Jump to content

பாகிஸ்தான் தேர்தல்; இம்ரான்கானின் கட்சி முன்னிலை


Recommended Posts

பாகிஸ்தான் தேர்தல்; இம்ரான்கானின் கட்சி முன்னிலை

 

 
 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

201807252118282511_Pakistan-election-res

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் இடம்பெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  

குறிப்பாக இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸியை விட சுமார் 800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும். 

http://www.virakesari.lk/article/37278

Link to comment
Share on other sites

அதிக இடங்களில் வெற்றி முகம் - பாகிஸ்தானில் இம்ரான்கானின் இன்னிங்ஸ் தொடக்கம்

 
அ-அ+

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. #PakistanElection #ImranKhan

 
 
 
 
அதிக இடங்களில் வெற்றி முகம் - பாகிஸ்தானில் இம்ரான்கானின் இன்னிங்ஸ் தொடக்கம்
 
இஸ்லாமாபாத்:
 
பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
 
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  
 
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
 
இன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/25225719/1179163/pakistan-election-updates-imran-khan-party-leading.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை - முடிவை அறிவிப்பதில் தாமதம்

 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #PakistanElection #ImranKhan

 
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை - முடிவை அறிவிப்பதில் தாமதம்
 
இஸ்லாமாபாத்:
 
பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது.
 
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
 
அடுத்த இடங்களில் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது.  
 
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
 
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை
என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 
 
1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். #PakistanElection #ImranKhan

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/26055730/1179193/Imran-Khan-Tipped-for-Victory-as-Major-Pakistan-Parties.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தேர்தல் அப்டேட்! - இம்ரான் கான் பிரதமராவதில் புதிய சிக்கல்

 

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி  முன்னிலை வகித்து வந்த நிலையில்,  தற்போது புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. 

இம்ரான் கான்
 

பாகிஸ்தானில் நேற்று (25-07-2018) பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 101 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இம்ரான் கான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதில் இம்ரான் கான் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. இதையடுத்து மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று இம்ரான் கான் ஆட்சி அமைக்கலாம். எம்.எம்.ஏ. என்னும் ராணுவ கட்சியின் ஆதரவை இம்ரான் கான் நாடலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கணித்துள்ளன. ராணுவக் கட்சியின் ஆதரவைப் பெற்றால், இம்ரான் கான் ஆட்சியிலும் ராணுவ முறைகள் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும். 

 

 

இம்ரான் கான்
 

இன்று காலை நிலவரப்படி, இம்ரான் கானின் கட்சி 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. நவாஸ் ஷெரீஃப் கட்சி 64 இடங்களிலும் பிலவால் பூட்டோ கட்சி 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக நவாஸ் ஷெரீஃபின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரபூர்வமாக யார் முன்னிலை என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ‘புதிய பாகிஸ்தான் பிறந்துவிட்டது’, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்’ என்று கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். 

பாகிஸ்தான் தேர்தலை கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, இது நியாயமான முறையில் நடத்தப்பட்ட தேர்தல் இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று விமர்சித்துள்ளது. எது அப்படியோ சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆகப்போவது உறுதி! 

https://www.vikatan.com/news/world/132096-pakistan-election-update.html

Link to comment
Share on other sites

 

பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலை: 

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைARIF ALI

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2:01 PM: இதுவரை வெளிவந்துள்ள 33 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், 20இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆறு தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி நான்கு இடங்களிலும், மீதமுள்ள மூன்று தொகுதிகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1:37 PM: "22 ஆண்டுகளுக்கு பின்னர், அவமானங்கள், தடைகளை தாண்டிய பிறகு, தியாகங்களை செய்த பிறகு, என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார். இப்போது அவருக்குள்ள முதல் சவாலே தான் எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதை நினைவில் கொள்ளவதுதான்" என்று இம்ரான்கானின் முன்னாள் மனைவி ஜெமிம்மா கோல்டுஸ்மித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Jemima_Khan
 

22 years later, after humiliations, hurdles and sacrifices, my sons’ father is Pakistan’s next PM. It’s an incredible lesson in tenacity, belief & refusal to accept defeat. The challenge now is to remember why he entered politics in the 1st place. Congratulations @ImranKhanPTI

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Jemima_Khan

1:10 PM: இந்த பொதுத்தேர்தலில் 59வது தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வேட்பாளரைவிட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:40 PM: தேசிய தொகுதி எண் 191இல் போட்டியிட்ட தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் பிரபல பெண் வேட்பாளரான சர்தஜ் குல் 79,817 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:13 PM: தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி பெஷாவரில் மற்றொரு தொகுதியையும், பழங்குடி மக்கள் அதிகளவில் வாழும் தேசிய தொகுதி 41 மற்றும் 66இல் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:57AM: இதுவரை வெளிவந்துள்ள அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது முதல் வெற்றியை பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்துள்ளது.

11:40 AM: இதுவரை வெளிவந்துள்ள 17 தொகுதிகளுக்கான அதிகாரபூர்வமற்ற முடிவுகளில், 10இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலா மூன்று தொகுதிகளிலும், மீதமுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:25 AM: பாகிஸ்தானின் முக்கிய செய்தித்தாள்களின் முதற்பக்கங்கள் என்ன சொல்லுகின்றன?

பாகிஸ்தான் தேர்தல் பாகிஸ்தான் தேர்தல்

11:15 AM: இதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரியவந்துள்ள 12 தொகுகளில் 8இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஒரு தொகுதியில் முத்தஹீதா மஜ்லிஸ் இ-அமல் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப்படத்தின் காப்புரிமைAFP Image captionஹம்சா ஷபாஸ் ஷெரிஃப்

10:55 AM: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப், தான் போட்டியிட்ட தேசிய தொகுதி எண் 124இல் வெற்றிபெற்றுள்ளார் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:35 AM: பழங்குடி மக்கள் அதிகளவில் உள்ள தேசிய தொகுதி எண் 40இல் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் குல் தாத் கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரைவிட 16,766 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

10:15 AM: பெஷாவரிலுள்ள தேசிய தொகுதி எண் 28 மற்றும் 30 ஆகிய தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் வேட்பாளர்கள் முறையே அர்பாப்-இ-அமீர் அயூப் மற்றும் ஷிர் அலி அர்பாப் ஆகியோர் வெற்றிபெறுள்ளனர்.

9:50 AM: இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் நான்கு தொகுதிகளிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

9.20AM: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் ஜின்னா அக்பர் மலாக்னட் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் 81,310 வாக்குகள் பெற்றுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான குல் நசீம் கான் 31,312 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44958216

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலை: 

இம்ரான்கான்

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார்.

இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்தாலும், அறுதிப் பெரும்பான்மை பெறுமா? என்ற சந்தேகம் இன்னும் நிலவுகிறது,

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

4:30 PM:அதிகாரபூர்வமற்ற முடிவுகளில் பாகிஸ்தானின முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ராஃப், 95 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இம்ரான் கானின் கட்சி வேட்பாளரான சௌத்திரி .எம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இம்ரான் கான் முன்னிலை

 

https://www.bbc.com/tamil/global-44958216

Link to comment
Share on other sites

எனது 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன்: இம்ரான் கான்

 

 
Imran_Khan

 

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி உருவெடுத்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான் கூறியதாவது:

என்னுடைய 22 ஆண்டுகால போராட்டத்தில் இன்று வெற்றிபெற்றுள்ளேன். என்னுடைய வேண்டுதல்களுக்கும் இன்று பதில் கிடைத்துவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது கனவு நினைவாக்கும் நாள் பிறந்துவிட்டது. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளதை இன்று நாம் காண்கிறோம். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் தேர்தல் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இதற்காக நமது பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

வறுமை தான் நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதில் சீனா தான் நமக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளில் அந்நாடு சுமார் 70 கோடி மக்களின் வறுமையை ஓழித்து வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.

சமீபகாலங்களில் இந்திய ஊடகங்கள் என்னை சித்தரித்த விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவை விரும்பும் பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன் தான். வறுமையற்ற துணைக் கண்டத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் வர்த்தகத் தொடர்புகளிலும் நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டும். 

நீண்ட காலமாக காஷ்மீர் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். இதை இந்திய அரசு விரும்பினால், நிச்சயம் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முடியும். இது இந்திய துணைக்கண்டத்துக்கும் நன்மையை ஏற்படுத்தும்.   

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/world/2018/jul/26/i-thank-god-after-22-years-of-struggle-imran-khan-2968318.html

Link to comment
Share on other sites

இந்தியாவுடன் நல்லுறவு, சீனாவுடன் நெருக்கம்: இம்ரான் விருப்பம்

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைREUTERS

இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக, பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் முன்னிலை பெற்றுள்ள பிடிஐ கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை ஏறத்தாழ பாதியளவு முடிவுகள் வெளியான நிலையில், தனது கட்சி ஆட்சியமைக்கப் போவதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதையொட்டி, நாட்டுமக்களுக்கு நேரலையாக உரையாற்றிய இம்ரான்கான், கடந்த 22 ஆண்டு கால போராட்டத்துக்குப்பிறகு தனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பொருளாதாரக் கொள்கை உள்பட உள்நாட்டுக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விரிவாக உரையாற்றிய அவர், ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டார்.

வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசும்போது, சீனாவுடன் தனது அரசு மிக நெருக்கமாக செயல்படும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் மேம்பாட்டுக்கு சீனா பல வகைகளில் தொடர்ந்து உதவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வறுமை ஒழிப்பு தொடர்பாகவும், ஊழல் ஒழிப்பு தொடர்பாகவும் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

பாலிவுட் சினிமா வில்லனா?

இந்திய ஊடகங்கள், தன்னை ஒரு பாலிவுட் சினிமா வில்லன் போல சித்தரிப்பதாகவும், ஆனால், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் வெளியிட்டார்.

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇம்ரான்கான்

காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் இந்தப் பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் என இந்தியாவும், பலூசிஸ்தான் வன்முறைக்குக் காரணம் இந்தியா என பாகிஸ்தானும் பரஸ்பரம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீர்வு காண்பதற்கான முயற்சிகளில், இந்தியா ஓர் அடி எடுத்து வைத்தால் தாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுடன் திறந்த எல்லையைப் பேண வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.

அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேண விரும்புவதாகக் கூறிய அவர், அமெரிக்காவிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதைவிட, அண்டை நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் இல்லத்தில் குடியேற மாட்டேன்

பிரதமருக்கான இல்லம், மிகப்பெரும் பரப்பில் உள்ள நிலையில், அந்த வீட்டை தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புப் பகுதியில்தான் பிரதமர் என்ற வகையில் தானும் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மாறாக, தற்போதுள்ள பிரதமரின் இல்லத்தை ஒரு கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-44971652

 

இம்ரான்கான் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டி

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலையில் இருக்கும் சூழலில், தேர்தலுக்கு முன்பு இம்ரான்கான் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டி.

Link to comment
Share on other sites

கிரிக்கெட்டிலும் ‘டக்அவுட்’;ஆட்சியிலும் ‘அவுட்’: பாக்.முன்னாள் பிரதமர் குறித்த சுவாரஸ்யம்

 

 
nawaz-sharif

நவாஸ் ஷெரீப்   -  படம் உதவி: இஎஸ்பிஎன்

கிரிக்கெட்டிலும் டக் அவுட், அரசியல் வாழ்க்கையிலும் அவுட்க ஆகி இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறித்து அறிவோம்.

ஆம், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் ஆட்சியை இழந்து சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 
 

பனாமா பேப்பர் வெளியிட்ட ஊழல் குறித்த விவகாரத்தில் பிரதமர் பதவியை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் நவாஸ் ஷெரீப் இழந்தார். பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியுற்று ஆட்சியையும் இப்போது இழந்துவிட்டார்.

நவாஸ் ஷெரீப் கடந்த 1990 முதல் 1993 வரையிலும், 1997 முதல் 1999 வரையிலும் பிரதமராகவும், 2013 முதல் 2017 வரையிலும் பிரதமராகவும் இருந்தார்.

நவாஸ் ஷெரீப் தனது இளமைக் காலத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவே வலம் வந்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடாத நவாஸ் ஷெரீப் உள்ளூர் போட்டிகளில் ஏராளமாக விளையாடியுள்ளார். ஆனால், முதல் தரப்போட்டியில் ஒரே ஓரு ஆட்டத்தில்விளையாடி அதில் டக்அவுட் ஆகினார். அதன்பின் கிரிக்கெட் போட்டியில் நவாஸ் பங்கேற்கவில்லை.

nawaspng
 

கடந்த 1973-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி, கராச்சி ஜிம்கானா மைதானத்தில் ரயில்வேஸ் அணிக்கும், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அணிக்கும் இடையே கிரிக்கெட் போ்ட்டி நடந்தது.

இதில் ரயில்வேஸ் அணிக்காக நவாஸ் ஷெரீப் விளையாடினார். தொடக்க வீரராக ஜாகீர் பட்டும், நவாஸ் ஷெரீப்பும் களமிறங்கினார்கள். ஆனால், பரிதாபம் என்னவென்றால், நவாஸ் ஷெரீப் தான் சந்தித்த முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.

இந்தப் போட்டியில் நவாஸ் ஷெரீப் சார்ந்திருந்த ரயில்வேஸ் அணி 238 ரன்கள் குவித்தது. 239ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடிய ஏர்லைன்ஸ் அணி 119 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

ஆனால், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு முதல் முறையாக 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்கு பெற்றுக்கொடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் 118 இடங்கள் பெற்ற இம்ரான் கான் அடுத்த பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

இம்ரான் கான் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,807 ரன்கள் குவித்துள்ளார். 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,709 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 362 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளையும் இம்ரான்கான் வீழ்த்தியுள்ளார்.

https://tamil.thehindu.com/world/article24522384.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி..

 

imrankan.jpg

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பாகிஸ்தானில் கடந்த 25-ம் திகதி நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றதாக  தேர்தல் ஆணையகம் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்து இருந்தது.

தேர்தலில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என தெரிவித்துள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் மாகாண தேர்தலின் முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது எனவும் சிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 66 தொகுதிகளில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தேர்தல் முடிவுகளை, நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்தி ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன.

தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்படவில்லை எனவும் மக்களின் தீர்ப்பு இம்ரான்கான் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நவாஸ்செரீப் தேர்தல் திருடப்பட்டு விட்டது எனவும் பாராளுமன்றத்தை தங்களது கட்சி புறக்கணிக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/89676/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.