Jump to content

சுமந்­திரன், ஜயம்­ப­தியே குழப்­பங்­க­ளுக்கு காரணம்.....புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் தேவை இவர்­க­ளுக்கு இல்லை ; டிலான் பெரேரா


Recommended Posts

சுமந்­திரன், ஜயம்­ப­தியே குழப்­பங்­க­ளுக்கு காரணம்

Untitled-2-1ede567fa0cd4de801740c1c3d379188f1b834f7.jpg

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் தேவை இவர்­க­ளுக்கு இல்லை ; டிலான் பெரேரா

அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு செயற்­பா­டுகள் விரைவில் முடி­வ­டை­ய­வேண்டும் என்ற தேவை ஜயம்­பதி மற்றும் சுமந்­தி­ர­னுக்கு இல்லை. இவர்­களின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவே வழி­ந­டத் தல் குழுவின் பய­ணத்­துக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்­றுக்­குழு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், 

அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு குறித்த அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் இடம்­பெறும் பல விட­யங்கள் தொடர்பில் ஊட­கங்கள் ஊடாக பொது­மக்­க­ளுக்கு வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன. வழி நடத்தல் குழு உறுப்­பினர் என்­ற­வ­கையில் அங்கு இடம்­பெறும் விட­யங்­களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்­டிலே நான் இருந்து வந்தேன். என்­றாலும் வழி­ந­டத்தல் குழுவில் இருக்கும் ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ன அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழு தொடர்­பாக பல விட­யங்­களை தெரி­வித்து வரு­கின்றார். அதனால் அவர் தெரி­விக்கும் விட­யங்­களின் உண்­மைத்­தன்மை தொடர்­பாக தெரி­விக்­கா­விட்டால் எமது பக்­கத்தில் இருந்து அது பெரும் குறை­யா­கவே கரு­தப்­படும்.

முழு பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக செயற்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­பது தொடர்­பாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன் பிர­காரம் பிர­த­மரின் தலை­மையில் 25 உறுப்­பி­னர்கள் அடங்­கிய அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்­டது. இந்த வழி­ந­டத்தல் குழு­வுக்குள் 6 உப குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான உப குழுக்­களின் அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­தமும் இடம்­பெற்­றது.

குறித்த விவா­தத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்க வழி­ந­டத்தல் குழு­வுக்கு வரைபு ஒன்றை சமர்ப்­பிக்­கு­மாறு வழி­ந­டத்தல் குழு­வுக்கு ஆலோ­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் 10பேர் கொண்ட விசேட நிபு­ணர்கள் குழு­வுக்கு நாங்கள் தெரி­வித்­தி­ருந்தோம்.

என்­றாலும் குறித்த நிபுணர் குழுவில் இருக்கும் ஒருவர் மாத்­திரம் சட்­ட­மூலம் ஒன்றை தயா­ரித்து அதற்கு மேலும் 6 பேரின் அனு­ம­தியை அவர்கள் நாட்டில் இல்­லா­த­போது மின்­னஞ்சல் மூலம் பெற்­றுக்­கொண்டு வழி­ந­டத்தல் குழு­வுக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

என்­றாலும் ஏனைய 4பேரில் 2பேர் வேறு ஒரு சட்­ட­மூ­லத்தை தயா­ரித்து சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுத்­த­போதும் இறு­தி­நே­ரத்தில் அதனை சமர்ப்­பிக்க முடி­யாமல் போயுள்­ளது. குறித்த 6பேரின் அனு­ம­தி­யுடன் தயா­ரிக்­கப்­பட்ட சட்­ட­மூல விட­யத்தில் வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன் மற்றும் ஜயம்­பதி ஆகிய இரு­வரும் விசேட நிபு­ணர்­க­ளுக்கு சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வி­டாமல் இவர்­க­ளுக்கு தேவை­யான விட­யங்­களை குறித்த அறிக்­கையில் உட்­பு­குத்தி அதனை முன்­னி­லைப்­ப­டுத்தி கொண்­டு­செல்­லவே முயற்­சித்­தனர்.

அத­னால்தான் அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழு­வுக்குள் பிரச்­சினை ஏற்­பட்­டது. வழி­ந­டத்தல் குழு­வுக்கு சமர்ப்­பிக்க தயா­ரிக்­கப்­பட்ட சட்­ட­மூ­லத்தை தயா­ரிப்­ப­தற்கு இவர்கள் இரு­வரும் இடை­யூறு செய்­து­வந்­த­தாக விசேட நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

  அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில், ஜனா­தி­ப­தியை பதவி நீக்­குதல் மற்றும் இரட்டை பிரஜா உரிமை தொடர்­பாக எழுந்த சர்ச்­சை­க­ளுக்கு காரணம், இர­க­சி­ய­மாக இவர்கள் இரு­வரும் குறித்த சட்­ட­மூ­லத்தில் புகுத்­திய விட­யங்­க­ளாகும். ஆனால் விசேட நிபு­ணர்­களில் 4பேர் இணைந்து தயா­ரித்த சட்­ட­மூ­லத்தில் இந்த விட­யங்கள் இல்லை. அந்த அறிக்கை முழு­மை­யாக எங்­க­ளுக்கு கிடைத்­ததும் என்­ன­வி­ட­யங்கள் இர­க­சி­ய­மாக புகுத்­தப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்கள் வெளி­வரும்.

அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் நட­வ­டிக்­கைகள் மிகவும் வெற்­றி­க­ர­மாக, அனைத்து கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெற்று வந்­தன. ஆனால் ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன மற்றும் எம்.ஏ. சுமந்­திரன் ஆகிய இரு­வரின் முறை­யற்ற நட­வ­டிக்­கை­களால் வழி­ந­டத்தல் குழுவின் பயணம் முற்­றாக செய­லி­ழந்­துள்­ளது. அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகள் விரைவில் முடிவடையவேண்டும் என்றதேவை இவர்கள் இருவருக்கும் இல்லை. இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதன் மூலமே இவர்களுக்கு பிரதமரிடமிருந்து கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களை தயாரிக்கவும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் முடியும். அதனால் அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்காலத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-27#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.