Jump to content

அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு.....எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும்


Recommended Posts

அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு

SAMAKALAM210718-PG03-R2Page1Image0001-4e64701f076351983b4e2c8b6c35578de62d9e9d.jpg

 

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

 

எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும்

இரு நாடு­களின் தலை­வர்கள் சந்­திக்­கி­றார்கள் என்றால், அந்த சந்­திப்பு பல வழி­களில் முக்­கி­யத்­துவம் பெறும். அதுவும் அமெ­ரிக்க ஜனா­தி­ ப­தியும், ரஷ்ய ஜனா­தி­ப­தியும் சந்­திக்­கி­றார்கள் என்றால், அதற்­குள்ள முக்­கி­யத்­து­வத்தைக் கேட்­கவே வேண்டாம். இந்த சந்­திப்பு அமெ­ரிக்­கா­விற்கும், ரஷ்­யா­விற்கும் மாத்­தி­ர­மன்றி, முழு உல­கிற்கும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும்.  

இவ்­விரு நாடு­களும் உலக வல்­ல­ர­சு­க­ளாக இருப்­ப­தற்கு அப்பால், இரு முகாம்­களைப் பிர­தி­நி­தித்­துப்­ப­டுத்­து­வதும், உலகின் சம­கால அர­சியல், பொரு­ளா­தார செல்­  நெ­றி­களைத் தீர்­மா­னிப்­ப­வை­யாக இருப்­பதும் இதற்குக் காரணம். இதன் கார­ண­மாக, டொனல்ட் ட்ரம்ப், விளாடிமிர் புட்டின் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான உச்­சி­மா­நாடு மிகவும் ஆவ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது.  

இந்த மாநாடு அமெ­ரிக்க, ரஷ்ய உற­வு­களில் புதிய அத்­தி­யா­யத்தை ஆரம்­பிக்க வழி­வ­குக்கும் என்ற நம்­பிக்கை இல்­லா­தி­ருந்­தமை உண்மை தான். ஆனால், மாநாட்டின் பெறு­பே­றுகள் சிரி­யாவில் நீடிக்கும் சிவில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரும் முயற்­சிகள் முதற்­கொண்டு, உலகம் முழு­வதும் எரி­பொருள் விலை மாற்றம் வரை பல விட­யங்­களில் தாக்கம் செலுத்­தக்­கூடும் என்ற எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யி­ருந்­தது.

இந்த எதிர்­பார்ப்­புக்கள் யாவற்­றையும் பிசு­பி­சுத்துப் போகச் செய்து, இரு­நா­டு­களின் எதிர்­கால ராஜ­தந்­திர உற­வுகள் தனி­ம­னி­தனின் குணா­தி­ச­யத்­திலும், ஆளு­மை­யிலும் தங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய துர்ப்­பாக்­கிய நிலையை பகி­ரங்­கப்­ப­டுத்தி மாநாடு முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

இந்த மாநாடு கடந்த திங்­கட்­கி­ழமை பின்­லாந்தின் தலை­ந­கரில் இடம்­பெற்­றது. இதில் இரு தலை­வர்­க­ளையும், மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளையும் தவிர வேறெ­வரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இரு­வரும் திட்­ட­மி­டப்­பட்­டதை விடவும் கொஞ்சம் கூடு­த­லாக நேரம் எடுத்துக் கொண்டு இரண்டு மணித்­தி­யா­லங்கள் வரை பேசி­னார்கள். இதில் இரு­வரும் என்ன பேசி­னார்கள், எந்­தெந்த விட­யங்­களில் இணக்கம் காணப்­பட்­டன என்­ப­தெல்லாம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இரு நாடு­களும் கூட்­ட­றிக்கை விடுக்­கவும் இல்லை.

இருந்­த­போ­திலும், இரு தலை­வர்­களும் கூட்­டாக செய்­தி­யாளர் மாநா­டு­களை நடத்­தி­னார்கள். அதனைத் தொடர்ந்து, ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு தனிப்­பட்ட முறையில் பேட்­டி­ய­ளித்­தார்கள். இவற்றில் தாம் இணக்கம் கண்ட விட­யங்கள் பற்­றியும், கருத்து வேறு­பாடு கொண்­டுள்ள விவ­கா­ரங்கள் பற்­றியும் கோடிட்டுக் காட்­டி­னார்கள். இந்த விட­யங்­க­ளையும், விவ­கா­ரங்­க­ளையும் விட கடந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ரஷ்யா தலை­யீடு செய்­த­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பான அர­சியல் பிரச்­ச­னைக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டது. அந்த விவ­கா­ரத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இரு நாடு­களும் அர­சியல் செய்­கின்­றன.

இரு வல்­ல­ரசு நாடு­களின் தலை­வர்கள் தனித்­த­னி­யாக பேசிக் கொள்ளும் சம­யத்தில், எந்த நாடு பலம் பொருந்­தி­யது என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான பலப்­ப­ரீட்­சைகள் நிகழும். ஹெல்­சிங்கி உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து யார் பொரு­ளா­தார ஜாம்­பவான் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது. தமது நாடு மிகப்­பெ­ரி­யது என்­பதால், அதன் மீது தடை­களை விதித்து தனி­மைப்­ப­டுத்­து­வது சாத்­தியம் இல்­லை­யென ரஷ்ய ஜனா­தி­பதி பேசினார். மேற்­கு­லக சார்­பு­டைய யுக்­ரேனின் கிறி­மியா பிராந்­தி­யத்தை ரஷ்யா இணைத்துக் கொண்­டதால், அந்­நாட்டின் மீது பொரு­ளா­தாரத் தடைகள் விதிக்­கப்­பட்­டன. இந்த விட­யத்தில் தமக்கும், டரம்­பிற்கும் இடையில் வேறு­பா­டுகள் இருப்­பதை புட்டின் ஏற்றுக் கொண்டார்.

இரு தலை­வர்­களும் சிரிய யுத்தம் பற்­றியும் கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் பேசி­னார்கள். இந்த யுத்தம் முடிவை நெருங்­கு­கி­றது என்­பதை ஏற்றுக் கொண்­டார்கள். சிரி­யாவின் யுத்­தத்தில் ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடு­களின் வகி­பாகம் பற்றி கருத்து வேறு­பா­டுகள் இருந்­தாலும், இந்த வேறு­பா­டுகள் பற்றி இரு­வரும் அவ்­வ­ள­வாக அலட்டிக் கொள்­ள­வில்லை. சிரி­யாவை மீளக்­கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் அமெ­ரிக்கா உதவி செய்ய முடியும் என டொனால்ட் ட்ரம்ப் கூறினார். சிரி­யாவின் மீள்­கட்­டு­மானப் பணி­களில் உதவி செய்ய பரந்த அடிப்­ப­டை­யி­லான சமா­தான உடன்­ப­டிக்கை அமு­லாக்­கப்­பட வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்த நிபந்­த­னையை அவர் பொருட்­டாகக் கரு­த­வில்லை. மறு­பு­றத்தில், சிரி­யாவின் பிரச்சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக வெவ்வேறாக நடத்­தப்­படும் பேச்­சு­வார்த்­தைகள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும் என்று புட்டின் கோரிக்கை விடுத்தார். சிரி­யாவில் நீண்­ட­நாட்க­ளாக கொடிய யுத்தம் நீடிப்­ப­தற்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் கார­ண­மாக இருந்த தலை­வர்கள். இதை விடவும் முக்­கி­ய­மான விஷ­யங்கள் இரு­வ­ருக்கும் இருந்­தன.

இந்தத் தலை­வர்­களில் டொனால்ட் ட்ரம்ப் விசித்­தி­ர­மா­னவர். அமெ­ரிக்­காவின் வெளி­யு­றவுக் கொள்­கை­களோ, ராஜ­தந்­தி­ரங்­களோ அவ­ருக்குப் பொருட்­டல்ல. காலம் கால­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட கொள்­கை­களை கணப்­பொ­ழுதில் மீறி விடுவார். ராஜ­தந்­தி­ரங்­களை நொடிப்­பொ­ழுதில் மறந்து விடுவார். தூர இருக்­கையில் வட­கொ­ரியத் தலை­வரை ரொக்கட் குள்ளன் என்று ஏசுவார். அவ­ருடன் நேரடிப் பேச்­சு­வார்த்தை நடத்தும் சந்­தர்ப்­பத்தில் சாணக்­கி­ய­மான தலைவன் என்று பாராட்­டவும் செய்வார். இதனை ஆங்­கி­லத்தில் Off- the -cuff diplomacy என்­பார்கள். எது­விதத் தயார்

­ப­டுத்­தலும் இன்றி, தாம் மனதில் நினைத்­ததை செய்தல் என்று அர்த்தம். ரஷ்ய ஜனா­தி­ப­தி­யு­ட­னான உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய சம­யத்­திலும், அத்­த­கைய ராஜ­தந்­தி­ரமே டொனல்ட் ட்ரம்­பிடம் வெளிப்­பட்­டது.

கிறி­மியா என்­பது மேற்­கு­ல­கிற்கும், ரஷ்­யா­விற்கும் இடை­யி­லான அதி­காரப் போட்­டிக்­கு­ரிய முக்­கி­ய­மான பலப்­ப­ரீட்­சை­யாகத் திகழும் கள­மாகும். மேற்­கு­லக சார்­பு­டைய உக்­ரே­னிடம் இருந்து கிறி­மி­யாவை ரஷ்யா பல­வந்­த­மாக பறித்துக் கொண்­டது என்ற நிலைப்­பாட்டை அமெ­ரிக்க ராஜாங்கத் திணைக்­களம் அறி­விக்­கி­றது. உக்­ரே­னுக்கு மேலாக பறந்த விமா­ன­மொன்றை ரஷ்­யாவே சுட்டு வீழ்த்­தி­ய­தாக அமெ­ரிக்­காவின் புல­னாய்வு அமைப்­புக்கள் பிர­சாரம் செய்­கின்­றன. ரஷ்ய ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பைத் தொடர்ந்து, இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யெல்லாம் டொனால்ட் ட்ரம்ப் பொருட்­டாக மதிக்­க­வில்லை. வெளி­வி­வ­காரக் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யி­லான ராஜ­தந்­தி­ரத்தைத் தாண்டி, தமது மனதில் தோன்­றி­யதை அவர் பேசினார். அமெ­ரிக்க, ரஷ்ய உற­வுகள் ஆகவும் கீழ்­மட்­டத்தில் உள்­ள­தென்றால், அது ரஷ்யா கிறி­மி­யாவை பறித்துக் கொண்­டதால் ஏற்­பட்ட விளைவு அல்­ல­வென அமெ­ரிக்க ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

டொனால்ட் ட்ரம்பின் சொற்­க­ளிலும், செயற்­பா­டு­க­ளிலும் ரஷ்ய ஜனா­தி­ப­தியை அனு­ச­ரித்துப் போகக்­கூ­டிய நிதா­ன­மான போக்கு வெளிப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வுக்கும், ரஷ்­யா­விற்கும் இடையில் நல்­லு­றவு நீடித்தால், ஒட்­டு­மொத்த உல­கமும் நன்மை பெறும் என்­பதை வலி­யு­றுத்­தக்­கூ­டிய பாசாங்கு அவ­ரிடம் தென்­பட்­டது.

          

 இது அப்­பா­வித்­த­னமா, அர­சியல் சாணக்­கி­யமா, அப்­பட்­டமா சுய­ந­லமா என்­பதை ஆராய வேண்டும். இந்த ஆராய்ச்­சியில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ரஷ்யா தலை­யீடு செய்­த­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு முக்­கி­ய­மா­னது.

2016ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் நடந்த சம­யத்தில், ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பா­ள­ராக ஹிலரி கிளின்டன் அம்­மையார் போட்­டி­யிட்டார். அவரை எதிர்த்து டொனல்ட் ட்ரம்ப் கள­மி­றங்­கி­யி­ருந்தார். ஹிலரி கிளின்­டனைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­காக, ரஷ்­யாவின் உள­வுத்­துறை டொனல்ட் ட்ரம்­பிற்கு பல்­வேறு வழி­க­ளிலும் உதவி செய்­தது என்­பது பிர­தா­ன­மாக குற்­றச்­சாட்­டாகும். ஏதா­வது செய்து கிளின்டன் அம்­மையார் வெற்றி பெறும் வாய்ப்பை முடக்­கு­மாறு ரஷ்ய ஜனா­தி­பதி நேர­டி­யாக உத்­த­ர­விட்டார் என அமெ­ரிக்­காவின் புல­னாய்வு அமைப்­புக்கள் அடித்துச் சொல்­கின்­றன. இதற்­காக, கிளின்­டனின் மின்­னஞ்­சல்­களை ரஷ்யா உளவு பார்த்­த­தா­கவும் புல­னாய்வு அமைப்­புக்கள் கூறு­கின்­றன. இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களைத் தம்­மீ­தான தனிப்­பட்ட தாக்­கு­தல்­க­ளாக டொனல்ட் ட்ரம்ப் பார்க்­கிறார். தேர்­தலில் பெண் வேட்­பா­ளரைத் தோற்­க­டிப்­ப­தற்­காக ரஷ்­யாவில் இருந்து உதவி பெற்ற மனிதர் என்ற கறை­ப­டித்த தோற்­றப்­பாட்­டுடன் வாழ்­வதை அவர் விரும்­ப­வில்லை.

அமெ­ரிக்க, ரஷ்ய உற­வு­களைத் தீர்­மா­னிக்கும் ராஜ­தந்­திர கொள்கை எது­வாக இருந்­தாலும், தாம் அவ­மா­னத்தில் இருந்து விடு­பட்டு விட்டால் போதும் என்ற எண்ணம் அவ­ருக்கு இருக்­கி­றது. ரஷ்யத் தலை­வ­ரு­டான உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து, அமெ­ரிக்க ஜனா­தி­பதி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பதில் அளித்த விதம் அவரது எண்ணத்தைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஒரு செய்தியாளர் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினார்.  இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு என்பதை அமெரிக்காவின் அனைத்துப் புலனாய்வு நிறுவனங்களும் ஊர்ஜிதம் செய்துள்ள நிலையில், ரஷ்யா தலையீடு செய்ததாக நீங்கள் நம்புகிறீர்களா என்று அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், பக்கத்தில் நின்ற புத்தினைக் காட்டி, தாம் அவ்வாறு செய்யவில்லையென புத்தின் சொல்கிறாரே என்றார். அமெரிக்கத் தேர்தலில் தலையீடு செய்யும் அவசியம் ரஷ்யாவிற்குக் கிடையாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க, ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு உலகிற்கு என்ன நன்மையைத் தரப் போகிறது என்று எவரும் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய மாநாட்டில் பேசப்பட்ட விடயங்களை ஆராயத் தேவையில்லை. ட்ரம்பின் பதிலை அவதானித்து, அதில் தொனிக்கும் சுயநலத்தை விளங்கிக் கொண்டால் போதுமானது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-22#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.