Jump to content

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களால் பெருமளவு பணம் – நகைகள் கொள்ளை:


Recommended Posts

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களால் பெருமளவு பணம் – நகைகள் கொள்ளை:

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Robbery.jpg
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்த துணிகர கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளது.யாழ். மற்றும் நல்லூர் பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்ட கும்பல் , கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில், யாழ். மற்றும் கோப்பாய் காவல்துறையினர்; தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/89007/

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில்- பல்­வேறு இடங்­க­ளில் -வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

 

20180809_214936-750x430.jpg

 
 

யாழ்ப்­பா­ணத்­தின் பல பகு­தி­க­ளில் நேற்று இரவு வாள்­வெட்­டுக் குழு­வி­னர் பெரும் அட்­ட  கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர். சுமார் இரண்டு மணி நேரத்­தில் அடுத்­த­டுத்து அவர்­கள் கொள்­ளை­யி­லும் வழிப்­ப­றி­யி­லும் தாக்­கு­த­லி­லும் ஈடு­பட்­டு­விட்­டுப் பொலி­ஸா­ரி­டம் பிடி­ப­டா­மல் தப்­பி­யோடி உள்­ள­னர்.

மானிப்­பா­யில் இருந்து அரி­யாலை வரை இவர்­க­ளு­டைய அட்­ட­கா­சம் பதி­வா­கி­யது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் தொடர்ச்­சி­யா­கவே வாள்­வெட்­டுக் குழு­வி­னர் என்று தெரி­விக்­கப்­பட்டு பலர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் நேற்று இரவு அவர்­க­ளு­டைய அட்­ட­கா­சம் யாழ்ப்­பா­ணத்­தில் எல்லை மீறி­யது.

 

சிறிய வர்த்­த­கர்­களை இலக்கு வைத்து அவர்­களை மிரட்­டிக் கப்­பம் பெற்­றுள்­ள­னர். மானிப்­பா­யில் ஆரம்­பித்த இந்­தக் கொள்ளை அரி­யாலை வரை நீடித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் மழை அங்கி அணிந்­த­வா­றும், முகத்தை மூடிக்­கட்­டி­ய­வ­வா­றும் வந்த 6பேரே இந்­தப் பாத­கச் செய­லில் ஈடு­பட்­ட­னர். வர்த்­தக நிலை­யங்­களை மூடும் நேரம் உள்­பு­குந்து உரி­மை­யா­ளர்­கள் மிரட்­டப்­பட்­டுள்­ள­னர்.

மானிப்­பா­யில் வீதி­யில் சென்ற ஒரு­வ­ரி­டம் இந்­தக் கும்­பல் தங்­கச் சங்­கி­லியை அறுத்­துச் சென்­றது. வர்த்­த­கர்­கள் சிலரை மிரட்­டிப் பணம் பறித்­த­னர்.

அதை­ய­டுத்து கோண்­டா­வி­லி­லும் வீதி­யில் சென்ற ஒரு­வ­ரி­டம் வாள்­க­ளைக் காட்டி மிரட்டி சங்­கிலி பறித்­த­னர்.

தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் முட­மா­வ­டிச் சந்­தி­யில் உள்ள வர்­த­கர் ஒரு­வ­ரி­டம் சுமார் 25 ஆயி­ரம் ரூபா பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது, நேற்று முழு­வ­தும் வியா­பா­ரம் செய்த பணம் அப்­ப­டியே கொள்­ளை­யி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறிது நேரத்­தி­லேயே அரி­யாலை புங்­கன்­கு­ளம் பகு­தி­யில் உள்ள வர்­தக நியை­யத்­தில் புந்த குழும்­பல் அங்­கும் பணத்­தைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ளது. அங்­கி­ருந்த இளை­ஞர்­க­ளுக்­கும் குறித்த வாள்­வெட்­டுக் கும்­ப­லுக்­கு­மி­டையே மோதல் ஏற்ப்­பட்­டது.

இதில் சில இளை­ஞர்­கள் காய­ம­டைந்­த­னர். தொடர்ந்து தெல்­லிப்­ப­ழை­யில் உள்ள வீடு ஒன்­றுக்­குள் புகுந்த கும்­பல் அங்­கி­ருந்த பெண்ணை வாளி­னால் வெட்­டிக் காயப்­ப­டுத்த முயன்­றது. ஆனால் அவர் சம­யோ­சி­த­மா­கத் தப்­பி­னார்.

எனி­னும் வீட்­டி­லி­ருந்த மற்­றும் இரு­வ­ருக்கு கேபிள்­க­ளால் தாக்­கி­யத்­தில் அவர்­கள் காய­ம­டைந்­த­னர். அய­ல­வர்­கள் ஒன்­று­கூ­டி­ய­தும் வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யது. ஓடும்­போது ஒரு வாளை­யும் கைவிட்­டுச் சென்­றுள்­ளது.

அந்த வீட்­டி­லி­ருந்த ஜன்­னல் கண்­ணா­டி­களை அடித்து நொருக்­கி­ய­து­டன் மோட்­டார் சைக்­கிள்­கள் மற்­றும் பொருள்­க­ளை­யும் அடித்­துச் சேத­மாக்­கி­யுள்­ளது.

சம்­ப­வங்­கள் தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அனைத்­தும் நறை­வ­டைந்த பின்­னர் அவர்­கள் சம்­பவ இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர். இங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். எனி­னும் நள்­ளி­ரவு வரை எவ­ரும் கைது செய்ய்­ப­ப­ட­வில்லை.

யாழ்ப்­பா­ணத்­தில் வாள் வெட்­டுக் குழு­வி­ன­ரு­டைய அட்­ட­கா­சம் அதி­க­ரித்­தி­ருப்­பதை அடுத்து அண்­மை­யில் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர், பொலிஸ் மா அதி­பர் ஆகி­யோர் நேரில் இங்கு வருகை தந்து நிலமை குறித்து நேரில் ஆராய்ந்து சென்­ற­னர். அதன் பின்­னரே இந்த அட்­ட­கா­சம் இடம்­பெற்­றுள்­ளது.

20180809_220140-750x430.jpg

http://newuthayan.com/story/09/யாழ்ப்பாணத்தில்-பல்­வேறு-இடங்­க­ளில்-வாள்­வெட்­டுக்-குழு-அட்­ட­கா­சம்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.