச்சிருக்கிறதுக்கு சில கோயில் காரரும் உடைந்தையாம். அவை மெல்லக் கண்ணைக் காட்டிப்போட்டுப் பேசாமல் இருக்கினமாம். கோயில் சொத்தைக் களவெடுத்துத் திண்டால்  குலநாசம் எண்ணுறவையெல்லே? அப்ப உப்பிடிக் கோயில் சொத்தைக் கள்ளமா  எடுத்து அனுபவிக்கிறவைக்கு என்ன நடக்கும் எண்டு நினைக்கிறியள்? தெய்வம் நிண்டு கொல்லும் எண்டது அப்ப. ஆனால் இப்ப பாக்கிறன் அடி அப்பப்ப விழுகிது.

நீங்கள் கேக்கலாம். மக்கள் சேவைதானே மகேசன் சேவை. கோயில் சொத்துத்தானே சனம் அனுபவிக்கட்டே எண்டு. ஓம் அனுபவியுங்கோ. பறவாயில்லை. ஆனால் அதுக்கு ஒரு முறை இருக்கெல்லே? அந்த முறைப்படி எழுத்திலை அவையிட்டைத் துண்டை வேண்டி அதுக்குரிய ஒரு தொகையைக் கோயிலுக்குக் கட்டி செவ்வையா பத்திரங்களை எழுதி வேண்டி அனுபவியுங்கோவன். இது அதைவிட்டிட்டு அடாத்துப் பண்ணிக் கொண்டிருந்தால்..! ஆரோ ஒருத்தன் அந்தச் சொத்தைக் கோயிலுக்கு எழுதேக்கை என்ன நோக்கத்திலை எழுதினானோ, அது நடக்க வேணும். மூண்டு நேரமும் அந்தக் கோயிலை விளக்கு எரிய வேணும் எண்டும், முக்காலமும் பூசை புணருத்தாரணம் ஒழுங்கா நடக்க வேணும் எண்ட கரிசகனையிலை எல்லே அந்தச் சொத்தை அவை கோயிலுக்கு எழுதி வைச்சிட்டுச் செத்திருப்பினம். அப்ப அவையின்ரை அந்த விருப்பத்துக்கு மாறா ஒண்டும் நடக்கப்பிடாது. என்ன?

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/98609/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது

October 14, 2018

சனி முழுக்கு 12  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01-1.png?zoom=3&resize=33

நாங்கள் வடிவா ஆலோசிச்சுத்தான்  சிலதுகளைச் செய்ய வேணும் எண்டு சொல்லுறது உண்மைதான். மத்தியானம்போலை உவள்  பவளம் வடை வாழப்பழம், சர்க்கரைச் சாதம் எண்டு ஒரு சரையிலை கொண்டுவந்தவள்.“ என்ன விசேஷம்?” எண்டு கேட்டன். “நேத்திக் கடன் அண்ணை” எண்டாள். “என்னத்துக்கு ?” எண்டு கேட்டன். “உவன் தம்பிக்குத்தான்  நேத்தி வைச்சனான்” எண்டாள். “என்ன வேலை வெட்டிக்காகவோ? இல்லை சோதினை கீதினையோ?” எண்டு கேட்டதுதான் தாமதம் வெம்பி வெம்பி  அவள் அழுதாள். பாக்கப் பாவமாக் கிடந்திது. “அழாமல் விபரத்தைச் சொல்லடி” எண்டன். அவள் சொன்னதைக் கேக்க எனக்கும் விசராக்கிப் போவிட்டுது. வாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது. அது எல்லாருக்கும் சந்தோஷம். அதைவிட்டிட்டு விசர் வேலை பாத்தால்? பவளம் சொன்னதை அப்பிடியே சொல்லுறன். கேளுங்கோ.

போன நல்லூர் திருவிழாவுக்குள்ளை  என்ரை தம்பி வந்திட்டுப் போனவன் எல்லே? அவனைத் தம்பி எண்டு சொல்ல இப்ப அருவெருக்கிது. அந்தத் தறுதலைதான் எல்லாத்துக்கும் கால். அது வெளியிலை போனதுக்கு எங்களை “ஏன் நாயே?” எண்டு கூடக் கேக்கேல்லை. இஞ்சை வாறதுக்கு முன்னந்தான் ஒரு நாள்  ரெலிபோன் எடுத்து “ அக்கா! உன்னைப் பாக்க ஆசையாக் கிடக்கு. அடுத்த மாசம்  வாறன். வந்து கதைக்கிறன்” எண்டு உறவு கொண்டாடிப் போட்டு  இரண்டு மூண்டு கிழமைக்குள்ளை வந்திறங்கிச்சிது.  வந்தவன்ரை கோலத்தைக் கண்கொண்டு பாக்கேலாமைக் கிடந்திது. அப்பிடிக் கேவலம். ஒரே குடியும் கும்மாளமுமாத்தான் ஜேர்மனியிலை இருந்தது எங்களுக்குத் தெரியாமைப் போச்சுது. தெரிஞ்சிருந்தால் வந்தண்டே கலைச்சிருப்பன். வந்தாப்பிறகு பாத்தால்  பெட்டி பெட்டியாச் சிகரெட்டும், பெரிய விஷ்கிப் போத்தல் நாலைஞ்சும் அவற்றை சூட்கேசுக்கை கிடந்ததை என்ரை சின்னவள் அறையைக் கூட்டப் போகேக்கை கண்டிட்டு வந்து சொல்லிப்போட்டாள். கன நாளைக்குப் பிறகு வந்தவனை இடையிலை கலைக்கேலுமோ?

காலமை நேரத்துக்கு எழும்பான். பிறகு எழும்பி தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ரெலிபோன் அடிக்க ஒட்டோ வரும். அதிலை ஏறிக் குந்தினா எங்கை போறானோ, எங்கை வாறானோ தெரியாது.  கையிலை மரக்கறி, மீன் , முட்டை அல்லது இறைச்சியோடை வந்திறங்கி “அக்கா இந்தா. இதைச் சமை” எண்டு போடுவன். குறை சொல்லப்பிடாது  ஏராளமாத்தான் சாமான் சக்கட்டை வேண்டிக் கொண்டு வருவன். உண்மையைச் சொல்லப்போனால் அப்பிடித் திண்டு குடிக்க எங்களுக்கு ஏலாது. பிள்ளையளும் ஆசைப்படும். அப்ப கொஞ்ச நாள்  விரதம் எண்டும் பாராமல் வீட்டுக்கு வெளியிலை வைச்சுச் சமைச்சுப் போட்டன்.  என்ரை மனுசன் புறுபுறுத்தபடி. பின்னை அரியண்டம் வேண்டாம் எண்டிட்டு விரதம் இல்லாத நாளாப் பாத்து வேண்டிக்கொண்டு வா. இல்லாட்டிப் போய் எங்கையன் கடைவழியை உன்ரை அலுவலைப்பார் எண்டு கத்தினன். அதுக்குப் பிறகு உவன் யாழ்ப்பாணம் காணப் போய் வருவன். போயேக்கை சண்டாளன் என்ரை பெடியையும் எனக்குத் தெரியாமல் கூட்டிக் கொண்டு போகத் துவங்கிவிட்டான்.

அவனும் சோதினை எடுத்துப் போட்டு வேலை வெட்டி இல்லாமல் இருந்தவனெல்லே. அவனோடை போய் வாய்க்கு ருசியாத் திண்டு பழகிவிட்டான். அவன் போனப் பிறகுதான் பிள்ளையள் சொல்லிச்சிதுகள் அவற்றை வாயிலையும் இடை சுகம் மணத்ததாம்.“ஏனெடி அவன் நிக்கேக்கை சொல்லேல்லை?”  எண்டு கேட்டதுக்கு , “மாமாவைப் பேசிப்போடுவியள் எண்டு பயத்திலை சொல்லேல்லை”  எண்டுதுகள். எல்லாரையும் காசாலை மடக்கிப் போட்டான். முதல் புறு புறுத்த மனுசனும் பிறகு அவனை “கொஞ்ச நாளைக்கு நிண்டிட்டுப் போவன்” எண்டு சொல்லுற அளவுக்கு காசு விளையாடின கதை பிறகுதான் எனக்குத் தெரியும். அவருக்கு ஒரு புது சைக்கிள். தங்கச்சிக்கும் ஒரு லேடிஸ். பெடிக்கு ஒரு நுளம்பு.என்ன நடந்திதோ தெரியாது. இப்ப பெடி வீட்டிலை நிக்கிறேல்லை.  எங்கை போறானோ. ஆரோடை சேத்தியோ? ஒண்டும் தெரியிதில்லை . இரண்டொண்டு படலைக்குள்ளை வந்து நிண்டு “கோபு..கோபு…” எண்டு கத்திறதுதான் கேக்கும். உடனை இவர் நுளம்பை எடுத்து உளக்குவர். ஆளைக் காணக்கிடையாது. வாறதும் இரவிலை செண்டுதான். இப்ப வாள் வெட்டு,சண்டை சச்சரவு எண்டு கனக்க யாழ்ப்பாணத்திலை கூடிப் போச்சுதெல்லே? அதுதான் பயமாக் கிடக்கு. பெடியையும் பேச ஏலாமைக் கிடக்கு. “பேசினால் கயிற்றுத் துண்டோடை ஏறினால்…!”  எண்ட பயம். அதாலை தின்னவும் முடியாமல் கக்கவும் முடியாமல் மனசு கிடந்து வேகுது அண்ணை. அதாலைதான் நேத்தி வைச்சுப் பிள்ளையாரிட்டைச் சொல்லி அழுது போட்டு வாறன்.இவ்வளவும் பவளம் எனக்குச் சொல்லிக் கதறினது.

நீங்கள் நினைக்கிறியளே. பவளம் மட்டும் எண்டு. எத்தினை பவளங்கள் இப்ப யாழ்பாணத்திலை ஏங்கினபடி சீவிக்கினம் தெரியுமே? நிண்ட வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டு போன கதையாக் கன கதையள். மகாபாரதம், இராமாயணக் கதையள் மாதிரியும் சொல்லலாம். கன குடும்பம் மனத்தளவிலை உடைஞ்சு போச்சினம். வெளியிலை சொன்னால் மானக் கேடு எண்டது அவையின்ரை விளக்கம். ஆனால் உப்பிடிப் போய் ஏதேலுமொண்டிலை சிக்கி பொலிஸ் ஜீப்பு வந்து படலேக்கை நிண்டால்… கதை என்ன? அப்ப மானம் என்ன வீட்டுக்கை மரியாதையா நிக்குமோ? அப்ப காலா காலத்திலை பெடி பெட்டையளைக் கண்டிச்சு வளக்காட்டில் குற்றம் கடைசியிலை தாய் தேப்பனிலைதானே வந்து விழும். பிறகு வீட்டிலை உள்ளதுகளைக் கட்ட அந்த வாள் வெட்டுக் கொம்பனியிலை உள்ள ஒராள்தான் வருவன்.நல்லவன் பெரியவன் வரான். என்ன மனம் கடுக்கிதோ? கவனம்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/99333/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும்”

October 20, 2018

சனி முழுக்கு 13 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்…

Positive-ponnar01.png?resize=683%2C800

காலங்கடந்த சிந்தனை எண்டு கனக்கக் கதையாதையுங்கோ.ஒரு மனுசனுக்குச் சிந்தனை எப்பவும் வரலாம். ஆனால் அது ஆரோக்கியமா இருக்க வேணும். உதைத்தான் நான் அடிக்கடி பிறருக்கு சொல்லுறது. நல்ல சிந்தனையை மனசுக்கை வளருங்கோ உடம்பு ஆரோக்கியமா இருக்கும். சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும். கன பேருக்கு அது விளங்குதில்லை.  சொல்லப்போனால் வில்லங்கம். பிழையா விளங்கிக்கொண்டு சண்டைக்கு வந்திடுதுகள். என்ன செய்யிறது? எங்களைப்போல ஆக்கள் அவைக்கு  யாரியா நிக்கேலுமோ? ஒரு கையைாலை வாயைப் பொத்திக் கொண்டு மற்றக் கையாலை பின்பக்கத்தைப் பொத்திக் கொண்டு இருக்கிறம். என்ன? புசத்திறன் எண்டு பாக்கிறியளே!

நேற்றைக்கு என்ரை சகலன் வல்லிபுரத்தின்ரை பேத்தி பெடியோடை வந்தவள். கன்னி கழியாமல் பொன்சரிலை சுவிஸுக்குப் போனவள்.இப்ப கையிலை ஒண்டை பிடிச்சுக் கொண்டு வந்திருக்கிறாள். கதைக்குக் கதை மாமா ! மாமா! எண்டு கூப்பிட்டுக் கதைச்சவள். அவள் இன்னும் என்னை மறக்கேல்லை. பெடி கொஞ்சம் குழப்படி. ஆனால் எங்கடையள் மாதிரி இல்லை. “றொனி. றொனி” எண்டு பெடியை அடிக்கடி அவள் கூப்பிட்டாள். “இஞ்சை எத்தினை நல்ல பேர் இருக்க  ஏனடி பிள்ளை பெடிக்கு இப்பிடி ஒரு பேரை வைச்சிருக்கிறாய் ? உனக்குத் தெரியுந்தானே இஞ்சை உந்தப் பேரை எதுக்கு வைக்கிறவை எண்டு” –  எண்டு கேட்டன். சிரிச்சாள்.சிரிச்சுப்போட்டுச் சொன்னாள் “அங்கிள் இஞ்சை மாதிரி உப்பிடிப் பேரை வைச்சால் அங்கை உள்ள வெள்ளையள் – சிலபேர் தோசை சுடுகிறன் எண்டு றொட்டி சுடுவினம். அது மாதிரி –  மாத்தி மாத்தி எழுதுவங்கள். அதாலை சிக்கல் கனக்க. இது றொனி எண்டு பிள்ளையின்ரை பேரை வடிவாப் பிசகாமல் எழுதுவங்கள். கூப்பிடுவங்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. எங்கடை பேருகள் அங்கை படுகிற பாட்டைப் பாத்தால் சிரிப்பு வரும். எங்கடை அப்பான்ரை பேரை வல்லிபுரம் எண்டு எழுதிறத்துக்கிடையிலை அங்கை உள்ள வெள்ளையள் படுகிறபாட்டைப் பாக்க வேணும். ஒரு நாள் “வாலிபும்” எண்டு ஒருத்தி எழுதிப்போட்டாள். பிறகு அவளுக்கு நான் தமிழ் வகுப்பெடுத்துத் திருத்தப்பட்ட பாடு. என்ன செய்யிறது?பிழைதான்.  அங்கை உந்தத் தமிழ் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் பாத்துச் சீவிக்கேலாது. – எண்டு ஒரு பிரசங்கத்தைச் செய்துபோட்டுப் போட்டாள்.

அது ஒரு வகையிலை உண்மைதான். ஏன் சுவிஸுக்கப் போவான். பண்டு எங்கடை சேனாதிராசாவின்ரை பேர் பட்ட பாடு தெரியுமே? தாய் தேப்பன் உந்தப் பெரிய பேரை வைச்சிட்டு வீட்டிலை அதைச் சுருக்கி அவனை “ராசா” எண்டு கூப்பிட்டினம்.  ஊரிலை படிக்கேக்கை இடாப்பிலை எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது.ஊரிலை வெளிமேலை விளையாடக் கிளையாடப் போனால் பெடியள் அவனைச் “சேனாதி” எண்டினம்.  பிறகு பேராதெனியாவுக்குப் படிக்கப் போனவன். அங்கை உள்ள சிங்களவங்கள் அவனை “சேன” எண்டு கூப்பிட்டவை. பிறகு கொஞ்ச நாள் போய் இந்தியாவிலை படிச்சவன். அங்கை சேனாதி எண்டதைச் சுருக்கி ”ஆதி” ஆக்கினாங்கள். பிறகு திரிப்பி இஞ்சை வந்து மட்டக்களப்பிலை கொஞ்ச நாள் வேலை செய்யேக்கை “ராஜா” எண்டாங்கள். பிறகு அவன்ரை செத்தவீட்டு நோட்டீசிலைதான் முழுசாப் பேரை அடிச்சதைப் பாத்தனான். ஆனால் அந்த நோட்டீசிலை அடைப்புக்கையும், பேப்பரிலை போட்ட அறிவித்தலிலையும் அவன்ரை எல்லாப் பேரையும் போட வேண்டியதாப் போச்சுது.அப்ப தானே அந்தந்த ஆக்களுக்கு விளங்கும்.

பேர் வைக்கிறதும் ஒரு கலை. அதுக்கும் எங்கடை பஞ்சாங்கத்திலை எத்தினை சாத்திரம் இருக்கு. ஆனால் பெடிச்சி சொன்ன மாதிரி நீளமான பேரை வைக்கிறதாலை பல சிக்கல் வாறது வழமைதான். ஒருதரும் ஒருநாளும் முழுப்பேரை வைக்கிறேல்லை. என்ன நல்ல பேரை வைச்சாலும் அமத்தி, அடிச்சு நெழிச்சு அந்தப் பேருக்கு ஒரு ரிங்கர் வேலை செய்து சுருக்கித்தான் கூப்பிடுவினம்.இதுக்கை ஒரு வழமை பேரைச் சொல்லாமல் அவை செய்யிற தொழிலை வைச்சு அவையளைக் கூப்பிடுறது. வைத்தியர், பரியாரி, கட்டாடி, வாத்தியார், டாக்குத்தர் … எண்டு அப்பிடிக் கனக்க இருக்கு.

எண் சாத்திரத்திலை என்ன சொல்லுறான் எண்டால் வைச்ச பேரை அப்பிடியே கூப்பிட வேணுமாம். அங்கை ஒலிக்குத்தான் முதலிடம். வைச்ச பேரை உடைச்சுக் கூப்பிட்டால் எத்தினை உடைவு வருகுதோ அத்தினை உடைவு அவையின்ரை வாழ்க்கையிலை  இருக்குமெண்டு ஒரு எண்சாத்திரத்தைப் பற்றி எழுதேக்கை ஒருதர் எழுதினதை வாசிச்சனான்.

அப்ப பாருங்கோ எல்லாத்திலையும் ஒரு நுணுக்கம், நுட்பம் இருக்கு எண்டதை விளங்கிக் கொள்ள வேணும். ஒருதருக்குப் பேர் அமையிறதும் ஒரு சிறப்பு. சிலரைப் பாருங்கோ பேருக்கேத்தமாதிரியே அவையின்ரை சீவியம் இருக்கும். இப்பிடிச் சொல்லுறன் எண்டு சிரியாதையுங்கோ ஏறுக்கு மாறா இருக்கிறதும் உண்டு. உவன் எங்கடை சத்தியன் வாய் திறந்தால் உண்மை சொல்லான். தருமன் படு கஞ்சன். தருமம் எண்டால் என்ன எண்டு கேப்பன். லட்சுமி தோஞ்சு குளிக்கிறது குறைவு. வீட்டை போய்ப் பாருங்கோ  படு குப்பை. சரஸ்வதிக்கு எழுத வாசிக்கத் தெரியாது. வீரசிங்கம் செத்த சாவட்டை மாதிரி. ஆரேன் வெருட்டினா “ஐயோ. என்ரை ஆச்சி” எண்டு கத்திக் கொண்டு ஓடி ஒழிக்கிறதுதான் அவன்ரை முதல் வேலை. அப்ப எது சரி? எது பிழை? எண்டு எனக்குத் தெரியேல்லை. இதை உங்களிட்டையே விட்டிடுறன். நீங்களே யோசிச்சு ஒரு முடிவெடுங்கோவன்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/99975/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“எழுதத் தெரிஞ்சால் போதாது. புத்தியாயும் எழுதவேணும். அதன்படி நடக்கவும் வேணும்”

October 28, 2018

Positive-ponnar01-1.png?zoom=3&resize=33

சனி முழுக்கு 14 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

போன மாதம் வெளிநாட்டிலை இருந்து வந்த சிநேகிதன் ஒருத்தன் என்னைக் கேட்டான் “எங்கையேன் ஒரு பொதுக்காரியங்கள் செய்யிற இடத்தைக் காட்டு. நான் ஒரு டொனேஷன்  குடுக்க வேணும்” எண்டு. “சரி வா!” எண்டு ஒரு ஓட்டோ பிடிச்சு ஆளை ஏத்திக்கொண்டு போனன். போயேக்கை ஒரு கடையிலை நிப்பாட்டி பெரிய என்வலப்பொண்டை அவன் வாங்கினான். அதுக்கை ஐயாயிரத்தின்ரை தாள் மூண்டை வைச்சு ஒட்டினார். பிறகு அந்த நிறுவனத்தின்ரை பெயரை அதிலை எழுதி ஒட்டிப் போட்டு “பெரிய எமவுண்ட் ஒண்டைக் குடுக்கப்போறன்” எண்டு சொல்லிக்கொண்டு வந்தவரை அந்த நிறுவனத்துக்கு முன்னாலை கொண்டுபோய் விட்டன். ஓட்டோவாலை இறங்கின உடனை அங்கை நிண்டவை எங்களை வரவேற்றுக் கொண்டுபோய்த் தலைவரைச் சந்திக்க  விட்டினம்.அவர் கதைக்கேக்கை  தாங்கள் கட்டிடம் கட்ட நிதி சேகரிக்கிறம் எண்டதைச் சொன்னார். “இதை உங்கடை கட்டிட நிதிக்கெண்டு வைச்சுக் கொள்ளுங்கோ” எண்டு  நான் கூட்டிக் கொண்டு போனவர் தலைவரிட்டை என்வலப்பை நீட்டினார் . “இதிலை நீங்கள் தாற தொகை, உங்கடை, பெயர், விலாசம் எண்டு எல்லாத்தையும் விபரமா எழுதிவிடுங்கோ.” எண்டு அவரிட்டை கட்டிடத்துக்கான நன்கொடைப் புத்தகத்தை அந்த நிறுவன்தின்ரை தலைவர் குடுத்தார். அதை விரிச்சுப் பாத்தவருக்குத் தலையிலை ஆரோ சுத்தியலாலை அடிக்கிறமாதிரி இருந்திருக்க வேணும்.ஏனெண்டால் அதிலை நன்கொடை குடுத்த எல்லாரும் பெரிய ஒண்டு, ஓண்டரை எண்டுதான் எழுதியிருந்தவை. அதிலும் அதிலை கனபேர் உள்ளூர் காறர். இவர் தன்ரை பதினைஞ்சைப் “பெரிய தொகை” எண்டு சொல்லிக் கொண்டெல்லே வந்தவர்? அதுகும் வெளிநாட்டிலை இருந்து வந்தவர் அவர். ஆளுக்கு வெக்கம் வந்திட்டுது. உடனை அந்தத் தலைவரிட்டைச் சொன்னார் “நான் அடுத்தமுறை வரேக்கை ஒரு பெரிய தொகை தாறன். இப்ப இதை உங்கடை ஏதாவது சின்னச் செலவுக்கு வைச்சுக் கொள்ளுங்கோ” – எண்டு சொல்லிப்போட்டு எழும்பி வந்திட்டார். வாற வழியிலை ஆளுக்குச் சொன்னன் “குறை நினையாதை மச்சான். வெளியிலை இருந்து வாற பலர் நினைக்கிறது தங்களிட்டைத்தான் பெருந்தொகை பிழங்குதெண்டு. இஞ்சை அதைவிடப் பெரிய திமிங்கிலங்களும் இருக்கினம். ஆனால் தயவு செய்து கேளாதை எப்பிடி அவை உழைச்சவை எண்டு. ஏனெண்டால் அந்த விபரம் என்னட்டை இல்லை. எனக்குத் தெரியாது.” – எண்டன். ஆள் முச்சு விடேல்லை.

வாயை விடேக்கை யோசிச்சுக் கவனமா விடவேணும். விட்டாப்பிறகு பிடிக்கேலாது. இதுக்கெண்டு வள்ளுவர் ஒரு தனி அதிகாரமே எழுதியிருக்கிறார். முதலிலை ஒரு சொல்லைச் சொல்லமுன்னம் இரண்டு தரம் யோசிக்க வேணும். நான் சொல்லுறதாலை என்ன விளைவு வரும்? அது ஆற்றையேன் மனசை நோகப் பண்ணுமோ? அதாலை ஏதேன் வில்லங்கம் வருமோ? இதையேன் இப்ப சொல்லுறன் எண்டால், போன கிழமை ஒரு பிரகண்டம் நடந்துபோச்சுது. அதாலை ஒரு குழப்பம் வரப்பாத்திது. நல்ல காலம். சனம் குழம்பினாலும் எல்லாரும் படிச்சவையள் எண்ட படியாலை சமாளிச்சுப்போட்டினம்.

போன ஞாயிற்றுக்கிழமை நல்லூரிலை முதலமைச்சற்றை கூட்டம். கரவெட்டியிலை ஒரு புத்தக அறிமுகவிழா. “நல்லூருக்குப் போறம். வாவன் அண்ணை” எண்டு என்ரை சிநேகிதர் கேட்டவை. “இல்லை எனக்கு இலக்கியந்தான் முக்கியம்” எண்டு சொல்லிக்கொண்டு கரவெட்டிக்குப் போனன்.  அதுகும் அடை மழையிலை நனைஞ்சு கொண்டு. அங்கை நாலு புத்தகத்தை ஒருதர் எழுதி அச்சிட்டுக் கொண்டு வந்து எங்கையோ வெளியிட்ட பிறகு அண்டைக்குக் கரவெட்டியிலை அறிமுகவிழா நடத்தினவர். அவர் வெளிநாட்டிலை இருந்து வந்தவர் எண்டு சொல்லக் கேள்வி. சத்தியமா எனக்கு அழைப்புக் கிடைக்கேல்லை. அறிஞ்சுதான் போன்னான். விருந்தினர் கொரவிப்பு, மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை,வெளியீட்டுரை, நூல்களின் அறிமுகம்,நூல்களின் ஆய்வுரையை ஐஞ்சுபேர் செய்தவை. அறிமுக விழாவிலை வெளியீட்டுரைதான்  செய்தவை. அறிமுக உரையை ஒழிச்சுப்போட்டினம்.கடைசியா ஏற்புரையையும் நன்றி உரையையும் அந்தப் புத்தகத்தை எழுதினவர் செய்தார்.

அங்கைதான் நிகழ்சி சூடேறிச்சுது.அப்பதான் எனக்குத் தெரியும் அவற்றை அழைப் பிதழிலை “வருகை தருவோருக்குப் பிரதிகள் இலவசம்” எண்டு முகப்பிலை ஒரு குறிப்புப்போட்டிருந்தவர் எண்டு. அவர் தன்ரை உரையிலை சொன்னார் “இலவசம் எண்டபடியாலைதான் இவ்வளவு பேரும் வந்திருக்கினம்” எண்டு. போன வைக்குச் சீலை உரிஞ்சு நிலத்திலை விழுந்த மாதிரிப் போச்சுது. எனக்குப் பக்கத்திலை இருந்த என்ரை நெல்லியடிச் சிநேகிதம் அவை அங்கை குடுத்த அந்த நாலு புத்தகத்தை யும் கொண்டு போய் அந்த எழுத்தாளரிட்டையே திருப்பிக் குடுத் திட்டுப் “போட்டு வாறன்”  எண்டு சொல்லிப் போட்டு வந்திட்டான். சத்தியமாச் சொல்லுறன் புத்தகம் இலவசமெண்டதுக்காக நான் அங்கை போகேல்லை.பிறகு நானும் புத்தகத்தை அவற்றை கையிலை குடுக்கேல்லை. மேடையிலை இருந்த மேசையிலை வைச்சிட்டு வந்திட்டன்.ஆனால் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டவர். வாய் விட்டப் பிறகு தலைகீழா நிண்டென்ன? குத்துக்கரணம் அடிச்சென்ன? சொன்னது சொன்னதுதானே? திருப்பிப் பிடிச்சு விழுங்கேலுமோ? ஏன் புத்தகங்களைக் கொண்டு வரேல்லை எண்டால் அதை வாசிக்க வாசிக்க அவர் சீலை உரிஞ்ச ஞாபகந்தான்  வரும். என்ன?

ஆனால் அந்த மனுசன் ஒண்டைச் செய்திருக்கலாம். புத்தகம் இலவசம் எண்டு அழைப்பிதழிலை போடாமல். நிகழ்சியிலை வந்திருக்கிற சனத்தைப் பாத்து “என்ரை நிகழ்சிக்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறியள். சந்தோஷமாக் கிடக்கு. ஆனபடியாலை எல்லாருக்கும் புத்தகத்தை இலவசமாத் தரப்போறன்” எண்டு ஒரு சொல்லைச் சொல்லிப்போட்டுப் புத்தகங்களைக் குடுத்திருந்தால் அந்த ஆள் எங்கையோ போயிருப்பர் எல்லே?”. எழுதத் தெரிஞ்சால் போதாது. புத்தியாயும் எழுதவேணும். அதன்படி புத்தியாயும் நடக்கவும் தெரியவேணும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/101036/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் ஒரு மனுசன் தனக்குத் தெரியேல்லை எண்டு வெளியிலை சொல்ல வெக்கப்படப்பிடாது

November 4, 2018

சனி முழுக்கு 15 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01-1.png?zoom=3&resize=33

ஆள் ஆஸ்பத்திரியிலை படுத்திருக்கிறார் எண்டு கேள்விபட்டுட்டன். என்ன வருத்தமோ தெரியாது.ஒருக்கா எட்டிப்பாத்திட்டு வருவம் எண்டிட்டுக் காலமை பஸ்ஸைப்பிடிச்சு ஓடினன். சனத்துக்கை நரிஞ்சு திரிஞ்சு ஒரு மாதிரிப் போய் ஆஸ்பத்திரி வாசலிலை இறங்கிவிட்டன். அடைச்சுவிட்ட கோழியைத் துறந்துவிட்ட மாதிரிக் கிடந்திது. உடுப்பெல்லாம் கசங்குண்டு போச்சுது. பறவாயில்லை ஆஸ்பத்திரிக்குத் தானே போறம் எண்டிட்டுப் போனால் , வாட்டு எது எண்டதை மறந்து போனன். யோசிச்சுக் கொண்டு நிக்கேக்கை சின்னத்துரையின்ரை பெடி சுடுதண்ணிப் போத்திலோடை வாறான். “அரசடியான் என்ரை கூடத்தான் நிக்கிறான்” எண்டு மனசுக்கை நினைச்சுக் கொண்டு அவனோடை ஒட்டிக் கொண்டு வாட்டுக்குப் போனால், சின்னத்துரையின்ரை வலது காலுக்குப் பந்தம் சுத்தி ஆளைப் படுக்கையிலை விட்டுக் கிடக்கு. என்னடா நடந்தது? எண்டு சின்னத்துரையைக் கேட்டன். முகத்தை மற்றப் பக்கம் திருப்பிப் போட்டான். கதைக்கேல்லை. உடனை சின்னத்துரையின்ரை மேன்தான் சொன்னான். “ஐயாவுக்கு நடந்ததைச் சொல்ல வெக்கமாக்கிடக்கு. ஆளுக்குச் சுவிஸுக்குப் போக பொன்சர் ச ரிவந்திட்டுது. அப்ப வாற மாதம் போறத்துக்குரிய ஆயுத்தங்களைச் செய்தவர். அப்ப அண்ணை அங்கிருந்து சொன்னவன் ஆளுக்கு ஒரு சோடி தடிச்ச துணியிலை இரண்டு நீட்டுக் காற்சட்டையும் தைச்சுக் குடுத்துவிடு. வந்தாப் பிறகு இஞ்சை மாலிலை பாத்து நல்லதா வாங்கலாம்.” எண்டு சொன்னபடியா இந்து கொலிஜ்ஜுக்கு முன்னாலை இருக்கிற ரெயிலர் கடையிலை ஆளைக் கூட்டிக் கொண்டு போய் இரண்டு காற்சட்டையைத் தைக்கக் குடுத்தன். அவதிப்பட்ட மனுசன். நேற்றைக்கு  எனக்கும் பறையாமல் களவாய்ப் போய் ரெயிலரிட்டை அதை எடுத்துக் கொண்டு வந்து அறையைப் பூட்டிப்போட்டு நிண்டு, தான் கொண்டு வந்த காற்சட்டை தனக்கு அளவோ எண்டு சொல்லிப் போட்டுப் பாத்தவர். போட்டவருக்கு அதைச் செவ்வயாக் கழட்டத் தெரியேல்லை. கால்தடக்கி விழுந்தாப்போலை  கால் குழச்சுக்கை வெடிச்சுப் போச்சு. அதுதான் ஆளைக் கொண்டு வந்து விட்டுக்கிடக்கு.  உள்ளதைச் சொன்னால் என்ன அண்ணை, ஆளுக்கு அவதி கூட. பிறந்த நாள் தொட்டு இண்டு வரை ஆள் வேட்டியோடைதானே திரிஞ்சவர். இப்ப வயசென்ன? எழுபத்தி மூண்டு. அப்ப உவர் என்ன செய்திருக்க வேணும் காற்சட்டை எடுத்துக் கொண்டு வந்தவர் நாங்கள் நிக்கேக்கை அதைப் போட்டுப் பாத்திருக்கலாம். ஆசை எல்லாருக்கும் இருக்குத்தான். உது அவதிப்பட்ட பேராசை. பாருங்கோ இப்ப கிடந்து அனுபவிக்கிறார். இப்ப அடுத்த மாசமளவிலை போகேலுமோ தெரியாது. ரிக்கற்றைப் போட்டிட்டு அங்கை நிண்டு அண்ணை கத்திறான். நான் என்ன செய்யிறது? பொன்னம்பலமண்ணை  சொல்லுங்கோ” எண்டான்.

“உந்த விசர்க்கதையை நிப்பாட்டு” சின்னத்துரை மேனைப் பாத்து கடுப்பா க் கத்தினான். “நான் என்ன சின்ன பவாவே? ஆரையேனைப் பிடிச்சுக் கொண்டு காற்சட்டையைப் போட்டுப் பாக்க? உவருக்கு முதல் காற்சட்டை தைச்சுக் குடுத்தது நான். “அப்பு  எனக்குக் காற்சட்டை போட ஆசையாக் கிடக்கு”  எண்டு கேட்ட உடனை ஆளைச் சைக்கிளிலை ஏத்திக் கொண்டு யாழ்ப்பாணம் பெரிய கடையிலை உள்ள ரெயிலரிட்டை போனன். அவரிட்டை  ஒண்டில்லை இரண்டு காற்சட்டை தைச்சுக் குடுத்தனான். இப்ப உவன்  எனக்குக் கதை சொல்லுறான். எனக்கு ஒண்டும்  தெரியாதாம். காலத்தைப் பாத்தியே பொன்னம்பலம் !”  எண்டு சின்னத்துரை சத்தம் போட்டவன். அப்பதான் பாத்தன் சின்னத்துரைக்கு வந்த ரோஷத்தை. பிறகு அங்கை நிண்டு கொஞ்ச நேரம் சின்னத்துரையோடை  பல கதையளையும் கதைச்சுப் போட்டு வந்தன் எண்டு வையுங்கோவன்.

பிறகுதான் கேள்விப்பட்டன் ரெயிலர் இளம் பெடியளுக்குத் தைக்கிறமாதிரிக் கால் கீழ்க் குழாயளை ஒடுக்கமாத் தைச்சுக் குடுத்திட்டாராம். அது போட்டுக் கழட்டேக்கை பெரு விரல் மடங்கினாப்போலைதான்  சின்னத்துரை முகத்தறிய விழுந்தவனாம். விழுந்தாப்போலை முட்டிப் பக்கம் அடி விழுந்து கால் பிரண்டு போச்சுது. இப்ப பாக்கப் போனால் சின்னத்துரை ஆசைப் பட்டதும் பிழை இல்லை. போட்டுப் பாத்ததும் பிழை இல்லை. பிழை ரெயிலரிட்டைத்தான் போலை கிடக்கு. ஆனாலும் சின்னத்துரையும் அனுபமில்லாத வேலையைச் செய்ய முன்னம் ஆரிட்டையேன் கேட்டிருக்கலாம். இப்ப என்ன நடந்திருக்கு? ஆளுக்குப் பொன்சர் ரெடி. அடுத்த மாசம் போக வேணும். ரிக்கற்றும் போட்டாச்சு. ஆனால் அதுக்கை சின்னத்துரைக்குச் சுகம் வந்து போகேலுமோ தெரியாது. அப்ப நட்டம் ஆருக்கு? சின்னத்துரையின்ரை பெடிக்குத்தானே?  இனி அவன் போற திகதியை மாத்த வேணும் எண்டால் கூடக் காசு குடுக்க வேணும். எல்லாம் வில்லண்டந்தான்.

எப்பவும் ஒரு மனுசன் தனக்குத் தெரியேல்லை எண்டு  வெளியிலை சொல்ல வெக்கப்படப்பிடாது.எல்லாரும் பிறக்கேக்கை எல்லாத்தையும் அறிஞ்சு கொண்டு வாறேல்லை. இஞ்சை வந்தாப் பிறகுதான் எல்லாத்தையும் படிச்சு மற்றவைக்கும் படிப்பிக்கிறம். அதுக்கை எல்லாத்தையும் தங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறது. உதுக்கு ஒரு முசுப்பாத்திக் கதை சொல்லுறன் கேளுங்கோவன். இப்ப அஞ்சாறு மாதத்துக்கு முன்னம் ஒருபெடி என்னைக் கேட்டார் “பொன்னம்பல அண்ணை. கதிர்காமத்துக்குக் கெதியாப் போறதுக்கு எது சுகமான கிட்டின வழி” எண்டு. நான் எல்லாத்தையும் வடிவாச் சொன்னன். நேற்றைக்கு சந்தையிலை அவரிட்டை வேறை ஒராள் தான் நேத்திக்கடனுக்குக் கதிர்காமம் போக வேணும் எண்டு சொல்லி அவரிட்டை வழியைக் கேக்க. ஏதோ தான் போய் வந்த மாதிரி நான் சொன்னதுக்கு ப் பன்னா, ம் மன்னா போட்டு வலு பொழிப்பாச் சொல்லிப்போட்டுத் திரும்பினான். நான் நிக்கிறன். ஆள் மெதுவா நழுவிவிட்டார். உப்பிடித்தான் எல்லாரும். தெரியாததைச் தெரிஞ்சதெண்டு சொல்லுவினம். தெரிஞ்சதெண்டதைத் தெரியாதெண்ணுவினம். ஆக்கள் முந்தின மாதிரி எல்லாம் இல்லை. இப்ப சனத்திட்டைத் திருகுதாளம் கூடிப்போச்சுது.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

 

http://globaltamilnews.net/2018/102017/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய, உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை.

November 11, 2018

1 Min Read

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம் -சனி முழுக்கு 16

Positive-ponnar01-1.png?zoom=3&resize=33

“அண்ணை இப்பதான் எனக்குக் கொஞ்சம் மனம் நின்மதியாக் கிடக்கு .தங்கச்சிக்குக் கலியாணம் பேசேக்கை அண்ணனுக்குரிய பொறுப்பெண்டு அம்மா சிலதைச்  செய்யச் சொன்னவ.மாப்பிளை கொழும்பிலை உத்தியோகம் எண்டபடியாலை  கட்டாயம் அவளுக்கொரு வீடு வாங்கிக்குடுக்க வேணும் எண்டது அம்மான்ரை ஆசைய. அதை இந்தமுறை வரேக்கைதான்  செய்யக் கூடியதாயிருந்திது. செய்து போட்டன். ஒரு அறை பிளாட் தான். ஆனால் வெள்ளவத்தையிலை எண்டபடியாலை எல்லா வசதியளும் கிட்டக்கிட்ட இருக்கு. அந்தாளில்லாட்டிலும் தங்கச்சி தனியச் சமாளிப்பள்.” எண்டு சொல்லிக் கொண்டு மூத்தாற்றை மேன் நேற்றைக்கு வந்தவன். ஆள் குடும்பத்தோடை இலண்டனிலை தான் இருக்கிறான். இப்ப ஐப்பசியிலை  வந்தபடியாலை எனக்கெண்டு கொஞ்ச இனிப்பில்லாத சொக்கிளேட்டும் ஒரு தடிச்ச முழுக்கை பெனியனும் கொண்டு வந்தவன்.“அண்ணை வீடு எழுதிற அலுவலா வந்தபடியாலை ஒண்டும் பெரிசாக் கொண்டு வரேல்லை. வெளிக்கிடேக்கைதான் இப்ப இஞ்சை மாரிகாலம் எண்டதை நினைச்சன். குளிர் காலமெல்லே எண்டிட்டுத்தான் இதைக் கொண்டு வந்தனான்.” அவன் லண்டனுக்கு வெளிக்கிடேக்கை மூத்தார் வந்து கொஞ்சம் மாறித்தரச் சொல்லிக் கேட்டாப்போலை நான் என்னட்டை இருந்ததைக் குடுத்தனான். பெடி அதை ஒரு வருசத்துக்குள்ளை உழைச்சனுப்பினாலும் அந்த நன்றியை மறக்கேல்லை. நல்ல பெடி.

அதாலை அவன் வஞ்சகமில்லாமல் எல்லாத்தையும் சொன்னான்.வீடு வாங்கி எழுத எல்லாத்தையும் சேத்து ஒண்டிருபது முடிஞ்சுதாம்.“இப்ப உது பறவாயில்லை. குடும்பம் பெருக்க உது காணுமோடா? தம்பி!” எண்டு அவனிட்டைக் கேட்டன். “என்ன செய்யிறதண்ணை? விரலுக்குத் தக்கனைதானே வீக்கம். லண்டனிலை என்னைபபோலை உழைச்சுச் சீவிக்கிற ஆக்களுக்கு உது பெரிய விசியம். உதைவிட ஒரு ஆள் பெரிசாச் செய்யினமெண்டால் ஒண்டில் அவர் வியாபாரம் செய்யிறவரா இருப்பர். இல்லாட்டி மற்ற விளையாட்டுக்காறரா இருப்பர். இது இரண்டும் இல்லாட்டி  ஒண்டும் பெரிசாச் செய்லோது அண்ணை.” எண்டு உண்மையைக் கதைச்சவன்.

நான் கேள்விப்பட்டதிலை உவன் சொன்னதுதான் உண்மை. உதைக் கேக்கைதான் வெளிநாட்டிலை இருந்து வந்து கொழும்பிலை வீடீயோக் கடை வைச்சிருக்கிற எனக்குத் தெரிஞ்ச ஒராள் வலு வெளிப்படையாச் சொன்னவன். “அண்ணை இஞ்சை கொண்டு வந்து போட்ட முதல் எல்லாத்தையும் நான் அங்கை நேர்மையா உழைக்கேல்லை. பல தில்லு முல்லுச் செய்துதான் உழைச்சனான்.ஆனால் தயவு செய்து என்ன செய்தனான் எண்டதை என்னட்டைக் கேக்கப்படாது.ஆனால் இப்ப இஞ்சை உழைக்கிறதிலை எனக்குத் தெரிஞ்ச  ஆக்களிலை இல்லாதுகளுக்கு குடுக்கிறன்.”  எண்டு சொன்ன அவனை என்னாலை முழுமையா ஏற்கேலாட்டிலும் அவன் உண்மையை  ஒத்துக் கொண்ட படியாலை இனிப் பிழைவிடான் எண்டு நினைக்கிறன்.

ஆனால் வெளி நாட்டுக்காறர் வந்து கொழும்பிலை வீடுகளையும் வாங்கி காசை முடக்கிறதும், ஊரிலை வந்து கோயில்களிலை முடக்கிறதையும் நான் ஒரு பெரிய புத்திசாலித்தனமெண்டு சொல்லமாட்டன்.ஏனெண்டால் உதுக்குப் பின்னாலையும் ஒரு பெரிய அரசியல் இருக்கெண்டு பேராசிரியர் ஒருதர் எழுதின கட்டுரை ஒண்டை வாசிச்ச ஞாபகம். வருவாய் இல்லாத முதலீட்டை ஊக்குவிக்கிறதும் ஒருவகையிலை ஒரு சமூகத்தைின்ரை செயற்பாடுகளை முடக்கிறதுமாயிருக்குமாம். உண்மைதான். பாக்கப்போனால் எங்கடை தமிழ் சனத்தின்ரை பெருவாரியான காசு வெள்ளவத்தை பிளாற்றுக்குள்ளையும் , கோயிலிலை கட்டிடமாவும், தேர், மஞ்சம், சகடை எண்டு எத்தினை வகையா முடங்கிப்போய்க் கிடக்கு. உவ்வளவும் ஒரு கிராமத்திலை தொழிலல்சாலைகளாக் கிடந்தா எத்தினை பேருக்கு வேலைவாய்ப்பு. நாட்டின்ரை தேசிய வருமானத்தின்ரை பெருமளவை நாங்கள் வைச்சிருந்தால் கவுண்மென்ரும் எங்களுக்குப் பயப்பிடும். கோயில் குளத்துக்குச் செய்ய வேண்டாம் எண்டு நான் சொல்லேல்லை. கோயில்காரருக்கு கோயிலுக்குப் பக்கத்திலை குளத்தைத் திருத்திறதைவிட்டிட்டு கோயிலுக்குள்ளை இருக்கிற அத்தினை சுவாமிக்கும் தேர் செய்யிறது. பிறகு எல்லாம் செய்து முடிஞ்சால் அங்கை உள்ள வெள்ளியாலை செய்த சாமான்களுக்குத் தங்கம் பூசுறதெண்டு அவையின்ரை எடுப்புப் பெரிசாக்கிடக்கு. அந்த எடுப்பைத்தான்  வேண்டாம் எண்ணுறனே ஒழிய கோயிலுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யட்டும்.

மற்றது பிளாற்றா ஏன் வாங்கிவிடுகிறது புத்திசாலித்தனமில்லை எண்டு சொல்லுறன் எண்டால் ஒரு பிளாற்றின்ரை காலம் ஆகக் கூடினது எத்தினை வருசம் , ஒரு எழுபது? அதுக்குப் பிறகு அந்த பிளாற் இருக்கிற நிலத்துக்குத்தான்  விலையே ஒழிய பிளாற்றுக்குப் பெறுமதி இல்லை.பிறகேன்  பிளாற்றிலை காசைக் கொண்டுபோய் முதலிட வேணும் எண்டு கேக்கிறன்?

இதைச் சொன்னாப்பிறகு நான் சொன்னது சரி எண்டு மூத்தற்றை பேரன் ஒத்துக்கொண்டான். ஆனால் உதை எல்லாம் ஆர்  இப்ப கேக்கினம்? எல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய,  உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை. உள்ளுடன் என்னவாக இருக்கட்டும்.வெளித்தோற்றம் நல்லா இருக்க வேணும் எண்டதிலை எங்கடை ஆக்கள் வலு தெளிவாயிருக்கினம். இப்ப எல்லாம் தலைகீழாக் கவுண்டு போய்க்கிடக்கு. என்ன நடக்கப் போகுதெண்டு பாப்பம்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/102959/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்?

November 17, 2018

சனி முழுக்கு 17  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01-1.png?zoom=3&resize=33

முந்தநாள் மணியண்ணையின்ரை பெடி வந்தவன். தேப்பன் மணியம் கொஞ்சம் சுகமில்லாமல்  படுத்திருக்கெண்டு லண்டனிலை இருந்து பாக்க வந்தவன். அவன் தேப்பனோடை இரண்டு கிழமை ஆஸ்பத்திரியிலை மினைக்கெட்டுப் போனான். போறதுக்கு முன்னம் என்னையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தாப்போலை கையிலை கான்போன் வச்சிருந்தவன். “அண்ணை நாட்டிலை என்ன நடக்கிது? பாருங்கோ எங்கடை ஆக்களின்ரை சீத்துவக் கேட்டை” எண்டு கான்போனைக் காட்டினான். “சந்தை தோத்துப்போம். அப்பிடிச் சத்தமும் அடி பிடியும். அதுக்கை ஒண்டு அங்கை கிடந்த குப்பைக் கூடையை எடுத்துச் சபாநாயகருக்கு எறியிது. அந்தக் குப்பைக் கூடையைத் தூக்கி எறிஞ்சதும் ஒரு குப்பையாத்தானிருக்க வேணும். நாட்டிலை உள்ள குப்பையளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் உதுதான் நடக்கும்.உப்பிடித்தான் இருக்கும். உவங்கள் எங்களை ஆண்டு, எங்களுக்கு விமோசனம் தந்து, எங்களை இரட்சிச்சு காப்பினம் எண்டு நினைக்கிறியளே? சின்னப் பிள்ளையளை ஏமாத்திறமாதிரிக் “கோடி தாறன், கோவணந்தாறன் ”எண்ட மஹிந்தாவின்ரை பேச்சிலை மயங்கி அவருக்குப் பின்னாலை போனவை படுகிற பாட்டைப் பாத்தனியளே? மணியத்தின்ரை பெடி அதெல்லாத்தையும் காட்டிப்போட்டுக் கெக்கட்டம் விட்டுச் சிரிச்சவன்.அவனுக்கு இஞ்சை நடக்கிறதுகளைப் பாக்கச் சிரிப்பாக்கிடக்கு.

“அது சரி அங்கை இருந்து வாறவை மாதிரி நீயும் கோவில் குளத்துக்கு ஏதேன் செய்யிற நோக்கம்?” எண்டு தெரியாமல் ஒரு கேள்வியைக் கேட்டன். அவனுக்கு வந்திது கோவம். அவன்ரை முகத்தைப் பாத்து நான் பயந்திட்டன். “ அண்ணை அங்கை நேர்மையா உழைச்சால் உதொண்டும் செய்லோது. உந்தக் கோமாளி வேலையள் எல்லாம் செய்யிறவை அங்கை கள்ள விளையாட்டு விளையாடிப்போட்டு இஞ்சை வந்து தங்கடை பாவத்தை கழுவுறதுக்குத்தான் கோயில், குளம் எண்டு திரிஞ்சு கோயிலையும் பழுதாக்கி, சமயத்தையும் கொச்சைப்படுத்தி, ஊரையும் பழுதாக்கிப்போட்டுப் போயினம். ஒரு ஊரின்ரை வளர்ச்சி எண்டால் எப்பிடி இருக்க வேணும் எண்டு நினைக்கிறியள்?. ஊராக்கள் கூடி அவை தங்கடை தங்கடை உழைப்பிலை சேத்து பொது வேலையளைச் செய்தால்தான் அது உண்மையான வளர்ச்சியா இருக்க வேணும். ஊர் சனத்தின்ரை பங்களிப்போடை அது நடக்க வேணும். அப்பதான் அவைக்கு அதைச் சரியாப் பராமரிக்க வேணும் எண்ட அக்கறையும் வரும்.இது அதைவிட்டிட்டு ஏதாவது தில்லுமுல்லுச் செய்து கொண்டு வந்து ஊரைப் பழுதாக்கிறது. உண்மையா உழைச்சவன் எண்டால் அவன் தன்ரை காசைக் கொண்டு வந்து ஊர்ச்சனத்துக்குப் பிரயோசனமான ஒண்டை செய்வினம். நேற்றைக்கு ஒரு அலுவலாக் கச்சேரிக்குப் போன்னான். அங்கை கோயில் கதை வரேக்கை ஏஜீஏ என்ன சொல்லுறார். தங்களிட்டை ஆயிரம், ஆயிரத்தைஞ்நூறு கோயில்களின்ரை பதிவிருக்காம். ஆனால் சனத்துக்குப் பிரயோசனமா இருக்கிற சனத்திலை அக்கறையா இருக்கிற கோயில்கள் இரண்டு, மூண்டு எண்டு சொன்னவர்.

நானும் பாத்தன் அடிக்கடி இடிக்கிறதும் கட்டுறதுமா இருக்கினமே ஒழிய வேறை ஒண்டுமாக் காணேல்லை. கோயில் எண்டால் சனத்திட்டை லேசாக் காசை வாங்கலாம் எண்டது அவைக்குத் தெரியும். கோயிலை நடத்திறதுக்குரிய பக்குவம் அவையிட்டை இருக்கோ எண்டு ஒருக்காப் பாருங்கோ!

போன முறை வந்து நிக்கேக்கை ஒரு கோயிலிலை பாத்தன்  அந்தக் கோயில் வரலாறு எழுதின கல்லை மறைச்சுப் பெயின்ரை அடிச்சு வைச்சிருக்கிறாங்கள். அது கோயிலுக்குரிய பெறுமதியான ஆவணம் எண்டது கூட அவைக்குத் தெரியாமல் கிடக்கு. அப்ப எப்பிடி அவை கோயிலை நிர்வாகம் செய்யிறது.

முதலிலை வெளிநாட்டுக்காரர் வந்து காசைக் குடுத்து கோயிலை இடிச்சுக் கட்டுறதை நிப்பாட்ட வேணும். அவை அந்தக் காசைக் கொண்டு வந்து வேறை ஏதாவது பொதுக் காரியம் பண்ணட்டும். எத்தினை பேர் சாப்பாட்டுக்கு அந்தரிக்கினம். எத்தினை குடும்பங்கள் ஆண்துணை இல்லாமல் கஸ்டப்படுகினம். வன்னியிலை ஆறேழு கிலோமீற்றர் நடந்து பள்ளிக்குடத்துக்கு வாற பிள்ளையள் எத்தினை பேர் இருக்கினம். அவைக்குச் சைக்கிள் வேண்டிக் குடுத்தால் அதுகள் கொஞ்ச நேரத்தை மிச்சப்படுத்திப் படிப்பினமெல்லே? இது கன தூரம் நடந்து வந்து அவை எப்பிடிப் படிக்கிறது? நல்லாக் களைச்சுப் போவினம். பிறகெப்பிடிப் படிக்கிறது?

சரி கோயிலுக்குச் செலவழிக்கிறதையும் ஒழுங்காச் செலவழியுங்கோவன். பல  வருசமாக் கிடந்த பென்னாம்பெரிய தூணை இடிச்சுப்போட்டு வடிவா இருக்கட்டும் எண்டு கோடிக்கணக்கான காசைச் செலவழிச்சுப் போட்ட சீமெந்து பிளாற்றெல்லாம் இப்ப மழைக்கு ஒழுகுது. அப்ப உதை ஆர் பாக்கிறது? உவையிட்டை ஆர் சொன்னது அந்தப் பழைய தூணை இடிக்கச் சொல்லி. இனி கோயில் ஒழுகுதெண்டு காசு சேர்ப்பினம். – எண்டு மணியத்தின்ரை பெடி இஞ்சை இல்லாட்டிலும் ஊரிலை நடக்கிறதை எல்லாம் அக்குவேறா ஆணி வேறாச்  சொல்லுறான்.

மணியத்தின்ரை பெடி சொல்லுறது சரிதான். வெளி நாட்டிலை இருந்து வாறவையிலை நல்லது செய்யிறதைவிட கேவலமான வேலையளைச் செய்திட்டுப் போறவைதான் கனக்கவாக்கிடக்கு. நல்லதும் செய்யினம் அதோடை அவை தங்களை அறியாமல் சில கேவலத்தையும் செய்துபோட்டுப் போயிடுவினம். இஞ்சை என்ன நடக்கிறதெண்டது அவைக்கு ஒண்டும் வடிவாத் தெரியாது. அவைக்கு இஞ்சை எடுபிடியள் இருப்பினம். அதுகள் நல்லதா அவைக்கு வழி காட்டினால் அவை நல்லதைச் செய்திட்டுப்போவினம். இல்லை அவைக்குக் கோப்பிரேஷனையும், கொத்து ரொட்டிக் கடையளையும் காட்டினால் அவை அதிலை காசைச் செலவழிச்சுப் போட்டுப் போவினம். அப்ப வழிகாட்டி பிழைச்சால் எல்லாம் பிழைக்கும்.என்ன????

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

 

http://globaltamilnews.net/2018/103640/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

”இதுதான் இஞ்சத்தை நிலைமை”  ”இஞ்சத்தை அரசியலும் இப்பிடித்தான்”

November 28, 2018

சனி முழுக்கு 18 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

கொஞ்சம் பிந்திப்போனன். ஆனால் கனதியான விசியங்கள் நடந்திருக்கு.ஒரு கிழமைக்கு முன்னம் துவங்கிவிட்டாங்கள்.சும்மா இடைக்கிடை சட்டைக்காரர் வெருட்டப் பாத்தவை. ஆனால் சனம் மசியேல்லை. பிறகுதான் போய்க் கேஸைப் போட்டவை. போட்டவை நினைச்சது என்னெண்டால் சால்வைக் காரர் வந்திட்டாரெண்டதாலை அவை தங்கடை சுயத்தைக் காட்டுவினம் எண்டு. ஆனால் அவையே சில்லெடுக்கேலாமை நிக்கிறபடியாலை ஒண்டும் நடவாதெண்டது சனத்துக்கு வடிவாத் தெரியும்.

சோடினை அந்த மாதிரி. எல்லா இடங்களும் அவை இருக்கேக்கை நடந்த மாதிரிச் சோடினை என்ன! வளைவு என்ன! பாட்டென்ன! அப்பு கதிரைமலையானே! மனம் நிறைஞ்சு போச்சய்யா. விளக்கீட்டோடை கனகம்மா அடுக்குப் பண்ணத் துவங்கிவிட்டாள் மாவீரர் தினத்தைக் கொண்டாட.. தன்ரை பிள்ளைக்கு என்னென்ன விருப்பமோ அத்தனையையும் செய்து அவனுக்குப் படைச்சு….. எட ! அவள் பண்ணிவிட்ட பாடு. அவள் தன்ரை பெடியை நினைச்சுச் சதா கண்கலங்கினபடிதானே!

என்னெண்டாலும் பிள்ளைப் பாசம் ஆரை விட்டுது? தசரதன் கூடத் தன்ரை பெடியிலை வைச்ச பாசத்திலைதானே செத்தவர்.எத்தினை தாய்மார் கதறிக் கதறி அழுதவை.உதுக்கெல்லாம் பலன் வராமலே போகப்போகுது? எண்டு என்னைத் தட்டிக் கேட்டார் கோப்பாய் நினைவேந்திலிலை நிண்ட ஒராள். அவரைப் பாக்க மற்றக் கோஷ்டி மாதிரியாயும் கிடந்திது. பாக்க ஆழம் பாக்கிற ஆள் மாதிரியும்  தெரிஞ்சிது.  “என்னத்துக்கு வீண் வில்லங்கம்?” எண்டு நினைச்சுக்கொண்டு  நைசா விலகீற்றன்.கட்சிக்காறரெல்லாம் வந்து போனவை. விளையாட்டொண்டையும் காட்டாமல் பேசாமல் போட்டினம்.

உண்மையாகச் சனம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அரசியலை விளங்கத் துவங்கியிருக்கினம்.எங்கடை இருப்பு முக்கியம் எண்ட விசியத்தை சனம் எப்ப சரியா மூளைக்கெடுக்கினமோ ! அண்டைக்குத்தான் ஒரு மாற்றம் வரும்.இப்பவரைக்கும் சனம் அரசியல்வாதியளிட்டை ஏமாறிறவையாளாத்தான் இருக்கினம் எல்லே. அவையள் ஒவ்வொரு தடவையும் சிங்களத் தலைமையளோடையும் சிங்கள அரசியல்வாதியளோடையும் பேசப் போறன் எண்டு போறது. பேசிறது.  அவங்கள் வாக்கு ருசியா அதை இதைக் குடுத்து கதைச்சுப்போட்டுக் கடைசியிலை ஏமாத்திப் போடுவங்கள். அவை தாங்கள் ஏமாந்து போகேக்கை இஞ்சை வந்து சனத்தை ஏமாத்திறதைத் தவிர வேறை வழி ஒண்டும் அவைக்குத் தென்படாது. இதைத்தான் அண்டைக்குச் செல்வநாயகம் தொட்டு இப்ப சம்பந்தர்வரை செய்து கொண்டு வருகினம். சிங்களச் சனம் பெரும்பான்மை எண்ட விசியம் இண்டைக்கு, நேற்றைக்கே தெரியும்? அப்ப அதுக் கேற்ற மாதிரியெல்லே வியூகத்தைப் போட்டுச் செயற்பட்டிருக்க வேணும். இது அப்பிடி இல்லாமல் கட்சீக்கை எல்லாரும் கூடுறது. கூடிக் கதைக்கிறது. ஆனால் ஒராள் அல்லது இரண்டு பேர் எடுக்கிற தீர்மானத்துக்குத் தலை ஆட்டிப்போட்டு எழும்பி வாறது. இது தானே நடக்கிது. இண்டைக்கும் எங்கடை ஆக்களின்ரை நிலைமை இதுதான்.அதுக்குத் தாளம் போடுறதுக்கெண்டு உள் நாட்டிலையும் வெளி நாட்டிலையும் ஆக்கள் இருக்கினம். அவையின்ரை ஆட்டம் பெரிசாக் கிடக்கு.ஏன் இப்பிடிக் குத்தி முறியினமோ தெரியாது

சரி உங்களுக்கு மொழிப் பற்று இருக்கு. இனப் பற்று இருக்கு. போரைக் காட்டி ஊரை விட்டிட்டு ஒடின்னீங்கள். பல பேர் போரைக் காணாமல் போனனீங்கள். கொஞ்சப்பேர் போராலை அடிபட்டுக் கிடிபட்டுப் போனனீங்கள்.ஒத்துக் கொள்ளுறியளோ? முழுமையா யுத்தத்திலை பங்கு கொண்டவையும்,அதைப் பாத்தவையும் , அனுபவிச்சவையும் இஞ்சைதான் இருக்கினம். அப்ப தீர்வு அவைக்குத்தான் தேவையே ஒழிய ஓடினவைக்கல்ல.

ஆனால் ஒண்டு சொல்லுறன்  அண்டைக்கும் இண்டைக்கும் இவ்வளவு சதிராட்டத்துக்குப் பின்னாலையும் எங்கடை சனம் மூச்சுவிடுகிது எண்டால் அதிலை ஒரு பங்கு வெளிநாட்டிலை இருக்கிற சொந்தங்களாலைதான் எண்டதை நாங்கள் எங்கையும் ஒழிக்கேலாது. ஆனால் அவை அதாலை இஞ்சை இருக்கிறவை என்னத்தைச் செய்ய வேணும்? என்னத்தைச் சொல்ல வேணும்? எண்ட முடிவுகளை அங்கை குளிருக்குள்ளை  கம்பளியாலை போத்துக் கொண்டிருந்து எடுக்கப்படாது. இஞ்சை நாலு முழத் துண்டோடை சுத்தித் திரியிற எங்களுக்கு என்ன தேவை? எண்டு தீர்மானிக்கிறதை எடுக்க வேண்டியது நாங்கள். அப்ப அங்கை கன்னை பிரிஞ்சு இருந்து கொண்டு காசைச் சேத்துக் காசாலை இஞ்சை தனிப்பட்ட ஆக்கள் துவக்கம், குடும்பம் எண்டு வந்து ஊர் எண்டு வந்து பிறகு ஒட்டு மொத்தச் சமூகத்தையும் குழப்பிற வேலையை ஒரு சாரார் உங்களை அறியாமலே செய்து கொண்டு இருக்கிறியள். இது எவ்வளவு ஒரு பொறுப்பில்லாத வேலை எண்டு உங்களுக்குத் தெரியுமோ எண்டு கேக்கிறன்?

போன கிழமை பாத்தன் எங்கடை சோமு அண்ணையின்ரை பெடிச்சி சுவிஸிலை இருந்து ஒரு கலியாண வீடு எண்டு வந்து நிண்டவள். கலியாணவீட்டு அமளி இரண்டு நாளைிலை முடிஞ்சு போச்சு. பிறகு அவள் தன்ரை பிள்ளையளுக்கு இடம் காட்ட வெண்டு வெளிக்கிட்டு  இஞ்சை இருக்கிற தன்ரை சகோதரங்களின்ரை பெடி பெட்டையளையும் கூட்டிக் கொண்டு  ஒரு கிழமை ஊரைச் சுத்தினவள். அதுக்கை கறுமம் என்னெண்டால் அவளோடை போன இஞ்சத்தைப் பெடி பெட்டையள் ஒண்டும் அந்தக் கிழமை நடந்த சோதினைக்குப் போகேல்லை. எப்பிடி இருக்கு விளையாட்டு? அதுகும் வகுப்பேற்றச் சோதினை. சுவிஸிலை இருந்து வந்த அவள் தன்ரை வேலை முடியக் கொஞ்சக் காசை எல்லாருக்கும் கிள்ளித் தெளிச்சாள், குண்டியைத் தட்டிக் கொண்டு போட்டாள். இப்ப இஞ்சை இருக்கிறவை பெடி பெட்டையள் ஏன் சோதினை எடுக்கப் பள்ளிக்குடத்துக்கு வரேல்லை எண்டு சொல்ல அதிபற்றை அறை வாசலிலை நிக்கினம். இதுதான் இஞ்சத்தை நிலைமை. இஞ்சத்தை அரசியலும் இப்பிடித்தான் ?!!???

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

 

http://globaltamilnews.net/2018/104869/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுழி நல்லா இருந்தால் ஒண்டும் தேவை இல்லை. இருக்கிற ஊரே இனிக்கும்.

December 2, 2018

சனி முழுக்கு 19 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

ஒரு இடைக் காலத்திலை எண்டு நினைக்கிறன்.  காலமை பழஞ்சோத்துக் கஞ்சி. பிறகு போய் எந்த பேக்கரியிலை பாண் போடுறான் எண்டு மணந்து பிடிச்சு அங்கை போய் நிண்டு அவன்தாற கருக்கலை வாங்கி வைச்சிட்டுச் சங்கக்கடைக்குப் போறது அங்கையும் ஏதேன் கிடைக்குமோ எண்டு பாக்க. இப்பிடித்தான் அப்ப சீவியம் கழிஞ்சது. பிறகு  நாளாக நாளாக அப்பிடி இப்பிடி எல்லாம் நடந்து பெடி பெட்டையள் கண்ணுக்குத் தெரியாத இடமெண்டாலும் பறவாயில்லை உயிரோடை போய் இருக்கட்டுமே எண்டு நினைச்சு அதை இதை வித்துச் சுட்டு வெளியாலை அனுப்பிவிட்டிட்டுக் காயிதம் வராதோ எண்டு பாத்து ஏங்கின காலமும் ஒண்டிருக்கு. பிறகு அடிபிடி சண்டை சச்சரவு எண்டு காலம்போய் இடம்பெயர்வோடை எங்கடை எல்லாம் சரியாப் போச்சுது.

பிறகு  சரித்திரம் மாறி விட்டுது. என்ன நடக்க வேணுமோ அது நடக்கேல்லை. எது நடக்கப்பிடாது எண்டு எண்ணினமோ அது நடந்து போச்சுது. அண்டு தொட்ட சீத்துவக் கேடு இண்டைக்கும் கிடந்து உருண்டு புரளிறம். ஒண்டும் நடக்கேல்லை. இத்தனையும் நான் சொல்லக் காரணம் என்னெண்டால், கன விசியம் நெஞ்சுக்கை கிடந்து மேலும் கீழுமாப் பிரளிது. கக்கேலாமலும் கிடக்கு. ஏனெண்டால் எந்தப் புத்துக்கை எந்தப் பாம்பிருக்கோ தெரியாது? ஆனால் கனகாலம் உப்பிடி நாங்கள் இழுபடேலாது, என்ன?

இஞ்சையும் இப்ப வயசு வித்தியாசமில்லாமல் எல்லாரிலையும் ஒழுக்கம் குறைவாக் கிடக்கு. முந்தின மாதிரி மனுச ரை மனுசர் மதிக்கிறதில்லை.  கேட்டால் படிச்ச ஆக்கள் நாங்கள் எண்டு சொல்லினம். தாய், தேப்பன் காட்டிக் குடுத்ததைத்தானே பிள்ளையள் செய்வினம். அவையிலையும் ஒழுக்கம் குறைவாக் கிடக்கு. முந்தி பெரியகடைக்குப் போக பஸ்ஸிலை ஏறினால் எத்தினைபேர் எழும்பி நிண்டு தங்கடை சீற்றைத் தருவினம். இப்ப ஏறினவுடனை சில பேர் அப்பதான் யன்னலுக்காலை வெளியாலை புதினம் பாப்பினம். சிலபேர் அரைக் கண்ணை மூடித் தாங்கள் நித்திரை கொள்ளுறதா நடிப்பு வேறை. அப்ப நாங்களும் அங்காலை இஞ்சாலை கிடக்கிற கம்பியளைப் பிடிச்சுக் கிடிச்சு நிண்டு விழாமல் கொள்ளாமல் போய் வாறம்.

இதை ஏன் இப்ப சொல்லுறன் எண்டால் போன கிழமை சுப்பிரமணி தான்  வழமையாப்போற கிளினிக்குக்குப் போனவன். ஆளுக்குச் சலரோகம். கன நேரம் நிக்கேலாது. பஸ்ஸிலை ஏறிவிட்டான். சனமும் கூடவாம். அவன் நிண்டு நிண்டு பாத்தான் தனக்கு ஆரேன் சீற்றுத் தருவினமோ எண்டு. ஒருதரும் ஏன் நாய் எண்டு கேக்கேல்லை. பஸ்காரனும் கொஞ்சம் வீச்சாத்தான் ஓடினவனாம். தட்டாதெருச் சந்தியிலை குறுக்காலை போன ஓட்டோக்காரனுக்கு வெட்டினாப்போலை பஸ் பிறேக்கைப் பிடிக்க பஸ்ஸுக்கை நிண்ட சனம் பின்னாலை உள்ளவை முன்னாலை வர,  முன்னாலை உள்ளவை பின்னாலை போக,  சுப்பிமணி போய் முன்னாலை கிடந்த சீற்றிலை அடிபட்டாப்போலை முன் பல்லெல்லாம் விழுந்து போச்சுது. சுப்பிரமணிக்கு இரண்டு நாளா குலைப்பன். அப்ப சுப்பிரமணி ஒண்டு ஆரிட்டையேன்  சீற்றைக் கேட்டு இருந்திருக்க வேணும். இல்லாட்டிக் கொண்டக்டருட்டைத்  தன்னும் சொல்லியிருக்க வேணும்.இது அரண்டும் இல்லை. இப்ப சுப்பிரமணிக்குப் பல்லும் பிரச்சினை. நாரியிலையும் நோவாம்.

அப்ப ஒரு மனுசனுக்குப் பிரச்சினையள் எந்த வளத்தாலை வருமெண்டு தெரியாது. இதை நேற்றைக்கு என்னைத் தேடி வந்த சுப்பிரமணியத்தின்ரை மருமோனுக்குச் சொன்னன்.அவன் வெளிநாட்டிலை இருந்து அவன்ரை மனுசியின்ரை தங்கைக்காரியின்ரை கலியாணத்துக்கு வந்தவன். அவன் படிக்கிற காலத்திலை  கொஞ்ச நாளா வந்து எங்கடை வீட்டிலை இருந்து படிச்சவன். அதாலை அவனுக்கு இன்னும் அந்த ஞாபகம் இருக்கு. ஒருக்கா வந்து எங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தாப் போலை எங்களுக்கும் ஒரு சொக்கிலேட்டுப் பைக்கற்றும், ஒரு பெரிய கோப்பிப் போத்திலும் கொண்டு தந்திட்டுப் போறான். நான் இஞ்சத்தை இட்டிடஞ்சலைச் சொல்ல, அவன் சொல்லுறான் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தானண்ணை. நீங்கள் இஞ்சை இருந்து நினைக்கிறியள் ஏதோ நாங்கள் அங்கை பெரிய கப்பல் ஓடுறமெண்டு.ஆனால் அங்கை நாங்கள் வலிக்கிற வலிப்பை ஆர்  காணினம். இஞ்சை வந்து அங்கத்தைக் காசை மாத்தேக்கை நீங்கள் நினைக்கிறது நாங்கள் பணக்காரர் எண்டு. ஆனால் நாங்கள் இஞ்சை இருக்கிற பிச்சைக்காரனைவிட மோசம் அண்ணை. அவனாவது பிச்சை எடுத்துத் திண்டிட்டு கோயில் மண்டபமாப் பாத்து இல்லாட்டி நல்ல மர நிழலாப் பாத்துக் குறட்டைவிட்டு ஒரு கவலையும் இல்லாமல் நித்திரைக் கொண்டு எழும்புவன். ஆனால் நாங்கள் அப்பிடி ஒரிடத்திலை இருந்து மூச்சு விடேலாது. எப்பவும் காரின்ரை கட்டுக்காசு, வீட்டின்ரை கடன் காசு, கிறடிட் காட்டின்ரை காசு அது இது எண்டு மீற்றர் தலையைச்  சுத்தி ஓடுமண்ணை.மணிக்கூடு ஓடுதோ ,  இல்லையோ, கடன்பட்ட காசின்ரை மீற்றர் ஓடும்.

அப்ப நாங்கள் என்ன செய்தாலும் மீற்றர்தான் ஓடும்.புலி வாலைப் பிடிச்ச மாதிரித்தான். எங்கடை நிலமை படு மோசமண்ணை. இதெல்லாத்தையும் செய்து போட்டு வீட்டிலை நின்மதியா இருக்கேலுமோ எண்டு பாத்தால், பல பேற்றை வீட்டிலை இறாட்டலுக்குக் குறைவில்லை. அதை இதைச் சாட்டி சண்டை சச்சரவுதான். அதுவும் இரண்டு பேரும் போத்தில் காரர் எண்டால் சொல்லத் தேவை இல்லை. கண்டபடி வாய்த் தர்க்கமும், அடிபிடியுந்தான். என்ன செய்யிறது தலையிலை ஏத்தி வைச்சாச்சு எண்டு சுமக்கிறம். கேட்டுப்பாருங்கோவன் ஆராவது விருப்பத்தோடை சுமக்கினமோ எண்டு. பலர் ஒரு வீட்டிலை இருப்பினம். ஒரு கதவாலை வந்து போவினம். உள்ளுக்கை பாத்தால் எல்லாம் வேறை வேறையாத்தான் இருக்கும். நின்மதி எண்டது அண்ணை அவனவன் தலை எழுத்துப்படி எண்டதுதான் என்ரை நம்பிக்கை. என்ன படிச்ச ஆளா இருந்தும் வேலை இல்லை. விட்டுக் குடுத்து நடந்தால் எல்லாம் சரியாப்போம் எண்டு நினைச்சால் அங்கையும் பிரச்சினைதான். விட்டுக் குடுக்கக் குடுக்க உருவுதல் கூடுமே ஒழியக் குறையாது. சுழி நல்லா இருந்தால் ஒண்டும் தேவை இல்லை. இருக்கிற ஊரே இனிக்கும். குறைபாடு இருக்கிறவைய ளோடை சீவிக்கிறதும் சந்தோஷமா இருக்கும். இருக்கிறதையும் மனம்  போதும் எண்டும் சொல்லும்.

 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2018/105448/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்ன சும்மா கிடைக்குமே? போராடித்தானே பெற வேணும்

December 9, 2018

சனி முழுக்கு 20 – – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

காலமையே குழப்பமாப் போச்சுது. சரி கனடாவிலை விடியக் காலமை எண்டால் எங்கடை ஊரிலையும் காலமையே? இரவு ஒரு பன்னிரண்டு மணி இருக்கும். ரெலிபோன் ஒருக்கா அடிச்சிது. நான் எடுக்கேல்லை. இரண்டாந்தரமும் அடிச்சிது. நான் எடுக்கேல்லை. அடிச்சவனும் விடுறதாக் காணேல்லை. வெளியாலை மழைச் சத்தமும் கேட்டிது. போத்துக் கொண்டு கிடந்த எனக்கு ரெலிபோன்ரை சத்தம் அரியண்டமாக் கிடந்திது.மனங்கேக்காமல் சரி என்ன ,ஏதோ? எண்டிட்டு எடுத்தால் மணியன் கனடாவிலை நிண்டு எடுத்து ‘பொன்னம் பலம் எப்பிடிச் சுகம்?’ எண்டு கேட்டான். ‘பரவாயில்லை’ எண்டன். ‘மைத்திரி என்னவாம்?’ எண்டு கேட்டான். எனக்குக் கோவம் வந்திட்டுது. ‘நாளைக்குச் சாப்பிட வரட்டாம்’ எண்டு சொன்னாப்போலை மணியத்துக்குத் தெரிய வந்திட்டுது தான் பிழையான நேரம் கூப்பிட்டிட்டன் எண்டு.சடார் எண்டு ரெலிபோனை வைச்சிட்டான்.

வழமையாத் தண்ணி போட்டால் உப்பிடி எடுத்து ஏதாவது பிசகாக் கதைப்பன். ஆள் இப்ப கிட்டியிலைதான் பொன்சரிலை போனவன். அங்கை வேலை ஒண்டும் இல்லை. குடியும்இ சாப்பாடும் எண்டுதான் சொன்னவன். என்னஇ! மணியனுக்கு இரண்டு பிள்ளையள். ஒரு பெடியும்இ ஒரு பெட்டையும். பெடி லண்டனிலை. பெட்டை கனடாவிலை. இப்ப பெடிச்சிதான் மணியனுக்குப் பொன்சர் செய்து கனடாவுக்கு எடுத்தவள். ‘அப்பா வாங்கோ. உங்கை நீங்கள் தனிய இருக்கிறியள்.அதை நினைக்க எங்களுக்கு மனக்கஷ்டமாக்கிடக்கு’ எண்டு கரைச்சல் படுத்தித்தான் மணியத்தை எடுத்தவள். அதுவும் பத்தாயிரம் டொலர் கணக்கிலை காட்டித்தானாம் பொன்சர் சரிவந்தது. அப்ப போக முதல் மணியன் நினைச்சுச் சந்தோஷப்பட்ட விசியம் என்னெண்டால் ‘ஆசையா  அன்பாக் கூப்பிடுறாள்.இவ்வளவு பாசம் வைச்சிருக்கிறவள் சொல்லுறதைத் தட்டப்பிடாது.போவம்’ எண்டிட்டுத்தான் போனவன்.

உண்மையைச் சொன்னப்போனால் மணியனுக்கு ஊரைவிட்டிட்டுக் கனடா போக எள்ளளவும் விருப்பமில்லை. இஞ்சை அவனுக்கிருக்கிற காணி பூமி என்ன? அயலட்டை என்ன? நல்ல ஊத்துக் கிணறுள்ள காணியிலை உலகத்திலை உள்ள எல்லா பயிர்பட்டையும் இருக்கு. சகல வசதியும் இருந்தாலும் ஒரு குறை மனுசி வேளைக்குப் போய் சேந்திட்டாள். அதுதான் ஒண்டே ஒழிய மணியனுக்கு வேறை ஒரு குறை ஒண்டும் இல்லை. ஒரு மாதிரி மகள் கூப்பிட்டிட்டாள் எண்டதுக்காக வீடு வளவு எல்லாத்தையம் மருமோன் பெடி ஒண்டின்ரை கையிலை குடுத்திட்டுப் போனவன். போகேக்கை மகளோடை சந்தோஷமா இருக்கலாம்  ,பேரன் பேத்தியோடை விளையாடிப் பொழுது போயிடும் எண்டு பலதையும் மனதிலை வைச்சுச் சந்தோஷத்தோடைதான் போனவன். ஆனால் போனப் பிறகுதான் அவனுக்குக் கொஞ்சம் , கொஞ்சமாச் சிலதுகள் விளங்கிச்சுது. மேள்காரி இருந்து கதைக்க நேரமில்லாமல் ஓட்டம். மருமோன் வரேக்கையே களைப்போடை வருவர். வந்தால் வீட்டு வேலை இருக்கும். பிள்ளையளின்ரை நீட்டு நடப்புப் பாப்பர்.

பிறகு ஒரு கொஞ்சம் எடுத்திட்டுச் சாப்பிட்டிட்டுப் படுக்கப் போயிடுவர். மணியத்துக்குப் பகல் முழுக்கப் பிள்ளையள் இரண்டையும் மேய்க்கிற வேலை. அதிலையே தன்ரை வாணால் போயிடுமெண்டு சொன்னவன். பெடிச்சி சொல்லுக் கேக்குமாம். பெடிதான் குழப்படி எண்டும் சொல்வழி கேக்காது எண்டும் சொன்னவன். அதுகளின்ரை தாய் தேப்பன் இரண்டு பேரும் வரும்வரை மணியனின்ரை களுத்திலை கயிறுதானாம். அதுகும் ஞாயிற்றக் கிழமை எண்டால் அவை தங்கடை சினேகிதற்றை வீடுகளுக்குக் கொண்டாட்டம், பேத்டே பாட்டி எண்டு போனால் மணினுக்குச் சிறைதான். ஆனால் ஒரு சுதந்திரம் ஐஸ்பெட்டியிலை வேணுமான அளவுக்கு மற்றது இருக்கும். ஆனால் அதை எவ்வளவு எண்டு அவன் குடிக்கிறது. அதுக்கும் வாய்க்கு ருசியாச் சாப்பிட வேணும். ஆரேன் சிநேகிதங்கள் அக்கம் பக்கமாயிருந்து பத்தையும் பலதையும் கதைச்சுச் சிரிக்க வேணும்.இது தனித்தவிலை எத்தினை நாளைக்கு வாசிக்கலாம்? மணினுக்கு இப்ப ஆப்பிழுத்த குரங்கு மாதிரியான சூழ்நிலை.

போன கிழமை எடுத்து’மச்சான் பொன்னம்பலம்! இஞ்சை இருக்கேலாமைக் கிடக்கு. இப்ப நான் என்ன செய்யிறது?’ எண்டு கேட்டான். அதுக்கு நான் ‘பத்தாயிரம் டொலர் கட்டிக் கூப்பிட்டதுக்கு ஒரு மதிப்பு வேணும். பல்லைக் கடிச்சுக் கொண்டு கொஞ்சக் காலம் இரு. வாற வருசம் கோயில் திருவிழாவைச் சாட்டி வரப் பார். திருப்பிப் போறதைப் பற்றிப் பிறகு யோசிப்பம்.’ எண்டு சொன்னன்.’அதுவரையும் தாக்குப் பிடிக்குமோ தெரியாது!’ எண்டான். ‘உதை ஒரு விரதமா நினைச்சுக் கொண்டு இரு. ஜெயிலுக்குப் போட்டு வந்தவையிட்டைக் கேட்டால் அப்பிடித்தானே சொல்லினம். அப்பிடி யோசிச்சுக் கொண்டிருக்க இரண்டு ,மூண்டு வருசம் போனது கூடத் தெரியேல்லையாம். ‘

பிறகு கன நாளா மணியன்ரை தொடர்பைக் காணேல்லை. மணியன் மாதிரிக் கனபேர் கனடா போய் தங்கடை பிள்ளையளிட்டைப் உப்பிடி மாட்டுப்பட்டுப் போயிருக்கினமாம். போனவைக்குத் திரும்பிவரப் பிள்ளையள் விடுகினமில்லையாம். அங்கை அவைக்குப் பிள்ளையளைப் பாக்கிறது பெரிய வேலையாம். அதோடை பெரிய செலவுமாம் ,அதாலைதான் அவை இஞ்சை நிண்டு காசைச் செலவழிச்சும் தாய் தேப்பனைக் கூப்பிடுறவையாம். போய் உதை அனுபவப்பட்டு வந்தவை சொன்னாப் பிறகும் , உதைத் தெரிஞ்சு கொண்டும் பிறகும் போயினந்தானே.

அதிலை ஒராள் உண்மையைச் சொன்னராம். எல்லாக் குடும்பங்களிலையும் தாய் தேப்பனைக் கூப்பிடுகினம். அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வெளிநாடு பாக்கிற சந்தர்ப்பமும் பிறகு கிடையாது. நாங்கள் எப்ப பிளேனிலை போறது? வெளி நாட்டைப் பாக்கிறது? உலகத்திலை பாக்கப் போனால் எல்லாத்திலையும் கஷ்டமிருக்குதுதான். சுகத்தை அனுபவிக்க வேணும் எண்டால் கஷ்டப்பட்டுத்தானே ஆகவேணும்.இந்தியாவுக்கு சுதந்திரம் என்ன சும்மாவே கிடைச்ச து? காந்தியைப்போலை எத்தினைபேர் போராடினவை தெரியுமே?’ எண்டு சொன்னவரைப் பிள்ளையள் கொண்டு போய் வயோதிப மடத்திலை போட்டிருக்கினமெண்டு பிறகு கேள்விப்பட்டம்.

 

http://globaltamilnews.net/2018/106121/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“சாரை எண்டால் ஒடிப்போய் ஒளிக்கும். விஷப் பாம்பெண்டால் நிண்டு கடிக்கும்”

December 16, 2018

சனி முழுக்கு 21  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

Positive-ponnar01.png?resize=683%2C800

“அண்ணை. வடிவா சமைச்சுச் சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்த  எங்களை, என்ரை மனிசீன்ரை தங்கைக்காரி வந்து குழப்பிப் போட்டுப் போட்டாள்” எண்டு நேற்றைக்கு வந்து  அன்னம்பாறிப்போட்டுப் போறார் சோமர்.

உண்மைதான் சோமர் ஒரு பழமைவாதி. எல்லாத்தையும் அண்டு எப்பிடிச் செய்தமோ? அப்பிடியே செய்ய வேணும் எண்டு சிந்திக்கிற மனுசன். அவர் வீட்டை இப்ப அஞ்சாறு  மாசத்துக்கு முன்னம்  வெளிநாட்டிலை இருந்து அவற்றை மச்சாள்காரி அவளின்ரை குடும்பத்தோடை வந்து நிண்டவள். அவளுக்கும் வயது அங்கை வட்டுக்கை போட்டுது. இருந்தாலும் சோமற்றை மனுசியோடை பாக்கேக்கை வெளித்தோற்றம் குமரி மாதிரிப் பூச்சும், உடைநடையும். ஆனால் சோமற்றை மனுசி இண்டைவரை ஒரு குளிசை போட்டு அறியாது. அவளின்ரை  சகோதரியோ  சரை  சரையா ஒரு பத்து விதமான குளிசைப் பெட்டியோடைதான் வந்திறங்கினவள். “பெட்டி ஏன்” எண்டு கேட்டதுக்கு “குளிசையளை மறக்காமல் போடுறதுக்கு” எண்டு சொன்னா.அதுவும் ஞாயிறு தொட்டு சனிவரை என்னென்ன குளிசையைப் போட வேணுமெண்டு ஒரு மாதக் கணக்குக் அடுக்கி வைக்கக் கூடிய அமைப்பிலை அந்த மருந்துப் பெட்டியைக் கண்டன். முன்னம் எங்கடை ஆட்கள் பாவிச்ச  அஞ்சனப் பெட்டிமாதிரி. அது பனைச்சாரிலை பின்னின வடிவான பெட்டி. இது அவள் கொண்டு வந்தது அதைவிடச் சின்னன். பிளாஸ்ரிக்கிலை செய்த  கண்ணாடிப் பெட்டி.. அப்ப அஞ்சனப் பெட்டியைச் சரக்குச் சாமான்களை மறந்து போகாமல் கறிக்குப் போடவேணுமெண்டதுக்காகச் சுத்தமாக்கிப் பரிகரிச்சுப் பாதுகாக்க வைச்சிருந்தம். இப்ப அதே மாதிரியான ஒரு பெட்டியை வாங்கி மருந்துக் குளிசையைப் பாதுகாத்து மறக்காமல் வைச்சிருக்க வேணும் எண்டதுக்காகப் பாவிக்கிறம். எப்பிடி உலகம்?  நோக்கம் ஒண்டுதான். ஆனால் பொருட்களும், உபயோகமும் மாறிப் போச்செல்லே?

அப்ப அவள் தான் வந்து நிக்கேக்கை இவை அடுப்பிலை ஊதி ஊதிச் சமைக்கிறதைப் பாத்திட்டு, அவையளைப் பேசிப் போட்டுப் போய் ஒரு காஸ் அடுப்பை வாங்கிக் கொண்டு வந்து சமைச்சவளாம். போயேக்கை “அக்கா இதை நீ இனிமேல் பாவி. எத்தினை நாளைக்கு ஊதி ஊதிச் சமைக்கப் போறாய்? ஊத ஊத நெஞ்சுக்கை வருத்தம் வந்திடுமெல்லே.” எண்டு சொன்னவளாம். ஆனால் சோமற்றை மனுசி சோமற்றை சொல்லுக்கை நிக்கிற ஆள். அதாலை அதை அப்பிடியே வைச்சிட்டு வழமையாச் சமைக்கிற மாதிரித்தான் இப்பவும் சமைக்கிறவவாம்.

ஆனால் சோமருக்கு அந்த காஸ் சிலிண்டரையும், அடுப்பைப் பாக்கப் பாக்க ஒருபக்கம் அருவருப்பும், மற்றப் பக்கம் பயமாவும் கிடந்ததெண்டு சொன்னார்.  மச்சாள்காரி வேண்டி வைச்சதெண்டு ஒரு மாதிரிச் சமாளிச்சக் கொண்டு வந்தவர், இப்ப இரண்டு கிழமைக்கு முன்னம் கொழும்பிலை ஒரு மனுசி காஸ் கசிஞ்சு கிடந்ததைத் தெரியாமல் வந்து லைற்றைப் போடேக்கை அது பத்தி வெடிச்சுச் செத்ததெண்டு பேப்பரிலை வந்ததை வாசிச்சவுடனை  வீட்டை வந்து முதல் செய்த வேலை, தண்ணிப் பைப்புத் திருத்திற குமாரதாசனைக் கூட்டிக் கொண்டு வந்து காஸ் அடுப்பைப் பக்குவமாக் கழட்டி வைச்சிட்டுப் போய் கொத்துரொட்டிக் கடைக்காரனிட்டை சொன்னராம் “காஸ் அடுப்பு ஒண்டு கிடக்கு. செற்றாத்தான் விக்கப் போறன். வந்து பாத்து  விருப்பமெண்டால் எடு” எண்டு.அவனும் வந்து பாத்திட்டு விலை குறைவாத்தான் கேட்டவனாம். “தரித்திரம் துலைஞ்சால் காணும் ” எண்டு தான் மனசுக்கை நினைச்சுக் கொண்டு குடுத்துத் துலைச்சுப் போட்டன் எண்டார்  சோமர்.

அப்ப பாருங்கோ.இதை பஞ்சதந்திரக் கதையள் மாதிரிக் கதைக்க வேண்டிக் கிடக்கு. எட சும்மா இருக்கிற ஆக்களின்ரை தலையிலை சுமையை ஏத்தாதையுங்கோ. சிவனே எண்டு தானும் தன்பாட்டிலை இருக்கிற ஆக்களுக்கு வலிஞ்சு போய் கேடு கெட்ட பழக்கத்தைப் பழக்கித் தான் உழைக்கிறதுக்காக அவையளை பழுதாக்கிறது உந்த கோப்பேற் கொம்பனியளின்ரை பழக்க மேல்லெ? அவைதான் தங்கடை பொருள் பண்டங்களை  விக்கிறதுக்காகச் செய்யிற வியாபாரச் சூத்திரம். அதுக்கு எடுபட்டு போற மாதிரி எங்கடை ஆக்களின்ரை பேய்ப் புத்தியும் இருக்கு.

இப்ப சேமற்றை கதையை எடுங்கோவன். அவற்றை மச்சாள்காரி வந்து நிண்டவ. அக்கா உது மாதிரி அடுப்பிலையும், மண் சட்டியிலையும் சமைச்ச சமையலைத் திண்டு, குடிச்சுக் கன நாளாப் போச்சுது எண்டு சொல்லி நல்ல கத்திரிக்காய் சந்தையிலை போய் வேண்டிக் கொண்டு வந்து ஒரு சரக்குக் கறியை வைச்சுத் திண்டு தன்னோடை வந்த பிள்ளை குட்டியளுக்கும் “இதுதான் எங்கடை ஆரோக்கியத்தின்ரை இரகசியம்” எண்டு காட்டிக் குடுத்திருக்கலாம். இல்லை அதுகள் மச்சம்தான் தின்னப் போறம் எண்டு சொல்லி ஒற்றைக் காலிலை நிண்டால் சாவக்காடு போய் நல்ல விளைக் குட்டியளை வேண்டிக் கொண்டு வந்து சரக்குக் கறி வைச்சுக் குடுத்துச் சாப்பிட்டிருக்கலாம்.

இது அப்பிடி இல்லை. அங்கை போனாலும் நூடில்ஸ், பிஸ்ஸா, கேஎவ்சி எண்ட கேவலம் கெட்ட சாப்பாடு. இஞ்சை வந்தும் அதுதான் எண்டால் பேன் இஞ்சை வாறியள்? கேட்டால் சொந்த பந்தத்தைப் பாக்க வாறம்.கோயில் குளம் போய் நேத்தி செய்ய வாறம் எண்டு சொல்லுறியள். ஆனால் வாறனியள் வந்து உங்களையும், கெடுத்து ஊரையுங் கெடுத்துப் போட்டுப் போற மாதிரியான செய்கையளையெல்லே செய்துவிட்டிட்டுப் போறியள். காசோடை வாறனியள் திரும்பத் திரும்பக் கோயிலை கட்டுறம், புதுப்பிக்கிறம் எண்டு தேவை இல்லாத வேலை ஒரு பக்கம். கொஞ்ச நஞ்சத்தோடை வாறனியள் இஞ்சை உள்ள பெடி பெட்டையளுக்கு அரையும் குறையுமா உடுப்பைப் போடப் பழக்கி, கடற்கரைக்கும், படத்துக்கும், கொத்து ரொட்டிக் கடைக்கும் எண்டு கூட்டிக் கொண்டு குட்டிச் சுவராக்கிப் போட்டுப் போயிடிறியள். கேட்டால் சொந்த பந்தங்களை ஆசுவாசப்படுத்திறம், வந்து நிக்கிற நாட்களிலை “ஒரு வித்தியசமான உலகத்தை அதுகளுக்குக் காட்டிப் போட்டுப் போறம்” எண்டு அதுக்கொரு விளக்கம் சொல்லுறியள். அரை குறை உடுப்புப் போடக் காட்டிக் குடுக்கிறதும், அவை அவையின்ரை கலாசாரப் பண்பாடுகளைத் துலைக்கிற மாதிரியான செய்கையளைக் காட்டிக் குடுக்கிறதுந்தான் வித்தியாசம் எண்டு நீங்கள் நினைக்கிறியள். அதை, அதை, அதாக வாழ விடுங்கோ. அவை அவையளை அவை பாட்டுக்குச் சீவிக்க விடுங்கோ. புதுமையைக் காட்டுறம், புத்தியை வளர்க்கிறம் எண்டு  சொல்லிப் போட்டுப் புத்துக்கை பேசாமல் கிடக்கிற பாம்மை எடுத்து வெளியிலை விட்டிட்டுப் போகதையுங்கோ. அது சாரையெண்டால் ஒடிப் போய் ஒளிக்கும். விசப் பாம்பெண்டால் ஆக்களுக்குக் கடிக்கும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

 

https://globaltamilnews.net/2018/106760/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!

December 23, 2018

சனி முழுக்கு 22  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்..

Positive-ponnar01.png?resize=683%2C800

ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? அதுக்கு அவனிட்டை வசதி, வாய்ப்பு  இருக்கோ? எண்டதைப் பற்றி ஒருக்கா, இரண்டு தரம் யோசிச்சுப் போட்டுத்தான் கேக்கலாமோ? எண்ட  முடிவை எடுக்க வேணும்.இதை ஏன் இப்ப சொல்லுறனெண்டால் கன நாளைக்குப் பிறகு சரசக்கா நேற்றைக்கு வந்தவ. சரசக்கான்ரை மேன் கொழும்பிலை வேலை. ஒரு சின்ன பிளாற் எடுத்து குடும்பத்தோடை தங்கி இருக்கிறான். கவுண்மென்ற் வேலை எண்டால் பாருங்கோவன். எல்லாம் மட்டுமட்டுத்தானே. வீட்டு வாடகை, தண்ணி, கறன்ற், பிள்ளையள் படிப்பு போக்குவரத்து எண்டு தலைக்கு மேலை செலவோடை அவன் சீவிக்கிறதைப் பாத்திட்டு சரசக்கா இடைசுகம் தன்ரை பென்சனையும் அவனுக்கு அனுப்பித்தான் ஒரு மாதிரித் தேர் ஒடுது. இதுக்கை போன மாதம் அவன்ரை சிநேகிதன் ஒருத்தன்,  லண்டனிலை இருக்கிறவன், இடை சுகம் கூப்பிட்டுக்  கதைச்சதுமில்லையாம். இப்ப வட்ஸ் அப், வைபர் எண்டு கோதாரியள் கனக்க வந்திருக்கெல்லே?  அதிலை குழுக் குழுவாகச் சேர்த்துக் கதைக்கிறவையாம். அந்தக் குழுவிலையும் கனக்க இருக்காம். படிச்சவை, ஊர், வேலை செய்த இடம், யூனிவசிட்டி எண்டு கனக்க,  கண்ணன் கோஷ்டி வைச்சு நடத்தின மாதிரி நடத்தினமாம். சரசக்காவின்ரை பெடியும் அதிலை ஒரு குழுவிலை அம்பிட்டிட்டான். அதிலை பாத்திட்டுத்தான் சரசக்கா வின்ரை மேனை அவன்ரை பள்ளிக்கூடச் சிநேகிதன் கூப்பிட்டவனாம். ரெலிபோன் எடுத்த வீச்சுக்கு “மச்சான் உன்னை நான் மிஸ் பண்ணுறன்டா. நீயும் நானும் ஒண்டாச் சேந்து துரை கடையிலை வடையும், நன்நாரிப் பிளேன்ரியும் குடிச்சதை மறக்கலாமோ? எத்தினை திருகுதாளத்தை அந்த நாளிலை செய்திருப்பம்…. அது இது எண்டு இவனைக் கதைக்க விடாமல் கதைச்சிட்டு நாள் நேரத்தைக் குடுத்துச் சொன்னானாம் “கட்டு நாயக்காவிலை வந்து என்னை கூட்டிக் கொண்டு போய் மற்ற நாள் யாழ்ப்பாணத்துக்கு ஏத்தி விடு.உன்ரை வீட்டிலைதான் மச்சான் தங்க வேணும். நானும், மனுசியும், பிள்ளையும் தான்” எண்டு கட கட வெண்டு சொல்லிப் போட்டு போனை வைச்சிட்டு சரசுவின்ரை பெடியின்ரை ரெலிபோனுக்குத் தான் வாற விபரங்களை செய்தியாப் போட்டுவிட்டவனாம்.

இப்ப சரசுவின்ரை பெடி இதைத் தன்ரை மனுசிக்கு எப்பிடிச் சொல்லுறது? அவள் கத்தத் துவங்கிவிடுவளே. ஏனெண்டால் வீடு சின்னன். படுக்கப் பெரிசா ஒரு வசதியும் கிடையாது.இனிப் பெடி பெட்டையளின்ரை படிப்பும் குழம்பிப்போம். எண்டு பலதையும் சொல்லித்தான் அவள் அபிஷேகம் செய்வள் எண்டு பெடிக்குப் பயம்.இருந்தாலும் அவளுக்குச் சொல்லாமல் ஒண்டும் செய்யேலாது. எப்பிடியும் ஒரு அறையை ஒதுக்கத்தான் வேணும் எண்டு மெல்ல ஒரு பிளான் போட்டு இரவு போய் நல்ல கோழிக் கொத்தொண்டை வேண்டிக் கொண்டு வந்து வைச்சிட்டுக் கதையைத் துவங்கினால், சனசுவின்ரை மேன் எதிர்பார்த்ததுக்கு எதிர் மாறாக் கிடந்திதாம் அவளின்ரை மறுமொழி.

“பாருங்கோவன் நீங்களும் இருக்கிறியள்தானே? ஒருக்காத்தன்னும் அந்தாளின்ரை நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட்டிருக்கலாம். அங்கை லண்டனிலை அவையள் தலைகால் தெறிக்க ஒடுத்திரியிறவைக்கு எங்களை மாதிரி நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட நேரம் இருக்காது. இருந்தும் பாத்தனியளே? வெளிக்கிட்டு வரேக்கை எங்களை யோசிச்சிருக்கிதுகள். ஓம் எண்டு சொல்லுங்கோ. இரண்டு நாள்தானே. ஒரு மாதிரி சரிகட்டலாம்” எண்டு சரசுவின்ரை மேன் பெண்சாதி சொன்னதும் அவன் கெலிச்சுப் போனானாம். எண்டாலும் அவனுக்குத் தெரியும் தன்ரை மனிசீன்ரை நோக்கம். கனகாலமா அவள் தன்ரை பெடியை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேணும் எண்டும் அதுக்கு ஆராவது உதவி செய்ய வருவினமோ எண்டும் எதிர்பாத்திருந்தவள். இப்பிடிக் கிடைச்ச சந்தர்பத்தை விடுவளோ! அதைவிட அவள் எதிர்பார்த்தது வெளி நாட்டிலை இருந்து வாறவை வெறுங்கையோடை வராயினம். வரேக்கை எதையாவது கொண்டுதான் வருவினம். போயேக்கையும் அங்கத்தைக் காசு சின்னனா எண்டாலும் சுருட்டிக் கையுக்கை வைப்பினம். இஞ்சை  உள்ளவைக்கு அது பெரிசுதானே? இனி இப்பிடிப்பட்ட உறவு இண்டையோடை நிக்கப் போகுதே? – எண்டு அவளின்ரை எண்ணம்.

அவள் தங்கடை இரண்டு அறையளிலை ஒண்டை அமளியாத் துப்பரவாக்கி. அதுக்கை பான் ஒழுங்கா வேலைசெய்யுதோ எண்டதைப் பாத்து. கட்டில், தலையணி, பெட் சீற், அலுமாரி எண்டு எல்லாத்தையும் ரெடி பண்ணி அதோடை வாறவைக்குச் சாப்பிட எண்டு பத்தும் பலதையும் வேண்டினதோடை காசாகவும் ஒரு ஐயாயிரத்தை எடுத்து வைச்சிட்டு தன்ரை புருசன்ரை சிநேகிதன் வாற அண்டு, பொங்கல் தீவாளிக்கு வேளைக்கு எழும்பி ஆயுத்தம் செய்யிற மாதிரி மணிக்கூட்டிலை எலார்ம் வைச்சு எழும்பி ஓரே தடல் புடலாக்கிடந்ததாம். ஆனால் அவனுக்குத் தான் தலையிடியாப் போச்சு. அந்த மாதம் கறண்ட்டுக்கும், தண்ணிக்கும், வீட்டு வாடகைக்கும் எண்டு சேத்து வைச்ச காசைத்தான் அவன்ரை மனுசி எடுத்து விளையாடினவள். கேட்டதுக்குச் சொன்னவளாம் அவை போயேக்கை தாறதிலை அதுகளையெல்லாம் கட்டலாம் தானே எண்டு. இப்பிடி ஒரு மாதிரி லண்டனிலை இருந்து வந்த சிநேகிதன்ரை குடும்பத்தை கட்டு நாயக்காவிலை போய் கூட்டிக்கொண்டு வந்து வடிவாக் கவனிச்சவளாம். அவையும் வந்த உடனை ஒரு பைக்கற் சொக்கிலேட்டும், அவனுக்கு முகம் சவரம் பண்ணுற பிளேட்டுப் பைக்கற்றும் குடுத்தவனாம். ஒரு போத்திலை எடுத்துக் காட்டிச் சொன்னானாம் “நீ மச்சான் குடிக்கிறேல்லை எண்டு கேள்விப்பட்டனான். அதாலைதான் உனக்கு வேண்டிக்கொண்டு வரேல்லை” எண்டு சமாளிச்சிட்டுப் போட்டானாம். நிண்ட இரண்டு நாளும் வடிவாத் திண்டு குடிச்சிட்டு வெளிக்கிட்டு யாழ்ப்பாணம் போயேக்கை பஸ்ஸுக்கு சீற் புக் பண்ணின காசை எவ்வளவு எண்டு கேட்டுக் குடுத்தவனேயல்லாமல் ஒரு வெள்ளிக்காசும் கூடக் குடுக்கேல்லை. அதுக்குள்ளை அவன் வந்து நிண்டதாலை சரசுவின்ரை மேனுக்கு ஆறு ஏழு செலவாப்போச்சாம். சரி வந்து திரும்பிப் போயேக்கை செய்வனாக்கும் எண்டு மனமாறி இருக்கு போயேக்கையும் சொல்லாமல் கொள்ளாமல் போற தினத்துக்கு முதல் நாள் வந்திறங்கி முன்னம்  வந்து நிக்கேக்கை செய்த மாதிரியான செயற்பாட்டோடை லண்டனுக்கு வெளிக்கிட்டுப் போயிட்டானாம். “கனகாலத்துக்குப் பின்னாலை வந்தது பெருஞ் செலவாப்போச்சுது” எண்டு சொல்லி அன்னம் பாறினவனாம்.

இப்ப சரசுவின்ரை பெடி தன்ரை மனுசியின்ரை காப்பொண்டை அடைவு வைச்சுத்தான் வீட்டுச் செலவைச் சமாளிச்சிருக்கிறானெண்டு சரசுவந்து மண்ணள்ளிப் போட்டுத் திட்டினவள். போனவன் போனதுக்கு ஒரு கோல் எடுத்துச் சொன்னவனாம் “தாங்ஸ் மச்சான். லண்டனுக்கு வந்தால் என்னட்டைக் கட்டாயம் வா” எண்டு. அவனுக்குத் தெரியும் சரசுவின்ரை பெடி கடைசிவரைக்கும் லண்டனுக்குப் வரமாட்டான் எண்டு. அந்தத் தைரியத்தலைதான் அவன் வா எண்டு சொல்லி இருக்கிறான்.

அப்ப பாருங்கோ.சும்மா சிவனே எண்டு தன்ரை கஷ்டம் தன்னோடை இருக்கட்டும் எண்டு இருந்தவனை லண்டனிலை இருக்கிற சிநேகிதன் வைபர் குழுவுக்குள்ளாலை தொடர்பு கொண்டு கதைக்கப்போய் நடந்த வில்லங்கத்தைப் பாத்தனியள்தானே?

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்..

 

http://globaltamilnews.net/2018/107598/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவை வலு பிளானான ஆக்கள் – திட்டம் போட்டுக் களவெடுக்கக் கூடியவை -பொஸிற்றிவ் பொன்னம்பலம்

January 3, 2019

Positive-ponnar01.png?resize=683%2C800

உலக உறவுகளுக்கெல்லாம்  பொன்னம்பலத்தின்ரை இனிய 2019  புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.இதுவரைக்கும் பல சண்டை சச்சரவுகள் வந்திருக்கும். பல குழப்படியள் நடந்திருக்கும். பல திருகுதாளங்களைச் செய்திருப்பம். இனிமேல் எல்லாத்தையும் கைவிட்டிட்டு நல்ல மனுசராய்ச் சீவிப்பம் எண்ட ஒரு முடிவோடை புத்தாண்டை வரவேற்பம். என்ன? சரியோ!

இந்த முறை புத்தாண்டு அவ்வளவா வாய்க்கேல்லை. ஏனெண்டால் வன்னிப்பக்கம் பெய்த மழையாலை வெள்ளப் பெருக்கு வந்து சனத்துக்கு அழிவுகளைத் தந்தபடியாலை அதுகளுக்கு என்ன செய்யலாம்? ஏது செய்யலாம் எண்டு அந்தரிச்சுத் திரிஞ்சபடியாலை கொண்டாட்டங்களிலை மனம் ஏவேல்லை. ஏதோ நான்  ஒருதன் ஓடுப்பட்டுத் திரிஞ்சு ஒண்டும் நடக்கப்போறதில்லை எண்டது எனக்கு வடிவாத் தெரியும். ஆனால் நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்து இருந்த காலத்திலை எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலை உதவி ஒத்தாசை செய்த சனத்துக்கு ஒண்டெண்டால் அவையளைக் கைவிடேலுமோ? நாங்கள் அந்தரிச்சுக் கொண்டு போயேக்கை எங்கடை ஊர், பேர் என்னெண்டு தெரியாமை, கிடந்ததைச் சமைச்சுத் தந்து, தங்கடை இருப்பிடத்தையும், படுக்கையையும் எங்ளோடை பகிந்தவையளை மறக்கேலுமோ? அவைதான் எங்கடை உறவு எண்டு ஏற்றுக் கொண்டு இப்ப பதினைஞ்சு, இருபது வருசமாச்சு.“தானாடாவிட்டாலும் தசை ஆடும் எண்டு சொல்லுவினம்” அப்பிடிப்பட்ட  உறவாப் போச்சு எங்கடை வன்னி உறவு. சண்டை நேரம் எண்டாலும் சண்டை நடந்து துயரப்பட்டதை மறைச்சதெல்லாம் அவையின்ரை பண்பான கதையும், பேச்சுந்தான்.

வெள்ளம் வந்ததெண்டு கேள்விப்பட்ட உடனை வானைப் பிடிச்சுக்கொண்டு ஓடிப்போனம்.அங்கை  போக விடாமல்  மழை பெஞ்சபடி. என்னோடை வந்தவங்கள் சொன்னாங்கள் “கொஞ்சம் பாத்துப் போவம் பொன்னம்பல அண்ணை,” எண்டு. உடனை எனக்குக் கோபம் வந்திட்டுது. “கொஞ்சம் பாத்துப் போக நான் வரேல்லை. நீங்கள் வேணுமெண்டால் வானைக் கொண்டு போங்கோ. நான் நடந்து போவன்” எண்டு வந்தவையிட்டைச் சொல்லிப்போட்டு அவையளை நிமிந்து பாக்காமல் நடக்கத் துவங்கினன். என்னோடை வந்தவை விறைச்சுப் போச்சினம். “அண்ணை நாங்களும் வாறம்,” எண்டபடி என்ரை கையைப் பிடிச்சு இழுக்கத் துவங்கிவிட்டினம். ஒரு மாதிரிஎங்கடையாக்கள்  நிண்ட இடத்துக்குக் கிட்டப் போவிட்டம். அங்கை அவை நிண்ட நிலையைக் கண் கொண்டு பாக்கேலாமல் போச்சுது. என்னையறியாமல் அழுதுவிட்டன் எண்டால் பாருங்கோவன். அப்பதான் நான் யோசிச்சன். வெள்ளம் வந்து வடிஞ்சு போனாப்பிறகு போய் லட்சம் குடுக்கிறதைவிட அவை துயரத்திலை இருக்கேக்கை போய்ப் பாத்து அவையளை ஒருக்காக் கட்டிப் பிடிச்சு அழுது அவையின்ரை துயரத்தைக் கேட்டு வாறதிலைதான் பெறுமதி இருக்கெண்டு. என்னோடை வந்தவையும் அதைத்தான் சொல்லுச்சினம்.

போன உடனை என்னத்தைப் பேசிறது? என்னத்தைக் கேக்கிறது? எண்டு ஒரு சங்கடமான நிலைமை. கொஞ்ச நேரம் மௌனமாயிருந்திட்டுக் கதைக்கத் துவங்கினால் மழையிலை துவங்கி குளக்கட்டு உடைச்சு வெள்ளம் வந்தவரை கதைச்சம். கொண்டு போன காசையும் அவையின்ரை கையிலை குடுத்து உடனை தேவையானதைச் செய்யச் சொன்னம். சமையல்  சாமான் பிறம்பாவும், சீனி, அங்கர் மா, விசுக்கோத்துப் பைக்கற் எண்டு பலதையும் பிறம்பாவும் கட்டி வைச்சிருந்ததை எடுத்துக் குடுத்தம் . நாங்களும் அவையளிலை ஒராக்களா திண்டு, குடிச்சு அண்டிரவு அங்கையே தங்கி மற்ற நாள்தான் திரும்பி யாழ்ப்பாணத்துக்கு வந்தனாங்கள். வரேக்கை மனசுக்குச் சங்கடமாத்தானிருந்திது. பிறகு மழை விட்டிட்டுது எண்டு கேள்விப்பட்ட உடனை கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாயிருந்திது. இன்னும் அவைக்குச் செய்ய வேண்டியது கனக்கக் கிடக்கு.

இப்ப அடுத்த கிழமையளவிலைதிரும்பவும் ஒருக்காப்போக இருக்கிறம். போய்த்தான் பாக்க வேணும் அவையின்ரை இட்டிடஞ்சல் என்னவெண்டு. இனித்தான் அவைக்கு உண்மையா ஒரு சப்போட் தேவைப்படும். அப்ப தான் அவையின்ரை தேவை என்னெண்டு அவைக்குத் தெரியும். அதை என்னெண்டு பாத்தால்தான் நிலமையைத் திருப்பவும் வழமைக்குக் கொண்டு வரலாம்.சிலருக்கு வீடு இருக்கும். அவையின்ரை தோட்டம் துரவு எல்லாம் அழிஞ்சு போயிருக்கும். சிலரிட்டை வாகனம் இருக்கும். அதுக்கை தண்ணி உள்ளிட்டு அது ஓடுற கொண்டிசன் இல்லாமல் இருக்கும் . அதை ஓடப் பண்ணிக் குடுத்தால் அவை பிழைப்பினம். அப்பிடித் தேவையானதைச் செய்ய வேணும். அதைவிட்டிட்டுத் தேவை இல்லாத அலுவல் பாக்கக்குடாது.

இதுக்கை ஒரு சங்கதியையும் இடையிலை சொல்ல வேணும். வெள்ளம் எண்ட உடனை எல்லாரும் அங்கர் மாவும், விசுக்கோத்தும், சீனி தேயிலையும், தண்ணிப் போத்திலுந்தான் கனக்கச் சேத்துக் கொண்டு போனவை. சிலபேர் சனத்திட்டை நேரை குடுத்தவை. சிலபேர் தங்களுக்குத் தெரிஞ்ச அதிகாரியளிட்டைக் குடுத்திட்டு வந்திட்டினம். நேரை குடுத்தவைக்குத் திருப்தி. தாங்கள் நேரை சனத்திட்டைக் குடுத்திட்டம் எண்டு. அதிகாரியளிட்டைக் குடுததின்ரை இடம்வலம் ஒருதருக்குந் தெரியாது. அவை ஆரிட்டை வேண்டினவை? ஆருக்குக் குடுத்தவை எண்டு? பிறகு தான்  கேள்விப்பட்டம் “சகோதரங்கள்” போய் கன சமான்களைக் கண்ட விலைக்குக் காசு குடுத்து வாங்கினவை எண்டு. ஒரு பக்கம் சனம் வெள்ளத்துக்கை அந்தரப்பட மற்றப் பக்கம் வியாபாரமும் நடந்திருக்கு . அவை ஐஞ்சு அரிக்கன் லாம்புகளை ஆயிரத்துக்கும் வேண்டிக்கொண்டு வந்து இரண்டு மூண்டு மடங்கு வைச்சு யாழ்ப்பாணத்திலை வித்தும் இருக்கினம்.

இதிலை ஒரு செய்தியை நாங்கள் புலம் பெயர்ந்திருக்கிற உறவுகளுக்குச் சொல்லவேணும். சண்டை முடிஞ்ச கையோடை உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு நீங்கள்  இருக்கேக்கை,  வன்னிக்கு அதைச் செய்யிறம், யாழ்ப்பாணத்துக்கு இதைச் செய்யிறம், மட்டக்களப்பிலை விழுந்ததை நிமித்திறம் எண்டு உங்களிட்டை வந்து காசு, களஞ்சியா வாங்கினவை எல்லாம் இப்ப எங்கை? அவையிட்டை நீங்கள் குடுத்ததெல்லாம் உண்மையாப் பாதிக்கப்பட்ட ஆக்களுக்குப் போய்ச் சேந்ததோ? அதை அவையிட்டைக் கேட்டனியளோ? அப்பிடிக் கேட்டுப் பாருங்கோ என்ன சொல்லினமெண்டு பாப்பம். அந்தக் கூட்டமெல்லாம் வலு பிளானான கூட்டம். வடிவாத் திட்டம் போட்டுச் சொல்லுவினம். அதைக் கேக்கச் சரியாத்தான் இருக்கும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

http://globaltamilnews.net/2019/108844/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ரை விறுசாவைக் காட்டலாம். ஆனால் உப்பிடி இல்லை. அதுக்கு…

January 11, 2019

பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Positive-ponnar01.png?resize=683%2C800

வாற கிழமை தைப்பொங்கல் வருகுது. அகில உலகம் எல்லாம் வியாபித்து இருக்கிற எங்கடை தமிழ் உறவுக்கு எல்லாருக்கும் என்ரை  பொங்கல் வாழ்த்தைத் தெரிவிச்சுக் கொள்ளுறன். விரும்பினால் தமிழ் படிச்ச, தமிழை வாசிக்கத் தெரிஞ்ச எல்லா ஆக்களும்  இந்த வாழ்த்தை என்னைக் கேக்காமல் எடுக்கலாம்.நான்  கோவிக்க மாட்டான். நல்லதைச் செய்யக்  கோவிச்சால் அதைப் போலக் கேடு  கெட்ட பழக்கம் வேறை ஒண்டும் இல்லை.

இப்ப இஞ்சை நல்ல பனிப்பெய்யிது. அதாலை  குளிர் கூட. காலமையிலை எழும்பக் கஷ்டமாக்கிடக்கு. வயசு போட்டுதெல்லே! ஆதாலை சனக்கிழமையிலை முழுகேலாது. கொஞ்சம் பிந்தி முந்தித்தான் குளிப்பு, முழுக்கு நடக்கிது. அதாலை சனிமுழுக்கும் எழுதக் கொஞ்சம் பிந்திது. சூழ்நிலையை அனுசரிச்சு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. கோடை வரட்டும் எல்லாம் ஒருவிதமான ஒழுங்குக்கு வரும்.

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்ப வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் ஆளைக் கன காலத்துக்குப் பிறகு அரசாங்கம் ஆளுநரா நியமிச்சிருக்கு . பாக்கப் பேச நல்லவர் மாதிரித் தெரியிது. நல்ல காலம் அவர் வடக்கிலை பிறந்து வளந்தவரில்லாதது. இஞ்சை உள்ள ஒராளை நியமிச்சிருந்தால் ஆளுநர் ஒபிசிலை போய் நிண்டு நாறப்பண்ணிப் போடுவங்கள்.பிறத்தியிலை இருந்து வந்தவர் எண்ட படியாலை அவரும் கொஞ்சம் பயபக்தியோடை இருப்பர். எங்கடை சனமும் மாமன் மச்சான் எண்ட உறவு கொண்டாடாமல் நடப்பினம். அவரும் தான் வட மாகாணத்தை ஒரு மொடலான மாகாணமாச் செய்து காட்டுவன் எண்டு சொல்லுறார்.

அது சரி பொங்கல் சமான் எல்லாம் வாங்கியாச்சோ? இஞ்சை பொங்கினமாதிரி என்ன முத்தத்திலையே பொங்குறது? இல்லைத்தானே ! ஆனால் எனக்கு ஒரு ஆள் சொன்னவர் லண்டனிலை தான் முத்தத்திலைதான் பொங்கிறவராம். அவர் கொஞ்சம் ஓவராப் புழுகிறவர். தன்னட்டை பத்து இருந்தால் இருபதெண்டு சொல்லுறவர். அதாலை அவர் சொன்னது உண்மையோ தெரியாது. ஆள் வந்தால் இஞ்சை ஊருலகம் தெரியாத அவரின்ரை கொஞ்சச் சொந்தக் காரர் இருக்கினம். அவையளைக் கூப்பிடுவர். ஒரு முழுக் கோழியைப் பொரிச்சுக் காய்ச்சிப் போட்டுக் கொண்டு வந்த சாராயத்தை உடைச்சுப் போட்டுத் துவங்கினால் சிலவேளை கோயில் திருவிழா மாதிரி விடிய விடியச் சமா நடக்கும். அவற்றை அந்த அண்டப் புழுகைக் கேக்கச் சகிக்காமல் சிலர் நித்திரை கொண்டும் விடுவினம். கொண்டு வாற சராயமும் லண்டனிலையே வலு குறைஞ்ச விலைக்கு வாங்கினதாத்தான் இருக்கும்.

வெறி ஏறினால் அவருக்கு  என்ன கதைக்கிறம்? ஏது கதைக்கிறம் எண்டு தெரியாமை திருப்பத் திருப்ப ஒரு கதையையே கதைப்பர். சில நேரம். தான் முந்தி இஞ்சை இருக்கேக்கை தோட்டஞ் செய்துதான் சீவிச்சவர் எண்டதை மறந்துபோய் தான் பிறந்து வளந்ததெல்லாம் லண்டன் எண்டது மாதிரிச் சொல்லுற கதையளைத்தான் காது  குடுத்துக் கேக்காலாது. அவருக்குத் தெரியும் தன்ரை கதை கேக்கிறவை ஒருத்தரும் உலகப் படத்திலை கூட லண்டனைப் பாத்திருக்க மாட்டினம் எண்டு. லண்டனிலை தான் வைச்சிருக்கிற கோழி இறைச்சிப் பொரியல் கடையைப் பற்றியும் இழுத்துவிடுவர். தன்ரை கடைக்கு வாற ஆக்களைப் பற்றியும், அவை செய்யிற விளையாட்டைப் பற்றியும், அங்கை இருக்கிற கறுப்புகள் கடைக்கு வந்து காசில்லாமல் தின்னச் செய்யிற திருகுதாளத்தையும் சொல்லிச் சரிப்பர். ஆது மட்டுமல்ல கடை கடையாத் தான் தேடிப்போய் திகதி முடியக் கிடக்கிற கோழியை அரைவிலைக்கு வாங்கித் தன்ரை கடைக்கு வாற ஆக்களுக்குப் பொரிச்சுக் குடுத்துக் காசாக்கிற விளையாட்டையும் சொல்லுவர்.

ஆனால் தெரிஞ்ச சனம் அதுதான் எங்கடை ஊராக்கள் வந்தால் கொஞ்சம் ஸ்பெஷாலாக் கவனிப்பாராம். எப்பிடி எண்டு கோட்டால் அண்டைக்கு வந்த புதுக் கோழியிலை பாத்தெடுத்துப் பொரிச்சுக் குடுப்பராம். அதுக்கை எங்கடை ஊரிலை இருக்கிற கோபாலின்ரை மேன் வந்தால் இன்னும் ஸ்பெஷலாம். என்னெண்டு கேக்கிறியளே? அவன் வேலை வெட்டி இல்லாமல் கவுண்மென்ரின்ரை காசை எடுத்துக் குடிச்சு வெறிச்சிட்டுத் திரியிறவராம். வந்து ஓசியிலை திண்டு குடிச்சிட்டுப் போக நிப்பனாம். சரி வந்தது வந்திட்டான் எண்டு ஏதாவது கூட நாட நிண்டு உதவி செய்திட்டு தின்னலாம் எண்ட யோசினை அவனுக்குக் கிடையாது. அதாலை அவருக்கு என்ன ஸ்பெஷல் எண்டால் சில மரியதையான ஆக்கள் வந்து ஓடர் பண்ணிப்போட்டு முழுதையும் தின்னாமல் போவினமெல்லே? அது தான் அவருக்குத் தான் குடுக்கிற விசேஷமாம். அவன் ஓசியிலை திண்டு குடிச்சு வேலை வெட்டி இல்லாமல் திரிஞ்சாலும் ஊரிலை அவனுக்குக் குடுத்த சீதனக் காணி ஒரு பரப்பிலை சின்னதா ஒரு வீட்டை இணக்கிப் போட்டான். ஆனால் இண்டுவரை அவன் தன்ரை பெண்டில் பிள்ளையளை லண்டனுக்கு எடுக்கேலாமல் இருக்கிறான். தாய்க்காறிதான் உள்ள கோயில் குளம் எல்லாம் நேர்த்திக்கடன் வைச்சுக் கொண்டு திரியிறா.

கோழிப் பொரியல் கடை வைச்சிருக்கிறவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேணும். அவன் அப்பிடி இப்பிடி உழைச்சாலும் ஊரிலை சகோதரிமாருக்குச் சீதனம் குடுத்துக் கலியாணம் செய்து வைச்சிருக்கிறான். வீட்டுக்கையே இரண்டு, மூண்டு கக்கூசும் குளிக்கிற அறையும் வைச்சு ஒரு வீடு கட்டி இருக்கிறான். வாசிக சாலைக்கும் கொஞ்சக்காசு குடுத்தவன்.அதோடை கோயிலுக்கும் ஒரு பெரிய கணக்கொண்டை ஐயற்றை கையிலை குடுத்ததெண்டும் சொல்லினம். இப்ப ஒரு விசியம் என்னெண்டால் இஞ்சை நிண்டு போறவாறவை அங்கை போய் என்ன திருகுதாளம் செய்தாலும் இஞ்சை ஊருக்கு வரேக்கை வெள்ளையும்  சொள்ளையுமாத்தான் வந்திறங்குவினம். மரியாதையானவன் மரியாதையா வந்து சத்தம் போடாமல் போயிடுவன். சில்லறையள்தான் ஊரைக் கூட்டி உலகத்தைக் கூட்டிப் பெரிய திருவிளையாடலே நடத்திப்போட்டுப் போவினம்.

அப்பிடி வந்தது ஒண்டு தன்ரை தங்கைக்காரியோடை நிண்டவர். எல்லாரும் செய்யிறமாதிரித் தானும் ஒரு திருவிழாவை வீட்டிலை செய்ய வேணும் எண்டு பாத்திட்டு இரண்டு மூண்டு வருசத்துக்கு முன்னம் சாமத்தியப் பட்ட தன்ரை தங்கைக்காரியின்ரை மேளுக்கு ஒரு பூப்புனித நீராட்டு விழா நடத்திச் செலவழிச்சிட்டுப் போகிது. அந்தப் பெடிச்சியே தான் சமாத்தியப்பட்டதை மறந்து போயிருக்கேக்கை இவர் வந்து ஞாபகப்படுத்திப் போட்டுப் போயிருக்கிறார். சரி வந்தனி இப்பிடிச் சிலவழிச்சதைத் தங்கைக்காரியின்ரை கையிலை குடுத்திருந்தால் அவள் தனக்குத் தெவையான நல்லது கெட்டதுக்கு அதைப் பாவிச்சிருப்பள். இது அதைவிட்டிட்டுத் தேவை இல்லாமல் ஒண்டைச் செய்து தன்ரை விறுசா விளையாட்டைக் காட்டிப் போகுது….???

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

 

http://globaltamilnews.net/2019/109571/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.